-
Subbiah
எகிப்து அதிபர் கமால் அப்தெல் நாசர் இந்தியாவிற்கு வருகை தந்த போது, அப்போதைய இந்திய பிரதமர், ஜவகர்லால் நேரு அனுமதி வழங்கப்பட்ட தனி நபர் சிவாஜி கணேசன் ஆவார். 1962 ஆம் ஆண்டு சிவாஜி கணேசன் அமெரிக்க அரசாங்கத்தின் கலாச்சார பரிமாற்றம் திட்டத்தின் கீழ் அமெரிக்கா சென்ற இந்தியாவில் இருந்து முதல் கலைஞர், இருந்தது. சிவாஜி கணேசன், இந்திய கலாச்சார தூதர் பாத்திரத்தில் அங்கு அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி ஜான் எப் கென்னடியை சந்தித்தார். அப்போது அவரை கவுரவப்படுத்தும் விதமாக அவரை ஒரு நாள் நயாகரா நீர்வீழ்ச்சியின் கௌரவ மேயராக நியமித்து அவரிடம் அதற்கான சாவியையும் கொடுத்தனர்.
https://scontent.fybz1-1.fna.fbcdn.n...2b&oe=5A53B8A1
-
https://scontent.fybz1-1.fna.fbcdn.n...dc&oe=5A443EFB
Subbiah
நாங்கள் நடித்த வேடங்களில் சிவாஜியால் நடிக்க முடியும்.ஆனால் சிவாஜி அவர்கள் நடித்த வேடத்தில் எங்களால் நடிக்க முடியாது - அமெரிக்க நடிகர் மார்லன் பிராண்டோ.
https://scontent.fybz1-1.fna.fbcdn.n...e8&oe=5A7DEC43
-
01/10/2017
நடிகர் திலகம் பிறந்த நாள்,
முதல் தரிசனம்
அதிகாலை 1:00 மணிக்கு
வசந்த் டிவியில்
https://scontent.fybz1-1.fna.fbcdn.n...23&oe=5A4F4242
-
Edwin Prabhakaran Eddie
தமிழர்கள் அனைவரும் ..சாதியால் வகுக்கப்பட்டவர்கள் என்பது முற்றிலும் உண்மை ......அதை முதன் முதலில் உடைத்தெறிந்து ..இந்தியாவின் எல்லா மொழி ..சாதி பெருமகன்களை நம்கண்முன்னே கொண்டு வந்தவர் .....குறிப்பாக சுதந்திர போரடட வீரர்களை.......ஜாதி என்பது நம் திலகத்துக்கு தெரியாது ......இப்படித்தான் ஒருவர் கேட்டார் காமராஜருக்காக பொதுமேடையில் உரையாற்றிவிட்டு பத்த்ரிக்கை சந்திப்பில் ....நிருபர் ஒருவர் கேட்டார் ..திலகத்திடம் ." அய்யா நீங்கள் நாடார் இனத்தை சேர்ந்தவரா " என்று ......அதற்க்கு நம் திலகம் சொன்ன பதில் " இல்லை அப்பா நான் தேவன் , ஆனால் அது ஒரு அடையாளம் மட்டும்தான் ஆனால் நான் நல்லவற்றை மட்டும் ,காண்பதினால் எனக்கு ஜாதி தெரியவில்லை ...ஜாதி மட்டும் பார்ப்பவன் மனிதனாக கூட நடமாடமாட்டான் ......என்னை விடு நான் அவன் இல்லை ...விடைகொடு அப்பா "................என்று உரக்க சொல்லிய மனிதாபிமானி நம் தலைவன் .......
https://scontent.fybz1-1.fna.fbcdn.n...51&oe=5A3A80A5
-
-
Dilip M D K
சிவாஜிக்கு பிரான்சு நாடு வழங்கியுள்ள செவாலியே விருது அந்த நாட்டுக்கு பெறுமை சேர்க்கும் விருது என்பதில் ஐயமில்லை.
சிவாஜியின் கலைத்திறனுக்குக் கிடைத்துள்ள விருதுகள் உள்ளங்கை அளவேயாகும். கிடைக்க வேண்டிய விருதுகளோ உலகளவாகும்.
--- முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர்.
... பராசக்தியின் அருளால் அன்னை ராஜாமணி அம்மையார் ஈன்று எடுத்த தவப்புதல்வன் அவதரித்த நாள் - அக்டோபர் 1ல் 89வது பிறந்தநாள் காணும் விண்ணுலக வேந்தன், கலைக் கடவுள் மக்கள்தலைவர் சிவாஜி அவர்களை வணங்குவோம்.
https://scontent.fybz1-1.fna.fbcdn.n...87&oe=5A3C1253
-
Baanu Veda
நடிகர் திலகம் புகழ் ஓங்குக https://static.xx.fbcdn.net/images/e...1/16/1f338.png
விழுப்புரம் சின்னய்யா..
என் மகன் எனப் போற்றிய தவப்புதல்வன்..
ராஜாமணியம்மாள்
பெற்றெடுத்த ராஜ...
ராஜ சோழன்..
சண்முகம் அண்ணனின்
உடன் பிறப்பான சிம்மக்குரலோன்
ராம்குமார்..பிரபு சகோதரர்களின்
அன்புள்ள அப்பா..
கலைஞர் வசனத்தில்
பராசக்தி..பெரியார்
பெயர் வைத்த வீர
சிவாஜி..அண்ணா
மனதில் அன்பாய்
வீற்றிருந்த ஞான ஒளி..
மக்கள் திலகத்தின்
அன்புத் தம்பி நடிகர்
திலகம்..கர்ம வீரரின்
அன்புக்கரங்கள்..
ரசிக நெஞ்சங்களில் பச்சை விளக்கு..தேசிய
புகழ் பாடிய கட்ட பொம்மன்..கப்பலோட்டிய தமிழன்..சிந்து நதி
பாடிய பாரதி..கொடிகாத்த
குமரன்..கண்ணதாசன்
பார்வையில் அம்பிகாபதி....இன்னும்
சொல்லிக் கொண்டே போகலாம். .கலைக்குரிசிலின் புகழை..நம்
நடிப்புப் பல்கலைக்
கழகத்தின் பிறந்த நாளில்..அவருடைய கோடானு கோடி ரசிகர்களில் நானும்
ஒரு ரசிகை என்ற
முறையில் வணங்கி
வாழ்த்துகிறேன் https://static.xx.fbcdn.net/images/e...1/16/1f338.png
-
-
-
S V Ramani
குறை ஒன்றும் இல்லை நிறை கண்டோம் ஐயா
குறை ஒன்றும் இல்லை ஐயா
குறை ஒன்றும் இல்லை தலைவா
கண்ணுக்குத் தெரியாமல் நிற்கின்றாய் ஐயா ...
கண்ணுக்குத் தெரியாமல் நின்றாலும் எமக்கு
குறை ஒன்றும் இல்லை நிறை கண்டோம் ஐயா
குறை ஒன்றும் இல்லை ஐயா
குறை ஒன்றும் இல்லை தலைவா
வேண்டியதைத் தந்திட வேந்தன் இங்கு நீயிருக்க
வேண்டியது வேறில்லை நிறை கண்டோம் ஐயா
கட்டபொம்மா, ராஜ ராஜா, பத்மநாபா
சிலையாக நிற்கின்றாய் ஐயா
சிலையாக நிற்கின்றாய் ஐயா
உன்னைவணங்கிடும் அன்பர்கள் மட்டுமே அறிவார்
உன்னைவணங்கிடும் அன்பர்கள் மட்டுமே அறிவார்
குறை ஒன்றும் எமக்கில்லை ஐயா
குறை ஒன்றும் இல்லை தலைவா
கடற்கரை சாலையில் சிலையாக நின்றாய் ஐயா
கொடியோர்கள் உன்னை அகற்றியபோதும்
குறை ஒன்றும் இல்லை நிறை கண்டோம் ஐயா
கட்டபொம்மா, ராஜ ராஜா, பத்மநாபா, பத்மநாபா
https://scontent.fybz1-1.fna.fbcdn.n...72&oe=5A47E1A5
-
Subbiah
ஒரு சண்டைக்கார நடிகரின் நட்சத்திரச் சுமையை சண்டை, சமூக நீதிப் பாட்டு, கவர்ச்சி நாயகிகள், ஆடம்பர அரங்குகள், வில்லன்கள் போன்றோர் சுமந்தனர். வேறு சிலர்க்கு ஹாலிவுட்டிலிருந்து சுடப்பட்ட கதையும், வித்தியாசமான மேக் – அப்பும், மணிரத்தினம் – ஷங்கர் போன்ற இயக்குநர்களும் வேண்டியிருந்தது. ஆனால் சிவாஜி மட்டும் தன் சுமையை – தனது நடிப்பாற்றலால் – தானே சுமந்தார் என்பதே அவருக்குள்ள திறமையாகும்.
https://scontent.fybz1-1.fna.fbcdn.n...f7&oe=5A874A9E
-
-
raghavan nemili vijayaraghavachari
இன்று ( 01.10.2017 ) நடிப்புலக இமயம் , நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் பிறந்த நாள்.
நடிகனாக நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்திய இந்த மாபெரும் கலைஞன் நடிப்பைக் கொண்டு , அரசியல் வாழ்க்கையில் தானே தலைவனாக விரும்பியிருந்தால், பல படங்களில் மக்களை கவரும் விதத்தில் பொய் உரைத்து, தன் முனைப்பில் மட்டுமே கவனம் செலுத்தி எல்லாப் படங்களிலும் நடித்து இருக்கலாம்.
மேற்படி எண்ணம் இல்லாமல் , நடிப்பை, நடிப்பாக மட்டுமே கொண்டு நடித்ததினால், இளம் வயதிலும் 80 வயது ஆன முதியவராகவும் ( குழந்தைகள் கண்ட குடியரசு ), சுமார் 40 வயதிலேயே , 20 வயதை தாண்டிய செல்வி.ஜெயலலிதா உள்பட பலருக்கும் தகப்பனாக ( மோட்டார் சுந்தரம் பிள்ளை ) நடித்தார். அது போல தன்னை விட வயதில் பெரியவரான ஒரு நடிகருக்கு அண்ணனாக ஒரு படத்தில் ( பந்த பாசம் ) நடித்தார். தன்னுடைய இமேஜை மட்டுமே நிலை நிறுத்திக் கொள்ள விரும்பியிருந்தால் வில்லனாகவோ, வயதானவராகவோ, பலருக்கும் தந்தையாகவோ நடிக்காமல் இருந்திருப்பார். ஆனால் அவர் விரும்பியது திரைப்படங்களில் எல்லாம் ஒரு நடிகனாகவே நடித்து , நடிப்பை வெளிப்படுத்த வேண்டும் என்ற ஆர்வம் மட்டுமே காரணம்.
நடிப்புலக சக்ரவர்த்திக்கு இணையான நடிகர்கள் எவருமே கிடையாது. சில படங்கள் பாடல்களே இல்லாமலும், தனக்கு பாடல்கள் இல்லாமலும், தன்னுடன் இணையாக நடிக்க நடிகைகள் இல்லாமலும் படங்களில் நடித்தவர் இவர் ஒருவரே.
பாடல்களே இல்லாத படம் அந்த நாள். அது போல் தனக்கு பாடல்களே இல்லாமல் நடித்த படங்கள் மோட்டர் சுந்தரம் பிள்ளை, எதிரொலி,
ஜோடி இல்லாத படங்கள் – லக்ஷ்மி கல்யாணம் , கந்தன் கருணை, சரஸ்வதி சபதம் , பழனி, பந்தம், தாவனிக் கனவுகள் , மூன்று தெய்வங்கள் , துணை , விடுதலை, வெள்ளை ரோஜா , மருமகள் , மனிதரில் மாணிக்கம் , அன்புள்ள அப்பா ,
தெய்வத்தின் மீது மிகுந்த ஈடுபாடு கொண்ட காரணத்தினால், அவர் அக் காலத்தில் ஆரம்பத்தில் இருந்த ஒரு கட்சியின் தலைவர்கள் கடவுள் மறுப்பு எண்ணம் கொண்டவர்களாதலால், இவரை பல வகைகளில் ஏளனம் செய்தனர். வாய் வார்த்தை ஜாலங்களால் மயங்கிய அன்றைய மக்களில் சிலர் இவர் மீது வெறுப்பை காட்டும் விதமாக , தமிழக நடிகர்களில் மட்டுமின்றி, பாரத நாட்டு நடிகர்களிலேயே , தேஸத்திற்கும் மற்றும் பல ஏழை மக்களுக்கும் பலவிதமாக நன்கொடைகள் வழங்கிய இவரின் கொடை வள்ளல் தனத்தை மறைத்து, இவரை ஒரு கருமியாக சித்தரித்தனர். அதனால் தான் இவரை வெறுத்த கட்சியில் இருந்த பலரும் இன்றும் இவரின் கொடை வள்ளல் தனத்தை மறைக்கும் விதமாக செயல் பட்டுக் கொண்டுள்ளனர்.
அது போல் உலக அளவிலே மிகச் சிறந்த ஹாலிவுட் நக்ஷத்திரமான மார்லன் ப்ராண்டோ அவர்களே, தன்னை விட நடிப்பில் மிகச் சிறப்பானவர் என்று வர்ணித்து, தான் நடிக்கும் பாத்திரங்களில் சிவாஜியால் மிகச் சுலபாக நடிக்கமுடியுமென்றும், ஆனால் அவரின் நடிப்பில் ஒரு பாதி அளவுக்குக் கூட தன்னால் நடிக்க முடியாது என்று கூறினார். அது போலவே பாலிவுட் நக்ஷத்திரமான திலீப்குமார் அவர்களும் , தெலுங்கு நடிகர் நாகேஷ்வர ராவ் , என்.டி.ராமராவ் போன்றவர்களும் சொன்னார்கள். சிறப்பான நடிகர்களான இவர்களே தாங்கள் நடிகர் திலகம் சிவாஜியின் நடிப்புக்கு இணையானவர்கள் அல்ல என்று உண்மையை உரைத்தபோது, தமிழ் நாட்டில் திராவிட , நாத்திகவாதிகளின் பால் ஈடுபாடு கொண்டவர்கள் இவரின் நடிப்பை மிகை நடிப்பு என்றெல்லாம் பொய் உரைத்தனர். அதையும் சிலர் இன்றும் நம்பிக் கொண்டு அவரை பழித்துப் பேசி வருகின்றனர்.
மிக உரத்த குரலில் பேசுவது குறை கூறுபவர்களுக்கு அவர் , ஒரு படத்தில் பல நேரம், வசனம் பேசாமலே நடித்தவர் என்பது தெரியாது போலும். வெறும் முக பாவத்திலே மட்டும் நடிப்புத் திறனை காட்டியவர். மிக கம்பீரமாக நிற்கும் நிலையிலும், நவரச பாவங்களை முகத்திலே காட்டுவதிலும் எந்த ஒரு நடிகரும் இவருக்கு இணை இல்லை. இன்னும் சொல்லப் போனால் , பல நடிகர்களுக்கு ஒரு படத்தில் இரண்டு வேடங்களில் நடிக்கும் போது, வசன உச்சரிப்பின் இலகுவை மாற்ற முடியாமலும், முக பாவத்தை மாற்றமுடியாமலும் இரண்டு வேடங்களிலும் நடிப்பவர் ஒருவரே என்று மக்கள் நினைக்கும் அளவுக்குத் தான் அவர்கள் வேடங்களும் , குரலும் அமைந்திருக்கும். ஆனால் நடிப்புலக சக்ரவர்த்தியான நடிகர் திலகம் அவர்கள் மட்டும்தான் மிக அதிகமான படங்களில் இரண்டு வேடங்களில் நடித்தவர் என்பதோடு அல்லாமல் மூன்று படங்களில் மூன்று வேடங்களில் நடித்தும், அந்த மூன்று வேடங்களிலும் வெவ்வேறு நடிகர்கள் நடித்தது போலவும் அவருடைய உடம்பின் ஒப்பனைகளும், வசன உச்சரிப்பும் அமைந்திருக்கும். நவராத்திரி படத்தில் ஒன்பது விதமான வேடங்களில் நடித்து அசத்தியவர்.
அரசியல் ரீதியாக அவரை எதிர்ப்பவர்கள் , அவரின் சிறந்த நடிப்புத் திறமையை ஒப்புக் கொள்ளமாட்டார்கள். எந்த அரசியல் தொண்டர்கள் அவரை வெறுக்கிறார்களோ, அந்த கட்சியை தோற்றுவித்தவரே, நடிகர் திலகத்தின் நடிப்புத் திறமையை போற்றியதோடு, அவருக்கு இணையான நடிகர்கள் முன்பும் இல்லை, இனி பிறக்கப் போவதும் இல்லை என்று கூறியுள்ளது அந்த தொண்டர்களுக்குத் தெரிந்திருந்தாலும், வெறுப்பின் காரணமாக அவரை தூற்றுவதிலேயே இன்றும் குறியாக உள்ளனர்.
மிக அதிகமான திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்தவர், மிக அதிகமான வெள்ளி விழா படங்களில் நடித்தவர், ஒரே ஆண்டில் இரண்டு முறை இரண்டு வெள்ளி விழா படங்களை கொடுத்தவர், மிக அதிகமான 100 நாள் வெற்றிப் படங்களில் நடித்தவர், ஒரே நாளில் இரண்டு படங்கள் வெளியிட்டும் இரண்டு முறை இரண்டு படங்களுமே 100 நாள்கள் ( ஊட்டி வரை உறவு, இரு மலர்கள் மற்றும் சொர்க்கம், எங்கிருந்தோ வந்தாள் ) கடந்து வெற்றிக் கொடி நாட்டியதோடு, மேலும் இன்னும் சில படங்களில் ஒன்று 100 நாள்கள் ஓடியும் மற்றொன்ரு 100 நாள் ஓடாவிட்டாலும் வெற்றிப்படமாக அமைந்ததும் இவருக்கு மட்டுமே. உண்மையான வசூல் சக்ரவர்த்தி இவர்தான்.
ஆனால் கடவுள் பத்தி காரணமாகவும், நடிப்பில் அவருக்கு இணையானவர் எவரும் இல்லை என்பதை உணர்ந்துள்ள பொதுமக்களின் ஆதரவு காரணமாகவும், இன்றும் நடிகர் திலகத்தின் பல படங்கள் தமிழகம் முழுவதும் பல திரை அரங்குகளில் திரையிடப்பட்டு, மீண்டும் வெற்றிக் கொடி நாட்டி வருவதையும், பல தொலைக்காட்சி ஊடகங்களில் அவரின் படங்கள் மீண்டும், மீண்டும் ஒளிபரப்புவதையும் காணும் போது, இன்னும் பல்லாயிரம் ஆண்டுகள் ஆனாலும் நடிப்புலக சக்ரவர்த்தியின் புகழ் நிலை பெற்றிருக்கும் என்பதை அவரின் இந்த பிறந்த நாளன்று உறுதிபட உரைக்கின்றேன்.
https://scontent.fybz1-1.fna.fbcdn.n...e9&oe=5A44C7BF
https://scontent.fybz1-1.fna.fbcdn.n...2f&oe=5A807A73
https://scontent.fybz1-1.fna.fbcdn.n...6a&oe=5A488DEE
-
கள்ளம் கபடம் இல்லாத களங்கம் ஏதுமற்ற
வெள்ளைமனம்கொண்ட வெள்ளைரோஜா வின்
89 வது பிறந்தநாள்
சிவாஜி ஜெயந்தி 89
வெள்ளைமனம் கொண்ட அனைத்த உள்ளங்களுக்கும்
சிவாஜி ஜெயந்தி தின வாழ்த்துக்கள்
https://scontent.fybz1-1.fna.fbcdn.n...99&oe=5A52E783
-
Sekar Parasuram
01/10/2017
நடிகர் திலகம் பிறந்த நாள் வாழ்த்துக்கள்,
தொலைக்காட்சி சேனல்களில் ஒளிப் பரப்பாக இருக்கும் நடிகர் திலகம் திரைப்பட காவியங்கள்,
12 pm -- மெகா டிவி-- " தீபம்"
1:30pm-- புது யுகம் -- ஊட்டி வரை உறவு
1:30pm-- கேப்டன் டிவி-- தாம்பத்யம்...
2:00pm --வசந்த் டிவி- திருவிளையாடல்
3:00pm-- மெகா டிவி-- தியாகம்
4:00pm -- கலைஞர் டிவி-- உயர்ந்த மனிதன்,
7:30 pm -- முரசு டிவி-- தங்கப் பதுமை
வெற்றிக் காவியங்களைக் கண்டு மகிழ்வோம்!!!
-
-
Sridharan Renganathan
...
விருதுக்கே விருதான விற்பலன்!
********************************************
வியத்தகு வித்தகன்! விசித்திரன்!
********************************************
பிறந்த நாள் நல்வாழ்த்துகள்!
***************************************
நடிப்பில் நிஜமாக, நெகிழும் விதமாக, நிறைந்த திரை இமயமே! புவி
வியக்கும் திறனாக, விண்ணின் புகழாக, விளைத்த விசித்திரனே!
சிம்மக்குரலோடு, சொல்லின் செறிவோடு, சிலிர்த்திடச் செய்யும் செம்மையனே!
செந்தமிழையே சொக்கவைக்கும் சொல்லாளும் சிந்தயள்ளும் சீலனே!
உன்னின் நீங்கா நினைவோடு, நெகிழும் நிலையாளும் நடிப்பின் நாயகனே!
ஈடு இணை இல்லா ஈர்ப்பில் இதம் காணும் திரைக் கலைப் பொக்கிஷமே!
இறையடி சேர்ந்தும், நின் திரைவழி திறன்கள் இன்றளவும் திக்குமுக்காடச்
செய்துகொண்டிருக்கும் பெரும்புகழ் பெற்றவனே! நின் வழித் தடங்கள் திரையுலகிற்கே
அரண்களாய், வழிகாட்டும் கலங்கரை தீபமாய் திகழும்
வண்ணம் வளம் கண்ட வல்லோனே! நின் பராக்கிரம சாதனைகளை
நினைத்துப் பார்க்க உள்ளமெல்லாம் உவகைகொண்டு, பரவஸத்திலாழ்ந்து
பூரித்துப் போகின்றன; தமிழ் கண்ட வரமென பெருமிதம் கொள்கின்றன;
நின் காவியங்கள் சரித்திரம் காணும் ஒயிலான ஓவியங்கள்;
திரையுலகத்திற்கே வாய்க்கப்பெற்ற விலையிலா திரவியங்கள்!;
செந்தமிழின் சொத்துகள்! வான்புகழ் காணும் வித்துகள்!; ஏழேழு
பிறவியிலும், ஏகமான ஏற்றத்துடன், எதிரிணையில்லா மாண்புடனும், நிலைப்
புகழ் கொண்டு நீடித்து, நிலைபெற்று நிறைந்திருக்கும் என்பது
நிச்சயமானவொன்று!
‘’நடிப்பின் இமயமே! நடிகர் திலகமே! அன்னையில்லத்து ஆசானே!
அகிலலோக கலைத்தடத்தின் கலங்கரை தீபமே! கரை காணமுடியாக்
கலைக் கடலே! சிம்மக்குரலே! சிங்கத்தமிழே! எங்கள் சிவாஜிகணேசனே!
விருதுக்கு விருதானவனே! தங்கத்திற்கு தங்க முலாம் பூசுவதுபோல உந்தன் புகழுக்கே
புகழ்மாலை சூட்டுகிறோம்
என்றென்றும் உந்தன் நினைவலையில் மிதந்துகொண்டிருக்கும்
’’அன்பு ரசிகர்கள்.’’
-
எதிரிகளுக்கு சிம்ம சொப்பனம்,
வஞ்சனையற்றவர்களுக்கு வெள்ளை ரோஜா ,
மென்மனம் கொண்ட, தேவை அறிந்து
கொடை கொடுத்த வள்ளல், சிவாஜி கணேசனின்
வெற்றித் திரைக்காவியங்களின்
அக்டோபர் மாத வெளியீடுகள்
1) துணை 1 /10 1982
2) சபாஷ் மீனா 3/10 /1958
3) நாம் பிறந்த மண் 7 / 10 /1977
4)திருடன் 10/ 10 /1969
5) அண்ணன் ஒரு கோயில் 10/ 10 /1977
6) பராசக்தி 17 /10 /1952
7)பாபு 18 /10/ 1971
8)பட்டாக்கத்தி பைரவன் 19/10/1979
9)பாவை விளக்கு 19/10/1960
10)பெற்ற மனம் 19/10/1960
11)எங்க ஊர் ராஜா 21/10/1968
12) அம்பிகாபதி 22/10/1957
13)சித்திரா பெளர்ணமி 22/10/1976
14)வம்ச விளக்கு 23/10/1984
15) கௌரவம் 25/10/1973
16)தேவர் மகன் 25/10/1992
17)கீழ்வானம் சிவக்கும் 26/10/1981
18)தச்சோளி அம்பு (மலையாளம்) 27/10/1978
19) பந்தபாசம் 27/10/1962
20) சொர்க்கம் 29/10/1970
21) எங்கிருந்தோ வந்தாள் 29/10/1970-
22) அவள் யார்? 30/10/1959
23)பைலட் பிரேம்நாத் 30/10/1978
24)பாகாப் பிரிவினை 31/10/1959
-
-
subbiah
வீரபாண்டிய கட்டபொம்மன்" படத்தை ஆப்பிரிக்க ஆசிய திரைப்பட விருதுக்காக அனுப்பி வைக்க இந்திய அரசு முடிவு செய்தது. விழா நடந்த எகிப்து நாட்டின் தலைநகரான கெய்ரோவிற்கு சிவாஜி அவர்கள் சென்றார்கள். அவருடன் பி.ஆர். பந்துலு, பத்மினி ஆகியோரும் சென்று கலந்துக் கொண்டனர். சிறந்த நடிகர், சிறந்த இசை, சிறந்த நடன கலைஞர், சிறந்த கதை என்று பல விருதுகள் பெற்றது. சிறந்த நடிகருக்கான விருதைப் பெறுவதற்காக மேடைக்கு சிவாஜி கணேசன் சென்றபோது எல்லோரும் எழுந்து நின்று ஐந்து நிமிடம் தொடர்ந்து கைதட்டி தங்களது பாராட்டுக்களைத் தெரிவித்தார்கள். இது சிவாஜிகணேசனுக்கு மட்டும் கிடைத்த விருது அல்ல- இந்தியாவே பெருமைப்படும் அளவிற்குக் கிடைத்த விருதாகும்.
-
Subbiah
பராசக்தி' படத்தில் கதாநாயகனாக நடிக்கத் தொடங்கி வில்லனாக. . காமெடியனாக. குணசித்திர நடிகராக, புராண வேடம். சரித்திர வேடம் என்று பல்வேறு விதமான கதாபாத்திரங்களை ஏற்று நவரசத்தையும் வெளிப்படுத்தி நடித்து சாதனைகளைப் புரிந்தார். அவருடைய சாதனைக்கு இந்திய அளவில் எந்த நடிகரும் ஈடு இணை இல்லை என்றே சொல்லலாம்.
முன்பெல்லாம் திரைப்படங்களில் பெரிய பெரிய வசனங்களாக இருக்கும். அது வசனம் பேசும் காலம். நாடகக் கம்பெனியிலிருந்து சினிமா கம்பெனிக்கு வந்தவர்களில் சிவாஜி கணேசன் மட்டும்தான் நல்ல தமிழில் வ...சனம் பேசக் கூடியவராக இருந்தார். அதனால் அவருக்கென்று தனி வசனங்களை சிறப்பாக எழுதிக் கொடுத்தார்கள். 'மனோகரா', 'வீரபாண்டிய கட்டபொம்மன்', 'ராஜாராணி', 'அன்னையின் ஆணை',' அன்பு', 'இரத்தத் திலகம்', 'கர்ணன்', 'திருவிளையாடல்' போன்ற படங்களின் வசனங்கள் சிறப்பாக இருக்கும். அந்தக் காலத்தில் நடிக்க வருபவர்களிடம் "உங்களுக்குப் பிடித்த படத்திலிருந்து வசனங்களைப் பேசிக் காட்டுங்கள்" என்று கூறினால் அவர்கள் தயங்காமல் பேசுகின்ற வசனங்கள் மேற்கண்ட படங்களின் வசனங்களைத்தான். குறிப்பாக பராசக்தி படத்தின் நீதி மன்ற காட்சி. இந்த முறையில்தான் பலபேர் திரைப்படத்தில் நடிக்க சந்தர்ப்பம் பெற்றிருக்கின்றனர்.
https://scontent.fybz1-1.fna.fbcdn.n...8a&oe=5A4DBC11
-
-
Prem Kumar
இமயத்தின் பிறந்தநாள் இன்று
இந்திய திரையுலகின் "என்சைக்ளோபீடியா" என்று சிவாஜியை கூறுவது மிகையாகாது. தனது நடிப்பாலும், வசன உச்சரிப்பாலும், முக பாவனை மாறும் உடல் மொழியாலும் தமிழக மக்களை கட்டிப்போட்டவர் சிவாஜி கணேசன். அன்று முதல் இன்று வரை திரையுலகில் காலடி எடுத்து வைக்கும் ஒவ்வொரு புது முகத்திற்கும் முகவரி சிவாஜியாக தான் இருக்க முடியும்.
இல்லை நான் கமல், ரஜினி, விக்ரம் போன்றவர்களை கண்டு தான் வந்தேன் என்று சிலர் கூறலாம். ஆனால், அவர்களே சிவாஜியை கண்டு தான் வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. சிவாஜி ஓர் விருட்சம். இந்த ஆலமரத்தின் கிளைகளில் தான் பல குருவிகள் கூடு கடி வாழ்ந்து வருகின்றன.
இனி, இந்த ஆலமரத்தின் விதையாக புதைந்து, விருட்சமாக எழுந்த வரலாற்று சிறப்பு மிக்க வியக்க வைக்கும் தகவல்களை பற்றி காணலாம்.....
நடிகர் திலகம் சிவாஜியின் இயற்பெயர், " விழுப்புரம் சின்னையாப்பிள்ளை கணேசன்" ஆகும்.
'சிவாஜி' கணேசன், திரையுலகுக்கு வரும் முன்னர் மேடை நாடகங்களில் நடித்து வந்தார். சிவாஜி கண்ட இந்து ராஜ்யம் என்ற நாடகத்தில் பேரரசர் சிவாஜியாக நடித்த கணேசனின் நடிப்புத்திறனை மெச்சிய தந்தை பெரியார், அவரை 'சிவாஜி' கணேசன் என்று அழைத்தார். அன்றிலிருந்து அந்த பெயரே நிலைத்தது.
சிவாஜி' கணேசன் 300-க்கும் மேற்பட்ட தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார். ஒன்பது தெலுங்குத் திரைப்படங்கள், இரண்டு ஹிந்தித் திரைப்படங்கள் மற்றும் ஒரு மலையாளத் திரைப்படத்திலும் நடித்துள்ளார்.
நல்ல குரல்வளம், தெளிவான, உணர்ச்சி பூர்வமான தமிழ் உச்சரிப்பு, சிறந்த நடிப்புத் திறன் ஆகியவை இவரின் சிறப்புகளாகும். நடிகர் திலகம், நடிப்புச் சக்கரவர்த்தி என்று பெரும்பாலான மக்களால் அழைக்கப்பட்டார்.
நாடகத்தின் மூலம் திரைப்படங்களுக்கு அறிமுகமானதாலோ என்னவோ, இவருடைய நடிப்பில் நாடகத்துக்குரிய தன்மைகள் அதிக அளவில் தென்படுவதாகக் குறை கூறுவோரும் உண்டு. குறிப்பாக, அக்கால மேடை நாடகங்களில் தொழில்நுட்பக் குறைபாடுகளின் காரணமாக உணர்ச்சிகளை மிகைப்படுத்திக் காட்டினால் தான் பார்ப்பவர்களுக்குப் புரியும்.
இவர் நடித்த மனோகரா, வீரபாண்டிய கட்டபொம்மன் போன்ற திரைப்படங்கள் வசனத்திற்காகப் பெயர் பெற்றவை. இராஜராஜ சோழன், கப்பலோட்டிய தமிழன் போன்ற வீரர்களினதும் தேசத் தலைவர்களினதும் பாத்திரங்களை ஏற்றுத் திறம்படச் செய்தார். பாசமலர், வசந்த மாளிகை போன்ற திரைப்படங்கள் மற்றும் பல பக்திப் படங்கள் இவரது உணர்ச்சிப்பூர்வமான நடிப்புக்காகப் பேசப்பட்டவை.
1955 வரை திராவிட இயக்க அரசியலில் ஈடுபாடு கொண்டிருந்த இவர், 1961 முதல், காங்கிரஸ் கட்சியில் இணைந்து செயல்பட்டார். 1982ல் நாடாளுமன்ற மேலவை உறுப்பினர் ஆனார்.
1987ல் காங்கிரஸ் கட்சியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளைத் தொடர்ந்து, அதை விட்டு விலகி, தமிழக முன்னேற்ற முன்னணி என்ற புதிய கட்சியொன்றை தொடங்கினார். எனினும் நடிகனாக அவருக்குக் கிடைத்த செல்வாக்கு அரசியலுக்குத் துணைவரவில்லை. இறுதிக்காலத்தில் அவர் அரசியலிலிருந்து ஒதுங்கியிருந்தார்.
1962 ஆம் ஆண்டு சிவாஜி கணேசன் அமெரிக்க அரசாங்கத்தின் கலாச்சார பரிமாற்றம் திட்டத்தின் கீழ் அமெரிக்கா சென்ற இந்தியாவில் இருந்து முதல் கலைஞர், இருந்தது. சிவாஜி கணேசன், இந்திய கலாச்சார தூதர் பாத்திரத்தில் அங்கு அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி ஜான் எப் கென்னடியை சந்தித்தார். அப்போது அவரை கவுரவப்படுத்தும் விதமாக அவரை ஒரு நாள் நயாகரா நீர்வீழ்ச்சியின் கௌரவ மேயராக நியமித்து அவரிடம் அதற்கான சாவியையும் கொடுத்தனர்.
எகிப்து அதிபர் கமால் அப்தெல் நாசர் இந்தியாவிற்கு வருகை தந்த போது, அப்போதைய இந்திய பிரதமர், ஜவகர்லால் நேரு அனுமதி வழங்கப்பட்ட தனி நபர் சிவாஜி கணேசன் ஆவார்.
ஆப்பிரிக்க - ஆசியத் திரைப்பட விழாவில் (கெய்ரோ,1960), சிறந்த நடிகருக்கான விருது, கலைமாமணி விருது (1962 - 1963), பத்ம ஸ்ரீ விருது- 1966, பத்ம பூஷன் விருது- 1984, செவாலியர் விருது -1995, தாதாசாகெப் பால்கே விருது - 1996 மற்றும் பல திரைப்படம் சார்ந்த விருதுகளை தனது நடிப்பு திறனுக்காக பெற்றிருக்கிறார் நடிகர் திலகம் சிவாஜி.
https://scontent.fybz1-1.fna.fbcdn.n...74&oe=5A4D0A9B
-
Natarajen Pachaiappan
'வாழ்ந்த கர்ணன் நம் சிவாஜி'
................ஆச்சரியப்பட்டோம்
பேராச்சரியப்பட்டோம்...
இன்னும்
பட்டுக்கொண்டுதானே வருகின்றோம்.
ஒருமுறை, இருமுறை, இல்லை பலமுறை
ஆச்சரியப்பட்டுவிட்டால்
அந்த ஆச்சரியங்கள்கூட
அநாவிசயமாக ஆகுவது இயல்பு.
...
ஆயிரமுறைகள்
பார்த்தாலும், படித்தாலும், கேட்டாலும்
ஆச்சரியப்பட தோன்றுவது
சிவாஜி என்ற சொல்லின் செயலைத்தான்.
0
நடிப்பு என்று சொல்லாமல்
ஏன் அதை செயல்
என்று சொல்ல வேண்டும்?
அவர் நடிப்பை மட்டும் சொன்னால்
அவர் செய்த செயல்கள் மறைந்து போகுமே!
செயல் என்று சொன்னால் அதில்
அவர் நடிப்பும் அடங்கும்.
0
நடிகர்கள் சம்பாதித்த பணத்தை
தன் ஆடம்பர வசதிக்காக
செய்துக்கொள்வது அவர்கள்
தனிபட்ட உரிமை,
சுயநலம் என்றுகூட சொல்லமுடியாது.
ஆனால் அவர்கள் தான் மட்டும்
சுயநலமாய் வாழ்கின்றோமே
என்று நினைத்தால்
பிறருக்காக உதவிட முன் வருவர்.
0
அப்படி முன் வந்த பெரிய மனிதர்கள்
அதையும் சுயநலமாக்கி கொண்டால்
என்ன செய்வது?
0
உதவி செய்யும் போதுக்கூட
மற்றவர்கள் அறியாமல்
செய்ய வேண்டும்.
வள்ளல் என்ற பட்டத்திற்காக
வாரி இறைத்தலும்
நல்லவரென சொல்ல
நாலு பேரை கூட வைத்தலும்
நாடே நம்ப வைத்தலும்
நாட்டை பிடித்தலும்.
நாடு தவித்தலும்
நடிகர்திலகம் செய்ததில்லை.
0
கர்ணனாக படம் நடித்தார்
கர்ணனாக வாழ்ந்து காட்டினார்.
கர்ணன் படம் நடித்ததினால்
வள்ளலாகவில்லை நமதய்யன்.
0
ஆரம்பகாலமே அவரை
வள்ளலாக்கியது.
வலது கை கொடுப்பதை
இடது கை அறியாத வள்ளல்
ஆம், நமது கர்ணன்.
0
அதற்காக விளம்பரம் தேடிய
வள்ளல் கூட்டத்தால்
அளிக்கப்பட்ட பட்டம் கஞ்சன்.
0
வரலாறை திருப்பிப் பார்த்தால்
யார் வள்ளலென சரித்திரம் சொல்லும்.
தரித்திரம் பிடித்தவருக்கு
'அவன் ஒரு சரித்திரம்'
என தெரியுமா?
தெரியும்....
தெரியாது போல் நடித்தால்தானே
பதவி கிடைக்கும்.
இன்னும் எத்தனை நாள்?
0
முடிவுரை எழுத நேரம்
மிக அருகாமையில்தான்
இருக்கின்றது.
0
அதுவரை அனுபவியுங்கள்.
ஏனென்றால்
அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே"
என
அனுபவிக்க வேண்டுமில்லையா?
0
அன்புடன்...
சிவாஜியின் பக்தன் ப.நடராசன்/:
https://scontent.fybz1-1.fna.fbcdn.n...83&oe=5A3D220C
-
-
-
-
-
-
subbiah
இந்திய மக்களின் சார்பில் அமெரிக்க நாட்டிலுள்ள நயாகராவில் சிட்டி மேயராக இருந்தது இரண்டே இரண்டு இந்தியர்கள்தான். ஒருவர் பண்டித ஜவஹர்லால் நேருஜீ, மற்றொருவர் நடிகர் திலகம் செவாலியே சிவாஜி கணேசன்
https://scontent.fybz1-1.fna.fbcdn.n...4f&oe=5A3DC6C3
-
இரா.மணிகண்டன்
கலைத்தாயின் தவப்புதல்வன்,கர்மவீரரின் ஏற்றமிகு தொண்டன்,சிம்மக்குரலோன்,
நடிகர்திலகம், செவாலியே சிவாஜி கணேசனின் பிறந்த நாள் இன்று.
சிவபெருமான்,திருமுருகன் ,பகவான் கண்ணன்,திருப்பூர்குமரன்,வீரபாண்டியகட்டபொம்மன் ,வ உ சி, மகாகவி பாரதியார் , ராஜராஜ சோழன், கர்ணன், திருநாவுக்கரசர்,தெனாலிராமன்,பரதன், இவர்களை இவர்மூலம்தான் கண்ணால் கண்டேன். உணர்ந்தேன். கௌரவம் தெய்வ மகன்பாசமலர்பாத்திரங்களைஇவரைத்தவிர யாராலும்நடித்துக்காட்டத்தான் முடியுமா? தமிழை இவரைவிட இனிஒருவன் பேசித்தான் ஜெயிக்கமுடியுமா?அவர் கண்கள் காட்டிய பாவனைகள் நம் கண்ணைவிட்டு மறைந்துதான்போய்விட முடியுமா?காலத்தால் அழிக்க முடியாத காவியத் திருமகனே வாழிய உன்புகழ்
https://scontent.fybz1-1.fna.fbcdn.n...f1&oe=5A4B3F5A
-
Subbaraj Subba Reddy
அக்.1- கலைத்தாயின்
தெய்வமகனுக்கு பிறந்த நாள்.
இமயமே!
கடலின் ஆழத்தை இதுவரை யாரும் கண்டதில்லை,
வின்வெளியின் தூரத்தை யாரும் தொட்டதில்லை,...
உன் கலை உலக சாதனையை யாரும் எட்டிப் பார்த்ததில்லை,
இப்புவியில் இனி எவரும் பிறக்க வாய்ப்பில்லை,
உன் ரசிகன் என்ற கௌவ்ரவ(ம்)த்தில் நடமாடுன்றோம்!!
இந்திரலோகத்தை ஆட்சி செய்ய நீ சென்றாய்,
இங்கு அரைவேக்காடு ஆட்சியாளர்க்கு அது அறிய வாய்ப்பில்லை!!
இதயமே!!!
மிக விரைவில் சொர்க்கத்தில் உனை தரிசிக்க நான் வருவேன்!
வின்னிலிருந்து உன் பிள்ளைகள் நலம் வாழ வாழ்த்துங்கள்!!
மன்னிலிருந்து உனை நாங்கள் வணங்குகிறோம்!!!
https://scontent.fybz1-1.fna.fbcdn.n...46&oe=5A41ABC3
https://scontent.fybz1-1.fna.fbcdn.n...77&oe=5A3DAD37
-
sankar muthuswamy
சினிமா என்ற வெள்ளித்திரைக்கு பொருந்திய ஒரே முகம் உனதுதான்
https://scontent.fybz1-1.fna.fbcdn.n...1a&oe=5A4ACD55
-
சிவாஜி- ஓர் சரித்திரம்! #HBD_SivajiGanesan
தமிழ்சினிமாவின் பல்கலைக்கழகம் என புகழ்கொண்ட நடிகர்திலகம் சிவாஜிகணேசனின் 90-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.
தமிழ்சினிமா பாடல்களால் ஓடிக்கொண்டிருந்த காலத்தில் அதை தன் வசனநடிப்பால் மறக்கடித்து முற்றிலும் காட்சியமைப்பு மற்றும் வசனங்களின்பால் சினிமா மீது மக்கள் ஈர்க்கப்பட காரணமானவர்களில் தவிர்க்கவியலாதவர் நடிகர்திலகம் சிவாஜி கணேசன். ஒப்பிட முடியா நடிப்பாலும், அயரா உழைப்பாலும் பல முத்தான படங்களை தமிழ் சினிமாவிற்கு தந்த வள்ளல். கணேச மூர்த்தி என்ற இயற் பெயரோடு சின்னையா மன்றாயர் மற்றும் ராஜாமணி அம்மாள் தம்பதியினருக்கு மகனாக திரு சிவாஜி கணேசன் 1928 ஆம் வருடம் அக்டோபர் 1-ம் தேதி பிறந்தார்
இந்திய சினிமாவின் திறந்தவெளிப் பல்கலைக்கழகமாக உயிர்ப்பெற்றார். எல்லா நடிகர்களுக்கும் ரசிகர்கள் இருப்பார்கள். ஆனால், அனைத்து நடிகர்களும் இவருக்கு ரசிகர்களாய் இருப்பார்கள். 1952-ல் நேஷனல் பிக்சர்ஸ் தயாரித்த 'பராசக்தி'யில் 'குணசேகரன்' பாத்திரத்தில் சிவாஜியைக் கதாநாயகனாக்க படத் தயாரிப்பாளர் பி.ஏ.பெருமாள் முடிவு செய்தபோது, பலரும் எதிர்ப்புத் தெரிவித்தனர். அத்தனை எதிர்ப்புகளையும் கடந்து நடிகர் திலகமாக உருப்பெற்று, மறைந்தாலும் இன்றும் குன்றா புகழுடனே திகழ்கிறார் நடிகர் திலகம் சிவாஜி கணேசன்.
vikatan
-
Billa Barath
#தமிழ்நாடு ஆண்ட மன்னர்கள் #வரலாறு அனைத்தும் #கணேசன் என்கின்ற #சிவாஜி_கணேசன் முகம் மூலமாகவே மக்கள் அறிந்திருக்கிறார்கள். வருங்கால சந்ததியினரும் அவ்வாறே அறிய இருக்கிறார்கள். பிறந்தநாள் வாழ்த்துக்கள் என் அன்பு தாத்தா.....
வாழ்க சூரை சிங்கமே. .,...
https://scontent.fybz1-1.fna.fbcdn.n...3c&oe=5A52F2AD
-
Vikatan EMagazine
· 3 hrs ·
#விகடன்_பொக்கிஷம் இந்திய சினிமாவின் திறந்தவெளிப் பல்கலைக்கழகம். எல்லா நடிகர்களுக்கும் ரசிகர்கள் இருப்பார்கள். ஆனால், அனைத்து நடிகர்களும் இவருக்கு ரசிகர்கள்
சிவாஜி கணேசன்... இந்திய சினிமாவின் திறந்தவெளிப் பல்கலைக்கழகம். எல்லா நடிகர்களுக்கும் ரசிகர்கள் இருப்பார்கள். ஆனால், அனைத்து நடிகர்களும் இவருக்கு ரசிகர்கள். அந்தக் கலைச் சமுத்திரத்திலிருந்து சில துளிகள்...
* சத்ரபதி சிவாஜி வேடத்தில் நடித்த வி.சி.கணேசனை மேடைக்குக் கீழ் இருந்து பார்த்த தந்தை பெரியார், 'இனி இவர்தான் சிவாஜி!' என்று சொன்னார். அதுவே காலம் சொல்லும் பெயரானது!
* நடிகர் திலகம் முதன்முதலில் போட்ட வேடம் பெண் வேடம் தான். உப்பரிகையில் நின்றுகொண்டு ராமனைப் பார்க்கும் சீதை வேடம்தான் சிவாஜி ஏற்ற முதல் பாத்திரம்!
* 1952-ல் நேஷனல் பிக்சர்ஸ் தயாரித்த 'பராசக்தி'யில் 'குணசேகரன்' பாத்திரத்தில் சிவாஜியைக் கதாநாயகனாக்க படத் தயாரிப்பாளர் பி.ஏ.பெருமாள் முடிவு செய்தபோது, பலரும் எதிர்ப்புத் தெரிவித்தனர். எதையும் காதில் வாங்கிக்கொள்ளாமல் சிவாஜியை ஹீரோவாக்கிய பெருமை பெருமாளுக்கே உண்டு!
* சின்சியாரிட்டி, ஒழுங்கு, நேரந் தவறாமைக்கு சிவாஜி ஓர் உதாரணம். ஏழரை மணிக்கு ஷுட்டிங் என்றால், ஆறே முக்கால் மணிக்கே செட்டில் ஆஜராகிவிடுவார். தனது வாழ்நாளில் ஒரு நாள்கூடத் தாமதமாக ஷுட்டிங்குக்குச் சென்றது இல்லை!
* கலைஞரை 'மூனா கானா', எம்.ஜி.ஆரை 'அண்ணன்', ஜெயலலிதாவை 'அம்மு' என்றுதான் அழைப்பார்!
* வீரபாண்டிய கட்டபொம்மன், பாரதியார், வ.உ.சி., பகத்சிங், திருப்பூர் குமரன் போன்ற சுதந்திரப் போராட்ட வீரர்களின் பாத்திரங்கள் அனைத்தையும் ஏற்று நடித்தவர் சிவாஜி ஒருவரே!
* தன்னை 'பராசக்தி' படத்தில் அறிமுகம் செய்த தயாரிப்பாளர் பி.ஏ.பெருமாள் வீட்டுக்கு ஒவ்வொரு பொங்கல் அன்றும் சென்று, அவரிடம் ஆசி பெறுவதை வழக்கமாகவே வைத்திருந்தார் சிவாஜி!
* திருப்பதி, திருவானைக்கா, தஞ்சை மாரியம்மன் கோயில்களுக்கு யானைகளைப் பரிசளித்துள்ளார்!
* தமிழ் சினிமா உலகில் முதன்முதலாக மிகப் பெரிய கட்-அவுட் வைக்கப்பட்டது சிவாஜிக்குத்தான். 1957-ல் வெளிவந்த அந்தப் படம் 'வணங்காமுடி!'
* சிவாஜி தனது நடிப்புக்காக வாங்கிய முதல் பரிசு ஒரு வெள்ளித்தட்டு. 'மனோகரா' நாடகத்தைப் பார்த்த கேரளா -கொல்லங்காடு மகாராஜா கொடுத்த பரிசு அது!
* தனது அண்ணன் தங்கவேலு, தம்பி சண்முகம் போன்றவர்களுடன் ஒரே கூட்டுக் குடும்பமாக இறுதிவரை வாழ்ந்தார். சிவாஜி யின் கால்ஷீட், நிர்வாகம் அனைத்தையும் கவனித்துகொண்டவர் அவரது தம்பி சண்முகம்தான்!
* சிவாஜி நடித்த மொத்தப் படங்கள் 301. இதில் தமிழ்ப் படங் கள் 270. தெலுங்கில் 9, ஹிந்தி 2, மலையாளம் 1, கௌரவத் தோற்றம் 19 படங்கள்!
* ஒவ்வொரு வருடமும் குடும்பத்துடன் தனது சொந்த ஊரான சூரக்கோட்டையில் பொங்கல் விழா கொண்டாடுவதை வழக்கமாகவே வைத்திருந்தார். அன்றைக்குப் பல சினிமா பிரபலங்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்வார்கள்!
* விநாயகர் மீது மிகுந்த பக்திகொண்டவர் சிவாஜி. சிறுவெள்ளி யிலான பிள்ளையார் விக்கிரகத்தை எப்போதும் கூடவே வைத்திருப்பார்!
* சிவாஜிக்கு சிகரெட் பிடிக்கும் பழக்கம் இருந்தது. 'பராசக்தி' படத்தை இயக்கிய, இயக்குநர்கள் கிருஷ்ணன் - பஞ்சு முன்னிலையில் மட்டும் சிகரெட் பிடிக்க மாட்டார்!
* 'ரத்தத் திலகம்' படத்தில் இவரது நடிப்பைப் பாராட்டி - சென்னை சினிமா ரசிகர் சங்கம் கொடுத்த பரிசு - ஒரு துப்பாக்கி!
* படப்பிடிப்பின்போது அவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் எடுக்காத நேரங்களில் மற்றவர்கள் நடிப்பதை உற்றுக் கவனிப்பார். ஆர்வமாகக் கேட்டால் மற்றவர்களுக்கு டிப்ஸ் கொடுப்பார்!
* சிவாஜியும் எம்.ஜி.ஆரும் இணைந்து நடித்த ஒரே படம் கூண்டுக்கிளி!
* விதவிதமான கடிகாரங்களை அணிவதில் இவருக்கு அலாதி பிரியம். ஒமேகா, ரோலக்ஸ் போன்ற வாட்சுகளை ஏராளமாக வாங்கிவைத்திருந்தார்!
* தன் தாய் ராஜாமணி அம்மையாருக்கு சிவாஜி கார்டனில் சிலை ஒன்றை அமைத்தார் சிவாஜி. அந்தச் சிலையைத் திறந்துவைத்தவர் எம்.ஜி.ஆர்!
* 'ஸ்டேனிஸ் லா வோஸ்கி தியரி' என்கிற நடிப்புக் கல்லூரி மாணவர்களுக்கான பாடப் புத்தகத்தில் 64 வகையான முகபாவங்களைப் பிரதிபலிக்கும் திறமை பெற்றவர் என்று குறிப்பிட்டு, சிவாஜியின் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன!
* அவரது தீவிரமான ஆசைகளில் ஒன்று தந்தை பெரியார் வேடத்தில் நடிப்பது. கடைசி வரை அது நிறை வேறவே இல்லை!
* பிரபல தவில் கலைஞர் வலையப்பட்டி, 'தமிழ் சினிமாவில் நீங்கள்தான் எல்லோருக்கும் ரோல் மாடல்' என்று சிவாஜியிடம் சொன்னபோது, 'டி.எஸ்.பாலையா, எம்.ஆர்.ராதா வரிசையில் மூன்றாவதாகத்தான் நான்' என்றாராம் தன்னடக்கமாக!
* பெருந்தலைவர் காமராஜரின் மீது அளவிட முடியாத அன்புகொண்டவர் இவர். 'அந்த சிவகாமியின் செல்வனின் அன்புத் தொண்டன் இந்த ராஜாமணியின் மகன்' - என்பதுதான் தன்னைப்பற்றி சிவாஜி செய்துகொள்ளும் அடக்கமான அறிமுகம்!
* கிரிக்கெட், கேரம்போர்டு இரண்டும் இவருக்குப் பிடித்தமான விளையாட்டுகள்!
- மானா பாஸ்கரன்
ஆனந்த விகடன்
https://scontent.fybz1-1.fna.fbcdn.n...3b&oe=5A84614E
-
Sekar Parasuram
மணி மண்டப திறப்பு விழா,
கட்டுக்கடங்காத கூட்டம் குவிந்ததால் பெரும்பாலான வெளியூர் வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டன, ரசிகர்கள் உள்ளே அனுமதிக்கப் படவில்லை,
மண்டபத்திற்கு வெளியே நிற்கும் கூட்டத்தின் ஒரு பகுதி
https://scontent.fybz1-1.fna.fbcdn.n...6d&oe=5A4219D6
-
-
-