http://www.youtube.com/watch?v=mXBOXRffLqY
Printable View
தற்போது முரசு டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது
மக்கள் திலகத்தின்
தாயைக்காத்த தனயன்
I think the song is Nerungi nerungi which was later used in Netru Indru Nalai.
[SIZE=3]தற்போது (19.05.2013 09.00 p.m.) தமிழகம் ஆண்ட தலைவனின் தாயைகாத்த தனயன் திரைப்படம் முரசு தொலைக்காட்சியில்...தாய் கண்ணம்பாவிடம் தன் காதலி கிடைக்கவில்லை என சோக நடிப்பில் ..இயற்கை நடிப்பில்...பின்னி எடுக்கிறார்...
அரிய புகைப்படங்களை அடுக்கடுக்காய் பதிவு செய்யும் அருமை நண்பர் திரு ஜெய்..அவர்களுக்கும் கிரியேடிவ் வேலை செய்து தலைவரின் படத்துக்கு மெருகூட்டும் திருப்பூர் ரவிச்சந்திரன் அவர்களுக்கும் நன்றி...
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
http://i39.tinypic.com/2im9o7.jpg
மக்கள் திலகத்தின் புகழுக்கு மற்றுமோர் ''வைர கிரீடம்''
நம் பம்மலார் திரு சுவாமிநாதன் அவர்களின் பெட்டகத்திலிருந்து
நம் மக்கள் திலகத்திற்கு '' பருவ இதழ்''
விரைவில் ......
இது வரை பார்த்திராத நம் மக்கள் திலகத்தின் பட விளம்பரங்கள்
ஆவணங்கள்
அரிய செய்திகள்
கோடிக்கணக்கான மக்கள் திலகத்தின் ரசிகர்களுக்கு
விருந்து படைக்கிறார் நம் பம்மலார்
விரைவில் .......
பம்மலாரின் புதிய முயற்சிக்கு மக்கள் திலகத்தின் கோடானு கோடி ரசிகர்களின் ஆதரவு என்றும் தொடரும்
ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.
பிரதீப் பாலு சார்,
வள்ளலின் வரலாறு வெளியாகும் தேதியினைத் தெரிவிக்கவும்.
விஜயலக்ஷ்மி பிலிம்ஸ் திரு. கிருஷ்ணமூர்த்தி அவர்களுடன் எம்ஜியார்.
http://www.oocities.org/vijayalakshmifilms/mgr.jpg
மக்கள் திலகத்தின் நிழற் படங்கள் - அழகிய வண்ண காட்சிகளின் பின்னணியில் மக்கள் திலகத்தின் படங்கள் -அபூர்வ தகவல்கள்
படங்கள் என்று வழங்கிய இனிய நண்பர்கள் திரு கலியபெருமாள்
திரு ஜெய்சங்கர் - திரு ரவிச்சந்திரன் - திரு வாசுதேவன்
அனைவருக்கும் நன்றி .
இனிய நண்பர் திரு கலியபெருமாள் சார்
நீங்கள் குறிப்பிட்டது போல் '' தாயைகாத்த தனயன் ''-1963
படத்தில் மக்கள் திலகம் அவர்கள் தான் ஒரு சிறந்த நடிகர் என்பதை பல இடங்களில் வெகு அழகாக நடித்து இருப்பார் .
காதலியை முதல் பார்வையில் கவரும் விதம்
தாயிடம் தனது காதலை வெளிபடுத்தும் இடம்
ஆவேசமான சண்டை காட்சி - தேவருடன் மோதும் கம்பு சண்டை
புலியிடம் போராடும் காட்சிகளில் வெளிபடுத்தும்
மிரட்சி - ஆவேசம்
காதல் காட்சிகளில் கனி ரசம்
சோகத்தில் இழையோடும் பாடலில் நடிப்பு
நடைமுறை வாழ்க்கையில் ஒரு சராசரி மனிதன் சந்திக்கும்
இயல்பான ஒன்றை மக்கள் திலகம் மிகவும் யதார்த்தமாக
நடித்து வெற்றி காண்கிறார் .
''முத்தமிழ் வித்தகர் ''- மக்கள் திலகம் எம்ஜியார் .
இதற்கு மேலும் தமிழில் ஒரு உயர் வார்த்தையில்லை .
ஜெய் சார்
வள்ளலின் வரலாறு வீடியோ தொகுப்பு விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்று தெரிகிறது .
உரிமைக்குரல்
இதயக்கனி
இரண்டு பத்திரிகைகளின் மக்கள் திலகம் விழா - அடுத்த மாதம்
சென்னையில் நடை பெறுகிறது .
மக்கள் திலகம் மலர் மாலை -2 தமிழ் திரை களஞ்சியம் தயாரிப்பில் உள்ளது .
விரைவில் மக்கள் திலகம் மலர்மாலை - பருவ இதழ் நம் கைகளில் தவழுள்ளது .
சன்லைப் - முரசு - ஜெயா தொலைகாட்சிகளில் தொடர்ந்து மக்கள் திலகத்தின் படங்கள் திரையிடப்படுகிறது .
கோவை - நாடோடிமன்னன் - 2 வது வாரம் .
மதுரையில் ரிக்ஷாக்காரன் - இதயக்கனி ஓடிகொண்டிருக்கிறது .
மக்கள் திலகத்தின் மங்கா புகழ் -
பள்ளி முதல் பல்கலைகழகம் வரை
பார் முழுவதும்
கொண்டாடும் எந்நாளும் திருநாளே
https://www.youtube.com/watch?v=k_5XESuexPo
THAIKU PIN THARAM - 2
http://www.youtube.com/watch?feature=player_embedded&v=yUj5zeXW510
THAIKU PIN THARAM - 3
மே 21-1973
மக்கள் திலகத்தின் அரசியல் வெற்றித்திருநாள்
.http://i44.tinypic.com/f3xdg0.jpg
திண்டுக்கல் இடைத்தேர்தல் மூலம் அண்ணா திமுக என்ற இயக்கத்துக்கு கிடைத்த முதல் வெற்றி .
மக்கள் திலகம் நிறுவிய இயக்கம் 40 ஆண்டுகள் மேலாக இன்றும்
மக்கள் ஆதரவுடன் ஆட்சியில் நீடிப்பது அவரது அரசியல் புகழின் சக்தி நிருபணமாகிறது .
உலக அரசியல் வரலாற்றில் மக்கள் திலகத்தின் பெயர் என்றென்றும் முதன்மை இடத்தில இருப்பது உலகமெங்கும் உள்ள கோடிக்கணக்கான எம்ஜியார் ரசிகர்களுக்கு பெருமை .
http://i41.tinypic.com/15yd8y.jpg
இன்று திரு ராஜீவ் காந்தி அவர்களின் நினைவு தினம்
மக்கள் திலகம் எம்ஜியார்
அவர் திரைப்படத்தில் நடித்த நேரத்திலும் , அரசியலில் பணியாற்றிய நேரத்திலும் திரை உலகைவிட்டு அரசியலில் 1987 வரை வாழ்ந்த நேரத்திலும் , அவர் மறைந்து 25 ஆண்டுகள் கடந்த பின்னரும் இன்றும் ஒரு சிலர் அவரின் புகழை ஏற்று கொள்ளாவிட்டாலும் அவரை மறைமுகமாக தாக்கி வருவது வியப்பாக உள்ளது .
எம்ஜியார் ஒரு சிறந்த நடிகரே இல்லை .
எம்ஜியார் வைத்து படம் எடுத்தவர்கள் நட்டமடைந்தார்கள் .
எம்ஜியார் காமிரா பின்னால் நடிப்பவர் .
எம்ஜியார் பிறரை காயப்படுத்தி மருந்து தடவுவார் .
நேர்மையான அரசியல் இல்லாதவர் .
என்றெல்லாம் மக்கள் திலகத்தை பற்றி [அ ] நாகரீகமாகவும் -
பதிவிடும் நண்பர்களின் மன நிலையினை என்னவென்று சொல்லுவது .அதுவும் மிகவும் அறிவாளி -படிப்பாளி - நாலும் தெரிந்தவன் -இலக்கியவாதி - என்றெல்லாம் சொல்லபடும் நண்பர்கள் தரம் தாழ்ந்து விமர்சனம் செய்வது அவர்களது ''இயலாமை- அறியாமை - புரியாமை - நமக்கு தெளிவாக புரிகிறது .
அன்றும் - இன்றும் -என்றும்
மக்கள் திலகத்தின்
மக்கள் சக்தி
திரை உலக சாதனை
அரசியல் வெற்றி
ரசிகர்களின் பேராதரவு
என்னவென்று வரலாறு பதிவிட்டு கொண்டுதான் வருகிறது .
நண்பர்களின் உள்மனது நம் மக்கள் திலகத்தின் நினைவுகள்
பற்றியே சிந்தித்து கொண்டு வருவதே -ஒரு பெரிய வெற்றி .
எம்ஜியார் அவர்கள் குறை கூறும் நண்பர்கள் உள்ளத்திலும் குடியிருப்பது''குடியிருந்த கோயில் '' சாதனையே.
esvee ஸார்,
தங்களின் உணர்வுகளையும் கருத்தையும் நானும் பகிர்ந்து கொள்கிறேன்.
எது எப்படியோ, தமிழ்த் திரையில் யார் முதலிடத்தில் இருந்தார்,
அரசியலில் யார் வெற்றி பெற்று உச்ச நிலை தொட்டார் என்பது வரலாறு.
கண்ணாடி வீட்டில் இருந்து கல் எறிவோர்கள் வரலாற்றை மறந்து/மறைத்து கண்ணை மூடிக் கொண்டு உண்மை இல்லாதவைகளை சொல்கின்றனர். எம்ஜிஆர் என்ற மூன்று எழுத்து மந்திரம் என்றுமே வெற்றி மந்திரம்.
மதிப்பிற்குரிய சாரதா அவர்களின் இணயதளத்தில் கண்ட அற்புதமான பதிவு - மக்கள் திலகத்தின் பாடல் .
நன்றி திருமதி சாரதா அவர்களே .
மெல்லிசை மன்னரின் மனத்தை மயக்கும் இசையில் டி.எம்.எஸ் மற்றும் எல்.ஆர்.ஈஸ்வரி இணைந்து பாடிய ஏராளமான பாடல்கள் என்றென்றும் நம் மனத்தில் உறந்து, நிறைந்து நிற்கின்றன........
'மின்மினியை கண்மையாய் கொண்டவளை'
'முத்துக்குளிக்க வாரீகளா'
'சொர்க்கம் பக்கத்தில்'
'நினைத்ததை நடத்தியே முடிப்பவன்'
;துள்ளுவதோ இளமை'
'நாம் ஒருவரை ஒருவர் சந்திப்போம் என'
இப்படியே அடுக்க்கிக்கொண்டே போகலாம். மிக நீண்ட பட்டியல் அது.
அந்த வரிசையில் அவர்கள் இருவரும் மெல்லிசை மன்னர் மற்றும் 'கவியரசர்' கண்ணதாசன் உழைப்பில் கலக்கிய பாடல்தான் இது. கதாநாயகியான ஜெயலலிதா இருக்க, இன்னொரு கதாநாயகியான 'வெண்ணிற ஆடை' நிர்மலாவுடன் எம்.ஜி.ஆர். நடித்த அருமையான டூயட் பாடல்.
வயலினில் நீண்ட முன்னிசையுடன் (pre-lude) துவங்கி, ஃப்ளுட் பிட்டுடன் முன்னிசை முடிய, ஈஸ்வரியின் குரலில் பஞ்சமத்தில் துவங்கும் பல்லவி..., தாளத்துக்கு பாங்கோஸ்...
கண்ணில் தெரிகின்ற வானம் கைகளில் வராதோ
துள்ளித்திரிகின்ற மேகம் தொட்டுத்தழுவாதோ
(உடன் ‘பாங்கோஸ்‘ நடையில் ஒரு மாற்றம்)
கட்டியணைக்கின்ற மேனி கட்டளை கொள்ளாதோ
கட்டியணைக்கின்ற மேனி கட்டளை கொள்ளாதோ
(இதே தாளக்கட்டுத்தான் பின்னர் டி.எம்.எஸ். 'செங்கனி மங்கையின் மீது செவ்வரி வண்டாடும்' என்ற வரிகளில் ஒலிக்கும்)
பல்லவி முடிந்து இடையிசையில் (inter-lude) ட்ரம்பெட்டில் நீண்ட ஒரு நடை (கிட்டத்தட்ட இடையிசை முழுக்க) , கூடவே பாங்கோஸ் அணைப்புடன் ட்ரம்ஸில் பிரஷ் கொண்டு ஸ்ட்ரோக், ட்ரம்பெட் ஆதிக்கம் முடிந்து சின்ன ஆர்மோனிய பிட்டுடன் இடையிசை முடிய, சரணத்தில் டி.எம்.எஸ்...
பொன்னழகு பெண் முகத்தில்
கண் விழுந்தால் என்னாகும்
(ஒவ்வொரு வார்த்தையின் முடிவிலும் ட்ரம்பெட் டச், பின்னர் தாளக்கட்டு அடங்க)
பொன்னாகும் பூவாகும் தள்ளாடும்
(அருமையான பாங்கோஸின் வேகத்துடன்)
செங்கனி மங்கையின்மீது
செவ்வரி வண்டாடும்
செங்கனி மங்கையின்மீது
செவ்வரி வண்டாடும்
(தொடர்ந்து தபேலாவுடன் ஈஸ்வரி மற்றும் டி.எம்.எஸ்...)
சிவந்த மலர்கள் சிரிக்கும் அழகில் எதனை எடுத்து செல்லும்
தொடுக்கும் கரங்கள் துடிக்க துடிக்க எடுத்து முடிக்கச் சொல்லும்
மலர் கிள்ளலாம்.. கையில் அள்ளலாம்..
கதை சொல்லலாம்... வண்ணக் கண்ணமெல்லாம்...
இன்னும் என்ன வந்து விடு
சொல்லி விடு சொல்லி விடு
செங்கனி மங்கையின்மீது
செவ்வரி வண்டாடும்
செங்கனி மங்கையின்மீது
செவ்வரி வண்டாடும்
இடையிசை முழுக்க ஃப்ளூட்டில் பயணித்து, பின்னர் ஆர்மோனியத்தில் முடிய
அப்படியே பாங்கோஸ் சட்டென்று அடங்கி, தபேலாவுடன் ஈஸ்வரி மற்றும் டி.எம்.எஸ். குரல்களில்...
அருவி விழுந்து நதியில் நடந்து கடலில் கலந்ததென்ன
பருவம் அளந்து மடியில் விழுந்து பழகும் கதைகள் சொல்ல
நதி வந்தது... கடல் கொண்டது...
சுவை கண்டது... என்ன சொந்தமிது....
கொஞ்ச வரும் வஞ்சியரின் நெஞ்சமிது...
(உடன் பஞ்சமத்தில் ஈஸ்வரி...)
ஆடவந்தேன் மேடையிலே
ஆடிவிட்டேன் உன்மனதில்
ஆடுவதை காண வந்தேன்
ஆடவைத்தேன் உன்மனதை
(இருவரும் சேர்ந்து)
கண்ணில் தெரிகின்ற வானம் கைகளில் வராதோ
துள்ளித்திரிகின்ற மேகம் தொட்டுத்தழுவாதோ
(உடன் பண்க்கோஸ் நடையில் ஒரு மாற்றம்)
கட்டியணைக்கின்ற மேனி கட்டளை கொள்ளாதோ
கட்டியணைக்கின்ற மேனி கட்டளை கொள்ளாதோ
'மெல்லிசை மாமன்னர்' எம்.எஸ்.விஸ்வநாதன்
'கவியரசர்' கண்ணதாசன்
'குரல் வித்தகர்' டி.எம்.சௌந்தர்ராஜன்
'துள்ளலிசைப்பாடகி' எல்.ஆர்.ஈஸ்வரி
ஆகியோர் இணைந்து உருவாக்கிய அற்புதப் பாடல்.
1968 ல் உருவானது. அதே சமயம் நாளைய தலைமுறைக்கும் இளமையோடு இருக்கும் பாடல்.
http://youtu.be/WEPgXGH6j9w
திரு. வினோத் சார்
தலைவரின் சாதனைகள், கொடைத்தன்மை, இயற்கை, உற்சாகம் மற்றும் வீரம் கலந்த நடிப்பு, பகைவருக்கும் அருளும் குணம் இவை அனைத்தும் யாவரும் அறிந்தவையே...உலகில் 75 சதவீதம் நல்லவர்கள் இருந்தால் அதில் 25 சதவீதம் தீயவர்கள் இருந்தே தீர வேண்டும்..அதுதான் உலக நியதி..அந்த தீயவர்கள் உலகத்தை மாசு படுத்தும் புல்லுருவிகள்..அவர்கள் சொல்வதையெல்லாம் இந்த உலகம் கேட்காது..அவர்கள் தலைவரின் மங்கா புகழின் மேல் உள்ள பொறாமையால் அப்படி பேசுகிறார்கள் என்பதை இந்த உலகம் எப்பொழுதோ புரிந்து கொண்டது...எனவே அப்படிப்பட்டவர்கள் கூற்றினை தயவு செய்து இனிமேல் பதிவு செய்ய வேண்டாம் என்று உங்களை பணிவுடன் கேட்டுகொள்கிறேன்...தீயார் சொல் கேளாமல் இருப்பது சால சிறந்தது...
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
21.5.1970
மக்கள் திலகம் அவர்களின் ''என் அண்ணன் '' 44வது ஆண்டு உதய தினம் .
மாட்டுக்காரவேலன் படம் தென்னாடெங்கும் வெற்றிகரமாக 127 வது நாளாக ஓடிக்கொண்டிருக்கும் நேரத்தில் வெளிவந்து மிகப்பெரிய வெற்றி அடைந்த படம் .
மக்கள் திலகத்தின் அருமையான நடிப்பு
சண்டைகாட்சிகள்
விறுவிறுப்பான காட்சிகள்
இனிமையான பாடல்கள்
என்று ரசிகர்களுக்கு விருந்து தந்த படம் .
http://youtu.be/p4sEwW4mZ_0
சென்னை
மிட்லண்ட் -105- நாட்கள்
கிருஷ்ணா -86- நாட்கள்
மேகலா -70- நாட்கள்
நூர்ஜஹான் -57 - நாட்கள்
பெங்களூர்
ஸ்வஸ்திக் - 42 நாட்கள்
நியூ சிடி - 42 நாட்கள்
லக்ஷ்மி - 42 நாட்கள் .
Malaysia Function 2013 video part now uploaded in MGR Blog
http://www.mgrroop.blogspot.in/2013/...13-part-3.html
http://i39.tinypic.com/6h8axf.jpg
பிரபல இயக்குனர் பிஎஸ் ரங்கா அவர்களின் இயக்கத்தில்
மக்கள் திலகம் இரட்டை வேடத்தில் நடித்த பட்டிக்காட்டு பொன்னையா படம் சுமாராக ஓடியது .
எல்லா பாடல்களும் மிகவும் சுமார் ரகம் .
மக்கள் திலகம் வெளி நாடு சுற்று பயணம் செய்தபோது அவசரகோலத்தில் படம் முடிக்கப்பட்டு வெளிவந்தது .
நான் சபை ஏறும் நாள் வந்தது
நாம் சந்திக்கும் நிலை வந்தது
என் சங்கீதம் தாய் தந்தது !!
தேன் சந்தங்கள் தமிழ் தந்தது
நானும் அன்பான நண்பர்கள் முன்பாக
இந்நேரம் பண்பாட வந்தேன்
நெஞ்சில் உண்டான எண்ணத்தை
உல்லாச வண்ணத்தை பாட்டாக தந்தேன்
பாட பாட ராகம் வரும்
பார்க்க பார்க்க மோகம் வரும்
நான் எல்லோரும் தருகின்ற நல்வாக்கை துணை கொண்டு
செல்வாக்கை பெறுகின்றவன் !! (நான் ஒரு மேடை )
http://youtu.be/ysK_d2aWGTg
தமிழக முதல்_அமைச்சராக எம்.ஜி.ஆர். பதவி ஏற்றார்
http://i43.tinypic.com/a4ucl0.jpg
14 பேர் கொண்ட மந்திரிசபை தமிழக முதல்_அமைச்சராக அ.தி.மு.க. தலைவர் எம்.ஜி.ஆர். 1977 ஜுன் 30_ந்தேதி பதவி ஏற்றார். 1977 சட்டசபை தேர்தலில் மகத்தான வெற்றி பெற்று ஆட்சியை அ.தி.மு.க. பிடித்தது. அதைத்தொடர்ந்து, மந்திரிசபை அமைக்க எம்.ஜி.ஆருக்கு கவர்னர் பட்வாரி அழைப்பு விடுத்தார்.
இதைத்தொடர்ந்து, கவர்னரை எம்.ஜி.ஆர். சந்தித்து, அமைச்சர்களின் பட்டியலை கொடுத்தார். அமைச்சர்களின் பெயர்களும், இலாகா விவரமும் வருமாறு:_
1. எம்.ஜி.ஆர் _ முதல்_அமைச்சர்.
2. நாஞ்சில் மனோகரன் _ நிதி.
3. நாராயணசாமி முதலியார் _ சட்டம்.
4. எட்மண்ட் _ உணவு
5. பண்ருட்டி ராமச்சந்திரன் _ பொதுப்பணி.
6. ஆர்.எம்.வீரப்பன் _ செய்தி, பொதுமக்கள் தொடர்பு
7. அரங்கநாயகம் _ கல்வி.
8. பெ.சவுந்தரபாண்டியன் _ அரிஜன நலம்.
9. காளிமுத்து _ ஊராட்சி.
10. ராகவானந்தம் _ தொழிலாளர் நலம்.
11. பொன்னையன் _ போக்குவரத்து.
12. பி.டி.சரசுவதி _ சமூக நலம்.
13. ஜி.குழந்தைவேலு _ விவசாயம்.
14. கே.ராஜா முகமது _ கைத்தறி.
(எம்.ஜி.ஆரிடம், பொது நிர்வாகம், ஐ.பி.எஸ், ஐ.ஏ.எஸ், மாவட்ட ரெவின்யூ அதிகாரிகள், உதவி கலெக்டர்கள், போலீஸ், தேர்தல், பாஸ்போர்ட், மதுவிலக்கு, சுகாதாரம், மருந்து, அறநிலையத்துறை, லஞ்ச ஒழிப்பு, தொழிற்சாலை ஆகிய இலாகாக்கள் இருந்தன.)
பதவி ஏற்பு விழா சென்னை ராஜாஜி மண்டபத்தில் நடந்தது. காலை 8_15 மணிக்கு எம்.ஜி.ஆரும், மற்ற அமைச்சர்களும் ராஜாஜி மண்டபத்துக்கு வந்தார்கள். கூடியிருந்தவர்கள் "எம்.ஜி.ஆர். வாழ்க" என்று குரல் எழுப்பினர். 9_15 மணிக்கு கவர்னர் பட்வாரி வந்தார். அவரை தமிழக அரசு தலைமைச் செயலாளர் வரவேற்று மேடைக்கு அழைத்துச் சென்றார்.
கவர்னர் வந்ததும், முதல்_அமைச்சர் எம்.ஜி.ஆர். மற்ற மந்திரிகள் உள்பட அனைவரும் எழுந்து நின்று வரவேற்றனர். கவர்னர் பட்வாரி, எம்.ஜி.ஆருடன் கை குலுக்கினார். அதைத்தொடர்ந்து கவர்னருக்கு, மற்ற அமைச்சர்களை எம்.ஜி.ஆர். அறிமுகப்படுத்தினார். அமைச்சர்களுடன் கவர்னர் கை குலுக்கினார். காலை 9_15 மணிக்கு பதவி ஏற்பு விழா தொடங்கியது.
கவர்னர் பட்வாரி, முதல்_அமைச்சர் எம்.ஜி.ஆருக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். பதவியேற்பு உறுதிமொழியையும், ரகசிய காப்பு உறுதி மொழியையும் கவர்னர் ஆங்கிலத்தில் படித்தார். அந்த வாசகங்களை எம்.ஜி.ஆர். தமிழில் கூறி, பதவி ஏற்றார். அதன் பிறகு பதவி ஏற்பு உறுதி மொழி, ரகசிய காப்பு உறுதிமொழி பத்திரங்களில் எம்.ஜி.ஆர். கையெழுத்து போட்டார்.
பின்னர், அமைச்சர்கள் ஒவ்வொருவராகப் பதவி ஏற்றனர். பதவி ஏற்பு விழா முடிந்ததும், கவர்னர் பட்வாரி அமைச்சர்களுடன் "போட்டோ" படம் எடுத்துக் கொண்டார். அதன்பிறகு கவர்னர் புறப்பட்டுச் சென்றார். பதவி ஏற்பு விழாவுக்கு எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகி அம்மாள் வந்திருந்தார். மற்றும் அரசியல் தலைவர்கள், பிரமுகர்கள், கலை உலகத்தினரும் வந்திருந்தார்கள்.
ராஜாஜி மண்டபத்திலிருந்து திறந்த வேனில் அண்ணா சிலைக்கு எம்.ஜி.ஆர். சென்றார். அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தார். அங்கு பெருந்திரளான மக்கள் கூடியிருந்தார்கள். மேடை ஒன்று அமைக்கப்பட்டு இருந்தது. மேடையின் மீது நின்று எம்.ஜி.ஆர். கைகூப்பி வணங்கினார். அப்போது, கூடியிருந்தவர்கள் "புரட்சித் தலைவர் வாழ்க" என்று குரல் எழுப்பினர். அண்ணா சிலை அருகே அமைக்கப்பட்ட மேடையில் இருந்து எம்.ஜி.ஆர். பேசினார்.
அவர் கூறியதாவது:_
அன்புக்குரிய தாய்மார்களே, மரியாதைக்குரிய பெரியவர்களே, ரத்தத்தின் ரத்தமான அன்புக்குரிய உடன் பிறப்புக்களே! நமது இதய தெய்வமான பேரறிஞர் அண்ணா மீது ஆணையிட்டுக் கூறுகிறேன். அங்கே நடந்தது அரசாங்க விழா. அது தவிர்க்க முடியாதது. இங்கு உங்களின் கட்டளையை எதிர்பார்த்து "மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு" என்று அண்ணா சொன்னது போல் உங்கள் முன்பு நாங்கள் அமைச்சர் பொறுப்பினை ஏற்றிருக்கிறோம்.
அமைச்சர்கள் சார்பாகவும், அண்ணா தி.மு.க. சார்பாகவும் தமிழ் மக்களுக்கும் பல நாடுகளில் பல மாநிலங்களில் வாழ்கின்ற தமிழ் மக்களுக்கும், நமது கொள்கையை ஏற்றுக்கொண்டுள்ள இந்திய துணைக் கண்டத்தில் உள்ள அத்தனை பேர்களுக்கும் நான் இங்கு ஒரு செய்தியை குறிப்பிட கடமைப்பட்டுள்ளேன்.
மக்களின் எண்ணத்தையும், விருப்பத்தையும் சட்டமாக்கவும், தேவையை நிறைவேற்றவும்தான் சட்டமன்றத்துக்கு தேர்ந்தெடுத்து அனுப்பப்படுகிறார்கள் என்பதை பேரறிஞர் அண்ணா உணர்த்தி இருக்கிறார். ஆகவே, லஞ்சமற்ற, ஊழலற்ற, நிர்வாக தலையீடு இல்லாத, நீதிமன்றத்தில் குறுக்கீடு இல்லாத "உழைப்பவர்களே உயர்ந்தவர்கள்" என்ற லட்சியங்களில் உயிரை கொடுத்தாலும், வசதியை இழந்தாகிலும், எதிர்ப்புகளை எதிர்த்து நின்று கடமைகளை நிறைவேற்றுவோம் என்பதை அண்ணா மீது ஆணையிட்டு கூறுகிறேன்.
எங்களது பணி தொடர உங்கள் நல்லாசியை வழங்குங்கள். அண்ணா வாழ்க! தமிழ் வாழ்க! தமிழ்நாடு வாழ்க!
இவ்வாறு எம்.ஜி.ஆர். கூறினார்.
பின்னர், அரசு தலைமைச் செயலகம் உள்ள கோட்டைக்கு எம்.ஜி.ஆர். காரில் சென்றார். 11_15 மணிக்கு, முதல்_அமைச்சருக்கான அறைக்குச் சென்றார். அங்கு தலைமைச் செயலாளர் கார்த்திகேயன் அவரை வரவேற்றார். அந்த அறையில் உள்ள காந்தி, அண்ணா படங்களை வணங்கிவிட்டு, தமது இருக்கையில் எம்.ஜி.ஆர். அமர்ந்தார்.
அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள், பிரமுகர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் எம்.ஜி.ஆருக்கு மாலை அணிவித்து வணக்கம் தெரிவித்தார்கள். அதன் பின்னர் அரசு உயர் அதிகாரிகள் எம்.ஜி.ஆருக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டார்கள். பிறகு, மற்ற அமைச்சர்களை எம்.ஜி.ஆர். அவரவர் அறைக்கு அழைத்துச்சென்று உட்கார வைத்தார்.
எம்.ஜி.ஆர். தனது சிறப்பு பிரதிநிதியாக ஜேப்பியாரை நியமித்தார். தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து, கட்சிப்பணிகளை கவனித்து, கட்சியை பலப்படுத்துவதற்கு அவ்வப்போது எம்.ஜி.ஆருக்கு ஆலோசனைகள் கூறுவது ஜேப்பியாரின் பணியாகும். ஜேப்பியார் "நெருக்கடி நிலை"யின்போது, அதாவது தி.மு.க. ஆட்சியின்போது "மிசா"வில் கைது செய்யப்பட்டார். மொத்தம் 14 மாதங்கள் சிறையில் இருந்தார்.
அப்போது பல சித்திரவதைகளை அனுபவித்தார். சிறையில் இருந்து விடுதலையானபோது, அவரை எம்.ஜி.ஆர். வரவேற்றது குறிப்பிடத்தக்கது. 1977 தேர்தலின்போது, தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து, அ.தி.மு.க. வேட்பாளர்களை தேர்வு செய்வதில் ஜேப்பியார் பெரும் பணி ஆற்றினார்.
1965 -ENGA VEETTU PILLAI
MAKKAL THILAGAM IN ACTION - REEL-1965
http://i41.tinypic.com/ehzm7b.jpg
REAL - CHIEF MINISTER PURATCHI THALAIVAR MGR- 1977
http://i44.tinypic.com/fn7az7.jpg
வந்தான் வாழ்ந்தான் போனான்
என்றா உலகம் நினைக்க வேண்டும் ?
சொன்னான் செய்தான் ! என்றே நாளும்
ஊரார் சொல்ல வேண்டும் !!!
ஒரு சம்பவம் என்பது நேற்று -
நேற்று அது சரித்திரம் என்பது இன்று -
இன்று அது சாதனை ஆவது நாளை -
நாளை வரும் சோதனைதான் இடை வேளை
http://i41.tinypic.com/2z8yix5.jpg
எஸ்வி ஸார், மக்கள் திலகத்தின் எங்க வீட்டுப் பிள்ளை ஸ்டில்லையும், முதல்வராகப் பதவியேற்கும் படத்தையும் ஒப்பீடாகப் பதிந்தது அருமை.