மதுரை சென்ட்ரல் திரை அரங்கில் நம்நாடு காவியத்தை காண இன்று மாலைக்காட்சிக்கு வருகை புரிந்தோர் 600 பேர்கள்.
தகவல் - திரு.ஆர்.சரவணன் - மதுரை
Printable View
மதுரை சென்ட்ரல் திரை அரங்கில் நம்நாடு காவியத்தை காண இன்று மாலைக்காட்சிக்கு வருகை புரிந்தோர் 600 பேர்கள்.
தகவல் - திரு.ஆர்.சரவணன் - மதுரை
கோவை டிலைட் திரை அரங்கில் நம்நாடு
கடந்த வெள்ளி அன்று திரையிடப்பட்டு வெற்றி நடைபோடுகிறது.
"நான் ஏன் பிறந்தேன்' (1972)
"நான் ஏன் பிறந்தேன்' என்ற தலைப்பில் மக்கள் திலகம் எம்ஜிஆர் ஆனந்த விகடன் இதழில் தனது சுயசரிதையை எழுதி வந்தார். இதே பெயரில் ஜி.என்.வேலுமணி, எம்ஜிஆரைக் கதாநாயகனாக வைத்து வண்ணப்படம் ஒன்றைத் தயாரித்தார். சாதாரணக் குடும்பத்தைச் சேர்ந்த இளைஞன், மேற்படிப்பு முடித்து ஊருக்குத் திரும்புகிறான். படிப்புக்கு வாங்கிய கடனால் குடும்பம் மோசமான நிலையில் உள்ளதைக் காண்கிறான்.
.
மனைவி, குழந்தை, சிற்றன்னை, அவளது குழந்தைகள், தங்கையின் குடும்பம் என மிகப் பெரிய குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டிய பெரும் பொறுப்பு அந்த இளைஞனின் தலையில் விழுகிறது. ஏதாவதொரு வேலையில் சேர வேண்டிய கட்டாயத்தில், ஒரு எஸ்டேட்டில் மேனேஜர் வேலைக்கு தான் திருமணமானவன் என்பதை மறைத்து வேலைக்குச் சேருகிறான். எஸ்டேட் முதலாளியின் மகளுக்கு கால்கள் திடீரென விளங்காமல் போய்விட அவளுக்கு மனத் தைரியத்தைக் கொடுத்து அவளது கால்கள் மீண்டும் செயல்பட வைக்கிறான்.
அந்தப் பெண்ணோ இளைஞனை விரும்புகிறாள். இதனால் ஏற்படும் குழப்பங்களை எப்படி தீர்க்கிறான் அந்த இளைஞன் என்பதே கதை. நல்ல குணங்களைக் கொண்ட இளைஞனாக எம்ஜிஆர் நடித் திருந்தார். அவரது ஜோடியாக கே.ஆர்.விஜயா, எஸ்டேட் முதலாளியின் பெண்ணாக காஞ்சனா ஆகியோர் நடித்தனர்.
மேலும் சுந்தர்ராஜன், தேங்காய் சீனிவாசன், நாகேஷ், நம்பியார், வீரராகவன், வி.கோபாலகிருஷ்ணன், எஸ்.என்.லட்சுமி, ஜி.சகுந்தலா, பேபி இந்திரா மற்றும் பலர் நடித்திருந்தனர். ஒரு குழந்தைக்கு தந்தையாக வரும் பாத்திரத்தில் எம்ஜிஆர் நீண்ட நாட்களுக்கு பிறகு நடித்தார். தனக்கு குடும்பம் இருப்பதை வெளியே சொல்ல முடியாமலும், பணக்கார பெண் தன்னை காதலிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாமல் தவிக்கும் போது அவர் சிறந்த நடிப்பை வெளிப் படுத்தி இருந்தார். காஞ்சனாவும் சிறப்பாக நடித்தார்.
படத்தின் சிறப்பம்சம் மிகச் சிறந்த பாடல்கள் ஆகும். வாலி, புலமைப்பித்தன் உள்ளிட்ட கவிஞர்கள் எழுதிய பாடல்களுக்கு இனிமையான இசையை சங்கர் கணேஷ் இரட்டையர்கள் வழங்கி இருந்தனர். எம்ஜிஆர் படத்திற்கு முதன் முதலாக இந்தப் படத்தில்தான் அவர்கள் இசையமைத்தனர்.
கிடைத்த வாய்ப்பை அருமையாக பயன்படுத்தி அவர்கள் இசையமைத்த கருத்தாழம் மிக்க பாடல்கள் வருமாறு:
"நான் ஏன் பிறந்தேன்;
நாட்டுக்கு நலமென புரிந்தேன் என்று நாளும்,
பொழுதும் வாழும் வரையில் நினைத்திடு என் தோழா,
நினைத்து செயல்படு என் தோழா, உடனே செயல்படு என் தோழா'
"தம்பிக்கு ஒரு பாட்டு
அன்பு தங்கைக்கு ஒரு பாட்டு
வாழ்வில் நம்பிக்கை வளர்வதற்கு
தினமும் நான் சொல்லும் கதை பாட்டு'
"நான் பாடும் பாடல் நலமாக வேண்டும்
இசை வெள்ளம் நதியாக ஓடும்
அதில் இளநெஞ்சம் படகாக ஆடும்'
"உனது விழியில் எனது பார்வை
உலகை காண்பது
என் இதயம் எழுதும் உணர்வில் எந்தன் கவிதை வாழ்வது'
"என்னம்மா சின்னப் பொண்ணு
என்னவோ தேடும் கண்ணு
நானும் உந்தன் ஜோடி அல்லவோ'
"தலைவாழை இலை போட்டு
விருந்து வைத்தேன்
என் தலைவா உன் வருகைக்கு
தவமிருந்தேன்'
இந்த பாடல்கள் அனைத்தும் மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் அருமையான இசையை கொண்டவை என்றால் அது மிகையாகாது. இந்தப் பாடல்களை டி.எம்.சௌந்தர் ராஜன், சுசீலா ஆகியோர் அனுபவித்து பாடி அசத்தியிருப்பார்கள்.
இந்த பாடல்களுடன் பாரதிதாசனின்,
"சித்திரச் சோலைகளே உம்மை நன்கு திருத்த இப்பாரினிலே இங்கு எத்தனை தோழர்கள் ரத்தம் சொரிந்தனரோ உங்கள் வேரினிலே ' என்ற பாடலையும் டி.எம்.சௌந்தர் ராஜனின் குரலில் மிக சரியான இடத்தில் பயன்படுத்தி இருப்பார்கள்.
எம்.கிருஷ்ணன் இயக்கிய இந்தப் படம் குடும்பத்தினர் அனைவரும் காணும் வகையில் படமாக்கப் பட்டிருந்தது.
courtesy - malai sudar
நெஞ்சில் நிற்கும் வரிகள்
சினிமா என்பது ஐயோ குய்யோ என்று மட்டும் அழுது வழியும் ஒன்றல்ல / காதல் வீரம் புரட்சி உண்மை நேர்மை தாய்மை பாசம் எழுச்சி என்று மக்கள் மேன்மைக்கு பயன் செய்யும் சாதனம், அதனை சரியாக பயன்படுத்திய ஒரே உலக நடிகர் அமரர் எம்ஜிஆர் அவர்கள் மட்டுமே, அவர் திரை வாயிலாக இரண்டடியில் கூறிய பெரிய சிந்தனைகள் பாடங்கள் காண்க .
இஞ்சினியருக்கும் டாக்டருக்கும் அட்வகேட்டுக்கும் ஏன் இந்த உலகத்துக்கே சோறு போடுபவன் யாரு ? விவசாயி விவசாயி - (விவசாயி )
அழுபவர்கள் சிரிக்க வேண்டும், சிரிப்பவர்கள் சிந்திக்க வேண்டும் - (நான் ஏன் பிறந்தேன் )
நாய்க்கு வீசியெறியும் எச்சில் இலையின் மிச்ச சோறுகூட என் உடன்பிறப்புகளுக்கு கிடைக்கவில்லை என்றால் நான் வாழ்வது மனிதர்கள் மத்தியில் அல்ல அரக்கர்கள் நடுவில் - (மீனவ நண்பன் )
நாம் நாக்குக்கு அடிமையாக இருக்கக் கூடாது நாக்குத்தான் நமக்கு அடிமையாக இருக்க வேண்டும் - (பல்லாண்டு வாழ்க )
தனக்கு தனக்கு என்று சேர்த்து வைத்துக்கொள்ளும் ஆசையை வளர்த்தால் நம்மால் பிறருக்கு எதுவுமே
செய்ய முடியாது (ஆயிரத்தில் ஒருவன்)
பத்துக்கோடி டாலர் உங்களுக்கு பெரிசு அதைவிட இந்த உலகில் உள்ள தனி ஜீவன் எனக்குப் பெரிசு - (உலகம் சுற்றும் வாலிபன்)
பலம் உள்ளவனால்த்தான் சமாதானத்தைப்பற்றிப் பேச முடியும் - (படகோட்டி)
வலிமை உள்ளவன் வைத்ததெல்லாம் சட்டமாகாது பிறர் வாழ உழைப்பவர் சொல்லுவதெல்லாம் சட்டமாக்க வேண்டும். - (நல்ல நேரம்)
உதவி என்று வருபவர்களை பணம் பதவி என்ற பெயரால் உயிருடன் விழுங்கும்
திமிங்கிலம் நீ ( படகோட்டி)
கோடி செல்வம் இருந்தும், தாயன்பில்லாத மாளிகை வாசியை விட, குடிசையில் இருந்தாலும்
தாயின் கையால் உண்ணும் நான் பாக்கியசாலி - (தொழிலாளி )
இப்படி அவரின் பல படங்களில் சிந்தையை தொடும் வரிகள் வசனங்களாக பாடல்களாக நிறையவுண்டு, 5 எம் ஜி ஆர் படங்கள் பார்த்தால் ஒரு குட்டிப் பல்கலைக்கழகம் சென்று படித்த அறிவைப் பெறலாம் .
courtesy -ramesh
o யோகி – அர்ச்சனா வாசுதேவன்
மக்கள் திலகம் எம்ஜிஆர் எழுதிய, ‘நான் ஏன் பிறந்தேன்?’ புத்தக வெளியீட்டில், தலைமையேற்று புத்தகத்தை வெளியீடு செய்து பேசிய டத்தோ எம். சரவணன், “புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்களின் நூல்களை கண்ணதாசன் அறவாரியம் வெளியிடுவதில் எனக்குப் பெருமையாக இருக்கிறது. இதன் முக்கிய நோக்கமே, அவரின் புத்தகங்கள் மலேசியர்களுக்கு ஒரு வழிகாட்டியாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான்.
எம்ஜிஆரின், ‘நான் ஏன் பிறந்தேன்?’ என்ற புத்தகத்தைப் படித்து, நம்மவர்களும் வாழ்க்கையை மாற்றி அமைத்துக் கொள்ள வேண்டும். என்னைப் பொறுத்தவரை எம்ஜிஆரிடம் இரண்டு விஷயங்கள் தனித்துவம் வாய்ந்தவை.
ஒன்று எந்தக் காரியமாக இருந்தாலும் அதனைக் குறித்த நேரத்தில் எம்ஜிஆர் செய்து விடுவார். மற்றொன்று அவருடைய ஈகைக் குணமாகும். இந்த இரண்டையும் அவர் நடிகராக இருந்தபோதும், அரசியல்வாதியாக இருந்தபோதும் பின்பற்றியே வந்துள்ளார்.
எம்ஜிஆரைப் பற்றி சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால், சிலர் சரித்திரத்தில் வாழ்வார்கள். இன்னும் சிலர் சரித்திரத்துக்காக வாழ்வார்கள். ஆனால், நம் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் சரித்திரமாகவே வாழ்ந்துகொண்டிருக்கிறார்” என்று கூறினார்.
நான் ஏன் பிறந்தேன்!!!
naan en piranthen
பத்துத் திங்கள் சுமந்தாளே அவள் பெருமைப் படவேண்டும்
உன்னைப் பெற்றதனால் அவள் மற்றவராலே போற்றப்பட வேண்டும்
க*ற்ற*வ*ர் ச*பையில் உன*க்காக* த*னி இட*மும் த*ர* வேண்டும்
உன் க*ண்ணில் ஒரு துளி நீர் வந்தாலும் உல*க*ம் அழ* வேண்டும்
கவிஞர் வாலி அவர்கள் இயற்றி மக்கள் திலகம் நடித்து வெளியான பாடல்கள் என்பதா? மக்கள் திலகத்திற்காக கவிஞர் வாலி இயற்றிய பாடல்கள் என்பதா? இந்தக் கலவை தந்திருக்கும் முத்துக்கள் கொட்டிக் கிடக்கின்றன தமிழ்த்திரைசையில்! நான் ஏன் பிறந்தேன்… என்கிற திரைப்படத்தில் இடம் பெரும் இனிய பாடலிது! கவிஞர் வழங்கிய தேவரின் சங்கர் கணேஷ் இசையமைப்பில் உருவான பாடல்கள் என்றும் நம் இதயம் தொடுகின்றன!
நான் ஏன் பிறந்தேன்
நாட்டுக்கு நலம் என்ன புரிந்தேன்
என்று நாளும் பொழுதும் வாழும் வரையில்
நினைத்திடு என் தோழா
நினைத்து செயல்படு என் தோழா
உடனே செயல்படு என் தோழா
முன்னோர் சொன்ன சொல்லே ஆனாலும் எளிய தமிழில் வினாக்களாய் நம் நெஞ்சில் பதிக்கிறார். மறைந்த முன்னாள் அமெரிக்க அதிபர் கென்னடி தான் பதவி ஏற்றக் கூட்டத்தில் “Ask not what your country had done for you; Ask what you have doe for the country” என்ற பொன்மொழியின் பிரதிபலிப்பாக இப்பாடல் திகழ்கிறது!
பத்துத் திங்கள் சுமந்தாளே அவள் பெருமைப் படவேண்டும்
உன்னைப் பெற்றதனால் அவள் மற்றவராலே போற்றப்பட வேண்டும்
க*ற்ற*வ*ர் ச*பையில் உன*க்காக* த*னி இட*மும் த*ர* வேண்டும்
உன் க*ண்ணில் ஒரு துளி நீர் வந்தாலும் உல*க*ம் அழ* வேண்டும்
mgrvaali
இந்த வைர வரிகள் என்னையும் கூட வாழ்க்கைப் போராட்டத்தில் நீந்தி வெற்றி பெற வைத்திருக்கின்றன என்றால் அது மிகையில்லை! அந்த நன்றிக் கடனாக “வாழும் தமிழே வாலி” என்கிற நூலை கவிஞர் வாலிக்கு நன்றி காணிக்கையாக எழுதி குமரன் பதிப்பகத்தால் வெளியிட்டேன்.. பாடலாசிரியன் என்கிற தகுதியோடு திரையுலகில் பாட்டு எழுதிச் சென்றவர் பலர் இருக்கலாம்! அதே பாடல்கள் மக்கள் நெஞ்சில் குடியிருக்கச் செய்தவரைத்தான் ‘கவிஞர்’ என்கிற வரிசையில் கொள்கிறோம். மேலும் அதிலும் மானுட வாழ்விற்கான தேவைகளைக் கருத்துக்களை வழங்கிய கவிஞர்களையே காலம் போற்றிப் புகழ்ந்து கொண்டிருக்கிறது.
கவிஞர் காவிரிமைந்தன்.
ஆனந்தவிகடனில் எம்.ஜி.ஆர். எழுதிய தொடரை நூலாக்கி, அரிய படங்களையும் சேர்த்து இரு தொகுதிகளாக வெளியிட்டிருப்பது சிறப்பு. இத்தொடர் எழுதுவது ஏன் என்பதை எம்.ஜி.ஆர். விளக்குவதிலிருந்தே விறுவிறுப்பு தொடங்குகிறது.
தனக்கு உதவிய குடியிருந்த வீட்டின் உரிமையாளர் ஏ.வி.ராமன் போன்றோரை அவர் விவரிப்பதைப் படிக்கும்போது அட... இப்படியும் நல்ல மனிதர்கள் இருந்துள்ளார்களே என்ற வியப்பே ஏற்படுகிறது. இதைப்போல மனிதர்கள் பலரை நூலெங்கும் காண முடிகிறது.
"திருடாதே' படத்தில் தன்னை முன்னிலைப்படுத்தி திட்டமிடப்பட்ட விஷயங்கள் அனைத்துமே தனக்கு எதிராக மாறியதையும், அச் சூழலில் தான் நடந்துகொண்ட விதத்தையும் எம்.ஜி.ஆர். விவரித்திருப்பது வாழ்க்கைப் பாதையில் போராடும் அனைவருக்கும் பாடம்.
திரைப்படம், அரசியல் என அவர் எதிர்கொண்ட மனிதர்கள், அவர்களால் ஏற்பட்ட பாதிப்பு, உதவி, அவமானம், புகழ், பொருள், தன்னிடமிருந்த செருக்கு, விரக்தி, எதிர்ப்பு, அன்பு, பாசம், மோசம், சோதனை, அதை முறியடித்து பெற்ற சாதனை என வாழ்வின் அத்தனை கோணங்களையும் மிக எளிய முறையில் யாருக்கும் புரியும் வகையில் எழுதியிருக்கிறார் எம்.ஜி.ஆர்.
மொத்தத்தில் 134 தலைப்புகளில் எம்.ஜி.ஆர். விவரித்திருக்கும் சம்பவங்கள், கருத்துகள் அனைத்தும் ஒரு மனிதன் எப்படி வாழ வேண்டும்? எப்படி வாழக்கூடாது என்பதை மிகச்சிறப்பாக விளக்கியிருக்கும் அற்புதமான நூல்.
எம்.ஜி.ஆர் பேச ஆரம்பித்தார்.
’உங்களுக்கெல்லாம் தெரியும். சென்ற பாராளுமன்ற தேர்தலில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம் எதிர்கொண்ட எதிர் பாராத தோல்வியைத்தொடர்ந்து என்னுடைய மதிப்பிற்கும் மரியாதைக்குமுரிய பிரதமர் இந்திரா காந்தி அவர்கள் என்னுடைய ஆட்சியைக் கலைத்து விட்டார்கள். அந்த நேரத்தில் நாகிரெட்டியாரின் மூத்த புதல்வர் பிரசாத் அகால மரணமடைந்து விட்டார். நான் துக்கம் விசாரிக்க நாகிரெட்டி அவர்களின் வீட்டிற்கு போயிருந்தேன். என்னை கண்டதும் அவர் ஓடிவந்து என்னைக் கட்டிப்பிடித்து “உங்கள் ஆட்சியை கலைத்து விட்டார்களே” என்று கதறி அழ ஆரம்பித்துவிட்டார். ( இந்த இடத்தில் எம்.ஜி.ஆர் சற்று நிறுத்தி விட்டார்.) எவ்வளவு உயர்ந்த உள்ளம் பாருங்கள். அவர் பெற்ற பிள்ளை இறந்து விட்டார்.ஆனால் அவர் என்னுடைய ஆட்சியை கலைத்துவிட்டார்களே என்று அழுகிறார். என் மீது அவர் எப்படிப் பட்ட அன்பைக்கொண்டிருக்கிறார் பாருங்கள்.
நான் இப்போது அவரிடம் மேடையில் ஏதோ கேட்டதை நீங்கள் அனைவரும் பார்த்தீர்கள். நான் கேட்டேன். ‘ இன்று எனக்கு ஆட்சி மீண்டும் கிடைத்து விட்டது. ஆனால் உங்களுக்கு உங்கள் மகன்? உங்கள் மகனை என்றென்றைக்குமாக நீங்கள் இழந்தே விட்டீர்கள்.’
( எம்.ஜி.ஆர் குரல் மிகவும் நெகிழ்ந்து தழுதழுத்தது)
1980களில் வந்த படங்கள் குறித்த தன் அதிருப்தியை தொடர்ந்து எம்.ஜி.ஆர் வெளிப்படுத்திய விதம் கீழ் வருமாறு:
”’இதயக்கனி’ படம் வெளிவந்திருந்தபோது நான் என் ரசிகர் ஒருவரிடம் படம் பற்றி கேட்டேன். அவர் எனக்கு பிடித்திருக்கிறது என்று சொன்னார். நான் அவர் சொன்னதைக் கேட்டு திருப்தியடைந்துவிடவில்லை.” உன் தாயார் இதயக்கனி படம் பார்த்தார்களா? அவர்கள் என்ன சொன்னார்கள்?” என்று மீண்டும் கேட்டேன். அவர் சற்று தயங்கினார். “ தயவு செய்து அவர் சொன்னதை அப்படியே சொல்” என்றேன். என் ரசிகர் மெதுவாக சொன்னார். ”வர வர எம்.ஜி.ஆர் படம் கூட இனி பார்க்க முடியாது போலிருக்கிறதே என்று என் தாயார் வேதனைப்பட்டார்.” இடி இறங்கியது போல நான் துடித்துப்போய் விட்டேன். அந்த படத்தில் நான் ராதா சலூஜாவுடன் நெருக்கமாக நடித்து விட்டேன் என்று பலரும் பேசியதை அறிய வந்தேன். மீண்டும் நானே எடிட்டிங் டேபிளில் உட்கார்ந்து அப்படிப்பட்ட காட்சிகளை நீக்கினேன். மீண்டும் படத்தை வெளியிட்டேன். அதற்கே அப்படி என்றால் இப்போது நடப்பது என்ன? எவ்வளவு ஆபாச காட்சிகள். எப்படியெல்லாம் கற்பழிப்பு காட்சிகள். இது தான் திரையுலகம் காணும் பண்பாடா? இது நியாயமா? நான் மிகுந்த பணிவோடு எச்சரிக்கிறேன். தயவு செய்து நல்ல படங்களை மக்களுக்கு கொடுங்கள்.உங்களை கை கூப்பி வேண்டிக்கேட்கிறேன். தயவுசெய்து கண்ணியம் மீறாதீர்கள்.வளர்ச்சியில் தான் மலர்ச்சியை காண்கிறோம். அதே நேரம் மலர்ச்சியில் வளர்ச்சியைக் காண்கிறோம்.”
வினோத் சார்
மக்கள் திலகத்தின் நான் ஏன் பிறந்தேன் - இன்றுடன் 43 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது .உங்கள் பதிவுகள் மூலம் நினைவு படுத்தியதற்கு மனமார்ந்த நன்றி . மக்கள் திலகத்தின் சிறந்த நடிப்பு மற்றும் இனிய பாடல்கள் மறக்க முடியாதது .மக்கள் திலகம் - மேஜர் சுந்தராஜன் சந்திப்பு காட்சிகள் , மக்கள் திலகத்தின் மாண்புகளை வி .கோபால கிருஷ்ணன் பெருமையுடன் கூறும் காட்சிகள் ,குடும்பத்தில் உருவான குழப்பங்களை மிகவும் சாமார்த்தியமாக மக்கள் திலகம் சமாளிக்கும் காட்சிகள் ,அருமை .