http://www.youtube.com/watch?v=zTH8f...X612v1xXDdz6Hw
Printable View
1961ல் மாபெரும் வெற்றி பெற்ற பல படங்களில் மக்கள் திலகத்தின் இரண்டு படங்கள் மிகப்பெரியவெற்றி அடைந்து ரசிகர்கள் மத்தியில் மக்கள் திலகத்தின் புகழும் , மக்களிடையே செல்வாக்கும்கிடைத்தது .
திருடாதே
தாய் சொல்லை தட்டாதே
சமூக படங்களில் மாபெரும் திருப்பத்தை உண்டாக்கிய படம் ''திருடாதே ''
திருடுவதால் சமுதாயத்தில் எந்த அளவிற்கு பாதிப்பு என்பதை அழகாக படம் பிடித்து காட்டிய படம் .மக்கள் திலகத்தின் நடிப்பு - அறிவுரை - சமூக சிந்தனை தூண்டும் பாடல் படத்திற்கு கிடைத்த வெற்றி . எல்லா இடங்களிலும் abc எனப்படும் மூன்று சென்டர்களிலும் வசூலில் சக்கை போடுபோட்டு வெற்றி கொடி நாட்டிய படம் .
வாழ்த்துக்கள் திரு.கோபால்,
சுவாமிமலையில் 1952ம் ஆண்டு திரு.சிவாஜி கணேசன் அவர்கள் திருமண விழாவில், தலைவரும் கலந்து கொண்டார். அவரே தன் கையால் எல்லாருக்கும் உணவும் பரிமாறியுள்ளார். அப்போது, தலைவர் நடித்த அந்தமான் கைதி சமூகத் திரைப்படம் எதிர்பார்த்த வெற்றி பெறாததால், அவரைப் பார்த்து ‘‘அண்ணே, நீங்க கத்தி எடுத்து சண்டை போட்டால் கைதட்டி ரசிக்க ஜனங்க இருக்கும்போது, உங்களுக்கு எதுக்குண்ணே பேண்டும், சூட்டும்?’’ என்று திரு.சிவாஜி கணேசன் அவர்கள் தலைவரைப் பார்த்து பலர் முன்னிலையில் கேட்டுள்ளார்.
விழா முடிந்து தலைவரை காரில் ஏற்றி விட வந்த ராம. அரங்கண்ணலிடம் தலைவர் ‘‘கணேசு, என்ன சொல்லுது பார்த்தீங்களா? இருக்கட்டும்’’ என்று கூறியுள்ளார். இதை ராம. அரங்கண்ணல் தனது ‘நினைவுகள்’ என்னும் நூலில் குறிப்பிட்டுள்ளார். அதை நானும் படித்துள்ளேன். இதைத்தான் தாங்கள் மேற்கோள் காட்டுகிறீர்கள் என்று கருதுகிறேன். தனக்கு பேண்ட், சட்டை சரியாக இருக்காது என்று திரு. சிவாஜி கணேசன் சொன்னதை தலைவர் சவாலாக ஏற்றுக் கொண்டதாகவே நாங்கள் அர்த்தம் எடுத்துக் கொள்கிறோம். இதைத் தவிர ராம. அரங்கண்ணல் அந்த நூலில் திரு. சிவாஜி கணேசனுக்கு தலைவர் தொல்லை கொடுத்ததாக எதுவும் குறிப்பிடவில்லை.
கண்மூடிப் பழக்கமெல்லாம் மண்மூடிப் போக, சாதியை ஒழிக்க பாடுபட்டவர் பெரியார். ஆனால், சாதியை அங்கீகரிக்க வேண்டும் என்று நேற்று கூறிய தாங்கள், உங்களை பெரியாரின் அறிவு பாசறையில் வெளிவந்த பகுத்தறிவாளன் என்று கூறிக் கொள்வது.......... எங்கோ இடிக்கிறது. எங்கே முரண் என்று தெரியவில்லை. ஆராய விரும்பவில்லை.
கருத்துக்கள் மாறுபடலாம், தவறில்லை. உங்களுக்கு கோபம் வந்தால் ‘கலைவேந்தன் ஒரு முட்டாள்’ என்று வேண்டுமானாலும் திட்டிவிட்டுப் போங்கள். நானும் பேரறிஞர் பாணியில் ‘வாழ்க வசவாளர்’ என்று கூறிவிட்டு சிரித்துக் கொண்டு போய்விடுவேன். ஆனால், குண்டடி பட்டு சிகிச்சைக்கு பின் கண் விழித்ததும் தன்னை சுட்டவரை ‘‘அண்ணன் எப்படி இருக்கிறார்?’ என்று விசாரித்த குணமெனும் குன்றேறி நின்ற அந்த குணாளனை தவறாக விமர்சிக்காதீர்கள் என்றுதான் அன்போடு கோருகிறேன்.
ஒவ்வொரு பிறந்த நாளின்போதும் நமக்கு அதிகரிக்க வேண்டியது வயது மட்டுமல்ல, பண்பும் முதிர்ச்சியும் கூட. தங்களின் இன்றைய பொறுமையான, நிதானமான பதிலில் இருந்து அவை உங்களிடம் அதிகரித்திருப்பது தெரிகிறது. இது மேலும் அதிகரிக்கட்டும் என்பதே உங்களுக்கு என் பிறந்த நாள் வாழ்த்து.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
நண்பர் திரு. ஆர்.கே.எஸ். அவர்களுக்கு,
தினத்தந்தி நாளிதழில் வெளிவந்த தொடரில் திரு.விஜயகுமார் கூறியிருந்த செய்தியை நான் தெரிவித்திருந்தேன். நான் மட்டுமல்ல, பலரும் அதைப் படித்திருக்கலாம். அது புத்தக வடிவில் கூட வந்துள்ளது.
தயவு செய்து உங்களைப் புண்படுத்தும் நோக்கம் எனக்கில்லை. ஆனால், எனக்கு நிஜமாகவே ஒன்று புரிவதே இல்லை. டில்லியிலும் திருமதி. இந்திரா காந்தி அம்மையாரிடமும் அவ்வளவு செல்வாக்கு பெற்றிருந்த திரு. சிவாஜி கணேசன் அவர்களுக்கு கடைசி வரை ஏன் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் பதவி கிடைக்கவே இல்லை? அகில இந்திய காங்கிரசில் மூப்பனார் ஐயாவுக்கு இருந்த மரியாதையும் அங்கீகாரமும் திரு.சிவாஜி கணேசனுக்கு கிடைக்காதது எனக்கும் வருத்தமே.
ஆமாம், எங்கே இவ்வளவு நாட்களாக காணோம்?
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்.
மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்கள் தான் சார்ந்திருந்த இயக்கத்தின் மீதும் அண்ணாவின் மீதும் அளவு கடந்த பற்றும் பாசமும் வைத்திருந்த காரணத்தாலும் , கொள்கை பிடிப்பு இருந்ததாலும் தனக்கு கிடைத்த வாய்ப்புகளை சரி பார்த்து குறிப்பிட்ட படங்களில் மட்டுமே நடித்து வந்தார்
.திமுக என்றஇயக்கத்தை பட்டி தொட்டி எங்கும் பரவிட பிரச்சாரம் செய்தார் . தன்னுடைய உழைப்பை , வருமானத்தை கட்சிக்காக செலவழித்து திமுக இயக்கத்தை வளர்த்தார் .
எம்ஜிஆரின் பேராற்றல் வியக்கத்தக்கது .ரசிகர்களுக்காக புதுமை படைப்புகள் . மக்களுக்கு அறிவுரைகள் ,பொழுது போக்கு அம்சங்கள் நிறைந்த படங்கள் என்று தரமான படைப்புகளை
தமிழ் கூறும் நல்லுலகிற்கு வழங்கினார் .
இன்று பார்த்தாலும் கூட எம்ஜிஆரின் படங்கள் சந்தோஷத்தை தருகிறது , பாடல்கள் இனிக்கிறது .
மனதிற்கு நிறைவாக உள்ளது . இத்தனைக்கும் 115 படங்கள் மட்டுமே நடித்துள்ளார் .
எம்ஜிஆர் என்ற பிம்பம் திரையில் தோன்றும்போது நமக்கு உண்டாகும் உற்சாகம் அளவிட முடியாது . அந்த அளவிற்கு அவரின் தோற்றம் - சிரிப்பு - நடிப்பு - வீரம் - கம்பீரம் - எளிமை
நம்மை கட்டி போட்டு விடுகிறது . உலகில் எந்த ஒரு நடிகருக்கும் கிடைக்காத ஒரு பாக்கியம் .
உலகில் முதுமையில் இளமை கண்ட ஒரே பேரழகன் நம் எம்ஜிஆர் .
எம்ஜிஆர் வேற்று மொழிகளில் நடிக்காமல் தமிழ் மொழியில் மட்டுமே நடித்த கொள்கை வேந்தன் . அதனால்தான் உலகமெங்கும் வாழும் தமிழ் இனம் அவரை ரசித்தது . என்றென்றும்
தமிழ் இனம் எம்ஜிஆர் என்ற தனி மனிதனை மறக்கவே மறக்காது . எம்ஜிஆர் ஒரு சரித்திர சகாப்தம் .
நன்றி - முக நூல் . திரு .மெய் போக வசந்த ராயன் .
சகோதரர் திருப்பூர் ரவிச்சந்திரன் அவர்கள், கோவை மாநகரை கலக்க வரும் மக்கள் திலகத்தின் காவியங்கள் அணிவகுப்பு பற்றிய செய்தியை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி ! இப்படிப்பட்ட ஒரு எழுச்சியையும், புரட்சியையும் நமது பொன்மனச்செம்மல் அவர்களால் மட்டுமே ஏற்படுத்த முடியும். இதில் மாற்றுக்கருத்துக்கு இடமே கிடையாது.
அரசியல் மூலம் பெற்ற பட்டப்பெயர் “புரட்சித்தலைவர்”
கலையுலக சாதனைகள் மூலம் பெற்ற பட்டப் பெயர் எக்காலத்துக்கும் ஏற்ற “ புரட்சி நடிகர் “
என்பது இதன் மூலம் தெளிவாகிறது.