யாரங்கே கொண்டுவா ஒரு ப்ளேட் சிக்கன் 65 கல் நாயக்கிற்கு :)
Printable View
யாரங்கே கொண்டுவா ஒரு ப்ளேட் சிக்கன் 65 கல் நாயக்கிற்கு :)
சி. க.
இந்தாங்க இப்ப விவாதிச்சிகிட்டிருக்கற ஒரு பாட்டு.
https://www.youtube.com/watch?v=j8b2d7MGsK8
சிக்கன் 65 க்கு ஒரு தாங்க்ஸ்னா.*
நிறுத்திட்டேன்னு பார்க்காதீங்க. இதோ இன்னொன்னு:
https://www.youtube.com/watch?v=hhk09GCtZfA
இன்னொண்ணுங்ணா:
https://www.youtube.com/watch?v=3YNmhwl6Y08
இத விட்டுடுவோமா?
https://www.youtube.com/watch?v=N8_48sI4WH0
கலைவேந்தன், சித்ரா பௌர்ணமி பாடல் பற்றி சொல்லியிருந்தீர்கள். மறுபடியும் டெலிபதி என நினைக்கிறேன். இந்த படத்தின் காட்சிகளை அண்மையில்தான் பார்த்துக் கொண்டிருந்தேன். அதற்கு காரணம் அருமை நண்பர் ஆர்கேஎஸ். அவர் சித்ரா பௌர்ணமி படத்தைப் பற்றி சில விவரங்களை கேட்டார். எனக்கு தெரிந்ததை கூறினேன். 1976 தீபாவளிக்கு வெளியானது இந்தப் படம். அந்த 1976 அக்டோபர் மாதத்திற்கு பிறகு அந்தப் படத்தை பார்க்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. இப்போதும் தொலைக்காட்சியில் நடிகர் திலகமும் ஜெயலலிதாவும் பல்வேறு costumes அணிந்து பாடும் செந்தூர நெற்றி பொட்டின் என்ற பாடல் காட்சி மட்டுமே பெரும்பாலும் ஒளிப்பரப்படுகிறது. ஆகவே ஆர்கேஎஸ் கேட்டவுடன் YouTube -ல் தேடிப் பார்த்தேன். இருந்தது என்பது மட்டுமல்ல கணிசமான ஆட்களும் பார்த்திருந்தார்கள். முதல் அரை மணி நேரம் மட்டுமே பார்க்கக் முடிந்தது. வந்தாலும் வந்தான்டி பாடல் காட்சி அதன் பிறகே வரும் என்பதனால் பார்க்க முடியவில்லை. இனிமேல்தான் பார்க்க வேண்டும்.
நீங்கள் அந்தப் பாடலின் சிறப்பம்சம் பற்றி குறிப்பிட்டிருந்தீர்கள். உண்மை. பழி வாங்கும் உணர்வில் நாயகன் அந்த வெறி உணர்வோடு பாட, நாயகியோ நேரெதிர் நிலையில். காரணம் நாயகன் யாரை பழி வாங்க வேண்டும் என்று நினைக்கின்றானோ அந்த நபர் நாயகியின் தந்தை. அது மட்டுமல்ல தன் சபதத்தில் நாயகன் வெற்றி பெறும் பட்சத்தில் தந்தையையும் இழந்து கணவனையும் இழக்க வேண்டி வருமோ (கைது செய்யப்படுவான்) என்ற தவிப்பு. நீங்கள் இந்தப் பாடலை பற்றி விளக்கமாக எழுதுகிறேன் என்று சொல்லியிருப்பதால் நான் தொடரவில்லை.
இங்கே நான் சொல்ல வந்தது இசையரசியின் குரல் ஜாலம். Adaptability என்று சொல்லுவார்களே அதாவது யாருக்கு பாடுகிறாரோ அவர் போன்ற குரலுக்கே தன் குரலை மாற்றிக் கொள்வதில் அவருக்கு இணை அவரே. குறிப்பாக ஜெயலலிதாவிற்காக பாடும்போது அப்படியே கலைச்செல்வியின் குரலைப் போலவே இருக்கும். வெண்ணிற ஆடை ஆயிரத்தில் ஒருவன் படங்களிலேயே இதை நாம் உணரலாம். நான் இரண்டு பாடல்களை கேட்கும்போது குரல் ஒற்றுமையை நினைத்து ஆச்சரியப்பட்டுப் போவேன். ஒன்று மோட்டார் சுந்தரம் பிள்ளையில் வரும் காத்திருந்த கண்களே பாடல். அதிலும் ஒரு சரணத்தின் இறுதியில்
செவ்விதழரோம் தேன் எடுக்க இந்த நாடகம் நடிப்பது என்ன
என்ற வரியை கவனியுங்கள்.
மற்றொரு பாடல் கந்தன் கருணை படத்தில் வரும்
குறிஞ்சியிலே பூ மலர்ந்து குலுங்குதடி தன்னாலே
இந்த பாடலைக் கேட்கும்போதும் குரல் ஒற்றுமை பளீரென்று தெரியும். பாட்டும் பரதமும் படத்தில்
மாந்தோரண வீதியில் மேளங்கள் ராகம்
பாடல் ஆரம்பிக்கும்போது பின்னணி இசை இல்லாமல் சுசீலாம்மா மட்டும் பாடுவார். படத்தில் ஜெயலலிதா பாட சிவாஜி அதே வரியை திருப்பி பாடுவார். உடனே ஜெயலலிதா " ஆச்சரியமாயிருக்கே! உங்களுக்கு பாடக் கூட தெரியுமா?" என்று கேட்பார். அப்போது ஜெயலலிதாவின் சொந்தக் குரல். அதற்கு நடிகர் திலகம் " நான் எங்க பாடினேன்? நீ பாடினதை அப்படியே திருப்பி சொன்னேன்" என்றவுடன் சட்டென்று சுசீலாம்மா மாப்பிளை பெண்ணுக்கு ஏன் இந்த மோகம் என்று பாடுவார். முதல் வரி சுசீலா, இரண்டாம் வரி ஜெயலலிதா மூன்றாம் வரி சுசீலா. ஆனால் பாடலைக் கேட்கும்போது இவை மூன்றுமே ஒரே குரலாக ஒலிக்கும்.
இதே போன்ற சிறப்புதான் வந்தாலும் வந்தான்டி பாடலிலும்.
மோகத்தில் வந்தது சொந்தம் கண்ணா
சொந்தத்தில் ஏன் இந்த கோபம் கண்ணா
நூற்றுக்கு தொண்ணூறு அம்மா உள்ளம்
இந்த வரியெல்லாம் அப்படியே கலைச்செல்வியின் குரலாகவே ஒலிக்கும். மிக மிக அருமையான பாடல்.
மன்னிக்கவும், இந்தப் பாடல் பற்றிய உங்கள் பதிவிற்கு தடையாக் இருக்க விரும்பவில்லை. நன்றி கலைவேந்தன் மற்றும் நண்பர் ஆர்கேஎஸ்.
அன்புடன் .
கண்டுபிடிச்சிட்டோம்னு நெனைக்கிறேன். தமிழ் திரைப்பட பாடலாசிரியர்கள் நெறைய எந்த வார்த்தைகளை வைத்து பாடல்கள் எழுதி இருக்கிறார்கள் என்று.
கோழியும் ஒண்ணு. இந்தாங்க அடுத்த பாட்டு. இது வழக்கமான பாட்.
https://www.youtube.com/watch?v=JTgeTgs6sxk
சி.க.
நீங்க தனியா எழுத நெனைச்ச பாட்டையெல்லாம் நான் போட்டுட்டேனோ அப்படின்னு ஒரு சந்தேகம் வந்திருச்சு.
அருமையா நீங்க கவிதையாவே எழுதி இருப்பீங்க. கெடுத்திட்டேனோ? மன்னிக்கணும்.
கொஞ்சம் பிரிவு வந்தால்... பின்பு உறவு வரும்
சின்னக்கண்ணன்,
‘வளர்ந்த பிறகு பார்த்த கோ...க்கள் வேறு’
ம்..ம்... குறும்பு உங்கள் கூடப் பிறந்தது.
போதுமோ இந்த இடம் பாடலை தரவேற்றியதற்கு நன்றி.
கல்நாயக்,
தமிழ் சினிமாவில் கோழிப்பாட்டு எதையும் நீங்கள் பாக்கி வைக்கவில்லை என்று நினைக்கிறேன். என்ன ஒரு ஆராய்ச்சி.(!)
முரளி,
வந்தாலும் வந்தாண்டி ராஜா... பாடல் பற்றி எழுத ஆசைப்பட்டது உண்மைதான். ஆனால், நீங்கள் எழுதினால் என்னைவிட சிறப்பாக எழுதுவீர்கள் என்று எனக்குத் தெரியும். திரு.சிவாஜி கணேசன் அவர்களின் ரசிகர் நீங்கள் என்பது கூடுதல் தகுதி. அதனால், நான் பார்க்காத, பார்க்கத் தவறிய சில அம்சங்களையும் நீங்கள் எழுத வாய்ப்பு உண்டு.
ஒன்றே ஒன்று மட்டும் எனக்கு தெரிந்ததை சொல்கிறேன். அந்த செங்கோடன் கேரக்டர் காட்டுவாசி கேரக்டர் என்பதால் மகிழ்ச்சியை வெளிப்படுத்த பாடலின் ஆரம்பத்தில் டார்ஜான் போல,
ஹா...ஹா... ஹாஹா.. ஹா...ஹா என்று ஆரம்பித்து அதையே இனிமையாக ஆ..ஹா.. அஹ அஹா என்று குரலை மாற்றும் மாயாஜாலம் தெய்வப்பாடகருக்கே சொந்தம். ( திருவிளையாடலில் ஆ.. ஞ்ஞா... என்று ஆரம்பித்து இனிமையாக்குவது போல) பாடலின் முடிவிலும் இது வரும். நீங்கள் எழுதுவதை ரசிக்க காத்திருக்கிறேன். நன்றி.
------------------------------------------
ஆசிய ஜோதி நேரு பண்டிதர், காஷ்மீரின் பெரிய பண்டிட் குடும்பத்தில் பிறந்தவர் . லண்டன் சென்று பாரிஸ்டர் பட்டம் பெற்றவர். அவரது சிறுவயதில் ஆனந்த பவனம் மாளிகையின் வாயில்களில் ஒவ்வொரு வாயிலுக்கும் ஒரு கார் நிற்கும். எந்தக் காரில் நேரு பள்ளிக்கு செல்வார் என்று தெரியாது. அந்த அளவு செல்வச் செழிப்பு மிக்க குடும்பம். சுதந்திரப் போரட்டத்தில் சிறையில் இருந்தபோது, தன் அருமை மகள் இந்திராவுக்கு எழுதிய கடிதங்கள் மூலம் உலக வரலாற்றையே விளக்கியவர்.
அப்பேற்பட்ட நேரு பெருமான், பிரதமராக இருந்தபோது ஒரு புத்தகத்தை படிக்க விரும்பினார். பிரதமர், அதுவும் நேரு பிரான் ஒரு புத்தகத்தை கேட்கிறார். ஆள், அம்பு நாலாபுறமும் பறந்தது. அந்த புத்தகம் எங்கேயும் கிடைக்கவில்லை. புத்தகக் கடைகளில் இல்லை. டெல்லி நூலகத்தில் இல்லை.
சொல்லப் போனால் நேரு தெரிவித்த அந்த நூலின் பெயரையே யாரும் கேள்விப் பட்டதில்லை. இருந்தாலும் கிடைக்காமல் விடுவதா?கேட்டவர் நேரு அல்லவா? விடாமல் சல்லடை போட்டுத் தேடியதில் கடைசியில் சென்னை கன்னிமாரா நூல் நிலையத்தில் அந்த நூல் இருப்பது தெரிந்தது. தேடியவர்களுக்கு திருப்தி. நிம்மதிப் பெருமூச்சு. ஆனால், அங்குதான் முளைத்தது சிக்கல்.
கன்னிமாரா நூல் நிலையத்தில் அந்த நூல் உள்ளது. ஆனால், இப்போது இல்லை. அதைப் படிப்பதற்காக ஒருவர் எடுத்துச் சென்றுள்ளார் என்று தெரிவித்தார் நூலகர். நூலைத் தேடிச் சென்றவர்களுக்கு வியப்பு. நேரு பண்டிதர் படிக்க இருந்த நூலை..... இதுவரை அவர் படிக்காமல் இருந்த நூலை... ஒருவர் எடுத்துச் சென்றிருக்கிறாரா? பரபரப்பும் ஆத்திரமுமாய் அவர்கள் மண்டையில் உதித்த கேள்வி..... யார் அது?
எப்படியும் அவரிடம் இருந்து உடனடியாக வாங்கி (பிடுங்கி) நேரு பெருமானிடம் சேர்க்க வேண்டுமே. அவசர அவசரமாக பதிவேட்டை கொண்டு வரச் செய்து நூலை எடுத்துச் சென்றவர் யார் என்று பார்க்கும் ஆவல். அதிகாரம் தூள் பறக்க, பதிவேட்டை பவ்யமாய் எடுத்து வந்தார் பணியாளர். பக்கங்களை புரட்டி நேரு பிரான் தெரிவித்த அந்த நூலை எடுத்துச் சென்றவரின் பெயரைப் பார்த்தால், சென்றவர்களுக்கு தலைசுற்றியது. எடுத்துச் சென்றவர் என்ற இடத்தில் நிரப்பப்பட்டிருந்த பெயர்...
சி.என். அண்ணாதுரை.
பேராசிரியர் கல்கி அவர்களால் தென்னாட்டின் பெர்னார்ட் ஷா என்று புகழப்பட்ட இந்நாட்டு இங்கர்சால் அறிஞர் அண்ணாவின் நினைவு நாள் இன்று. அந்த அறிவுலக மேதைக்கு அஞ்சலி.
எல்லாரையும் தனது உடன் பிறப்பாக தம்பிகளாக கருதியவர் பேரறிஞர் அண்ணா. அவரது தம்பி பொன்மனச் செம்மல் நடித்த உரிமைக்குரல் படத்தில் அண்ணன் தம்பி பாசத்தை விளக்கும் அற்புதமான எனக்குப் பிடித்த பாடல்.சிவப்பு நிற ஷர்ட், ஆந்திரா பாணி வேட்டியில் மக்கள் திலகம் கொள்ளை அழகு.
‘ஒருதாய் வயிற்றில் வந்த உடன்பிறப்பில்
கொஞ்சம் பிரிவு வந்தால், பின்பு உறவு வரும்..’
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
கலைவேந்தன்,
அண்ணா நினைவு நாளில் எழுதிய பதிவு அருமை. நேரு படிக்க விரும்பிய, அண்ணா படித்த அந்த புத்தகம் என்னவென்று கடைசி வரை தெரியவில்லயே. சொல்லியிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். பரவாயில்லை.
இந்தாருங்கள் உரிமைக்குரல் பாட்டு.
https://www.youtube.com/watch?v=YIStKeUCWiM