அவள் யார் திரைப்படத்தில் அன்று நீதிபதி சதாசிவம் திரையில் தோன்றினார். அது இன்று பலித்து விட்டது. இன்றைய உச்ச நீதி மன்ற நீதியரசர் பெயர் சதாசிவம் ... இது இயற்கையின் விந்தையல்லவா
அவள் யார் திரைப்படத்தில் அன்று நீதிபதி சதாசிவம் திரையில் தோன்றினார். அது இன்று பலித்து விட்டது. இன்றைய உச்ச நீதி மன்ற நீதியரசர் பெயர் சதாசிவம் ... இது இயற்கையின் விந்தையல்லவா
அவள் யார்
நடிக நடிகையர்
நடிகர் திலகம் சிவாஜி கணேசன், பண்டரி பாய், எஸ்.வி.சஹஸ்ரநாமம், சௌகார் ஜானகி, டி.கே.ராமச்சந்திரன், மற்றும் பலர்
தயாரிப்பு, இயக்கம் - சுதர்ஸனம் பிக்சரஸ், கே.ஜே. மகாதேவன்
இசை - எஸ்.ராஜேஸ்வர ராவ்
வசனம் பாடல்கள் - வித்வான் வே. லக்ஷ்மணன்
தெலுங்கில் பதி கௌரவமே சதிக்கானந்தமு என மொழி மாற்றம் செய்யப் பட்ட்து.
அடுத்த மிகப் பெரிய காவியத்திற்குப் போகும் முன் 1959ம் ஆண்டு நடிகர் திலகத்தின் சிறப்புத் தோற்றத்தில் வெளிவந்த இரு படங்களைப் பார்ப்போம் ..
1. தாயைப் போல பிள்ளை, நூலைப் போல சேலை
2. குழந்தைகள் கண்ட குடியரசு
Sivaji Ganesan Filmography Series
Guest Roles
Thaayai Pola Pillai Noolai Pola Selai தாயைப் போல பிள்ளை நூலைப் போல சேலை
தணிக்கை – 07.04.1959
வெளியான தேதி – 14.04.1959
தயாரிப்பு – ஸ்ரீ லக்ஷ்மி பிக்சர்ஸ் நிறுவனத்துக்காக, வி.கே. ராமசாமி மற்றும் ஏ.பி.நாகராஜன்
இயக்கம் – கே. சோமு
ஒளிப்பதிவு – வி.கே. கோபண்ணா
கதை வசனம் – ஏ.பி. நாகராஜன்
இசை – கே.வி. மகாதேவன்
பாடல்கள் – அ. மருதகாசி
கலை – சி.ஈ. பிரசாத் ராவ்
எடிட்டிங் – விஜய ரங்கம், கே.துரைராஜ்
நடனம் – சின்னி-சம்பத்
ஸ்டில்ஸ் – ஆர்.வெங்கடாச்சாரி
நடிக நடிகையர் –
ஆர்.எஸ்.மனோகர், பசுபலேடி கண்ணாம்பா, வி.கே.ராமசாமி, எம்.என்.ராஜம், கே.சாரங்கபாணி, சிவகாமி, டி.என்.சிவதாணு, பண்டரிபாய், டி.கே.ராமச்சந்திரன், பத்மினி பிரியதர்ஷினி
இவர்களுடன்
பொற்கைப் பாண்டியனாக சிறப்புத் தோற்றத்தில் நடிகர் திலகம்
பாடல்களுக்கான இணைப்பு
1. சின்ன மீனைப் போட்டுத் தான் – கே.ஜமுனா ராணி
2. காரியத்தில் கண்ணா இருக்கணும் – கே.ஜமுனா ராணி
3. விலை மதிப்பில்லா அரும்பொருள் – பி.லீலா
http://www.inbaminge.com/t/t/Thayai%...0Pola%20Selai/
நல்ல குடும்பம் – ஆர். பாலசரஸ்வதி
http://music.cooltoad.com/music/song...e85e5c8ed298b4
Sivaji Ganesan Filmography Series
Guest Roles
Kuzhandhaigal KaNda Kudiyarasu குழந்தைகள் கண்ட குடியரசு
வெளியான தேதி – 29.07.1959
குழந்தைகள் கண்ட குடியரசு திரைப்படத்தைப் பற்றி நமது பதிவுத் திலகம் வாசு சார் அளித்துள்ள விவரங்களும் நிழற்படமும்
குழந்தைகள் கண்ட குடியரசு திரைப்படத்தைப் பற்றி நமது பதிவுத் திலகம் வாசு அவர்களின் அருமையான கட்டுரைக்கான இணைப்புQuote:
குழந்தைகள் கண்ட குடியரசு.(1960)
தயாரிப்பு: பத்மினி பிக்சர்ஸ்
நடிகர்கள்: சிம்மக் குரலோன், 'ஜாவர்' சீத்தாராமன், பி.ஆர்.பந்துலு, 'குலதெய்வம்' ராஜ கோபால், கே.ஆர். சாரங்கபாணி, மாஸ்டர் கோபி
நடிகைகள்: வழக்கம் போல (பத்மினி பிக்சர்ஸ்) எம்.வி.ராஜம்மா, லட்சுமி ராஜம், பேபி லட்சுமி.
கதை: தாதாமிராசி
வசனம்: விந்தன்
பாடல்கள்: கு.மா. பாலசுப்ரமணியம்
இசை: டி .ஜி.லிங்கப்பா.
ஒளிப்பதிவு டைரக்டர் :W.R.சுப்பாராவ்.
ஒளிப்பதிவு: M .கர்ணன்.
ஒப்பனை : ஹரிபாபு. (நடிகர் திலகத்தை முற்றிலும் மாறுபட்ட தோற்றத்தில் காட்டிய இந்த 'ஹரி' ஒரு 'ஒப்பனை சிங்கம்'.)
http://i1087.photobucket.com/albums/...ps7e39311e.jpg
http://www.mayyam.com/talk/showthrea...=1#post1005697
குழந்தைகள் கண்ட குடியரசு திரைப்படப் பாட்டுப் புத்தகத்தின் பக்கங்கள்.
http://i1146.photobucket.com/albums/...KKKCOVERFW.jpg
http://i1146.photobucket.com/albums/...AGES/KKK01.jpg
http://i1146.photobucket.com/albums/...AGES/KKK02.jpg
http://i1146.photobucket.com/albums/...AGES/KKK03.jpg
http://i1146.photobucket.com/albums/...AGES/KKK04.jpg
http://i1146.photobucket.com/albums/...AGES/KKK05.jpg
http://i1146.photobucket.com/albums/...AGES/KKK06.jpg
http://i1146.photobucket.com/albums/...AGES/KKK07.jpg
Sivaji Ganesan Filmography Series
58.பாகப் பிரிவினை Baga Pirivinai
http://i1110.photobucket.com/albums/...ivaji1-1-1.jpg
தணிக்கை – 13.10.1959
வெளியீடு – 31.10.1959
தெலுங்கில் – கலசி உண்டே கலது சுகம்
மலையாளத்தில் – நிறகுடம்
ஹிந்தியில் - காந்தான்
தயாரிப்பு – சரவணா பிலிம்ஸ்
கதை வசனம் – எம்.எஸ்.சோலைமலை
பாடல்கள் – கவிஞர் கண்ணதாசன், ஏ.மருதகாசி, பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்
நடிக நடிகையர்
நடிகர் திலகம் சிவாஜி கணேசன், நடிகவேள் எம்.ஆர்.ராதா, பி.சரோஜா தேவி, எம்.வி.ராஜம்மா, டி.எஸ்.பாலையா, எஸ்.வி.சுப்பையா, எம்.என்.நம்பியார், எஸ்.ராமராவ், என்.ல்லிதா, சி.கே.சரஸ்வதி, சி.டி.ராஜகாந்தம், எஸ்.ஆர். ஜானகி, பத்மினி பிரியதர்ஷினி, சந்திரா மற்றும் பலர்.
பின்னணி டி.எம்.சௌந்தர்ராஜன், சீர்காழி கோவிந்தராஜன், ஏ.எல்.ராகவன், ஜி.எஸ்.மணி, பி.லீலா, பி.சுசீலா, ஜமுனா ராணி
நடன அமைப்பு – வி.மாதவன், சின்னிலால், சம்பத்
ஒளிப்பதிவு – ஜி.விட்டல் ராவ்
ஒலிப்பதிவு – வி.சி.சேகர் – வசனம், டி.எஸ்.ரங்கசாமி – பாடல்கள், ரீரிக்கார்டிங்
எடிட்டிங் – ஏ.பீம்சிங், உதவி – ஏ.பால்துரைசிங், பி.எஸ்.பிரகாஷ்
பிராஸ்ஸிங் சார்தூல் சிங் சேதி, உதவி – டி.ராமசாமி, மனோஹர் சிங் ரேவட், பி.சோமு, கே.பஞ்சு – ஏவி.எம்.ஸ்டூடியோ
கலை – பி.பி.சௌத்ரி
உடைகள் – பி.ராமகிருஷ்ணன்
மேக்கப் – ஹரிபாபு, ஆர்.ரங்கசாமி, எம்.கஜபதி, ஏ.பெரியசாமி, எம்.கே.சீநிவாசன்
செட்டிங்ஸ் – எஸ்.ரங்கசாமி, எம்.சொக்கலிங்கம்
செட் பிராபர்டீஸ் – சினி கிராப்ட், கிரி மியூஸியம்
ப்ளோர் இன்-சார்ஜ் – சி.சி.அனந்தப்பன், ஆர். நரசிம்ம ராவ், ஜி.மணி அய்யர்
ஸ்டில்ஸ் – ஏ.சிம்மையா
ப்ப்ளிசிடி இன்சார்ஜ் – எம்.செல்லப்பன்
விளம்பர டிசைன்ஸ் – கே.நாகேஸ்வர ராவ்
பத்திரிகை விளம்பரம் – எலிகண்ட் ப்ப்ளிசிடி
புரொடக்ஷன் நிர்வாகம் – பி.எம்.நாச்சிமுத்து
ஸ்டூடியோ – நெப்டியூன் ஸ்டூடியோ லிமிடெட், சென்னை 28.
ஆர் சி ஏ சவுண்ட் சிஸ்டத்தில் ஒலிப்பதிவு செய்யப் பட்டது
உதவி டைரக்ஷன் – ஆர்.திருமலை, ஜி.எஸ்.மகாலிங்கம்
தயாரிப்பு – ஜி.என்.வேலுமணி
இசையமைப்பு – விஸ்வநாதன்-ராம்மூர்த்தி
திரைக்கதை டைரக்ஷன் – ஏ.பீம்சிங்
பாகப்பிரிவினை – விளம்பர நிழற்படங்கள் – உபயம் ஆவணத் திலகம் பம்மலார் அவர்கள்
நன்றி பம்மலார் அவர்களே..Quote:
பொக்கிஷப் புதையல்
காவிய விளம்பரம் மற்றும் விமர்சனம் : தென்னகம் : 1959
http://i1110.photobucket.com/albums/...GEDC4911-1.jpg
பொக்கிஷப் புதையல் : காவிய விமர்சனங்கள்
ஆனந்த விகடன் : 15.11.1959
http://i1110.photobucket.com/albums/...GEDC4919-1.jpg
http://i1110.photobucket.com/albums/...GEDC4920-1.jpg
கல்கி : 15.11.1959
http://i1110.photobucket.com/albums/...GEDC4921-1.jpg
http://i1110.photobucket.com/albums/...GEDC4922-1.jpg
100வது நாள் விளம்பரம் [ஒரு பகுதி மட்டும்] : தினத்தந்தி : 7.2.1960
http://i1110.photobucket.com/albums/...GEDC4916-1.jpg
100வது நாள் விளம்பரம் [மதுரை] : தினத்தந்தி(மதுரை) : 7.2.1960
http://i1110.photobucket.com/albums/...GEDC4917-1.jpg
[இக்காவியத்தின் வெள்ளிவிழா விளம்பரமும், முழுமையான 100வது நாள் விளம்பரமும் கிடைக்கப் பெற்றவுடன் இங்கே பதிவாக இடுகை செய்யப்படும்.]
குறிப்பு:
"பாகப்பிரிவினை"யின் வெள்ளிவிழா மற்றும் 100 நாள் அரங்குகள்:
வெள்ளி விழா கண்ட ஊர் / அரங்கு : 1 / 1
1. மதுரை - சிந்தாமணி (1560 இருக்கைகள்) - 216 நாட்கள்
100 நாட்களுக்கு மேல் ஓடிய ஊர்கள் / அரங்குகள் : 8 / 10
1. சென்னை - சித்ரா (929 இருக்கைகள்) - 125 நாட்கள்
2. சென்னை - கிரெளன் (1017 இருக்கைகள்) - 104 நாட்கள்
3. சென்னை - சயானி (842 இருக்கைகள்) - 104 நாட்கள்
4. மதுரை - சிந்தாமணி (1560 இருக்கைகள்) - 216 நாட்கள்
5. கோவை - ராயல் (1680 இருக்கைகள்) - 118 நாட்கள்
6. நெல்லை - ரத்னா (1064 இருக்கைகள்) - 100 நாட்கள்
7. சேலம் - ஓரியண்டல் (1210 இருக்கைகள்) - 110 நாட்கள்
8. திருச்சி - பிரபாத் (1289 இருக்கைகள்) - 125 நாட்கள்
9. திண்டுக்கல் - என்.வி.ஜி.பி. (1284 இருக்கைகள்) - 110 நாட்கள்
10. ஈரோடு - ஸ்டார் (1097 இருக்கைகள்) - 100 நாட்கள்
சற்றேறக்குறைய, 35 அரங்குகளில் வெளியான பாகப்பிரிவினை, 1 அரங்கில் 31 வாரங்களும், 9 அரங்குகளில் 100 நாட்களும் அதற்கு மேலும், ஏனைய அரங்குகளில் 50 நாட்களும் அதற்கு மேலும் ஓடிய மெகா மகா ஹிட் காவியம்.
பாகப் பிரிவினை திரைப்படத்தை இது வரை பார்க்காதவர்கள் யாரேனும் இருந்தால் அவர்களுக்கு உதவும் பொருட்டு நெடுந்தகட்டின் முகப்புகள்
http://i1146.photobucket.com/albums/...ps504b902b.jpg
http://i1146.photobucket.com/albums/...ps4499bb85.jpg
பாகப் பிரிவினை திரைப்படத்தின் இசைத்தட்டு உறையின் நிழற்படம்
http://s.ecrater.com/stores/47612/48...8bc_47612b.jpg
பிரெஞ்சு மொழியில் வேறோர் இணையதளத்தில் பாகப் பிரிவினை திரைப்படத்தைப் பற்றிய குறிப்புகள்.
இதன் ஆங்கில மொழி பெயர்ப்புQuote:
http://www.fantastikindia.fr/site/IM...apirivinai.jpg
Bagapirivinai (Le partage de l’héritage)
Casting : Sivaji Ganesan, Saroja Devi, M.R.Radha
Réalisateur : A. Bhim Singh
Compositeurs : Viswanathan-Ramamoorthy
Genre : Drame familial
Bagapirivinai est un film rural qui parle de fraternité et de différence. Fraternité car il aborde la double histoire de deux duos de frères sur deux générations. Tout d’abord, il y a deux frères inséparables qui partagent tout, même les enfants, car le jeune frère décide de faire adopter son jeune fils par son grand frère qui ne peut en avoir. Ensuite, il y a les deux garçons de ce jeune frère, dont l’un, adopté par son grand frère, part étudier en ville et l’autre reste au village à cause de son handicap. Ce film aborde aussi la question de la différence car le premier fils du jeune frère perd l’usage d’un bras et cela le prive de beaucoup de choses, en plus de ne pas pouvoir aller étudier en ville comme son jeune frère, et il développe un profond complexe d’infériorité. Bien sûr, l’amour ne tarde pas à le trouver et lui apporter du réconfort.
courtesy: http://www.fantastikindia.fr/site/Annees-50Quote:
http://www.fantastikindia.fr/site/IM...apirivinai.jpg
Bagapirivinai (sharing the inheritance)
Cast: Sivaji Ganesan, Saroja Devi, MRRadha Director: A. Bhim Singh Composers: Viswanathan-Ramamoorthy Genre: Family Drama
Bagapirivinai is a rural film about brotherhood and difference. Brotherhood as it addresses the double story of two pairs of brothers on two generations. First, there are two inseparable brothers who share everything, even the children, because the younger brother decides to take his young son by his older brother who can not have. Then there are the boys of the younger brother, one of which was adopted by his older brother to study in another city and stay in the village because of his disability. The film also addresses the issue of the difference as the first son of the younger brother lost the use of one arm and it deprives him of many things, in addition to not being able to study in the city as his younger brother, and develops a deep inferiority complex. Of course, love does not take long to find and bring him comfort.
பாகப் பிரிவினை திரைப்படத்தின் இயக்குநர் ஏ. பீம்சிங் அவர்களின் நிழற்படம்
http://www.upperstall.com/files/imag...0Bhimsingh.jpg
பாகப் பிரிவினை திரைப்படத்தின் இசையமைப்பாளர்கள் விஸ்வநாதன்-ராமமூர்த்தி அவர்களின் நிழற்படம்
http://media.dinamani.com/2013/04/18...0/C17DMSRM.jpg
பாகப் பிரிவினை திரைப்படத்தின் பாடல்களைக் கேட்க
http://www.raaga.com/channels/tamil/movie/T0000223.html
பாகப் பிரிவினை திரைப்படப் பாடல்களின் காணொளிகள்
ஆனைமுகனே என்று தொடங்கும் பாடல்
http://youtu.be/IWZB-XkYXFU
தாழையாம் பூ முடிச்சு
http://youtu.be/gkhMbyxVKKc
ஏன் பிறந்தாய் மகனே
http://youtu.be/CSD1juEt_eY
தேரோடும் எங்க சீரான .... [ எழுதவும் வேண்டுமா... முரளி சார் சொல்வதாயிற்றே.]
http://youtu.be/AGtutIb5JWQ
மந்தரையின் சோதனையால்
http://youtu.be/yeyGT5xxeXM
ஆட்டம் ஆட்டம்
http://youtu.be/-L_tsHts-eg
தங்கத்திலே ஒரு குறையிருந்தாலும்
http://youtu.be/ywMG5HRCpEs
Bhaga Pirivinai fetched the President's Silver Medal for Regional Awards in Tamil for the year 1959
http://iffi.nic.in/Dff2011/7th_nff/7th_nff_img_2.jpg
http://iffi.nic.in/Dff2011/7th_nff/7th_nff_img_13.jpg
http://iffi.nic.in/Dff2011/7th_nff/7th_nff_img_14.jpg
என்.டி.ராமராவ், சாவித்திரி முதலானோர் நடித்த பாகப் பிரிவினை தெலுங்குப் படமான கலசி உண்டே கலது சுகம் படத்தின் காணொளி
http://youtu.be/oIGgPWk30Dw
சுனில் தத், நூடன் நடித்த காந்தன் ஹிந்திப் படத்தின் காணொளி
http://youtu.be/VD8YwRlFH_c
A rare image from the film Baga Pirivinai
http://i1146.photobucket.com/albums/...ps9ff3ad5b.jpg
.....
மாயக் கோட்டையின் இரும்புத் திரையை உடைத்தெறிந்து தன் சாம்ராஜ்யத்தை நிலைநாட்டிய சக்கரவர்த்தியின் மற்றொரு புதிய சகாப்தத்தைத் தொடங்கிய 60களை வரவேற்கும் உன்னதத் திரைக்காவியம் அடுத்து வெகு விரைவில் இங்கு இடம் பெற உள்ளது. அதனுடன் சேர்ந்து பாகப் பிரிவினை திரைப்படத்தைப் பற்றிய தகவல்களும் அனுபவப் பகிர்வுகளும் தொடரலாம்.
நடிகர் திலகத்தின் நடிப்பை ஒவ்வொரு காட்சியினையும் அணு அணுவாக ரசிக்க வேண்டிய உன்னதத் திரைக்காவியம் இரும்புத் திரை. மிக விரிவாக அலச வேண்டிய பல காட்சிகள் இரும்புத் திரை திரைக்காவியத்தின் மேன்மையை சித்தரிக்கும். அடுத்து நம் திரைப்படப் பட்டியல் தொடரில் இடம் பெற விருக்கும் திரைப்படம் இரும்புத் திரை.
hearty welcome to irumbuthirai. One of the movies i will not forget.
it was released on the same date of relelese in karnataka, small centres like SHIMOGA an indutrial town where we saw the movie release day. what a reception for NT in that centre, we really wondered.i was a school going student may be my affinity started growing that time. it ran more than 3 weeks there, which was unique record that time.
Sivaji Ganesan Filmography Series
59. இரும்புத் திரை THE IRON CURTAIN
https://scontent.fmaa1-1.fna.fbcdn.n...cf&oe=57005A03
A rare still from Irumbuthirai. Courtesy: Ithayakkani Cinema Special.
http://www.hindu.com/thehindu/fr/200...2301510603.jpg
தணிக்கை – 12.01.1960
வெளியீடு – 14.01.1960
தயாரிப்பு – ஜெமினி ஸ்டூடியோஸ்
நடிகர் திலகம் சிவாஜி கணேசன், வைஜயந்தி மாலா, பி.சரோஜா தேவி, கே.ஏ.தங்கவேலு, எஸ்.வி.ரங்கா ராவ், எஸ்.வி.சுப்பய்யா, வசுந்தரா தேவி, டி பாலசுப்ரமணியன், பண்டரி பாய், வனஜா மற்றும் பலர்.
கதை – ஜெமினி கதை இலாகா
வசனம் – கொத்தமங்கலம் சுப்பு
பாடல்கள் – பாபநாசம் சிவன், பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம், கொத்தமங்கலம் சுப்பு
இசை அமைப்பு – எஸ்.வி.வெங்கடராமன்
மேக்கப் – சகாதேவ ராவ் எஸ்.தப்கிரே
ஆடை அலங்காரம் – என்.ஸ்ரீராமுலு
ஒளிப்பதிவு டைரக்டர் – பி.எல்லப்பா
படப்பிடிப்பு – என்.பாலகிருஷ்ணன்
லைட்டிங் – ஆர்.கே.ஜெயராமன்
ஸ்டில் - சோமு
ஒலிப்பதிவு டைரக்டர் – ஸி.ஈ. பிக்ஸ்
ஒலிப்பதிவு – எஸ்.ஸி.காந்தி
ஒலிப்பதிவு – ஆர்சிஏ முறை
படத்தொகுப்பு – எம்.உமாநாத்
பிரதிகள் தயாரிப்பு – ஜெமினி ஸ்டூடியோஸ் லாபரேட்டரி
மேற்பார்வை – கே.வி.ராமன்
உதவி டைரக்டர் – கிட்டப்பா
கோர்வை கவனம் – டி.டி.குமரவேல்
துணை டைரக்டர்கள் – ஸி.ஸ்ரீநிவாசன், சந்துரு
தயாரிப்பு டைரக்ஷன் – எஸ்.எஸ்.வாஸன்
பாடல்களின் பட்டியல்
1. படிப்புக்கொரு கும்பிடு பட்டத்துக்கொரு கும்பிடு
2. என்ன செய்தாலும் எந்தன் துணை நீயே
3. நிக்கட்டுமா போகட்டுமா
4. ஆசை கொண்ட நெஞ்சிரண்டு
5. நெஞ்சில் குடியிருக்கும்
6. கையிலே வாங்கினேன்
7. டப்பா டப்பா டப்பா வாங்குறேன்
8. ஹோ... ஏரைப் பிடிச்சவனும் இங்கிலீசு படிச்சவனும்
9. நன்றி கெட்ட மனிதருக்கு அஞ்சி நிற்க மாட்டோம்
10. மனிதரை மனிதர் சரி நிகர் சமமாய்
இரும்புத் திரை படத்தைப் பற்றி விக்கிபீடியா இணயதளத்தில் இடம் பெற்றுள்ள தகவல்களுக்கு
Wikipedia link: http://en.wikipedia.org/wiki/Irumbu_Thirai
இரும்புத் திரை படப் பாடல்கள்
நெஞ்சில் குடியிருக்கும்
http://youtu.be/7vB8a-2g7jE
என்ன செய்தாலும் எந்தன் துணை நீயே
http://youtu.be/5jzv-GXFxtI
கையிலே வாங்கினேன்
http://youtu.be/UDhOVDUouhc
ஆசை கொண்ட நெஞ்சிரண்டு
http://youtu.be/CPINGX_FcMs
http://www.thehindu.com/multimedia/d...pg_555707f.jpg
இரும்புத்திரை படத்தின் இசையமைப்பாளர் எஸ்.வி.வெங்கட்ராமன் அவர்களைப் பற்றி ஹிந்து நாளிதழில் வெளிவந்துள்ள கட்டுரைக்கான இணைப்பு
Hindu page link: http://www.thehindu.com/features/fri...cle1715085.ece
இரும்புத் திரை - விளம்பர நிழற்படங்கள் ... உபயம் - இதய வேந்தனின் வரலாற்றுச் சுவடுகள்
http://i1146.photobucket.com/albums/...ps06988583.jpg
இரும்புத்திரை (iron curtain )- 1960
எனக்கு சிறு வயதில் கம்யுனிச கோட்பாட்டில் மயக்கம் உண்டு. தொழிலாளர் 19ஆம் நூற்றாண்டில் நடத்த பட்ட விதங்களை படித்தால் தூக்கமே வராது.அடிப்படை உரிமைகளான வேலை நேரம்,குறைந்த பட்ச கூலி,கொத்தடிமை,குழந்தை தொழிலாளர், சம உழைப்பு சம கூலி,அடிப்படை பாதுகாப்பு,தொழிற்சங்கம்,முதலாளி-தொழிலாளி உறவு, கூலி உயர்வு,அடிப்படை உரிமைகளுக்கான தொழிற்சங்க கூட்டு பேச்சு வார்த்தை,வேலை நிறுத்தம் போன்ற உரிமைகளை பெற ,வளர்ச்சி பெற்ற நாடுகளிலேயே பலர் ரத்தம் சிந்தி உலக தொழிலாளர் கூட்டு நிறுவனம்(I .L .O ) உறவான பின்புதான் ,தொழிற்புரட்சியின் சிறிதளவு பலனாவது உழைப்பாளிகளை வந்தடைந்தது. நான் வளர்ந்த நெய்வேலியில் தொழிற்சங்க அமைப்புகள் வலுவானவை. ஆனால் அன்றும் ,நம் நாட்டில் விவசாய தொழிலாளர்கள்,தனியார் நிறுவன தொழிலாளர் நிலை பரிதாபத்துக்கு உரியது. முக்கியமாக ஆலை தொழிலாளர் நிலை.கீழ் வெண்மணி போன்ற நிகழ்வுகள் சர்வ சாதாரணம். நான் முதல் முதலில் இரும்பு திரை பார்த்தது ,எனது அப்பாவின் நண்பர் ஒருவர் சொல்லி, 1971இல். சவாலே சமாளி பார்த்து ஆஹோ ஓஹோ என்று புகழ்ந்து தள்ளி கொண்டிருந்த போது , இதை விட வலுவாக,realistic ஆக பிரச்சினை பேசும் படம் ,இதற்கு மூலம்,அதனால்தான் வாசன் படத்தை போட்டு மல்லியம் மரியாதை செய்தார் என்று சொல்லி,இப்படத்தை பார்க்க தூண்டினார்.அதிர்ஷ்ட வசமாக,சொரத்தூர் ஜோதி என்ற டூரிங் கொட்டாயில் ,இந்த படம் டிசம்பர் 1971இல் வெளியானது.
படம் பார்த்து,அந்த பாதிப்பில் சவாலே சமாளி மோகம் சற்றே குறைந்தது.
மாணிக்கம் ,ரிக்ஷா இழுத்து ,அந்த உழைப்பில்,தொழிற்கல்வி கற்கும் மாணவன். ஜெயந்தி என்ற அம்மாவுடன் தனியாக வாழும் ஏழை பெண்ணுக்கு ஒரு அவசர நேரத்தில் உதவி அறிமுகம் ஆகிறான். ஜெயந்தி பட்டதாரி .மாலதி என்ற பணக்கார ,மில் முதலாளி பெண்ணில் சிபாரிசில் ,அவள் மில்லிலேயே டைபிஸ்ட் ஆக வேலை கிடைக்கிறது. அதே ரங்கநாதா மில்லில் ,மோகன ரங்கம் என்ற முதலாளியின் கீழ் விசுவாசமான தொழிலாளி தான் மாணிக்கத்தின் அண்ணன் சரவணன். அம்மா, மனைவி,பிள்ளை,பெண்ணுடன் வாழ்ந்து வருகிறான்.பெண்ணுக்கு ,நடராசன் என்று ஒரு பையனுடன் நிச்சயம் செய்கிறான்.படிப்பு முடிந்து ஊருக்கு அண்ணனை பார்க்க வந்த மாணிக்கத்தை சரவணன் மில்லுக்கு அழைத்து செல்ல ,மாணிக்கம் ஒரு பெரும் பிரச்சினையை,இறக்குமதி செய்ய அவசியமின்றி ,சுமுகமாக தீர்க்க ,முதலாளி chief mechanic ஆக வேலை போட்டு கொடுக்கிறார். அங்கேயே வேலை செய்யும் ஜெயந்தியுடன் காதல் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும் ஆக வளர்கிறது.முதலாளி மகள் மாலதியும்,மாணிக்கத்தை ஒருதலை பட்சமாக விரும்ப தொடங்குகிறாள்.
தீபாவளி போனஸ் சமயம் பிரச்சினை துவங்குகிறது. மூன்று மாத போனஸ் என்று கையெழுத்து வாங்கி,ஒரு மாத போனஸ் கொடுக்கும் பொது,மாணிக்கம் அதை வாங்க மறுத்து கேள்வி கேட்கிறான். அண்ணனோ ,தம்பிக்கு எதிர் நிலை. முதலாளி விசுவாசத்தில் தம்பியுடன் மோதுகிறான்.இன்னொரு சந்தர்ப் பத்தில் வேலை நேரத்தில் விபத்தில் சிக்கும் தொழிலாளிக்கு நியாயமாக கொடுக்க பட வேண்டிய compensation தர படாமல் முதலாளி சூழ்ச்சி செய்ய மாணிக்கம் வேலை நிறுத்தம் செய்து,தொழிற்சங்கம் ஆரம்பிக்க வேண்டிய நிர்பந்தத்திற்கு தள்ள படுகிறான்.சரவணன் ,மாணிக்கத்தை வீட்டை விட்டு போக சொல்ல,சரணன் பெண் கல்யாணம் தடை பட,மாணிக்கம் உறுதியாக தொழிலாளர் பக்கமே நிற்கிறான்.இடையில்,மாணிக்கம்-ஜெயந்தி காதலிப்பதை அறிந்து,மாலதி ஜெயந்தியை வேலையை விட்டு நீக்குகிறாள். மோகன ரங்கம் மில்லுக்கு அருகிலேயே ஒரு மளிகை கடையும் நடத்தி கலப்பட வியாபாரம் செய்கிறார்.இடையில் முதலாளியை தற்செயலாக சந்திக்கும் ஜெயந்தியின் அம்மா தன்னை ஏமாற்றி விட்டு போன காதலன்தான் மோகன ரங்கம் என்று அறிந்து,ஊரை விட்டு போக முயன்று வழியில் உயிர் பிரிகிறது. தன தகப்பனே மில் முதலாளி என்று அறிந்து ,வீட்டுக்கு சென்று அவருடன் மோத ,மோகன ரங்கம் சூழ்ச்சியை அறிந்து ,ஜெயந்தி கோபத்துடன் மில்லை கொளுத்த முயல,மாணிக்கம் அங்கு வந்து தீ பந்தத்தை கையில் வாங்கி ,பழியை ஏற்கிறான்.
இறுதியாக,முதலாளியின் கோர முகத்தை அறியும் சரவணன் மனம் மாற, ஜெயந்தி தன் சகோதரி என்று தெரிந்து மாலதி மனம் மாற,நீதி மன்றத்தில் உண்மை தெரிந்து மாணிக்கம் விடுதலை யாகிறான்.முதலாளி-தொழிலாளி உறவு சீர்படுகிறது.
இரும்பு திரை 1960 இல் ஜெமினி நிறுவனம் தயாரித்து வெளி வந்த படம்.Stanislavsky School நடிப்பில் நடிகர் திலகம் கொடி பறந்த பொற்காலம். ஆனால் சிவாஜியை பொறுத்த வரை எந்த வகை நடிப்பாக இருந்தாலும் ,அவரை தவிர யாரையும் கற்பனை செய்து பார்க்க முடியாத அளவு perform செய்து விடுவார்.
ஒரு நல்ல இயக்குனர், வசனகர்த்தா, கூட நடிக்கும் நடிகை/நடிகர்களின் நல்ல பங்களிப்பு இருந்தால் ,நம்மவருக்கு கேட்கவா வேண்டும்?அப்படி ஒரு scope நிறைந்த படம் இரும்புத்திரை.அவருடைய பாத்திர படைப்பிலேயே,மிக கவனம் எடுத்து செதுக்கியிருப்பார்கள்.ஒரு அடக்கமான,உதவும் தன்மை நிறைந்த ,சுயமாய் தன்னை உருவாக்கி கொள்ளும் ஒரு கீழ் மத்திய வகுப்பை சார்ந்தவர். பிரச்சினைகளை ஆழமாக ஆராய்ந்து ,யாருக்கும் பாதிப்பில்லாமல் தீர்க்க நினைக்கும் லட்சிய-யதார்த்த வாதி.உறவுகளை,நட்பை அது சார்ந்த பிரச்சினைகளை மென்மையாய் அணுகும் ஒரு இதமான பிள்ளை/சகோதரன்/காதலன்/நண்பன்.இதை உள்வாங்கி நடிகர் திலகம் நடிக்கும் பாங்கு இருக்கிறதே அடடா!! என்னவென்று சொல்ல!!??
ஆரம்ப காட்சியிலேயே ,வைஜயந்தி மாலா அம்மாவின் உடல் நிலைக்காக ,ரிக்ஷா தேடும் போது , உதவி செய்து(பண உதவியும்தான்) அறிமுகம் ஆவதிலிருந்து அவர் கொடிதான்.அண்ணன் ,முதலாளியுடன் அறிமுக படுத்த அழைத்து செல்லும் போது ,ஒரு முக்கிய யந்திரம் பழுதாகி விட,அதை ஒரு சவாலாக எடுத்து சரி செய்யும் காட்சியில் வசனங்கள், அத்தனை ஆழம்.ஒரு கிண்டல் தொனியிலோ அல்லது சவால் விடும் தொனியிலோ யாரையும் புண் படுத்தாமல் , நம்பிக்கை விதைத்து எதிராளிகளையும் தன மேல் நம்பிக்கை கொள்ள செய்வார்.அந்த gearwheel தயாரிப்பிலும் , இசை கருவியை கையாளும் போது காட்டும் அதே perfection காட்டுவார்.(ஒரு பொறியாளனாக நானே வியந்த காட்சி).எல்லோரிடமும் அதே மென்மை ,நயம் கொண்டு ஒரு மதிப்போடு நடுத்துவார் தன் நிலை தாழாமல்.
இந்த படத்தில் மிக மிக சிறப்பான காட்சிகள் வைஜயந்தி-சிவாஜி சம்பத்த பட்ட அற்புதமான காட்சிகள்.(இந்த ஜோடி அம்பிகாபதி,தில்லானா மோகனாம்பாள்,புதிய பறவை போன்ற படங்களிலும் சேர்ந்திருந்தால்???)அப்படி ஒரு இழைவு, இசைவு,அனுசரணை,chemistry தமிழ் பட உலகம் சில படங்களில் மட்டுமே கண்டிருக்க கூடிய அதிசயம். முதலில் அவர்களின் சோலை சந்திப்பில்,நயமான கிண்டலுடன்(தனக்கு புல்லாங்குழல் வாசிக்க தெரியாதது போல்) காதல் அரும்புவதாகட்டும்,தனது சிறு வயது infatuation அனுபவத்தை ரசித்து சொல்வதில் ஆகட்டும்(வைஜயந்தியின் reaction பத்மினியை தூக்கி சாப்பிட்டு விடும்),கண்ணில் குடியிருக்கும் பாடல் ----ஆஹாஹா துளிக்கூட காமம்,விரசம் இன்றி காதலை இப்படி ஒரு ரசனையான அனுபவம் ஆக்க முடியும் என்று ரசவாதம் புரிவார்கள் சிவாஜியும்,வைஜயந்தியும்.
சரோஜா தேவி,தன ஒரு தலை காதலை சொல்ல வலிய பேச்சு கொடுக்கும் போது ,அவரை புண் படுத்தாமல், நயமாக,நாகரிகமாக பதில் பேசி, இடையில் வரும் வைஜயந்தியிடன் எரிந்து விழும் நயம்.(பிறகு அவரிடம் வேவு பார்க்கத்தானே வந்தே என்ற சீண்டல்).இப்படி ஒரு மறுப்பை,எதிர் நிலையை நயமாக வெளியிடும் அழகு .... என்ன சொல்ல?முதலாளியிடம் பேசும் முறையிலும் ,அந்த மதிப்பை குறைக்காமல்,பிரச்சினையை நயமாக உரைத்து,அதை தீர்ப்பதிலேயே கவனம் காட்டுவாரே அன்றி ,எடுத்தேன் கவிழ்த்தேன் பாணியில் பேசவே மாட்டார். இந்த காட்சிகளில் சிறிய எதிர்ப்பை உடல் மொழியில்,எதிராளி மனம் புண் படாமல் காட்டும் நயம் அத்தனை மெருகோடு இருக்கும்.பின்னொரு காட்சியில், இழப்பீடு வாங்க தங்கவேல் செய்த மோசடியை தான் ஒப்பு கொள்ளவில்லை என்பதை உணர்த்தி ,அவரை இடிக்காமல் ,சரியான பாதைக்கு திருப்புவார்.ஒரே ஒரு இடத்தில்தான் தன்னை மறந்து உணர்ச்சி வச படுவார். அண்ணன் பெண் திருமணம் பிரச்சினையில் உள்ள போது .(அப்போதும் ஒரு நம்பிக்கை தொனிக்கும்)
தான் சிறையிலிருக்கும் போது ,அன்னையின் சவ ஊர்வலம் போகும் போது , தன துக்கத்தை மிக மிதமாக,அமைதியாக வெளியிடுவார்.(இந்த மேதை ,துக்கத்தை கூட, பாத்திர தன்மையறிந்து,சந்தர்ப்ப சூழ்நிலை அறிந்து ,பல விதங்களாக,பல படங்களில் ,வித,விதமாக நடித்து காட்டியுள்ளார்.பொத்தாம் பொதுவாக ஒரே விதமாக நடித்த சராசரிகளின் மேல் நமக்கு ஈர்ப்பு உண்டாகாமல் இருக்க, இந்த மேதைதான் முழு காரணம்)
இந்த மாணிக்கம், வைரத்தை விட அதிகமாக ஒளி வீசுவதில் ,என்ன ஆச்சர்யம்?
இரும்பு திரையில் வைஜயந்தி மாலா ,தன் பங்கை செம்மையாய் செய்து ,நடிகர்திலகத்துக்கு ஈடு கொடுத்திருப்பார். சரோஜா தேவி, பொறாமை நிறைந்த பணக்கார பெண் பாத்திரத்தை ,உணர்ந்து நடித்திருப்பார். ரங்கா ராவ், சுப்பையா,வசுந்தரா(வைஜயந்தியின் உண்மை தாயும் கூட.),முதலியோர் நல்ல பங்களிப்பை,இந்த படத்திற்கு அளித்திருப்பார்கள்.
கதையை, ஜெமினி கதை இலாகா(மகாதேவன், வேப்பத்தூர் கிட்டு, கொத்தமங்கலம் சுப்பு,வாசன் அடங்கியது),வசனம் கொத்தமங்கலம் சுப்பு(தில்லானா மோகனாம்பாள் மூல கதாசிரியர்).இயக்கம் ஜெமினி அதிபர் இந்தியாவின் "செசில் பி டிமிலி" வாசன் அவர்கள். வசனங்களில் படு இயல்பான கூர்மை இருக்கும். பாத்திரங்கள் இயல்பு மீறாத நடிப்புக்கு வசனங்கள் துணை நிற்கும். முக்கியமாய், இந்திய பொறியாளர்களின் திறமை பற்றி சிவாஜி பேசும் வசனம். சிவாஜி-வைஜயந்தி காதல் காட்சி வசனங்கள். ரங்கா ராவ் உடன் எதிர்-நிலை வசனங்கள்.(வழிகாட்டி திருத்தும் உணர்வுடன் இருக்கும்.முதலாளியை irritate செய்வது போல் வரம்பு மீறாது. positive energy நிறைந்த வசனங்கள்.) வீட்டு பிரச்சினை,போராட்டங்கள் எல்லாமே படு பாந்தமாய் வசனங்களில் ஜொலிக்கும்.
இந்த படத்தில், சீரான விறுவிறுப்பு ,திரைகதையில் இருக்காது. ஆனால் ,ஒரு முக்கிய உலக பிரச்சினை கருவாகும் போது ,தவிக்க முடியாத குறை.
தங்கவேலு விற்கு நான்கு பாடல்கள். அவர் நகைச்சுவையும்,கல்யாண பரிசு,அறிவாளி தரத்தில் இருக்காது. ஆனால் கதையை ஒட்டிய நகைச்சுவையாய்(தொழிலார்களின் கடன் சுழல்) ,உயர்தரமாய், எதிர்மறை நிலையை விளக்கும்(misuse of compensation law )
பாடல்கள் பட்டத்துகோர் கும்பிடு, என்ன செய்தாலும் எந்தன் துணை நீயே, ஆசை கொண்ட நெஞ்சிரண்டு, நெஞ்சில் குடியிருக்கும் ,கையில வாங்கினேன் ஆகியவை நல்ல முறை கர்நாடக இசையை பின் பற்றியவை.(எஸ்.வீ.வெங்கட்ராமன்)மற்ற பாடல்கள் படு சுமார். எட்டு பாடல்கள் ,ஐந்தாக குறைக்க பட்டிருக்கலாம்.
பொதுவாக ,மிக சரியாக, சார்பின்றி, தொழிலாளர் பிரச்சினை பேசிய இந்த படம் , வெற்றி படம்.(ஆலைகள் நிறைந்த கோவை நகரில் வெள்ளி விழா). ஹிந்தியில் பிரம்மாண்ட வெற்றி.இந்த படத்தில் சிவாஜியின் ஈடுபாட்டையும்,நடிப்பு திறனையும் கண்ணுற்ற திலிப் குமார் ,சிவாஜி ரசிகர் ஆகி, நண்பராகவும் ஆனார்.(இவருக்காக அவர் ஆலய மணியும், அவருக்காக இவர் கங்கா ஜமுனாவும் பண்ணினார் என்று கேள்வி)
வாசன் சிவாஜியின் திறமையறிந்து , அவரின் மிக பிரம்மாண்ட மக்கள் செல்வாக்கு அறிந்து, இதற்கு பின்னும்,மோட்டார் சுந்தரம் பிள்ளை(1966),விளையாட்டு பிள்ளை (1970) என்ற படங்கள் எடுத்ததுடன், சிவாஜி உலகிலேயே சிறந்த நடிகர் என்று பாராட்டி(தில்லானா மோகனாம்பாள்,வியட்நாம் வீடு பார்த்து) ,125 வது விழாவிலும் கலந்து கொண்டார்.
மிக மிக ,உண்மையான பிரச்சினையை எடுத்து, எடுத்து கொண்ட கருவில் விலகாமல், சரியான தீர்வை, சரியான பொழுது போக்கு விகிதத்துடன் தந்த மறக்க முடியாத Nadigar thilagam உன்னத காவியங்களுள் ஒன்று.
இரும்புத் திரை ... மிகவும் அருமையான சரியான திறனாய்வு ... கோபால் சார் ...
எடுத்துக் கொண்ட கருவிலிருந்து விலகாமல், சரியான அளவுகோல் விகிதத்துடன் தந்த மறக்க முடியாத கோபாலின் சிறந்த திறனாய்வுகளில் ஒன்று.
பாராட்டுக்கள்.
Sivaji Ganesan Filmography Series
60. குறவஞ்சி Kuravanji
http://i1146.photobucket.com/albums/...ps496707cf.jpg
http://upload.wikimedia.org/wikipedi.../Kuravanji.jpg
தணிக்கை 29.02.1960
வெளியீடு – 04.03.1960
தெலுங்கில் வீராதி வீருடு
தயாரிப்பு – மேகலா பிக்சர்ஸ்Quote:
கதை வசனம் – மு.கருணாநிதி
நடிகர் திலகம் சிவாஜி கணேசன், சாவித்திரி, மைனாவதி, பண்டரிபாய், ஓ.ஏ.கே. தேவர், குலதெய்வம் ராஜகோபால், ஆர்.பாலசுப்ரமணியம், வகாப் காஷ்மீரி, சுசீலா, ராதாபாய், வனஜா (கௌரவ நடிகை), சி.கே.சரஸ்வதி, மற்றும் பலர்
நடனம் – பத்மினி பிரியதரிசினி, விஜயலட்சுமி, லட்சுமி ராஜம்
பாடல்கள் – கவிஞர் கண்ணதாசன், தஞ்சை ராமையா தாஸ், ரா.கிருஷ்ணமூர்த்தி, மற்றும் மு.கருணாநிதி
குறவஞ்சி நடனப் பாடல்கள் – திரிகூட ராசப்பக் கவிராயரின் குற்றாலக் குறவஞ்சி
இசையமைப்பு – டி.ஆர்.பாப்பா
பின்னணி பாடியோர் – இசைச் சித்தர் சி.எஸ்.ஜெயராம், ராகவன், லீலா, சுசீலா, ஜிக்கி, கோமளா, ரத்னமாலா, ஜமுனாராணி,
நாயன இசை – குழிக்கரை பிச்சையப்பா குழு
நடனம் – தண்டாயுதபாணி பிள்ளை
ஒளிப்பதிவு – ஜி.துரை
இசை ஒலிப்பதிவு – இ.ஐ.ஜீவா
வசன ஒலிப்பதிவு – சேகர் [நெப்டியூன்], துரை [மெஜஸ்டிக்]
அரங்க அமைப்பு – மோகன், மோகன் ஆர்ட்ஸ்
ஆடை அலங்காரம் – எஸ்.நடராஜன்
உடைக்கலை – மணியம்
ஒப்பனை – ரங்கசாமி, ராமசாமி, நாறாயணசாமி, நாகேஸ்வர ராவ்
எடிட்டிங் – ஆ. சாஸ்தா
பிராசஸிங் – சர்தூல் சிங் சேத்தி, ஏவி.எம்.ஸ்டூடியோ லாபெரெட்டரீஸ்
சண்டைக்காட்சிகள் – ஸ்டண்ட் சோமு அண்ட் குழுவினர்
பெயிண்டிங்ஸ் – மாணிக்கம்
செட்டிங்ஸ் – ராயன்
ஸ்டில்ஸ் – நாகராஜ ராவ்
காட்சிப் பொருள்கள் – சினி கிராப்ட்ஸ்
ஆபரணங்கள் – களஞ்சியம் பிரதர்ஸ்
விளம்பர ஓவியம் – ஓவிய மன்னர் கே.மாதவன், ஆரூர் ஜீவன்
தயாரிப்புத் துறை – மாயூரம் சௌந்தர், எஸ்.பிச்சாண்டி
அலுவலகம்-தயாரிப்புத் துறை நிர்வாகம் – பி.எல்.மோகன் ராம்
ஸ்டூடியோ – மெஜஸ்டிக் அண்ட் நெப்டியூன்
ஆர்சிஏ சௌண்ட் சிஸ்டத்தில் ஒலிப்பதிவு செய்யப் பட்டது
டைரக்ஷன் – காசிலிங்கம்
குறவஞ்சி திரைப்படப் பாடல் காட்சிகள்
1. நீ சொல்லாவிடில் யார் சொல்லுவார் நிலவே
http://youtu.be/LPaZhIljwyE
2. உனக்கும் புரியுது எனக்கும் புரியுது
http://youtu.be/V1qO4q_ibE8
3. படியளப்பேனென்று பாராள வந்தவன்
http://youtu.be/8UmxjBdfc_A
4. காதல் கடல் கரையோரமே
http://youtu.be/vDdQaPzAHXI
5. காதல் பொல்லாது காத்திருக்க சொல்லாது
http://youtu.be/KCqMqWF8NKk
குறவஞ்சி திரைப்படத்தின் பாடல்கள் பட்டியல்
1. நீ சொல்லாவிடில் யார் சொல்லுவார் நிலவே - ரா.கிருஷ்ணமூர்த்தி - சி.எஸ்.ஜெயராமன்
2. தொகையறா தண்ணீரில் மீனிருக்கும் - உனக்கும் புரியுது எனக்கும் புரியுது - கண்ணதாசன் - சி.எஸ்.ஜெயராமன், பி.லீலா
3. காதல் பொல்லாது காத்திருக்க சொல்லாது - தஞ்சை ராமையா தாஸ் - பி.சுசீலா
4. செங்கயல் வண்டு கலின் கலின் என்று - திரிகூட ராசப்பக் கவிராயரின் திருக்குற்றாலக் குறவஞ்சி - சி.எஸ்.ஜெயராமன், பி.லீலா, ஏ.பி.கோமளா, ஏ.ஜி.ரத்னமாலா
5. காதல் கடல் கரையோமே - தஞ்சை ராமையா தாஸ் - சி.எஸ்.ஜெயராமன், பி.லீலா, பி.சுசீலா
6. அலை இருக்குது கடலிலே - மு.கருணாநிதி - கே.ஜமுனா ராணி
7. என்னாளும் தண்ணியிலே - தஞ்சை ராமையா தாஸ் - ஏ.எல்.ராகவன், ஜிக்கி
8. படி அளப்பேனென்று - கண்ணதாசன் - சி.எஸ்.ஜெயராமன்
9. அடி அத்தாச்சி நாழி பத்தாச்சி - தஞ்சை ராமையா தாஸ் - ஏ.எல்.ராகவன், ராஜேஸ்வரி
10. ஆலையிட்ட கரும்பாக - கண்ணதாசன் - சிதம்பரம் ஜெயராம்
குறவஞ்சி ... நடிகர் திலகத்தின் முத்திரைப் படங்களில் இதுவும் ஒன்று. கிணற்றுக் கடியில் வறியவனாக நடிக்க வேண்டிய காட்சியில் பழைய துணி இல்லாததால், அங்கிருந்த கோணியை அணிந்து நடித்தார். இப்படத்தில் ஒவ்வொரு காட்சியிலும் தன் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ள நடிகர் திலகம், அரண்மனை தர்பாரில் வழக்காடும் காட்சியில் தமிழ் மொழியின் சிறப்பையும், சாதி மறுப்புத் திருமணத்தின் சிறப்பையும் கலைஞரின் உரையாடலுக்கு உயிர் கொடுத்து நடித்திருப்பார். இந்தக் காட்சியில் நடிகர் திலகம் வழக்காடும் நேர்த்தி, மிகச் சிறந்த வழக்கறிஞராய் வாழ்வில் வரத்துடிப்பவர்களுக்கு நல்லதொரு பாடமாய் அமைந்திருக்கும். இன்னும் சொல்லப் போனால் என் தனிப்பட்ட பார்வையில் பராசக்தி வழக்காடும் காட்சியை விட இது பல மடங்கு சிறப்பாக அமைந்திருக்கும். அதற்கு ஒரு காரணம் இந்த கால இடைவெளி எனலாம். ஒவ்வொரு படத்திலும் தன் நடிப்பில் மெருகேற்றிக் கொண்ட வந்த நடிகர் திலகத்திற்கு இந்தக் காட்சி நல்லதொரு தீனியாய் அமைந்ததும் குறிப்பிடத் தக்கது.
இக்காட்சியைப் பாருங்கள். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற செம்மொழிச் சொற்றொடர் இக்காட்சியிலிருந்து உந்து சக்தியினைப் பெற்றது எனக் கூறலாம்.
http://youtu.be/ZInoSCgG60Q
குறவஞ்சி திரைப்படத்தை இது வரை பார்க்காதவர்களின் தகவலுக்காக
நெடுந்தகட்டின் முகப்பு
http://i1146.photobucket.com/albums/...ps75306d2d.jpg
Watched the movie during college days at Rajalakshmi theatre near Velachery.
Highly watchable movie with unexpected climax.
1960- Kuravanji was expected to make it big as it was the first after NT parted from DMK to team with Mu.Ka but could stand upto expectation. I dont remember it too well as I saw it early 1970.
I remember few sharp witty dialogues by Mu.Ka and few mischievous dialogue delivered by NT.
தெய்வ பிறவி-1960
அதுகாறும் தூய தமிழ் பேசி வந்த (சமயத்தில் பிராமின் மொழி) படங்கள் மக்களை பெற்ற மகாராசி புண்ணியத்தால் வட்டார மொழிக்கு(ஹீரோ மட்டும்தான் வட்டாரம் பேசுவார் ) அறிமுகமாகி பிறகு பேச்சு வழக்குக்கு வந்தது பாக பிரிவினை புண்ணியத்திலும் பிறகு தெய்வ பிறவியிலும் தான்.
புண்ணியத்தை கட்டி கொண்டவர்கள் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன்.(மல்லியம் ராஜகோபால் தன கதை என்று சொன்னதாக ஞாபகம்.பிறகு அவரே
சவாலே சமாளி எடுத்தார்)கருத்து வேற்றுமையில் (vpkb vs sgs) இருந்த சிவாஜி,எஸ்.எஸ்.ஆர்.மாமன் ,மச்சானாக,பத்மினி ஜோடியாக.இந்த வெற்றி காவியம் ஏ.வீ.எம். தயாரித்து கிருஷ்ணன்-பஞ்சு இயக்கத்தில்.ஓரளவு ரியலிசம் என்று சொல்லப்படும் படங்களுக்கு தமிழ் முன்னோடி .நடிப்பில்,கதையமைப்பில் இந்த படமே. சிவாஜியே சரவணன் இடம் ஹிந்தியில் எடுக்காதே ,எங்களை போல் உயிரை கொடுத்து நடிக்க ஆளில்லை என்று கூறிய படம்.பத்மினி கம்போஸ் செய்த பாடல் காட்சி ஹை லைட்.(அன்பாலே)
சுலபமான குடும்ப கதை போல் தோற்றமளிக்கும கஷ்டமான கதையமைப்பு.மினிமம் காரன்டி காக கதையோடு ஒட்டி திணிக்கப்பட்ட நகைச்சுவையை ஒதுக்கினால் விறு விருப்பாக நகரும் கதை.
நடிகர் திலகம் ஒரு கட்டிட மேஸ்திரி , உரிமையாளராக மாறும் உழைப்பாளி,தம்பியுடன் அனாதையாக வாழும் அவர் தன அன்னையுடன்,தம்பியுடன் வாழும் பத்மினி யை கல்யாணம் செய்து மனைவி வீட்டரையும் தன்னோடு வாழ செய்யும் பெருந்தகை.இவர் தம்பியை மனைவியும்,மனைவி தம்பியை இவர் உம அரவணைத்து வாழ ,அப்பாவால் கைவிடப் பட்ட சிற்றன்னை ,அரை தங்கையை தற்செயலாக பார்த்து அடைக்கலம் கொடுத்து ,உண்மையை யாருக்கும் சொல்லாமல் மறைத்து,அதனால் எழும் பிரச்னை,துரோகம்,சந்தேகம்,முக்கோண காதலில் இருவர் தம்பிகள் என சுபமாய் முடியும் படம்.
நடிகர் திலகத்தின் நடிப்பை வர்ணிக்க என்னிடம் தமிழ் இல்லை.தனது சித் தாளை நோட்டமிடும் அழகென்ன,சம்பளம் கொடுக்கும் பொழுது நாசூக்காக சீண்டும் நயமென்ன,பெண்ண கேட்க போகும் போது உள்ள தயக்கம்,பிறகு அமைதியான மனைவி தம்பியை கண்டிக்கும் போது கொதிக்கும் போது ரசிப்பதாகட்டும்,தாம்பத்யம்,பாசம்,நேசம ,கண்டிப்பு எல்லாவற்றிலும் பத்திரந்த்தின் தன்மைகேற்ற படு படு இயல்பாக இருப்பார்.
ஆனால் நடிப்பு கடவுள் வெளிப்படும் நேரம்,சந்தேக நெருடலின் ஆரம்பம்,சொல்ல முடியாத தவிப்பு,இப்படி இருக்காதே என்று உள்ளம் சொன்னாலும் உதடுகள் பாதை தவறி பேசும் காட்சிகள்.கடவுளே,என்னை அடுத்த ஜென்மத்திலும் இந்த நடிப்பு கடவுளின் ரசிகனாகவே படைத்து விடு.சந்தேகம் கொண்டு உதடுகள் பேசும் ஆனால் பார்வை நேசத்தை வெளிப்படுத்தும்.உடல் தடுமாற்றத்தை காட்டும்.பிறகு உதட்டின் குற்றத்திற்காக கண்களும்,உடலும் வருந்தும். எடுத்து கொண்ட பாத்திரத்துக்காக நடிப்பு கடவுளின் முக பாவம்,நடை,வசன உச்சரிப்பு,எல்லாவற்றிலும் அவ்வளுவு இயல்புத்தன்மை.
எந்த கோணத்தில் நின்று அலசினாலும் உன்னத படம். சிவாஜி,எஸ்.எஸ்.ஆர்.,பத்மினி சம்பந்தப்பட்ட உணர்ச்சிமிகு காட்சி ஒன்று மிகவும் பேச பட்டது.
அன்பு கோபால் சார், 'தெய்வப்பிறவி' அலசல் அருமை.
நடிகர்திலகம் - பத்மினி கலக்கலோடு சி.எஸ்.ஜெயராமனின் 'அன்பாலே தேடிய' மட்டுமல்லாது ஜமுனாராணியின் மூன்று முத்தான பாடல்களையும், தங்கவேலுவின் அட்டகாசமான நகைச்சுவையையும் ("ஏம்மா ரேடியோ, இன்னைக்கு என்ன டெலிவிஷன், வயர்லஸ் எல்லாத்தையும் கூட்டிக்கிட்டு வந்துட்டியா?") உள்ளடக்கியது.
'தெய்வப்பிறவி' ஷூட்டிங்கின்போது காட்சிக்கான வசனங்கள் தவிர மற்ற நேரங்களில் நடிகர்திலகமும், எஸ்.எஸ்.ஆரும் பேசிக்கொள்வது கிடையாது. (ஆலயமணியின்போதுதான் நிலைமை சீரானது. அதன்பின் கைகொடுத்த தெய்வம், பச்சைவிளக்கு, பழனி, சாந்தி என்று கலக்கினர்).
தெய்வப்பிறவி படப்பிடிப்பில் நடந்தவற்றை ஒருமுறை பத்மினி தொலைக்காட்சி பேட்டியில் சொல்லியிருந்தார். சிவாஜியும் எஸ்.எஸ்.ஆரும் எதிரெதிரே நின்றாலும் பத்மினிதான் மீடியேட்டர். சிவாஜி பத்மினியிடம் "பப்பி, ராஜுவை இந்த இடத்தில் நிற்கச்சொல்லு. அப்போதான் நான் நடந்துவந்து நிற்பதற்கும் ராஜு வசனத்தை ஆரம்பிக்கவும் சரியாக இருக்கும்" என்பாராம். அதற்கு எஸ்.எஸ்.ஆர். "இல்லே பப்பிம்மா, கணேஷை இந்தப்பக்கமாக வரச்சொல்லுங்கள். இல்லேன்னா அவர் முதுகு மட்டும்தான் கேமராவில் தெரியும். முகம் தெரியாது" என்பாராம்.
அதற்கு பத்மினி, "என்ன இது, ரெண்டுபேரும் ஸ்கூல் பசங்க சண்டைபோட்டுக்கிட்டு பேசுற மாதிரி பேசிக்கிறீங்க" என்று சொல்லி சிரிக்க செட்டில் இருப்பவர்களும் சிரிப்பார்களாம்...
Sivaji Ganesan Filmography Series
61. தெய்வப் பிறவி Deiva Piravi
http://i1110.photobucket.com/albums/...laar/DP2-1.jpg
Produced by: Kamal Brothers at AVM Studios, Madras
Recorded on RCA Sound System
Directed by Krishnan Panju
தயாரிப்பு – கமால் பிரதர்ஸ் பிரைவேட் லிமிடெட்
நடிக நடிகையர்
நடிகர் திலகம் சிவாஜி கணேசன், பத்மினி, எஸ்.எஸ்.ராஜேந்திரன், எம்.என்.ராஜம், கே.ஏ.தங்கவேலு, டி.ஆர்.நடராஜன், கே.சாரங்கபாணி, ஏ.கருணாநிதி, எஸ்.ராமராவ், என்.ல்லிதா, எம்.எஸ்.சுந்தரிபாய் மற்றும் பலர்
கதை வசனம் – கே.எஸ்.கோபால கிருஷ்ணன்
பாடல்கள் – உடுமலை நாராயண கவி, தஞ்சை ராமைய்யா தாஸ், கே.எஸ்.கோபால கிருஷ்ணன், கவி ராஜகோபால்
சங்கீத அமைப்பு – ஆர்.சுதர்சனம், பின்னணி இசை – ஏவி.எம்.வாத்ய கோஷ்டி
பின்னணி பாடியவர்கள் – சிதம்பரம் ஜெயராமன், சீர்காழி கோவிந்தராஜன், டி.எம்.சௌந்தர்ராஜன், எஸ்.சி.கிருஷ்ணன், கே.ஜமுனா ராணி, ஆர்.ராஜலக்ஷ்மி, எல்.ஆர்.ஈஸ்வரி
நடன அமைப்பு – கே.என்.தண்டாயுதபாணி பிள்ளை, ஏ.கே.சோப்ரா, பத்மா
ஒளிப்பதிவு – எஸ்.மாருதி ராவ், ஆபரேடிவ் காமெராமேன் – எம்.புண்ணியகோட்டி
ஒலிப்பதிவு டைரக்டர் – எம்.முகுல் போஸ்
ஒலிப்பதிவு – எஸ்.பி.ராமனாதன்
ஆர்ட் – ஹெச்.சாந்தாராம்
புரோஸஸிங் – சார்தூல் சிங் சேத்தி
எடிட்டிங் – எஸ்.பஞ்சாபி
மேக்கப் – கே.என்.கினி, டி.எம்.ராமச்சந்திரன், டி.தனகோடி, கே.குருசாமி
செட்டிங்ஸ் – எஸ்.ஆறுமுக ஆசாரி, வி.நாகன் ஆசாரி
புரொடக்ஷன் எக்ஸிக்யூடிவ் – எம்.சரவணன்
புரொடக்ஷன் மேனேஜர்கள் – கே.கே.ரத்னம் பிள்ளை, என்.எஸ்.மணி
ஸ்டூடியோ – ஏவி.எம்.ஸ்டூடியோ, சென்னை
உதவி டைரக்ஷன் – ஆர்.பட்டாபிராமன், ஆர்.விட்டல்
டைரக்ஷன் – கிருஷ்ணன் பஞ்சு
கீழ்க்காணும் நிழற்படங்கள் உபயம் ஆவணத் திலகம் பம்மலார்
Quote:
http://i1110.photobucket.com/albums/...laar/DP1-1.jpg
http://i1110.photobucket.com/albums/...laar/DP3-1.jpg
http://i1110.photobucket.com/albums/...laar/DP4-1.jpg
http://i1110.photobucket.com/albums/...laar/DP5-1.jpg
ஷூட்டிங் ஸ்பாட் ஸ்டில் : இயக்குனர்கள் கிருஷ்ணன்-பஞ்சு - பத்மினி - நடிகர் திலகம்
http://i1110.photobucket.com/albums/...laar/DP6-1.jpg
ஆவணத் திலகம் பம்மலாரின் விளம்பர நிழற்படங்கள் மற்றும் தகவல்கள்
Quote:
பொன்னுக்கு மேலான பொக்கிஷங்கள் : முதல் வெளியீட்டு விளம்பரங்கள்
The Mail : 8.4.1960
http://i1110.photobucket.com/albums/...GEDC2627-1.jpg
The Mail : 10.4.1960
http://i1110.photobucket.com/albums/...GEDC2626-1.jpg
The Mail : 5.5.1960
http://i1110.photobucket.com/albums/...GEDC2629-1.jpg
The Mail : 12.5.1960
http://i1110.photobucket.com/albums/...GEDC2628-1.jpg
The Mail : 16.5.1960
http://i1110.photobucket.com/albums/...GEDC2631-1.jpg
The Mail : 19.5.1960
http://i1110.photobucket.com/albums/...GEDC2630-1.jpg
குறிப்பு:
அ. 1960-ம் ஆண்டின் சூப்பர்ஹிட் காவியமான "தெய்வப்பிறவி" 100 நாட்களைக் கடந்த அரங்குகள்:
1. சென்னை - பிளாசா - 121 நாட்கள்
2. சென்னை - பிராட்வே - 107 நாட்கள்
3. சென்னை - ராக்ஸி - 100 நாட்கள்
4. திருச்சி - வெலிங்டன் - 107 நாட்கள்
5. சேலம் - ஓரியண்டல் - 107 நாட்கள்
6. கோவை - ராஜா - 100 நாட்கள்
[100வது நாள் விளம்பரம் கிடைத்தவுடன் பதிவிடுகிறேன்...!]
ஆ. இதர முக்கிய நகரங்களான மதுரையில்[சென்ட்ரல் சினிமா] 79 நாட்களும், நெல்லையில்[ரத்னா] 79 நாட்களும், திண்டுக்கல்லில்[சோலைஹால்] 73 நாட்களும், வேலூரில்[நேஷனல்] 66 நாட்களும், நாகர்கோவிலில்[பயோனீர்பிக்சர்பேலஸ்] 58 நாட்களும், இன்னும் கணிசமான ஊர்களின் அரங்குகளில் 50 நாட்களும் ஓடிய இக்காவியம், 1960-ம் ஆண்டில் பாக்ஸ்-ஆபீஸ் வசூல் சாதனையில் இரண்டாவது இடத்தைப் பிடித்தது. முதல் இடத்தைப் பிடித்த காவியம் கலையுலக மாமேதையின் "படிக்காத மேதை".
தேசீய திரைப்பட விருது 1960 – அகில இந்திய தரச் சான்றிதழ்
http://iffi.nic.in/Dff2011/8th_nff/8...1961_img_0.jpg
http://iffi.nic.in/Dff2011/8th_nff/8...1961_img_1.jpg
http://iffi.nic.in/Dff2011/8th_nff/8...1961_img_2.jpg
http://iffi.nic.in/Dff2011/8th_nff/8...961_img_10.jpg
http://iffi.nic.in/Dff2011/8th_nff/8...961_img_11.jpg