-
Courtesy : Sri. Chandran Veerasamy, FB
கவுரி பிக்சர்ஸ் ' பரிசு ' திரைப்பட வெளிப்புறப் படப்பிடிப்புக்காக தேக்கடியில். சிறிய தீவுக்குள் அமைந்திருந்த அந்த மாளிகைக்கு மக்கள் திலகத்தைப் பார்க்க படகில் சென்று அவருடன் பேசிக்கொண்டிருந்தேன். திடீரென்று வெளிப்புறத்தில் இரைச்சல் ஒலி கேட்டது. எழுந்து வராந்தாவுக்கு வந்து பார்த்தோம். ஏழெட்டு பேர் நீரில் வேகமாக நீந்தி வந்து கொண்டிருந்தனர்.
அவர்கள் தங்கள் தலைகளின் மீது ஏதேதோ பொருள்களை வைத்துக் கட்டியிருந்தனர். அவர்களைத் துரத்தியவாறு பின்னால் ஒரு படகில் சீருடை அணிந்த காட்டிலாகா சேவகர்கள் வந்தனர். நீந்தி வந்தவர்கள், வராந்தாவில் எம்.ஜி.ஆர். நிற்பதைக் கண்டதும் பெரும் மகிழ்ச்சி அடைந்து மேலும் உற்சாகத்துடன் வேக வேகமாகத் தங்கள் கைகளை மாறி மாறிப் போட்டு நீந்தி அருகில் வந்து, மேலே ஏறி வராந்தாவை அடைந்தார்கள். ஒரு நொடிப் பொழுது எம்.ஜி.ஆரை வைத்த விழி வாங்காமல் உற்று நோக்கிவிட்டு, சட்டென்று அவர் முன் நெடுஞ்சாண் கிடையாகக் காலில் விழுந்து வணங்கினார்கள்! அதற்குள், இவர்களைத் துரத்தி வந்த சேவகர்கள் படகை விட்டு மேலே வந்து எம்.ஜி.ஆரிடம் இவர்களைப்பற்றி ஏதோ சொல்வதற்கு முனைய, அவர் தன் கையை நீட்டிக் கண் சாடை செய்து தடுத்து விட்டார்.
விழுந்தவர்கள் இப்பொழுது எழுந்து நின்றனர். நீரில் நனையாமல் இருப்பதற்காக தங்கள் தலைகளில் வைத்துக் கட்டியிருந்த பொருள்களை எடுத்து எம்.ஜி.ஆரின் காலடியில் காணிக்கையாக வைத்தனர். அவர்களில் ஒரு இளைஞர் மலையாளத் தமிழில் கூறியதை இங்கு நான் ஒழுங்குபடுத்தி எழுதுகிறேன். ‘அண்ணே! நாங்க இந்தக் காட்டைச் சுற்றி இருக்கிற மலைவாழ் மக்களைச் சேர்ந்தவுங்க. மலையாளமும், தமிழும் பேசுவோம். கீழே இருக்குற குமுளி, கம்பம், டூரிங் சினிமா கொட்டகையில நீங்க நடிச்ச படங்களை ரொம்ப ஆசையோட பாத்து சந்தோஷப்படுவோம். பொங்கல், தீபாவளி நாள்ல ஒங்க புதுப்படம் பாக்கிறதுக்காக தேனிக்கு பஸ்ல போவோம். இங்கே நீங்க சூட்டிங்குக்கு வந்திருக்கிறதா கேள்விப்பட்டோம். நீங்க இங்கே வந்ததுலேருந்து ஒங்களை நேருல பாக்குறதுக்கு ரொம்ப முயற்சி பண்ணுனோம். முடியலே. இன்னிக்கு நீங்க சூட்டிங் இல்லாம இங்கேதான் இருக்கீங்கன்னு எங்களுக்குத் தெரிஞ்சிது. என்ன ஆனாலும் சரி – இன்னிக்கு ஒங்களைப் பாக்காம விடுறதில்லேன்னு முடிவு பண்ணி இந்த அதிகாரிங்களைக் கேட்டோம். அனுமதி கிடைக்கலே. அதனால அவுங்களை ஏமாத்திட்டு தண்ணில குதிச்சி நீந்துனோம். எங்களைப் பாத்திட்டு படகுல தொரத்துனாங்க. வேகமாக நீந்தி வந்து எப்படியோ ஒங்களை பாத்திட்டோம். அதுபோதும்.இதோ – இதெல்லாம் உங்களுக்கு எங்க காணிக்கை. எங்க ஞாபகார்த்தமா கொண்டு போயி வச்சிக்குங்க. நீங்க எப்பவும் நல்லாயிருக்கணும்’ என்று சொல்லி எல்லோரும் கும்பிட்டனர்.
அவர்கள் கூறியதைக் கேட்டு மலைத்து உணர்ச்சி வசப்பட்டுப்போன எம்.ஜி.ஆர். உள்ளே ஒரு அறைக்குள் போனார். சற்று நேரத்தில் வெளியே வந்தார். அவர் கையில் பத்துப்பத்து ரூபாய்களாகச் சேர்த்துப் பின் பண்ணிய இரண்டு நோட்டுக்கட்டுகள் இருந்தன. அதைப் பிளந்து திருகிப் ‘பின்’னிலிருந்து கழற்றி எடுத்து எல்லா நோட்டுகளையும் (இரண்டாயிரம் ரூபாய்) ஒன்றாய்ச் சேர்த்து வைத்துக் கொண்டு, பிரித்துப் பிரித்துத் தன் கைக்கு வந்ததை எண்ணிப் பார்க்காமல் அப்படியே அவர்கள் அனைவருடைய கைகளிலும் அன்போடு வைத்தார். அவர்களுக்குக் கொடுத்ததுபோக மிச்சம் மீதி இருந்த நோட்டுகளை காட்டிலாகா சேவகர்களிடம் கொடுத்தார். அவர்கள் முகம் மலர்ந்து கைகுவித்து அவரைக் கும்பிட்டனர் . இப்பொழுது – துரத்தப்பட்டவர்கள் இரண்டாவது தடவையாகவும், துரத்தியவர்கள் முதல் தடவையாகவும் எம்.ஜி.ஆர். என்ற அவர்களின் கண்கண்ட கடவுளின் காலடியில் விழுந்து வணங்கி விடைபெற்றனர்.
- தினத்தந்தியில் ஆரூர்தாஸ் எழுதிய பதிவிலிருந்து
-
-
-
-
மண்ணை விட்டு மறைந்தாலும் மக்கள் மனதை விட்டு மறையா என் தலைவன்
http://i1170.photobucket.com/albums/...psa2bd199d.jpg
-
-
-
http://i1170.photobucket.com/albums/...ps99c8a318.jpg
அ.இ.அ.தி.மு.க. நிறுவனத்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆரின் 27-வது ஆண்டு நினைவு நாளையொட்டி வரும் 24-ம் தேதி சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில், கழக அவைத் தலைவர் திரு. இ. மதுசூதனன் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்துகிறார். இதனைத்தொடர்ந்து உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக நிறுவனத் தலைவர் இதய தெய்வம் “பாரத் ரத்னா” புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர்., நம்மை ஆற்றொணாத் துயரத்தில் ஆழ்த்திவிட்டு, அமரர் ஆகிய நாள், 1987-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 24-ம் தேதியாகும் – அவரது, 27-வது ஆண்டு நினைவு நாளான, வரும் 24-ம் தேதி புதன்கிழமை, காலை 10 மணிக்கு, சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர் நினைவிடத்தில், அ.இ.அ.தி.மு.க. அவைத் தலைவர் திரு. இ.மதுசூதனன், மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்த உள்ளார் – அதனைத் தொடர்ந்து, எம்.ஜி.ஆர் நினைவிட வளாகத்தில், உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெறும் என அ.இ.அ.தி.மு.க. தலைமைக் கழகம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியில், தலைமைக் கழக நிர்வாகிகளும், அமைச்சர் பெருமக்களும், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும், கழகம், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மன்றம், புரட்சித் தலைவி ஜெ. ஜெயலலிதா பேரவை, எம்.ஜி.ஆர். இளைஞர் அணி, மகளிர் அணி, மாணவர் அணி, அண்ணா தொழிற்சங்கம், வழக்கறிஞர் பிரிவு, சிறுபான்மையினர் நலப்பிரிவு, விவசாயப் பிரிவு, மீனவர் பிரிவு, மருத்துவ அணி, இலக்கிய அணி, அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி, இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை உட்பட கழகத்தின் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகளும், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் பிரதிநிதிகளும், கழகத் தொண்டர்களும் பெருந்திரளாகக் கலந்து கொள்வார்கள் என்றும் அ.இ.அ.தி.மு.க. தலைமைக் கழக அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
-
-
மக்கள் திலகம் M.G.R.அவர்களின் 27 ஆம் ஆண்டு நினைவு நாள் சிறப்பு பதிவு 24.12. 2014
மக்கள் திலகம் M.G.R.பெற்ற விருதுகள
1.படம்:மலைக்கள்ளன் 1954 ம் வருடம்
சிறந்த நடிகர் 2-ம் பரிசு
இந்திய அரசு வழங்கியது.
2. படம்:எங்க வீட்டுப் பிள்ளை.
வருடம்:1965. சிறந்த நடிகர்
பிலிம் பேர் விருது.
3.படம்:காவல்காரன்.வருடம்:1967
சிறந்த படம்.முதல் பரிசு.
தமிழக அரசு.
4.படம்:குடியிருந்த கோயில்.
வருடம்:1968.சிறந்த படம்.
முதல் பரிசு.தமிழக அரசு.
5.சிறந்த நடிகர்.வருடம்:1968
இலங்கை அரசு.
6.படம்:அடிமைப் பெண்.வருடம்1969
சிறந்த படம்.முதல் பரிசு.
தமிழக அரசு.
மொத்தம் 14.இன்னும்8இருக்கு அனுப்புகிறேன். சிஸ்டர்.
7.படம்:அடிமைப் பெண்.வருடம்:1969.
சிறந்த படம்.முதல் பரிசு.பிலிம் பேர் விருது.
8.படம்:Rikshakaran. வருடம்:1971.
சிறந்த நடிகர். முதல் பரிசு.
சிங்கப்பூர் ரசிகர்கள்.
9.அண்ணா விருது.வருடம்:1971.
தமிழக அரசு.
10.பாரத் இந்திய அரசு.வருடம்:1971
11.படம்:உலகம் சுற்றும் வாலிபன்.வருடம்:1973.சிறந்த படம்.
பிலிம் பேர் விருது.
12.கௌரவ பட்டம்:அரிசோனா பல்கலை கழகம். அமெரிக்கா.
வருடம்:1974.
13.டாக்டர் பட்டம்.வருடம்:1983.
சென்னை பல்கலை கழகம்.
14.19.3.1988 அன்று M.G.R.அவர்களுக்கு
"பாரத ரத்னா"விருது வழங்கப்பட்டது.
இந்தியக் குடியரசுத் தலைவர்
R.வெங்கட்ராமன் அவர்கள்
திருமதி:ஜானகி ராமச்சந்திரனிடம்
இப்பட்டத்தினை வழங்கினார்.
15.20.9.1983 அன்று மெட்ராஸ் பல்கலை கழகம் "கௌரவ சட்ட முனைவர்"
பட்டத்தை வழங்கியது.
மக்கள் தலைவரை No.1.ஆக உயரத்திய படம் 1950-ல் வந்த
"மந்திரி குமாரி".
1950-ல் வெளிவந்த மந்திரி குமாரியிலிருந்து 1977-ஆம் ஆண்டு
வெளிவந்த"மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்"வரை 27 வருடங்கள்
முடிசூடா மன்னனாக திரையுலகில்
வலம் வந்தார்.
1956-ல் வெளிவந்த"மதுரை வீரன்"
பெற்ற வெற்றியைத் தொடர்ந்து
கல்யாணம் என்ற ரசிகர்
M.G.R.ரசிகர் மன்றம் தொடங்கினார்.
1958-ல் நாடோடி மன்னன் வெற்றி
பெற்றதைத் தொடர்ந்து M.G.R.அவர்களின் புகழ் காட்டுத் தீயைப் போல் நாடெங்கும் பரவியது.
இதைத் தொடர்ந்து மதுரையில்
நடைபெற்ற மாபெரும் விழாவில்
110-சவரனில் செய்யப்பட்ட தங்க வாள்
மக்கள் தலைவருக்கு பரிசாக வழங்கப்பட்டது.
"கொடுத்து சிவந்த கரம்"அந்த மன்னன் தங்கவாளை மூகாம்பிகை
அம்மனுக்கு காணிக்கையாக
வழங்கினார்
1980-ஆம் ஆண்டு ரசிகர்கள் மக்கள்
தலைவருக்கு வெள்ளி வாள்-பரிசாக
வழங்கினார்கள்.
தலைவர் அந்த வெள்ளி வாளை
மருதமலை அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயிலுக்கு
சாண்டோ சின்னப்பதேவர் நினைவாக வழங்கினார்.
பிறர் தேவையறிந்து கொண்டு வாரிக் கொடுப்பவர்கள் தெய்வத்தின் பிள்ளையில்லையா?
பாடலுக்கு ஏற்றபடி வாழ்ந்து
காட்டினார் இதயக்கனி.
courtesy net