http://i65.tinypic.com/9ut9gp.jpg
Printable View
மக்கள் திலகம் எம்ஜிஆர் திரியின் சார்பாக நண்பர்கள் அனைவருக்கும் இனிய நல் தீபாவளி வாழ்த்துக்கள் .
மக்கள் திலகத்தின் ''பறக்கும் பாவை ''
49 ஆண்டுகள் நிறைவு தினம் .
11.11.1966 - 11.11.2015
பொன்விழா ஆண்டு துவக்கம் .
http://i66.tinypic.com/346wdxs.jpg
பறக்கும் பாவையில் எனக்கு பிடித்த காட்சிகள் .
அறிமுக காட்சியில் ஆண் உடை அணிந்து வரும் சரோஜாதேவி யை அடையாளம் கண்டு கொண்டு பின்னர்தன்னுடைய
வீட்டுக்கு அழைத்து வந்து கிண்டலடிக்கும் இடம் . பிறகு சரோஜாதேவி தப்பிக்க ஓடும்போது கையிற்றால் பிடி போட்டு இழுத்து பாடும் பாடல் ''பட்டு பாவாடை எங்கே ''- சூப்பர் பாடல் . மக்கள் திலகத்தின் சூப்பர் டான்ஸ்
காஞ்சனா அறிமுக காட்சியில்எம்ஜிஆரை கண் கொட்டாமல் பார்க்கும் இடம்.
ஒரே இடத்தில நாகையா - சகுந்தலா - நம்பியார் - காஞ்சனா - எம்ஜிஆர் இடம் பெறும் காட்சி . பின்னர் நடராஜனுடன் மோதும் அனல் பறக்கும் சண்டை காட்சி .
சர்க்கஸ் காட்சிகளில் ராஜ சுலோச்சனா - அசோகன் - சந்திர பாபு - ராமதாஸ் - மனோகர் - மனோரமா - மாதவி தங்கவேலு அறிமுக காட்சிகள் .
காஞ்சனாவின் கனவு பாடல் - முத்தமோ மோகமா - கண்ணுக்கு விருந்து . மக்கள் திலகம் எம்ஜிஆரின் நடனம் அருமை .
நிலவென்னும் ஆடைகொண்டாளோ
உன்னைத்தானே ...
இரண்டு பாடல்கள் இனிமையான காட்சிகள் .
தன்னை தாக்க வரும் புலியிடம் இருந்து எம்ஜிஆர் வெகு சாமர்த்தியமாக ஸ்டூலை வைத்தே விரட்டும் இடம் .
கூண்டில் இடம் பெற்ற கல்யாண நாள் பார்க்கலாமா பாடல் - புதுமை
வலையில் இடம் பெற்ற எம்ஜிஆர்-அசோகன் - மனோகர் சண்டை காட்சிகள்
நடராஜனோடு ஒ.ஏ.கே . தேவர் வீட்டில் இடம் பெற்ற சண்டை காட்சி .
ஓட்டலில் பாடும் புதுமையான ''சுகம் எதிலே '' பாடல் மற்றும் நடனம் .
பரபரப்பான கிளைமாக்ஸ் காட்சிகள் -
இனிமையான படம் . இன்று பார்த்தாலும் புத்தம் புது படம் போல் இருக்கிறது .
எம்ஜிஆரின் பிம்பம் இந்த படத்தில் முழுமையாக ஆக்கிரமித்துள்ளது .
நடிகர் தேங்காய் ஸ்ரீனிவாசன் அவர்களின் நினைவு தினம் இன்று .
மக்கள் திலகத்தின் கண்ணன் என் காதலன் -1968 - மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் -1978 வரை பல படங்களில் நடித்து ரசிகர்களின் இதயங்களில் இடம் பிடித்தவர் .
https://youtu.be/f0YwIiwRU9A