1976
http://i68.tinypic.com/2lld5ww.jpg
Printable View
இனிய நண்பர் திரு அக்பர் அவர்களுக்கு
நடிகர் திலகம் திரியில் பதிவிடும் திரு செந்தில்வேல் controversy பதிவுகள் வேண்டுமென்றே பதிவிடுபவர் அல்ல !
நான் வக்காலத்து வாங்குகிறேன் என்று தயவு செய்து நினைக்கவேண்டாம்..அவருடைய பழைய பதிவுகள் எல்லாம் நீங்கள் பார்த்தால் அது நன்கு விளங்கும் !
Due to oversight , இது நிகழ்ந்திருக்க மட்டுமே வாய்ப்பு ...!
தயவு செய்து என்னை போலவே தாங்களும் உணர்ச்சிவசப்படவேண்டாம் என்று மன்றாடி கேட்டுகொள்கிறேன் !
தவறுதலாக பதிவிட்டமைக்கு நான் மன்னிப்பு கேட்டுகொள்கிறேன் !
சிறிது பொறுமை காக்க வேண்டுகிறேன் !
அவரிடம் கூட திரியில் விண்ணப்பித்துள்ளேன் !
மற்ற பதிவு இருக்கட்டும் ..."நிழல் மனைவி" என்று நீங்கள் பதிவு செய்ததை மட்டும் நீக்கிவிடுங்கள் என்று விண்ணப்பிக்கிறேன் !
மற்றவர்களுடைய சொந்த வாழ்கையை பற்றி இருக்கிறதோ இல்லையோ அதனை பற்றி எழுதுவது அநாகரீகம் அல்லவா ?
அதனை மக்கள் திலகம் பக்தர் நீங்கள் செய்யவேண்டுமா ?
"நிழல் மனைவி" பற்றி மற்றவர்களுக்கு எழுததேரியாதா அல்லது அனைவரும் எழுத தொடங்கினால் அதற்க்கு முடிவு இருக்குமா என்று சற்று நினைத்து பாருங்கள் !
ஆகையால் i request your patience ! Kindly Consider !
Rks
அந்த திரியில் ஒருத்தர் சொ,ல்றது போல நல்லிணக்கம் தேவைதான். அது இருவழிப்பாதையாகத்தான் இருக்க வேண்டும். நாங்கள் மட்டுமே அப்படி சொல்லிக் கொண்டிருக்கா கூடாாது. ஒவ்வொரு வாட்டியும் எங்களை முதலில் தாக்குவது நீங்கள்தான். கொஞ்சமாவது மக்கள் திலகம் மேல் நல்ல எண்ணம் இருந்தால் சில படங்களின் தோல்வியால் எம்ஜியார் கதிகலங்கி போய் இருக்கிறார் என்றெல்லாம் பத்திரிகையில் வந்ததை போடுவார்களா? அவரது படங்கள் என்றுமே வசூலில் தோல்வி கிடையாது. அப்பிடி என்ன எங்கள் தெய்வம் மீது பொறாமய்? காழ்புணர்ச்சி? பத்திரிகையில் வந்ததை எல்லாம் நாங்களும் போடட்டுமா? உங்கள் நடிகரை சொன்னால் மட்டும் தமிழ் உணர்வு இல்லை. புரட்சித் தலைவரை சொன்னால் அது தமிழ் உணர்வா?
ந்ல்லிணக்கம் பேசும் பெரிய மனிதர் முதலில் தங்கள் நண்பர்களுக்கு நல்லிணக்கம் பத்தி பாடம் சொல்லட்டும்.நடிகை ரத்னமாலாவுடன் ஒரு நடிகருக்கு இருந்த தொடர்பு அவர் குடும்பம் மட்டுமின்றி அனைவரும் அறிந்த ஒன்றுதான் என்று அந்த பெரிய மனிதர் ஒப்புக் கொண்டிருக்கார். நன்றி. அடுத்தவங்க படுக்கையறையில் எட்டி பார்ப்பது அநாகீரீகம். அந்த அசிங்கம் எங்களுக்கு தேவை கிடையாது. இனிமேல்பட்டாவது, இரட்டை வாழ்க்கை, காமிராக்கு வெளியே நடிக்கத் தெரியாதுண்ணு நேரடியாவோ, மறைமுகமாவோ, திரையுலக, அரசியலில் மக்கள் திலகத்தை தாக்காதீங்க. தோண்டினா எல்லாருக்கும் நாறும். நிழல் மனைவி பதவை எடுத்தாச்சு. எங்கள் தலைவரைப் பற்றி நீங்க புதுசா சொல்ல ஒண்ணும் இல்லை. அரசியல் குள்ளநரிகள் சொல்லாதையா நீங்க சொல்லப்போறீங்க? ஆனால், நல்லிணக்கம் வேணும் என்று நீங்க சொல்றதை முதலில் கடைபிடிங்க.
உலக சாதனையாளர் நம் இதயதெய்வம் மக்கள் திலகம் - புரட்சித்தலைவர்
http://s1.postimg.org/gpqs605db/scan0004.jpg
COURTESY : KUMUDHAM - WEEKLY
16-6-2013 -ல் நடந்த சென்னையில் உரிமைக்குரல் பத்திரிகை சார்பில் நடந்த விழாவில் சாவித்திரி மகள் விஜய சாமுண்டீஸ்வரியும் ஜெமினி மகள் கமலா செல்வராஜ் கலந்து கொண்டு பேசியது. கலியபெருமாள் அவர்கள் போட்ட பதிவு.
http://i63.tinypic.com/11mfcc4.jpg
விழாவிற்கு சிறப்பு விருந்தினர்களாக வந்திருந்த திருமதி விஜய சாமுண்டீஸ்வரி மற்றும் கமலா செல்வராஜ் பேசும்போது " திரு. எம்ஜிஆர் அவர்கள் எங்கள் குடும்பத்திற்கு நிறைய உதவிகள் செய்திருக்கிறார்..என் தங்கைக்கு எம்.பி.பி.எஸ் சீட் கொடுத்திருக்கிறார். நாங்கள் கஷ்டப்படும்போது நிறைய உதவிகள் செய்த தெய்வம் அவர் ..மேலும் நாங்கள் எம்ஜிஆர் அவர்களின் தீவிர ரசிகைகள்..எம்ஜிஆர் படம் வந்ததும் நாங்கள் எங்கள் அம்மாவிடம் சொல்லி முதல் காட்சியிலேயே பார்த்துவிடுவோம்..அவர் படங்களை பார்த்தாலே அப்படி ஒரு பரவசம் ஏற்படும். நாங்கள் அதிகமாய் மேடை ஏறியதில்லை..தலைவர் விழா என்பதால்தான் வந்தோம் என்றார்கள்..அவர்கள் பேசும்போது கூட்டத்தினர் உணர்ச்சி வசப்பட்டனர்..ஏன் என்றால்..திருமதி சாவித்திரி அவர்கள் நடித்துகொண்டிருந்தபோது அவருடன் நடித்த நடிகர்கள், அவருக்கு கஷ்டம் வந்தபோது கண்டுகொள்ளவில்லை..மேலும் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பில் கட்ட பணம் இல்லாதபோதும், அவர் இறக்கும் தருவாயில் கூட அவருக்கு எந்த உதவியும் செய்யவில்லை..ஆனால் நமது இதய தெய்வம் அவர்களோ திருமதி சாவித்திரி அவர்கள் 'அண்ணா ரொம்ப கஷ்டப்படுகிறேன்' என்று சொன்னதும்..அவருக்கு பண உதவி செய்ததுமட்டுமில்லாமல், அவர் மருத்துவமனை பில்லையும் கட்டி அவர் இறக்கும் வரை அவருக்கு உதவிகள் செய்தார்..இத்தனைக்கும் திருமதி சாவித்திரியுடன் அவர்களுடன் 3 படங்களே நடித்தும், உதவி என்று கேட்டதும் உடனே செய்தார் நமது தெய்வம்..ஈடிணை இல்லா கண்கண்ட தெய்வம்...
பெற்றால்தான் பிள்ளையா - 100வது நாள் விழாவில் புரட்சித்தலைவர் மற்றும் மக்கள் கலைஞ்சர். இந்த படம் நூற் நாட்கள் ஓடவில்லை என்று முன்பு மையத்தில் ஒரு சிலர் பதிவு செய்தனர். இந்த பதிவு அவர்களுக்கு சமர்ப்பணம்.
http://i67.tinypic.com/28gqlwx.jpg