http://www.youtube.com/watch?v=Sz2VQ...ature=youtu.be
Printable View
மக்கள் திலகம் - தெய்வம் - வெற்றி-திருப்புகழ் வேந்தன்-பாட்டுடைத் தலைவன் - அற்புத நாயகன் எம்.ஜி.ஆர்.
http://i60.tinypic.com/1hp3ph.jpg
இனிய நண்பர் திரு லோகநாதன் சார்
நீங்கள் எழதிய விஜய் டிவியில் நடைபெற்ற மக்கள் திலகம் எம்ஜிஆர் நிகழ்ச்சியின் நேர்முக வர்ணனை அபாரம்
நேரில் பார்த்தது போல் உணர்வு உண்டானது .படபிடிப்பில் கலந்துபேசிய அத்தனை பேர்களின் உரையை மிக அழகாக பதிவிட்டு இருப்பது சிறப்பு . மிக்க நன்றி .
ஸ்ரீரங்கத்தில் மக்கள் திலகம் எம்ஜிஆர் .
ஸ்ரீரங்கம் இடைதேர்தல் தேதி அறிவித்தாகிவிட்டது . இனி என்ன ... ஆளும் கட்சிக்கும் , அதன் தலைமைக்கும் இன்று முதல் மக்கள் திலகம் எம்ஜிஆர் உருவாக்கிய இரட்டை இலை சின்னமும் , எம்ஜிஆர் பாடல்களும் , எம்ஜிஆர் படங்களும் கண்ணுக்கு தெரியும் . மேடைக்கு மேடை அதிமுக மட்டுமல்லாமல் இதர கட்சிகளின் பிரசாரத்தின் பிரதான நாயகன் மக்கள் திலகம் எம்ஜிஆர் என்பதை காணலாம் .
SUPERB ACTION MAKKAL THILAGAM MGR'S EXCELLENT PERFORMANCE IN THAIKKU THALAIMAGAN . 49TH ANNIVERSARY TODAY.
http://youtu.be/V0dJT-LWktw
PONGAL ONWARDS 15.01.2015
ARUPPUKOTTAI TAMIL MANI
GRAND GALA OPENING
http://i1170.photobucket.com/albums/...psbe913d25.jpg
msg shared by chokalingam in his facebook
சென்னை கலைவாணர் அரங்கில் ஒரு ஜாதி மறுப்புத் திருமணம் (28-6-1970 ஞாயிறு). நரிக்குறவர் குடும்பத்தைச் சேர்ந்த எல். ஆறுமுகம் சிங் மகளுக்கும், வீரசைவ குடும்பத்தைச் சேர்ந்த ஏ.கே. ரகுபதிக்கும் ஜாதிமறுப்புத் திருமணம் எம்.ஜி.ஆர். தலைமையில் நடைபெற்றது. பிற்படுத் தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் என்.வி.நடராசன் அவர்களும் அவ் விழாவில் கலந்து கொண்டார்.
அப்பொழுது எம்.ஜி.ஆர். பேசியதாவது :
" இந்த மணவிழா அய்யா முன்னிலையில், அண்ணா வாழ்த்து வழங்கி நடைபெற வேண்டியதாகும். எவ்வளவு தான் சட்டம், கண்டிப்பு வந்தாலும் உள்ளத்தில் மாறுதல் ஏற்பட்டால்தான் அது பயன்படும். தந்தை பெரியார் அவர்கள் இந்த சமுதாய சீர்திருத்தப் பணியை துவக்கிய காலம். பலத்த எதிர்ப்பும், ஏளனமும் மிகுந்த காலம். இன்று அவர்கள் வாழ்நாளிலேயே அவரது கொள்கைளின் வெற்றிகளைக் காணும் பெருமித நிலையில் உள்ளார்கள். சமூகத்தில் ஒரு சிலர் ஆதிக்கம் பெறத்தான் ஜாதி புகுத்தப்பட்டது. ஆதிக்கக்காரர்கள் எதிர்ப்பை சமாளித்து இன்று அய்யா வெற்றி பெற்று இருக்கிறார். உள்ளத்தில் மாறுதல் ஏற்படுத்துவது என்பது பெருஞ்சாதனை யாகும். உயர்ஜாதிக்காரர்கள் என்றால் அவர்கள் ஒழுக்கவாதிகள் என்பதல்ல பொருள். வாழ்க்கையை அவர்கள் எப்படி நடத்துகிறார்கள் என்பதே முக்கியம். இந்த மணமக்கள் சமுதாய மாறுதலுக்குத் தக்க அடையாளமாகத் திகழ்கிறார்கள். அய்யா அவர்களது தியாகத்திற்குத் தலை வணங்குவதுதான், மரியாதை செலுத்து வதுதான் இத்தகைய விழாவில் நம் கடமையாகும் ! "
( விடுதலை , 9 - 7 - 2011 )
courtesy chandran veerasamy
[SIZE=5]TODAY 1.30 PM WATCH RAJTV [IMG] http://i57.tinypic.com/2n9xfzc.jpg http://i60.tinypic.com/iyhd08.jpg
தெய்வத்தின் பெருமைகளை திரும்ப திரும்ப சொல்லுவதில் சலிப்பு என்று வரும் பொழுது என்னால் இங்கே தொடர்ந்து பயணம் செய்ய முடியாது இனி நான் ஒரு பார்வை யாளன் மட்டும் தான் நீங்களே இந்த திரியீனை வழிநடத்தி செல்லுங்கள் என்னை இத் திரிக்கு கொண்டு சேர்த்த வேல்லூர் ராமமூர்த்தி அவர்களுக்கு நன்றி
ஆதரித்த அனைத்து நல உள்ளங்களுக்கு நன்றி
இன்றைய தின இதழ் நாளிதழில் வெளியான செய்தி.
http://i61.tinypic.com/258t3ew.jpg
இன்றைய தமிழ் இந்து தினசரியில் வெளியான செய்தி.
http://i62.tinypic.com/21l5vs8.jpg
http://i58.tinypic.com/15qstb4.jpg
அச்சமில்லை ஆகிய படங்களில் மக்களுக்கான அரசியலைப் பேசினார்.
http://i62.tinypic.com/2ign85x.jpg
மது எப்படி ஒரு குடும்பத்தை நாசம் செய்யும் என்பதை சதி லீலாவதி (1936)
திரைப்படம் உணர்த்தியது
1950கள் வரை , கதாசிரியர், என்று ஒருவர், திரைக்கதை மற்றும் வசனம் எழுதும் மற்றொருவர் , இயக்குனர் , தன் வேலையான இயக்கத்தை மட்டும் பார்க்கும் பாணி இருந்தது . அந்த காலத்தில் அவர்கள் ஒரு குழுவாகப் படம் எடுப்பதில்
முனைந்தார்கள் . அதனால்தான், மாடர்ன் தியேட்டர் ஸ் கதை இலாகா, எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் கதை இலாகா, ஜெமினி ஸ்டுடியோ கதை இலாகா என கதை உருவாக்கும் இலாகாக்கள் இருந்தன..
மதுரை பாய்ஸ் கம்பெனியில் நடிகர் பி.யு.சின்னப்பாவுடன் ,கே.ஆர். ராமசாமி, எம்.கே. ராதா, எம்.ஜி.சக்கரபாணி, எம்.ஜி.ராமச்சந்திரன் ஆகியோர் இருந்தனர்.
இதில் எம்.ஜி.ஆர். ஸ்திரீபார்ட் (பெண்வேடம் )வேடத்தில் இருந்தார்.
1945ல் வெளிவந்த "சாலிவாகனன் "படத்தில் எம்.ஜி.ஆர். வில்லனாக நடித்தார்.
அதில் டி.ஆர்.ராஜகுமாரி கதாநாயகியாக நடித்தார். 1953ல் எம்.ஜி.ஆருக்கு
ஜோடியாக பணக்காரியில் டி.ஆர். ராஜகுமாரி நடித்தார். பிறகு 1957ல் எம்.ஜி.ஆர். நடித்த புதுமைப் பித்தன் படத்தில் மீண்டும் நடித்தார் டி.ஆர். ராஜகுமாரி .
அதன் பின்னர் அந்த கால ரசிகர்களின் கனவு கன்னியாக திகழ்ந்த டி.ஆர். ராஜகுமாரி
1963ல் எம்.ஜி.ஆர். நாயகனாக நடித்து வசூலில் சாதனை புரிந்து, பெரும் வெற்றி பெற்ற " பெரிய இடத்துப் பெண் " படத்தில் மூத்த சகோதரியாக நடித்தார்.
http://i57.tinypic.com/34g7osl.jpg
கூட்டுத் தயாரிப்பு, தோல்வியில் முடிந்தது
1945ல் பேரறிஞர் அண்ணா எழுதிய நாடகம் , "சிவாஜி கண்ட இந்து சாம்ராஜ்யம் ".
எம்.ஜி.ஆர். சிவாஜியாக நடிக்க ஒப்புக்கொண்டு மறுத்த நாடகம்.கம்பீரமாக அவருக்காகத் தைக்கப்பட்ட ஆடைகளை அணிந்து 17 வயதில் சத்ரபதி
சிவாஜியாக தந்தை பெரியார் தலைமையில் நாடகத்தில் நடித்தார் வி.சி.கணேசன்.
இன்று முதல் சிவாஜி கணேசன் என புகழ்மாரி பொழிந்தார் , பெரியார்.
எம்.ஜி.ஆர். அந்த காட்சியைக் கண்டார். சிவாஜி கணேசன் உள்ளிட்ட நாடகக் கலைஞர்களுக்கு பசியாற்றுவது எம்.ஜி.ஆருக்கு பொழுதுபோக்கு .
டி.ஆர். ராஜகுமாரியின் தம்பி ராமண்ணா இயக்கத்தில் எம்.ஜி.ஆர். -சிவாஜி நடிக்க
கூண்டுக்கிளி தயாராகி வெளிவந்தது .
http://i58.tinypic.com/1fjqr6.jpg
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களின் "பணத்தோட்டம் " வெளியாகி 52 ஆண்டுகள்
நிறைவு பெற்றது . வெளியான தேதி: 11/01/1963.
இனிமையான பாடல்களும், பல திருப்பங்களும் நிறைந்த படம்.
நடிகர் நாகேஷ் முதன்முறையாக மக்கள் திலகம் படத்தில் நடித்தார்.
நாகேஷ், வீரப்பன் ஜோடி நகைச்சுவை படத்தில் கலக்கலாக இருந்தது.
கண்ணதாசனின் பாடல்களுக்கு, விஸ்வநாதன் - ராமமூர்த்தி இசை அபாரம் .
இறுதி வரை படத்தில் தொய்வில்லாமல் இயக்கினார் இயக்குனர் சங்கர்.
டைட்டிலில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். பெயரை புதுமையாக , கடைசியாக
காட்டினார்கள். ஆறுவிரல் சஸ்பென்ஸ் , கிளைமாக்ஸ் வரை கொண்டு சென்று
மர்மத்தை உடைத்தது படத்தின் சுவாரஸ்யம்.
எனக்கு விவரம் அறிந்தவகையில் நான் பார்த்து ரசித்த (முதல் வெளியீட்டில் ,
வெளியான,) முதல் எம்.ஜி.ஆர். படம் - பணத்தோட்டம் - கிரௌன் அரங்கில்
என்னதான் நடக்கும் நடக்கட்டுமே - அரங்கமே பாடலில் ஆர்ப்பரித்தது .
ஒருவர் ஒருவராய் பாடலில் மக்கள் திலகத்தின் மேல் நாட்டு இசைக்கு ஈடான
அற்புத நடனத்திற்கு பலத்த கைதட்டல், நல்ல வரவேற்பு.
பேசுவது கிளியா - படத்தின் ஹை லைட் . அந்த காலத்தில் திருமணம் மற்றும்
இசை நிகழ்ச்சிகளில் இந்த பாடல் இடம் பெறாத இடமே இல்லைஎனலாம் .
மக்கள் திலகமும், அபிநய சரஸ்வதியும் அற்புதமாக , பாத்திரத்தோடு ஒன்றிபோய் ,
பாடலுக்கு அபிநயத்தோடு நடித்து , நல்ல ஜோடி என பெயர் வாங்கினர்
இடைவேளையில் இந்த பாடல் பற்றிய முணுமுணுப்பு அனைவரிடம் கேட்க
முடிந்தது .
குரங்கு வரும் தோட்டமடி- அருமையான தத்துவப்பாடல்.
ஜவ்வாது மேடையிட்டு -எம்.ஜி.ஆர். -சரோஜாதேவி ஜோடி இந்த பாடலுக்கும்
மிக அருமையாக நடித்து , நல்ல பாராட்டைப் பெற்றனர் .
ஒருநாள் இரவில் - சுசீலா பாடிய மென்மையான, இனிய பாடல்.
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்கள் சிறுசிறு மாறுவேடத்தில் தோன்றிய காட்சிகள் அற்புதம். வேடங்கள் அனைத்தும் பொருத்தமாக இருந்தது
சென்னையில் 12 வாரங்கள் ஓடியது. 100 நாட்கள் ஓடியிருக்க வேண்டிய படம்.
அடுத்தடுத்து 30 நாள் இடைவெளியில் கொடுத்து வைத்தவள் மற்றும் 42 நாள் இடைவெளியில் தர்மம் தலை காக்கும் வெளியாகியதால் இதன் ஓட்டம் தடைபட்டது . சென்னையில் 3 படங்களுமே ஒரே சமயத்தில் 1963-ல் 9 அரங்குகளில் வெற்றிகரமாக ஓடி மூன்றுமே வெற்றிப்படங்களாக அமைந்தன .