http://i160.photobucket.com/albums/t...ps6mxuid69.jpg
Printable View
திரு யுகேஷ் பாபு அவர்களுக்கு,
தாங்கள் குறிப்பிட்ட விழாவிற்கு நானும் சென்று மக்கள் திலகத்தை பார்க்கும் அரிய வாய்ப்பை பெற்றேன். அவ்விழாவில் எடுக்கப்பட்ட தலைவரின் புகைப்படம் என் பாக்கெட் டைரியில் இன்றுவரை என்னுடன் பயணிக்கின்றது.
அன்புடன்
எஸ் ரவிச்சந்திரன்
உரிமைக்குரல் -செய்திகள் /புகைப்படங்கள் தொடர்ச்சி ........
http://i57.tinypic.com/eqci3c.jpg
http://i59.tinypic.com/2gw848l.jpg
மாபெரும் கருத்தரங்கம். நன்றி : ஒலிக்கிறது உரிமைக்குரல் மாத இதழ்
https://www.youtube.com/watch?v=8aMxmKu78nQ
எனது தாயார் மறைவிற்கு , புகைப்படத்துடன், இரங்கல் தெரிவிக்கும் வகையில்
அனுதாப செய்தி பிரசுரம் செய்த, உரிமைக்குரல் ஆசிரியர் திரு. பி.எஸ். ராஜ்
அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி.
எனது சகோதர, சகோதரிகளும், குடும்பத்தினரும் இரங்கல் செய்தி பிரசுரம்
செய்ததற்கு திரு. பி.எஸ். ராஜ் அவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.
ஆர். லோகநாதன்.
விரைவில்
கோவை
சண்முகாவில்
நாடோடி மன்னன்
மக்கள் திலகத்தின் '' 'இன்று போல் என்றும் வாழ்க ''
இன்று 39வது ஆண்டு துவக்க நாள் .
5.5.1977 வெளிவந்து மாபெரும் வெற்றி அடைந்த படம் .
இந்த இனிய நன்னாளில் பிறந்த நாளை கொண்டாடும் அன்பு நண்பர் திரு முத்தையன் இன்று போல் என்றும் வாழ்க
என்று வாழ்த்துகிறேன் .
6.5.1973.
மக்கள் திலகத்தின் ரசிகர்களால் மறக்க முடியாத நாள் .
அண்ணா திமுக மாநில மாநாடு 6.5.1973 அன்று வேலூர் அருகே சத்துவாச்சாரியில் நடைப்பெற்றது .
மிகவும் பிரமாண்டமான மாநாடு . திரும்பிய திசையெல்லாம் மக்கள் வெள்ளம் .தமிழ்நாடு முழவதும் உள்ள தொண்டர்கள் லட்ச்சக்கணக்கில் குவிந்தனர் .
சென்னையிலிருந்து மக்கள் திலகம் அவர்கள் நேராக மாநாட்டு திடலுக்கு வந்து தொண்டர்கள் மத்தியில் சிறிது நிமிடங்கள் உரையாடி விட்டு மேடை நோக்கி . விரைந்தார் .
அவர் என்ன பேசினார் ?
மக்கள் திலகம் காரை விட்டு இறங்கியதும் தொண்டர்கள் பலர் அவரை சுற்றி வாழ்த்துக்கள் , வணக்கங்கள் கூறி 'உலகம் சுற்றும் வாலிபன் '' படம் எப்போது வரும் ? என்று கேட்டனர் .
மக்கள் திலகம் ; இன்று மாலை பேப்பர் பாருங்கள் . விளம்பரம் வரும் என்று கூறினார் .
அதே போல் அன்றைய மாலை ''அலை ஓசை '' மாலை பேப்பரில்
மே 11 முதல்
உலகம் சுற்றும் வாலிபன்
சென்னை
தேவிபாரடைஸ் - அகஸ்தியா - உமா மற்றும் தென்னாடெங்கும் .
மே 7 முதல் முன்பதிவு ஆரம்பம்
என்று விளம்பரம் பார்த்த மக்கள்வெள்ளம் அடைந்த ஆரவாரம் இன்று நினைத்தாலும் மெய் சிலிர்க்கிறது .
1969 -திரை உலகம் இதழில் வெளிவந்த மக்கள் திலகத்தின் பேச்சு பற்றிய ஆவண பதிவுமிகவும் அருமை .திரு குமார் சார் மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களால் மதுரை கோயிலில் வைக்கப்பட்ட ஆவண குறிப்பை பற்றி பதிவிட்ட திரு ரவிகுமார் அவர்களுக்கு நன்றி .
சத்துணவு தந்த
சரித்திர நாயகனே!
முத்தமிழ் உள்ளவரை
முழங்கும்
உனது பெருமை!
பாட்டுக்கோர் புலவன் பாரதியின்
நூற்றாண்டு
புகழ்
பரப்ப
மகா கவிக்கு
சிலை எடுத்து சிறப்பித்தாய்
உனது புகழ் - மங்காது
வாழிய! வாழியவே!
நெஞ்சை அள்ளும் தஞ்சையிலே!
தமிழ் பல்கலைக் கழகம் தந்தாய்
தலைநகர் டில்லியிலே
தமிழ்ச் சங்கம் தோன்ற
பேருதவி புரிந்தாய்!
வையகம் போற்றும் வண்ணம்
மாட மதுரை மாநகரில்
ஐந்தாவது உலக தமிழ் மாநாட்டை
உவகையுடன் செய்திட்டாய்!
மதுரை வீரனே!
உம்-புகழ்வாழ்க!
"இருந்தாலும் மறைந்தாலும்
பேர் சொல்ல வேண்டும்
இவர் போல யாரென்று
ஊர் சொல்ல வேண்டும்
ஊர் மட்டுமல்ல உலகமும்
சொல்லும்படி வாழ்ந்த
திலகம் இவர்!
மக்கள் திலகம் இவர்!
கழகம் துவங்கி
ஐந்து ஆண்டுகளில்
மகுடம் சூடிய
மன்னாதி மன்னன் நீங்கள்!
'தொட்டனை ஊறும் மணற் கேணி
மந்தர்க்கு கற்றனை ஊறும் அறிவு'
தொட்டது துலங்கும்
ஆசியும், ராசியும்
மேலோங்கி வளரும்
இவரது கை பட்டால்?
நடிகர் சிவகுமாரின்
கல்வி அறக்கட்டளை
தழைத்தோங்கி
வளர்வதற்கு காரணம்
இவரது கைராசி !
திரை படங்களில்
சூளுரைக்கும் வசனத்தை
சுருக்கி சொன்னவர் நீவீர்!
தற்போது
தமிழ் படங்களில்
பவனி வரும் "பன்ச்ச்" வசனத்தின்
முன்னோடியும்
நீ(ர்)தான்!
கேள்வி = நிலைத்து நிற்கும் எனது அதிகாரத்தின் ஆழம் தெரிய வில்லையா உமக்கு?
பதில் = உங்களது அதிகாரம் என்ன சிலப்பதிகாரமா?
நிலைத்து நிற்பதற்கு?
கேள்வி = மதம் கொண்ட யானை என்ன செய்யும் தெரியுமா?
பதில் =சினம் கொண்ட சிங்கத்திடம் தோற்று ஒடும்.
கேள்வி = தோல்வியே அறியாதவன் நான்!
பதில் = தோல்வியை எதிரிக்கு பரிசளித்தே பழகியவன் நான்!
ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம்
அல்லாவா?
அறிஞர் அண்ணாவின்
உதய சூரியனுக்கு
சுடராய் நின்றவர்
எம்.ஜி.ஆர்!
சமுதாயத்தின் சக்திகளாக
விளங்கும்
மகளீர்க்கென
தனீ பேருந்து தந்தவர்
எம்.ஜி.ஆர்!
பத்திரிகை துறையிலும்
பாதம் பதித்தவர்
தாய் பத்திரிகையின் நிறுவனர்.
அண்ணா பத்திரிகையின் நிறுவனர்
நேச மணி தமிழ் மாத இதழ் ஆசிரியர்
தீமையை தீண்டாத திலகம் இவர்!
வாய்மையை போற்றும் உலகம் இவர்!
(இவரின்)
அரசியல் வாரிசு செல்வி.ஜெயலலிதா
கலைஉலக வாரிசு கே.பாக்யராஜ்
இரு வாரிசுகளை…
தேர்ந்தெடுத்த தேவன் இவர்.
அன்பிலார் எல்லாம் தமக்குரியர்
அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு.
எல்லோரிடமும் அன்பு பாராட்டிய
அரும்பெரும் தலைவர் எம்.ஜி.ஆர்.
தேசத் தந்தை காந்தியிடம் - நேசம்
மூதறிஞர் ராஜாஜியிடம் - பாசம்
கர்மவீரர் காமராஜரிடம் - எளிமை/பற்று
அறிஞர் அண்ணாவிடம் - தலைமை பண்பு
கலைஞர்/ சிவாஜி இருவரிடம் - நட்பு (பாராட்டிய)
சமத்துவ தலைவர் எம்.ஜி.ஆர்.
"கட்டழகர்களில் கண்டாலே போதுமென!
காந்தப் பார்வை பட்டாலே போதுமென!
பசும்பொன் மேனி தொட்டாலே போதுமென!
பாசத்தோடு
கை கொடுக்க வேண்டும் என எண்ணம், எண்ண!
இயற்கையோடு கலந்துவிட்ட
"காஞ்சித் தலைவனை"
நமது நெஞ்சத்தில் வைத்து
அவரின் புகழை
போற்றுவோமே!
இந்நாளில்!
தொடர்ந்து
மூன்று முறை முதல்வராய்
இருந்த
முத்தமிழ் முதல்வருக்கு
இன்னும்
மூன்று ஆண்டுகளில்
நூற்றாண்டு!(1917 – 2017)
வாருங்கள் ரத்தத்தின் ரத்தங்களே!
மங்காத புகழுக்கு
ஊறு விளைவிப்போரை
வேறோடு சாய்ப்போம்!
காலத்தை வென்ற காவிய நாயகனுக்கு
அன்பு என்னும் மாலையை
அவரது அழியாப் புகழுக்கு சூடுவோம் !.
மனித புனிதர் எம்.ஜி.ஆர் புகழ்
இன்று போல் என்றும் வாழ்க!
பல்லாண்டு வாழ்க!
வாழ்க! வளர்க! எம்.ஜி.ஆர் திருநாமம்.
courtesy - net
புதுவைவேலு
குறவர் வேஷம் போட்டு
குறவஞ்சி பாடிய
தேடி வந்த மாப்பிள்ளை யாரோ?
படகோட்டி சென்று மீனவ நண்பனை
கண்டது யாரோ?
நாளை நமதே என்று
நம்பிக்கை அளித்தவர் யாரோ?
என் அண்ணன்
என்று சொல்லும்
ஊருக்கு உழைப்பவன் யாரோ?
பணத்தோட்டத்தை தேடிச் சென்ற
மலைக் கள்ளன் யாரோ?
ஓரம் போ! என்று சொல்லும்
ரிக் ஷாக்காரன் யாரோ?
காதல்வாகனம் ஏறி
குமரிக்கோட்டம் சென்றவர் யாரோ?
அடிமைப் பெண்னை
விடிதலை செய்தது யாரோ?
கூண்டுக் கிளியை
பறக்க விட்டது யாரோ?
மந்திரி குமாரியை
மணக்கச் சென்றவர் யாரோ?
ராஜ குமாரியை
கண்டவர்தான் யாரோ?
பெற்றால்தான் பிள்ளையா?
என்று கேட்டவர்தான் யாரோ?
நீரும் நெருப்புடனும்
விளையடியவர்தான் யாரோ?
தாழம் பூவை அழகு என்று
சொன்னவர்தான் யாரோ?
தொழிலாளிக்கு
தோள் கொடுத்த தோழர்தான் யாரோ?
யார் அவர்?
புதுமை பித்தனா?
ராஜா தேசிங்கா?
நாடோடியா?
நாடோடி மன்னனா?
மதுரையை மீட்ட சுந்தர பாண்டியனா?
யார்தான் அவர்?
அவர்தான்........!
எதிர்வரும் 2017-ல்
நூற்றாண்டு விழா காணப் போகும்
புது யுகத்தின் புரட்சி நாயகர்
டாக்டர் எம்.ஜி.ஆர்!
courtesy
புதுவை வேலு
என் பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள் சொன்ன தலைவரின் பக்தர்களுக்கு என் மனமார்ந்த நன்றி..
http://i58.tinypic.com/ali0y0.jpg