சென்னை சரவணாவில் இன்று முதல் (29/08/2014) மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். "தர்மம் தலை காக்கும் " தினசரி 3 காட்சிகள் நடைபெறுகிறது.
http://i58.tinypic.com/2193qet.jpg
Printable View
சென்னை சரவணாவில் இன்று முதல் (29/08/2014) மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். "தர்மம் தலை காக்கும் " தினசரி 3 காட்சிகள் நடைபெறுகிறது.
http://i58.tinypic.com/2193qet.jpg
கலைவாணரின் நினைவு நாள் இன்று
தமிழ் மக்களைச் சிரிக்க வைக்கும் மகான் கிருஷ்ணன். தமிழர்கள் தங்கள் துயரத்தைச் சில நிமிஷங்களேனும் மறக்கும் படியாகச் செய்யும் பெரிய உபகாரியான கிருஷ்ணனை மதிக்காதவர்கள் நாட்டின் பொது நன்மைக்குப் பாதகம் நினைப்பவர்கள் என்பதில் சிறிதும் சந்தேகம் இல்லை.
கிருஷ்ணன் தமது சொந்த வாழ்க்கையிலும் பரம ரசிகர் என்பது மதுரத்தைத் தோழியாகக் கொண்டதே தெளிவாகக் காண்பிக்கிறது. கிட்டப்பாவுக்குச் சுந்தராம்பாள் வாய்த்தது போல, கிருஷ்ணனுக்கு மதுரம் வாய்த்திருக்கிறார். இல்லை; தப்பிதம். சுந்தராம்பாளுக்குக் கிட்டப்பா வாய்த்தது போல மதுரத்துக்குக் கிருஷ்ணன் வாய்த்திருக்கின்றார். இது தமிழ்நாட்டின் பாக்கிய-மாகும்” - 1943-ம் ஆண்டிலேயே கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனையும் டி.ஏ.மதுரத்தையும் இப்படி நெஞ்சாரப் புகழ்ந்து எழுதியவர் 'அக்கிரகாரத்து அதிசய மனிதர்' எனச் சிறப்பிக்கப்பெறும் அறிஞர் வ.ரா.'கலைவாணர் என்.எஸ்.கே.' என்று தமிழக மக்களால் போற்றிப் புகழப்பெற்ற என்.எஸ்.கிருஷ்ணன் பெருமித உணர்வோடு தமக்குத் தாமே சூட்டிக்கொண்ட பட்டப் பெயர் 'நாகரீகக் கோமாளி' என்பதாகும்.''நாட்டுக்குச் சேவை செய்யநாகரீகக் கோமாளி வந்தான் அய்யா:ஆட்டம் ஆடி பாட்டுப் பாடி நல்லஅழகான ஜதையோடு வந்தான் அய்யா!”
என்று தமது சொந்தப் படமான 'நல்ல தம்பி'யில் தம்மைப் பற்றிய கொள்கை முழக்கத்தை ஒரு பாடலின் வாயிலாக வெளியிட்டார் கலைவாணர். ஒரு முறை சென்னை வானொலியில் உரையாற்ற நேர்ந்த போதும் அவர் 'என் கடன் களிப்பூட்டல்' என்றே குறிப்பிட்டார். தம் தனி வாழ்விலும் சரி, திரையுலக வாழ்விலும் சரி கலைவாணர் நகைச்சுவை உணர்வுக்குத் தந்த இடம் முக்கியமானது; முதன்மையானது.கலைவாணரின் நகைச்சுவை உணர்வுக்குக் கட்டியம் கூறும்
சில சுவையான நிகழ்ச்சிகள்
சுவை 1: உண்மையில் என்.எஸ். கிருஷ்ணனுக்கும், நாகம்மைக்கும் நாகர்கோயிலில் ஏற்கனவே திருமணம் நடந்திருந்தது. ஆனால் டி.ஏ. மதுரத்திடம் தமக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்று கூறி அவரது கரங்களைப் பற்றினார் கலைவாணர். இந்தப் பொய் மிக விரைவிலேயே அம்பலமாகி மதுரம், கலைவாணருடன் சண்டை போட்டார்; “ஏற்கனவே உங்களுக்குக் கல்யாணம் ஆகிவிட்டதா?” என்று கலைவாணரைக் கோபமாகக் கேட்டார். அப்போது கலைவாணர் சிரித்துக் கொண்டே சொன்ன பதில்:“ஆயிரம் பொய்யைச் சொல்லி ஒரு கல்யாணத்தைச் செய் என்பார்கள். நான் எனக்குக் கல்யாணம் ஆகவில்லை என்ற ஒரே ஒரு பொய்யைத்தானே சொன்னேன்?”
சுவை 2: 'மதுரை வீரன்' திரைப் படத்தில் இடம்பெற்ற ஒரு காட்சி:'அத்தே!' என்பாள் அரசிளங்குமரி (பானுமதி). அக மகிழ்ந்து போவார் மதுரை வீரனின் தாய் (டி.ஏ.மதுரம்); அப்போது இரண்டே சொற்களில் தமது விமர்சனத்தைச் சொல்லுவார் மதுரை வீரனின் தந்தையாக வரும் கலைவாணர்: “நீ செத்தே!” திரை அரங்கமே இதைக் கேட்டுச் சிரிப்பில் அதிரும்.இப்படத்தில் பிறிதொரு காட்சியில் கலைவாணரும் மதுரமும் வைகை ஆற்றைக் கடந்து மதுரை மாநகருக்குச் செல்வார்கள். அப்போது இருவருக்கும் இடையே நிகழும் சுவையான உரையாடல்: “என்ன மச்சான்! வைகையிலே தண்ணியே இல்லை?”“வை அண்டான்னானா? குண்டான்னானா? 'வை', 'கை'ன்னு தானே சொன்னான்?”
சுவை 3: 1956-ல் இந்தியப் பேசும் படத்தின் 25-ம் ஆண்டு விழா சென்னையில் நடந்தது.“லேடீஸ் அண்ட் ஜெண்டில்மேன்!” என்று கலைவாணர் பேச்சைத் தொடங்கினார்.'கலைவாணர் ஆங்கிலத்தில் உரையாற்றப் போகிறார்' என்று பலரும் நினைத்தனர்.“அவ்வளவுதான் எனக்குத் தெரிந்த இங்கிலீஷ்” என்று கூறிவிட்டு தமிழில் பேசினார்.
சுவை 4: ஒருமுறை என்.எஸ்.கிருஷ்ணன் கல்கியிடம் “எனக்குக் கதை எழுத வேண்டும் என்று ஆசை” எனச் சொன்னார்.“அதற்கு நான்கு 'மை' வேண்டுமே?” என்றார் கல்கி.“என்னென்ன கலர்களில்?” - இது என்.எஸ்.கிருஷ்ணன்.“பேனா மை, திறமை, தனிமை, பொறுமை” எனக் கல்கி சொன்னதும் உடனடியாக, “நீங்கள் சொன்னது மிக அருமை…” என்றார் என்.எஸ்.கிருஷ்ணன்!
சுவை 5: என்.எஸ்.கிருஷ்ணன் ஒரு நாடகத்தில் நடித்துக் கொண்டிருந்தார். அந்தச் சரித்திர நாடகத்தில் வந்த சக்கரவர்த்தி, தமக்கு எந்தெந்த ராஜாக்கள் கப்பம் கட்டினார்கள் என்று மந்திரியைக் கேட்டார். “வங்க ராஜா தங்கம் கட்டினார்; கலிங்க ராஜா நவமணிகள் கட்டினார்” என்றெல்லாம் அடுக்கிக் கூறினார் மந்திரி. உடனே சக்கரவர்த்தி, “சோழராஜா என்ன கட்டினார்?” என்று கேட்க, வசனம் மறந்த மந்திரி விழிக்க, வேலைக்காரனாக நின்ற கலைவாணர் “வேஷ்டி! வேஷ்டி!” என்று சொல்லி விட்டுப் போக, அனைவரும் வயிறு குலுங்கச் சிரித்தனர்.திரைப்பட ஆய்வாளரான அறந்தை நாராயணன் 'நாகரீகக் கோமாளி என்.எஸ்.கிருஷ்ணன்' என்ற கலைவாணரைப் பற்றிய நுாலின் முடிவில் எழுதியிருக்கும் வரி இது:“
1936 முதல் 1957 வரை லட்சக்கணக்கான தமிழர்களைக் குலுங்கக் குலுங்கச் சிரிக்கச் செய்து கொண்டிருந்த கலைவாணர் ஆகஸ்ட் முப்பதாம் நாள் முற்பகல் பதினொரு மணி பத்து நிமிடத்தில் இருந்து, தான் சிரிப்பதை நிரந்தரமாக நிறுத்திக் கொண்டார்”.அனைவரது நெஞ்சங்களையும் நெகிழச் செய்யும் ஓர் அரிய தற்செயல் நிகழ்வு; ஒப்புமை; “பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் காலமான போது அவருக்கு வயது 29; பாரதியார் காலமானது அவரது 39-ஆவது வயதில்; கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனோ 49-ம் வயதில் காலமானார். தமிழக அரசுக்கு ஒரு வேண்டுகோள். நகைச்சுவைக்கு இலக்கியமாகவும் இலக்கணமாகவும் வாழ்ந்த கலைவாணரை சிறப்பிக்கும் விதத்தில் அவரது பிறந்த நாளை (நவம்பர் 29) 'நகைச்சுவை நாள்' என்று அறிவிக்கலாமே!
-முனைவர் நிர்மலா மோகன்,
எழுத்தாளர்
இந்த வார மக்கள் திலகத்தின் படங்கள் .
மதுரை - சிரித்து வாழ வேண்டும்
கோவை -ஆயிரத்தில் ஒருவன்
கோவை -புதுமைபித்தன்
சென்னை -ஆயிரத்தில் ஒருவன் - தர்மம் தலைகாக்கும் .
நல்லவான் வாழ்வான் -31.8.1961
53 ஆண்டுகள் நிறைவு நாள் .
http://i62.tinypic.com/i60dv9.png
பிறரை கூர்ந்து நோக்கிக் கற்றுக் கொள்ளுதலை Vicarious Learning என்கிறோம் உளவியலில். தாயைப் போலவே மகள் பாத்திரம் பிடிப்பதும், அப்பா கோபத்தில் திட்டும் வார்த்தை வெளியில் மகனுக்கு சுலபமாக வருவ தும் இதனால்தான். பிரபு தேவா நடனத்தை பொடிசுகள் டி.வி பெட்டி முன் ஆடுவதும் இதனால்தான்.
வேலையில் பாஸ் உடல் மொழியும் வார்த்தைகளும் இதனால்தான் மிக எளிதாக உள் செல்கிறது. அதனுடன் அவர்களின் நிர்வாக நெறிமுறைகளும் திறன்களும் துணைக்குச் செல்கின்றன.
இதில் முக்கியமானது பேசும் வார்த்தைகளும் பேசாத ஒழுக்கமும் முரண்படுகையில் அங்கு பேசாத ஒழுக்கம்தான் பின்பற்றப்படுகிறது. “எல்லாத்தையும் ப்ராஸஸ் மீறாம செய்யணும்பா” என்று சொல்லிக்கொண்டே “எப்படியாவது இதை இன்னிக்கு முடி!” என்று உணர்த்தினால், அங்கு வழிமுறைகள் மீறப்பட்டு அன்றே அது அவசரமாக நடந்து முடியும்! இப்படித்தான் நாம் அனைவரும் நெறிமுறைகள் கற்கிறோம்.
நெறிமுறையும் நம்பிக்கை போலத்தான். ஆயிரம் வார்த்தைகள் புரிய வைக்காததை ஒரு செயல் புரிய வைக்கும். ஒவ்வொரு மேலாளரும் விழுமியம் கற்றுத் தரும் ஆசான். ஆனால், அது வகுப்பறைகளில் நடைபெறுவதில்லை. அன்றாட அலுவல் பணியில் கற்றுக் கொள்ளப்படுகின்றன!
நாம் காணும் அனைத்து மக்களின் ஒழுக்கமும் நேர்மையும் நம் வாழ்வு சார்ந்த மதிப்பீடுகளை மாற்றுகிறது. அரசியல்வாதிகள் மட்டுமல்ல, ஆசிரி யர்கள், மருத்துவர்கள், ஆன்மீகவாதிகள் என நாம் பெரிதும் மதிக்கும் நபர்களே தவறுகள் செய்யும் பொழுது அதன் தாக்கம் நமக்குள்ளும் ஏற்படுகிறது.
அதுபோல, ஒரு நிறுவனம் அரசாங் கத்தையோ, வாடிக்கையாளரையோ, தொழிலாளரையோ யாரை மோசம் செய்தாலும் அது பொது மக்கள் பார்வையில் நம்பிக்கை இழக்கிறது. Corporate Fraud என்று கூகுள் செய்து பார்த்தால் இன்றைய தூக்கத்தை நீங்கள் இழப்பது நிச்சயம்!
எத்தை தின்றால் பித்தம் தெளியும் என்று தெரியாமல்தான் சர்வ ரோக நிவாரணி போல இந்த கார்ப்பரெட் எதிக்ஸ் பயிற்சியை வைத்துக் கொண்டு திண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். அது அவ்வளவு முக்கியம் என்றால் ஏன் எம்.பி.ஏ வில் முக்கிய பாடமாக இல்லை? பள்ளிகளில் மாரல் சயின்ஸ் பாடத்தையே தவறவிட்ட நிலையில் இதை எதிர்பார்ப்பதே தவறுதான்!
இந்த கேள்விகள் கிளப்பிய சூட்டின் தன்மை உணர்ந்து என் அமர்வின் நெறியாளர் என் மென்னையைப் பிடித்து என்னை திசை திருப்பினார். இந்த புனித பசுவைத் தொடுவதாவது? அதுவும் மாணவர்கள் மத்தியில் எப்படி? அமர்வு முடிந்து நெருப்பு கனன்று கொண்டிருந்தது.
அகத் தூய்மை தலைமைப் பண்பிற்கும் நிறுவன நெறிகளுக்கும் எவ்வளவு முக்கியம் என தேனீர் இடைவெளியில் மாணவர்களிடம் பேசினேன். அப்போது நிறுவன மோசடிகளின் விலை பற்றி ஒரு பேராசிரியர் பிரமாதமாக பட்டியல் போட்டுக் காண்பித்தார். கைகுலுக்கல்களும் ‘கட்டிப்பிடி’ வைத்தியமுமாய் விடைபெற்ற பின்னும் மனம் பேசாத அம்சங்களை அசை போட்டுக் கொண்டிருந்தது.
எம்.ஜி.ஆர் படங்களின் தலைப்பு களை வைத்தே Value Clarification பற்றி கருத்தரங்கம் நடத்தலாம் என்று தோன்றியது. நல்லவன் வாழ்வான். நீதிக்குப்பின் பாசம். திருடாதே. தாய்க் குப்பின் தாரம். நீதிக்கு தலை வணங்கு.
எங்கோ தவறவிட்ட அடிப்படைப் பாடங்களை அவசரமாக அடுத்தத் தலைமுறைக்கு கடத்த வேண்டும். யாரை மிதித்து ஓடினாலும் கடைசியில் பணம் சம்பாதித்து ஜெயிக்கணும் என்கிற அவசர பாடத்தை மறு பரிசீலனை செய்ய வைக்க வேண்டும். அரசியல்வாதியும் தலைவனும் நம் விழுமியங்களிலிருந்து தோன்றியவர்கள் என்று புரிய வைக்க வேண்டும்.
கெட்ட செய்தி கொடுப்பவர்களுக்கு ஒரு வியாபார நோக்கம் உள்ளது; அதை உதறி விட்டு நல்ல செய்திகளை உருவாக்கலாம் வா என்று நம்பிக்கை கொடுக்க வேண்டும். நேர்மை என்பது யாரும் பார்க்காத போது நீ செய்யும் செயலில் இருக்கிறது என்பார்கள். நெறி முறைகளை புகட்ட சிறந்த வழி அதற்கு நாம் முன் மாதிரியாகத் திகழ்வதே. எல்லா காலத்திலும் இருட்டு இருந்திருக்கிறது. எல்லா காலத்திலும் வெளிச்சமும் வந்திருக்கிறது.
சூது கவ்வும் என்று அரை குறையாக சொன்னதற்கு பரிகாரமாய், அதன் பின் தருமம் வெல்லும் என்பதையும் சேர்த்துச் சொல்வோம்!
1961ல் தான் கதாநாயகனாக நடித்து அண்ணா கதை வசனத்தில் உருவான ' நல்லவன் வாழ்வான் ' படத்தில் வரும் "சிரிக்கின்றாள் அவள் சிரிக்கின்றாள்.." என்ற காதல் பாடலிலேயே,
" உதயசூரியன் உதிக்கும் போது
உள்ளத் தாமரை மலராதோ;
எதையும் தாங்கும் இதயமிருந்தால்
இருண்ட பொழுதும் புலராதோ "
- என்று கட்சி சின்னமான உதயசூரியனையும் , கட்சித் தலைவர் அண்ணாவின் பிரபலமான ' எதையும் தாங்கும் இதயம் ' வாசகத்தையும் குறிப்பிட வைத்தார்
courtesy - thinnai
" நான் ஆணையிட்டால்..."
பொதுவாக, டைரக்ஷன், எடிட்டிங்கில் இருந்து லைட்டிங் வரை சினிமாவின் அனைத்துத் தொழில் நுணுக்கங்களிலும் எம்.ஜி.ஆர். கைத்தேர்ந்தவர் என்று சொல்வார்கள். பாடல் வரிகளாகட்டும், டயலாக் டெலிவரியாகட்டும் எப்போதெப்போது குளோசப் வைப்பது; காட்சிப் பின்னணியில் என்னென்ன இருக்க வேண்டுமென்பது கூட அவர் தீர்மானித்து வைப்பாராம்.
தனது இலக்கு அதாவது Target Audience: கடுமையாக உழைத்து விட்டு ' போதும் போதாமலும்' சம்பளம் வாங்கி லோல்படும் தொழிலாளர்களும், குமாஸ்தாக்களும்; விவசாயிகள், கூலித் தொழிலாளர்கள், கைவண்டி, ரிக்ஷா தொழிலாளர்களும் தான் என்பதை சந்தேகத்துக்கு இடமின்றி புரிந்து வைத்திருந்தார் எம்.ஜி.ஆர். அவர்களின் ஆழ்மன ஏக்கங்களை, நிறைவேறவே வாய்ப்பில்லாத ஆசைகளை பூர்த்தி செய்யும் பிரதிநிதியாக திரையில் தோன்றினார். அவர்களின் ரசனை, விருப்பத்தன்மைக்கேற்ற கதை, காட்சியமைப்புகளையும், நடை உடை பாவனைகளையும் கொண்டே படங்களில் நடித்தார். கட்சி பிரச்சாரத்தையும் அதே பாணியில் மேற்கொண்டார்.
இதற்காக எழுந்த கிண்டல், கேலி விமர்சனங்களை அவர் உதாசீனம் செய்தார். ஏற்கனவே குறிப்பிட்டபடி, தான் வகுத்து வைத்திருந்த உத்திகளின்படியே திமுகவின் உருவமாக, குரலாக திரையில் வலம் வந்தார்.
கறுப்பு சிவப்பு என இரு வர்ணம் கொண்ட பர்ஸை வைத்துக் கொண்டு அடிக்கடி வெளியே எடுத்துக் காண்பிப்பார். அதே போல் அதே இரு வர்ண பெல்ட். கறுப்பு பேன்ட், சிவப்பு சட்டை (இது இடம் மாறியும் வருவதுண்டு). காதலியுடன் டூயட் பாடும் காட்சிப் பின்னணியில் கூட 'உதயசூரியன் ' சிம்பள். அவரை உதயசூரியனாக காதலியின் வர்ணிப்பு.
----------
' பரிசு ' (1963) படத்தில் படத்தில் ஒரு பாடல். " கூந்தல் கறுப்பு; குங்குமம் சிவப்பு...'' எனத் தொடங்கும். இது 'அரிய' கண்டுபிடிப்பு என அவருக்கு தெரியாமலிருக்குமா! கேலியை பற்றி கவலைப்படவில்லை. பாடலை முணுமுணுக்கும் பாமரன் மனதில் கட்சிக் கொடியின் இரு வர்ணத்தை ஆழமாக இறக்க வேண்டுமென்பதே புரட்சி நடிகரின் ஒரே நோக்கமாக இருந்திருக்க வேண்டும்.
கறுப்பு சிவப்புக்கு இன்னொரு உதாரணம் :
" கறுப்பென்றும் சிவப்பென்றும் வேற்றுமையாய் ;
கருதாமல் எல்லாலோரும் ஒற்றுமையாய்... " (படம் : விவசாயி)
எம்ஜிஆரின் அடையாளப் படம் படகோட்டி. (typical mgr film) அதில்
ஒரு காதல் ஜோடிப் பாடல் (தொட்டால் பூ மலரும்)
ஒரு காதல் ஜோடி சேரும் பாடல் (பாட்டுக்குப் பாட்டெடுத்து)
ஒரு காதல் பிரிவுப் பாடல் (என்னை எடுத்து தன்னைக் கொடுத்து)
ஒரு எதார்த்தப் பாடல் (தரைமேல் பிறக்க வைத்தான்)
ஒரு தத்துவப் பாடல் (கொடுத்ததெல்லாம் கொடுத்தான்)
ஒரு கவர்ச்சிப் பாடல் (அழகு ஒரு ராகம்) நம்பியார் பார்வையில் நாயகி சரோஜா தேவியே வந்து கிளப் டான்ஸ் ஆடுவார் -அப்றம் எப்டி மீனவப்படத்துல கவர்ச்சி காட்றது?)
ஒரு ஜாலிப் பாடல் (கல்யாணப் பொண்ணு) (எம்ஜிஆர் மாறுவேடம்னா ஒரு மீசை அல்லது ஒரு –ரிகஷாக்காரன் படத்துல வர்ர மாதிரி- பெரிய மரு ஒண்ண எடுத்து மூஞ்சியில ஒட்ட வச்சிக்கிறது அவ்ளோதானே? அவ்ளோதான், அடையாளம் தெரியாதுல்ல?)
ஒரு பூடகப் பாடல் (நானொரு குழந்தை)
என்று வகைக்கு ஒன்றாகப் போட்டுத் தாக்கியிருப்பார் எம்ஜிஆர்.
அனைத்துப் பாடல்களும் வாலியே எழுதியன என்பது குறிப்பிடத்தக்க செய்தி
பின்னர் வந்த பெரும்பாலான படங்களில் அனேகமாக “எம்ஜிஆர்-ஃபார்முலா“பாடல்களை எழுதும் வாய்ப்புகள் வாலிக்கே வழங்கப்பட்டன என்பது திரைப்படத்துடன் கலந்த தமிழகத்தின் அரசியல் வரலாறு!