-
இன்றைய தினமலர் நாளிதழின் ஈபேப்பரிலிருந்து....
http://epaper.dinamalar.com/PUBLICAT...13_011_005.jpg
கோபால் சார்,
தங்கள் மனதை அப்படியே பிரதிபலிக்கிறது இந்த செய்தி...
தங்கள் மனதை மட்டுமல்ல என்னுடையதையும் மற்றும் நம் அனைத்து சிவாஜி ரசிக நண்பர்களுடைய மனதையும்....
இந்த செய்தியில் தகவலில் ஒரு தவறு உள்ளது. நடிகர் திலகம் நயாகரா மேயராக கௌரவிக்கப் பட்டது 1962ல். 1969ல் வெளியான தெய்வமகன் ஆஸ்கர் விருதுதுக்காக சிபாரிசு செய்யப் பட்டது 1970ல்.
-
நடிகர் திலகத்தின் பிறந்த நாள் நிகழ்ச்சி பற்றிய செய்தி, இன்றைய தினத்தந்தி ஈபேப்பரிலிருந்து
http://www.dinathanthiepaper.in/2102...09_Cni7826.jpg
-
NT 85th birthday celebrations very grandly staged successfully. no power, no jalras,
ONLY SIVAJI FANS who were/ are prepred to sacrifice any thing participated. still the crowds are growing bigger and bigger year after years. that shows the POWER SIVAJI
HAD /HAVING ALWAYS. GOPAL IS RIGHT BECAUSE OF CONGRESS HEALTH AND MONEY ONLY LOST FOR SIVAJI.
-
இந்திய ஆன்மிகத்தையும், அரசியலையும் அழகாக குழைத்து இந்திய மக்களை தன் வச படுத்தி உலக அளவில் பெயர் பெற்ற உத்தமர் காந்தியை அவர் பிறந்த நாளில் விடுமுறையுடன் நினைவு கூர்வோம்.
பிற்பட்ட வகுப்பில் பிறந்து ஏழை மக்களின் துயரை உணர்ந்து ,முன்னேறி, முதல்வராகி, இலவச கல்வி,சத்துணவு, சமூக சமத்துவம்,தொழில் முன்னேற்றம்,வளர்ச்சி பாதை,அறம் சார்ந்த அரசியல்,இந்திய அரசியல் திருப்பு முனை முடிவுகள் ஆகியவற்றில் முன்னோடியான கர்ம வீரர் காமராஜ் அவர்களை நினைவு நாளில் நினைவு கூர்வோம்.
இந்த இருவருடனும் கடற்கரையில் நின்று, அவர்களையும், தனக்கு சமமான பெருமையுடன் வாழ வைக்கும் உலக மகா நடிகன், இந்திய கலாசாரத்தின் உலக தூதுவன், நாட்டு பற்று,இறைப்பற்று ,நல்லறம் சார்ந்து தன் வாழ்க்கை முறையை அமைத்து வாழ்ந்த நம் நடிப்பு கடவுளுக்கு எனது சாஷ்டாங்க நமஸ்காரம்.
வாழ்க நடிகர்திலகத்தின் புகழ்.
-
'உலகத்திலே ஒருவன்' என உயர்ந்து நிற்கும் திலகத்தின் 85-ஆவது பிறந்த நாள் விழா.
http://i1087.photobucket.com/albums/...2/DSC00439.jpg
நேற்று அதிகாலை நானும், நண்பர் வெங்கடேசன் அவர்களும் நமது மகானின் பிறந்த நாள் நிகழ்சிகளுக்காக நெய்வேலியிலிருந்து சென்னை 'அன்னை இல்லம்' நோக்கிப் புறப்பட்டோம். சரியாக பத்தரை மணிக்கு அன்னை இல்லம் சென்றோம்.
என்ன இது! திருவிழாவா! அல்லது திருப்பதிக்கு வந்து விட்டோமா என்று நாங்களே எங்களைக் கிள்ளிப் பார்த்துக் கொள்ளும் அளவிற்கு தேர்க்கூட்டம் திருவிழாக் கூட்டம் டாக்டர் செவாலியே சிவாஜி கணேசன் சாலையை ஆக்கிரமித்திருந்தது.
அன்னை இல்லம் அன்பு ரசிகர்களால் நிரம்பி வழிந்தது. நடிகர் திலகம் உயிரோடு இருந்திருந்தால் எப்படி அவருடைய பிறந்த நாள் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுமோ அந்த எழுச்சியை நேற்று காண முடிந்தது. வருடா வருடம் கூட்டம் அதிகரித்துக் கொண்டு வருவது உண்மை என்றாலும் இந்த வருடம் பரமபதம் ஏணி போல ஒரே எக்காக கூட்டம் எகிறி விட்டது.
குறிப்பாக தாய்மார்கள், இளம் பெண்கள், குழந்தைகள் மிகக் கணிசமான எண்ணிக்கையில் வந்த வண்ணம் இருந்தனர். மதியம் இரண்டுமணி வரை கூட்டம் வருவது நிற்கவே இல்லை. குடும்பம் குடும்பமாக தாய்மார்கள் பல ஊர்களிலிருந்து வந்த வண்ணம் இருந்தனர்.
பல ஊர்களிலிருந்தும் ரசிகர்கள் வேன்களிலும், பஸ்களிலும், ரயிலிலும் வந்திருந்தனர். அன்னை இல்லம் முன் போலீஸ் காவல் போடப்பட்டிருந்தது. பல சமயம் அந்த சாலையே திரளான கூட்டத்தினால் போக்குவரத்து நெரிசலில் ஸ்தம்பித்தது.
எங்கு பார்த்தாலும் தலைவர் புகழ் பாடும் பலவிதமான போஸ்டர் டிசைன்கள் ஒட்டப்பட்டிருந்தது. அன்னை இல்லம் முன் விக்ரம் பிரபு ரசிகர் மன்றம் சார்பாக பெரியவரை வாழ்த்தி மிகப் பெரிய நீண்ட பேனர் வைக்கப் பட்டிருந்தது.
ஒலிபெருக்கியில் தலைவர் பாடல்கள் ஒலிபரப்பப்பட்டு ரசிகர்கள் உற்சாக கூச்சலிட்டனர். வழக்கம் போல ஒய்.ஜி. மகேந்திரா கரெக்டாக ஆஜர். வந்திருந்த ரசிகர்களை நடிகர் திலகத்தின் மூத்த புதல்வர் ராம்குமார் வரவேற்றார். அனைவரும் அவருடன் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டனர்.
வீட்டினுள் நடிகர் திலகத்தின் அருமையான புகைப்படம் மலர்களாலும், மாலைகளாலும் அலங்கரிக்கப்பட்டு கோவிலின் கர்ப்பக் கிரஹம் போலக் காட்சியளித்தது. தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுடன் வந்து தலைவரை வணங்கி சென்றது மனதைப் பிசைந்தது. பல ரசிகர்கள் கண்களை மூடி தியானம் செய்து தங்கள் தங்கத் தலைவரை உளமாரப் பூஜித்த வண்ணம் இருந்தனர். பலர் கண்களில் அவர்கள் அறியாமலேயே கண்ணீர் பெருகுவதையும் பார்க்க முடிந்தது.
கிராமத்திலிருந்து வந்த மூதாட்டி ஒருவர் ராம்குமார் சாரிடம் தலைவரைப் பற்றி உருகிப் பேசியது அனைவரையும் கண்ணீர் பெருக வைத்தது. வெளி வராந்தாவில் கடவுளர்கள் படத்துக்கு அருகில் தலைவர் படம் வைக்கப்பட்டு அதற்கு வழிபாடு நடந்த வண்ணம் இருந்தது.
வெளியே வீட்டின் முன் ஷாமியானா பந்தல் போடப்பட்டு நாற்காலிகளும் போடப் பட்டிருந்தன. திரு ராம்குமார் அவர்கள் அங்கு அன்னதானத்தை தொடக்கி வைத்தார். அனைவருக்கும் வெஜிடபிள் பிரியாணி பொட்டலங்கள் மற்றும் தக்காளி சாத பொட்டலங்கள் வழங்கப்பட்டன.
திரு நாஞ்சில் இன்பா அவர்கள் எழுதிய "தலைவன் இருக்கின்றான்" என்ற தலைவரைப் பற்றிய நூல் வெளியிடப்பட்டு விற்பனை செய்யப்பட்டது. பலர் விரும்பி அந்த நூலை வாங்கிச் சென்றனர். பல ஊர்களிலிருந்தும் வந்திருந்த ரசிகர்கள் தாங்கள் அடித்திருந்த நோட்டீஸ்களை அனைவருக்கும் வழங்கினர்.
அன்பு நண்பர்கள் வாசுதேவன் சார், ராகவேந்திரன் சார், பம்மலார் சார், கிரிஜா மேடம் அனைவரும் வந்திருந்தனர்.
மொத்தத்தில் நேற்று காலையில் இருந்து மதியம் வரை அன்னை இல்லம் நடிகர் திலகத்தின் அன்பு இதயங்களால் திக்கு முக்காடிப் போனது உண்மை.
நடிகர் திலகம் மறைந்து பன்னிரண்டு வருடங்கள் ஓடி விட்ட நிலையில் அந்த இமாலய நடிகரின்பால் அவர்தம் ரசிகர்களும் பொது மக்களும் கொண்டுள்ள என்றும் மாறாத அன்பை நேற்று கண்டபோது மெய் சிலிர்த்துப் போனது.
மறைந்து இத்தனை ஆண்டுகள் ஆன போதிலும் அவர் மேல் அனைவரும் குறிப்பாக பெண்கள் கொண்டுள்ள அந்த சகோதர அன்பு வார்த்தைகளில் வடிக்க முடியாதது.
அதே பழமொழிதான். சற்று மாற்றி
யானை இருந்தாலும் ஆயிரம் பொன்.
நடிகர் திலகம் மறைந்தாலும் கோடி பொன்.
வாழ்க அந்த மகானின் புகழ்.
-
-
http://i1087.photobucket.com/albums/...2/DSC00507.jpg
ஈவ்னிங் மியூசிக் அகாடமியில் நடைபெற்ற விழாவைப் பற்றிய பதிவை நம்முடைய முரளி சார் அழகைப் பதிவிட்டு விட்டார். நன்றி முரளி சார்.
விழா நிகழ்சிகளுக்கு உறுதுணையாய் நின்ற நமது ரசிக வேந்தருக்கும் மனமார்ந்த நன்றி!
அதே போல நமது அன்பு ஹப்பர்கள் முரளி சார், ராகவேந்திரன் சார், பம்மலார் சார், வாசுதேவன் சார், ராதாகிருஷ்ணன் சார், சேலத்திலிருந்து விழா நிகழ்ச்சிக்கு வந்திருந்த நம் பாலா சார், பார்த்தசாரதி சார், மற்றும் அன்பு நண்பர் ஸ்ரீனிவாசன் சார் அனைவருடனும் பேசி மகிழ்ந்தது மன நிறைவாக இருந்தது.
அனைவருக்கும் நன்றிகள்.
அதே போல நமது அன்புச் சகோதரி கிரிஜா மேடம் அவர்கள் எனக்கும், நமது நண்பர்களுக்கும் இலவச அனுமதி நுழைவுச் சீட்டினைத் தந்து பேருதவி புரிந்தார்கள்.
கிரிஜா மேடம்,
தங்களுக்கு அனைவர் சார்பிலும் என்னுடைய மனமார்ந்த நன்றி!
நிகழ்ச்சியில் இதய வேந்தன் சிவாஜி மன்றம் சார்பில் அனைவருக்கும் நடிகர் திலகம் புகைப்படமிட்ட காலண்டர்கள் வழங்கப் பட்டது. மியூசிக் அகாடமி நான்கு சக்கர வாகனங்களால் நிரம்பி வழிந்தது. விழா முடிந்ததும் போக்குவரத்து நெரிசல் குறைய அரை மணி நேரத்துக்கும் மேல் ஆனது.
நடிகர் திலகத்தின் அன்பு நண்பர் இலங்கை வானொலி முன்னாள் அறிவிப்பாளர் திரு பி.எச்.அப்துல் ஹமீத் அவர்கள் நிகழ்ச்சிக்கு வந்திருந்து கண்டு களித்தார்.
பல்வேறு அலுவல்களுக்கு இடையேயும் நம் பார்த்தசாரதி சார், வாசுதேவன் சார் வந்திருந்தது மிக்க சந்தோஷம் அளித்தது.
(வாசுதேவன் சார், ஜாலியான கம்பெனிக்கு நன்றி!)
அன்பு பம்மலார் சார் நமது தலைவரின் புகழை தரணி எங்கும் பாட வரும் மலர் மாலை புத்தக தயாரிப்பில் பிஸியாக இருந்தார். மலர் மாலை மாபெரும் வெற்றியடையும் என்பதை சொல்லவும் வேண்டுமோ! வாழ்த்துக்கள் பம்மலாரே!
ராகவேந்திரன் சார் திரு ஒய்.ஜி. மகேந்திரா தினமலரில் எழுதும் தலைவரின் தொடருக்காக அந்நாளிதழ் வெளியிட்டிருந்த விளம்பரப் பக்கத்தை பல நூறு பிரதிகள் எடுத்து விழாவிற்கு வந்திருந்தோர்க்கு அளிக்க ஏற்பாடு செய்திருந்தார். அவருக்கும் மனமார்ந்த நன்றி!
நேரமின்மை காரணமாக முரளி சாரிடம் அதிகம் பேச முடியாதது பெரிய குறை எனக்கு. முரளி சார், அடுத்த முறை நிறைய டைம் எனக்காக ஒதுக்குங்கள்.
மொத்தத்தில் மன நிறைவான விழாவில் பங்கு பெற்று மனமில்லாமல் நம் நண்பர்களைப் பிரிந்து வந்தேன்.
-
-
-