-
கருவின் கரு - பதிவு 90::smile2::smile2:
நவரத்தின மாலை -5 : மாணிக்கம் ( Star Ruby)
இந்த பாட்டுக்கு எந்த மாணிக்கமும் இனையாகாதே !!
https://youtu.be/gLiZFaAbWb8
பாடல்: கல்லெல்லாம் மாணிக்க கல்லாகுமா?
பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன், எல்.ஆர். ஈஸ்வரி
இயற்றியவர்: கண்ணதாசன்
திரைப்படம்: ஆலயமணி
ஆஹாஹா.. ஆஹாஹாஹா.. ஆஹாஹா.. ஆஹாஹாஹா
ஆஹாஹாஹா.. ஆஹாஹாஹா...
கல்லெல்லாம் மாணிக்க கல்லாகுமா?
கலையெல்லாம் கண்கள் சொல்லும் கலையாகுமா?
கல்லெல்லாம் மாணிக்க கல்லாகுமா?
கலையெல்லாம் கண்கள் சொல்லும் கலையாகுமா?
சொல்லெல்லாம் தூய தமிழ் சொல்லாகுமா?
சுவையெல்லாம் இதழ் சிந்தும் சுவையாகுமா?
சொல்லெல்லாம் தூய தமிழ் சொல்லாகுமா?
சுவையெல்லாம் இதழ் சிந்தும் சுவையாகுமா?
ஆஹாஹா.. ஆஹாஹா........ஆஹாஹாஹா......
கல்லெல்லாம் மாணிக்க கல்லாகுமா?
கலையெல்லாம் கண்கள் சொல்லும் கலையாகுமா?
கன்னித்தமிழ் தந்ததொரு திருவாசகம்
கல்லைக் கனி ஆக்கும் உன்தன் ஒரு வாசகம்
கன்னித்தமிழ் தந்ததொரு திருவாசகம்
கல்லைக் கனி ஆக்கும் உன்தன் ஒரு வாசகம்
உண்டென்று சொல்வதுன்தன் கண்ணல்லவா
வண்ண கண்ணல்லவா
உண்டென்று சொல்வதுன்தன் கண்ணல்லவா
வண்ண கண்ணல்லவா
இல்லையென்று சொல்வதுன்தன் இடையல்லவா?
மின்னல் இடையல்லவா?
ஆஹாஹா.. ஆஹாஹாஹா ஆஹாஹாஹா ஆஹாஹாஹா
கல்லெல்லாம் மாணிக்க கல்லாகுமா?
கலையெல்லாம் கண்கள் சொல்லும் கலையாகுமா?
ஆ..ஆ ஆ ஆ.. ஆ..ஆ ஆ ஆ.......
கம்பன் கண்ட சீதை உன்தன் தாயல்லவா?
காளிதாசன் சகுந்தலை உன் சேயல்லவா?
கம்பன் கண்ட சீதை உன்தன் தாயல்லவா?
காளிதாசன் சகுந்தலை உன் சேயல்லவா?
அம்பிகாபதி அணைத்த அமராவதி மங்கை அமராவதி
அம்பிகாபதி அணைத்த அமராவதி மங்கை அமராவதி
சென்ற பின்பு பாவலர்க்கு நீயே கதி என்றும் நீயே கதி
ஆஹாஹாஹா ஆஹாஹாஹா
கல்லெல்லாம் மாணிக்க கல்லாகுமா?
கலையெல்லாம் கண்கள் சொல்லும் கலையாகுமா ஆ..ஆ..
-
கருவின் கரு - பதிவு 91
வாணி ஜெயராமின் மாணிக்க குரலில்
மல்லிகை முல்லை பூபந்தல்
மரகத மாணிக்க பொன்னூஞ்சல்
மஞ்சள் வாழை மாமரங்கள்
பச்சை மாவிலை தோரணங்கள்
எல்லாம் எதற்காக
நமக்கு கல்யாணம் அதற்காக
மல்லிகை முல்லை பூபந்தல்
மரகத மாணிக்க பொன்னூஞ்சல்
மஞ்சள் வாழை மாமரங்கள்
பச்சை மாவிலை தோரணங்கள்
எல்லாம் எதற்காக
நமக்கு கல்யாணம் அதற்காக
மஞ்சள் நீரினில் காலையில் குளித்து
தென்றல் நீந்திட பூங்குழல் முடித்து
மஞ்சள் நீரினில் காலையில் குளித்து
தென்றல் நீந்திட பூங்குழல் முடித்து
பட்டு சேலையும் மெட்டியும் அணிந்து
பக்கம் தோழியர் துணை வர நடந்து
மந்திரம் சொல்லும் மேடையிலே
மங்கல வாத்தியம் முழங்கையிலே
அழகன் உங்கள் அருகினிலே
அமர்ந்திருப்பாள் இந்த மணமகளே
அமர்ந்திருப்பாள் இந்த மணமகளே
எல்லாம் எதற்காக
நமக்கு கல்யாணம் அதற்காக
மல்லிகை முல்லை பூபந்தல்
மரகத மாணிக்க பொன்னூஞ்சல்
மஞ்சள் வாழை மாமரங்கள்
பச்சை மாவிலை தோரணங்கள்
எல்லாம் எதற்காக
நமக்கு கல்யாணம் அதற்காக
அந்தி மாலையில் சாந்திமுஹூர்த்தம்
அன்னத்தூயிலில் ஆனந்த கோலம்
அந்தி மாலையில் சாந்திமுஹூர்த்தம்
அன்னத்தூயிலில் ஆனந்த கோலம்
அச்சம் நாணத்தில் நான் வரும் நேரம்
அன்பு நாடகம் ஆரம்பமாகும்
அச்சம் நாணத்தில் நான் வரும் நேரம்
அன்பு நாடகம் ஆரம்பமாகும்
பள்ளியில் வாசல் கதவடைத்து
பஞ்சணை பைங்கிளி கையணைத்து
வெள்ளி முளைக்கும் வேளை வரை
சொல்லி முடிப்போம் காதல் கதை
சொல்லி முடிப்போம் காதல் கதை
எல்லாம் எதற்காக நமக்கு கல்யாணம் அதற்காக
மல்லிகை முல்லை பூபந்தல்
மரகத மணிக்க பொன்னூஞ்சல்
மஞ்சள் வாழை மாமரங்கள்
பச்சை மாவிலை தோரணங்கள்
எல்லாம் எதற்காக
நமக்கு கல்யாணம் அதற்காக .
https://youtu.be/dmx2gkelEnc
சுதந்திர பூமியில் பலவகை ஜனங்களும்
தோட்டத்தில் மலர்ந்த மலர்கள்,
சுதந்திர பூமியில் பலவகை ஜனங்களும்
தோட்டத்தில் மலர்ந்த மலர்கள்,
தோட்டத்து மலர்களின் ஆயிரம் நிறங்களும்
ஜனங்களின் ஆயிரம் குணங்கள்....
தோட்டத்து மலர்களின் ஆயிரம் நிறங்களும்
ஜனங்களின் ஆயிரம் குணங்கள்......
சுதந்திர பூமியில் பலவகை ஜனங்களும்
தோட்டத்தில் மலர்ந்த மலர்கள்,
.
மங்கையின் கூந்தலில் மலர்கள் இருந்தால்
மங்கள மங்கை என்போம்,
மங்கையின் கூந்தலில் மலர்கள் இருந்தால்
மங்கள மங்கை என்போம்,
மனிதனின் வாழ்கையில் நாணயம் இருந்தால்
மனிதருள் மாணிக்கம் என்போம்,
பண்ணிரண்டாண்டில் ஒரு முறை மலரும்
குருஞ்சி மலர்களைப்போலே,
தன்னலம் இல்ல தலைவர்கள் பிறப்பார்
ஆயிரத்தில் ஒரு நாளே,
.
சுதந்திர பூமியில் பலவகை ஜனங்களும்
தோட்டத்தில் மலர்ந்த மலர்கள்,
தோட்டத்து மலர்களின் ஆயிரம் நிறங்களும்
ஜனங்களின் ஆயிரம் குணங்கள்......
.
மணமுள்ள மலர்களில் தேனீ கூடும்
வண்டுகள் இன்னிசை பாடும்,
மணமுள்ள மலர்களில் தேனீ கூடும்
வண்டுகள் இன்னிசை பாடும்,
திறமை உள்ளவன் எங்கிருந்தாலும்
தேசம் அவனிடம் ஓடும்,
எல்லா மலரும் இறைவன் படைப்பும்
அவனது தோட்டம்,
தோட்டம் அனைத்தும் எனக்கே சொந்தம்
என்பது சுயநலக்கூட்டம்,
சுதந்திர பூமியில் பலவகை ஜனங்களும்
தோட்டத்தில் மலர்ந்த மலர்கள்,
தோட்டத்து மலர்களின் ஆயிரம் நிறங்களும்
ஜனங்களின் ஆயிரம் குணங்கள்....
.
இலைகள் மறைத்தும் மணத்தை பரப்பும்
பெருமை உடையது முல்லை,
இலைகள் மறைத்தும் மணத்தை பரப்பும்
பெருமை உடையது முல்லை,
ஒருவன் புகழை ஒருவன் மறைத்து
உயரும் வரலாறில்லை,
சூரியன் போகும் திசையினில் எல்லாம்
வளையும் சூரியகாந்தி,
நேரிய வழியில் நிதமும் நடந்தால்
நெஞ்சுக்கு நிம்மதி சாந்தி,
.
சுதந்திர பூமியில் பலவகை ஜனங்களும்
தோட்டத்தில் மலர்ந்த மலர்கள்,
தோட்டத்து மலர்களின் ஆயிரம் நிறங்களும்
ஜனங்களின் ஆயிரம் குணங்கள்....
https://youtu.be/2gFduyZImR0
-
-
'ஆயிரம் ஆயிரம் அற்புதக் காட்சிகள் எங்கும்'
'சுவாதி நட்சத்திரம்'
ஜி!
உங்களூக்கு ஒரு அபூர்வ பாடல்.
கே.எஸ்.ஜி கதை, வசனம், இயக்கத்தில் வெளிவந்த 'சுவாதி நட்சத்திரம்' (1974) திரைப்படத்தில் இருந்து சுசீலா அம்மா பாடிய ரேர் சாங்.
http://i.ytimg.com/vi/GG4AwwJRZ3U/sddefault.jpg
உதயசந்திரிகா தான் ஹீரோயின். கண் பார்வை எப்போது வேண்டுமானாலும் போய் போய் வரும். எப்போது பார்வை பறி போகும் எப்போது வரும் என்று தெரியாது. கதையமைப்பு அப்படி இருக்கும். இவரை ஆதரிக்கும் கிறித்துவ சிஸ்டர் பானுமதி.
உதயசந்திரிகாவுக்கு கண் பார்வை கிடைக்கும் ஒரு சமயம் இந்தப் பாடலைப் பாடுவது போல் காட்சி . இந்தப் படம் பிளாக் அண்ட் ஒயிட் படம். இயக்குனர் சமர்த்தர் காசு விஷயத்தில். ஆனால் ஹீரோயினுக்குக் கண் கிடைத்தவுடன் அவள் சந்தோஷத்தை, இயற்கைக் காட்சிகளைக் கண்டு அவள் ஆடும் ஆட்டத்தை, குஷியான குதூகலத்தை பார்வையாளர்கள் உணர வேண்டும் என்று மிக அருமையாக பாடலாக படமாக்கியிருப்பார். இதில் என்ன விசேஷம் தெரியுமா? அந்தப் பாடல் மட்டும் வண்ணத்தில் படமாக்கப்பட்டிருக்கும் காட்சிக்கு மிகப் பொருத்தமாக. (நாயகிக்கு பார்வை வரும் காட்சிகளை மட்டும் வண்ணத்தில் பார்த்த நினைவு.)
ஹீரோயின் மலைமேல் நின்று, அங்கிருந்து கீழே தெரியும் இயற்கை அழகை கண் பார்வை பெற்றவுடன் கண்டு ரசிக்கிறாள். மலையடிவாரம், பூங்காக்கள் என்று சுற்றி சுகம் காணுகிறாள்.
'ஆயிரம் ஆயிரம் அற்புதக் காட்சிகள் எங்கும்
பூமி எங்கும்
ஆடுது பாடுது ஆசையில் தாவுது நெஞ்சம்
எந்தன் நெஞ்சம்
எழில் மிஞ்சும்
வண்ண வண்ண மலர் மின்னும் காட்சிகளை
வாழ்வில் காணுவது மெய்தானா'
என்று நாயகி தன்னைத்தானே இன்னும் நம்பாமல் கேட்டுப் பார்த்துக் கொள்கிறாள்.
'வானம் தூவும் பனி மாவைப் போல
புதுக் கோலம் போடுவது மெய்தானா
நான் என்னென்று சொல்வேன் இதை அம்மா
அம்மம்மா அம்மம்மம்மம்மா'
என்று ஆனந்தத் தாண்டவம் ஆடுகிறாள்.
காட்டு வெள்ளமெனப் பொங்கி வரும் அருவி மீது நின்று ஆட்டம் போடுகிறாள்.
'கண்ணில் வந்து இளந்தென்றல் கொஞ்சுதே
எண்ண எண்ண பெரும் இன்பம் பொங்குதே
காண்பவை எல்லாம் கற்பனை தானோ
ஆண்டவன் செய்யும் அற்புதம் தானோ
நான் என்னென்று சொல்வேன் இதை அம்மா
அம்மம்மா அம்மம்மம்மம்மா'
பூங்காவிலுள்ள சிலைகளின் முன் சிலையாய் அபிநயம் பிடித்து, குழந்தைகளுடன் குழந்தையாய் சறுக்கு மரம் ஏறி விளையாடி, ஏரியில் படகு சவாரி விட்டு,
மரகத வண்ண பச்சைப் பட்டு மண்ணைத் தழுவி
மின்னும் அழகைக் கண்டேன்
வர்ணனை செய்ய வார்த்தைகள் இல்லை
கண்கள் பெற்ற பயனை நானும் கொண்டேன்
அம்மா அம்மம்மா அம்மம்மம்மம்மா'
பார்வை வந்ததன் பலனை அனுபவிக்கிறாள்.
பாடல் முடியும் போது பரிதாபமாக மீண்டும் கண் பார்வை பறி போகும்.
http://i1087.photobucket.com/albums/...0-2/sdfvbn.jpg
உதயசந்திரிகாவின் உடை படு சிக்கனம். கவர்ச்சி அதிகம். வண்ணக் குழைவு எண்ணத்தை விட்டு அகல்வேனா என்கிறது. அற்புத வண்ண படப்பிடிப்பு. இயற்கை அழகை அப்படியே காமெரா அள்ளி நம் முன்னே வஞ்சனை இல்லாமல் கொட்டுகிறது.
சுசீலா படுவேகம். ஜெட் வேகத்தில் பாடுவார். இவ்வளவு ஸ்பீடாக வேறு பாடல் ஏதும் பாடியிருப்பாரோ என்பது சந்தேகமே!
'இருளும் ஒளியும்' படத்தில் வாணிஸ்ரீ சுசீலாவின் குரலில் பாடும்
'வானிலே மண்ணிலே'
பாடல் இப்பாடலை கேட்கும் போது நினைவுக்கு வராமல் இருக்காது. (இப்பாடலுக்கு மாமா மியூசிக்)
கண் தெரியாத பெண் பார்வை வந்தவுடன் காட்டும் உற்சாகம், வேகம், ஆனந்தம், பூரிப்பு, ரசிப்பு என்று உதயசந்திராகாவும் பாடலின் வேகத்திற்கு ஈடு கொடுத்திருப்பார்.
இந்த அருமையான பாடலை மருதகாசி எழுதி இருப்பார். இசை 'மெல்லிசை மாமணி' வி.குமார். வித்தியாசம் நன்றாகவே தெரியும். சுசீலாவை வேகமாக பாட வைப்பதில் குமார் கில்லாடி. ('வெள்ளி விழா' படத்தில் 'நான் சத்தம் போட்டுத்தான் பாடுவேன்' ஒரு உதாரணம்).
வண்ணத்துக்காகவே பல தரம் பாருங்கள்.
https://youtu.be/iaUz1sCtUuw
-
Hi all good afternoon
சந்தில் சிந்து ::)
மாணிக்கம் வழக்கம் போல குட் ரவி
நன்றி வாசு.. அண்ட் ஸ்வாதி நட்சத்திர ரைட் அப்பிற்கும்.. பார்த்து பின் ஈவ்னிங்க் எழுதறேன்..
-
மாணிக் நா மாணிக்பாஷா தான் நினைவுக்குவருது :)
மாணிக்க மூக்குத்தி மதுரை மீனாட்சிக்கு மதுரையிலே முகூர்த்த நாள்னு பாடல் எதிரொலிக்கிறது..
-
Kill Bill (1 and 2)- Quentin Tarantino - 2003/2004.
எனக்கு மிக பிடித்த இயக்குனர்களில் முக்கியமானவர். இவருடைய pulp fiction என்ற படத்தை 1994 இல் இயக்குனர் பெயர் அறியாமலே பார்த்து ஈடுபாடு கொண்டு பலமுறை பார்த்துள்ளேன்.
இவர் நமது சம வயதினர். நடிப்பு பள்ளியில் பயின்று ஒரு video archieve கடையில் வேலை பார்க்கும் போது testing பண்ணும் வேலையில் எதையும் முழுசாக பார்க்க முடியாமல் ,துண்டு துண்டாக பார்த்ததில் ,இவருடைய புது பாணி பட முயற்சியான non -linear முறை அவருக்கு சாத்திய பட்டது.
இவருடைய சிறப்பு, பழைய இயக்குனர்கள், படங்கள் எல்லாவற்றையும் மரபு முறையில் தொடராமல், இணைப்பு மற்றும் புது வகை திரைக் கதையமைப்பால் சுவாரச்யமாக்கி புது மெருகுடன் தருவார். பழைய இசைகள், வெவ்வேறு பாணி இசைகள் என்று இவருடைய படங்களில்
இசையமைப்பு எப்போதும் படத்தை கூடுதல் ரசனைக்குரியதாக்கும்.
கில் பில் படத்தின் சிறப்புகள்.
1)ஜப்பானிய ,சீனா போர் முறை , இத்தாலிய பயங்கர குரூரம்,western sphegatti என்று அழைக்க பட்ட (Sergio Leone )பாணிகளை இணைத்து தந்த சுவாரஸ்ய படம்.
2)கதையின் துண்டு துண்டாக மரபற்ற இணைப்பு முறையுடன் , வன்முறையை அழகுணர்ச்சியுடன் தந்த Neo Noir வகையில் அமைந்த வித்தியாச பொழுது போக்கு படம்.(Stylised Revenge Flick )
3)முதல் முறையாக பெண்களை பெருமளவு உலகளவில் ஈர்த்த வன்முறை படம்.அவர்களின் பழியுணர்ச்சி கலந்த வன்முறை வக்கிர உணர்வுக்கு ஒரு fantasy தீர்வாக அமைந்தது ஒரு காரணம்.
4)உமா துருமன் என்ற நடிகை இந்த படத்தை தூக்கி நிறுத்தி ,பல விருதுகள் பெற்றார். அவர்தான் இந்த படத்தின் நாயக-நாயகி.அவரை சுற்றியே படம்.
5)சண்டையில் ஜெயிப்பது தவிர மனிதம்,மென்மை உணர்வுகளுக்கு இடமேயில்லை ,எதிர்ப்பது புத்தனே ஆனாலும் எதிரியை முடிப்பதே குறிக்கோள் என்ற ஜப்பானிய சண்டை தத்துவத்தில் ஊறிய படம்.
6)இயக்குனரின் சிறப்பு தனக்கு முன்னோடியாக அமைந்தவற்றை பல படங்களை ,இயக்குனர்களை குறிப்பிடுவார். இந்த விதத்தில் கமலுக்கு நேர் எதிர்.(ஏன் கமலின் ஹிந்தி ஆளவந்தான் கூட சண்டை காட்சிகள் Graphic பண்ண காரணம் என்று கமலுக்கே credit கொடுத்துள்ளார்)
இதை பற்றி சொல்லுவதை விட இரண்டு பாகங்களையும் ஒரு சேர கண்டு மகிழவும்.
-
ஆதிராம்,
அற்புதமான யோசனை. எனக்கும் தமிழின் வளைகாப்பு பாடல்கள்,தோழியர் பாடல்கள் எல்லாம் மிக பிடிக்கும்..ஆரம்பமாகட்டும்
-
கோபால் அண்ணா கோபால் அண்ணா!
அப்படியே நிறுத்துங்கள். இதற்கு மேல் ஒரு வார்த்தை பேசக் கூடாது.
முதலில் என் படத்தை எடுத்ததற்கு உம்மை மன்னிக்கவே முடியாது.
http://wiki.tarantino.info/images/Gogo.jpg
நான் பார்த்து பார்த்து அணு அணுவாக அனுபவித்து என் குழந்தைகள், நண்பர்கள், உற்றார், உறவினர்கள் அனைவருடனும் ஒவ்வொரு முறையும் அகமகிழ்ந்து பார்த்து அதுவும் பாகம் 1 இல் உமா துருமனுடன் இரும்பு சங்கிலியில் கோர்த்த பிரம்மாண்ட முட்குண்டை வைத்து கழுத்துக்கு மேல் சுற்றி வலதுகாலின் உள்வழியாக வாங்கி, மூர்க்கத்தனமாக மோதி தண்ணி காட்டும் O-Ren Ishii (லூசி லியூ) வின் பாடிகார்டான அந்த பச்சை இளம் ஜப்பான் நடிகை Chiaki Kuriyama வின் பரம ரசிகன் நான். துருமன் காட்டும் முகபாவங்கள் ஒன்று கூட இங்கிருக்கும் எந்த நடிகையும் அறியாதவை.
நான் மிகவும் ரசித்த துருமனின் கண்ணசைப்பு அலட்சியம்
http://i.dailymail.co.uk/i/pix/2014/...52_636x358.jpg
முக்கியமாக இரும்பு குண்டை Chiaki கீழே போட்டு பயமுறுத்தியவுடன் துருமன் காட்டும் அந்த அலட்சிய கண்ணடிப்பை ஆயிரம் முறை ரசித்திருப்பேன். Chiaki கொள்ளை அழகு பருவச் சிட்டு. அவள் கண்களில் இறுதியில் ரத்தம் வழியும் போது உடன் வழிந்தது எனக்கும்தான்.
கோ,
உன்னை மன்னிக்கவே முடியாது போ. ஒழுங்காக அடுத்ததற்கு தாவாமல் ஏனோ தானோ என்று இரண்டு வால்யூம்களையும் மொட்டையாக விட்டு விடாதே.
எனக்கு முழு விவரங்களும் கதையோடு தேவை. இரண்டு வால்யூம்களின் கதைகளும் தனித்தனியாக வேண்டும்.
ஏதாவது தவறு இருந்தால் திருத்து. இப்படத்தைப் பற்றி முழு விவரங்களையும் தந்து விட்டு அப்புறம் எங்கு வேண்டுமானாலும் போ. விட மாட்டேன்.
ப்ளாக் மாம்பா, காட்டன் மவுத், சினேக் சார்மர்....ஒன்று விடாமல் வேண்டும். அந்த ஒற்றைக் கண் கொடூர ஆணழகி முதற்கொண்டு.
படுபாவி! தூக்கத்தைக் கெடுத்தாயே!
-
கோ,
அந்த ஸ்கூலில் இருந்து வரும் நீக்ரோ பச்சைக் குழந்தை முன் உமாவும், அந்தக் குழந்தையின் தாயும் கத்தியுடன் மோதும் வேகத்தை எந்தப் படத்திலாவது பார்க்க முடியுமா? அதகளம் நடந்தும் குழந்தை என்ன நடக்கிறது என்று அறியாமல் முழிக்க உமாவும், அந்த தாயும் பிஞ்சு மனது நோகக் கூடாதே என்று அந்த நேரம் சண்டையை நிறுத்தி விட்டு மகளை அந்த தாய் உமாவிடம் அறிமுகப்படுத்த உமா அந்தக் குழந்தைக்கு வாழ்த்துச் சொல்வது ஓஹோ! குழந்தை அப்படிச் சென்றவுடன் மறுபடி ரணகள சண்டை. வாவ்...என்ன ஒரு சீன்.
https://youtu.be/hg6rqDX-1wQ
-
uma thurman.. good actress
-
இந்த ஆயுதத்தைப் பார்த்தாலே இன்னும் குப்பென்று வேர்க்கிறது.
http://img4.wikia.nocookie.net/__cb2...ol-1-still.jpg
-
-
முக்கியமாக அந்த பிளாஷ் பேக் கார்ட்டூன் காட்சிகள்.
உமா ஹோட்டலில் லூசியின் அடியாட்களிடம் ரத்தம் தெறிக்க தெறிக்க
மோதும் உக்கிர சண்டை. இறுதியில் ஒரு பொடியன் மட்டுமே மிஞ்சுவான். அவன் உமாவிடம் கை நடுங்க சண்டைக்கு வர உமா அவன் கத்தியைத் தட்டிவிட்டு நாலு சாத்து சாத்தி உங்க அம்மாகிட்டே ஓடு என்று பால்குடி குழந்தையாய் அவனை விரட்டுவது ஜோரான காட்சி.
https://youtu.be/0FxSfolCPn8
-
-
-
உமாவும், Chiaki Kuriyama வும் மோதும் படத்தின் உச்ச நிலை சண்டைக்காட்சி. மிரளாதவர்களே இருக்க முடியாது. கழுத்தில் சங்கிலி இறுக இறுக துருமன் காட்டும் எக்ஸ்பிரஷன்ஸ் பசுமையாய் நெஞ்சில் நிழலாடுகின்றன.
https://youtu.be/x9iIKn1Bl6c
-
ஹப்பாடி காலை ஏழேகாலுக்குக் கிளம்பி அந்த அரசு ஆஸ்பத்திரிக்குப் போனால்..
தாடி தலைக்குக் குல்லாய் அணிந்திருந்த ஓமானி ஏதோ ஒரு ஆலாபனையில் பாடிய படி நான் கொடுத்த பேப்பர்ஸை பச்சக் பச்சக் கென்று ஸ்டாம்ப் வைத்து
கையில் பாசமாக டோக்கனையும் வைக்க,
மறுபடி திரும்பி அந்தப் பழைய கட்டட்த்தின் இரண்டாவது மாடிக்கு லொங்கிடி லொங்கிடி என ஏறி பின் க்யூவில் பொறுமை காத்து (ஒரு இருபத்தைந்து பேர் இருக்கும்), அப்படியே அந்த அறைக்குப் போனால்,
கொஞ்சம் ரிம்லெஸ் கண்ணாடி அணிந்து (ஃபோட்டோ க்ரோமாட்டிக் இல்லை என நினைக்கிறேன்) கருமாணிக்க விழிகள் மின்ன (ர்வியால் வந்த வர்ணனை) கொஞ்சம்குண்டான கருஞ்சிற்பம் போன்ற நர்ஸ், ஒன்ற பேர் என ஆங்கிலத்தில் கேட்க,
யெஸ் மேடம் என்ற பவ்ய பாவனையில் சொல்ல மறுபடி பேப்பர்கள் பிரித்து சிலபேப்பரைக் கொடுத்து, முதலறையில் கொடுத்த அந்த சிரிஞ்சையும் கொடுத்து அதே அறையின் மூலையில் ஒரு பூஞ்சையாய் வயதான் நர்ஸ் (ரொம்ப ஒல்லி.. நான் பெருமூச்சு விட நாற்காலியிலிருந்து கொஞ்சம் எழும்பி அமர்ந்தாளென்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்) ஒக்காரு மேன் என ஹிந்தியில் சொல்ல,
கையை மடி மேன்...எனக் கேட்க முடியாத் இந்தாங்க என் உள்ளப் புறங்கை.. உள்ளங்கையின் பின்புறம் இதிலேயே எடுத்துக்கோமமா,
வலிக்குமேப்பா, சரி எனச் சொல்லி சின்சியராய் ஊசியை என் நரம்பைத் தட்டிக் கொஞ்சி எடுத்து அதில் குத்தி ர்ர்ர்ர் என எடுக்க,
எனது ரத்ததான அனுபவமெல்லாம் இல்லை.. இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை நடக்கின்ற ப்ரொஸீஜர் ரினிவல்.. மெடிக்கல்..
பின் முடித்து மறுபடி கார் ஏறி ஆஃபீஸ் வந்து மூச்சு முட்ட வேலை.. நடு நடுவில் சிந்து, சர்ரூ.. பார்த்தால் மறுபடியும் ஆர்.ஓ.பி எனப்படும் ராயல் ஓமான் போலீஸ் ஹெட்க்வார்ட்டர்ஸுக்குப் போகவேண்டுமாம்..பி.ஆர் ஓ சொல்ல,
போன தடவை போகலையேய்யா,
அதான் இந்த தடவை, நீங்கள், உங்க்ள் குடும்பம் மதியானம் மூன்று மணி போய்ட்டு வரலாம்..
அடப்பாவி ஊருக்குப் போவதால் இரண்டாயிரத்தெட்டு வேலை இருக்கேடா,
நீங்க தானே இப்பவே பண்ணச் சொன்னீங்க நான் ஊரு போய்ட்டு வாங்கன்னுசொல்லத் தாவலை... என உடைந்த ஆங்கிலத்தில் ஓமானி சொல்ல
சரியென மூன்றரைக்குக் கிளம்பி நான்கு மணிக்கு அந்த இடத்திற்குச் சென்று இரண்டரை மணி நேரம் அங்கும்டோக்கன் வாங்கி முகம் ஃபோட்டோ கைரேகை எலலாம் பதிந்து ஒர்க் பெர்மிட் எனச் சொல்லப் படும் வேலைக்கான அட்டை ரினிவல் முடிந்து வீட்டுக்கு வந்துவிட்டேன் என நினைத்தீர்களென்றால்.. நோ..
பின் ஷாப்பிங்க்க்க் பின் பின் ஒரு ப்ரான்ச் சரவணபவன் சென்றுஅங்கு பார்க்கிங்க் கிடைககாமல் மறுபடி இன்னொரு ப்ராஞ்ச் சென்று வாழைககாய் பஜ்ஜி காஃபி சாப்பிட்டு க் கிளம்பி வீட்டுக்குள் நுழைய பத்தாகிவிட்டது..ம்ம்
இந்த ஆங்கிலப் படங்களை எல்லாம் நான் பார்த்ததில்லை என்றால் கோபால் வாசு நம்ப வேண்டும்..ஆனால் இனி பார்ப்பேன்..
*
வளைகாப்புப் பாடல்கள் என்றாலே முதலில் நினைவுக்கு வருவது இரண்டு பாடல்கள்.. அதில் முதலானது..அடுத்த போஸ்டில்..
-
சுற்றிலும் இருட்டாய் மெல்ல
..சூழ்ந்திடக் கொஞ்சம் மூச்சு
சுற்றியே கால்கள் முட்டி
..சுழன்றுதான் இருக்கும் போதில்
எட்டியே கேட்ப தென்ன
..இனிமையாய் ஒலிகள் என்ன
குட்டியாய்ப் பாப்பா கேட்க
..குலுங்கிடும் வளைகள் அன்றோ..
வளைகாப்பு அவரவர்கள் குடும்ப வழக்கப் படி ஆறாவது முதல் எட்டாவது மாதத்தில் முதல் குழந்தைக்குயின் கர்ப்பத்தின் போது அந்தப் பெண்ணிற்குச் செய்வார்கள்.. கர்ப்பிணிப் பெண்களின்கைகளில் வளையல்கள் அணிவித்து கொஞ்சம் பாடி மகிழ்வதும் உண்டு..பேஸிக்கலாக திருஷ்டிகள் அண்டாமல் இருக்கவேண்டும் என்றும் சொல்பவர்கள் உண்டு..ஆக்சுவல் காரணம்.. அப்போது தான் அந்தச்சின்ன மொட்டான கரு கொஞ்சம் வெளிஉலகின் ஒலிகளை உற்றுக் கவனிக்கத்தொடங்குமாம்..அதற்குச் சொல்லிக் கொடுக்கவே இது – இந்த ஃபங்க்ஷன் என்பார்கள்..
இங்கு பாருங்களேன் ஒரு பாட்டி, தன் பேரனின் மனைவிக்கு அவளது வளைகாப்பிற்கு அமர்க்களமாய் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் செய்கிறாள்..
யாராக்கும் அந்தப் பாட்டி..
*
பணம் … தலைமுறை தலைமுறையாய்ச் சேர்த்து வைத்த சொத்தின் மூலம் கிடைக்கும் பணம்..அதனாலேயே அந்தப் பணக்காரப் பெண்மணிக்கு அகந்தை, ஆணவம் வந்தது என்றால் உண்மை தான்..
அந்தப் பெண்மணிக்குஒரு பையன்.. அடக்க சுபாவம்..ஆனால் அவனுக்கும் இளமையில் எல்லாருக்கும் வரும் காதல் வந்துவிடுகிறது..காதல் வரலாம்..ஆனால் பணக்காரன் என்றால் பணக்காரியைத் தான் காதலிக்க வேண்டும்..அப்பொழுது தானே குல கெளரவம் எல்லாம் காக்கப்படும்..
ஆனால் அவன் காதலித்தது ஏழைப் பெண்ணை..மணமும் செய்து விடுகிறான்..பொறுக்குமா அந்த கண்ணம்மைக்கு..பணக்காரப் பெண்ணின் பெயர் அது என வைத்துக் கொள்ளலாம்..பையனை மிரட்டி அந்த ஏழைப் பெண்ணிடமிருந்துபிரித்தும் வைத்து விடுகிறாள்..
ஏழைப்பெண் என்ன செய்வாள்.. கர்ப்பவதியான அவள் காலத்தில் குழந்தை பெற்று வளர்க்கிறாள்.. குழந்தையின் பெயர் செளரி ராஜன்..
செளரி வளர்ந்துபெரியவனாகிறான்.. அவனுக்கு அவனது பாட்டியைப் பற்றிய விஷயங்கள் தெரியவருகின்றன.. அதே சமயத்தில் அவனும் காதல் வயப்பட்டு காதலித்த பெண்ணையே மணமுடிக்க அது பாட்டிக்குத் தெரியவருகிறது..
ஒரு புறம் பாட்டிக்கு பேரன் மீது அன்பு மருமகள் வேண்டாம் பேரனின் மனைவியைப் பிடித்துவிடுகிறது..
பேரனின் மனைவி கர்ப்பமாயிருப்பதை அறிந்து அவளைத் தனது வீட்டிற்கு வரவழைத்து அலங்காரம் செய்து அமர்க்களமாக வளைகாப்பைக் கொண்டாடுகிறாள்..
பின் பின்..பின் பாட்டி மனம் மாறினாளா.. செளரியின் அப்பாவும் அம்மாவும் இணைந்தார்களா என்பது க்ளைமாக்ஸ்..
இது.. இது சத்தியம் என்ற படத்தின் கதைச்ச்சுருக்கம்.. ரா.கி. ரங்கராஜன் குமுதத்தில் தொடர்கதையாக எழுதியது அதே தலைப்பில் படமாக வந்தது
செளரியாக அசோகன், பாட்டியாக கண்ணாம்பா (என்ன ஒரு கம்பீரம்) செளரியின் அப்பாவாக டி.எஸ்.பாலையா என ஒரு உணர்ச்சிப் போராட்டமேபடத்தில் உண்டு..செளரியின் மனைவி சந்திர காந்தா..
பாடல்கள் எல்லாமே அருமையானவை..
சிங்காரத் தேருக்கு சேலைகட்டி – ஹேமாமாலினி
மனம் கனிவான அந்தக் கன்னியைக் கண்டால் – அசோகன் சந்திரகாந்தா
எல்லாம் அறிந்த இறைவனின் ஆணை சொல்லப்போவது யாவையும் உண்மை.. சத்தியம் இது சத்தியம் – அசோகன்
குங்குமப் பொட்டு குலுங்குதடி..இது தான் நாம் பார்க்கப் போகும் பாட்டு..
*
குங்குமப் பொட்டு குலுங்குதடி நல்ல கோமள மஞ்சள் விளங்குதடி
மங்கலத் தோற்றம் பொங்கியெழுந்து மகன் வருவதைக் கூறுதடி
கண்ணகி வந்து பிறப்பாளோ கற்புக் கவிதை படிப்பாளோ?
நல்ல கற்புக் கவிதை படிப்பாளோ?
கங்கை கொண்டவன் காவிரிச் சோழன் மங்கை வயிற்றில் உதிப்பானோ?
மங்கை வயிற்றில் உதிப்பானோ ஆஹா மங்கை வயிற்றில் உதிப்பானோ?
சிங்கத்தை வெல்லும் வரதனோ சேரநாட்டு மறவனோ?
கையில் மங்கை தங்கும் எங்கும் பொங்கும் மாமயில் கொண்ட முருகனோ? - ஆஹா
மாமயில் கொண்ட முருகனோ?
என ஆட்டம் பாட்டமாய் சந்திரகாந்தாவுக்கு வளைகாப்புச் சூட்டுகையில் பாட்டி கண்ணாம்பா என்ன சொல்கிறார்..
பேரிடும் பாட்டன் உருவமோ என்தன் பேரன் குழந்தை அழகனோ? (ஒரு மிஸ்டேக் யுவர் ஹானர்..இதில் பேரன் இல்லை;.இது கொள்ளுப்பேரன் அல்லது கொ.பேத்தி கண்ணாம்பாவிற்கு)
பரத நாட்டுத் தலைவன் போலப் பண்பு நிறைந்த தலைவனோ?
பக்தி நிறைந்த ஞானியோ பாடித் திரியும் தேனீயோ
நல்லகட்டி வெல்லம் எங்கள் வீட்டில்
தாவித் திகழ்ந்து தவழுமோ ஆஹா
தாவித் திகழ்ந்து தவழுமோ?
*
பொங்கியெழு மனோகரா என ச்சீறிய கண்ணாம்பாவை இந்தப் படத்தில் கம்பீரம் திமிர் ஆணவத்தின் உருவாகப் பார்த்த போது வித்தியாசமாக இருந்தது..
ரா.கி.ரங்கராஜன் அவரது சுயசரிதையில் – தொடர்கதை என்று எழுத ஆரம்பித்து முதல் மூன்று அத்தியாயத்திற்குக் கதானாயகனே வராமல் எழுதிவிட்டேன்..அப்புறம் மூன்று அத்தியாயங்கள் வந்தவரை கதானாயகனின் நண்பனாக மாற்றிவிட்டேன் என எழுதியிருந்ததாக நினைவு..
நல்ல படம்.. நல்ல பாடல்கள்.. நல்ல வளைகாப்புப் பாடலும் கூட
p.susheela, s.janaki music m.s.v and rama moorthi lyrics kEtka vEnumaa enna.. Kannadaasan..
https://youtu.be/Mhfkoyui21w
appuram vaarEn :)
-
வாசு,
நான் எனக்கு பிடித்த இயக்குனர்களின் ஒரு படத்தை மட்டுமே எடுத்து, அதை பற்றிய சுற்று சூழ்நிலை, எனக்கு ஏன் பிடிக்கும் என்று விளக்கி விட்டு, பார்க்க தூண்டி விட்டு கடந்து விட எண்ணியிருந்தால் ,நீங்கள் என்னை விளக்க தூண்டுகிறீர்கள்.
எல்லா western ,cowboy ,அது எந்த நாட்டு,மொழி,இன படமாக இருந்தாலும், mafia கொலை கும்பல்,அது சார்ந்த பழிவாங்கல்,என்றே போகும்.
நமது காலம் வெல்லும்,கங்கா உட்பட.(நான் கர்ணன் விசிறி)
அதில்தான் வசீகரம் கலக்கிறார் டாரண்டினோ. நமக்கு பரிச்சயமான விஷயத்தில் ,அசாதாரண பின்னணிகள், வினோத கதை சொல்லல்,குரூரத்தை அழகுணர்ச்சியுடன் காட்டல் , உமாவை அற்புதமாக செதுக்கி ,இந்த படத்தை எங்கோ கொண்டு போய் விட்டார்.(இசை வேறு பின்னணிக்கு தோதாய்-ரசிகனையா இவன்)
இதன் பின்னணி bill (Snake Charmer )என்பவன் Deadly viper assassination squad(பாம்பு பெயர்கள் அங்கத்தினர்களுக்கு) என்ற அவனது gang இலிருந்து துரோகம் பண்ணி ஒதுங்கி விட்டதாக நினைக்கும் மணப்பெண் என்று அழைக்க படும் (2 ஆம் பாகத்தில் அவள் பெயர் Beatrix Kiddo என்பது தெரியவரும்.இவளுக்கு பாம்பு பெயர் Black Mamba ) அந்த பாத்திரத்தை ,அவள் மணநாளன்று ,தேவாலயத்தில் ,முழு மண விழா குழுவினரையும் குரூரமாக கொல்வதில் துவங்கும்.நான் உன் குழந்தையை சுமக்கிறேன் என்று பில்லிடம் மணப்பெண் சொல்லி விட்டு ,நினைவிழப்பாள் .
4 வருடம் கோமா நிலையில் இருந்து மீளும் மண பெண் (இடையில் Elle Driver மூலம் விஷ ஊசி போட்டு கொலை முயற்சி -பில் வேண்டாம் என்று திருப்பி விடுவான்)தன்னை நினைவிழந்த நிலையில் தன்னை உடலுறவுக்கு உபயோகித்தவனை கொன்று விட்டு தப்புவதில் தொடங்கி ,பழிவாங்கல் கதை தொடங்கும்.
முதல் பலி Vernita Green (copper Head ). குடும்பம் குட்டியுடன் செட்டில் ஆன இவளை மகள் முன்னாள் கொல்ல வேண்டாம் என்று வெளியில் அழைப்பாள் .ஆனால் ரகசியமாக துப்பாக்கி எடுக்க முயல்பவளின் நெஞ்சில் கத்தி பாயும்.
பிறகு O Ren Ishil(Cotton Mouth )என்ற அமெரிக்க .சீன -ஜப்பானிய பெண்.இவள் யகூசா என்ற ஜப்பானிய மாபியா புதிய தலைவி.(தன் பெற்றோர்களை கொன்ற பழைய தலைவனை,தன் தலைமையை கேள்வி கேட்கும் அல்லக்கையை கொன்று). அவளை டோக்யோ உணவு விடுதி ஒன்றில் கூட்டத்துடன் சந்தித்து (அதில் ஒருவராக நம் டரண்டினோ) அவளின் தலை மேற்பகுதியை இளநீர் போல சீவுவாள் .
Hatori Hanzo என்பவனை சந்தித்து தனக்கு ஒரு விசேஷ வாள் செய்து தர சொல்லி வேண்டுவாள் மணப்பெண் .அவரோ ஒதுங்கியிருப்பவர்.தன்னுடைய பழைய மாணவன் Bill தான் குறி என்றதும் உடன் படுவார். விசேஷ வாள் தயார்.
O Ren Ishil உதவியாள் Sophie என்பவளை சித்திரவதை செய்து Bill பற்றி செய்தியறிய மணப்பெண் முயல்வாள். sophie இடம், பெண் உயிரோடிருப்பது அவளுக்கு தெரியுமா என்று Bill கேட்பதில் முதல் பகுதி முடியும்.
-
அடுத்து பில்லின் தம்பி Budd(Side Winder ) . பில்லினால் எச்சரிக்க படும் Budd ,தயாராக ஒரு துப்பாக்கி. தோட்டாவுக்கு பதில் மலை உப்பு. அதனால் வீழ்த்த படும் மன பெண் உயிரோடு புதைக்க படுகிறாள்.அந்த விசேஷ வாளை Elle Driver (California Mountain Snake )என்ற ஒற்றை கண் பெண்ணிடம் கொடுத்து விற்க சொல்வான் Budd .
பில்லின் முயற்சியால் Pai Mei என்ற martial art விற்பன்னரிடம் சென்று கற்க முயல்வாள் மணப்பெண்.முதலில் அவளை எள்ளி நகையாடும் Pai Mei ,பிறகு அவளிடம் ஈர்க்க பட்டு, தன் விசேஷ வித்தையான Five Point Palm Exploding Heart Technique என்ற ஒன்றை கற்பிப்பார்.(ஐந்து முறை நடந்ததும் எதிரி மாண்டு வீழ்வான்).
Pai Mei கற்பித்த கலையை கொண்டு சவ பெட்டியில் உயிரோடு புதைக்க படும் மணப்பெண் (Beatrix )மீண்டு வருவாள்.(கொஞ்சம் அம்புலி மாமா சாயல்)
Elle(இவளும் Pai Mei சிஷ்யை.அவரால் ஒரு கண் இழந்து விஷம் வைப்பாள்) வாளில் mambasa விஷ பாம்பை வைத்து Budd ஐ கொன்று விட்டு வாளுடன் தப்ப முயல, Beatrix அவளுடன் சண்டையிட்டு அந்த இன்னொரு கண்ணையும் கொய்து விடுவாள்.(காட்ட படும்).விஷ பாம்புடன் கண்ணின்றி தனியாக அலறுவாள்.
தன் 4 வயது பெண் BB பில்லுடன் மெக்ஸிகோ வில் இருப்பதை அறிந்து ,அங்கு செல்வாள். அப்போது பில் அம்பு மூலம் உண்மை அறியும் மருந்தை (Truth Serum )அவளுக்கு செலுத்தி ,அவள் கூட்டத்துக்கு துரோகம் செய்த பின்னணி அறிவான்.Lisa வை பழிவாங்க கூட்டத்தால் அனுப்ப படும் Beatrix ,தன்னை கொல்ல லிஸா வால் அனுப்ப படும் Karen உடன் உடன்படிக்கை செய்து கூட்டத்தை விட்டு வெளியேறி புது வாழ்வுக்கு முயன்றதன் காரணம் தான் கற்பம் என்பதை அறிந்து குழந்தையின் நல்வாழ்வை முன்னிட்டே என்ற உண்மையை சொல்கிறாள் Beatrix .
இதனால் சமாதானமடையும் Bill தன் முடிவுக்கு தயாராகிறான்.Beatrix தான் Pai Mei இடம் கற்ற விசேஷ வித்தையை அவன் மீது பிரயோகிக்க அவன் ஐந்தடி எடுத்து வைத்து வீழ்கிறான்.Beatrix தன் மகள் BB யுடன் வெளியேறுவதில் படம் முடியும்.
தயவு செய்து இரண்டு பகுதிகளையும் ஒரு சேர பாருங்கள்.
வாசு,திருப்தியா?
-
சின்ன கண்ணன்,
மற்ற ஆசிரியர்களிடம் சொல்லி அனுமதி பெற்று புண்ணியமில்லை. ஹெட் மாஸ்டர் நான் சொன்னால்தான் லீவ் கிடைக்கும். உங்களுக்கு லீவ் கொடுக்க முடியாது. Holiday என்று கூறியிருப்பதால் Holiday Homework ஆக
தோழியர் பாடல் ஆரம்பியுங்கள்.(சித்திர பூவிழி,உனது மலர் கொடியிலே,பாட்டொன்று தருவார்,ராதைக்கேற்ற கண்ணனோ,தூது சொல்ல இப்படி....)
-
டியர் கோபால்
எனக்கு பிடித்த தோழி பாடல் ...உங்களுக்கும் பிடிக்கும் என்று நினைக்கிறேன் .
https://youtu.be/cgfn_s6bPSw
-
திரையில் பக்தி -6:
பக்தி என்றாலே முருகன் அல்லது கண்ணன் பாடல்களே ஏராளம்
முருகா என்றால் உருகாதா மனம்.. அதுவும் மதுரை சோமு அவர்களின் குரலில் இந்த பாடலை மருதமலை மாமணி அந்த முருகனே மருதமலையிலிருந்து
வரமாட்டாரா என்ன
குன்னக்குடி வைத்தியநாதனின் இசையில் கண்ணதாசனின் வரிகள்
https://www.youtube.com/watch?v=82qfhI7uZf0
-
//வாசு,திருப்தியா?//
கோ,
சிசர்ஸ் பரம திருப்தி.:)
நன்றி கோ. நிஜ நன்றி!
இது உங்கள் ஒருத்தரால் மட்டுமே சாத்தியம். இது சத்தியம். என்ன ஒரு ரசனை! கோர்வையாக நீங்கள் பில் கதை கோர்த்தது வெகு சாமர்த்தியம். நீங்கள் சொன்னது போது பிட் பிட் ஆன துண்டுகளை (கன்னா பின்னா) ஒன்று சேர்த்து வரிசை சரம் கோர்த்தது அமர்க்களம். கொஞ்சம் தலை சுற்றல் கதைதான்.
இத்தனை முறை பார்த்தும் சில சில இடங்களில் குழம்புவேன். இப்போது தெளிவானேன். மறுபடி உட்கார்ந்தால் முழுமையாகும். சில படங்களின் ஆதிக்கத்திலிருந்து மீள்வது அவ்வளவு லேசல்ல. ரோஷமான் போன்றவை. கில் பில் அதிலொன்று.
//அதில்தான் வசீகரம் கலக்கிறார் டாரண்டினோ. நமக்கு பரிச்சயமான விஷயத்தில் ,அசாதாரண பின்னணிகள், வினோத கதை சொல்லல்,குரூரத்தை அழகுணர்ச்சியுடன் காட்டல் , உமாவை அற்புதமாக செதுக்கி ,இந்த படத்தை எங்கோ கொண்டு போய் விட்டார்.(இசை வேறு பின்னணிக்கு தோதாய்-ரசிகனையா இவன்)//
நீங்கள் இசையின் ஆதிக்கத்தைப் பற்றிக் குறிப்பிட்டது சத்தியமான உண்மை. நிஜமாகவே ரசிகன்தான். குறிப்பாக ஆம்புலன்ஸ் அலாரம் போல துருமன் போராட்டக் களத்தில் வாளெடுத்து சுழற்றும் போது ஒரு சைரன் ஒலி ஒலிக்குமே! ஞாபகம் இருக்கிறதா?
https://youtu.be/cOy6hqzfsAs
அந்த விசில் ட்ராக் வெரி சிம்பிள்.
https://youtu.be/S32X5-eKVp4
-
//4 வருடம் கோமா நிலையில் இருந்து மீளும் மண பெண் (இடையில் Elle Driver மூலம் விஷ ஊசி போட்டு கொலை முயற்சி -பில் வேண்டாம் என்று திருப்பி விடுவான்)தன்னை நினைவிழந்த நிலையில் தன்னை உடலுறவுக்கு உபயோகித்தவனை கொன்று விட்டு தப்புவதில் தொடங்கி ,பழிவாங்கல் கதை தொடங்கும்.//
Elle Driver கொஞ்சம் கூட பதட்டப்படாமல் துருமனுக்கு விஷ ஊசி ரெடி பண்ணும் காட்சி. உடன் புகழ்பெற்ற அந்த விசில் சப்தமும்.
https://youtu.be/i94nansYjsM
-
Elle விஷப் பாம்பை விட்டு Budd ஐ கடிக்க வைத்து ரசிக்கும் கொடூரம். சூட்கேஸில் பண அடுக்குகளின் மத்தியில் இருந்து எழுந்து கோர தாண்டவம் ஆடி பாட்டின் முகத்தை பாம்பு கொத்திப் பிடுங்கும் கொடூரம்.
https://youtu.be/QsaG8rJGlyQ
-
-
Elle யுடன் Beatrix (uma)வாளுடன் மோதி, அவள் கண்களை பாம்பு கொத்துவது போல கைகளால் கொத்தி, கண்களைப் பிடுங்கி, அவளைத் துடிக்க வைத்து (கழிப்பறை வேறு) பிடுங்கிய கண்களை (அம்மாடி எவ்வளவு பெரிய கண்!) கீழே போட்டு கால்களால் நசுக்கி... அடேயப்பா வன்மத்தின் உச்சம். காணக் கண் கோடி வேண்டும் கோ.:)
https://youtu.be/RWwGXIjxbnI
-
கருவின் கரு - பதிவு 92
மாணிக்கம் தொடர்கிறது
மாணிக்க மூக்குத்தி மதுரை மீனாட்சிக்கு
மதுரையிலே முகூர்த்த நாள்...
https://youtu.be/uuGHetzS400
https://youtu.be/Hh3hTu3SUlw
https://youtu.be/9K8Q8zjXy70
-
கருவின் கரு - பதிவு 93
மரகதம்
Emeralds, like all colored gemstones, are graded using four basic parameters–the four Cs of Connoisseurship: Color, Cut, and Clarity and Carat weight. Before the 20th century, jewellers used the term water, as in "a gem of the finest water”, to express the combination of two qualities: colour and clarity. Normally, in the grading of coloured gemstones, colour is by far the most important criterion. However, in the grading of emeralds, clarity is considered a close second. Both are necessary conditions. A fine emerald must possess not only a pure verdant green hue as described below, but also a high degree of transparency to be considered a top gem.
http://i818.photobucket.com/albums/z...psrahvan3s.jpg
http://i818.photobucket.com/albums/z...ps3iv00e7g.jpg
http://i818.photobucket.com/albums/z...ps6qoex7z1.jpg
அகஸ்தியரின் நவரத்தின மாலை - 6 மரகதம் (எம்ரால்ட்)
" மரகத வடிவே சரணம் சரணம் "
மரகதம் மிகவும் அழகான நவரத்தின கல் - அந்த நிறத்தில் இருக்கும் அன்னை இன்னும் அழகானவள் - அவள் பாதங்களில் சரணடைகிறேன் .
நம் எண்ணங்கள் :
நிறத்தை இழந்து , தன் அழகையும் இழந்து நம்மை வளர்க்கிறாள் - அவளுடைய கருணையின் அழகுக்கு முன் இந்த மரகதம் எம்மாத்திரம் ?
உண்மை சம்பவம் 12.
உண்மை சம்பவம் 12.
சந்துருவின் தாய் ஒரு சிறந்த மருத்துவர் . அவரிடம் வரும் நோயாளிகள் அதிகம் . மருந்துகளைத்தவிர அவளுடைய வார்த்தைகளில் இருக்கும் கனிவு , அன்பு மருந்துகளை சாப்பிடாமலேயே நோய்களை விரட்டிவிடும் . யாரை குறை சொல்லலாம் என்று அவள் மனம் என்றுமே நினைப்பதில்லை - எல்லோருக்கும் ஒரு பொது மொழி அது அன்புதான் என்று நினைப்பவள் . மனோதத்துவங்கள் தெரிந்தவள் . ஒருமுறை ஒரு நபர் அவளிடம் சென்றார் . அந்த சமயத்தில் அந்த மருத்துவர் தன் நாயுடன் விளையாடிக்கொண்டிருந்தார் - இந்த நபரை பார்த்ததும் " பெப்பி ரூமுக்கு வெளியில் நில்லு " என்று சொல்லி தன கதவின் ரூமை சாத்திக்கொண்டார் .. அந்த நபருடன் உரையாடல் தொடங்குகிறது .
டாக்டர் ! கொஞ்ச நாட்களாக அடிக்கடி இறந்து விடுவோம் என்ற பயம் வருகிறது . இன்னும் வாழ்க்கையை சரியாக அனுபவிக்கவில்லை
- இறந்த பின் என்ன வாகும் ? இந்த பயத்தை எப்படி போக்குவது ?
டாக்டர் : பதில் ஒன்றுமே சொல்லாமல் எழுந்து சென்று தன் ரூமின் கதவைத்திறந்தார் . அவளின் நாய் ஓடிவந்து அவள் கால்களில் விழுந்து அவளை கொஞ்சியது . உடனே அந்த நபரிடம் " பார்த்தீர்களா - இங்கு என்ன நடந்தது என்று இந்த நாயிக்குத் தெரியாது - ரூமுக்குள் நான் இருக்கிறேன் என்பது ஒன்று மட்டும் தான் தெரியும் . நம் எல்லோருக்கும் ஒரு மாஸ்டர் இருக்கிறான் - அவன் நம்மை பார்த்துக்கொள்வான் - நமக்கு வேண்டியது அவனிடம் நம்பிக்கை - இந்த நாயைப்போல -------
அந்த நபரின் முகத்தில் வெளிச்சம் , மகிழ்ச்சி - ஒரு பெரிய விஷயத்தை இவ்வளவு சுலபமாக சொல்ல முடியுமா ? சந்துருவை மிகவும் பாராட்டினேன் - இப்படி ஒரு தாயை அவன் பெற்றதற்கு .
1. https://youtu.be/026qHaAnsFc
-
-
//இதனால் சமாதானமடையும் Bill தன் முடிவுக்கு தயாராகிறான்.Beatrix தான் Pai Mei இடம் கற்ற விசேஷ வித்தையை அவன் மீது பிரயோகிக்க அவன் ஐந்தடி எடுத்து வைத்து வீழ்கிறான்.Beatrix தன் மகள் BB யுடன் வெளியேறுவதில் படம் முடியும்.//
இறுதியில் இதய அட்டாக். துருமனின் அழுகை செண்டிமெண்ட் தமிழை நினைவூட்டுகிறது. பில் கோட்டெல்லாம் சரி பண்ணிக் கொண்டு சாவது கொஞ்சம் வேடிக்கைதான்.:)
https://youtu.be/zrigaQbUvZQ
-
ராகவேந்திரன் சார்!
http://vignette3.wikia.nocookie.net/...20140205162144
'நானே ராஜா' ஆய்வு நீங்கள்தான் 'பதிவுகளின் ராஜா' என்று பறை சாற்றி விட்டது. அற்புதமான அலசல். இதுவரை யாரும் தொடாதது. என் மனமுவந்த வாழ்த்துக்கள்.
-
//படைப்பாளிகளை விட படைப்பாளிகளுக்கு ஊக்கமும் உற்சாகமும் தருபவர்கள் உண்மையிலேயே போற்றத்தக்கவர்கள்.
அந்த அடிப்படையில் நமது நெல்லை கோபு அவர்கள் இந்த மய்யம் திரியிலேயே அதிக அளவில் மற்றவர்களை ஊக்குவித்துள்ளார் தனது லைக்குகளின் எண்ணிக்கையின் மூலம். மய்யம் திரியிலேயே ஐந்தாயிரத்திற்கும் அதிகமாக மற்றவர்களின் பதிவுகளுக்கு ஆதரவு தெரிவித்து முன்நிலையில் உள்ள கோபு அவர்களுக்கு நமது உளமார்ந்த நல்வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
அவருக்கு நாம் அனைவரும் சேர்ந்து நம்முடைய பாராட்டுக்களைத் தெரிவிக்க வேண்டும் என விரும்புகிறேன்.//
நானே சொல்ல வேண்டும் என்றிருந்தேன் ராகவேந்திரன் சார். நீங்கள் சொல்லி விட்டீர்கள். அமைதியாக பாராட்டுக்கள் தெரிவிக்கும் கோபு சாருக்கு என் சார்பாகவும், மதுர கானங்கள் சார்பாகவும் ஆழ்ந்த நன்றிகள்.
-
ரவி சார்,
மாணிக்கங்களாக, மரகதங்களாக உங்கள் கருவின் கரு நூறு தொடப் போகிறது. முதல் வாழ்த்து என்னுடையதாக இருக்கட்டும். வாழ்த்துக்கள்.
உங்கள் அயரா உழைப்புக்கும், அருமையான பாடல்களுக்கும் பாராட்டுக்கள்.
-
மாணிக்கம் இன்னும் இருக்கின்றன. மரகதத்திற்கு வந்து விட்டோம். என்றாலும் மாணிக்கமான ஒரு மாணிக்கப் பாடலைப் பார்த்தும் கேட்டும் ரசிப்போமா..
மெல்லிசை மன்னரின் இசையில் துணைவி படத்திற்காக மலேசியா வாசுவும் எஸ்.ஜானகியும் இணைந்தளித்த அருமையான கானம்.
http://www.dailymotion.com/video/xul...ong_shortfilms
-
மெல்லிசை மன்னரின் சாம்ராஜ்ஜியம் 80களிலும் தொடர்ந்ததற்கான துவக்கமான இப்பாடல் என்றென்றும் நம் நினைவில் நீங்காத மரகதமாகும்.
மேகத்தையே இங்கு மரகதமாக்கி உவமை கூறுகிறார் கவிஞர்.
மரகத மேகம் சிந்தும் மழை வரும் நேரமிது..
சி.க. சார் பக்கெட்டை எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்..
https://www.youtube.com/watch?v=MnG0hMm5os0
-
எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய பழைய பாடல்கள்
http://2.bp.blogspot.com/-HRNJSnA1-8...Y/s320/spb.jpg
(நெடுந்தொடர்)
8
'நீராழி மண்டபத்தில்'
http://padamhosting.me/out.php/i1333...aivanCover.jpg
அடுத்த பாலாவின் தொடர் வரிசையில் வருவது 'தலைவன்' படத்தின் 'நீராழி மண்டபத்தில்' பாடல்.
பாலா இதுவரை பாடிய பாடல்களை நீங்கள் உணர்ந்து கேட்டிருப்பீர்கள். ஆனால் இந்தப் பாடலில் அவர் குரல் இன்னும் இளமையாக, பஞ்சு போல் மிருதுவாக ஒலிப்பதை கேட்பதை நீங்கள் நன்றாகவே உணரலாம். சற்றே பெண்மை கலந்த ஆணின் குரல்.
எம்.ஜி.ஆர் அவர்களும், வாணிஸ்ரீயும் நடித்த கனவு டூயட் பாடல்.
http://i1087.photobucket.com/albums/...102121.726.jpg
வாணிஸ்ரீ பத்திரிகையில் வந்த எம்.ஜி.ஆர் அவர்களின் படத்தைப் பார்த்து, பின் சுவற்றில் மாட்டியுள்ள நீராழி மண்டபத்தில் காதல் புரியும் ரதி மன்மதன் போன்ற காதலர்களின் புகைப்படத்தைப் பார்த்து கனவு காணுவார். புகைப்படத்தில் தெரியும் நீராழி மண்டபம் இப்போது நிஜ செட்டாகத் தெரிய, பாடல் ஆரம்பிக்கும்.
சிம்பிளான பாடல்தான். வரிகளில் தமிழ் கொஞ்சுகிறது. அதிக செட்கள், ஆடம்பரம் என்றில்லாமல் எளிமையாகவே பாடல் எடுக்கப்பட்டிருக்கிறது. (சற்று வறட்சி நிலைதான்)
முஸ்லீம் மங்கை போல கழுத்திலிருந்து கால்வரை முழு உடை தரித்து, கழுத்தில் தொங்கும் இரட்டை ஜடையுடன், 'பார்பி' டால் மாதிரி நெற்றியில் புரளும் முடியுடன் வாணிஸ்ரீ மிக அழகாக மும்தாஜ் போல ஜொலிக்கிறார். தலையில் முக்காடிட்டிருக்கும் மெல்லிய வெள்ளைத் துணி மேலும் அழகூட்டுகிறது. அதே போல கைகளில் கட்டியிருக்கும் கர்சிப் போன்ற கிளாத்தும்.
http://i1087.photobucket.com/albums/...102158.680.jpg
எம்.ஜி.ஆர் அவர்கள் ஒயிட் அண்ட் ஒயிட் கோட்டில் 'எங்கே அவள்?...என்றே மனம்'...'குமரிக் கோட்டம்' தோற்றத்தை நினைவு படுத்துவார்.
மீன் தொட்டியின் உள் தோற்றத்தைப் போல செட். நீர்த்தாவரங்களும், அடியிலிருந்து கிளம்பும் நீர்க்குமிழ்களும், சுற்றித் திரியும் மீன்களும் இதுபோல நிறைய தடவை பார்த்தாயிற்றே என்று சலிப்படையத்தான் வைக்கும். பின் அடுத்த சரணம் விண்ணில் உலவுவது போல.
வழக்கமான காதல் உற்சாகம் எம்.ஜி.ஆர் அவர்களிடம் குறைந்தது போல இருக்கும். தாவல், துள்ளல், துவட்டல்கள் அதிகம் இருக்காது.
'போய் மறைந்த நிலவும் முகில் கிழிக்க' எனும் போது எம்.ஜி.ஆர் அவர்களின் கைவிரல்கள் ஆட்டோமேடிக்காக இரட்டை இலைச் சின்னத்தை சுட்டிக் காட்டுவது போல இயற்கையாக அமைந்தது விந்தை.
http://i1087.photobucket.com/albums/...102112.703.jpg
பாடல் முடிவடையும் தருவாயில் மீண்டும் பல்லவிக்கு வரும் போது எம்.ஜி.ஆர், வாணிஸ்ரீ ஸ்டில்கள் 6 காட்டியே பாடலை முடிப்பது அட்ஜஸ்ட்மென்டா:) அல்லது புதுமையா என்று குழப்பம் வருகிறது. ஒருவேளை கால்ஷீட் கிடைக்காததால் இவ்வாறு ஒப்பேற்றி விட்டார்களோ!?
அருமயான பாடல். பாலா, சுசீலா நல்ல ஒத்துழைப்பு. கொஞ்சும் பாடல் வரிகள். இனிமையான இசை எல்லாம் அமைந்திருந்தும் பாடல் படமாக்களில் இன்னும் கவனம் செலுத்தியிருக்கலாமோ என்று தோன்றுகிறது.
'காதலிலே பெண்மை தலை குனியும்' என்று சுசீலா முடித்தவுடன் பாலா தரும் 'ஆ'....ஹம்மிங் அவருக்கே உரித்தான தனித்துவம் பெற்றது.
'பெண்ணிலவு அங்கே நாணுவதைக் கண்டு
வெண்ணிலவு முகிலில் போய் மறைய'
கவிஞரின் (வாலி) திறமைக்கு இருவரி எடுத்துக்காட்டு.
'காதலி வெட்கப்படும் போது நமக்கு இங்கே என்ன வேலை? மேகத்துக்குள் ஒளிந்து கொள்வோம்... வெளிச்சம்தானே தடை...இருட்டில் அவள் வெட்கம் கொள்ளாமளிருக்கட்டும்... காதலனும் ஜமாய்க்கட்டும்'...
என்று நிலவு மேகத்துக்குள் போய் ஒளிந்து கொள்கிறதாம். நல்ல வளமான சுவைமிகுந்த கற்பனை நயம். எஸ்.எம்.எஸ். இசை வழக்கம் போல் வளமை! இனிமை!
இந்தப் படத்தில் வழக்கமான எம்.ஜி.ஆர் படங்களில் பணி புரியும் தொழில் நுட்பக் கலைஞர்கள் குறைவாகவே பணி புரிந்திருப்பார்கள். (ஆர்.கே.சண்முகம் போன்ற ஒரு சிலர் தவிர)
கிறித்துவர் தயாரிப்பு (பி.ஏ தாமஸ்) என்பதால் நிறைய கிறித்துவ உதவி தொழில் நுட்பக் கலைஞர்கள் இப்படத்தில் பங்கு பெற்றிருப்பார்கள். உதவி இயக்கம், படத்தொகுப்பு உதவி இயக்கம் அலெக்சாண்டர் ரோச் என்ற நபர். இயக்கம் தாமஸ் மற்றும் சிங்கமுத்து
எஸ்.பி.பி பாடிய பழைய பாடல்களில் எல்லோரும் ஞாபகம் வைத்து சொல்லும் பாடல் என்பதிலேயே இப்பாடலின் வெற்றியை அனைவரும் உணரலாம். பாலா நிறைய சுசீலாவுடன் பாட ஆரம்பித்த கால கட்டமிது.
நன்றி!
http://i1087.photobucket.com/albums/...102102.087.jpg
நீராழி மண்டபத்தில்
நீராழி மண்டபத்தில்
தென்றல் நீந்தி வரும் நள்ளிரவில்
தலைவன் வாராமல் காத்திருந்தாள்
பெண்ணொருத்தி விழிமலர் பூத்திருந்தாள்
நாடாளும் மன்னவனின்
நாடாளும் மன்னவனின்
இதய வீடாளும் பெண்ணரசி
தனிமை தாளாமல் தவித்திருந்தாள்
மன்னன் கை தொடும் போது தலை குனிந்தாள்
வாடையிலே வாழை இலை குனியும்
வாடையிலே வாழை இலை குனியும்
கரை வருகையிலே பொங்கும் அலை குனியும்
காதலிலே பெண்மை தலை குனியும்
ஆ..........ஆ
காதலிலே பெண்மை தலை குனியும்
இடம் கொடுப்பதற்கே நாணம் தடை விதிக்கும்
பெண்ணிலவு அங்கே நாணுவதைக் கண்டு
ஆ..........ஆ
பெண்ணிலவு அங்கே நாணுவதைக் கண்டு
வெண்ணிலவு முகிலில் போய் மறைய
வெண்ணிலவு முகிலில் போய் மறைய
காதலனும் நல்ல வேலை கண்டான்
அவள் பூ முகத்தில் முத்தம் நூறு கொண்டான்
நீராழி மண்டபத்தில்
தேனளந்தே இதழ் திறந்திருக்க
அதைத் தான்அளந்தே மன்னன் சுவைத்திருக்க
தேனளந்தே இதழ் திறந்திருக்க
அதைத் தான்அளந்தே மன்னன் சுவைத்திருக்க
போய் மறைந்த நிலவும் முகில் கிழிக்க
வந்து வாய் நிறைய அவர்க்கு வாழ்த்துரைக்க
பேர் அளவில் இருவர் என்றிருக்க
சுகம் பெறுவதிலே ஒன்றாய் இணைந்திருக்க
கீழ்த் திசையில் கதிர் தோன்றும் வரை
அங்கு பொழிந்ததெல்லாம் இன்பக் காதல் மழை
நீராழி மண்டபத்தில்
தென்றல் நீந்தி வரும் நள்ளிரவில்
தலைவன் வாராமல் காத்திருந்தாள்
பெண்ணொருத்தி விழிமலர் பூத்திருந்தாள்
https://youtu.be/F_UCHJmTUBk
-
ரவி,
தங்களிடமிருந்து அயராத உழைப்பை, பரிசாக கேட்க விரும்புகிறேன். எத்தனை பதிவுகள் குறுகிய காலத்தில்? அதுவும் theme எடுத்து மென கெட்டு .நாளுக்கு நாள் மெருகேறி வருகிறீர்கள்.பாராட்டுக்கள்.
சின்ன கண்ணன்,
தாங்கள் திரியை இணைக்கும் நாராக ஆகி விட்டீர்கள். தங்கள் பாணி (எத்தனை % நகைசுவை,எத்தனை % கவிதை ETC )பரிச்சயமாகி விட்டாலும் அலுக்கவில்லை.
ஆதிராம்,
தங்களுடையது திருக்குறள் போல. சுருக்கம். அர்த்தபுஷ்டி.
கல்நாயக்,
நீண்ட பதிவெல்லாம் இங்கு வந்த பிறகுதான்.சி.க விற்கு பக்க மேளம்.
கிருஷ்ணா,
கலகலப்பு. வெண்கல கடையில் யானை.அம்புஜம் மாமி குசும்பு ,அடடா. அழுந்த சாதிக்கிறேள் .
கலைவேந்தன்,
உங்களின் உற்சாகம் நிறைந்த பாராட்டு மற்றவர்களுக்கு தூண்டுகோல். சமூக கருத்துக்களை பாட்டின் மூலம் இணைப்பது எனக்கு உடன்பாடற்ற பாணி எனினும் ,தங்கள் எழுத்தால் மெருகு பெறுகிறது. தராசின் முள்ளில் கவனம் தேவை. ஒரு பக்க நியாயமே அலச படுகிறது. அதுவும் வசதியான நிலை பாட்டில்.
ராகவேந்தர்,.
நமக்குள் பிளவு-உடன்பாடு சகஜம். ஆனால் நான் அரசியல்வாதியல்ல. நான் சக்தி போல சூது வாது அறியாத தேவர் பக்தன். நீங்கள் கொஞ்சம் மாயன் போல மாறி வருகிறீர்கள். முரளியை மதன் பாப் போல வக்கீலாக மாற்ற முயல்வது கண்கூடு.இது தேவையில்லா விஷயம். நான் உங்களை ,எந்தவித,நிபந்தனையும் இன்றி தொடர்கிறேன்.நீங்களும் என்னை புரிந்து கொள்வீர்கள் என்ற நம்பிக்கை உண்டு. நீங்கள் எல்லா திரிகளிலும் பங்கு பெற்று அளிக்கும் பங்களிப்பை ரசித்து தொடர்கிறேன். இன்றைய நானே ராஜா, என்றுமே நீங்கள்தான் ராஜா என்று பறை சாற்றுகிறது.
ராஜேஷ்,
நீ ஜாலி பேர்வழி. உனக்கு பிடித்த பாடல்கள் ,மற்ற படி நீ உண்டு ,வாசு உண்டு.
வாசு,
உன்னை நான் பாராட்டுவதோ, திட்டுவதோ, எனக்கு நானே செய்து கொள்ளும் அர்ச்சனை. நாம் வேறு வேறா?(அதற்கென்று உன் எல்லா செயல்களுக்கும் நான் பொறுப்பேற்க மாட்டேன்.ஆனால் என் எல்லா செயல்களுக்கும் நீ பொறுப்பேற்க வேண்டும் )
யார் தர்மலிங்க பூபதி, யார் நாகலிங்க பூபதி என்பது மற்றவர் யூகத்திற்கு.
ராஜ் ராஜ்,
யம காதகர். இவரின் பதிவுகள் அவ்வளவு அழுத்தம். என்ன இருந்தாலும் அனுபவஸ்தர்.
எஸ்.வீ,
எப்போதுமே நண்பர். சாயாமல் நின்றால் உற்சாக ,நம்ப கூடிய பங்காளி .
முரளி,
கௌரவ நடிகர். அதுவும் ராகவேந்தர் இவரை இன்னொரு கோபுவாக மாற்ற முயன்ற பின் ரேஞ்சே வேறு. என்ன இருந்தாலும் ஒரே மேடையில் தோளோடு தோளாக மாதா மாதம் நிற்பவர்கள். நாமெல்லாம் யார்?
ஒன்று நான் புரிந்து கொண்டேன்.இது அரட்டை மேடை. என்னால் முடிந்த வரை ஆழமான விஷயங்களை இலகுவாக தர முயல்வேன். கேட்பவர் கேட்கட்டும் ,உரியவர் பயன் பெறட்டும். வேறென்ன சொல்ல?