Quote:
உலகில் உள்ள எந்த மொழிக்கும் இல்லாத சிறப்பு அதன் கலப்படமும் இனிமையாக ரசிக்கப் படுவதுதான்! தொலைக்காட்சிகளில் சில பெண் அறிவிப்பாளர்களும் நிகழ்ச்சியாளர்களும் பேசும் லகர ளகர ழகர பேதமற்ற தமிழைக் கேட்கக் கொடுமையாக இருந்தாலும் அதையும் நாம் குழந்தைகளின் மழலைக்கு அப்புறம் கைதட்டி ரசிக்கிறோமே! உல்லம் கொல்லை கொல்லுது போங்க! இதையெல்லாம் கேட்டுக் கேட்டு மரத்(துப் போன)தமிளர்கலாகவே இருக்கிறோமே !!
சுக்வீந்தர் சிங்கு, உதித் நாராயணர்.... தமிழ்சேவையில் நொந்து நெஸ்லே நூடுல்ஸாகி நிற்கிறோமே! பத்தாதற்கு லூஸ் மோகனாரின் காப்புரிமையானஷோக்கான சிங்காரச் சென்னைத் திமிழ் , தெலுங்கு டப்பிங் டோங்கரே தமிழ், ஆங்கிலோ இந்தியர்களின் அலுவலக டமில், சௌகார்பேட்டை ஹிந்தமில், ...தமிங்கிலம்...தங்கிலீஷ்.........நம்ஸின் மச்சான்ஸ் தமிழ், திருக்கோயில் தெருக்கோயிலாகும் மலைத்தமிழு ஈசன் ஈஷனாகும் பாகவதத் தமிழ், வெற்றிலைக் குதப்பும் அம்பாலே பேஷிய தமிழ்..!
எப்படிக்.கேட்டாலும் தமிழ் இனிமையே! கலப்புத் திருமணங்களை வரவேற்கும் நாம் கலப்புத் தமிளுக்கும் ஆலவட்டம் குலுக்குவோமே!!