http://i1065.photobucket.com/albums/...psqdunibjq.jpg
Printable View
From Mr. Sudhangan's Face book.
https://scontent-sin1-1.xx.fbcdn.net...78&oe=56972E40
ஒரு பேனாவின் பயணம்
அம்மாவின் அந்த கலையார்வ சூழலில்தான் சிவாஜியின் மேடை நாடகம் வியட்நாம் வீடு அரங்கேறிய செய்தி வந்தது!
அதற்கு முன் சிவாஜி நடித்த நாடகங்கள் `வேங்கையின் மைந்தன்’ `களம் கண்ட கவிஞன்’ `தேன் கூட்’ போன்ற நாடகங்கள் அரங்கேறியிருக்கிறது!
ஆனால் எனக்கு விவரம் தெரிந்த பிறகு சிவாஜி என்கிற மாபெரும் நடிகர் மீண்டும் மேடை நாடகத்திற்கு வந்து நடிக்கிறார் என்பதே எங்கள் வயதுக்காரர்களுக்கு பெரிய விஷயமாக இருந்தது.
சிவாஜியின் ` வியட்நாம் வீடு’ நாடகத்தைப் பற்றி அப்போது ஏராளமான செய்திகள் வந்துகொண்டிருந்தது!
அந்த நாடகம் அரங்கேறிய போது சிவாஜி புகழின் உச்ச கட்டத்தில் இருந்த சமயம்!
சினிமா அரங்கில் அவர் திரையில் தோன்றினாலே ரசிகர்கள் சில்லறைகளையும், பூக்களையும் திரையை நோக்கி வீசுவார்கள்.
அதே நடிகர் திலகம் இப்போது மேடையில் தோன்றப் போகிறார்.
ரசிகர்கள் அவரை எப்படி வரவேற்பார்கள்.
சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் 1967ம் வருட சுதந்திர தினத்திற்கு முன்பு `வியட்நாம் வீடு’ நாடகம் அரங்கேற்றமானது!
ரசிகர்கள் முதல் காட்சியில் சிவாஜி, `சாவித்திரி’ என்று மனைவியை அழைத்தப்படியே மேடையில் பிரஸ்டிஜ் பத்மநாபனாக வருவார்!
அவ்வளவுதான் முன் வரிசைக்கு ஒடிப்போன் ரசிகர்கள் கூடை கூடையாக பூக்களை அள்ளி வீசினார்கள்.
மேடை முழுக்க பூக்கள்!
சிவாஜியின் உடலெல்லாம் ரோஜாப் பூக்கள்!
அவரால் அந்த பூக்கள் மீது நடந்து நடிக்க முடியவில்லை
உடனே விளக்கை அணைத்துவிட்டு மேடையில் பூக்களை அப்புறப்படுத்திய பிறகே நாடகம் தொடர்ந்ததாம்
அதைப் பற்றி அந்த நாடகத்தை எழுதிய வியட்நாம் வீடு சுந்தரம் ஒரு பேட்டியில் சொல்லியிருந்ததை நான் படித்திருக்கிறேன்,
இந்த பூ பிரச்னைக்கு முடிவு கட்ட சுந்தரம் ஒரு யுத்தியை கையாண்டார்.
அடுத்த நாள் நாடகத்தில், சிவாஜி முதல் காட்சியில் உள்ளே நுழைவார்!
ரசிகர்கள் பூக்களை வீசுவார்கள்!
உடனே மேடையிலிருக்கும் எல்லா விளக்குகளையும் அணைத்துவிடுவார்கள்.
சிவாஜி மீது மட்டும் ஒரு ஒற்றை விளக்கு வீசும்!
`கரெண்ட் போயிடுத்தா!, கரெண்ட் போனாக்கூட எம்.ஈ.எஸ்ஸுக்கு நான் தான் போன் பண்ணனும். இந்தாத்திலே யாருக்கு பொறுப்புக் கிடையாது.’ என்று அந்த நாடகப் பாத்திரம் பேசுவது மாதிரியே சிவாஜி வசனம் பேசுவார்!
உடனே மேடையிலிருக்கு பூக்களெல்லாம் இருட்டு பகுதியிலிருந்து அகற்றப்படும்!
இந்த மாதிரி பத்து நாடகங்கள் வரை நடந்ததாக வியட்நாம் வீடு சுந்தரம் ஓரு பேட்டியில் சொல்லியிருந்தார்.
இந்த சூழலில்தான் `வியட்நாம் வீடு’ என். கே. டி கலாமணடபத்திற்கு வந்தது!
நாடகம் திருவேட்டிஸ்வரர் சபா சார்பில் நடத்தப்பட்டது!
காலையிலிருந்தே அந்தப் பகுதியில் ஏகக் கூட்டம்!
காலை 11 மணிக்கே டிக்கெட்டுகள் இல்லை! அரங்கம் நிறைந்துவிட்டது என்று போர்டு வைத்துவிட்டார்கள்!
அப்போது எனக்கு நவராத்திரி பள்ளி விடுமுறை!
எப்படியாவது இன்று நாடகத்தை பார்த்துவிடவேண்டும் என்று காலையிலிருந்தே மனசு பரபரத்துக்கொண்டிருந்தது!
எனக்கு தான் அந்த மண்டபத்திற்குள் போக ஒரு தனி வழி அமைத்துவைத்திருந்தேனே!
அன்று மதியம் ஒரு 3 மணியிருக்கும்!
எங்கள் குடித்தன பகுதியில் வெளிவராந்தாவில் யாருமில்லை!
மெதுவாக அந்த பாத்ரூம் கூரை மீது ஏறினேன் யாரும் பார்க்கவில்லை!
அப்படியே அந்தப் பக்கமாக குதித்தேன்!
அந்த அரங்கமே மதிய வெய்யிலில் காய்ந்து கொண்டிருந்தது!
அப்படியே முன் பகுதிக்குப் போனேன்!
மேடையில் திரை விழுந்திருக்கவில்லை!
ஆனால் மேடையில் ஒருவர் படுத்திருந்தார்!
அவருக்கு பக்கத்தில் ஒரு பெரிய மின்விசிறி!
மேடையில் யார் இப்படி வசதியாக படுத்துக்கொண்டிருப்பது என்று பார்க்க அருகில் போனேன்!
என் உடலுக்குள் ஒரு `பக்தி’ பரவசம்!
அழுவதா! சிரிப்பதான் என்பது புரியாத ஒர் உணர்ச்சி!
உடல் மயிர்கூச்செறிந்தது1
ஏதோ மின்சாரம் பாயந்தது போல் ஒரு உணர்வு!
அதற்குக் காரணம் அங்கே அந்த மேடையில் படுத்திருந்தது சிவாஜி கணேசன்!
நாடக நாட்களில் மதியம் சாப்பிட்டுவிட்டு வந்து மேடையிலேயே படுத்துவிடுவாராம்!
நாடகத்திற்கான முதல் மணி அடித்த பிறகுதான் அவரை எழுப்புவார்களாம்!
தூங்கி எழந்தவுடம் குரல் இறுக்கமாக இருக்கும்!
அந்தக் குரல் தான் மேடைக்கு உதவும் என்பதால் சிவாஜி இதை கடைபிடித்தார்!
அடுத்த சில வினாடிகள் குற்றால குரங்கை போல துள்ளிக் குதிக்க வேண்டும்போலிருந்தது!
கூடவே ஒரு பயம்!
என்னிடமோ டிக்கெட் இல்லை! வாங்க காசும் இல்லை! காசு கொடுத்தாலுமே டிக்கெட் கிடைக்காது!
மெதுவாக அப்படியே மேடையை விட்டு கிழே இறங்கி மேடைக்கு பின்புறம் குப்பை கூளங்களாக இருந்த இடத்தில் போய் மறைவாக நின்று கொண்டேன்.
அப்போது ஒரு மாட்டுவண்டி உள்ளே வந்தது!
அதில் முழுவதமாக நாடகப் பொருட்கள்!
அதை ஒருவரே ஒருவர் ஒட்டி வந்திருந்தார்.
அவர் வண்டியை நிறுத்திவிட்டு அந்தப் பொருட்களை தனி ஆளாக இறக்க கஷ்டப்பட்டு கொண்டிருந்தார்!
நான் ஒடிப்போய் நானும் தூக்கறேன் என்றேன்!
அந்த நடுவயதுக்காரர் என்னை ஏறஇறங்கப் பார்த்தார்.
பொடியனான என்னால் அந்தப் பாரத்தை தூக்க முடியுமா என்பது மாதிரியான பார்வை அது!
`உங்களுக்கு கொஞ்சம் ஹெல்ப் பண்றேன்’ என்றேன்!
அவரும் ஒப்புக்கொண்டார்!
வண்டியிலிருந்த சின்னப் பொருட்களையெல்லாம் எடுத்து வந்து என்னிடம் கொடுத்தார்!
அந்த வீட்டு போன், அதை வைக்கும் சின்ன மேஜை இதையெல்லாம் நான் தூக்கிக்கொண்டு போய் மேடையில் வைத்தேன்.
அவருக்கு என் உற்சாகம் பிடித்திருந்தது!
அதற்கு ஒரு ஐந்து மணியானது!
எனக்குள் பதட்டம் அதிகமானது!
எந்த நேரம் என்னை வெளியே விரட்டி விடுவார்களோ என்கிற பயம்தான்!
என் முகத்தில் படர்ந்த சோகத்தை அந்த வண்டிக்காரர் புரிந்து கொண்டார்!
`தம்பி நீ யாரு? உங்கிட்ட டிக்கெட் இருக்கா ?’
இல்லை என்கிற மாதிரி தலையை ஆட்டினேன்!
பின்ன எப்படி உள்ளே வந்தே!
தட்டுத்தடுமாறி அங்கிருக்கும் என் வீட்டையும் அந்த வழியாக குதித்து வந்ததையும் அவரிடம் சொன்னேன்!
`நாடகம் பாக்கணுமா ?’
உற்சாகத்தோடு தலையை ஆட்டினேன்!
`எங்கூடவே இரு’ என்றார்!
அடுத்த அரை மணி நேரம் அவர் போகிற இடமெல்லாம் போனேன்.
அந்த நாடக பொருட்களை மேடையில் படுத்துக்கொண்டிருந்த சிவாஜியை சுற்றி சத்தமில்லாமல் வைத்துக்கொண்டிருந்தார்கள்.
ஒரு 5.30 மணி சுமாருக்கு இசைக்கருவிகளோடு வாத்யக் காரர்கள் வந்தார்கள்.
எல்லா மேடைகளுக்கு முன்னால் இசையமைப்பாளர்களுக்கென்று ஒரு சின்ன நீள இடத்தை ஒதுக்கி வைத்திருப்பார்கள்.
அந்த இடத்திற்கு பெயர் ம்யூசிக் பிட்’
ஒரு வாத்யக் காரரை அழைத்தார் அந்த வண்டிக்காரர்!
`இது நம்ம வூட்டு புள்ளை. உன் பக்கத்திலேயே உட்கார வைத்துக்கோட்’ என்றார்.
நிலவில் கால் வைத்த மாதிரி ஒரு உற்சாகம்!
இனி என்னை யாரும் துரத்த மாட்டார்கள்!
நடிகர் திலகத்தின் நாடகத்தை காசில்லாமல் முதல் வரிசையில், மேடைக்கு மிக அருகில் பார்க்கப் போகிறேன்!
அந்த அனுபவத்தை அடுத்த வரும் பள்ளி நாளில் எப்படியெல்லாம் பெருமை பீற்றிக்கொள்ள வேண்டுமென்று மனதிற்கு ஒத்திகை பார்த்துக்கொண்டேன்!
அதற்குள் மேடையில் திரை விழந்தது!
ஆறு மணியிலிருந்தே கூட்டம் வர ஆரம்பித்தது!
7 மணிக்கு நாடகம் துவங்கியபோது அரங்கமே நிரம்பி எங்கும் நிறகக் கூட இல்லாமல் இருந்தது!
அப்போது நாடகம் ஆரம்பித்தது
அடுத்த என்ன நடந்தது ?