வெரி குட். தாராளமாக.
Printable View
Vanakkam Ji
after a looooooooooooooooong time
eppadi irukkeenga
ஹாய் ஆல்..
வழக்கம் போல ரெண்டு நாள் கொஞ்சம் டஃப் ஆக ப் போய் விட்டபடியால் வந்து பழக இயலவில்லை.. மன்னிக்க..
எனில் ஹோம் ஒர்க்..
ராஜ்ராஜ் சார்..அம்மா பசிக்குதே தாயே பசிக்குதே- அம்மா ரொட்டி தே பாபா ரொட்டி தேக்கும் நன்றி..பாப்பாக்களின் சார்பாகவும் நன்றிகள்!
சி.செ.. சமர்த்து..சுத்திப் போட வேண்டும்.. கோழி ஒரு கூட்டிலே பாட்டுக்கு (இந்தி)க்காக ச் சொன்னேன்.. நீதுசிங்கா அது..ம்ம் எவ்ளோ வளர்ந்துட்டாங்க பிற்காலத்துல (யாரதுபக்கெட் எடுக்க போகிறது?!)
ராக தேவன்.. வாங்க வாங்க இந்த அபியும் நானும் பாட் போட்டதற்கு தாங்க்ஸ்..அந்தப் பிச்சைக்காரராய் நடித்த நடிகர் (கவில் ஆரம்,பிக்கும் பெயர் நினைவில் வர மறுக்கிறது) யெஸ் குமரவேல்.. நல்ல நடிகர்..மேஜிக் லேண்ட்டர்ன்ஸ் வழங்கிய பொன்னியின் செல்வன் நாடகத்திற்கு அவர் தான் நாடக வசனங்கள் எழுதியவர்..
வாசு.. எங்கிட்டோ போய்ட்டீங்க.. இப்படி ஒரு பாட்டை நான் நான்குவருடங்களுக்கு முன்னால் வெறும் கேட்டு மட்டும் இருந்தேன் என்றால் நம்ப வேண்டும்..மீண்டும் வாழ்வேன்பார்க்க நினைத்து இன்றுவரை பார்க்காத ஒரு படம்.. நா.வ.மு துபாய்போயிருந்த போது- அங்கிருந்து ஷார்ஜா நண்பரில்லத்தில் முரசு டிவி (மஸ்கட்டில் அப்போது எடுக்காமல் இருந்தது..இப்போது வருகிறது) சோம்பலாய்ப்பார்த்த ஒரு மாலை நேரம்.. டபக்கென இந்தப் பாட்டு வர சுறுசுறுப்பும் தானாய் வந்தது...
//பல இளைஞர்களின் தூக்கம் கலைந்திருக்கலாம் அந்த நாட்களில். இளமை பூத்துக் குலுங்குகிறது. 'ம்....கொடுத்து வைத்த விஷ்ணுவர்த்தன்' என்று மஸ்கட்டில் ஒருவர் புலம்புவதும் காதில் விழுகிறது.// அப்படில்லாம் இல்லீங்காணும் ( நெசம்மா)
பாரதி மட்டும் தான் அழகு..சூழ்ந்து ஆடிய கோடம்பாக்கங்கள் அவ்வளவாய் கவரவில்லை என ஆன்றோர்கள் சொல்வார்கள்..ம்ம் நல்ல பாட் நல்ல ரைட் அப்.. அதை மேலே வச்சுடுங்க..
*
*
சி.செ.. ரேமாமா ரேமாமா ரே, பாப்பா போலோபோலோ மம்மி போலோ போலோ ரெண்டுபாட்டுமே பிடிக்கும்.. அது என்ன சித்தி சொல்லு சொல்லு டாடி சொல்லு சொல்லு பாட் கேட்டிருக்கிறேன்படம் பார்த்ததில்லை..கனிமுத்துப் பாப்பாவா..
ரவி.. தேன் பற்றிய பதிவு நைஸ்..பதிந்த பாடல்களில்..
பார்த்தேன் ரசித்தேன் பக்கம்வரத் துடித்தேன்..அந்த மலைத்தேன் இதுவென மலைத்தேன் என ஆண்பாடுவது..ம்ஹூம் என்ன ஆணாதிக்க உலகமடா என எண்ணவைக்கும்..அழகியபாடல்..
தேன் சிந்துதே வானம் பாட்டு ஒவ்வொரு தரம் பார்க்கும் போதும் மனசுக்குள் மழையடிக்கும்..உடலுக்குள் குளிரடிக்கும் என ஆன்றோர்கள் சொல்வார்கள்..
தேன் நிலாவரும் ரொம்பப் பிடிச்ச பாட்டு..ஆடியோவில் சிலோனில் வந்த பாட்டு என நினைக்கிறேன்..
இந்த சலங்கை ஒலியில்- பூஞ்சோலைவண்ணம் கொண்டு வந்தான் கோபாலனே..பாடல் ஆரம்பிக்கும் முன் தயாரிப்பாளர் இசையமைப்பாளரிடம் சொல்வார்.. படமோ நாட்டியம் அப்படி இப்படின்னு போகுது இந்தப் பாட்டையாவது பாக்ஸ் ஆஃபீஸ்க்காக கொஞ்சம் நல்லா வைக்கலாம்னு பார்த்தா… இசையமைப்பாளர்..: நீங்க கவலைப்படாதீங்க.. நான் கொடுத்த ஸ்டெப்ஸையே மாத்திட்டான்.. இதான் நாட்டியம் தெரிஞ்சவங்களையெல்லாம் ஸ்டெப்ஸ் போடக் கூடாதுங்கறது..எனச் சொல்லி பாடல் தொடரும்..
அது போலவே.. போட்டுருக்கறது மூணு சிறந்த நடிகர்கள்..அவங்களும் சீரியஸ்.. கதையில் நகைச்சுவை வந்தாலும் அவங்களுக்கு பாட்டெல்லாம் கிடையாது..கதையில் இளமையா இருக்கற்து இந்தப் பொண்ணு தான்..இதவச்சுத்தான் பாக்ஸ் ஆஃபீஸ்க்கு ஒரு பாட் போடணும்..னு ப்ரொட்யூஸர் சொல்லியிருப்பாரோ என்னவோ சந்த்ரகலாவைக் குளிக்க விட்டிருப்பார்கள்.. (தேன் மழையிலே மாங்கனி நனையுது) சிந்தால் சோப்பாயிருக்குமோ..
*
செந்தமிழ் த் தேன் மொழியாள், தேன் உண்ணும் வண்டு.. நல்ல இனிமையான பாடல்கள் சி.செ..
/தேன் மதுவை வண்டினம் தேடி வராதா ?// தேடி வரும்னு தானே ஆ பெண்குட்டி சொல்லுது மதுண்ணாவ்..
பாடு நிலாவே, தேன் தேன் தேன் இவற்றை விட தேனருவியில் நனைந்திடும் மலரோ எனக்குப் பிடிக்கும் ரவி.. காரணம்..மு.மேத்தா..
குமுதத்தில் தொடராக வந்தபோது படித்த நாவல் கையில்லாத பொம்மை..அதையே கைராசிக்காரன் என்று எடுத்துக் கெடுத்திருந்தார்கள்.. படம் எதுவும் நினைவிலில்லை..இந்தப் பாட்டும் தான்.. நன்றாக இருக்கிறது தேன் சுமந்த முல்லை தானா..
ஹை.. எனக்காகப் பாட்டுக்களா..தாங்க்ஸ் ரவி..
. அதுவும் தேன் குடித்த நிலவு இன்னும் ஒரு ஓ. ஜீவன் ஒரு நல்ல நடிகர்..சம்விருதாவும் தான்.. கொஞ்சம் வித்தியாசமான அழகி..ஷார்ப் ஃப்யூச்சர்ஸ் என்று ஆன்றோர்கள்..சரி நானே சொல்றேன்! ஏனோதமிழில் ஒதுக்கி விட்டு விட்டார்கள்..
. கிண்ணத்தில் தேன் வடித்து பாடலுக்கும் நன்றி பிடித் பாட்டில் ஒன்று..இதுபற்றி நான் எழுதியிருக்கும் ரைட் அப் தேடி அடுத்த பதிவில் இடுகிறேன்..முடிந்தால்.. அகெய்ன் தாங்க்ஸ்
*..
தேன் பாட்டு என்றவுடன் நினைவுக்கு வந்தது தேன் கிண்ணம்.. அப்புறம் தேனாற்றங்கரையினிலே.. (வாசு போட்டுவிட்டார்) தேனே தேடி அலைந்தேன்.. மதுண்ணாவிற்கு தாங்க்ஸ்..
//தேன் இனிமையிலும்
யேசுவின் நாமம்
திவ்ய மதுரமாமே// wow வாசு ..வித்யாசமான பாட்டு.. சூப்பர்.. நான் எட்டு-10 படித்தது செய்ண்ட் மேரீஸ் எனப்படும் தூயமரியன்னைப் பள்ளி தான்.. எனில் கிறிஸ்தவப் பாடல்கள் நிறையக் கேட்டிருக்கிறேன்..இது கேட்டதாக நினைவில்லை.. நைஸ்..
மதுண்ணா சி.செ வாசு.. தேன் பாடல் லிஸ்ட்க்கு ஒரு ஓ…ம்ம் யாரோ ஒரு பொண்ணு பாவாடை சட்டை தாவணி போட்டுக்கிட்டு
கருகரு விழிகள் சுழல
…காண்பவர் கருத்தும் மயங்க
துறுதுறு வெனவே நடையும்
..துடிப்புடன் ஒசியும் இடையும்
முறுவலை முகத்தில் கொண்டு
..மோகனம் பொங்கிப் பொங்கி
குறும்புடன் பாடிய பாடல்
..கூவியே அழைத்த தென்னை..
*
..யா.. மானாட்டம் தங்க மயிலாட்டம்
பூவாட்டம் வண்ணத் தேராட்டம்
தானாடும் மங்கை சதிராட்டம்
கண்டு தேனோடும் எங்கும் நதியாட்டம்..ஓஒ ஓஹோய் ஹோய்..ஹோய்..
எனப் படத்தில் தாவியாடிய சர்ரூ…:)
பின்ன வாரேன் :)
**
சிறார் முதல் சூப்பர்ஸ்டார்கள் வரை மயக்கிய கதாபாத்திரம் நடிகர்திலகம் உயிரூட்டிய கட்டபொம்மனே !!
இதுவரை திரையுலகம் கண்ட கதாபாத்திரங்களில் வீரபாண்டிய கட்டபொம்மனே ரசிக நெஞ்சங்களில் ஆழமான பாதிப்புக்களை ஏற்படுத்தி ஒவ்வொருவரும் தானும் கட்டபொம்மனாக தம்மை உருவகப்படுத்திக் கொண்டு அந்தப் புகழ்பெற்ற வசனங்களை நடிகர்திலகத்தை ரோல்மாடலாக மனதில் இருத்தி பேச முயற்சி செய்ய வழி வகுத்தது !
எத்தனை சிறுவர் சிறுமியர் பேஷன் ஷோக்களில் கட்டபொம்மனாரின் கெட்டப்பில் அசத்தியிருக்கிறார்கள் என்பதற்கு கூகுள் வலைத்தளத்தில் யூ டியூபில்
உலவும் காணோளிகளே சாட்சி !
[url]https://www.youtube.com/watch?v=Y_sNMbOklE0
இந்தக் குழந்தைகளையும் கவர்ந்திட்ட சூப்பர் ஸ்டார் ரஜினியுமே இதற்கு விதி விலக்கல்ல !
ஒரிஜினல் கட்டபொம்மன் முன்னாலேயே சோதனை மேல் சோதனை பாடும் ரஜினி கட்டபொம்மன் ..விடுதலை திரைப்படத்தில்
https://www.youtube.com/watch?v=8FRCYAOcoYc
தம்பிகளே தங்கங்களே கட்டபொம்மன் சொல்லுவதை கேளுங்க! ரஜினியின் சூப்பரான கட்டபொம்மன் கெட்டப்!!
[url]https://www.youtube.com/watch?v=nOlDjoOcFLI
இன்னும் சில தேன் பாடல்கள்.
முத்தம் முத்தம் செந்தேன் அல்லவோ----புத்திசாலிகள்
பூந்தேனில் கலந்து பொன் வண்டு எழுந்து
பாலாற்றில் சேலாடுது ....
தேனாற்றில் நீராடுது
ஜெர்மனியின் செந்தேன் மலரே
செந்தாமரையே செந்தேன் இதழே
தந்தேன் தந்தேன் இசை
செந்தேன் தந்தேனடி-----வில்லுப் பாட்டுக்காரன்
மலைத்தேனுங்க நான் மலைத்தேனுங்க
மச்சானைத்தான் விருந்துக்கு அழைத்தேனுங்க
வணக்கம் ராஜேஷ்ஜி!
ஈவ்னிங் கூட உங்களைப் பத்தித்தான் நினைச்சுகிட்டு இருந்தேன். ஒரு பி.எம்.போடலாம்னு கூட யோசிச்சேன். அப்பாடி! வந்துட்டீங்க. எப்படி இருக்கீங்க? நலம்தானே! எவ்வளவு நாளாச்சு!
அட.. அட.. அட... அந்தத் தேன் கூட திகட்டிப் போகும். நம்ம லிஸ்ட் திகட்டவே திகட்டாதோ !
அடுத்தது பார்த்தேன்.. பார்த்தேன்.. பார்த்தேன்.. சுடச்சுட ரசித்தேன்...அட.. அதுவுந்தேன்...
சிக்கா.... அதென்ன ஆன்றோர்கள் சொன்னது ? நம்ம திரிக்குப் பெரியவர் வாத்தியாரையா ( rajraj sir )... அவர் என்ன சொல்றார்னு கேட்டு ஒரு முடிவுக்கு வாங்க..
நேத்திலிருந்து கேரளத்தில் ஓணம் கொண்டாட்டங்கள் ஆரம்பிச்சாச்சு. வெளி நாட்டு கேரளமான மத்திய கிழக்கு ஏரியாவில் அத்தப் பூக்களம் வந்தாச்சா... ? தமிழில் பிரபலமான கேரளப் பாடல்கள் என்னவாக்கும் ?
Here are two of the MalayaLam songs I like:
omana thinkal kidavo........
http://www.youtube.com/watch?v=yrYdIJj-q9I
karuna cheivan endhu thaamasam......
http://www.youtube.com/watch?v=4CqnK36B2zU
I don't know whether these became popular in Tamil ! :)
//தமிழில் பிரபலமான கேரளப் பாடல்கள் என்னவாக்கும் ?//
வழக்கம் போல
பாரத விலாஸ்
மைக்கேல் மதன காமராஜன்
அப்புறம் சப்தஸ்வரதேவி உணரு---அந்த 7 நாட்கள்
தசரதனும், உஷாவும் பங்கு கொள்ளும் 'கண்ணுகள் பூட்டி ஞான் ஒரு நிமிஷம்'----திருமலை தென்குமரி
ஐ வில் சிங் பார் யூ----- எடா மிடுக்கா
https://youtu.be/1suNIBbS3M4
https://youtu.be/oZ63_o3vZUA