இனிய நண்பர் திரு செல்வகணேஷ் சார்
என்னுடைய பதிவுகளுக்கு உடனுக்குடன் பாராட்டி பதிவுகள்
வழங்கிடும் உங்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றி .
Printable View
இனிய நண்பர் திரு செல்வகணேஷ் சார்
என்னுடைய பதிவுகளுக்கு உடனுக்குடன் பாராட்டி பதிவுகள்
வழங்கிடும் உங்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றி .
makkal thilagathin
super hit movie
urimaikkural
now at ktv
courtesy- pulavar pulamaipithan-biography.
ஐ.ஏ.எஸ். படித்து விட்டு பியூன் வேலைக்கு வந்ததற்குச் சமமான ஒரு விபத்து'' என்று, தான் பாடல் எழுதவந்தது பற்றி வர்ணிக்கிறார் புலவர் புலமைப்பித்தன்.
எம்.ஜி.ஆர்., சிவாஜி காலத்தில் தொடங்கி இன்று அஜீத், விஜய் வரைக்கும் தன்னை நீட்டித்துக் கொண்டிருக்கிற கவிஞர்.
எந்தச் சூழ்நிலைக்கும் இலக்கியத் தரமாகவே பாடல்கள் எழுதுவதில் முன்னோடி என்று இவரைச் சொல்லலாம்.
''பிறவி கம்யூனிஸ்ட் நான். ஏற்றத் தாழ்வுகளை ஒழிக்கப் போராடும் யுத்தக்காரன். சமூக அநீதி கண்டு பொங்கும் போராளி. பாரதி, பாரதிதாசன் வழியில் வந்த தொடர்ச்சி. பொது உடைமையும் சம உரிமையும் விரும்புபவன். சினிமாவில் பாட்டெழுதுவது என் லட்சியம் அல்ல. பாடலாசிரியன் என்பது மட்டுமே என் முகவரி அல்ல.. என் முகங்களில் ஒன்று'' என்று சிரிக்கிறார்.
உடுத்துகிற சட்டை-வேட்டி, முறுக்கேறிய மீசை, வெடித்துக் கிளம்புகிற சிரிப்பு என அத்தனையும் பளிச் வெள்ளை!
''பஞ்சாலைக் கூலித் தொழிலாளி நான். புலவர் படிப்பு படித்துவிட்டு கோவையில் தமிழாசிரியராக வேலை பார்த்துக் கொண்டிருந்தேன். 1966-ம் வருடம் இயக்குநர் கே. சங்கர் என்னை சென்னைக்கு அழைத்தார். திடீரென வந்தது திரைப்பாடல் எழுதுகிற வாய்ப்பு. யார் யாரோ எழுதி சரி வராமல் போக, கடைசியில் என்னை எழுதச் சொன்னதாக நினைவு. மாம்பலம் பவர்ஹவுஸ் அருகில் ஒரு பெட்டிக்கடை வாசலில் நின்றுகொண்டே 'குடியிருந்த கோயில்' படத்துக்காக நான் எழுதிய பாடல்தான் -
நான் யார்? நான் யார்? நீ யார்?
நாலும் தெரிந்தவர் யார்- யார்?
தாய் யார்? மகன் யார்? தெரியார்;
தந்தை என்பார் அவர் யார்- யார்?
உறவார்? பகை யார்?
உண்மையை உணரார்;
உனக்கே நீ யாரோ?
வருவார்; இருப்பார்;
போவார்; நிலையாய்
வாழ்வார் யார் யாரோ?
'ஒரு பைத்தியக்காரன் பாடுவது போல் எழுதுங்கள்!' என்று சொன்னதும் எனக்குத் தோன்றியது 'நான் யார்?' என்கிற கேள்விதான். எல்லோரும் தன்னைப் பார்த்துக் கேட்கவேண்டிய கேள்வி இது. பட்டினத்தான் கேட்டாலும் இதைத்தான் கேட்பான். பட்டினத்தானும் பைத்தியக்காரனும் ஒன்றுதானே...
இந்தப் பாடலுக்குக் கிடைத்த பெரும் வெற்றியால் நான் தொடர்ந்து பாடல்கள் எழுதலானேன். எந்தச் சூழல் தரப்பட்டாலும் அதற்குப் பொருந்துகிற மாதிரி என் முற்போக்கான கருத்துகளை, புரட்சிகர எண்ணங்களை எழுதிக்கொடுக்க ஆரம்பித்தேன். எம்.ஜி.ஆர். என்கிற சக்திவாய்ந்த கருவியைப் பயன்படுத்தி வீரமான இளைஞர்களுக்கு நான் விடுத்த அறைகூவல்தான் 'உழைக்கும் கரங்கள்' படத்தில் இடம்பெற்ற -
http://i41.tinypic.com/2gt5lc3.jpg
நாளை உலகை ஆள வேண்டும்
உழைக்கும் கரங்களே - இந்த
நாடு முழுதும் மலர வேண்டும்
புரட்சி மலர்களே
கடமை செய்வோம் கலங்காமலே
உரிமை கேட்போம் தயங்காமலே
வாருங்கள் தோழர்களே - ஒன்றாய்
சேருங்கள் தோழர்களே!
என்கிற பாடல். இன்றைக்கும் கேட்ட விநாடி சிலிர்ப்பூட்டுகிற ஒரு பாடல் அது.
பஞ்சபூதங்களில் மண் மட்டும் தான் மனிதர்களால் பிரித்து வைக்கப்பட்டிருக்கிறது. இந்த அவலத்தைத் தான்-
காற்றும் நீரும் வானும் நெருப்பும்
பொதுவில் இருக்குது - மனிதன்
காலில் பட்ட பூமி மட்டும்
பிரிந்து கிடக்குது..
பிரித்து வைத்துப் பார்ப்பதெல்லாம்
மனித இதயமே - உலகில்
பிரிவு மாறி ஒருமை வந்தால்
அமைதி நிலவுமே...
என்று 'இதயக்கனி' படத்தில் எழுதினேன். இன்று மண்ணை மட்டுமல்ல.. நீரையும் பிரித்து விட்டார்கள் என்பது பெரும் வேதனை.
என் பாடல்களின் மீது புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆருக்கு மயக்கமே உண்டு.
எந்தக் குழந்தையும் நல்ல
குழந்தைதான்
மண்ணில் பிறக்கையிலே - அவர்
நல்லவராவதும் தீயவராவதும்
அன்னை வளர்ப்பதிலே...
என்கிற, 'நீதிக்குத் தலைவணங்கு' பாட்டு வரிகளை குடும்பநலத் துறை சார்பாக மாநிலம் முழுக்க எழுதி வைக்கச் செய்தார். ஒரு திரைப்படப் பாடலுக்கு அரசாங்கம் தந்த உச்சகட்ட அங்கீகாரம் இதுவாகத்தான் இருக்கும் என்று கருதுகிறேன்.
எம்.ஜி.ஆருக்கு நான் எழுதிய இளமை கொப்பளிக்கும் காதல் வரிகள் இன்றைக்கும் வாழ்பவை. சாகாவரம் பெற்றவை. 'அடிமைப் பெண்' படத்தின் 'ஆயிரம் நிலவே வா' பாடலில் வரும் -
பொய்கையெனும்
நீர்மகளும்
பூவாடை போர்த்து
நின்றாள்
தென்றலெனும்
காதலனின்
கைவிலக்க வேர்த்து
நின்றாள்
என்ன துடிப்போ
அவள் நிலை
நீயுணர மாட்டாயோ
அந்த நிலையில் தந்த சுகத்தை
நான் உணரக் காட்டாயோ?
என்கிற வரிகள் விரகத்தின் தவிப்பை விளக்கினால், ஆண் - பெண் உறவை இலக்கியத்தரமாகச் சித்திரித்தது -
சந்தன மேனிகளின்
சங்கம வேளையிலே
சிந்திய முத்துகளைச்
சேர்த்திடும் காலமிது
தேன்கனிக் கோட்டையிலே
சிற்றிடை வாசலிலே
தோரண மேகலையில்
தோன்றிய கோலமிது
என்கிற வரிகள். காதலோடு நிறுத்திக்கொண்டுவிட முடியாதபடி என் சமூகச்சிந்தனை என்னைத் தூண்டிக்கொண்டே இருக்கும்.. அதுதான் என்னை இயக்குவது.
புண்ணிய பூமி என்று இந்தியாவைச் சொல்கிறோம். இங்கு இல்லை என்பதே இல்லை. இந்தத் திருநாட்டில் கங்கை உண்டு. ஆனால் தண்ணீர் இல்லை. வயல் எங்கும் உண்டு. உண்ணச் சோறு இல்லை. இந்த தேசத்தைத் துன்பங்கள் ஆள்கின்றன. வெறும் தேர்தல்களே இங்கு வாழ்கின்றன. இதுதான் புண்ணிய பூமியா? இந்த ஆதங்கத்தில்தான் -
புஞ்சை உண்டு நஞ்சை உண்டு
பொங்கிவரும் கங்கை உண்டு
பஞ்சம் மட்டும் இன்னும் இங்கு
மாறவில்லை - நம்
பாரதத்தின் சோத்துச் சண்டை தீரவில்லை.
இது நாடா, இல்லை வெறும் காடா? - இதைக்
கேட்க யாரும் இல்லை தோழா...
என்று 'உன்னால் முடியும் தம்பி' படத்தில் எழுதினேன்.
வயித்துக்காக மனுஷன் இங்கே
கயித்தில் ஆடுறான் பாரு;
ஆடி முடிச்சு இறங்கி வந்தா
அப்புறம்தாண்டா சோறு
என்று 'நல்லநேரம்' படத்துக்கு நான் எழுதிய பாட்டு திரையரங்குக்கு வெளியே கேட்டாலும் கண்ணீரை வரவழைப்பதற்கு என் சமூக அக்கறைதான் காரணம்.
இரும்பாக இறுகுகிற நான்தான் மெழுகாகக் குழையவும் முடியும். எரிமலை வரிகளை எழுதிவிட்டு,
பாடும்போது நான் தென்றல்காற்று
என்றும் எழுதமுடிகிறது.
அன்புள்ளம் கொண்ட அருமைச் சகோதரர் திரு. கலியபெருமாள் அவர்கள் அறிவது,
பூவுடன் சேர்ந்த நாரும் மணக்கும். ! இது பழமொழி.
மக்கள் திலகத்துடன் இணைந்து நடித்த எந்த நடிகையும் சோடை போனதில்லை. இது அந்த காலத்து நடிகை பானுமதி முதல், புரட்சித்தலைவரின் கடைசிப்படமான "மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன்" படத்தில் நடித்த பத்மப்ரியா வரை அனைத்து நடிகைகளுக்கும் பொருந்தும்.
அற்புதமான விவரங்களுடன், ஆதாரப்பூர்வமாக தாங்கள் அளித்து வரும் உண்மை தகவல்களில்,
1. கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து, மன உளைச்சல் அடைந்து மரணமடைந்த, நடிகை சாவித்திரி அவர்கள் தயாரிபில் வெளிவந்த "பிராப்தம்" படத்தில் நடித்த நடிகை சந்திரகலாவும்,
http://i39.tinypic.com/2qwk0td.jpg
2. மிகுந்த பொருட்செலவில், பிரம்மாண்டமாக ஓரிரு படங்களை தயாரித்து, மனக்கஷ்டமும்,
பண நஷ்டமும் அடைந்த இயக்குனர் ஸ்ரீதர் அவர்களின் தயாரிப்பில் வெளியான "வைர நெஞ்சம்" முதலான படங்களில் நடித்த நடிகை பத்மப்பிரியாவும்,
http://i43.tinypic.com/33kg6ef.jpg
இடம் பெறுவார்கள் என்று நம்புகிறேன்.
ஆவலுடன், தங்கள் பதிவை ,எதிர் நோக்கும்,
தங்களன்பு : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
திரு. கலியபெருமாள் அவர்கள் கூறியது போல்,
மறு வெளியீட்டில்,1970ல் வெளிவந்த "மாட்டுக்கார வேலன்" படம் அண்டை மாநிலமான "ஆந்திரா " வில் அதுவும் தினசரி 4 காட்சிகளுடன் ஓடுகிறது என்றால், "மக்கள் திலகத்தின்" மகிமையை என்னென்று சொல்வது ?
இந்திய திரையுலக வரலாற்றில், ஏன் உலக திரைப்பட வரலாற்றில், இப்படிப்பட்ட (repeated audience கொண்ட) சாதனையை நமது இதய தெய்வம் எம். ஜி. ஆர். அவர்களை தவிர எவராலும் நிகழ்த்த முடியாது என்பது மறுக்க முடியாத, மறைக்க முடியாத உண்மை. !
இந்த பதிவினை வெளியிட்டு எங்களை பரவசப்படுத்திய அன்பு சகோதரர் திருப்பூர் ரவிச்சந்திரன் அவர்களுக்கு நன்றி நவில வார்த்தைகளே இல்லை. .
ஓங்குக நமது பொன்மனசெம்மலின் புகழ் !
தங்களன்பு : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
பொன்மனச்செம்மல்
மக்கள் திலகம்
நாடு போற்றிய நல்லவர்
நடித்த இதய வீணை
கோவை ராயல் திரை அரங்கில் ஒரு வார வசூல்
ரூபாய் 70000.
மோதிரக்கை - தொடர்ச்சி
டி.ஆர்.ராஜகுமாரி
http://i44.tinypic.com/zwlfk.jpg
பேரழகி என்றும் தென்னிந்தியாவின் முதல் கனவுக்கன்னி என்று பெயர் எடுத்த திருமதி ராஜகுமாரி அவர்கள் அந்த கால நடிகர்கள் தியாகராஜா பாகவதர், சின்னப்பா ஆகியோருடன் நடித்திருந்தாலும் நம் சாதனை மன்னன் சரித்திர நாயகன் நடித்த மாபெரும் வெற்றிசித்திரமான குலேபகாவலி திரைக்காவியத்திற்குப் பிறகுதான் திரைவானில் சிறந்த நட்சத்திரமாக அந்தஸ்து பெற்று அனைத்து படங்களிலும் உலா வந்தார்..தொடர்ந்து, புதுமைப்பித்தன், பாசம், பெரிய இடத்துப்பெண் போன்ற படங்களில் தலைவருடன் நடித்ததால் நாடறிந்த நடிகையானார்.
நாட்டிய பேரொளி
http://i41.tinypic.com/29m1t1h.jpg
திருமதி. பத்மினி அவர்கள் சிறு சிறு வேடங்களிலும், கதாநாயகியாகவும் நடித்து வந்த காலங்களில் அவ்வளவாக புகழ் பெறவில்லை. புரட்சி நடிகருடன் சேர்ந்து மதுரைவீரன் என்னும் மகத்தான காவியத்தில் நடித்து, அந்த படம் வெள்ளிவிழா கண்ட பிறகுதான் தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் அவர் பிரபலமானார்..நம் நாட்டின் பாரம்பரிய கதையாகிய மதுரைவீரன்-வெள்ளையம்மா பாத்திரத்திற்கு பிறகுதான் அவர் பட்டி தொட்டியெங்கும் தெரியலானார்..தொடர்ந்து, விக்கிரமாதித்தன், மன்னாதி மன்னன், ராணி சம்யுக்தா, அரசிளங்குமரி, ரிக்ஷாக்காரன் போன்ற படங்கள் அவருக்கு புகழ் சேர்த்தன..
http://i40.tinypic.com/15y8ck0.jpg
http://i44.tinypic.com/29auxaf.jpg
திருமதி. அஞ்சலிதேவி
புரட்சி நடிகருடன் மர்மயோகியில் தொடங்கி உரிமைக்குரல் வரை நடித்த திருமதி அஞ்சலிதேவி நம் சரித்திர நாயகனின் சக்கரவர்த்தி திருமகள் படத்தின் வழியே தமிழ் திரையுலகின் மறக்க முடியாத நடிகையாகி பல படங்களில் நடித்து நிலையானதொரு இடம் பிடித்தார்.
http://i43.tinypic.com/2n13tk.jpg
திருமதி ராஜசுலோச்சனா
http://i42.tinypic.com/xgjo9j.jpg
சிறு சிறு வேடங்களிலும், ஒரு சில படத்தில் நடன நடிகையாகவும் நடித்த இவர் புகழ் பெற நம் புரட்சிநடிகரே காரணமானார். அரசிளங்குமரியில் கதாநாயகியாக நடித்தவுடன் அனைவருக்கும் அறிந்த நட்சத்திரமானார்..நல்லவன் வாழ்வான் படத்திலும் இவரே ஜோடியாகி இன்னும் புகழ் பெற்றார்..
...தொடரும்...
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்