Any news related to that BM.............?
Printable View
Any news related to that BM.............?
அஜித்-ஷங்கர் கூட்டணி உறுதியானது!
தமிழ் திரையுலகின் பிரம்மாண்டம் என்றால் அது ஷங்கர் தான், இவரிடம் பணிபுரிவதற்கு கோலிவுட் முதல் பாலிவுட் ஹீரோக்கள் வரை தவம் இருக்கிறார்கள்.
அதேபோல் தனக்கென பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர் அஜித், இவர்கள் இருவரும் இணைந்தால் எப்படியிருக்கும்? ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த அந்த கூட்டணி விரைவில் அமையப்போகிறது.
இப்படத்தை ஏ.எம்.ரத்னம் தான் தயாரிக்கயிருக்கிறாராம், இந்த ஒப்பந்தத்தில் அஜித்-ஷங்கர் இருவருமே கையெழுத்திட்டதாக நெருங்கியவட்டாரங்கள் தெரிவிக்கின்றது.
http://www.cineulagam.com/tamil/news....0hPW4Tks.dpuf
UN's brother Mr.Charu Hassan about Thala in Facebook.
இது நான் அதிகம் சந்திக்காத ஒரு பிரபல நடிகர் பற்றியது. அவர் பெயரை சொல்பவர்களே உயர்வாகத்தான் சொல்கிறர்களே தவிர குறைகூறுபவர்கள் இருப்பதாக தெரியவில்லை
. இவருக்கு இவ்வளவா? என்று நினக்கும் என் போன்ற பொறாமை ஆசாமிகள் தவிர....................!
வெகு நாட்களுக்குமுன் நான் மாற்றி மாற்றி நான்கு மொழிகளில் குட்டிக் குட்டி பாத்திரங்களில் நடித்து வந்த போது அவருடன் ஒரு படத்தில் நடித்ததாக ஞாபகம். இருவரும் ஒரே ஊர்தியில் வீடு திரும்பினோம் என்று நினைக்கிறேன். அவர் மறந்திருக்கலாம்.
.
.
.
அந்த பிரபல நடிகர் பற்றி நாளை தொடர்கிறேனே... ஒரு சஸ்பென்ஸ் போர் தவிற்பதர்காக....!
-----------------------------------------------------------------------
முனால் சொன்ன அந்த பிரபல நடிகர் பற்றி
என்னை பலர் உங்களை எங்கேயோ சந்தித்திருக்கிறேனே? கேட்டதுபோல் நானும் ஒருவரை கேட்டேன்..... ஒரு நாள் ஒரு விமான பயணத்தில் செல்ல.......... எற்றுமதி.......... பஸ்ஸில் உட்கார இடமின்று இரண்டு கிழவர்கள் நின்று கொண்டே சென்றோம். ஏதோ காரணத்தால் அந்த விமான-ஏற்றுமதி-பேருந்தும் வெகுநேரம் வழியில் நின்றுவிட்டது.
இன்னொருவர் எனக்கு எங்கேயோ பார்த்த முகமாக தோன்றியதும். பேச ஆரம்பித்தேன்.
என் அறுவைதான் உங்களுக்கு தெரியுமே?
நான் கேட்டேன் .......... நாம் இதற்குமுன் எங்கே சந்தித்திருக்கிறோம்? அவர் .... இல்லை நாம் சந்தித்ததில்லை...!
நான்............. எனக்கு கொஞ்சம் மறதி சார்...!
அவர். உங்களுக்கு மறதி இருப்பதாக நான் நினைக்கவில்லை.உங்களை அடிக்கடி நீங்கள் உங்கள் டாக்டர் வீட்டுக்குள் நூழையும் போது பார்த்திருக்கிறேன். நான் அவருடைய எதிர் வீட்டுக்காரான். நீங்கள் என்னை பார்த்திருக்க மாட்டீர்கள்.
நான்.............. உங்கள் முகம் எங்கோ பார்த்தமாதிரி தெரிகிறதே?
இருக்கலாம் நான் நடிகர் அஜித் குமாரின் தந்தை....: என்று முடித்தார்.
பின்புதான் எனக்கு தெரிந்தது ... தலை யின் நல்லகுணமும் கவர்ச்சியும் எங்கிருந்து வந்திருக்கும் என்று. சில வருடங்களுக்குமுன் என் வக்கீல் நண்பரும் அவர் மனைவியும் ஐரோப்பாவில் ஸ்பெயினிலோ ஃப்ரான்ஸிலோ பர்ஸ் பாச்போர்ட் எல்லாவற்றையும் துலைத்து விட்டவர்களுக்கு இந்திய எம்பெஸியில் உத்திரவாதம் கொடுத்து தற்கால பாஸ்போர்ட் வாங்கித்தந்து 3000 டாலரும் கொடுத்து உதவியிருக்கிறார் அஜீத்@ தலை. அதை திருப்பி கொடுக்கும் முயற்சியில் வக்கீல் அன்னை அணுகினார். .
தற்செயலாக இயக்குனர் மணிரத்தினம் வீட்டில் சந்தித்தபோது அவரிடம் அந்த 3000 டாலர் பற்றி ஞாபகப் படுத்தினேன். அவர் அந்த பணம் பற்றி கவலைப்பட்டதாக தெரியவில்லை.........
நடிகர்களில் இன்னொரு.................. அதாவது என்னைவிட..................நல்லமனிதர். மிஸ்டர் தலை.