-
Quote:
Originally Posted by
esvee
மக்கள் திலகம் கலைவாணர் குடும்பத்துக்கு செய்த உதவிகள் வேறு எந்த மனிதரும் செய்ய முடியாத உதவிகள். அதனால் தான் அம்மாமனிதர் உலகம் போற்றும் ஒப்பற்ற மனிதராக இன்றும் விளங்குகிறார்.
பதிவிட்ட திரு வினோத் அவர்களுக்கு நன்றி. இன்று காலை இந்த செய்தியை அலைபேசி மூலம் தெரிவித்த அன்பு நண்பர்கள் திரு.மலரவன் மற்றும் c s குமார் இருவருக்கும் நன்றி
-
கலப்புமண கல்யாணத்தில் கலைவேந்தன்
http://i44.tinypic.com/e5fuxw.jpg
-
IN TVs - OUR BELOVED THALAIVAR'S MOVIES
நேற்று (27/07/2013)
ராஜ் - நாடோடி மன்னன்
சன் LIFE - தேடி வந்த மப்பிள்ளை
இன்று (28/07/2013)
JAYA MOVIES - தொழிலாளி
-
சென்னை திருவொற்றியூரை சேர்ந்த யுவராஜ் என்ற 27 வயது இளைஞர் அவர்கள் மக்கள் திலகத்தை மட்டுமே நேசிப்பவர் . அவர், பொன் மன செம்மல் புகழ் பரப்பும் வகையில் "எம் ஜீ ஆர் உணவகம்" என்ற உணவகத்தை நடத்தி வருகிறார் . இந்த உணவகத்தில் மலிவு விலையில் மக்களுக்கு உணவளித்து மகிழ்ச்சி கொள்கிறார். இதனை ஒட்டிய காணொளியை இந்த உரலியை (URL) சொடுக்கி (CLICK) கண்டு மகிழலாம்.
https://www.facebook.com/photo.php?v=418980711505589
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
-
Quote:
Originally Posted by
ravichandrran
அறிஞர் அண்ணாவையும் அவர்தம் வழி நின்ற
ஆசைத் தம்பி நம் ஆருயிர் வள்ளல், ஏழைகளின்
இதய தெய்வம் அவர்களையும் அழகழகாய் காட்டிட
இரவும் பகலும் இடையறாது பாடுபடும்
அருமை நண்பர் ரவிச்சந்திரன் அவர்களுக்கு நன்றி...
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
-
Quote:
Originally Posted by
makkal thilagam mgr
சென்னை திருவொற்றியூரை சேர்ந்த யுவராஜ் என்ற 27 வயது இளைஞர் அவர்கள் மக்கள் திலகத்தை மட்டுமே நேசிப்பவர் . அவர், பொன் மன செம்மல் புகழ் பரப்பும் வகையில் "எம் ஜீ ஆர் உணவகம்" என்ற உணவகத்தை நடத்தி வருகிறார் . இந்த உணவகத்தில் மலிவு விலையில் மக்களுக்கு உணவளித்து மகிழ்ச்சி கொள்கிறார். இதனை ஒட்டிய காணொளியை இந்த உரலியை (URL) சொடுக்கி (CLICK) கண்டு மகிழலாம்.
https://www.facebook.com/photo.php?v=418980711505589
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
இருபத்தேழு வயது இளைஞர் இதய தெய்வத்தின்மேல் வைத்த இணையில்லா பாசத்தை இங்கே எடுத்துரைத்த பேராசிரியர் அவர்களுக்கு நன்றி...இந்த வயதென்ன, இன்றைக்கு இரண்டு வயது குழந்தைக்கும் நம்
எழில் வேந்தன்மீது ஈர்ப்பு இருக்கத்தானே செய்கிறது !!
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
-
29.7.1955
மக்கள் திலகத்தின் ''குலேபகாவலி '' 58 வது ஆண்டு நிறைவு நாள்.
மக்கள் திலகத்தின் சிறப்பான நடிப்பில் வந்த வெற்றி படம் .
பெண்கள் அரசவையில் பல பெண்களில் கேள்வி கணைகளுக்கு
மக்கள் திலகம் அளிக்கும் பதில்கள் மிகவும் அருமை .
http://i39.tinypic.com/29m7rth.jpg
-
ஒரு ரசிகனின் பார்வையில் -
சிவகாசி தங்கமணி தியேட்டரில் குலேபகாவலி இரவு 10 மணி காட்சி பார்த்தேன். ஓரளவுக்கு கூட்டம் இருந்தது. படம் முழுவதும் பாட்டுக்களே. ஆனாலும், பாடல் காட்சியின் போது டீ குடிக்கவோ, தம் அடிக்கவோ யாரும் அரங்கை விட்டுச் செல்லவில்லை. புதுமையான கதை, அருமையான வசனம், மயக்கும் இசை, நேர்த்தியான நடிப்பு, கவர்ச்சி, காமெடி, சண்டை என இப்படி ஒரு மசாலா படத்தை 1955 களிலேயே மிகப் பிரம்மாண்டத்துடன் இயக்கியிருக்கிறார் டி.ஆர்.ராமண்ணா. படத்தை முடிக்கவே மனமில்லாததாலோ என்னவோ, மூன்று மணி நேரத்துக்கும் மேலாக குலேபகாவலி திரையில் ஜொலிக்கிறாள். ஒவ்வொரு காட்சியிலும் எம்.ஜி.ஆர்., சந்திரபாபு, கே.ஏ.தங்கவேலுவின் பாடி லாங்வேஜ் வியக்க வைக்கிறது. டி.ஆர். ராஜகுமாரி இருக்கிறாரே..! சொல்லவே வேண்டாம். காட்சிக்கு காட்சி சொக்க வைக்கிறார்.
http://i44.tinypic.com/15wh4z7.jpg
இடைவேளையின் போது 75 வயது மூத்த ரசிகர் ஒருவரிடம் ‘பெரியவரே! இந்த வயசுலயும் இந்த ராத்திரி ஷோவுக்கு வந்திருக்கீங்களே..?’ என்று பேச்சு கொடுத்தேன். “அதுவா..? எப்படியும் இந்தப் படத்த அம்பது தடவைக்கு மேல பார்த்திருப்பேன். இப்பக் கூட எனக்கு இது பழைய படமாத் தெரியல. படத்த பார்த்துக்கிட்டிருக்கிறப்ப அந்தக்கால நினைவுகளெல்லாம் வந்து போகுது. இப்ப எனக்கு நாப்பது வயசு குறைஞ்சாப் போல இருக்கு..” என்று பொக்கை வாயைத் திறந்தார்.
படம் ரிலீஸாகி 57 வருடங்களுக்குப் பிறகும் ஒரு கருப்பு வெள்ளை திரைப்படத்தை ரசிகர்கள் இந்த அளவுக்கு ரசிக்க முடிகிறதென்றால், அந்தக் காலக்கட்டத்தில் இந்தத் திரைப்படத்துக்கு எத்தனை வரவேற்பு இருந்திருக்கும் என்பதை எண்ணும் போது மலைப்பாக இருக்கிறது. ரசிகர்கள் தரும் ஒவ்வொரு காசுக்கும் உண்மையாக உழைத்திருக்கிறார்கள் அன்றைய கலைஞர்கள்!
ஒரு பழைய சினிமாவைப் பார்த்து ரசித்து பதிவும் செய்திருக்கிறானே “பைத்தியக்காரன்..” என பட்டம் கொடுத்து விடாதீர்கள். மக்களின் சிந்தனை, வேட்கை எந்த ஒரு படைப்பை நோக்கிப் பயணிக்கிறதோ அதுதான் கலை! கலை என்பது மக்களுக்கானதே!
-சி.என்.ராமகிருஷ்ணன்
-
Quote:
Originally Posted by
ravichandrran
ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று
அன்றே சொன்ன அறிஞர் அண்ணாவின்
என்றும் நிலைத்திடும் பொன்மொழியை
இன்றும் நம் மனதில் ஏற்றியது யாரென்பதை
நன்று உரைத்திட்ட நண்பர் ரவிச்சந்திரன்
இன்று போல் என்றும் வாழ்க!!
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
-