Originally Posted by
g94127302
அன்புள்ள முரளி - உங்களிடம் இன்னும் கற்று கொள்ளவேண்டியவைகள் பல . இந்த அடக்கம் , புத்தரின் கோட்பாடு , கண்ணியம் தவறாத வார்த்தைகள் , காந்தியின் அஹிம்சா வழி - இன்னும் எவள்ளவோ ! இவைகளை ஏற்றுகொள்ளும் பக்குவம் உள்ளவர்கள் இருந்தால் உங்கள் வார்த்தைகள் பொன்னாக மதிக்கப்படும் - இல்லாவிட்டால் எல்லாமே விழலுக்கு இரைத்த நீர் தான் --- நமக்கு மட்டும் இந்த பண்புகள் இருந்தால் போதாது - அடுத்த தலைமுறை வேண்டுமானாலும் நம் பண்புகளை வியந்து பாராட்டலாம் , எழுதலாம் .. இந்த தலைமுறை இன்னும் நம்மை பழைய பஞ்சாங்கம் என்றுதான் தூற்றும் - கொஞ்சம் கூட தயிரியம் இல்லாதவர்கள் - உண்மைகளை கூட புரிந்து கொள்ளும் வகையில் எடுத்து சொல்ல தெரியாதவர்கள் என்று தான் ஏசும் --- உங்களுக்கு ஒரு பழ மொழியை நினைவு படுத்த விரும்பிகிறேன் - பாம்புக்கு பால் வார்த்தாலும் அது --------- . உங்களின் அடக்கமான வார்தைகளால் அவர்கள் ஏதாவது இதுவரை கற்று கொண்டார்களா ? - மாறாக இன்னும் பொய்களை தங்களின் பிறவி சொத்தாகத்தான் வைத்து கொண்டிருக்கிண்டார்கள் - NT yin படம் ஓடவில்லை என்பதை அந்த திரியில் யாராவது சொல்லும் வரை நாம் காத்திருப்பதில்லை - நம்மில் ஒருவரே இந்த படம் பார்க்க தேவை இல்லை என்று எழுதிவிடுவார் - அங்கே பாருங்கள் - LIC மாடியில் தீ , சென்ட்ரல் station இல் train வரவில்லை , மாடியில் இருந்த புறா ஒன்று இறந்துவிட்டது - அதனால் கூட்டம் குறைந்து விட்டது - ஆனாலும் theater இல் வேலை செய்யும் முனியம்மாவும் அவரின் குடும்பமும் அந்த படத்தை தினமும் பார்த்து வெற்றி அடைய செய்து விட்டார்கள் என்று எழுதுவார்கள் - இவர்களா நம்முடைய உண்மைகளை தெரிந்து கொண்டு ஒத்து கொள்ள போகிறார்கள் ? ஆனாலும் உங்களுக்கு தன்னம்பிக்கை மிகவும் அதிகம் . முள்ளை முள்ளால்தான் எடுக்க வேண்டும் - அவர்களுடைய பொய் கதைகளை வெளிச்சத்திற்கு கொண்டு வர வேண்டும் - இது நமக்காக மட்டும் அல்ல - அடுத்த தலைமுறைக்காகவும் கூட
ஒரு பாம்பு ஒரு சாது சொன்னார் என்பதற்காக தன்னுடைய சீறும் இயல்பையும் குறைத்து கொண்டு உயிருக்கு ஊசலாடிய கதை உங்களுக்கு தெரிந்திருக்கும் - நாம் சீற வேண்டும் தேவைப்பட்டால் - ஆனால் அவர்களைப்போல அநாகரிகமாக அல்ல - நம்முடைய எழுத்துக்கள் அவர்களை புண் படுத்த வேண்டாம் - ஆனால் அத்தனையும் உண்மை என்று அவர்கள் உணரும்படி இருக்க வேண்டும் - நம்முடன் விளையாடுவது ஒரு நெருப்புடன் , சிங்கத்துடன் விளையாடுவதைப்போல - ஆனால் நாம் நண்பர்களுக்கு நண்பர்கள் - கண்ணியம் தவற மாட்டோம் - அதே சமயத்தில் பதுங்கி கிடந்தது உபதேசம் செய்யும் துறவிகள் அல்ல நாம் - இதை அவர்கள் எவ்வளவு சீக்கிரம் உணர்வாகளோ அவ்வளவு சீக்கிரம் அவர்கள் நம்முடைய இனிய நண்பர்களாகி விடுவார்கள்