http://i125.photobucket.com/albums/p...ps696b8968.jpg
Yesterday I tried to upload this Nalla Neram image.
Printable View
http://i125.photobucket.com/albums/p...ps696b8968.jpg
Yesterday I tried to upload this Nalla Neram image.
சத்யா மூவிஸ் தயாரிப்பில் வந்த மக்கள் திலகத்தின் முத்தான 6படங்கள் .
1. தெய்வத்தாய் - 1964 - மிகப்பெரிய வெற்றி படம் .
மக்கள் திலகம் துப்பறியும் அதிகாரியாக நடித்து வந்த படம் .
திரு பாலச்சந்தர் -வசனம் எழுதிய முதல் படம் .
திரு மாதவன் - இயக்குனாராக அறிமுக படம் .
இனிமையான பாடல்கள் .மக்கள் திலகம் அவர்கள் ஒரு பெண்ணை பார்த்து ...... பாடலில் சிறப்பாக நடனமாடி நடித்திருப்பார் .
இந்த புன்னகை என்னவிலை ......
வண்ணக்கிளி ...சொன்ன மொழி ....என்ற பாடலில் அருமையாக நடித்து ரசிகர்களின் உள்ளங்களை கொள்ளை அடித்திருப்பார் .
எல்லாவற்றிக்கும் மேலாக
வரலாற்று புகழ் பாடல் . அன்றும் இன்றும் என்றும் உலகமெங்கும் ஒலிக்கும் பாடல்
மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் ......... உன்னதமான பாடல் .
வசூலில் சாதனை புரிந்த படம் .
சத்யா மூவிஸ் முதல் வெற்றிப்படம் .
தொடரும் .....
மக்கள் திலகம் பற்றிய சிறு தொகுப்பு ''காட்சி பிழை '' என்ற தளத்திலிருந்து எடுக்கப் பட்டது .- நன்றி .
நடிகர் எம்ஜியார் மிகச்சிறிய வேடங்கள் செய்து சிரமப்பட்டுதான் கதாநாயக அந்தஸ்து பெற்றவர். டி.ஆர்.மஹா-லிங்கம், சிவாஜி கணேசன், பின்னால் வந்த ஜெய்சங்கர் மாதிரித் திரையில் முதல் படத்திலேயே கதாநாயக அந்தஸ்து பெற்றவர் அல்ல; எஸ்.எஸ்.ஆர்., ஏ.வி.எம்.ராஜன், ‘ஸ்பெஷல்’ அறிமுகமாக ரவிச்சந்திரன் நுழைந்--தது போல ‘செகண்ட் ஹீரோ’ அந்தஸ்தில் அறிமுகமானவரும் அல்ல; படித்த நடிகர் ஜெமினி கணேசன் போல சொற்ப காலம் சில படங்களில் சின்ன ‘ரோல்’ செய்து-விட்டு கதாநாயகன் ஆனவர் அல்ல; சிவகுமார் போல சற்று கௌரவமான சிறுபாத்திரங்களில் நடித்துப் பின் கதாநாயகனாக உயர்ந்த--வரும் அல்ல.
எம்.ஜி.ஆர். போராட்டம் நீண்--டது. கதாநாயகனான பின்னும் எம்.ஜி.ராம்சந்தர் என்றே ஆரம்ப காலப் படங்களில் அவர் பெயர் ‘டைட்டிலில்’ வரும். ‘மருத நாட்டு இளவரசி’, ‘மந்திரி குமாரி’, ‘மர்மயோகி’ வெற்றிகளுக்குப் பின்பும் அவருக்கு எதிர்காலம் பற்றிய சந்-தேகங்கள் தொடர்ந்தது. இந்த சந்--தேகத்தை ஊர்ஜிதப்படுத்துவது போல 1952இல் சிவாஜி புயல் பிரவேசம் ‘பராசக்தி’ மூலம் நிகழ்ந்--தது. 1953இல் ஜெமினியின் ‘மனம் போல் மாங்கல்யம்’ வந்தது. மும்முனைப்போட்டி ஆரம்பமானது. (சிவாஜியின் பாதிப்பு இல்லாத நடிகர்கள் 1950, 60களில் இருவர்தான், எம்.ஜி.ஆரும் ஜெமினிகணேசனும்.)
1950களில் எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி என்று மூவேந்தர் தோற்-றம்கொண்ட தமிழ் சினிமா பின் கொஞ்சம் கொஞ்சமாக இரண்டு திலகங்களிடம் மையம் கொண்டுவிட்டது. சிவாஜிக்கு செகண்ட் ஹீரோவாக ஜெமினி ‘பெண்ணின் பெருமை’யில் துவங்கி (கதாநாயகனாகவும் வெள்ளிவிழா நாயகனாகவும் ஜொலித்த காலத்--திலேயே) ‘கட்டபொம்மன்’, ‘கப்ப-லோட்டிய தமிழன்’, பீம்சிங்கின் ‘பதிபக்தி’, ‘பாசமலர்’, ‘பந்தபாசம்’, ஏ.பி.என் படங்கள் ‘சரஸ்வதி சபதம்’, ‘திருவருட்செல்வர்’ உட்பட பல படங்களில் நடிக்கும்போதே எம்.ஜி.ஆர்., “ஜெமினி இப்படி தனித்-தன்மையை விட்டுத் தருகிறாரே” என வருத்தப்பட்டார். ஜெமினி, ‘வல்லவனுக்கு வல்லவன்’ படத்தில் அசோகனுக்கே வில்லனாக நடித்தார். இனி என்ன என்று எம்.ஜி.ஆர்., சலித்துப்போய் தான் நடித்த தேவரின் ‘முகராசி’ படத்தில் ஜெமினியையும் நடிக்க வைக்கும்படியானது. ஆனால், ஜெமினி பின்னால் வந்த ஏ.வி.எம்.ராஜன், ஜெய்சங்கர், ரவிச்சந்திரன், முத்துராமனுக்கெல்லாம் கூட ‘செகண்ட் ஹீரோ’வாக ‘ஈகோ’ பார்க்காமல் நடித்தார். இத்தனைக்கும் அந்தக் கால கட்டத்தில் ‘பணமா பாசமா’ வெள்ளிவிழா கண்ட படம்; ‘இருகோடுகள்’, ‘சாந்திநிலையம்’, ‘காவியத்தலைவி’ போன்ற படங்கள் வந்த காலம். ஜெமினிக்குப் பின் சிவாஜி கணேசன் படங்களில் ஜெமினி செய்த அதே மாதிரி பாத்-திரங்களை முத்துராமன் செய்தார். இவ்வளவும் சொல்லக் காரணம் எம்.ஜி.ஆரின் தனித்தன்மை. எம்.ஜி.ஆர். ‘கூண்டுக்கிளி’ படத்தில் மட்டும் சிவாஜிகணேசனுடன் நடித்-தார்.
சிவாஜி தொடங்கி சிவகுமார் வரை எல்லோரும், வயது முதிர்ந்த பின் வேறு துணைப் பாத்திரங்களில் நடித்துவிட்டார்கள். எம்.ஜி.ஆர். மட்டும்தான் கடைசி வரை கதாநாயகனாகவே நடித்தார். அதே போல வயதானவராக எம்.ஜி.ஆர். மாறுவேஷம் தான் போட்டிருக்கிறாரே ஒழிய முதிய-வராகப் படங்களில் நடித்ததே இல்லை. எல்லாப்படங்களிலும் எம்.ஜி.ஆர். ‘இளம் வாலிபர்’தான்! (எம்.ஜி.ஆருக்கு முன் எம்.கே.டி. பாகவதரும் பி.யூ.சின்னப்பாவும் கதாநாயகர்களாக மட்டும் நடித்த-வர்கள். அப்படிப் பார்த்தால் ஜி.என்.-பி.-யைக் கூடத்தான் இந்த லிஸ்டில் சேர்க்க வேண்டியிருக்கும். எஸ்.எஸ்.ஆர். கூட வயதானவராக நடிக்கவில்லை, இளைஞனாக மட்டும் நடித்தவர். ஆனால், அவர் ‘செகண்ட் ஹீரோ’வாக நிறையப் படங்களில் நடித்தவர்; அவருடைய கடைசிப் படங்கள் உள்பட. ‘வைராக்கியம்’ படத்தில் ஜெமினி-யுடன், ’எதிரொலி’யில் சிவாஜியுடன்.)
அதே போல பெண்ணுக்கு வலை வீசும் ஷோக்குப் பேர்வழியாகவும் எல்லாக் கதாநாயகர்களும் நடித்திருக்-கிறார்கள். எம்.ஜி.ஆர். மட்டுமே ஸ்த்ரிலோலராக நடித்ததேயில்லை. குடி, சிகரெட் விஷயங்களில் நடிக்-கும்--போது அவர் பிடிவாதமான கண்ணி--யம் காட்டினார். ‘தமிழக மக்களுக்கு எம்.ஜி.ஆர். ஒரு புனிதர். என்பதற்கு அடையாளம் எம்.ஜி.ஆர்.!
எம்.ஜி.ஆர். கால் உடைந்த போது, ‘சரிதான் எம்.ஜி.ஆர். ஜேப்டர் குளோஸ்!’ என்றார்கள். ‘மன்னாதி மன்னன்’, ‘திருடாதே’, ‘பாசம்’, (பாசம் படத்தில் எம்.ஜி.ஆர். இறந்து --போவார்!), ‘தாய் சொல்லைத் தட்டாதே’, ‘தாயைக்காத்த தனயன்’, ‘பணத்தோட்டம்’, ‘கொடுத்து வைத்--தவள்’ என்று அதன்பிறகு அவர் விஸ்வரூபம் எடுத்தார். ‘எங்க வீட்டுப் பிள்ளை’ எந்த ஒரு ஹீரோவும் பார்த்து ஏங்கும் படம். ஜெயலலிதாவுடன் நடித்த ‘ஆயிரத்தில் ஒருவன்’, ‘குடியிருந்த கோவில்’, ‘அடிமைப்பெண்’, ‘மாட்டுக்கார வேலன்’, ‘பெற்றால்தான் பிள்ளையா’ போன்றவை அவருடைய தனித்து-வ-மான பாணியின் உச்சம்.
தேஜஸ் விஷயத்தில் எம்.ஜி.ஆரின் முகத்தை மீறி ஒன்றைக் குறிப்பிட முடியுமா? ஜனவஸ்யம், ராஜவஸ்யம் என்பதற்கு இன்னொருவரைக் சொல்ல முடியுமா? ஐம்பது, அறுபது-களில் அவர் முகத்தில் இருந்த களை அன்று மட்டுமல்ல, இனி எந்த நடி--கனிடமும் எந்தக் காலத்திலும் காணவே முடியாதது.
மாறுவேடம் போட்டுவிட்டால் எம்.ஜி.ஆர். நடிப்பில் புது பரிமாணம் வந்துவிடும். கூடு விட்டுக் கூடு பாய்-வது போல ஆளே மாறிவிடுவார். எம்.ஜி.ஆர். கதாநாயகனாக நடித்தப் படங்களில் மாறுவேஷம் விஷேசப் பரிமாணத்தைத் தொடுவதைக் காண---முடியும்.
எம்.ஜி.ஆர்., ஏசுநாதராக நடிக்க ஒரு படம் பூஜை போடப்பட்டது. அப்போது அவர் ஏசு வேடத்தில் நடிக்க எடுக்கப்பட்ட ஸ்டில்ஸ் இப்போது கூடப் பார்க்கக் கிடைக்-கின்றன. சாந்த சொரூபியாக ஏசு போலவே தான் இருப்பார்.
குண்டடிபட்ட பின் ‘ஒரு நடிகனுக்கு குரல் முக்கியம். அதையே இழந்தபின் என்ன செய்யப்போகிறார், பாவம்’ என்றவர்கள் வாயடைக்கும்படி அவருக்குச் செல்வாக்கு மிகவும் அதிகமாகியது. வசூல் சக்கரவர்த்தி என்பது நிரந்தரமானது. ‘சிவந்தமண்’ பிரமாதமான பரபரப்புடன் வெளி-யான நேரத்தில் சத்தமே இல்லாமல் வெளியான ‘நம் நாடு’ பெரிய வெற்றி--பெற்றது.
‘மந்திரிகுமாரி’, ‘மர்மயோகி’, ‘மகா-தேவி’, ‘நாடோடி மன்னன்’, ‘ராணி சம்யுக்தா’, ‘மன்னாதி மன்னன்’ படங்களில் மட்டுமல்லாமல் ‘பெற்--றால் தான் பிள்ளையா’ வரை அவர் வசனங்கள் பற்றிச் சொல்ல வேண்டுமானால், என்னிடம் மனோரமா சொன்னார்: ‘வெண்-கலமணி அடித்தாற்போல உச்சரிப்பு சுத்தமா இருக்கும்.’ “வெண்கலக்குரல். கணீர்னு மணியடிச்சாப்பல எங்க அண்ணன் குரலுப்பா. அந்தக்குரல் குண்டடிபட்டபிறகு ‘காவல்காரன்’ படத்தில், “பா(ர்த்)தேன் சுசிலா... பா(ர்த்)தேன்... இந்த ‘றெண்டு கன்-னால’ பாதேன்” என்று விகாரமாய் என் காதுல விழுந்தப்ப அப்படி அழு-தேன்யா. அப்படி அழுதேன்” என்றார்.
இவ்வளவுக்கும் எம்.ஜி.ஆர். படங்-களில் பாடல்கள், வசனம் அவர் எதிர்-காலத் தலைவர் என்பதை அறி----விக்கும் வண்ணம்தான் இருந்தன.
ஆனால், கடைசி வரை எம்.ஜி.--ஆர். பாடல் காட்சிகளில் சோடை போனதேயில்லை. டி.எம்.எஸ். பாடல்கள் தான் எம்.ஜி.ஆருக்கு என்றி-ருந்த நிலையில் அதை உடைத்தார். புதுப்பாடகர் எஸ்.பி.பி. பாட்டுக்குத் தன்னம்பிக்கையோடு சந்தேகமேயில்லாமல் நடித்தார். பாடல் காட்சிகளில் எம்.ஜி.ஆர். அனுபவித்து நடித்தார். முன்னர் டி.எம்.எஸ். பாடல்களில் அவர் எந்த அளவுக்கு அப்பீலிங்காகத் தெரிந்தாரோ அதே மாதிரிதான் குண்டடிபட்ட பின்னும் கூட எஸ்.பி.பி. பாடல்களிலும் ஜேசுதாஸ் பாடல்களிலும். ‘மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்’ வரை இதனை செக் செய்துப் பார்த்துக்கொள்ளலாம். பாடல்களில் அவரின் பிரத்யேக அசைவுகளை இப்போது யாராவது நடித்துக்காட்டும் போது அந்தக் கால மனிதர்களுக்குக் கண்ணில் நீர் கோர்த்து விடும்.
அனுபவித்து நடித்தார் என்-பதால் எந்தப் பின்னணி பாடகரின் பாடலும் அவருக்குக் கனகச்சிதமாகப் பொருந்தியது. சிதம்பரம் ஜெயராமன் பாடிய பிரபலமான எம்.ஜி.ஆர். பாடல், ‘உள்ளம் ரெண்டும் ஒன்று நம் உருவம் தானே ரெண்டு / உயி-ரோ--வியமே கண்ணே நீயும் நானும் ஒன்று.’ (கல்யாணி ராகம்.) ‘புதுமைப்பித்தன்’ படத்தில் பைத்தியம் பிடித்தவுடன் எம்.ஜி.ஆர். பாடுவதாக வரும் பாடல் சிதம்பரம் ஜெயராமன் பாடியது தான். ‘நீயும் கெட்டு நானும் கெட்டு பாதை விட்டு பாதை மாறிப் போவதோ? தந்--தானத்தன தன்னானத்தன தன்-னானத்தன தானா.’ அதற்கு ஆர்ப்--பாட்டமாகச் சில ஸ்டெப் போடு--வார், எம்.ஜி.ஆர்.
பாடல் காட்சிகளில் அவர் எப்போதும் கதாநாயகி பாடும்போது அல்லது ஆடும்போது ரசித்துத் தலையாட்டுவார். கதாநாயகியைப் பார்த்துச் சிரித்துத் தன் உதட்டைக் கடித்துத் தலையை ஆட்டி சைட் அடிப்பார். (மதுரையில் ரொம்ப காலம் சல்லிகள் சைட் அடிப்பது என்றால் இந்த எம்.ஜி.ஆர். மேனரிசம் தான். ‘ஜாரி’ மிரண்டு ஓடும்!) கதாநாயகியின் உதட்டைச் செல்லமாகக் கிள்ளி ஆட்டி விடுவார். கைகளைப் பின்னால் கட்டிக்கொண்டு தலையை அழகாக ஆட்டுவார். கைகள் இரண்டும் பாடல் காட்சிகளில் இயங்கிக்கொண்டே தான் இருக்கும். பாடல் வரிகளை விளக்கும் விதமாக எப்போதும் அவர் உடல் மொழி இருக்கும். ‘உலகம் பிறந்தது எனக்காக / ஓடும் நதிகளும் எனக்காக / அன்னை மடியை விரித்தாள் எனக்காக’ பாடலில் கடைசியில் மாட்டுவண்டியில் ஏறி கைகளை விரித்துக்காட்டுவார். ‘எனக்கொரு மகன் பிறப்பான்! அவன் என்னைப்போலவே இருப்பான்’ பாடலில் காலைத் தரையில் சந்-தோச--மாக உதைத்துக்கொள்வார். ‘அந்தப் பச்சைக்கிளிக்கொரு செவ்வந்திபூவினில் தொட்டிலைக் கட்டி வைத்தேன்’ என எஸ்.வரலட்சுமி பாடும்போது செல்லங்கொஞ்சும் சிறு குழந்தை போல அவர் மடியில் தலை வைத்துப் படுத்துக்கொள்வார். ‘நான் ஒரு கை பார்க்கிறேன் / நேரம் வரும் கேட்கிறேன் / பூனையல்ல புலிதானென்று போகப் போகக் காட்டு--கிறேன் / போகப் போகக் காட்டுகிறேன்’ பாடலின் ஒவ்வொரு வரிக்கும் அவருடைய எக்ஸ்ப்ரசன்! முடிவில் ரௌத்திரம் தெரியும் முகம். தலையை ஆக்ரோசமாக ஆட்டி நிறுத்துவார். அப்போது தியேட்டர் அதிரும் என்று சொன்னால் அது குறைவுதான். பாடல்களுக்கு அவர் வாயசைப்பது அழகு!
எம்.ஜி.ஆர். இசை ஞானமிக்கவர். கர்நாடகச் சங்கீத ரசிகர். வாய்பாட்டு என்றில்லை, தனியாவர்த்தனமாக மிருதங்கம் மட்டுமே ரசிக்கக்கூடிய அளவுக்கு அபார இசை அறிவு. இதனால், சினிமாவுக்கு மெல்லிசைப் பாடல்களைத் தேர்ந்தெடுப்பதில் அசாத்தியத் திறமை பெற்றிருந்தார். இசையமைப்பாளர்களுக்கு ‘பென்டு’ கழண்டுவிடும்!
டான்ஸ் போல் ஸ்டண்ட் காட்சி-களிலும் அவரிடம் இருந்த ‘குயிக்னெஸ்’ அலாதியானது. சண்டைக் காட்சியில் விசேஷம்... முதலில் வில்லனிடம் ‘மிஸ்டெர் தயவு செய்து நான் சொல்றதெ கேளுங்க’ என்று ரொம்ப கனி-வாகச் சொல்வார். வில்லன் அலட்-சி--யமாக ஒரு குத்து விடுவான். ‘தயவு செய்து வழிய விடுங்க’ என்று புன்னகையுடன் மீண்டும் சொல்லிப் பார்ப்பார். அதன் பின்பும் வில்லன் அதைச் சட்டையே செய்யாமல் முகத்தில் குத்துவான். எம்.ஜி.ஆர். உதட்டைத் தடவிப் பார்ப்பார். விரல்களில், ‘ஆ... ரத்தம்’! அப்புறம் வில்லன் ஒருவனாக இருந்தாலும் சரி, கூட்டமாக இருந்தாலும் சரி அடி வெளுத்து விரியக் கட்டிவிடுவார். மற்றபடி பல சமயங்களில் சிரித்துக்-கொண்டே தான் கத்திச் சண்டையும் போடுவார்.
எம்.ஜி.ஆரின் கலையுலக வாரிசு ஆகும் ஆசை நிறைய பேருக்கு இருக்கிறது. ‘விஜயபுரி வீரன்’ படத்--தில் ஆனந்தன் அறிமுகமான போது கத்திச் சண்டையில் எம்.ஜி.ஆரின் வாரிசு என்றார்கள். ஆனந்தன், எம்.ஜி.ஆரின் கால் தூசுக்குப் பெற-மாட்டார். ஜெய்சங்கர் தென்னகத்து ஜேம்ஸ்பாண்ட் என்று பேர் பெற்ற-போது எம்.ஜி.ஆரிடமே, ‘ஜெய்சங்கர் தான் உங்கள் வாரிசா?’ என்று கேட்கப்பட்டது. மு.க.முத்து, கான மயிலாட கண்டிருந்த வான்கோழியாக அப்படியே எம்.ஜி.ஆர். பார்-முலாவில் நடித்துப் பார்த்தார். முத்து சிரிப்பு மட்டும் எம்.ஜி.ஆர். மாதிரியே இருந்தது. ஆனால், அது இமிடேசன். ‘மு.க.முத்து உங்கள் வாரிசா’ என்று கூட எம்.ஜி.ஆரிடம் கேட்டிருக்கிறார்கள்.
எம்.ஜி.ஆர். சிரிப்புப் பற்றி 1960களில் தமிழ்வாணன் கேள்வி பதிலில் எழுதுகிறார்: ‘‘ஒரு குழந்தை முன் பல புகைப்படங்களைப் போட்டுப் பாருங்கள். அந்தக் குழந்தை எம்.ஜி.ஆர். படத்தைத்தான் எடுக்கும். ஏனென்றால், எம்.ஜி.ஆரிடம் தான் உண்மையான சிரிப்பு இருக்கிறது.”
எம்.ஜி.ஆர். சிரிப்பைப் பின்னால் சத்-யராஜ் சிரித்துக் காட்டினார். சத்யராஜ் மட்டும்தான் எம்.ஜி.ஆர். பாணியை எல்லோருமே ரசிக்-கும்--படி செய்த ஒரே நடிகர். (சத்ய-ராஜ், எம்.ஆர்.ராதாவின் வக்-கிரத்தை-யும் தன் வில்லன் நடிப்---பில் வெளிப்படுத்திய அற்புத நடிகன்!)
விஜயா கார்டனில் தென்னிந்தியத் திரைப்பட இயக்குனர்கள் சங்கம் நடத்திய திரைப்படத் தொழி-லாளர் சம்மேளன விழா... எம்.பி.-சீனி-வாசனின் இசை நிகழ்ச்சியுடன் ஆரம்--பித்தது. (அக்ரஹாரத்தில் கழுதை எம்.பி.சீனிவாசன் தான்) முதல்வர் எம்.ஜி.ஆர். விழாவுக்கு வருகிறார் என்பதால் விஜயா கார்-டன் களையுடன் இருந்தது. எம்.ஜி.ஆர். படங்கள் இயக்கிய பல இயக்குனர்கள், அப்போது ஃபீல்டில் இல்லாத பல டெக்னீசியன்கள் உட்பட நிறைய கலைத்துறை பிர-பலங்--கள் ஆஜர்.
எம்.ஜி.ஆர். வந்தார். மேடை யேறினார். விஜயா வாஹினி அதி-பர் நாகிரெட்டி மேடையே--றிவிட்ட எம்.ஜி.ஆரின் காலில் விழ முயற்சி செய்தார். எம்.ஜி.- ஆர்., காலில் நாகிரெட்டி விழுந்து விடக்கூடாது என்று கெட்டியாகப் பிடித்துக்கொண்டார். விஜயா வாஹினி அதிபரோ எப்படியாவது காலில் விழுந்தே தீர்வேன் என்று கடும் பிரயத்தனம் செய்தார். எம்.ஜி.ஆர். அவர் முயற்சி ஈடேறி விடாமல் தன் கைகளால் றீஷீநீளீ செய்துவிட்டார். எப்படியோ சரிந்து காலில் விழுந்து எழுந்தார் நாகிரெட்டி! எல்லோருக்கும் ஆச்-சரியம், எம்.ஜி.ஆர். முதலாளி என்று மரியாதை செய்யும் நபர் காலில் விழுந்தே தீர்வேன் என்று பிடிவாதம் பிடித்ததைக் காண நேர்ந்ததில்! அங்கிருந்த எல்லோரும் மலைத்துப் போய்விட்டார்கள்! மேடையில் எம்.ஜி.ஆர். செல்லக் கோபத்துடன், ‘என்ன இப்படி? நீங்களுமா?’ என்று கையை விரித்துச் சைகையால் கேட்பதை எல்லோரும் காண முடிந்தது. நாகிரெட்டியிடம் தொடர்ந்து ஏதேதோ பேசி மீண்டும் கை விரித்து என்னமோ சொன்னார். ஸ்டுடியோ அதிபர் மிகவும் உணர்ச்சி வசப்பட்டுக் கண் கலங்கினார். . ‘எங்க வீட்டுப் பிள்ளை’ படம் எடுத்தவர் அல்லவா?
ஒரு தேர்தல் பொதுக்கூட்டம். எம்.ஜி.ஆர். பேசுகிறார்... எள் போட்டால் எள் எடுக்கமுடியாது என்கிற அளவுக்கு ஜனங்கள். பெண்கள் எப்போதும் போல மிகவும் அதிகம். கூட்டத்தில் தன் பேச்சை முடிக்கும் முன் எம்.ஜி.ஆர். சொன்னார்: “தயவுசெய்து தாய்-மார்கள் இங்கிருந்து வெளியேறி வீட்டுக்குச் சென்றுவிடுங்கள். நான் ஆண்களிடம் தனியாகக் கொஞ்சம் பேசவேண்டியிருக்கிறது. தாய்மார்கள் செல்லலாம்.”
பெண்கள் கூட்டம் முற்றிலும் வெளி-யேறிச் சென்றுவிட்டதை அறிந்த பின் எம்.ஜி.ஆர். சொன்--னார்: “இப்போது ஆண்கள் செல்-லலாம்.”
எம்.ஜி.ஆர். சினிமா நடிப்பைக் கைவிட்ட பிறகும்கூட அவர் அடைந்த புகழ் இனி யாருக்கும் கிடைக்குமா?
எம்.கே.தியாகராஜபாகவதருக்கு ஜனவசியம் இருந்தது. ஆனால், அவர் அதிகாரம் என்பதைப் பார்க்க முடிந்ததில்லை. அவர் வாழ்க்கையின் பின் பகுதியில் மிகுந்த சீரழிவைக் கண்டவர். பாகவதருக்கு பால்ய யோகம்! வாழ்வின் முன் பகுதி சிறப்பானது. எம்.ஜி.ஆருக்கு விருத்தாப்பிய யோகம்! வாழ்வின் பின் பகுதி மிகவும் விஷேச சிறப்-பானது. ஆனால், அவர் ஜனவசியம் தமிழகத்துக்குச் செய்தது நன்மை. அவர் வெற்றி மேல் வெற்றி கண்டு மீண்டும் மீண்டும் தமிழக முதல்வரான காலங்களில் இவ்வளவு ஜாதிக்கட்சிகள் கிடையாது; மதக் கட்சிகள் கிடையாது. எம்.ஜி.-ஆருக்கு ஓட்டுப் போட்ட பாமர மக்-கள் இன்றைக்கு ஜாதிக் கட்சி-களில் தமிழ்நாடெங்கும் சிதறிப் போய்விட்டார்கள்.
நன்றி - திரு மணிகண்டன்
http://youtu.be/Vc_iRgwaJOQ
now at tirupur kalaivani - makkal thilagathin 'oli vilakku' daily 4 shows