சந்திரசேகர் சார்,
நீங்கள் அவல் கொண்டு வாருங்கள்.நாங்கள் உமி கொண்டு வருவோம். ரெண்டு பேரும் ,ரெண்டையும் கலந்து ஊதி ஊதி சாப்பிடலாம் ஜாலியா.
அன்பர்களே
திறமையான பலரின் உழைப்பின் மூலம் நடிகர் திலகம் திரி பல பாகங்களை கடந்து சிறப்புடன் சென்று வரும் வேளையில் சில தவிர்க்க முடியாத சிலரின் பதிவுகள் மூலம் திரியின் வேகம் தடை பட்டுள்ளது .
திருவாளர்கள் ராகவேந்திரன் - பம்மலார் - நெய்வேலி வாசுதேவன் -முரளி -கோபால் -பார்த்தசாரதி மற்றும்
சாரதா மேடம் - கார்த்திக் -போன்றவர்களின் பிரமிக்கவைக்கும் பதிவுகள் மூலம் கட்டுரைகள் - ஆய்வுகள் - விளம்பரங்கள் -வீடியோ என்றெல்லாம் புதுமையுடன் வந்தது ஒரு சாதனையாகும் .
என்ன காரணமோ மிகவும் சிறப்புடன் பதிவிட்டு வந்த திரு நெய்வேலி வாசு அவர்களின் பதிவுகளை குறை கூறியதாலும் , ராகவேந்திரன் சார் பதிவுகளை விமர்சனம் செய்ததாலும் , பம்மலாரின் பதிவுகள் இல்லாததாலும் ஒரு தொய்வு தற்போது தொடர்கிறது .
இதற்கெல்லாம் காரணம் தனி மனிதனின் ஈகோ தான் .
கடந்த சில நாட்களாக யார் அவர் ? -அதாவது ஒரே நண்பர் பல புனை பெயரில் நடிகர் திலகம் திரியில் பதிவிட்டு சாதனை புரிந்தது .
இப்போது உண்மை உலகுக்கு தெரிந்து விட்டது .
இத்தனை திறமைகள் தன்னிடம் வைத்துள்ள அவரது சாதனை - பாராட்டுக்குரியவர் .
அவர் இனி யார் மேலும் வருத்த படவேண்டாம் .
என்னை போல் அவரை நேரில் சந்திக்க பலர் காத்திருக்கின்றனர் .
இனி தொய்வின்றி தேர் -திருவிழாவை நோக்கி நடை போடட்டும் நண்பர்களே .
here comes the stirrer
முத்து நீர் கொஞ்சம் இருமே ஐயா! அதுதான் சகோதரர் கோபால் மனதார statement கொடுத்துவிட்டாரே தான் சிவாஜியை தெய்வம் போல ஆராதித்து இங்கே எழுதுவதாக. சகோதரர் முரளி இதில் தலையிட்டு மிகவும் சரியாக கருத்தை சொல்லியுள்ளார். சகோதரர்கள் ராகவேந்தரும் கோபாலும் விரைவில் சமாதானமாகி விடுவார்கள். ஆனால் சிவாஜியின் நடிப்பு பிடிக்கும், ஜெமினியின் மென்மை பிடிக்கும், MGR இன் இளமை பிடிக்கும் என்றெல்லாம் உமது பன்முக ரசனையை வெளிப்படுத்தி வரும் நீர் உண்மையில் யார்? நீர் நல்லவரா கெட்டவரா?
நல்லவர்கெல்லாம் நல்லவன் .
நல்லவராக இருக்கும் நீங்கள் என்னை பற்றி கவலை பட வேண்டாம் .
என்னுடைய ரசனை பற்றிதான் கூறினேன் .
யாரையும் தரக்குறைவாக நான் விமர்சனம் செய்ய மாட்டேன் .
உங்களது பன்முக பதிவுகளுக்கு ரசிகன் நான் .
உங்களின் பன்முகத்தை உலகுக்கு காட்டிய பெருமை
இந்த திரிக்கு உண்டு .
திறமைகளை போற்றுவோம்
பதிலுக்கு பதில் - ஆக்க பூர்வமாக தொடரவும்
36 வயது முத்துராமன்
Junior Vikatan - 13-01-13
http://www.facebook.com/photo.php?fb...type=1&theater
நண்பர்களே,
சிலவீடுகளில் இம்மாதிரியான நிகழ்வுகள் சகஜம்..
கணவனும் மனைவியும் சேர்ந்து, மகிழ்வுடன்,கிருஷ்ண விக்ரகம் போல இருக்கும் தங்கள் முதல் குழந்தையின்(வயது ஆறு மாதம்) அழகை வர்ணித்து உரையாடிக்கொண்டிருப்பர்கள்.
மனைவி "என்னங்க இவனை நாம் டாக்டருக்குத்தான் படிக்க வைக்கணும்"என்று சொல்ல ,
அதை கணவனும் மகிழ்ந்து ஆமோதிக்க ,குழந்தை கன்னங்குழிய சிரித்துக்கொண்டிருக்கும்.
திடீரென்று திருஷ்டி பட்டால் போல கணவன் சொல்லுவான்
"இவன் அப்படியே என் தாயை உரித்து வைத்து இருக்கிறான்!"
உடனே மனைவி சொல்லுவாள்
"என்ன சொல்றீங்க?இவன் அப்படியே என் அண்ணன் ஜாடை தான்!"
அவ்வளவுதான் விவாதம் சூடு பிடிக்கும்.வார்த்தைகள் தடிக்கும்.
அந்த குழந்தையோ நடப்பது ஏதும் அறியாமல் தன் பெற்றோர்களைப் பார்த்து சிரித்த வண்ணமே இருக்கும்.
போதும் நண்பர்களே,அந்த மஹா கலைஞன் சொர்க்கத்திலிருந்து நம்மை பார்த்து அன்பாக சிரித்துக்கொண்டிருக்கிறான்.அவனை கேலியாக சிரிக்கும் வண்ணம் செய்து விடாதீர்கள்.
மேலும் பொன்னியின் செல்வனையும் ,யவன ராணியையும் படித்து, ரசித்து, உரையாடி மகிழ்வோம்..
கல்கியும், சாண்டிலயனும் ஒரே நபர்தான்(னா)என்ற ஆராய்ச்சி(யும்) தேவையில்லை.
நன்றி
Ganpat
(பெயர்காரணம்:என் பாஸ்போர்ட் பெயரில் பாதியும்,என் பாட்டி பெயரில் பாதியும் சேர்த்து)
Statutory disclosure: நான் நான்தான்! அவன்/அவள்/அது எதுவுமில்லை)
Atleast after reading the Views of Mr Ganpat the concerned persons
must remove their ego and anger. All must run this Goldern Chariot with
the support of all our NT's Devotees.
நடிகர்திலகம் நடித்த படங்களில் குறிப்பாக குங்குமம் படம் எனக்கு மிகவும் பிடிக்கும் .
நடிகர் திலகத்தின் அருமையான நடிப்பு .
நடிகை சாரதா அறிமுக படம் என நினைக்கிறேன் .
சென்னை - மேற்கு மாம்பலம் ஸ்ரீனிவாசா தியேட்டரில்
முதன் முறையாக 2003ல் படம் பார்த்தேன் .
எனக்கு மிகவும் பிடித்த பாடல் .
நடிகர் திலகமும் சராதாவும் இணைந்து பாடும் சின்னஞ்சிறிய வண்ண பறவை எண்ணத்தை பாடுதம்மா
நடிகர் திலகத்தின் முக பாவங்கள் அருமை .
அதற்கு ஈடு கொடுத்து சாரதாவின் நடிப்பு அபாரம் .
அடுத்து
http://i1273.photobucket.com/albums/...ps86822e10.png
http://i1273.photobucket.com/albums/...ps31880bdf.jpg
ஞானஒளி - சாரதா - ஸ்ரீகாந்த்
[QUOTE=Ganpat;997870]
போதும் நண்பர்களே,அந்த மஹா கலைஞன் சொர்க்கத்திலிருந்து நம்மை பார்த்து அன்பாக சிரித்துக்கொண்டிருக்கிறான்.அவனை கேலியாக சிரிக்கும் வண்ணம் செய்து விடாதீர்கள்.
மேலும் பொன்னியின் செல்வனையும் ,யவன ராணியையும் படித்து, ரசித்து, உரையாடி மகிழ்வோம்..
கல்கியும், சாண்டிலயனும் ஒரே நபர்தான்(னா)என்ற ஆராய்ச்சி(யும்) தேவையில்லை.
நன்றி
Ganpat
(பெயர்காரணம்:என் பாஸ்போர்ட் பெயரில் பாதியும்,என் பாட்டி பெயரில் பாதியும் சேர்த்து)
Statutory disclosure: நான் நான்தான்! அவன்/அவள்/அது எதுவுமில்லை)[/QUOTE
here, here! Looks like someone requires authenticity of every members' identity.