தேர்த்திருவிழா - இது நம் மக்கள் திலகம் நடித்த படம் .
ராமமூர்த்தி சார்
திருநின்றவூரில் நடைபெற்ற மக்கள் திலகத்தின் தேர் திருவிழா ஊர்வலம் மற்றும் விழா சம்பந்த பட்ட முழு படங்கள் வழங்கி நேரில் பார்த்த உணர்வினை உண்டாக்கி விட்டீர்கள் . நன்றி .
Printable View
தேர்த்திருவிழா - இது நம் மக்கள் திலகம் நடித்த படம் .
ராமமூர்த்தி சார்
திருநின்றவூரில் நடைபெற்ற மக்கள் திலகத்தின் தேர் திருவிழா ஊர்வலம் மற்றும் விழா சம்பந்த பட்ட முழு படங்கள் வழங்கி நேரில் பார்த்த உணர்வினை உண்டாக்கி விட்டீர்கள் . நன்றி .
http://www.youtube.com/watch?v=gT9zE...ature=youtu.be
ORU THAI MAKKAL - 4
MGR & JJ:
1) nANamO innum nANamO?
2) ninaithEn vanthaai nooru vayadhu
3) aayiram nilavE vaa
4) thangapathakathin mEla oru muthu pathithathu pOle
Dear roop sir,
I captured this video and tried to post it several times since 17-01-2013 But due to high quality of the video it is not possible for me to post it. Now I reduced its quality and posted it. But I am not satisfied with the quality. The video is as clear as the thumbnail available . I dont know how to post it without reducing its quality.
jaisankar.
இன்று 25-2-2013 மதியம்
ஜெயா -டிவியில் மக்கள் திலகம் நடித்த தேர்த்திருவிழா - திரைப்படம்
ராஜ் டிவியில் - அடிமைப்பெண் - திரைப்படம் .
1972 ..... 25 .பிப்ரவரி --- டைரி .........
மக்கள் திலகம் அவர்களின் சங்கே முழங்கு 3வது வாரமாக ஓடிக்கொண்டிருந்தது .
மக்கள் திலகத்தின் அடுத்த படமான தேவரின் பிலிம்ஸ் நல்ல நேரம் மார்ச் 10 முதல் என்று முழு பக்க விளம்பரம் திரை அரங்குகள் பெயருடன் விளம்பரம் வந்து ரசிகர்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தியது .
சென்னை -சித்ரா - மகாராணி - மேகலா - ராம் .
மறுநாள் தினத்தந்தியில் தமிழ் புத்தாண்டு வெளியீடு
ஜெயந்தி பிலிம்ஸ்
ராமன் தேடிய சீதை -
சென்னை - மிட்லண்ட் - கிருஷ்ணா - மேகலா
என்று முழு பக்க விளம்பரம் வந்து ரசிகர்களை மேலும் மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தியது .
அந்த நேரத்தில் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருந்த உலகம் சுற்றும் வாலிபன் வெளிவருவதில் தாமதம் ஏற்பட்டது . நிச்சயம் தீபாவளிக்கு வரும் என்று கருதப்பட்டது .
மக்கள் திலகம் நடித்து கொண்டிருந்த படங்கள்
உலகம் சுற்றும் வாலிபன்
நினைத்ததை முடிப்பவன்
நேற்று இன்று நாளை
அன்னமிட்டகை
நான் ஏன் பிறந்தேன்
இதயவீணை
பட்டிக்காட்டு பொன்னையா மற்றும் பல நிறுவனங்கள் பெயரிடாத படங்கள் .
பொம்மை - சினிமா மாத இதழில் திரைக்கடல் ஓடி திரைப்படம் எடுத்தோம்
ஆனந்தவிகடன் - நான் ஏன் பிறந்தேன் -சுயசரிதம் கட்டுரைகள் வழங்கி வந்தார் .
மக்கள் திலகத்தின் புகழ் பரப்பும் ஏடுகள்
திரை உலகம்
திரைசெய்தி
காந்தம்
மற்றும் அலை ஓசை - தென்னகம் - முரசொலி போன்ற தினசரி இதழ்களில் மக்கள் திலகத்தின் திரைப்பட நிகழ்வுகள் வந்த வண்ணம் இருந்தது .
மக்கள் திலகத்தின் பாடல்கள் - சென்னை வானொலியிலும் - விவாத பாரதி நிகழ்ச்சியிலும் - இலங்கை வானொலி நிகழ்சிகளிலும் தொடர்ந்து கேட்கும் வாய்ப்பு கிடைத்தது .
இரண்டு அல்லது மூன்று மாதங்கள் நடுவே மக்கள் திலகத்தின் படங்கள் சென்னை வானொலியில் ஒலிச்சித்திரம் என்ற நிகழ்ச்சியில் ஒலி பரப்பபட்டது .
இனிமையான அந்த நாட்கள் நினைவுகள் தொடரும் .................................................. ...