தமிழகத்தில் காலம் காலமாக இன்று வரை நடந்துகொண்டிருப்பது !
https://www.youtube.com/watch?v=Gy3DN7wDX14
Printable View
தமிழகத்தில் காலம் காலமாக இன்று வரை நடந்துகொண்டிருப்பது !
https://www.youtube.com/watch?v=Gy3DN7wDX14
நாலு பக்கம் வேடருண்டு பாடல் ..... கணநேரத்தில் காதல் வயப்பட்டு நெருக்கத்தின் தனிமையை உணர்ந்து காதலர்கள் பரஸ்பரம் மனமுவந்து கிடைத்த நேரத்தில், தருணத்தில் காமம் வெளிப்படுத்தும் காட்சி....!
விரசம் உச்ச நிலை அடையாமல் இருக்க chasing காட்சி ..காதல் காட்சி மாறி மாறி படமாக்கபட்டிருக்கும் விதம் உண்மையிலேயே பாராட்டப்படவேண்டியது...
நடிகர் திலகம் கதாநாயகியை மற்ற நடிகர்களை போல, விட்டால் கிடைக்காது...ஆகையால்..இருக்கும்போதே...கடித்து குதரிடவேண்டும் என்பதுபோல உள்ள செய்கையை நடிப்பு என்ற பெயரில் வில்லன் செய்யும் வேலையே கதாநாயகனாக செய்வதை நாம் நிறைய படங்களில் பார்திரிக்கிறோம்.
காதல் பார்வையை வீசுவதற்கு பதில் காமபார்வையை வீசும் ஒரு சில நடிகர் உள்ளார்கள். இரெண்டுக்கும் காட்சிக்கேற்ப வித்தியாசம் கூட காட்ட தெரியாதவர்கள். காதலிக்கிறேன் என்ற பெயரில் இவர்கள் காட்டும் கொனஷ்டை இருக்கிறதே....OH GOD !!
நடிகர் திலகம் நாயகியை காதல் காட்சிகளில் ஒரு பூவை போல அணுகும் முறை திரை உலகிற்கு என்றும் புதுமை. அது செல்வமோ, வசந்தமாளிகயோ, ராஜபார்டோ, சிவகாமியின் செல்வனோ, நல்லதொரு குடும்பமோ எதுவாகிலும்... காட்சியை பார்த்தல் - a manly hero handling heroine like a flower என்பது போல தான் இருக்கும்...every minute is enjoyable !!!
காதல் மன்னர்கள்...இளவரசர்கள் ஆயிரம் பேர் வரலாம் ..போகலாம்...ஆனால் காதல் திரைப்படம் என்றால் "வசந்த மாளிகைக்கு அடுத்துதான் எல்லாமே என்பது உலகம் அறியாததா என்ன ?
What appears as terrific to few here actually appears absolutely aweful to me . Our NT was visibly looking old and that song was disgusting to say the least. Such songs and movies only were the starting phase of his downfall . Both NT and Sujatha were terrible combination. The movie itself was supposed to be a virtual Pasamalar but NT's performance was far below his own standards. There was no NT all.
எப்படியிருக்க வேண்டிய திரைக்காதல் காட்சியமைப்பு இப்படி இருக்கலாமா?
தமிழ் திரைப்படங்களில் காதல் காட்சியமைப்புக்கள் வரையறை மீறும்போது நடிப்பது திரையுலக மூவேந்தர்களே என்றாலும் மனம் கசப்படைவது தவிர்க்க இயலாது
குடும்பத்துடன் அமர்ந்து நாம் திரைப்படங்களை ரசிக்கும்போது வியாபாரநோக்கில் காமம்கலந்த கவர்ச்சிப்பூச்சில் வெளிவந்த இந்தவகை 'காதல்' நோதலே!
மென்மையான இதமான இனிமையான காதல் காட்சியமைப்புக்களில் காதல் மன்னராக முடிசூட்டப்பட்ட ஜெமினிகணேசனும்கூட காலம்கடந்த வேளையில் குறத்திமகன் திரைப்படத்தில் ஒரு சிறிய திருஷ்டிப்பொட்டு வைத்தவர்தான்!
எப்படியிருக்க வேண்டிய திரைக்காதல்
https://www.youtube.com/watch?v=cy58kizXUSY
https://www.youtube.com/watch?v=MBepNZJjK-4
இப்படி இருக்கலாமா?
https://www.youtube.com/watch?v=vylKWIFujkI
எப்படியிருக்க வேண்டிய திரைக்காதல்
https://www.youtube.com/watch?v=q48ihhHK5kg
https://www.youtube.com/watch?v=zkTZUSTmGsw
இப்படி இருக்கலாமா?
https://www.youtube.com/watch?v=L6CwgtFCJVo
எப்படியிருக்க வேண்டிய திரைக்காதல்
https://www.youtube.com/watch?v=Kg0CUJH9doQ
https://www.youtube.com/watch?v=LC5-vQtAQx4
இப்படி இருக்கலாமா?
https://www.youtube.com/watch?v=UYZ4Ou8GcY0
Better not to continue such bitter matters as it may shatter the cult images of our icons, augmenting only hatred among us!
Irene ,
சிவாஜியை சிவாஜிக்கு bench mark வைத்தால் அவரது 50 களின் 60 களின் படங்களுக்கு முன் எல்லாமே சாதரணமாகி விடும்.
ஆனால் அண்ணன் ஒரு கோவில், விறு விருப்பான குடும்ப படம். அந்த வறட்சி காலங்களில் ,அவருடைய மார்க்கெட் தூக்கி நிறுத்த பட்டது தீபம்,அண்ணன் ஒரு கோவில் படங்களாலேயே. பின்னர் அந்தமான் காதலி முதல் திரிசூலம் வரை 8 தொடர்ந்த சூப்பர் ஹிட். அவர் ஒரு ஸ்டார் என்பதால் class VS Mass compromise தவிர்க்க முடியாதது.
நாலு பக்கம் வேடருண்டு படத்தையே தூக்கி நிறுத்தும் அளவு படமாக்கம் கண்டது. அவரது எதிர்ப்பு பத்திரிகை விகடனால் இந்த காட்சி சிலாகிக்க பட்டது.
எனக்கும் பிடித்த காட்சியே.சிவாஜி முக அமைப்பு கடைசி வரை இளமை அழகோடு இருந்தது. படையப்பா வரை.
கோபால்,
நீங்கள் எழுதப்போவது ஆய்வு எனும் போது அது நீங்கள் தொட்டு விட முடியும் மொழியின் உச்சத்தில் இருப்பது நலம் . நீங்கள் இங்கே எழுதப்போகும் ஆய்வு வருங்காலத்தில் புத்தகமாக வரும் என்பதை மனதில் நிறுத்தி சமரசம் இல்லாமல் எழுதுங்கள் ..My 2 cents .
Dear Gopal Sir,
kudos to your article sir way to go sir
பார்த்ததில் பிடித்தது - 48
தங்கசுரங்கம்
திரு சிவாஜி செந்தில் சார் உடன் பேசிய 2 மணி நேரத்தில் கிட்ட தட்ட 1 மணி நேரம் இந்த படத்தை பற்றி தான் பேசி மகிழ்தோம் . அவர் உடன் பேசியதில் இருந்து தங்கசுரங்கம் படத்தை பற்றி எழுத வேண்டும் என்ற ஆசை , ஆனால் ஏற்கனவே அந்த படத்தை பற்றி எழுதி உள்ளதால் அந்த படத்தை பற்றி எழுதுவதை சற்று தள்ளி வைத்தேன்
திரு சிவாஜி செந்தில் சார் தற்போது எழுதி வரும் தொடருக்கு ஒரு tribute மற்றும் நான் முதலில் எழுதியதை இன்னும் சொல்ல போனால் சரியாக எழுதாமல் இருந்ததால் ஒரு improvement இந்த பதிவு
போலி தங்கம் உற்பத்தி செய்யும் கும்பலை நாயகன் தடுத்து கைது செய்யும் கதை தான் ஒரு வரி கதை
என்ன டா இவன் கதை என்று முழு கதையும் எழுதி விடுவான் , இன்று ஒரு வரி உடன் நிறுத்தி விட்டன என்று நினைப்பது புரிகிறது . படத்தை பற்றி விரிவாக எழுத இருபதாலும்
இந்த படம் வந்த காலகட்டத்தில் அதாவது 1969 ல் james bond படங்கள் உலகம் முழுவதும் சக்கை போடு போட்டது - இங்கே தமிழ் நாட்டில் ஜெய்ஷங்கர் அவர்களும் action படங்களில் குறிப்பாக CID SHANKAR என்று தொடங்கி , பல துப்பறியும் படங்களில் நடித்து புகழ் பெற தொடங்கினார்
மக்கள் திலகம் MGR அவர்கள் ரகசிய போலீஸ் 115 என்ற படத்தை 1966 ல் தொடங்கி இருந்தாலும் , அவருக்கு எதிர்பாரா விபத்து ஏற்பட்டதால் படத்தில் பல மாறுதல்கள் , கதாநாயகியாக நடித்த சரோஜா தேவிக்கு பதில் ஜெயலலிதா நடித்தார்
தொடர்ந்து குடும்ப படத்தில் நடித்து கொண்டு இருந்த சிவாஜி சார் ஒரு சில action மற்றும் light hearted படங்களில் நடித்து தனக்கு இதுவும் வரும் என்று சொல்லாமல் நிரூபித்தார்
இந்த படத்தின் கதையாசரியர் G . பாலசுப்ரமணியம் - பல வெற்றி படங்களின் கதையாசரியர் .இயக்கம் ராமண்ணா
ராமண்ணாவின் நான் , மூன்று எழுத்து படங்கள் எனக்கு மிகுவ்ம் பிடித்த படம் . ராமண்ணாவின் படம் என்றால் இசை TK ராமமூர்த்தி தான் , பாடல்களும் , பின்னணி இசையும் நன்றாக படத்துக்கு சப்போர்ட் செய்தது என்று தான் சொல்ல வேண்டும்
இனி ஸ்டைல் கிங் பற்றி :
எல்லோரும் சிவாஜி அவர்களின் ராஜா , சொர்க்கம் படத்தை பற்றி குறிப்பிடும் பொது , ஸ்டைல் கிங் , ஸ்டைல் சக்ரவர்த்தி என்று சொல்லி கேட்டு இருக்கிறேன் , ஆனால் எனக்கு இந்த படத்தில் அவர் காட்டி இருக்கும் ஸ்டைல் , மிகவும் ரசிக்கும்படி உள்ளது என்றே சொல்ல தோன்றுகிறது
முதல் காட்சியில் அவர் விமானத்தில் இருந்து இறங்கும் போதே நாம் நிமிருந்து உக்காரலாம் - ராஜா கம்பீரம் , தொடர்ந்து தன் அலுவலகத்துக்கு வரும் போதும் , தன்னுக்கு கிழே வேலை பார்க்கும் நபர்கள் விஷ் பண்ணும் போதும் அதை acknowledge செய்யும் விதமும் டாப்
போலி தங்கம் உற்பத்தி செய்யும் கும்பலை படிக்க முதலில் டாக்டரை சந்திக்கும் பொது உங்க உடம்புக்கு என்ன என்று டாக்டர் கேட்க - அதற்கு இவர் சொல்லும் பதிலும் , தொடர்ந்து டாக்டரை இவர் எச்சரிக்கும் பொது இவர் முகத்தில் தெரியும் கடுமை கலந்த சிரிப்பும் James bond படங்களுக்கே உரித்தான heroism . தொடர்ந்து வரும் காட்சிகளில் பாரதியை விசாரிக்கும் பொது , தன் கை உரையை கழட்டும் காட்சியும் , பாரதியை விசாரிக்கும் பொது காடும் தோரணையும் , அவர் பிடி குடுக்காமல் போகவே அவரை man handle செய்வதும் , தொடர்ந்து வரும் சண்டை காட்சியும் நான் மிகவும் ரசித்த காட்சி - அது முடிந்த உடன் பாரதியிடம் பேசி கொண்டே அவர் முதுகில் தீ பட்டி உரசி ஸ்டைல் ஆக சிகரெட்டே பிடிக்கும் காட்சி ரஜினி ஸ்டைல் , சாரி முதலில் அது சிவாஜி ஸ்டைல் என்று இனி சொல்லவேண்டும்
காரில் போகும் பொது மீண்டும் அனல் பறக்கும் சண்டை , அதை தொடர்ந்து இன்ப நிலையத்தில் தங்கம் வாங்க ஒவ்வொரு நாட்டில் இருந்து வந்து இருக்கும் நபர்களை மனோகர் அறிமுகம் படுத்தும் காட்சியில் நம்மவர் சிகரெட்டை வைத்து கொண்டு தன் முகத்தை 360 டிகிரி யில் திருப்பும் பொது சிலிர்த்து போனேன் - பெரிய காட்சி ஒன்றும் கிடையாது இருந்தாலும் சின்ன சின்ன expressions கொடுத்து நம்மளை அசதி விடுவார் நடிகர் திலகம்
பணத்தை தன் முன்னால் மழைபோல் கொட்டும் பொது சலன படாமல் இருக்கும் காட்சி அபாரம் .AN ACTOR WHO CAN GIVE THOUSAND EXPRESSION CAN ALSO ACT BY NOT REACTING , அடுத்த காட்சியில் எலெக்ட்ரிக் shocker வைத்து அவருக்கு ஷாக் கொடுக்கும் காட்சியில் அவர் அலறிய அலறல் இதை எழுதும் பொது கேட்டு கொண்டே இருக்கிறது , இடைவேளைக்கு முன்னால் வரும் சண்டை காட்சியில் நம்மவரின் action நல்ல சுறுசுறுப்பு
injection போட்டு ஒருவர் மனதை கட்டுபடுத்தும் காட்சியில் again தி versatile actor scores
கிளைமாக்ஸ் காட்சியில் ஷு கத்தியால் கறியை அறுத்து விட்டு , டென்ஷன் தாங்காமல் சிறுது நேரம் உக்காரும் காட்சியில் பார்வையாளர்களுக்கு பரபரப்பு உண்டு பண்ணும் காட்சி
சரி சிபிஐ அதிகாரியாக நம்மவர் கலகியத்தை பற்றி எழுதி விட்டேன்
இனி அம்மாவுக்கு மகனாக வாழ்ந்து இருக்கும் ராஜன் அவர்களை பற்றி
முதல் முதலில் தன் அம்மாவை காணும் ஒரு மகன் எப்படி ரியாக்ட் பண்ணுவன் - தன்னை வளர்த்த நபரிடம் இந்த அம்மா தன் அம்மா தானா என்று ஊர்ஜித படுத்தி விட்டு , தான் பாசத்தை பொழிவார்கள் - அதுவும் இந்த காட்சியில் நடிகர் திலகம் தன் அம்மா காலில் விழ போக அவர் தடுத்து அவரை அணைத்து கொள்ள , பின் இரவு வரை பேச்சில் நேரம் போனதே தெரியாமல் இருக்க தூங்க சொல்லி அம்மா சொல்ல இவர் தூக்கம் வராமல் பாசத்துடன் அம்மாவை பார்த்து கொண்டு இருக்கும் காட்சி - உணர்ச்சி பிழம்பு
தன் அம்மா தான் குட்ட்ரவாளிக்கு உளவு சொன்னது என்று அறிந்து அதை வெளிபடுத்த முடியாமல் தன் உயர் அதிகாரியிடம் தவிக்கும் காட்சியும் , வீட்டுக்கு வந்த உடன் தன் அம்மா காபி கொடுக்கும் பொது , இவர் முறைத்து பார்க்க , அதை தாங்க முடியாமல் வரலக்ஷ்மி தலையை குனிய , இவர் கர்ஜிக்கும் காட்சியும் , தன் தாய் கைது செய்ய பட்டு அழைத்து செல்லும் பொது கண்ணில் கண்ணீர் , உடலில் உயிரை எடுத்து செல்லுவதை போல் நிற்பதும் , தன் தாய் தான் குற்றவாளி என்று தன் உயர் அதிகாரியிடம் தெரிவுக்கும் பொது அதை assert செய்வதும் , எங்கள் நடிகர் திலகத்தால் மட்டுமே முடியும் என்று பெருமையாக சொல்லலாம்
துப்பறியும் காட்சிகளும் - செண்டிமெண்ட் காட்சிகள் பற்றியும் எழுதி விட்டேன் இனி லைட் hearted scenes , காதல் காட்சிகள் பற்றி :
james bond படத்தில் செண்டிமெண்ட் காட்சிகள் இருக்கவே இருக்காது - காதல் காட்சிகளில் அழுதாம் இருக்காது , இதில் செண்டிமெண்ட் காட்சிகள் தாராளம் - படத்தை சற்றி lag செய்த காட்சிகள் இவை என்பது என் கருத்து
நான் பிறந்த நாடு பாடல் பெர்பெக்ட் லாஞ்ச pad பாடல் for சிவாஜி அதில் அவர் அணிந்து இருக்கும் WHITE pant கண்ணை உறுத்தாத மஞ்சள் t shirt , தொப்பி , ஸ்வெட்டர் , brief கேஸ் பாடல் வரிகள் , கேமரா எல்லாம் சேர்ந்து இதை immortal பாடலாக ஆகி விடும்
பாரதி , நிர்மலா இருவரும் சண்டை போடுதும் பொது , இவர் அமைதியாக சிரிப்பதும் , பிறகு சலித்து கொள்வதை பார்க்க அழகாக இருந்தது , இன்ப நிலையத்தில் ஸ்டைல் ஆக பார்ட்டி டான்ஸ் ஆடும் காட்சிய்ளும் , முக முடி அணிந்து கொண்டு டான்ஸ் ஆடும் காட்சியும் , தொடர்ந்து வரும் சண்டை காட்சியும் நன்றாக இருந்தது
பாரதியுடன் காதல் காட்சிகள் குறைவு என்றாலும் கட்டழகு பாப்பா பாடலில் நடிகர் திலகத்தின் குறும்புகளும் - tight t -shirt , matching pant மற்றும் அந்த பாடல்கான ambience நம்மளை கவரும்
சந்தன குடத்துக்குள்ளே பாடல் typical ராமண்ணா ஸ்டைல்
நாகேஷ்
நீ வந்த கப்பல் பெயர் என்ன - SS RASAGULLA , பர்மாவில் நீ இருந்த தெரு பெயர் என்ன? கட்டபொம்மன் தெரு - அதற்கு சிவாஜி reaction நான் ரசித்த காட்சி , தன் தங்கை நிர்மலாவை சிவாஜிக்கு தர மறுப்பதும் , பிறகு சிவாஜியின் அம்மா வேண்டாம் என்று சொன்ன உடன் கதவ சாத்துங்க நான் காலில் விழுகிறேன் என்று கெஞ்சுவதும் - செட்டியார் போல் வேடம் போட்டு கலக்குவதும் , நாய் தலையும் என் தலையும் ஒன்னு தான் என்று self depreciatory கமெண்ட் அடித்து கொல்வதும் , என்று படம் முழுவதும் தனி ராஜாங்கம் நடத்தி உள்ளார்
வரலக்ஷ்மி :
இவர் நல்ல நடிகை , இவர் நடித்த காட்சிகள் பற்றி ஏற்கனவே செண்டிமெண்ட் காட்சிகளில் எழுதி உள்ளதால் அதை விட்டு விடுகிறேன்
OAK தேவர்
pai - கனகசபை - ராமண்ணா படத்தில் வில்லன் பெயர்கள் north இந்தியன் names அதிகம் இருக்கும் நான் படத்தில் லால் , மூன்று எழுத்து படத்தில் சுகடியா , இதில் பை
கொஞ்சம் கூட இறக்கம் இல்லாத நபராக நன்றாக பொருந்தி நடித்து உள்ளார் , அவர் மீசை , முடியில் bleach செய்து இருபது புதுசு - ஐவரும் ராஜனும் சந்திக்கும் இடங்கள் அனல் தெறிக்கும் காட்சிகள்
கடைசியில் சர்ச் ல் அவர் மனம் மாறும் காட்சி நெகிழ்ச்சி என்றாலும் காட்சியை நீட்டி இருக்க வேண்டாம்
பாரதி :
அழகான திறமையான நடிகை , frock உடை மிகவும் பொருத்தமாக இருக்கிறது , காதல் காட்சிகளில் , பாடல் காட்சிகளில் மற்றும் injection போட்டு மனதை மயக்கும் காட்சிகளில் நன்றாக நடித்து இருக்கிறார்
நிர்மலா
இவர் பாத்திரம் மிகவும் முக்கயத்துவம் வாய்ந்த பாத்திரம் - முதலில் அனாதை போல் ஏமாற்றுவது , பிறகு சிவாஜி மனதில் இடம் படிப்பது , பிறகு வில்லன் வேடத்தில் கலக்குவது என்று நிறைவாக செய்து இருக்கிறார் , குரல் தான் ஒத்துழைக்க மாறுகிறது
மொத்தத்தில் என் ஆல் டைம் favorite சிவாஜி படம்