-
எனக்கு பிடித்த பாடல்களில் முத்திரை வரிகள்.
முகத்தில் முகம் பார்க்கலாம்- "இகத்தில் இருக்கும் சுகம் எத்தனை ஆனாலும் இருவர்க்கும் பொதுவாக்கலாம் ,அன்பே ,அதன் எண்ணிக்கை விரிவாக்கலாம்".
நினைப்பதெல்லாம்-" ஆயிரம் வாசல் இதயம்.அதில் ஆயிரம் எண்ணங்கள் உதயம்".
உள்ளத்தில் நல்ல உள்ளம்- "தாய்க்கு நீ மகனில்லை,தம்பிக்கு அண்ணனில்லை,ஊர் பழி ஏற்றாயடா"
மலர்ந்தும் மலராத- "நதியில் விளையாடி கொடியில் தலை சீவி நடந்த இளம் தென்றலே"
கல்லெல்லாம் மாணிக்க -"உண்டென்று சொல்வதுந்தன் கண்ணல்லவா,இல்லையென்று சொல்வதுந்தன் இடையல்லவா"
பூ வரையும் பூங்கொடியே-"கன்னமெனும் கிண்ணத்திலே வண்ணங்களை குழைத்தாயே,பொங்கி வரும் புன் சிரிப்பில் கொஞ்சம் கொஞ்சம் இரைத்தாயே"
தரை மேல் பிறக்க வைத்தான்-"கடல் நீர் நடுவே பயணம் போனால் குடிநீர் தருபவர் யாரோ"
-
ஹம்மிங்க்ஸ் இனிமைகள் நிறைந்த பாடல்கள் ..இரவின் மடியில் பாடல்கள் சில .....
பவள கொடியிலே முத்துக்கள் ............
கல்லெல்லாம் மாணிக்க கல்லாகுமா .....
பூ மாலையில் ஓர் மல்லிகை ..........
காதல் காதல் என்று சொல்ல கண்ணன் ............
காதலன் வந்தான் ....
பொட்டு வைத்த முகமோ .......
திருவளர் செல்வியோ .. நான் தேடிய .......
-
மழை பொழிந்து கொண்டே இருக்கும் .....
இசை அரசி சுசீலாவின் தேன் குரலில் நடிகை சரோஜாதேவியின் பாடல் நடிப்பில் அமைந்த இந்த பாடல் .
http://youtu.be/tuVJGAMHGEA
-
1969ல் மெல்லிசை மன்னரும் கே.வி.எம். அவர்களும் கோலோச்சிக் கொண்டிருந்த நேரத்தில் புகழின் உச்சிக்கு மற்றொரு பக்கம் உயர்ந்து கொண்டே இருந்தவர்கள் சங்கர்-கணேஷ் இசையமைப்பாளர்கள். மகராசி படத்திலேயே சூப்பர் ஹிட் பாடல்கள் மூலமாக அறிமுகமாகி புகழ் பெற்றவர்களின் வேகமான வளர்ச்சிக்கு அவர்களுடைய வித்தியாசமான இசை முயற்சி ஒரு முக்கிய காரணம். சங்கர் கணேஷ் இசை எனத் தனியே அடையாளம் காணும் அவர்களுக்கு தங்கள் முத்திரையைப் பதித்தார்கள். அந்தக் காலத்து இளைஞர்களின் மனம் கவர்ந்த இசையமைப்பாளர்களாகவும் உருவெடுத்தார்கள்.
அப்படி அவர்களின் புகழை பரப்பியதில் அக்கா தங்கை படத்தில் இடம் பெற்ற ஆடுவது வெற்றி மயில் பாடலுக்கு மிக மிக முக்கியமான பங்கு உண்டு. பட்டி தொட்டி என்று சொல்வார்களே அது போல எங்கும் எதிலும் ஆடுவது வெற்றி மயில் ஒலித்தது. இப்படம் நூறு நாட்கள் ஓடி மாபெரும் வெற்றி பெற்றதில் சங்கர் கணேஷின் இசைக்கு முக்கிய பங்கு உண்டு. குருவிகளா, குருவிகளா பாடலும் இதே போல் சிறப்பான வரவேற்பைப் பெற்றது. சீர்காழியின் குரலில் பாட்டோடு ராகம் இங்கே மோதுதம்மா பாடலும் நெஞ்சைத் தொட்டுச் செல்லும் பாடல்.
இவையல்லாது ஈஸ்வரியின் வசீகரக் குரலில் இடம் பெற்ற ஒரு பாடல் மாறி வரும் சொஸைட்டி. இதிலும் சங்கர் கணேஷின் திறமை பளிச்சிடும். இன்று பார்க்கும் போதும் கேட்கும் போதும் இப்பாடலில் அவர்களின் இசைக் கருவிகளின் பிரயோகமும் பயன் படுத்தியுள்ள விதமும் பாராட்ட வைக்கிறது.
அபூர்வமான இப்பாடல் ராட்சசியின் ரசிகர்களான வாசுவுக்கும் மற்ற நண்பர்களுக்குமாக இங்கே
http://youtu.be/W5Kgw0ASKiE
இப்பாடலில் முதல் சரணத்திற்கு முன் வரும் பியானோ, கிடார் மற்றும் வாய்ஸ் வாப்ளிங் குறிப்பிடத் தக்கது. ஒரே துடிப்பு ஒரே நடிப்பு இந்த வரிகளின் போது இடையிடையே ட்ரம்பெட் ட்ரம்ஸ் என கலக்கியிருப்பார்கள். இரண்டாம் சரணத்தின் போது அக்கார்டியன் கலக்கல். பாடல் முழுதும் ட்ரம்ஸ் தாளம் போட்டுக் கொண்டே ஆட வைக்கும்.
மொத்தத்தில் வித்தியாசமான இசையமைப்பில் அருமையான பாடல்
-
அன்பு முரளி சார்,
தங்களின் அன்பான, இதயபூர்வமான வாழ்த்துதல்களில் பெருமகிழ்ச்சி கொள்கிறேன். இப்படி ஒரு திரி தொடங்க வேண்டும் என்பது என் நெடுநாள் ஆசை. நமது ஹப்பில் இது போன்ற திரிகள் சிலவற்றைப் பார்த்து நான் மகிழ்ந்ததுண்டு. அதில் வருத்தம் என்னவென்றால் அவையெல்லாம் ஒருசில பக்கங்களோடு நின்று போனதுதான்.
திரை இசை மற்றும் பாடல்களைப் பற்றி அறிந்த பல ஜாம்பவான்கள் நிறைய இங்கு இருக்கிறார்கள். அவர்கள் எல்லோரையும் ஒன்று சேர்த்து திரை இசை பொற்காலப் பாடல்களை அலச ஆவல் கொண்டேன்.
நடிகர் திலகம் பற்றிய கருத்துக்கள், சம்பாஷணைகள் தவிர்த்து நான் எனக்கு நினைவு தெரிந்ததிலிருந்து நண்பர்களிடம் பேசி மகிழ்ந்து, பகிர்ந்து கொள்வது பழைய பாடல்களைப் பற்றிதான். அதிலும் குறிப்பாக
அதிகம் வெளியே தெரியாத அற்புதப் பாடல்கள். எவ்வளவோ திறமையான இசைக் கலைஞர்கள் வெளிச்சத்துக்கு வராமல் போய் இருக்கிறார்கள்.
உதாரணத்திற்கு எடுத்துக் கொண்டோமானால் பாடகி சொர்ணா அவர்கள். இயக்குனர் பாலச்சந்தரின் நாடகப் பட்டறையிலிருந்து வந்த மெல்லிசை மாமணி வி. குமார் அவர்களின் மனைவி. தேனும், பலாச்சுளையும் சேர்ந்தது போன்ற வசீகரக் குரலுக்கு சொந்தக்காரர் அவர்.
அப்போதிலிருந்தே நான் அவருடைய குரலுக்கு அடிமை.(ராட்சஸியை விடுங்கள். அவர் பெரும் புகழ் பெற்றவர்) சொர்ணா பாடிய பாடல்கள் மிகக் குறைவு. விரல் விட்டு எண்ணி விடலாம்.
ஆனால் அவர் பாடிய ஒவ்வொரு பாடலும் நங்கூரம் பாய்ச்சியது போல என் மனதில் பதிந்து விட்டன.
மிகப் பிரபலமாக வந்திருக்க வேண்டிய பாடகி. ஆனால் என்ன காரணமோ! அவர் பிரபலமாகவில்லை.
இப்படி பி.வசந்தா, மாதுரி, எம்.ஆர்.விஜயா, மல்லிகா பாடகர்களில் கோவை சௌந்தரராஜன், பொன்னுசாமி (கமர்ஷியல் பாடல்களில் கில்லாடி) தாராபுரம் சுந்தரராஜன், எம்.எல்.ஸ்ரீகாந்த், தனசேகரன் இசையமைப்பாளர்களில் என் நெஞ்சில் என்றும் நிறைந்திருக்கும் ஷியாம், ராஜன் நாகேந்திரா, சலீல் சௌத்ரி, விஜயபாஸ்கர், ஜி.கே. வெங்கடேஷ், மரகதமணி என்று பட்டியல் நீளும்.
நாம் பொதுவாக மெல்லிசை மன்னர், இளையராஜா, பி.சுசீலா, ஈஸ்வரி, ஜானகி, பழைய சூப்பர் ஹிட் பாடல்கள் என்றே பழக்கப்பட்டு விட்டோம். நான் மேற்குறிப்பிட்ட சந்தையில் அதுவும் தமிழ் சினிமா சந்தையில் அதிகம் பேசப்படாத இசைக்கலைஞர்கள் இந்தத் திரி மூலமாக அனைவரையும் சென்றடைய வேண்டும் என்பதே என் பெரும் விருப்பம்.
இதில் கிருஷ்ணாஜி மிக மிக இவ்விஷயத்தில் உறுதுணையாக இருக்கிறார். அவரின் மெமரி பவரைக் கண்டு நான் அசந்து போய் நிற்கிறேன். மற்றும் என் அருமை நண்பர்கள் ராகவேந்திரன் சார், கார்த்திக் சார், சின்னக் கண்ணன், வினோத் சார், பார்த்தசாரதி சார், கோபு சார், ஸ்டெல்லா மேடம், ராஜேஷ் சார், ரவி சார் (கோபாலை விடுங்கள். மகா மேதைகளைப் பற்றி நான் சொல்லித்தான் தெரிய வேண்டுவதில்லை) உள்ளிட்ட அனைத்து நண்பர்களுக்கும் இதில் இவ்வளவு ஆர்வமா என்று திகைப்பாக இருக்கிறது.
மற்றபடி இந்தத் திரி ஆரம்பிக்க நிச்சயம் வேறு காரணங்கள் எதுவும் இல்லை. நீங்கள் குறிப்பிட்டது போல நடிகர் திலகம் திரியை மறக்க வேண்டுமானால் என் சுவாசத்தைதான் மறக்க வேண்டும். அத்துணை நல்ல இதயங்களும் நடிகர் திலகம் திரிக்கு அழைப்பு விடுக்கும் அளவிற்கு நான் அனைவர் நெஞ்சிலும் இருக்கிறேன் என்பதை விட எனக்கு வேறு மகிழ்ச்சி இருக்க முடியாது. அத்துணை பேருக்கும் என் கோடானு கோடி நன்றிகளை இதயபூர்வமாக தெரிவித்துக் கொள்கிறேன். எல்லாவற்றுக்கும் காலமே சிறந்த தீர்வைக் கொடுக்கும்.
இப்போது உங்களிடம் வருகிறேன்.
இசையை, பாடல்களை ரசிப்பதில் நீங்கள் எந்த அளவிற்கும் அனைவருக்கும் கிஞ்சித்தும் குறைந்தவர் கிடையாது என்பதை நீங்கள் அனுபவித்து ரசித்த 'எல்லாம் அவன் தந்தது' (அப்போதே சொன்னேனே கேட்டியா) பாடல் ஒன்றே சாட்சி ஒருபானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் போல.
பல திரையுலக அதிசயங்களை, ரகசியங்களை, இனிமையாக அம்பலப்படுத்தும் நீங்கள், பொய்கள் தலையெடுக்கும் இடங்களில் உண்மையை உணர வைக்கும் நீங்கள், பாட்டுடைத் தலைவனின் தலையாய ரசிகராய் கொஞ்சமும் சுயநலம் பாராமல் அவருக்காகவே உழைத்து வரும் நீங்கள், அவர்பற்றிய ஜனரஞ்சகமான கட்டுரைகளை அளித்துவரும்
நீங்கள்
இந்தத் திரியில் பங்கு கொண்டால் (தங்களுக்கு நேரம் கிடைக்கும் போது மட்டுமே. தங்களது நேரமின்மையை நன்கு அறிந்தவன் நான்)
எங்களைவிட பாக்கியசாலிகள் எவரும் இருக்க முடியாது.
மீண்டும் தங்களது அன்பு வாழ்த்துகளுக்கு நன்றி!
இப்போது என் இன்னொரு மனம் கவர்ந்த பாடகி சொர்ணா அவர்கள் 'தூண்டில் மீன்' படத்தில் ஜெயச்சந்திரனுடன் இணைந்து பாடிய ஒரு அற்புத பாடலை என்னுடைய சிறு பரிசாக (ஆனால் விலை மதிக்க முடியாத பரிசு என் வரையில்) 'மதுர கானங்கள்' திரியின் சார்பாக மிக்க மகிழ்ச்சியுடன் தங்களுக்கு வழங்குகிறேன்.
இன்னொரு ரகசியம். இந்தப் பாடலை இதுவரைக்கு நான் யாருக்கும் வழங்கியதில்லை. அவ்வளவு ரகசியமாக இப்பாடலை ரசிப்பவன் நான்.
இப்போது எங்கள் முரளி சாருக்காக முதன் முதலாக இத்திரியில் வழங்குகிறேன்.
http://www.youtube.com/watch?feature...&v=mMv0BkkCBDU
-
சாருகேசி .
சிறிய வயதில், தாத்தா பெரிய கிராமபோன் வைத்து கொண்டு ,family தோசை சைசில் ரெகார்ட் போட்டு கேட்பார்.உச்ச ஸ்தாயியில் அலறும் அந்த குரல் என்னை ஒன்றும் கவரவில்லை.(அந்த கால cult சூப்பர் ஸ்டார் பாகவதர்).இன்று டி.எம்.எஸ் சில பாடல்கள் நீங்கலாக இதே உணர்வைத்தான் கொடுப்பார். கால,ரசனை மாற்றம்.ஆனாலும் ஒரு ஐந்து பாடல்களின் music content என்னை மிக கவரும்.அப்படி என்னை ஈர்த்த ஒன்றுதான் "மன்மத லீலையை வென்றார் உண்டோ?"
என் சிவாஜி மன்ற முதிய நண்பர் (அவருக்கு அப்போது 50 வயது.நான் பதினொன்று),மன்றத்தில் உட்காரும்போதெல்லாம் இரண்டு பாடல்களை பாடுவார்.(மற்றதை இன்னொரு சந்தர்ப்பத்தில்)அதில் ஒன்றை எனது பள்ளி பாட்டு போட்டிக்கு என்னை தேற்றி முதல் பரிசு வாங்க செய்தார். அந்த பாடல் "வசந்த முல்லை போலே வந்து".
நான் ,என் தங்கை உட்கார்ந்து லிஸ்ட் போட்டு பழைய பாடல்களை (பாண்டி பஜார் அருகே ஒரு கடை) டேப் செய்து கேட்போம்.(pre -recorded அலர்ஜி .நிறைய குப்பை சுமந்து வரும்).அப்போது எங்கள் லிஸ்டில் தவறாமல் முதலாக (இன்றும்தான்)இடம் பெரும் உன்னத அழியா இசை அதிசயம் "தூங்காத கண்ணென்று ஒன்று".
இந்த ராகமும் மேளகர்த்தா சம்பூரணம்தான். ஒரு ராகம் மெல்லிய காதல் உணர்வை கிளர்ந்தெழ செய்து ,உங்கள் காதலியிடம் உங்கள் உணர்வை அமைதியாக சொன்ன பிறகு, ஒரு திருப்தியை தருமே ?அதை உணர்ந்திருக்கிறீர்களா? அந்த உணர்வுடன் ,இனிய தாலாட்டை கலந்து கண் மூடினால் வரும் பரம சுகத்தை இந்த ராகம் அனுபவிக்க வைக்கும்.
இந்த ராகத்தில் எனது மற்ற தேர்வுகள்
மலரே குறிஞ்சி மலரே -டாக்டர் சிவா.
தூது செல்வதாரடி- சிங்கார வேலன்.
முத்து குளிக்க- அனுபவி ராஜா அனுபவி.
சின்ன தாயவள் தந்த-தளபதி.
உதயா உதயா - உதயா.
ஊரெங்கும் தேடினேன் - தேன் நிலவு.
-
கோ,
எனக்கு ராகங்கள் புரிகிறதோ இல்லையோ! உங்கள் மாயா மாளவ கௌளை, சாருகேசி இந்தத் திரியப் பார்க்கும் ராகங்கள் பற்றிய அறிவு சார்ந்தவர்களை கொள்ளை அடிக்கும் என்பது மட்டும் நிஜம். எதிலும் தரம் வேண்டும் என்று நினைக்கும் நீங்கள் ராகங்கள் விஷயத்தில் மட்டும் விட்டு விடவா போகிறீர்கள்?
கொஞ்ச கொஞ்சமாக நானும் உங்கள் ராகப் பதிவுகளைப் படித்து அவற்றைப் பற்றி ஓரளவேனும் தெரிந்து கொள்ள முயற்சி செய்கிறேன்.
குருவே துணை.
-
ராகவேந்திரன் சார்,
'அக்கா தங்கை' ஆகா! ஆகா! மாறி வரும் சொஸைட்டியில் மாறாத இனிமை தரும் பாடல். இப்பாடலை ஒரு காலத்தில் கடைகடையாக கேசட்டில் பதிவு செய்ய ஏறி இறங்கியிருக்கிறேன். (கடைக்கார நண்பர் இளக்காரமாய் ஒரு பார்வை வீசுவார் பாருங்கள்... 'வந்துட்டான்யா! இல்லாத பாட்டையெல்லாம் கேட்டு உயிரெடுக்க')
இப்பாடலைத் தாங்கள்
அளித்தது பியூட்டி.
இப்பாடலுடன் நாம்
இணைவது டியூட்டி.
ராட்சஸி ரிவால்வார் ரீட்டா இருவரும் இணைந்தால் இனிய சுகம்தான் என்றும்.
-
வினோத் சார்,
இசை மழை தூறத் துவங்கியிருக்கும் 'மதுரகானம்' திரியில் கண்ணியப் பாடகியின் 'மழை பொழிந்து கொண்டே இருக்கும்' பாடல் தங்கள் ரசனையின் பிரதிபலிப்பு. பாராட்டுகிறேன்.
-
எனக்கு இங்கே வொர்க்கிங்க் டே..அங்கே லீவ் தானே.. கேளுங்கள் இந்த கானங்களை..
முத்தம் போதாதே சத்தம் போடாதே
ரத்தம் சூடானதே நாணமே நாணுதே
முத்தம் போதாதே சத்தம் போடாதே
ரத்தம் சூடானதே நாணமே நாணுதே
இதழ் முத்தம் தரும் அதில் பித்தம் வரும்
இதழ் முத்தம் தரும் அதில் பித்தம் வரும்
என்னையே உன்னிலே தேடினேன் அழகே
அப்புறம்..முத்தமிடும் நேரமெப்போஓ நினைவுக்கு வருதோன்னோ.. :)