சிவாஜி என்ற எழுத்தில் உள்ள ஜ எவ்வளவு மகிமை என்பது நன்கு தெரிகிறது... ஜோ, ஜீவ், ஜே - ராதாகிருஷ்ணன் ... எப்படியாவது அவர் நம்முள் ஆட்டிப்படைக்கிறார் என்பதற்கு இது ஒரு சான்று.
வருக ராதாகிருஷ்ணன் அவர்களே... தங்களுடைய மேலான பதிவுகளுக்கும் கருத்துக்களுக்கும் எங்களின் ஆவலான எதிர்பார்ப்புகள்...
நம் திரியின் நாயகர்கள் முரளி, பம்மலார் இருவரும் அள்ளித் தரும் புள்ளிவிவரப் புதையலில் அனைத்தையும் எடுத்துக்கொண்டாலும் இன்னும் கேட்கும் அளவிற்கு சாதனைகள் புரிந்திருக்கும் நடிகர் திலகத்தின் அன்பு உள்ளங்கள் சார்பாகவும் தனிப்பட்ட முறையிலும் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்.
சகோதரி சாரதா, சொர்க்கம் முதல் நாள் முதல் காட்சியில் தேவி பாரடைஸில் என்ன மன நிலையிலிருந்தோமோ அதே மன நிலையில் தான் என்னைப் போல் ஒருவன் காட்சியிலும்.. நீங்கள் சொன்னது சரி. அந்தப் பேரானந்தக் கடலிலே நானும் ஒரு துளியாக அன்றிருந்தேன். அந்த நினைவுக்கு என்னை அழைத்துச் சென்றதற்கு நன்றிகள் பல. இதுபோல் பல நினைவுகள் அவ்வப்போது வரும் அவ்வப்போது அவற்றைப் பகிர்ந்து கொள்கிறேன்.
அன்புடன்
ராகவேந்திரன்