Quote:
உலகதிரைப்படங்களில் கதாநாயகனின் அறிமுகம் பரபரப்பாக பேசப்படுவது இரண்டே இரண்டு படங்கள்தான் !
1952ல் வெளியான பராசக்தியில் நடிகர்திலகம் தூக்கத்திலிருந்து விழித்தெழுவது ஒரு எதிர்கால நடிப்பின் சிம்மம் தனது சிம்ம சொப்பனத்திலிருந்து விழித்தெழுந்ததற்கு ஒப்பானதே !
அதன்பின் 1962ல் டாக்டர்நோ திரைப்படத்தில் ஷான்கானரியின் மறக்க முடியாத பாண்ட்...ஜேம்ஸ் பாண்ட் அறிமுகம்!!
பெரும்பாலான நடிகர்திலகத்தின் காவியங்களில் அவர் தோன்றும் முதல் காட்சி அதிரடியாகவும் பரபரப்பாகவும் இருக்கும்படி இயக்குனர்கள் காட்சிகளை அமைத்திட்ட மெனக்கெடல் உழைப்பு நமக்கு பரவசம் ஏற்படுத்தும் !
இத்தகைய காட்சிகளின் மாட்சியின் சிறு தொகுப்பு