http://i68.tinypic.com/2nl5q4z.jpg
Printable View
ஜூனியர் விகடன் -16/07/2017
http://i66.tinypic.com/34yuqfk.jpg
http://i64.tinypic.com/de4bi1.jpg
பாக்யா வார இதழ்
----------------------------
அன்பே வா திரைப்படத்திற்கு மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.அவர்களை கதாநாயகனாக ஒப்பந்தம் செய்வதற்கு முன்பு , நடிகர் அசோகன் மூலமாக ஏவி .எம்.நிறுவன தயாரிப்பாளர் சரவணனும், இயக்குனர் திருலோகச்சந்தரும் கதை சொல்ல எம்.ஜி.ஆரிடம் முற்பட்டபோது,சரவணனிடம்,என்ன முதலாளி "ஒரே ஆட்டமும், பாட்டமும் கொண்ட கதையாக உள்ளதே,எனக்கு சரிப்பட்டு வருமா , தெரியவில்லை " என்று எம்.ஜி.ஆர். கூறினாராம் .
அதெல்லாம் சரிப்பட்டு வரும் . உங்கள் ஒத்துழைப்பு இருந்தால் எல்லாம் சரியாகிவிடும் என்று சரவணன் கூறியுள்ளார் .அன்பே வா திரைப்பட வெற்றி செய்தி அறிந்ததும்,சரவணனிடம், இந்த படத்தின் வெற்றி முழுக்க இயக்குனரையும், தயாரிப்பளாரையே சாரும். என் பங்கிற்கு நடித்தேன். அவ்வளவுதான் .என்று மகிழ்ச்சியுடன் பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும், எம்.ஜி.ஆர். தெரிவித்துள்ளார் .
கல்கண்டு வார இதழ்
--------------------------------
எம்.ஜி.ஆரும் , கருணாநிதியும் 40 ஆண்டு கால நண்பர்கள் என்பது பலரும் அறிந்த செய்தி .திரைப்படத்துறையில் ஒருவருக்கொருவர் பரஸ்பர உதவிகள் புரிந்து முன்னேறியவர்கள் . அரசியலில் பரம எதிரிகளாக , பின்வரும் காலத்தில் இருந்தாலும் சட்ட மன்றத்திலும், பொது வாழ்விலும் நாகரிகத்தை கடைபிடித்தவர்கள் .எம்.ஜி.ஆர். தனது ஆட்சி காலத்தில் பல நல திட்டங்களுக்கு
கருணாநிதியிடம் யோசனை கேட்டு செயல்படுத்தினார். உதாரணத்திற்கு
பெருந்தலைவர் காமராஜர் உருவப்படத்தை எம்.ஜி.ஆர். தனது ஆட்சி காலத்தில்
சட்ட மன்றத்தில் திறந்து வைத்தார் .அப்போது , கருணாநிதியின் யோசனைப்படி
காமராஜர் படத்திற்கு கீழே, கடின உழைப்பே உயர்வு தரும் என்கிற வார்த்தைகளை இடம் பெற செய்தார். இந்த நாகரீகமெல்லாம் அவர்களுக்கு பின் வந்த அரசியல்வாதிகள் காலத்தில் செயலுக்கு வந்ததா என்றால் இல்லை என்றே சொல்லலாம்.
கல்கி வார இதழ் -16/07/2017
http://i65.tinypic.com/jtuic3.jpg