-
http://www.mayyam.com/talk/images/misc/quote_icon.png Originally Posted by Murali Srinivas
ராகவேந்தர் சார் தனிப்பட்ட முறையில் கோவை சென்றிருக்கிறார். ஆகவே அவராலும் பதிவுகள் செய்ய இயலவில்லை. அங்கிருந்து ஒரு சிவாஜி செய்தி அனுப்பியிருக்கிறார். கோவை டிலைட் திரையரங்கில் காவிய நாயகனின் கலைக் காவியம் வசந்த மாளிகை ரெகுலர் காட்சிகளாய் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிக்கும் செய்திதான் அது.
அன்புடன்
ராகவேந்திரன் சார் தெரிவித்ததாக முரளி சார் வெளியிட்ட தகவலுக்கு நன்றி! கோவை டிலைட் திரையரங்கில், நேற்று 4.9.2010 சனிக்கிழமை முதல், தினசரி 3 காட்சிகளாக, வான்புகழ் கொண்ட "வசந்த மாளிகை" காதல் காவியம் திரையிடப்பட்டு வெற்றி முழக்கமிட்டு வருகின்றது.
அன்புடன்,
பம்மலார்.
-
கோவை டிலைட் திரையரங்கில், 4.9.2010 சனிக்கிழமை முதல், தினசரி 3 காட்சிகளாக, வாழ்வியல் திலகத்தின் காலத்தை வென்ற காவியமான "வசந்த மாளிகை" வெளியாகி வெற்றி வாகை சூடி வருகின்றது. அரங்கில், கலையுலக சக்கரவர்த்திக்கு பேனர்கள் வைக்கப்பட்டு அலங்காரங்கள் செய்யப்பட்டுள்ளன. இன்று 5.9.2010 ஞாயிறு மாலைக் காட்சிக்கு, நமது நல்லிதயங்களின் ஆரவாரங்களினால், அந்தப் பகுதியே களை கட்ட உள்ளது.
இதே டிலைட் திரையரங்கில், இதயதெய்வத்தின் 83வது ஜெயந்தியை முன்னிட்டு, வருகின்ற 1.10.2010 வெள்ளி முதல், புதுமை வேந்தரின் "புதிய பறவை" வெளியாக உள்ளது.
இந்த இனிக்கும் தகவல்களை வழங்கிய ரசிக நல்லிதயம் திரு.வெள்ளியங்கிரி அவர்களுக்கு உளப்பூர்வமான நன்றிகள்!
அன்புடன்,
பம்மலார்.
-
-
சற்று முன் வந்த தகவல். சென்னை ஸ்டார் திரையரங்கில் முன்னறிவிப்பின்றி திடீரென மூன்று நாட்களுக்கு மட்டும் திரையிடப்பட்டு அந்த மூன்று நாட்களும் வெற்றி வாகை சூடி கிட்டத் தட்ட முப்பதாயிரம் ரூபாய் அளவிற்கு வசூல் செய்ததாக தகவல் வெளியான நடிகர் திலகத்தின் ஆண்டவன் கட்டளை திரைக்காவியம் இன்று 14.09.2010 முதல் சென்னை பிராட்வே திரையரங்கில் தினசரி 3 காட்சிகளாக திரையிடப் படுவதாக தகவல் வந்துள்ளது. ரசிகர்கள் அனைவரும் இந்த வாய்ப்பைப் பயன் படுத்திக் கொள்ள வேண்டும்.
அன்புடன்
ராகவேந்திரன்
-
சென்னை அமைந்தகரை பகுதியில் உள்ள லக்ஷ்மி திரையரங்கில், வரும் 17.9.2010 வெள்ளி முதல், தினசரி 3 காட்சிகளாக, புதுமைச் சக்கரவர்த்தியின் "புதிய பறவை".
அன்புடன்,
பம்மலார்.
-
மதுரை சென்ட்ரல் சினிமா திரையரங்கில், நாளை 24.9.2010 வெள்ளி முதல், தினசரி 4 காட்சிகளாக, ஸ்டைல் சக்கரவர்த்தியின் "சொர்க்கம்".
அன்புடன்,
பம்மலார்.
-
சென்னை பெரம்பூர் மஹாலட்சுமி திரையரங்கில், இன்று 19.11.2010 வெள்ளி முதல் தினசரி 3 காட்சிகளாக, சாதனைச் சக்கரவர்த்தியின் "புதிய பறவை".
அன்புடன்,
பம்மலார்.
-
மதுரை ஸ்ரீமீனாக்ஷி திரையரங்கில், 26.11.2010 வெள்ளி முதல், தினசரி 4 காட்சிகளாக, தேசிய திலகத்தின் "தியாகம்" திரையிடப்பட்டு வெற்றி நடைபோட்டு வருகின்றது.
அன்புடன்,
பம்மலார்.
-
மதுரை திருப்பரங்குன்றம் லக்ஷ்மி திரையரங்கில் தற்பொழுது வெற்றிகரமாக நடைபெறுகிறது, கலைஞர் வசனத்தில் நடிகர் திலகத்தின் உன்னதத் திரைக்காவியம் இருவர் உள்ளம்.
ragavendra
1st December 2010
-
http://www.mayyam.com/talk/images/misc/quote_icon.png Originally Posted by RAGHAVENDRA மதுரை திருப்பரங்குன்றம் லக்ஷ்மி திரையரங்கில் தற்பொழுது வெற்றிகரமாக நடைபெறுகிறது, கலைஞர் வசனத்தில் நடிகர் திலகத்தின் உன்னதத் திரைக்காவியம் இருவர் உள்ளம்.
நன்றி, ராகவேந்திரன் சார்.
திருப்பரங்குன்றம் லக்ஷ்மி திரையரங்கில், நேற்று 30.11.2010 செவ்வாய் முதல், மூன்று நாட்களுக்கு மட்டும், தினசரி 3 காட்சிகளாக, நமது நடிகர் திலகத்தின் "இருவர் உள்ளம்" திரையிடப்பட்டு அமோக வரவேற்பு பெற்று வருகின்றது.
இத்தகவலை எமக்களித்த சிவாஜி மன்ற பேச்சாளர் திரு.தி.அய்யம்பெருமாள் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்!
அன்புடன்,
பம்மலார்.