Makkal thilagam mgr in padakotti -1964-48th anniversary -today
படகோட்டி -3-11-1964.
48ஆண்டுகள் நிறைவு
http://i50.tinypic.com/nec35y.png
.
.
ரசிகனின் விமர்சனம்
நாடோடிமன்னன் - 1958-பகுதி வண்ணத்தில் வெளியான பின்னர் மக்கள் திலத்தின் முதல் பிலிம் சென்டர் வண்ண படம் ..
1963- பணத்தோட்டம் வெற்றிக்கு பின் சரவணா பிலிம்ஸ் தயாரித்த முதல் வண்ணப்படம் .
மீனவர் சமுதாயத்தை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட படம் .
இரண்டு மீனவ குப்பங்களின் இடையே நடைபெறும் போராட்டம் -அடிப்படை கதை .மாணிக்கம் என்ற பாத்திரத்தில்
மக்கள் திலகம் நாயகனாக சிறப்பாக நடித்து ரசிகர்களின் உள்ளங்களை கொள்ளை கொண்டார் .
தரை மேல் பிறக்க வைத்தான் - முதல் பாடலில் தனது சோகத்தை மிக மிக அற்புதமாக காட்டியிருப்பார் .
நான் ஒரு குழந்தை ... நீ ஒரு ...பாடலில் முதுமை தோற்றத்தில் தோன்றி பின்னர் இளமை தோற்றத்தில் மாறி அமர்க்கள படுத்தியிருப்பார் .
பாட்டுக்கு பாட்டெடுத்து பாடலில் ஒரு உண்மையான காதலின் ஏக்கத்தை மிக பிரமாதமாக நடித்திருப்பார் .
தொட்டால் பூ மலரும் -பொன் விழா ஆண்டு நெருங்கினாலும் மக்கள் திலகத்தின் முதன்மையான காதல் பாடல் அருமையான பாடல் வரிகள் .. இனிமையான இன்னிசை .எழில்பொங்கும் கடலோர காட்சிகள் .மக்கள் திலகம் - சரோஜா தேவி காதல் ஜோடி NO 1. FOREVER .
தத்துவ பாடல் - கொடுத்ததெல்லாம் கொடுத்தான் ....
அழமான கருத்துள்ள பாடல் .மக்கள் திலகத்தின் நடிப்பில் பலவித முக பாவங்கள் காட்டி நடித்திருப்பார் .
கல்யாண பொண்ணு ... பாடலில் மாறு வேடத்தில் ஜாலியாக பாடி தூள் கிளப்பி இருப்பார் .
என்னை எடுத்து தன்னை கொடுத்து ....பாடலில் சரோஜாதேவி அருமையாக உணர்சிகளை காட்டி இருப்பார் .
அழகு ஒரு ராகம் பாடலில் சரோஜா தேவி - ஜெயந்தி - நம்பியார் .. மூவரும் சிறப்பாக நடித்திருப்பார்கள் .
படகு போட்டி - அருமையான காட்சி .... இனிமையான இன்னிசை .. அழகான நடன காட்சிகள் .
மக்கள் திலகத்தின் அருமையான சண்டை காட்சிகள் .
மக்கள் திலகம்
படம் முழுவதும் காலணி இல்லாமல் நடித்திருப்பது படத்தின் சிறப்பம்சமாகும் .
மொத்தத்தில் படகோட்டி
நூறு சதம் ரசிகர்களின் ஆவலை பூர்த்தி செய்த காவியம் .
மெல்லிசை மன்னர்களின் - பாடகர் திலகங்களின் கூட்டணியில் மாபெரும் வெற்றி படைப்பு .
மக்கள் திலகத்தின் கிரீடத்தின் ஒரு வைர கல் .-படகோட்டி .
esvee