I agree with you 100000000000000% . He is the only one doing a great job.
அன்புள்ள ராகவேந்திரர் சார் அவர்களே!! நீங்கள் ஆகட்டும், கோபால் சார் ஆகட்டும் மிகவும் சீனியர்-கள் இருவரும். உங்களின் பங்களிப்பை நான் போற்றி சொல்வதற்கு ஒன்றுமில்லை - அது திரிமுழுக்க படிப்பவர் அனைவருக்கும் தெரிந்ததுதான். கோபால் சார் செய்த தவறு என்பது அவர் வேண்டுமென்றே செய்த தவறாய் தெரியவில்லை. அந்த தவறு உங்களுக்கும், வாசுதேவன், பம்மலாருக்கும் பொறுக்க முடிந்ததில்லை என்பது நடிகர் திலகத்துக்கு ரசிகர்களாய் வாய்த்த எங்கள் அனைவருக்குமே பெருமைதான். என்ன செய்வது, கோபால் சார் இந்த தவறை திரும்ப திரும்ப செய்வதுதான் பெருந்தவறாய் முடிகிறது. கோபால் சாரை சற்று ஜாக்கிரதையாக எழுதுங்கள் என்பதோடு அவரை மன்னியுங்கள் என்று உங்களிடம் கேட்டுக்கொள்ளத்தான் முடிகிறது. புறக்கணிப்பை புறக்கணிப்பீர் என்று வேண்டிவிரும்பி கேட்டுக்கொள்கிறேன்.
Dear Gopal Sir, just refer Ragavendira sir's first reply after your review. I also request you not to repeat that kind of words that hurts fans like Ragavendira Sir. There are fans who do not take those seriously as they know that you too are a big fan of NT and unknowingly praised in some period only, without considering that the period ignored may be questioned. Hope you understood.
I appreciate your concern but I request you to go thru my writing carefully, including my English write up reproduced ? In no way I demean his movies with other style of acting. My first write up are on uthama puthiran,Puthiya paravai, uyarntha manithan and vietnam veedu.where is the partiality coming in this or I demeaned him?My irritation is someone blabbers and other hubbers are going in the same track without knowing the facts.Pl.Understand me.
அன்பு நண்பர்களே,
மீண்டும் ஒரு முறை நமது நண்பர்களுக்கு மத்தியில் ஒரு கருத்து வேறுபாடு ஏற்பட்டு அது பலர் உள்ளங்களையும் புண்படுத்தியிருக்கிறது. கவனித்து பார்த்தோமென்றால் மிகப் பெரிய விஷயம் ஒன்றுமில்லை. ஆனால் அது பெரிய விவாதமாக மாறியிருக்கிறது.
ராகவேந்தர் சார் பற்றி நமக்கு தெரியும். நடிகர் திலகத்தைப் பற்றி யாராவது மாறுப்பட்ட கருத்தை சொல்லிவிட்டால் உடனே அதற்கு எதிர் வினையாற்றுவார்.
கோபால் அவர்களின் எண்ணம் (இந்த விமர்சனங்களைப் பொறுத்தவரை - அதாவது நான் புரிந்துக் கொண்ட வரையில்) நடிகர் திலகத்தின் மிக சிறந்த இரண்டு படங்களைப் பற்றி ஒரு ஆய்வு கட்டுரை எழுதி இருக்கும் நேரத்தில் அதை நமது நண்பர்கள் மேலும் முன்னெடுத்து செல்வார்கள் என்று நினைத்திருக்கும் போது விவாதம் திசை மாறி போய் விட்டது என்ற ஆதங்கம் வந்திருக்க வேண்டும். நண்பர் சாரதி அழகாய் குறிப்பிட்டது போல் இங்கே எழுதுபவர்கள் அனைவரும் நம்முடைய கருத்துகளை நம்மை போல் ஒத்த அலைவரிசையில் சிந்திப்பவர்கள் ரசிப்பார்கள், சிலர் எதிர் கருத்துக்களை சொல்வார்கள். விவாதம் சுவையாக செல்லும் என்ற நினைப்பில் இருக்கும் போது அது நடைபெறவில்லை என்ற வருத்தம் வந்து அது கோபமாக உருமாறி இருக்க வேண்டும்.
Having said that , கோபால் அவர்கள் ராகவேந்தர் சாரைப் குறிப்பிட்டு எழுதிய பதிவு மிகவும் வருந்தத்தக்கது. அதிலும் தனிப்பட்ட முறையில் அவரைப் பற்றி கோபால் குறிப்பிட்ட சில வார்த்தை பிரயோகங்கள் நிச்சயமாக் தவிர்த்திருக்கப்பட்டிருக்க வேண்டும் என்பதில் மாற்று கருத்தே இல்லை. அதுவும் முதல் நாள் தன்மையாக பதில் சொன்ன கோபால் மறுநாள் ஏன் இப்படி கடுமையாக எழுதினர் என்பது புரியாத புதிர். இனிமேல் இப்படிப்பட்ட உணர்ச்சிவசப்படுதலை தவிர்க்க வேண்டும் என்று அவரிடம் உரிமையோடு கேட்டுக் கொள்கிறேன்.
ராகவேந்தர் சார் அவர்களுக்கும் ஒரு வேண்டுகோள். நடிகர் திலகம் பற்றிய மாற்றுக் கருத்தே வரக்கூடாது என்று நினைப்பது சரி என்று எனக்கு தோன்றவில்லை. அனைவரும் ஒரே மாதிரி விமர்சனங்களை அளித்தால் அதில் சுவை இருக்காது அல்லவா. நடிகர் திலகத்தைப் பற்றி யாரும் தவறாக எழுத மாட்டார்கள். பிற்காலத்தில் வெளிவந்த அவரது படங்களைப் பற்றி சொல்லும் போது கூட, நடிகர் திலகம் இந்தப் படத்தில் நடித்திருக்க வேண்டாமே என்ற தொனியில்தான், அப்படி ஒரு ஆதங்கம்தான் வெளிப்படும். அவரது நடிப்பு அந்தப் படங்களில் கூட சிறப்பாக இருக்கும் என்பது வேறு விஷயம். அந்த ஆதங்கத்தை கூட யாரும் வெளிப்படுத்தக் கூடாது என்று சொல்வது சரியா எனபதை உங்களிடமே விட்டு விடுகிறேன்.
அது போல் இயல்பான நடிப்பு/stylished acting என்று இருந்திருக்கிறது. உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமென்றால் குலமகள் ராதை படத்தில் வெகு இயல்பாக செய்திருப்பார். ஆனால் அடுத்த படமாக வந்த பார் மகளே பார் படத்தை பார்த்தோமென்றால் stylished acting பண்ணியிருப்பார். அடுத்தடுத்து வந்த இரண்டு படங்களிலே இப்படி வித்தியாசம் வரும். அது போன்றே அடுத்தடுத்து வெளியான கை கொடுத்த தெய்வம் இயல்பு, புதிய பறவை stylished. ஆக ஒன்றை இயல்பு என்று குறிப்பிடும் போது இரண்டாவது ஓவர் acting-a? என்ற கேள்வி வேண்டாமே.
அண்மை காலமாக இப்படி பல சந்தர்ப்பங்களில் வேண்டுகோள் விடுக்கும் வண்ணம் நிலைமை ஏற்படுவதை தவிர்க்க அனைவரும் ஒத்துழைக்க விடுகிறேன். குறிப்பாக கோபால் [என்னை விட மூத்தவர் என்ற போதினும்] அவர்களிடம் உரிமையோடும், ராகவேந்தர் சார் அவர்களிடம் வேண்டுகோளாகவும் இதை முன் வைக்கிறேன். நடந்தவற்றை மறந்து அனைவரும் [ராகவேந்தர் சார் குறிப்பிட்டது போல்] தேர் வடம் பிடிக்க வர வேண்டும் என பணிவோடு கேட்டுகொள்கிறேன்.
அன்புடன்
என் மனதில் இருந்ததை ,இருப்பதை அப்படியே பிரதிபலித்த முரளி சாருக்கு என் நன்றி. மற்ற hubber களின் insensitivity மற்றும் புரிதலின்மை,என்னை மிக கோபப்பட வைத்து விட்டது.(Probably my business tensions too .)மனமகிழ்ச்சியோடு நான் நுழையும் ,இந்த திரியிலும், இப்படி குட்டை குழப்பினால் ,எனக்கு இருக்கும் stress போதாதென்று...... உலகத்திலேயே,நான் வெறுப்பது type செய்வதுதான். அதை நான் என் தெய்வமான NT க்கு மட்டும்தான் ,ஆராதனை போல் ,மனமகிழ்ச்சியுடன் செய்கிறேன். எனக்கு சிவாஜியை மீறிய உலகமே இல்லை. அவரை,எந்த கணத்திலும் ,நான் ,கனவில் கூட ,எல்லை மீறி விமரிக்க எண்ணியதில்லை. இதை,உண்மையாகவே அவரை நேசிக்கும் அன்பர்கள் புரிந்து கொண்டு,என்னையும் புரிந்து கொள்வார்கள் என்று எண்ணுகிறேன்.
முரளி சார், ஒரு முக்கிய சமாசாரத்தை விட்டு விட்டீர்களே? ஒரே காட்சியில் underplay -natural -overplay மூன்றையும் கலந்து அமர்க்களம் செய்வாரே நீலவானத்தில்? தேவிகா photo எடுத்து கொள்ள ஆசை படும் விவரத்தை தன மாமனாருடன் தெரிவிக்கும் போது natural ஆக, அவர் மறுத்தவுடன் சிறிதே உணர்ச்சி வச பட்டு, over ஆக, பிறகு திரும்பி போகும் போது , திரும்பி,வந்திருங்க என்ற underplay ----- யார் செய்ய முடியும் இதை?
முரளி சாருக்கு மிக்க நன்றி. கோபால் சார் என்னுடைய பதிவுகளை l.k.g. பதிவு என்று கூறியதை அப்படியே ஆமோதிக்கும் வகையில் எழுதி நான் கற்றுக் கொள்ள வேண்டியது நிறைய உள்ளது என்பதை உணர்த்தியிருக்கிறார். நடிகர் திலகத்தை யாராவது ஏதாவது சொன்னால் எதிர்வினையாற்றுபவன் என்கிறார். எந்த வினையிலும் ஈடுபடும் எண்ணம் எனக்கு என்றுமே இருந்ததில்லை. எனக்கு மேதாவி என்று பெயர் வரவேண்டும் என்பதற்காகவோ அறிவாளி என்று போற்ற வேண்டும் என்பதற்காகவோ நான் எழுதுவதில்லை. அந்த அளவிற்கு எனக்கு எழுதத் தெரியாது. மாற்றுக் கருத்து வரக் கூடாது என்று நான் சொல்லவில்லையே. காரணம் நான் கூறுவதே மாற்றுக் கருத்துத் தானே. நடிகர் திலகத்தைப் பற்றி யாராவது குறை கூறினால் மறுத்துப் பேசுவது தான் என்னிடம் உள்ள குறை போலும். அதை நான் நிவர்த்தி செய்ய முயல மாட்டேன். யார் வேண்டுமானாலும் தங்களுக்கு வேண்டிய அளவில் அவரை நேர்முகமாகவோ மறைமுகமாகவோ குறை கூறுங்கள். இனி நான் தலையிட மாட்டேன். எழுதுவது எப்படி என்று இனிமேல் கற்றுக் கொள்ளவும் முடியாது. எனவே பங்கு கொள்ளாமல் இருப்பதே உத்தமம் என்று எனக்கு பாடம் சொல்லிக் கொடுத்த முரளி சாருக்கு மீண்டும் என் நன்றி.
அன்புடன்
ராகவேந்தர் சார்,
இந்த தொனியே எனக்கு பிடிக்கவில்லை. நாங்கள் என்னவோ அவரை எதிர்த்து எழுதுவது போலவும்,நீங்கள் என்னவோ வக்காலத்து வாங்குவது போலவும் ஒரு பாவ்லா.பொய்கள்.பொய்கள்.பொய்கள். குமட்டுகிறது. நானும் எவ்வளவோ நபர்களை 60 நாடுகளில் நேரிடையாக சந்தித்தவன். ஆனால் உங்களை போன்ற irritate செய்யும் நபர்களை பார்த்ததே இல்லை. பிரிவினையை அதிகமாக்க என்றே அலைகிறீர்கள். சிலருடன் நட்பாக வாழ நினைப்பதே கடினம். நான் உங்கள் வழிக்கே வராமல் பதிவுகளை போட நினைத்தாலும்,வலுவில் வம்புக்கு வந்து, நான் எழுதாதைஎல்லாம் குறிப்பிட்டு, உறுப்பினர்களை திசை திருப்பி ...... ச்சே .நேரத்தை வீணடித்து கொண்டு, நான் என்ன ஓய்வு பெற்ற குமாஸ்தாவா?வேலை வெட்டியற்று போராடி கொண்டிருக்க?
கருத்தை கருத்தால் எதிர் கொள்ளலாமே தவிர,இந்த மாதிரி சொல்லாததை சொன்னதாக திரிக்கும் நபர்களுடன் என்ன சொல்ல?
எப்போது பார்த்தாலும் வெளியே போகிறேன் பதிவிட மாட்டேன் என்ற மிரட்டல். இந்த மாதிரி பதிவுகள்தான் இந்த திரியில் யாருமே வர பயப்பட செய்கிறது. என்ன இது குழந்தைத்தனம்? உங்களை எல்.கே.ஜி என்று சொன்னதால் ,அந்த குழந்தைகள் வெட்கம் கொள்ளும் அளவு நடந்து கொள்கிறீர்கள்.
Hellooooo! knock knock! How are you all? Is it save to enter here! or shall I come back later?:lol2: