-
தமிழ் பட உலகில் முன்னணி ஜோடிகளாக கொடிகட்டி பறந்த காலத்தில் எம்ஜிஆரும் ஜெயலலிதாவும் இணைந்து நடித்த படம், எங்கள் தங்கம்.
காஞ்சித்தலைவன் படம் நடித்த பிறகு ஏழு ஆண்டுகள் கழித்து கலைஞர் குடும்பத்திற்காக எம்ஜிஆர் செய்த படம்.. இருவர் காம்பினேஷனில் முதல் கலர் படமும்,கடைசி படமும் கூட..
பாடல்களில் வாலியும் இசையில் எம்எஸ் விஸ்வநாதனும் கதகளி ஆடி இருப்பார்கள்..
தங்கப் பதக்கத்தின் மேலே..
நான் செத்துப் பொழச்சவன்டா..
ஒரு நாள் கூத்துக்கு மீசையை வெச்சான்..
என ஹிட் பாடல்கள் அடுத்தடுத்து வந்தபடியே இருக்கும். படத்தில் பத்து நிமிடங்களுக்கும் மேலாக ஒரு கதாகாலட்சேபம் வரும். மொட்டைத்தலை குடுமியுடன் எம்ஜிஆர் காலட்சேபம் செய்து ஜமாய்ப்பார்.
மெட்ராஸ் மாகாணம் பெயர் மாற்றம், மூடநம்பிக்கைக்கு எதிர்ப்பு, அரசு அதிகாரிகளின் மூளைகெட்டத்தனம் மகாராஷ்டிரா சிவசேனாவின் அரசியல் என வாலி பாடலை கலந்து கட்டி அடித்து நொறுக்கி இருப்பார்..
தத்துவ பாடலோ ரொமான்டிக் பாடலோ, அரசியல் வரி இல்லாமல் இந்த படத்தில் இருக்கவே இருக்காது.
ஜெயலலிதா கனவு காணும் ரொமான்டிக் பாடலில் கூட ,"கேளம்மா கேளு நான் காஞ்சிபுரத்தாளு" எனப்பாடி, தான் அக்மார்க் திமுக காரன் என்பதை சொல்வார்..
ஓடும் ரயிலை இடைமறித்து அதன் பாதையில் தனது தலை வைத்து உயிரையும் துரும்பாய் தான் மதித்து
தமிழ் பெயரை காத்த கூட்டம் இது..
திமுக நடத்திய ரயில் மறியல் போராட்டத்தை, நான் செத்துப் பிழைச்சவன்டா பாடலில் இப்படி அருமையாக கொண்டு வந்திருப்பார் வாலி..
அப்போது அமைச்சர் பதவிக்கு இணையான சிறுசேமிப்புத் துறை தலைவர் பதவியில் எம்ஜிஆர் இருந்தார்.. சிறு சேமிப்பை ஊக்குவிப்பது போல் படத்தில் காட்சிகள் வைத்து நிஜ எம்ஜிஆரும் திரையில் வருவார். அவருடன் முதலமைச்சர் கருணாநிதி நாடாளுமன்ற உறுப்பினர் முரசொலி மாறன் மற்றும் தமிழக அமைச்சர்களும் காட்சியில் தோன்றுவார்கள்.
படத்தில் ஜெயலலிதாவை பார்த்து எம்ஜிஆர் பாடும் ""நான் அளவோடு ரசிப்பவன்.. " என்று முதல் வரியை வாலி எழுத," எதையும் அளவின்றி கொடுப்பவன்" என்று அடுத்த வரியை கலைஞர் எடுத்து கொடுத்தார்.
படப்பிடிப்பு தொடங்கிய போது உயிரோடு இருந்த முதல் அமைச்சர் அண்ணா படம் வெளியாகும்போது உயிரோடு இல்லை. படத்தில் அவருடைய சவ ஊர்வல காட்சிகள் காட்டப்பட்டன.
திமுகவில் எம்ஜிஆர் பின்னிப்பிணைந்து கலைஞர் குடும்பத்துடன் உச்சகட்ட பாசத்துடன் ஒட்டி உறவாடிய காலகட்டம் என்பதால் இவ்வளவு விஷயங்கள் படத்தில் இடம் பெற்றன..
எங்கள் தங்கம் படம் வெளியாகி அமோகமாய் வெற்றி கண்டது. படத்தயாரிப்பாளர் முரசொலி மாறனுக்கு லாபத்தை பெருமளவில் வாரிக்கொடுத்தது.
எம்ஜிஆர் அவர்களும் கலைச்செல்வி ஜெயலலிதா அவர்களும் எங்கள் தங்கம் படத்திற்கு பணம் வாங்காமல் நடித்துக் கொடுத்து நடித்துக் கொடுத்தது மட்டுமன்றி படத்தை வெற்றிப்படமாகவும் ஆக்கித் தந்தனர்.
எங்கள் தங்கம் சாதாரண ஒரு சினிமா என்றாலும், அது தொடர்பான வரலாறு மிகவும் ஆச்சரியமானவை..
சரியாக ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு 1970 அக்டோபர் 9 ஆம் தேதி அதாவது இதே நாளில் தான் எங்கள் தங்கம் படம் வெளியானது.. பொன்விழா ஆண்டு..
50 ஆண்டுகளுக்குள் எவ்வளவு பெரிய மாற்றங்கள்..
பகிரப்பட்டது.......Jeelanikhan
-
நீரும் நெருப்பும் என்றாலே நமக்கு முதலில் நினைவுக்கு வருவது கரிகாலன்தான். காட்டிலே மனோகரால் வளர்க்கப்பட்ட முரட்டுக் குழந்தை. மணிவண்ணனோ நகரத்தில் வசதியான வணிகர் குடும்பத்தில் வளர்வார். இந்த இரண்டு கேரக்டர்களிலும் அந்தந்த பாத்திரத்தின் தன்மை, மனோநிலைக்கேற்றபடி நடிப்பில் வேறுபாடு காட்டி முத்திரை பதித்திருப்பார் மக்கள் திலகம். மணிவண்ணன் இடது கையால் நளினமாக, சிரித்தபடி வாள் வீசுவார். கரிகாலனின் வாள் வீச்சில் முரட்டுத்தனம் இருக்கும். காட்டில் வளர்ந்தவர் காட்டடியாய் அடிப்பார். மணிவண்ணனுக்கு ஏற்படும் உணர்ச்சிகளில் தான் சிக்கித் தவிப்பது, ஜெயலலிதாவை மணிவண்ணன் காதலிப்பதைப் பார்த்து பொறாமை, அதை மனோகரிடம் போட்டுக் கொடுப்பார். மனோகர் மணிவண்ணனிடம் அதுபற்றி விசாரிப்பார். நீதான் சொல்லிக் கொடுத்தாயா? என்பது போல மணிவண்ணன் பார்க்கும்போது, மேலே எங்கோ பார்த்தபடி சட்டைக் காலரை கடித்து இழுப்பது, கடைசியில் ஆனந்தனை குத்துவாள் வீசி கொன்றுவிட்டு அவர் போடும் சத்தத்தைக் கேட்டு அசோகனிடம் சண்டையிட்டபடியே திரும்பி பார்க்கும் மணிவண்ணனிடம், ‘காரணம் நான்தான்’ என்பதை பெருமிதத்துடன் கையால் நெஞ்சில் தட்டிக் காண்பிக்கும்போது... என்று படம் முழுவதும் கரிகாலன் நடிப்பு அதகளம். அவர் இறக்கும்போது நமக்குள் ஏற்பட்ட ‘புஸ்....’ படத்தை பாதித்துவிட்டது.
இரு மக்கள் திலகமும் மோதும் சண்டைக் காட்சி மிகவும் அற்புதமாக எடிட் செய்யப்பட்டிருக்கும். தொழில்நுட்பம், கிராபிக்ஸ் இல்லாமல் அந்தக் காலத்திலேயே இருவரும் கைகளை கோர்த்தபடி பலப்பரிட்சையில் ஈடுபடும் காட்சி ஒன்றுபோதும். பிற்காலத்தில் ஆளவந்தான் படத்தில் இரண்டு கமல்ஹாசன் இதேபோல பலப்பரிட்சை செய்யும் கிராபிக்ஸ் காட்சி பிரபலம். எம்.எஸ்.விஸ்வநாதன் ரீரிகார்டிங், பின்னணி இசை செம்ம. ஜெயலலிதாவை ஆனந்தன் ஆட்கள் குதிரையில் துரத்தும் காட்சியில் பின்னணி இசை மிரட்டும். கடவுள் வாழ்த்துப் பாடும்..... பாடல் அடிக்கடி டிவியில் போட்டே பிரபலமாகிவிட்டது. மாலை நேரத் தென்றல், கன்னி ஒருத்தி மடியில்.. பாடல்கள் இனிமையாக இருந்தாலும் பெரிய ஹிட் ஆகவில்லை. ஜெயலலிதா பாடும் ... கொண்டு வா..., ஒரு அவியல்..., ஜோதிலட்சுமியின் கட்டு மெல்ல கட்டு பாடல்களை தவிர்த்திருக்கலாம்.
நீரும் நெருப்பும் தாமதமாக வந்திருந்தால் ரிக்க்ஷாக்காரன் வெள்ளிவிழா கொண்டாடியிருப்பார். ஒரு பிளாக்பஸ்டர் படத்துக்கு அடுத்த படம் என்றால் எதிர்பார்ப்பு அதிகரிக்கும். ரிக்க்ஷாக்காரனுக்குப் பிறகு நீரும் நெருப்பும் படத்துக்கும் அப்படித்தான் எகிறியது. சென்னையில் கூட்டத்தை கட்டுப்படுத்த குதிரைப்படை வந்ததே அதற்கு சாட்சி. மறுவெளியீடுகளில் நிறைய முறை வந்தது. சன் லைப், பாலிமர், வசந்த், புதுயுகம் தொலைக்காட்சிகளில் இன்னும் நீரும்நெருப்பும் அடிக்கடி ஒளிபரப்பாகிறது. கடந்த வாரம் பாலிமரில் இரவு 11 மணிக்கு ஒளிபரப்பானது. இந்தப் படத்துடன் வந்த சில படங்கள் மறுவெளியீடுகளில் வருவதில்லை. டிவியிலும் ஒளிபரப்பாவதில்லை. அந்தப் படங்களின் மவுசு அவ்வளவுதான். முதல்வராக இருந்த கருணாநிதி நீரும் நெருப்பும் படத்தின் முதல் காட்சிக்கு வந்து பார்த்தார். அப்போது அவர் பேசும்போது, ‘இந்தப் படம் கலையுலகுக்கு ஒரு அறைகூவல். அறைகூவல் என்று ஏன் சொல்கிறேன் என்றால் ‘சவால்..’ என்று சொன்னால் வேறு ஏதாவது வந்து தொலைக்கும்’ ... என்று பேசியதை கேட்டு விவரம் புரிந்தவர்கள் சிரிக்காமல் இருக்க முடியாது...... Swamy...
-
#மறக்க_முடியாத_மக்கள்திலகம்
"படுத்துக்கொண்டே ஜெயித்தார்"
இந்த வார்த்தைகளை கேட்டவுடன் மக்கள் திலகத்தின் ரசிகர்களுக்கும், பொதுமக்களுக்கும் 1984ம் வருடம் நடந்த சட்டமன்ற தேர்தலில், ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதியில் மக்கள் திலகத்தின் உடல் நலக்குறைவு காரணமாக, படுத்துக்கொண்டே வென்றது நினைவுக்கு வரும்..
ஆனால்...
மக்கள் திலகத்தின் முதல் தேர்தல் வெற்றியையும் அவர் மருத்துவ மனையில் படுத்துக்கொண்டே பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
1967.ம் ஆண்டு தமிழக சட்டசபைக்கான தேர்தல் பிப்ரவரி மாதம் அறிவிக்கப்பட்டுவிட்டன. பெருந்தலைவர் காமராஜர் தலைமையிலான காங்கிரஸ் கூட்டணிக்கும், அறிஞர் அண்ணாவின் தலைமையிலான திராவிட முன்னேற்ற கழக கூட்டணிக்கும் நேரடியான கடும்போட்டி நிலவியது. திராவிட முன்னேற்ற கழகத்தில் மக்கள் திலகம் இணைந்து அறிஞர் அண்ணாவின் தலைமையை ஏற்றிருந்தார்.சென்னை- செயிண்ட் தாமஸ் மவுண்ட் என்ற பரங்கிமலை சட்டமன்ற தொகுதியில் அவர் வேட்பாளராக களமிறங்கியிருந்தார்.
ஆனால் எதிர்பாராத விதமாக ஜனவரி 12ம் நாள் மக்கள் திலகம் துப்பாக்கியால் சுடப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் ராயப்பேட்டை மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார்.அவரால் தேர்தல் பரப்புரைக்கோ-பொதுக்கூட்டங்களுக்கோ செல்லமுடியவில்லை. மக்கள் திலகத்தின் கழுத்தை சுற்றி பேண்டேஜ் போடப்பட்ட படத்தை வெளியிட்டு, மக்கள் திலகத்திற்கு வாக்களிக்க கோரும் புகைப்படங்கள் பரங்கிமலை சட்டமன்ற தொகுதியில் உலாவந்தன.((முதல் படம்))
தேர்தல் முடிவு வந்தபோது மக்கள் திலகம் 27000 வாக்கு வித்தியாசத்தி காங்கிரஸ் வேட்பாளரை வென்றார். இருந்தபோதும் அவர் மருத்துவமனையில் இருந்து வெளியேரவில்லை. மக்கள் திலகத்தின் வெற்றி சான்றிதழ், சட்டமன்ற உறுப்பினருக்கான பிரமாணங்கள் ஆகியன மருத்துவ மனையில் வைத்துத்தான் அவருக்கு வழங்கப்பட்டன ((இரண்டாவது படம்)) .
சுடப்பட்டு விட்டோமே என சிறிதும் பின் வாங்காமல் தான் சார்ந்திருந்த இயக்கத்திற்காக பாடுபட்டு படுத்துக்கொண்டே வென்றார் மக்கள் திலகம்.
இந்த தேர்தலின் போதுதான் அண்ணா சொன்னார் "எம்.ஜி.ஆரால் வரமுடியாவிட்டால் என்ன...அவர் தொப்பியையும், கண்ணாடியையும் தட்டில் வைத்து பரங்கிமலைக்கு அனுப்புங்கள்...கழகம் பெரும் வெற்றி பெரும்" என்றார். எத்துணை சத்தியமான வார்த்தைகள்...!!!...Sritharbabu
-
சிங்காநல்லூரில் வசித்து மறைந்த பழம்பெரும் நாடகக் கலைஞர் ஒருவர் 30 ஆண்டுகளுக்கு முன்பு பேசியது இது.
ஒரு கூட்டத்திற்கு அண்ணா சென்றிருந்தார். நல்ல கூட்டம். வரவேற்பு. அண்ணா காரிலிருந்து இறங்கியவுடன் மேல் சட்டையில்லாமல் ஒரு மாடு மேய்க்கும் சிறுவன் ஓடிவந்து சுற்றுமுற்றும் பார்த்தான். 'என்ன தம்பி தேடறே' என்றார் அண்ணா. 'எம்ஜிஆர் வரலையா' என்று அவரிடமே கேட்டான். 'இல்லை!' என்று அவர் பதில் சொல்லி நகர, சிறுவன் விடவில்லை, 'நீங்க யாரு? எம்ஜிஆர் கட்சியா?'. 'ஆமாம் தம்பி!' என்று சிரித்துக் கொண்டே நகர்ந்தார் அண்ணா.
அந்த அளவு செல்வாக்கு அண்ணா காலத்திலேயே எம்ஜியாருக்கு இருந்நது...sbb...
-
#எம்ஜிஆரின் #இன்வால்வ்மெண்ட்.........
நாடோடி மன்னன் திரைக்காவியத்திற்குப் பிறகு மக்கள்திலகத்திற்கு "நல்ல இயக்குனர்" என்ற பெயர் கிடைத்தது...
"#என்னுடைய #சீடன்" என்று சொல்லிக்கொண்டிருந்த திரு.ராஜா சந்திரசேகர்...இப்படத்தைப் பார்த்ததும்..."#நீ #எனக்கு #குருவாகி #விட்டாய்" என எம்ஜிஆரை வாயாரப் புகழ்ந்தார்...
தமிழ்த் திரைக்கே வித்திட்ட சித்தர் கே.சுப்ரமணியம் அவர்கள், "இவ்வளவு விஷயங்களைத் தெரிந்து வைத்துக்கொண்டு, என்கிட்ட கத்துக்க வந்தியே, #நானல்லவா #உன்னிடம் #கற்கவேண்டும்" என்றார்..
இந்த ஊக்கத்தினால் எம்ஜிஆருக்கு மீண்டும் படங்களை இயக்கும் ஆர்வம் வந்தது. உடனே கதாசிரியர் காஜா முகைதீன் @ ரவீந்தரைக் கூப்பிட்டு சில கருத்துக்களைச் சொல்லி கதை எழுதச் சொன்னார். பெரியவர் சக்ரபாணிக்கு இது பிடிக்கவில்லை...
அவர் ரவீந்தரைக் கூப்பிட்டு, "இப்ப எதுக்கு மறுபடி படமெல்லாம்? எடுத்த படத்தால் ஏழையாகி உக்காந்திருக்கோம். வாங்கினவங்க அள்ளிக் குவிக்கிறாங்க. அவனுக்கு வேற வேலை இல்ல. அவன் சொல்றதுக்கெல்லாம் ஆடாம பேசாப் போ..."
ஆனால் எப்படியோ பெரியவரிடம், "அண்ணா, நாம ஆரம்பிச்ச எம்ஜிஆர் பிக்சர்ஸ் சும்மா இருக்கக்கூடாது.. ஒரு படத்தோட முடித்ததுன்னு மக்கள் நினைச்சுடக்கூடாது" ன்னு சொல்லி சம்மதம் வாங்கிவிட்டார்...எம்ஜிஆர்
ஆனால் இம்முறை காதல் கதை...
அதுவும் ஒரு புரட்சியான காதல் கதை... முஸ்லீம் கேரக்டர் நான்...
ஹீரோயின் ஒரு இந்து.
அருணா ஆஸப் அலி மாதிரி துணிச்சலா காட்டிக்கணும்...
"இந்தப் படத்தைப் பார்ப்பவர்களின் #மனதில் #மதத்துவேஷம் #வந்துடக்கூடாது. #பிணைப்பு #தான் #வரணும்" என்றார் எம்ஜிஆர், ரவீந்தரிடம்.
அப்படத்திற்கு எம்ஜிஆர் வைத்த பெயர் "கேரளக்கன்னி".
இப்படி மும்முரமாக இருந்த சமயத்தில் 1959 ஜூன் 16 ல் எம்ஜிஆரின் கால் முறிவினால் இப்படம் அப்படியே நின்றது...
பல மாதங்களுக்குப் பின்...
1960 ல் ராமாவரம் தோட்டம் எம்ஜிஆர் அவர்களால் உருவாக்கப்பட்டது...
அங்கு எம்ஜிஆரைத் தேடி ரவீந்தரும், சில உதவியாளர்களும் சென்றனர்.. வீட்டில் எம்ஜிஆர் இல்லாததால் அங்குள்ள காவலாளி ரத்தினத்தை கேட்டதற்கு, "அதை ஏன் கேக்குறீங்க..உங்க அண்ணன் (எம்ஜிஆர்) செய்யற கூத்தை? பாக்குமரத்தடிக்குப் போங்க - எங்கே இருக்காங்கன்னு தெரியும்...!!!"
போய்ப்பார்த்தார்கள். வியந்தார்கள். அங்கே யோகிகள் பூமிக்கடியில் உட்கார்ந்து தவம் செய்வதைப் போல் சமாதி போன்ற குழியில் உட்கார்ந்திருந்தார்..."என்னண்ணா இருக்க இடமாயில்லை" என்று கேட்டதற்கு...
"#மனுஷனுக்கு #எத்தனை #மாடிவீடு #இருந்தாலும் #கடைசியிலே #தேவை #இந்த #ஆறடி #தான்..." மேலும் நமது 'கேரளக்கன்னி' படத்தின் க்ளைமாக்ஸை எப்படி படமாக்குறதுன்னு ஆழமா யோசிக்கிறதுக்கு இப்படி ஒரு ஏற்பாடு...
அதோட, "heaven in grave" னு ஒரு நாவல். அதை நம்ம நாட்டுக்கதையா மாத்தி படமெடுக்க நினைப்பு. அதுக்கும் இந்த ஒத்திகை...
தலைவரோட 'இன்வால்வ்மெண்ட்' எந்தளவு இருக்கு பார்த்தீர்களா!!!
அவர் பல வெற்றிகளைக் குவித்ததற்கு இதுதான் முக்கிய காரணமும் கூட............bsm...
-
எம்.ஜி.ஆர்., அ.தி.மு.க.வை உருவாக்கி வளர்த்தது எப்படி?- நேர்முக உதவியாளர் தகவல்
அ.தி.மு.க. 49-வது ஆண்டு தொடக்க விழா இன்று கொண்டாடப்படுகிறது. இந்தநிலையில் எம்.ஜி.ஆர்., அ.தி.மு.க.வை உருவாக்கி வளர்த்தது எப்படி? என்ற நினைவுகளை அவருடைய நேர்முக உதவியாளர் மகாலிங்கம் பகிர்ந்து உள்ளார்.
எம்.ஜி.ஆர்., அ.தி.மு.க.வை உருவாக்கி வளர்த்தது எப்படி?- நேர்முக உதவியாளர் தகவல்
எம்.ஜி.ஆருடன் அவரது நேர்முக உதவியாளர் க.மகாலிங்கம். (பழைய படம்).
எம்.ஜி.ஆரால் தோற்றுவிக்கப்பட்ட அ.தி.மு.க. இன்று (சனிக்கிழமை) 49-வது ஆண்டில் காலடி எடுத்து வைக்கிறது. எம்.ஜி.ஆர். கட்சி தொடங்கிய வரலாறு குறித்து அவரிடம் நேர்முக உதவியாளராக பணியாற்றிய க.மகாலிங்கம் கூறியதாவது:-
1972-ம் ஆண்டு அக்டோபர் 17-ந்தேதி(செவ்வாய்க்கிழமை), தமிழகமே ஆவலுடன் எதிர்நோக்கி காத்திருந்த நாள். அன்று காலை 10 மணியளவில் எம்.ஜி.ஆர். தன் ராமாவரம் தோட்டத்தில் மிகவும் இறுகிய முகத்துடன் காணப்பட்டார். அவருடைய அந்த செயல்பாடு எனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. நேராக அவர் தன் காரில் ஏறினார். சைகை மூலம் என்னையும் காரில் ஏற சொன்னார். நானும் அவருடன் பயணமானேன்.
கார் நேராக லாயிட்ஸ் சாலையில் உள்ள அன்னை சத்யா திருமண மண்டபத்துக்கு (தற்போதைய அ.தி.மு.க. தலைமை அலுவலகம்) சென்றது. அங்கு அவர் கட்சி பெயரை அறிவித்தார். பின்னர் நிருபர்களுக்கு பேட்டியளித்த எம்.ஜி.ஆர்., ‘அண்ணாவின் புகழையும், கொள்கைகளையும் கட்டிக்காக்கவும், அவர் விட்டு சென்ற பணிகளை சிறப்பாக மேற்கொள்ளவும் இந்த இயக்கம் தொடங்கப்பட்டது’ என்று கூறினார்.
அண்ணாவின் வளர்ப்பு பிள்ளையாக விளங்கிய எம்.ஜி.ஆர்., அண்ணா தோற்றுவித்த இயக்கமான தி.மு.க.வில் இருந்து வஞ்சக எண்ணம் கொண்ட சில துரோகிகளால் அக்டோபர் 10-ந்தேதி நீக்கப்பட்டார். நீக்கப்பட்ட நாளில் இருந்து பல தலைவர்களுடன், குறிப்பாக ராஜாஜி, பெரியார் ஆகியோருடன் ஆலோசனையும், அவர்களுடைய அறிவுரைகளை ஏற்று இயக்கத்தை தொடங்கினார். தன் இதயத்தில் தெய்வமாக இருக்கும் அண்ணாவின் பெயரிலேயே ‘அண்ணா திராவிட முன்னேற்ற கழகம்’ என்று தன் இயக்கத்துக்கு பெயரினை சூட்டினார். இயக்கத்தின் கொடியிலும் அண்ணாவை நினைவுகூறும்விதமாக அவர் உருவம் பொறித்த கொடியையும் உருவாக்கினார். இவை அனைத்தும் 8 நாட்களில் உருவானது.
எம்.ஜி.ஆரின் நேர்முக உதவியாளர்க.மகாலிங்கம்.
எம்.ஜி.ஆர். இந்த இயக்கத்தை தொடங்கி தன்னுடைய சொந்த கட்டிடத்தையே தலைமை அலுவலகத்துக்காக கொடுத்தார். தொடர்ந்து இயக்கம் நடத்திட தேவையான நிதியையும் அவரே அளித்தார். இதற்காக அவர் கட்சி ஆரம்பித்ததில் இருந்து ஆட்சியில் அமரும் வரை தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்தார். கட்சி வளர்ச்சிக்காக அவர் ஒரு நாளுக்கு 20 மணி நேரத்துக்கு மேலாக உழைத்தவர். ஒரு புறம் திரைப்பட படப்பிடிப்பு. மற்றொருபுறம் அரசியல் பணிகள்.
1977-ம் ஆண்டு தமிழகத்தில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் எம்.ஜி.ஆர். தலைமையிலான அண்ணா தி.மு.க.வுக்கு வாக்களித்து ஆட்சி அமைக்க மக்கள் அமோக வெற்றியை அளித்தார்கள். தமிழக மக்களின் சார்பாக வெற்றி திருமகள், எம்.ஜி.ஆரை ஆட்சியில் அமர்த்தி அழகு பார்த்தாள்.
அ.தி.மு.க.வில் இரட்டை தலைமை என்பது இப்போது ஏற்பட்டதல்ல. எம்.ஜி.ஆர். காலத்திலேயே இருந்திருக்கிறது. எம்.ஜி.ஆர். முதல்-அமைச்சராகவும், மறைந்த நாவலர் இரா.நெடுஞ்செழியன், ப.உ.சண்முகம், ராகவானந்தம் போன்ற மூத்த தலைவர்கள் பொதுச்செயலாளராகவும் இருந்துள்ளனர்.
எம்.ஜி.ஆர். தன் காலத்துக்கு பிறகு இந்த இயக்கம் வீழ்ந்து விடாமல் இருக்கவும், துரோகிகளால் சிதைந்து விடாமல் இருக்கவும் விரும்பினார். அதனை நிறைவேற்றும்விதமாக அவர் வழியே வந்து ஜெயலலிதா இந்த இயக்கத்தை தாய் தன் பிள்ளைகளை காப்பது போல் காத்தார். எம்.ஜி.ஆர். இந்த இயக்கத்தை தொடங்கியபோது அரசியல் எதிரிகள், அவரை பிடிக்காத சிலர் இது நடிகர் கட்சி, இது வெறும் 50 நாட்கள், 100 நாட்கள் தான் ஓடும் என்றெல்லாம் தங்கள் கோபத்தை கேலியும், கிண்டலுமாக வெளிப்படுத்தினர். ஆனால் இந்த வசைகளையெல்லாம் தாண்டி 50-வது ஆண்டினை நோக்கி இளமை துள்ளலோடு, பீடுநடை போடும் எம்.ஜி.ஆர். உருவாக்கிய இயக்கமான அ.தி.மு.க. தமிழக மக்களுக்கும், கட்சி தொண்டர்களுக்கும் நிழல் தரும் ஆலமரமாக, கற்பக விருட்சமாக விளங்கிக் கொண்டிருக்கிறது. சோதனைகள் பல கடந்து, சாதனைகளை பல உருவாக்கிய இயக்கம் அ.தி.மு.க. என்றால், அது மிகையாகாது.............
-
தென்னிந்தியப்படவுலகின் சாதனைப்பேரரசின் மாபெரும் புரட்சிக்காவியமான "நீரும் நெருப்பும் "காவியத்தின் சாதனையை முதல் வெளியீட்டில் மட்டுமல்ல...
இன்று வரை அக்காவியம் படைத்து வரும் பிரமிக்க வெளியீடுகளை சாதாரண நடிகனின்....
சில விபத்துக்களில் ஏதே 100 நாள் 175 நாள் ஒட்டிய படங்களை
பல ஏரியாக்களில் சாதாரணமாக வென்று தூக்கி அடித்துள்ளது.
துவம்சம் செய்துள்ளது.
பட்டணம்மா படத்தை தவிர மற்ற மூன்று படங்கள் 10 லட்சத்தை கடந்தது என்பது முழுபூசணிக்காய்யில்
மறைக்கும் திருட்டுதனமான வேலையாகும்...
தியேட்டர் வாரியாக
வசூலை வெளியிடட்டும் பார்ப்போம்....
ஞானஒளி 10 லட்சமாம்
பூதூற்றி அவர்களுக்குள் கைதட்டிக்
கொள்ளாட்டும்.
பிளாசா மட்டும் தான்
100 நாள்.
பிராட்வே 69
சயானி 69
கமலா 56
தமிழ்நாடு 20 நாள்
8 லட்சம் கூட வசூல் இல்லை.
நம்மிடம் வசூல் உள்ளது.
பொய்யின் ஆதிக்கம் மேலும் கூடிக்கொண்டே வருகிறது.......ur...
-
சார் ...பொய்யின் உருவங்கள் ஞானஒளி சென்னையில் 10 லட்சம் வசூல் என பொய் சொல்லி பதிவிட்டதும்..
அதன் வசூலை முழுமையாக வெளியிட முடியாது...
ஏன் என்றால் 8 லட்சத்தையே நெருங்காத படம் இது.
சில விபரங்கள் கீழே..
++++++++++++++++++
1971 ல் பிளாசா
குலமா குணமா
100 நாள் வசூல்...2,58,890.00 தான்...
அகஸ்தியா
பெரிய தியேட்டர்
அங்கு சொர்க்கம்
77 நாள் வசூல் : 1,91,998.75 தான்
அதைவிட சிறிய தியேட்டர் டிக்கட் விலையும் குறைவு
பிராட்வே 69 நாள்
எவ்வளவு வசூல் என்பதை யூகித்துக் கொள்ளுங்கள்.
அடுத்து சயானி
1974 ல்
நேற்று இன்று நாளை
66 நாள் வசூல்
1,74,372.20 காசு தான்.
இதற்கு 2 ஆண்டுக்கு முன் வெளியான ஞானஒளி 69 நாள் வசூல் எவ்வளவு என்று யூகித்துக்கொள்ளவும்.
அடுத்து
1976 ல் கமலா
உழைக்கும் கரங்கள்
50 நாள் வசூல் : 1,92,258.00
இதற்கு 4 ஆண்டுக்கு முன் வந்த ஞானஒளி
56 நாள் வசூல் என்ன என்பதை
யூகித்துக்கொள்ளாவும்.
கடைசியாக
தமிழ்நாடு 20 நாள்
வசூல் 50 ஆயிரம் வைத்துக்கொண்டாலும்..
மேலே உள்ள கணக்குபடி கூட்டினாலும்
ஞானஒளி எப்படி 10 லட்சம் வசூல் வரும்...
பொய்யான கணக்கு வைத்து தான் இவர்களின் படங்கள் ஓட்டபட்டு பொய்யான விளம்பரம் மூலம்
அன்று பொது மக்களையும்... படம்பார்பவர்களையும் ஏமாற்றி வந்து இருக்கிறார்கள்..
என்னிடம் ஞானஒளி வசூல் உள்ளது..
இவர்களின் பித்தலாட்டம் என்ன சொல்கிறது என்று பார்ப்போம்....ur...
-
எம்ஜிஆர் பக்தர்களுக்கும் ஐயனின் கைபிள்ளைகளுக்கும் உள்ள பிரச்னையை தீர்க்கும் பொருட்டு எது வெற்றிப் படம் என்பதை தீர்மானிக்கும் வகையில் ஒரு சில
யோசனைகளை முன் வைப்போம்.
பிடித்திருந்தால் ஏற்றுக் கொள்ளுங்கள். இருவருக்கும் உள்ள பிரச்னையே வடக்கயிறு மற்றும் ஸ்டெச்சர் பிரச்சினைதான். 100
நாட்கள் ஓட்டினால்தான் வெற்றிப்படம் என்று சொல்லும் ஐயனின் கைபுள்ளைங்க ஒன்றை ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள்.
100 நாட்கள் ஓட்டிய பெரும்பாலான படங்கள் மொத்த வசூலில் பெருத்த நஷ்டத்தை சந்தித்திருக்கின்றன.
உதாரணமாக மதுரையை எடுத்துக் கொள்வோம். 1950 லிருந்து 1959 வரை வெளிவந்த படங்களுக்கு குறைந்த பட்சம் 100 நாட்கள் ஓடினால் 1,50,000 வசூல் பெற்றிருக்க வேண்டும். அப்படி பெற்ற படங்களை வெற்றி படங்களாக ஏற்றுக்கொள்ளலாம்.
இதை எப்படி தீர்மானிப்பது என்றால்
அந்தக் காலகட்டத்தில் ஒரு காட்சி அரங்கம் நிறைந்தால் சராசரி தியேட்டரில் சுமார் 800 ரூ வசூலாக வரும். ஒரு நாளைக்கு 3 காட்சிகள் என்றால் 100 நாட்களுக்கு மொத்தம் 300 காட்சிகள் வரும். மொத்த வசூல் ரூ 240000 வரும் அதில் 60 சதமானம் என்பது சுமார் 150000 ஆகும். முதல் 4 வாரத்தில் கிட்டத்தட்ட 90 சதமானமும் 50 நாட்கள் வரை 60 சதமானமும் 50-100 வரை 30 சதமானமும் சராசரியாக எடுத்துக் கொண்டால் மொத்த சராசரி 60 சதமானம் வரும்.
அதையே அளவு கோலாக எடுத்துக் கொள்ளலாம். 1960-69 காலத்தில் ஒரு திரைஅரங்கு நிறைந்தால் ரூ 1000. வசூலாக வரும். இந்த காலகட்டத்திற்கு குறைந்தபட்ச வசூலாக 2 லட்சமாக நிர்ணயம் செய்து கொள்ளலாம். அதேபோல் 70-74 காலகட்டத்தில் அரங்கு நிறைந்தால் ரூ1200 வசூலாக வரும்.
அந்த காலத்தில் குறைந்த பட்சம் 2.50 லட்சமாக நிர்ணயம் செய்யலாம். டிக்கெட் கட்டண உயர்வு சற்று அதிகமாக இருந்ததால் 75-77 காலத்தில் அதை 3 லட்சமும் அதற்கு மேலாகவும் நிர்ணயம் செய்யலாம்.
"மனோகரா" படத்தின் விளம்பரத்தில் 7 நாட்களில் 84000 வசூல் என்ற விளம்பரம் சரிதானா என்று பார்க்க வேண்டும் என்றால் முதலில் மனோகரா சென்னையில் எத்தனை தியேட்டரில் ஓடியது என்று பார்த்தோமானால் சுமார் 5 தியேட்டரில் வெளியிட்டிருக்கிறார்கள். ஒரு நாளைக்கு 5×3=15 காட்சிகள். 7 நாளைக்கு மொத்தம் 105 காட்சிகள்.
1 காட்சி hf க்கு சுமார் 800 என்று வைத்துக் கொண்டால் 105×800= ரூ ரூ 84000 வருகிறதா?. அப்படியானால் சரியாகத்தான் கொடுத்திருக்கிறார்கள். அதே போல் நான் சொன்ன பார்முலாவை பயன்படுத்தி ஒவ்வொரு படத்துக்கும்
hf வசூலும் விளம்பர வசூலையும் வைத்து படம் எப்படி ஓடியது? வடக்கயிறு பயன்படுத்தினார்களா என்பதை நாம் தெரிந்து கொள்ளலாம்.
இந்த அடிப்படையில் படங்களை தரம்பிரித்து வெற்றி தோல்வியினை
ஓரளவு கண்டு கொள்ளலாம். 100 நாட்கள் ஓடாத படங்கள் கூட இந்த வசூலை எட்டி விட்டால் அதை வெற்றிகரமான படமாக ஏற்றுக் கொள்ளலாம். எனவே 100 நாட்கள் ஓடியதை வெற்றியின் அளவாக ஏற்றுக் கொள்வதை விட இந்த வசூல் அடிப்படையில் வெற்றி கொள்ளும் படத்தை நாம் ஏற்றுக் கொண்டால் எந்த பிரச்னையும் வராது.
இதற்கு குறைவான வசூல் உள்ள படங்களை வடக்கயிறு என்றுதான் சொல்ல வேண்டும். இதை அளவாக கொண்டு பார்க்கும் போது "பாகப்பிரிவினை" சிந்தாமணியில் 98 நாட்களில் ரூ 229000 வசூல் பெற்றதால் அதை நல்ல வெற்றிப் படமாக ஏற்றுக் கொள்ளலாம். முதல் 100 நாட்களில் சுமார் 80 சதவீதம் பேர் பார்த்திருக்கிறார்கள். "நாடோடி மன்னன்" குறுகிய காலத்தில் 3 லட்சத்தை தாண்டியதால் அதை ஒரு மாபெரும் வெற்றிப் படம் என்றே சொல்லலாம்.
மற்றபடி நமக்கு கிடைத்ததெல்லாம் கைபுள்ளைங்க உருவாக்கிய தொழில் பட்டறை வசூல்தான். நியூசினிமாவில் ஓடிய "உத்தம புத்திரன்" வசூலை எடுத்துக் கொண்டால் 105 நாட்களில் 127000. வசூலாக பெற்றது என்று பட்டறை பேக்டரி சொல்லுகிறது. குறைந்த பட்சம் 150000 மாவது பெற்றிருந்தால் வெற்றிப் படம். எனவே "உத்தம புத்திரன்" நிச்சயம் வடக்கயிறு படம்தான். அதே காலகட்டத்தில் வெளியான "நாடோடி மன்னன்" 133 நாட்களில் ரூ 322000 வசூலாக பெற்ற மாபெரும் வெற்றிப்படம். நிச்சயம் வெள்ளிவிழா ஓட தகுதியான படம்.
இதே வசூல் வடக்கயிறு பார்ட்டியின் படத்துக்கு வந்தால் படத்தை 300 நாட்களுக்கு மேல் ஓட்டி ஆண்டுவிழா
கொண்டாடியிருப்பார்கள்.
அதேபோல் "மதுரை வீரன்" 180 நாட்களில் ரூ 367000 மும் "எங்க வீட்டு பிள்ளை" 176 நாட்களில் ரு385000 மும் வசூலாக பெற்று மாபெரும் சாதனை செய்தது.
அதே நேரம் "வீர பாண்டிய கட்டபொம்மன்" பெற்ற வசூல் 181 நாட்களில் ரூ 287000.தான். இதில் ஸ்கூல் பிள்ளைகளிடம் பணம் பறித்ததை கழித்தால் பாவம் மிகவும் குறைவான வசூல்தான் வரும். எப்படி வெள்ளி விழா ஓட்டினார்கள் என்று தெரிகிறதா?.
"மனேகரா"வை 156
நாட்கள் ஓட்டி ரூ156000 வடக்கயிறு வசூலாக பெற்று வெள்ளி விழா ஓட்ட முடியாமல் தற்கொலை செய்து கொண்டது. இது அத்தனையும் கணேசன் ரசிகர்களின் பட்டறை வசூல்தான். உண்மையான வசூல் இதை விட குறைவாக இருக்க வாய்ப்புண்டு. சிவாஜியின் "பாகப்பிரிவினை" "பட்டிக்காடா பட்டணமா" தவிர மற்ற படங்களில் பெருவாரியான படங்கள் வடக்கயிறு போட்ட படங்கள்தான் என்பது தெள்ளத் தெளிவாகிறதா!.
இந்த வடக்கயிறு மேட்டர் சிவாஜி படத்துக்கு மட்டுமே பொருந்தும். வேறு எந்த நடிகர் படத்தையும் ஓட்டுவதற்கு யாருக்கும் இந்த மாதிரி கைபிள்ளைகள் கிடையாது என்பதால் இந்த பிரச்னையே எழாது. அடுத்த பதிவில் "நவராத்திரி", "படகோட்டி" இதில் எது
வெற்றிப் படம் என்று பார்க்கலாம்.
"தங்கப்பதக்கத்தி"ன் சென்னை வசூல் எப்படி வந்தது என்பதையும் ஆராய்ந்து பார்க்கலாம்..........ksr.........
-
மனோகரா திரைப்படம் சென்னையில் மட்டுமே ஒரே வாரத்தில் 84 லட்சம் ???????????????? வசூல். அதுவும் 1954 ல்.. அடேங்கப்பா.. தலை சுற்றுகிறது. இப்படி பொய் சொல்கிறார்களே.. அவர்களுக்கு கொஞ்சமாவது மனசாட்சி வேண்டாமா?............அருமையான பதிவு. எளிமையான எல்லாரும் புரிந்து கொள்ளக்கூடிய விளக்கம். வசூலை திருத்துவதும் போலி வசூல் விவரங்கள் கொடுப்பதும் சிவாஜி கணேசனின் ரசிகர்களுக்கு வாடிக்கை. அந்தக் காலத்தில்தான் அப்படி என்றால் இப்போது டிஜிட்டல் காலத்திலும் பொய் சொல்கிறார்கள். அப்போதே இவர்கள் பொய்யை தகர்த்து தவிடுபொடி ஆக்கினோம். இவ்வளவு தொழில்நுட்பம் வந்தபிறகு விடுவோமா?மனோகரா சென்னையில் ஒருவார வசூல் 84 ஆயிரம்தான். இன்றைய பதிவில் ஆதாரம் உள்ளது. ஆனால் இதையே பின்னாளில் 84 லட்சம் (ஒரு வாரத்திலாம்) என்று மோசடியாக திருத்தி இருக்கிறார்கள். அதையும் வெளியிட்டேன். ஏற்கனவே காஞ்சிபுரத்தில் நம்நாடு ஓடிய ராஜா தியேட்டரில் சிவந்த மண் ஓடியதாகவும் 85 பைசா டிக்கெட் 25 ரூபாய்க்கு பிளாக்கில் விற்றதாகவும் பொய் செய்தி வெளியிட்டனர். அதையும் அம்பலமாக்கினோம். சிவந்த மண் ராஜா தியேட்டரில் ஓடவே இல்லை என்று அவர்களது பொய்யை தோலுரித்தோம். அதற்கு பதில் இல்லை. வேறு எதையோ சொல்லி குழப்புவார்கள். அவர்களது இன்னொரு பொய்யை பார்ப்போம். மதுரையில் தங்கம் தியேட்டரில் கர்ணன் படத்தில் அவர்கள் வசூல் மோசடியை பார்ப்போம். மதுரை தங்கம் தியேட்டரில் கர்ணன் 14 வாரம் அதாவது 98 நாளில் வசூல் 1 லட்சத்து 86 ஆயிரம். இது அவர்களே வெளியிட்ட ஆதாரம். அது இங்கே தருகிறேன். ஆனால், ஓடிய 108 நாளில் 1 லட்சத்து 98 ஆயிரம் வசூலாம். அந்தப் பொய்யை இங்கே அடுத்த பதிவில் தருகிறேன்.......... Swamy...
-
இங்கே பாருங்கள். தங்கம் தியேட்டரில் கர்ணன் 108 நாளில் 1 லட்சத்து 98 ஆயிரம் வசூலாம். இதுவும் அவர்களே சொல்வது. அதாவது 98 நாளில் 1 லட்சத்து 86 ஆயிரம் வசூல். 108 நாளில் 1 லட்சத்து 98 ஆயிரம் வசூலாம். அப்படி என்றால் கடைசி 10 நாட்களில் 12 ஆயிரம் ரூபாய் வசூலாம். கலர் கலராய் பொய்கள். 12 வது வாரத்தில் இருந்து 14 வது வாரம் வரை 3 வார வசூலை கூட்டினாலே 12 ஆயிரம் வரவில்லை. ஆனால் கடைசி 10 நாளில் மட்டும் 12 ஆயிரம் வசூல் வந்ததாம். இது எப்படி சாத்தியம். போலிக் கர்ணனை நமது வேட்டைக்காரன் அடித்து துவம்சம் செய்தது போல் நாமும் அவர்களின் பொய்களை துவம்சம் செய்கிறோம். இருந்தாலும் தொடர்ந்து பொய் சொல்கிறார்கள். பொய்யர் கூட்டம்....... Swamy...
-
விழியிழந்தோரும் பார்த்த விந்தை மாமனிதர்!
கர்நாடக மாநிலத்தில் பெங்களூரில் கண் ஒளி இழந்தோர், காது கேளாதோர் பள்ளி நடத்திய ஒரு விழாவில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆரும், கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமாரும் கலந்து கொண்டனர் . நிகழ்ச்சி துவங்கியது. வரவேற்புரை வாழ்த்துரை பாராட்டுரைகள் முடிந்தன!
சிறப்புரையாற்ற பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆர். எழுந்தார். வெறும் வார்த்தைகளால் கண்ணொளி இழந்தவர்களுக்கு வழி காட்ட இயலுமா? செவியின் சுவையுணராத செல்வங்களுக்கு விருந்து கிடைக்கச்செய்வது எப்படி? இதயம் கருணைக்கடலாக இருந்தால்தான், வார்த்தைகள் முதுகளாக வடிவம் கொள்ளும்.
பொன்மனம் கொண்டவர் எம்.ஜி.ஆர். பேசத்துவங்கியவுடனேயே அந்தப் பள்ளியின் வளர்ச்சிக்காக 50 ஆயிரம் ரூபாய் நிதி வழங்குவதாக அறிவித்தார். அப்படித் தான் வழங்குவதற்கான காரணத்தை அவர் தெரிவித்தபோது, விழாவில் கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான மக்களும் அசையாத பதுமைகளாக மாறினர். அவர்களது இதயம் பாகாய் உருகியது. கண்கள் கண்ணீரைச் சொரிந்தன.
"கால் முறிந்து சிகிச்சை பெற்று, படுக்கையில் நான் கிடந்தபோது இரண்டு பார்வையற்றவர்கள் என்னைச் சந்திக்க வந்தனர். 'எங்கே .... இவ்வளவு தூரம் மிகவும் சிரமப்பட்டு வந்திருக்கிறீர்கள்? ' என்று கேட்டேன் . ' உங்களைப் பார்க்கத்தான் வந்தோம் ' என்று பதில் வந்தது .' என்னைப் பார்க்கவா? 'வியப்போடும், வேதனையோடும் அவர்களை நோக்கினேன். 'ஆமாம், உங்களைப் பார்ப்பதற்குத்தான் வந்தோம் . கண்களில்லாத நாங்கள் உங்களை எப்படிப் பார்க்க முடியும் என்றுதானே ஆச்சரியப்படுகின்றீர்கள்?
எல்லோரையும் போல் வெளி உலகைப் பார்ப்பதற்கு புறக்கண் இல்லையே தவிர, அகக்கண்ணில் நீங்கள் ஆழமாகப் பதிந்திருக்கின்றீர்கள். உங்களை எங்களுடைய கரங்களால் தொட்டு ஸ்பரிசித்து, ஆண்டவனிடம் பிரார்த்தனை செய்துவிட்டுச் செல்வதற்காகத்தான் வந்தோம்' என்று அவர்கள் தெரிவித்ததும் அன்பைவிட உலகத்தில் உயர்ந்தது எதுவுமே இல்லையென்று எனக்குத் தோன்றியது.
எம்.ஜி.ஆர். இதுபோல அன்பு செலுத்துவதற்கு லட்சோப லட்சம் மக்கள் இருக்கின்றார்கள் என்கின்ற எண்ணமே எனக்கு அதிக தன்னமிக்கையை தந்தது. கண்களை இழந்து தவிக்கும் அவர்கள், என்மீது காட்டிய வாஞ்சை என்றென்றும் மறக்க முடியாத நிகழ்ச்சியாக மனதில் பதிந்துவிட்டது. அவர்களுக்கெல்லாம் என் வாழ்நாளில் ஏதாவது செய்ய வேண்டுமென்று நினைத்துக் கொண்டிருந்தேன். இன்று அந்த நல்வாய்ப்பு எனக்குக் கிடைத்ததை நினைத்து மகிழ்கிறேன்.
எம்.ஜி.ஆர் . பேசி முடித்ததும் எழுந்த கரவொலி , அந்த நிகழ்ச்சியை நேரில் கண்டு, கேட்டு நெக்குருகிய இதயங்களின் வாழ்த்தொலியாக பெங்களூரில் பொங்கிப் பெருகியது. எளியோரைக் கண்டு இரக்கம் வருவது இயற்கை! இயன்ற அளவு உதவி புரிந்துவிட்டு, அதனை அத்துடன் மறந்துவிடுவது தான் பெரும்பாலோர் குணம்!
கண்டும் காணாமல் செல்வோரை, இதயம் உள்ள மனித இனத்திலேயே சேர்க்க நான் விரும்பவில்லை! கோடியில் ஒருவருக்கு மட்டுமே - என்றோ கண்ட காட்சியானாலும், இல்லாமையால் துன்பப்படுவோர் குறையை எப்படி நீக்குவது என்கின்ற சிந்தனை வளர்ந்து கொண்டே இருக்கின்றது. காலம் கனியும்போது தாங்கள் உதவி செய்கின்றனர்.
அந்த வகையில் ஆயிரத்தில் ஒருவர் என்றல்ல , லட்சத்தில் ஒருவர் என்றல்ல, கோடியில் ஒரு குணக்குன்று என்று எம்.ஜி.ஆரை.க் கூறவேண்டும். உள்ளத்தாலும் , உயர்ந்த செயல்களாலும் மக்கள் மனதில் உன்னதமான இடத்திற்கே சென்று விடலாம்; சிகரத்தைத் தொட்டுவிடலாம். ஆனால், எப்போதும் எல்லோராலும் அதே இடத்தில் இருந்து மதிப்பையும் , மரியாதையையும் பெற்றுவிட முடியுமா? 'என்னால் முடியும்' என்று நிரூபித்து , நிலைத்து நிற்க எம்.ஜி.ஆரால் முடிந்தது. அதனால்தான் அவர் மக்கள் திலகமாக மட்டுமின்றி , மக்களின் இதயத் திலகமாகவும் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்.
நன்றி : அண்ணன் "நாகை" தருமன்...sb...
-
ஏழைப்பிள்ளைகளுக்குக் கல்வி ...
ஏங்கிய தாய்க்கு விருந்து!
தஞ்சை மாவட்டத்தில் கிராமம் ஒன்றிலிருந்து ஏழ்மையில் வாடும் குடும்பத்தைச் சேர்ந்த மாணவன் ஒருவன், எம்.ஜி.ஆருக்குக் கடிதம் எழுதுகிறான். தனது படிக்கும் ஆசையையும், பணவசதியற்ற நிலைமைகளையும் கண்ணீர் வரிகளால் சோக முத்திரையிட்டு, நம்பிக்கையோடு அவன் எழுதியதை எம்.ஜி.ஆர். படிக்கிறார். சில நாட்களில் அவன் படிக்கின்ற பள்ளிக்கு எம்.ஜி.ஆரிடமிருந்து கடிதம் ஒன்று வருகின்றது. அந்த மாணவனைப்பற்றிய முழு விவரமும் கேட்டு ! தலைமை ஆசிரியர் விரிவாகப் பதில் எழுதுகின்றார். அதன் பின்பு மாதம்தோறும் அந்த ஏழை மாணவனின் படிப்பிற்காக பணம் தேடிப் போகின்றது! பள்ளியிறுதி வகுப்பு வரை அவனது கல்விச்செலவை எம்.ஜி.ஆர். ஏற்றுக் கொள்கிறார். பொங்கல் நாளில் அவனது குடும்பத்தினர் புத்தாடை அணிந்து பூரிக்கவும் அவர் காரணமாகின்றார் .
இந்தச் சம்பவம் நடந்து நாற்பது ஆண்டுகள் ஆகிவிட்டன. பல ஆண்டுகளுக்குப் பின்பு, அந்த மாணவனை இளைஞனாகச் சந்தித்தேன் . நல்ல வேலை ஒன்றில், கை நிறைய நியாயமாகச் சம்பாதிக்கும் அவன் , பூரிப்போடு காட்சியளித்தான். தன் குடும் தலை நிமிர்ந்து வளமோடு இருக்கக் காரணமானவரை நெஞ்சத்தின் வாயிலான வாயால் வாழ்த்தினான்!
ஒரு ஏழைக்கு எழுத்தறிவிப்பது அன்னசத்திரம், ஆலயம் கட்டு வதைவிடப் புண்ணியம் கோடி என்றானே பாரதி! எம்.ஜி.ஆர். எத்தனை ஆயிரம் ஏழை மாணவர்களுக்கு வாரிக் கொடுத்து எழுத்தறிவித்திருப்பார்? எண்ணிக்கொண்டே கொடுத்திருந்தாலல்லவா எண்ணிக்கை தெரியும்? அது கொடுத்தவருக்கும் தெரியாது. அவர் யாருக்குக் கொடுத்தார் என்று அடுத்தவருக்கும் தெரியாதே! புகழே உருவெடுத்து வந்ததுபோல் திகழும் எம்.ஜி.ஆர்., நடுவூரில் இருக்கும் பழமுதிர்ச்சோலை! அந்தச் சோலைக்குக் காவலும் இல்லை: வேலியும் கிடையாது. மற்றவர்கள் பசியைப் போக்குவதுடன், அனைவருக்கும் அரணாக நின்று காவல் காக்கும் அற்புதச் சோலை அவர்.
"மீனவ நண்பன்" படப்பிடிப்பு மங்களூரில் கடலோரப் பகுதியில் நடைபெற்றது . மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் ... டைரக்டர் ஸ்ரீதர், எம்.என் . நம்பியார் , லதா மற்றும் பலர் மணிபாலில் ஒரு ஓட்டலில் தங்கியிருந்தனர். ஒருநாள் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது.
இடைவேளையின்போது மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்., வழக்கம்போல் ஒவ்வொரு வரிடமும் நலம் வினவினார். தங்கியுள்ள இடம், சாப்பாடு வசதி எப்படி இருக்கின்றது என்று விசாரித்தார். ' நன்றாக இருக்கின்றது ' என்று அனைவரும் தெரிவித்தனர்.
தாயாக நடித்த மரகதம்மாள் என்பவர் எம்.ஜி.ஆர். அருகில் வந்தார் . " தம்பி .... " என்று ஆரம்பித்து , சொல்லத் தயங்கினார் . “ என்னம்மா .... உங்களுக்கு ஏதாவது வசதிக் குறைவா? " என்று எம்.ஜி.ஆர் . பரிவோடு கேட்டார் . " இல்லை .... தம்பி ! ஒரு குறையுமில்லை ..... ! வந்து .... நீங்க தங்கியிருந்த இடத்திலே மீனெல்லாம் சவுகரியமாகக் கிடைக்கிறதா? " என்றார் மரகதம்மாள். "என்னம்மா ... மீன் ... சாப்பிடணும்னு .... ஆசை! இவ்வளவு தானே ! நீங்க தங்கியிருக்கிற ஓட்டலிலே மொத்தம் எத்தனைபேர் " என்று சிரித்தபடி கேட்டார். "நாங்க .. இருபத்தைந்து பேர் இருக்கிறோம். " சரி .... எல்லாரும் எத்தனை மணிக்குச் சாப்பிடுவீர்கள் ?" என்று அவர் மறுபடியும் வினவினார். " இரவு எட்டு மணிக்குச் சாப்பிடுவோம் தம்பி ' என்றார்.
" சரி ... இன்னைக்குப் பதினைஞ்சு நிமிஷம் தாமதமாக சாப்பிடுங்கள் ..... என்று கூறிவிட்டு எம்.ஜி.ஆர் . சென்றுவிட்டார். மரகதம்மாவுக்கும், மற்ற நடிகர்களுக்கும் ஒன்றும் புரியவில்லை. தான் வேடிக்கையாக ஆசையை வெளியிட்டதை, அவர் தவறாக எடுத்துக் கொள்ளக் கூடாதே என்கின்ற கவலை அந்த ' அம்மாவுக்கு!
எல்லோரும் படப்பிடிப்பு முடிந்து ஓட்டலுக்குத் திரும்பி ஓய்வெடுத்துக் கொண்டார்கள். சாப்பாட்டு நேரம் நெருங்கியது . திடீரென்று ஒரு கார் வந்து நின்றது . அந்தக் காரில் வந்தவர்கள் ஒரு அண்டாவைத் தூக்க முடியாமல் தூக்கிக் கொண்டு வந்து உள்ளே வைத்தனர். " சின்னவர் ( எம்.ஜி.ஆர்.) கொடுக்கச் சொன்னார் " என்று சொல்லிவிட்டுச் சென்றனர் . அண்டாவைத் திறந்தால் மீன் குழம்பு வாசனை ஓட்டலில் உள்ளவர்கள் மூக்கை இழுத்தது ; நாக்கில் நீர்சுரக்க வைத்தது . இன்று பதினைந்து நிமிடம் தாமதமாகச் சாப்பிடுங்கள் ' என்று எம்.ஜி.ஆர். சொன்னதன் பொருள் அப்பொழுதுதான் அவர்களுக்குப் புரிந்தது. ஒருவரைத்தவிர அத்தனை பேருக்கும் அன்று மாபெரும் விருந்து . கடல் மீன்கள் ருசியை அவர்கள் ரசித்து , சுவைத்துச் சாப்பிட்டனர் .
அந்த ஒருவர் நடிகர் கரிக்கோல் ராஜு . அவர் அருட்பெருஞ்ஜோதி வள்ளலார் பக்தர் ... சைவம் என்பதால் மீனை மட்டும் அந்த ஒருவர் சாப்பிடவில்லை! மரகதம்மாளின் மகிழ்ச்சிக்கு எல்லையில்லை ! நான் சாதாரணமாகச் சொன்னதை நினைவில் வைத்திருந்து, கவனமாகச் சரியாகச் சாப்பிடும் நேரத்திற்கு எல்லோருக்கும் மீன் விருந்து தந்த மக்கள் திலகம் எம்.ஜி.ஆரைப் புகழ்ந்த வார்த்தைகளுக்கு அளவில்லை .
பெற்றவர் - ஆசைப்பட்டதைச் சொன்னாலும் காதில் விழாததைப் போல் செல்லும் பிள்ளைகள் உள்ள காலத்தில், தாயாக நடிக்க வந்த தனக்கு, ' எம்.ஜி.ஆர். என்ற தங்கமான பிள்ளை கொடுத்த விருந்து ஆயுளில் மறக்க முடியாதது ' என்று கண்கள் பனிக்கக் கூறினார் . ஈரமுள்ள வளமான பூமியில்தான் பயிர்விளையும். ஈகைப்பண்யும் , அன்பும் உள்ள மனிதரிடம்தான் நல்ல உள்ளங்கள் ஒன்றும்! ...sb...
-
எக்காலத்திலும் இவரே என்றும் இளமை அரசர் ...
வாழ்க அவர் புகழ்.
நன்றி உங்களில் ஒருவன்...
அந்த படிகளில் இறங்கி வரும் தோரணை வேறு எவருக்கும் வருவது கடினமே....என்றும்..
யார் உடன் தலைவர் நடித்தாலும் நம் கண்கள் மட்டும் அவரை சுற்றியே இருக்கும்.
மீண்டும் கண்ணாடி போல ப்ரின்டில்...
அந்த நீல விழி பந்தல் நீ இருக்கும் மேடை வரிகள் வரும் போது அந்த ரிதம் அதுக்கு ஏற்ப துள்ளி குதித்து ஆடுவார்...இனி எங்கே தலைவரே...
ஆண்டுகள் பல கடந்தாலும் அணு அணு வாக உங்களை மட்டுமே ரசிப்போம்...ருசிப்போம்.
மன்னிக்கவும் headponil கேளுங்க பாட்டு வேறு லெவலில் இருக்கும்......Mn.....
-
பாட்டாலே புத்தி சொன்ன*வாத்தியார் எம்.ஜி.ஆர். - வின்*டிவியில்*சகாப்தம்*நிகழ்ச்சியில் திரு.துரை பாரதி*19/10/20 அன்று அளித்த தகவல்கள்*
------------------------------------------------------------------------------------------------------------------------------
மண்ணின் மைந்தனின் , தமிழக வரலாறு என்பது எம்.ஜி.ஆர். என்கிற அந்த மூன்றெழுத்தை கடந்து போக முடியாது .என்ற முக்கியத்துவம் வாய்ந்த அந்த மாமன்னரின் ,நாடோடி மன்னனின் ,மக்களின் மனதில் மன்னாதி மன்னனாக* வீற்றிருக்கின்ற ஒரு மாமனிதரின் வரலாறை நாம் பேசிக் கொண்டிருக்கிறோம்*அந்த வரலாறு என்பது வாழ்க்கையில் ஒளி வேண்டும் , வெற்றி பெற வேண்டும்*என்று நம்பிக்கையோடு காலடி எடுத்து வைக்கிற ஒவ்வொரு இளைஞனுக்குமான ஒரு வெளிச்ச பார்வை .
சென்னை கலைவாணர் அரங்கில் பிரபல பின்னணி பாடகர் பாலமுரளி கிருஷ்ணா தியாகராய கீர்த்தனைகளை தெலுங்கில் இருந்ததை தமிழில் மொழி பெயர்த்து சி.டி.ஆக வெளியிடும் திருவிழா நடைபெறுகிறது . முதல்வர் எம்.ஜி.ஆர். விழாவுக்கு தலைமை தாங்குகிறார் .ஆறு பாடல்கள் கொண்ட சி .டி.யை. வெளியிட்டு கொண்டிருக்கும்போது தன்னுடைய உதவியாளரை அழைத்து அவரது காரில் இருக்கும் ரூ.100/- கட்டுக்களை பிரித்து எண்ணுவதற்காக ,அப்போது ஐ.ஏ.எஸ்.அதிகாரியாக இருந்த திரு.கற்பூர சுந்தர பாண்டியன் அவர்களை உதவிக்கு அழைத்து செல்கிறார்கள் . இவர்கள் அந்த பணக்கட்டுக்களை எண்ணி ஒரு காக்கி கவரில் போட்டு கொண்டுவந்து எம்.ஜி.ஆரிடம்* ரூ.1,20,000/-*தருகிறார்கள் .அந்த பணத்தை அப்படியே எம்.ஜி.ஆர். அவர்கள் பாலமுரளி கிருஷ்ணாவிற்கு* வாழ்த்தி கொடுத்துவிட்டு* காரிலே போய்விடுகிறார் .மறுநாள் காலையில் ரூ.60,000/- பணத்தை அவருக்கு தவறுதலாக கூடுதலாக கொடுத்துவிட்டோம் என்று எம்.ஜி.ஆரிடம் தயங்கி* தயங்கி சொல்கிறார்கள் .அதாவது நேற்று வெளியிட்ட சி.டி.யில் 6 பாடல்கள் தான் இருந்தது .ஆனால் நாங்கள் 12 பாடல்கள் என்று எண்ணி, ரூ.1,20,000/-* தவறுதலாக கொடுத்துவிட்டோம் என்றார்கள் .இதை கேட்டதும் எம்.ஜி.ஆர். கோபப்பட்டு கண்டிக்க போகிறார் என நினைத்தார்கள் .ஆனால் அந்த வள்ளல் எம்.ஜி.ஆர். சொன்னது என்னவென்றால் பாலமுரளிகிருஷ்ணா மிகவும் அதிர்ஷ்டசாலி. அதனால்தான் அவருக்கு பரிசு இருமடங்காக கிடைத்திருக்கிறது*
எம்.ஜி.ஆர். அவர்களின் 2 வது* மனைவி சதாநந்தவதி புற்றுநோயால் பாதிக்கப்பட்ட போது ,யானை கவுனியில் இருந்து ராயப்பேட்டைக்கு சைக்கிள் ரிக் ஷாவில்* அழைத்து வந்து தினசரி மருத்துவ சிகிச்சை பார்த்து வந்தார் .சதானந்தவதி* *இறந்த தினமான பிப்ரவரி 25ம் தேதி பல வருடங்கள்,தன் இறுதி காலம் வரை எம்.ஜி.ஆர். யாருடனும் பேசாதிருந்து மௌன விரதம் கடைபிடித்தார் .*.
திரு.லியாகத் அலிகான் பேட்டி :* முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களோடு பழகிய கால கட்டங்கள் , பிறகு அவர் மறைந்த நேரத்திலே இருந்த கால கட்டங்கள் மன சோர்வடைந்து எல்லோரும் இருந்த நேரத்திலே ,அவர்களோடு*ஆறுதல் வார்த்தைகளை பேசி ,என்னை கட்சியில் இணைத்து கொண்டதற்கு அடிப்படை காரணம் எடுத்து கொண்டால் ,மதிப்பிற்குரிய திரு.மதுசூதனன் அவர்கள்தான் மதுசூதனனும், ஓ.பி.எஸ்.அவர்களும் அரசியலில் ஒரு உண்ணாவிரதம் எடுத்து நடத்துகிறார்கள் .* நான் அப்போது செயல்படாமல் அமைதியாக இருந்த நேரத்திலே, டில்லி பாஸ்கர் என்கிற என் நண்பர் தினசரி*தொந்தரவு செய்து ,ஏன் நீங்கள் அமைதியாக உள்ளீர்கள். எம்.ஜி.ஆர். குறித்து*ஏதாவது பேசுங்கள் என்றார் . மேடையில் மதுசூதனனும், ஓ.பி.எஸ். அவர்களும் அழைப்பு விடுத்த காரணத்தால் நான் மேடை ஏறும்போது ,ஆரவாரத்துடன் ,நல்ல வரவேற்பு கிடைத்தது .நான் பேசி முடித்ததும்,மதுசூதனன்,பொன்னையன் ,ஜே.சி.ட.பிரபாகரன் போன்றோர் அங்கு இருந்தனர் .* இப்போது மீண்டும் அண்ணா தி.மு.க.வில் லியாகத் அலிகான் இணைகிறார் என்று அறிவித்து எனக்கு மதுசூதனன் அவர்களும், ஓ.பி.எஸ். அவர்களும் சால்வை அணிவித்தனர் .அப்போது அரசியல் சூழல் நிரந்தரமாக இல்லாத நேரம் அல்லவா,நான் நினைத்திருந்தால் நேரடியாக இ .பி.எஸ். அவர்களை சந்தித்து இணைந்திருப்பேன்* ஆனால் அப்படி செய்யவில்லை. காரணம் எடப்பாடி*முதல்வராக இருக்கிற பட்சத்தில் இணைந்துவிட்டார் என்று சொல்வார்கள்*அப்போது தினகரன் பற்றி கொஞ்சம் பரபரப்பாக பேசப்பட்ட நேரம் .அவர் தனியாக இருந்ததால் ,ஏன் நீங்கள் அண்ணா தி.மு.க.வில் இணைந்து பணியாற்றக்கூடாது*என்று சமாதானத்திற்கான தினகரனிடம் பேச சென்றபோது ,நான் தினகரன் அணியை சார்ந்தவன் என்று அண்ணா தி.மு.க. வில் முத்திரை குத்தி விட்டார்கள் மீடியாவில் இந்தமாதிரி அறிவிப்பு வந்த பிறகு மறக்கமுடியவில்லை ..அப்போது ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட வேட்பாளர் மதுசூதனனுக்கு இரட்டை இலை சின்னம் தரப்படுகிறது .அவரை எதிர்த்து நீங்கள் நிற்க வேண்டாம் என்று நானும், புகழேந்தி அவர்களும் கேட்டுக்கொண்டபோது* தினகரன் நிராகரித்துவிட்டார் .* உடனே நான் இரட்டை இலை சின்னத்திற்கு எதிர்த்து செயல்பட முடியாது .அது தலைவர் உருவாக்கிய சின்னம்*.என்று முடிவு எடுத்தேன் . மாணவர் அணியில் நானும் சபாநாயகர் தனபாலும் ஒன்றாக இருந்தவர்கள் . ஒரு முக்கிய வி.ஐ.பி. மூலம் தனபாலை அணுகி விஷயங்களை விவரித்தேன் .தனபால் அவர்கள் உணவமைச்சராக இருந்தவர் .அவர் மூலமாக எடப்பாடியார் அவர்களை சந்தித்து மீண்டும் அண்ணா தி.மு.க.வில் இணைத்து கொண்டேன் . இவ்வாறு திரு.லியாகத் அலிகான் பேட்டி அளித்தார் .
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்கள் எல்லா திரைப்படங்களிலும் அது சண்டை காட்சியாகட்டும்,,நடனக்காட்சியாகட்டும், பாடல்கள் அமைவதாகட்டும்,*எடிட்டிங் செய்வதாகட்டும், எல்லா துறையிலும் அவருடைய தலையீடு இருந்தது என்று சொல்வார்கள் . ஆனால் அவருக்கு எல்லா துறைகளிலும் ஞானம் இருந்தது என்பது பலருக்கு தெரியாத உண்மை .* குறிப்பாக சொன்னால் இதயவீணை படத்தில் பொன்னந்தி மாலை பொழுது என்ற பாடலை கம்போஸ்*செய்திடும் வேலைகள் ஒருநாள் காலையில் தொடங்கி மாலை வரையிலும்*அடுத்த நாள் தொடர்ந்து நடைபெறுகிறது .படத்திற்கு இசை அமைத்தவர் சங்கர் கணேஷ் .தொடர்ந்து 3வது* நாளாக பணிகள் நிறைவடையாமல் இருக்கும்போது*எப்போது முடியுமோ என்று சோர்வடைந்து இருந்த விஷயம் அறிந்த எம்.ஜி.ஆர். அவர்கள் அந்த இசை குறிப்புகளை வாங்கி பார்த்து , 16வது ட்யூனை சரணம் ஆகவும் , 40 வது* ட்யூனை பீஜியம் ஆகவும் வைத்து கொள்ளுங்கள் என்றாராம்*மேலும் 60க்கும் மேற்பட்ட* இசை குறிப்புகளை, ட்யூன்களை தன் கை டைரியில் எழுதி வைத்திருந்தாராம் .* அந்த அளவிற்கு இசை ஞானமும், நுட்பமும் தெரிந்து வைத்திருந்தவர் எம்.ஜி.ஆர் .அதனால்தான் அவரது படங்களில் ஒவ்வொரு பாடலும் வெற்றி அடைவதற்கு* இசை எப்படி அமைய வேண்டும் ,இசை அமைப்பாளர் மட்டுமின்றி, பாடல் எப்படி அமைய வேண்டும் என்பது நாடகத்துறையில் இருந்து திரைத்துறைக்கு வந்தபோது இருந்த ஞானம் தொடர்ந்ததே காரணம் .
துக்ளக் வாசகர் ஒருவர் கடிதத்தில் போகிற போக்கை பார்த்தால் எம்.ஜி.ஆர். முதல்வர் ஆகிவிடுவார் போல கனவு கண்டதாக குறிப்பிட்டு இருந்தார் .அதற்கு பதிலளித்த ஆசிரியர் சோ , நாடு இருக்கும் நிலையில் உங்களுக்கு இப்படி கூடவா பயங்கரமான கனவு வருகிறது என்று கிண்டலும், கேலியும் பேசினார் .ஆனால் எம்.ஜி.ஆர். முதல்வராகி சிறப்பான ஆட்சியை தந்த பிறகு ,அவரே போற்றி புகழ்கின்ற அளவிற்கு பாராட்டியுள்ளார் .ஒருவேளை கலைவாணர் என் .எஸ்.கிருஷ்ணன் அவர்கள் உயிருடன் இருந்து இருந்தால் இன்று அவர்தான் முதல்வராக இருந்து இருப்பார் என்று எம்.ஜி.ஆர். அறிக்கை வெளியிட்டார் .அனைவரும் எம்.ஜி.ஆர். பழையபடி சினிமாவில் நடிக்க போய்விடுவார் .வேறு யாராவது ,நாஞ்சில் மனோகரன் போன்றவர்கள் முதல்வராக வரக்கூடும் என்று ஆரூடம் சொன்னார்கள் . ஆனால் காலத்தின் கட்டாயம் என்பது போல அவரே முதல்வராக கோட்டையில் அமர்ந்து பத்து* ஆண்டுகள் மேல் ஆட்சி புரிந்தார்மற்ற தகவல்கள் அடுத்த அத்தியாயத்தில் தொடரும் .
நிகழ்ச்சியில் ஒலித்த பாடல்கள் /காட்சிகள் விவரம்*
--------------------------------------------------------------------------------
1.ஆதிபகவன் ஒன்றே தான்* - ராஜா தேசிங்கு*
2.பாலமுரளி கிருஷ்ணாவின் பல மொழி பாடல் - நவரத்தினம்*
3.அன்பே வா சோகப்பாடல்* - அன்பே வா*
4.திரு.கா. லியாகத் அலிகான் பேட்டி*
5.பொன்னந்தி மாலை பொழுது - இதய வீணை*
6.எம்.ஜி.ஆர்.-என்.எஸ்.கிருஷ்ணன் போட்டிப்பாடல் -சக்கரவர்த்தி திருமகள்*
.
-
1952 முதல் 1959 வரை
முதல் ரவுண்டில்...
மதுரைவீரன்
நாடோடி மன்னனை
அது வரை வெளியான எந்த படமும் வசூலில் வென்றதாக சரித்திரமில்லை!
அடுத்து..
1960 முதல் 1969 வரை..
எங்க வீட்டுப்பிள்ளை
அடிமைப்பெண்னை
திரைப்படங்களின் வசூலை அது வரை வந்த எந்த படமும் வெல்ல முடியவில்லை...
1970 முதல் 1977 வரை
உலகம் சுற்றும் வாலிபன்
உரிமைக்குரல்
வசூலை அதுவரை வெளியான எந்த படமும் மிஞ்ச முடியவில்லை...
மூன்றெழுத்து நாயகனின்
திரையுலக வரலாறு
சாந்தி
கிரவுன்
புவணேஸ்வரி அல்ல...
அதையெல்லாம் தாண்டி
100 மடங்கு சாதனையில்...
நூற்றுக்கணக்கான
திரையரங்குகளின்
வெற்றியாகும் ....
வசூலில் புரட்சியாகும்............ur...
-
சமீபத்தில் ' நாடோடி மன்னன் ' படம் பார்த்து கொண்டிருந்த போது அதில் வசனம் என்று கவிஞர் கண்ணதாசனுடன் ரவீந்தர் என்ற பெயரைப் பார்த்தேன். யார் அந்த ரவீந்தர் என்று ஆச்சரியமாக இருந்தது.
திரையுலகைச் சேர்ந்த பலருக்கும் யார் ரவீந்தர் என்று தெரிந்திருக்கவில்லை. ஆனால் அவர் நாகூரைச் சேர்ந்தவர் என்பதோடு அவரது வாழ்க்கை வரலாற்றை இந்த வலைப்பதிவில் அறிந்து கொண்ட போது சந்தோஷமாகவும் தற்போதைய அவரது நிலையை அறிந்த போது நெகிழ்வாகவும் இருந்தது.
நீண்டு மெலிந்த தேகம். சற்றே குழி விழுந்த ஆனால் ஒளியுமிழும் கண்கள். சிவந்த நிறம். பேசத் துடிக்கும் உதடுகள். ஆனால் நினைத்ததைப் பேச முடியாது. தடுக்கும் பக்கவாத வியாதியின் அழுத்தம். உற்சாகமாகக் கதை சொல்லிப் பழக்கப்பட்ட அந்த நாக்கு இப்போது அரைமணி நேரம்கூடத் தெளிவாகப் பேச முடியாத பரிதாபம்.
வரவேற்பரையின் முகப்பில் இளமைப் பொலிவுடன் அழகு ததும்ப திரைப்பட ஹீரோவைப் போல் காட்சியளிக்கும் இளைஞரின் படம். மலைத்துப் போகிறோம்! இளமை எழுதிய அழகிய ஓவியம், கால வெள்ளத்தால் கரைந்து போனதை நம்ப முடியவில்லை.
எம்.ஜி.ஆரின் சொந்தப்பட நிறுவனமான எம்.ஜி.ஆர் பிக்சர்ஸ் கதை இலாகாவில் அவரது மனம் கவர்ந்த கதாசிரியராக இருந்தவர். இப்போது வயது எழுபத்தைந்து. பெயர் ரவீந்தர்.
ரவீந்தர் என்பது சொந்தப் பெயரல்ல. எம்.ஜி.ஆரால் பிரியத்துடன் சூட்டப்பட்ட பெயர். உண்மைப் பெயர் ஏ.ஆர்.செய்யது காஜா முகையதீன். சொந்த ஊர் நாகூர்.
காஜா முகைதீனுக்கு வங்கக் கவிஞர் ரவீந்திரநாத் தாகூரின் இலக்கியப் படைப்புகளில் கொள்ளைப் பிரியம். இதை அவரது வாய்வழிக் கேட்டறிந்த எம்.ஜி.ஆர், அவருக்கு `ரவீந்தர்` எனத் திரையுலக நாமகரணம் சூட்ட அதுவே நிரந்தரப் பெயராய் மாறிப் போனது.
எம்.ஜி.ஆர் நடித்த `இன்பக் கனவு`, `அட்வகேட் அமரன்` ஆகிய இரண்டு நாடகங்களுக்கு வசனம் எழுதியுள்ளார்.
திரையுலகில் இவர் முதன் முதலில் கதை-வசனம் எழுதிய படம் `குலேபகாவலி`. அந்தப் படத்திற்கு பிரபல கதை வசனகர்த்தா தஞ்சை ராமைய்யாதாசும் கதை வசனம் எழுதியிருந்த காரணத்தால் புதியவரான இவரது பெயர் டைட்டிலில் இடம் பெறவில்லை.
1956-ல் வெளிவந்த இப் படத்துக்கு அடுத்தபடி, 1958-ல் வெளிவந்த எம்.ஜி.ஆரின் `நாடோடி மன்னன்`தான் முதன் முதலில் இவரது பெயரை வெள்ளித் திரையில் வெளிச்சப்படுத்தியது.
இந்தப் படத்திற்கும் இருவர் கதை வசனம் எழுதினர். கவியரசு கண்ணதாசன் பெயரோடு இவர் பெயரும் சேர்ந்து இடம் பெற்றது.
எம்.ஜி.ஆரின் மற்றொரு வெற்றிச் சித்திரமான `அடிமைப்பெண்` படத்திற்கும் கதை-வசனம் எழுதியவர் ரவீந்தர்தான்.
32 படங்களுக்கு மேல் ரவீந்தர் கதை வசனம் எழுதியுள்ளார். ஆனால் இவரது பெயர் வெளிச்சமிட்டுக் காட்டப்பட்டது சில படங்களில் மட்டுமே.
கலையரசி, சந்திரோதயம், என இவர் கதை வசனம் எழுதிய படங்களின் பட்டியல் நீள்கிறது. ராமண்ணா இயக்கத்தில் ரவிச்சந்திரன் நடித்து வெளிவந்த `பாக்தாத் பேரழகி` படத்துக்கும் கதை வசனம் இவர்தான்.
1951-ல் நூற்று ஐம்பது ரூபாய் மாதச் சம்பளத்துக்கு எம்.ஜி.ஆர் பிக்சர்ஸ் கதை இலாகாவில் வேலைக்குச் சேர்ந்த ரவீந்தர் , பின்னர் படிப்படியாக உயர்ந்து ஆயிரத்து ஐநூறு வரை பெற்றதைப் பரவசத்துடன் நினைவு கூர்கிறார்.
எம்.ஜி,ஆரை எந்த நேரத்திலும் அவரது வீட்டில் சந்திக்கும் உரிமை பெற்றிருந்தவர்களில் ஒருவராய் திகழ்ந்தார் ரவீந்தர்.
நாடோடி மன்னன் படம் வெளிவந்த சமயம் இவரது குடும்பத்திற்கு ஏதாவது உதவி செய்ய வேண்டும் என்று விரும்பிய எம்.ஜி.ஆர் அடையாறு பகுதியில் இவர் மனைவி பெயரில் ஒரு இடம் வாங்கித் தர முடிவு செய்தார். ஒரு எழுத்தாளனுக்கு உரிய தன்மானத்தை விட்டுக் கொடுக்காமல் மனைவி பெயரில் இடம் வாங்க மறுப்பு தெரிவிக்க அத்துடன் அம்முயற்சி கிடப்பில் போடப்பட்டது எனச் சொல்லி வருந்துகிறார் ரவீந்தரின் மனைவி.
ரவீந்தர் தம் திருமணத்துக்கு அழைக்கச் சென்றபோது `என்ன வேண்டும்?` என்று உரிமையோடு எம்.ஜி.ஆர் கேட்டிருக்கிறார். தம் திருமணத்திற்கு கரியமணி சங்கிலி செய்யப் பணம் தாருங்கள் என கேட்டுள்ளார் ரவீந்தர்.
ரவீந்தர் விரும்பிய வண்ணம் தன் அண்ணன் சக்கரபாணி கையால் பணம் வழங்க ஏற்பாடு செய்தார் எம்.ஜி.ஆர்.
ரவீந்தருக்கு தயக்கம். `என்ன விஷயம்?` என்றார் எம்.ஜி,ஆர். `உங்க கையால் பணத்தை தரக் கூடாதா?` என்று ரவீந்தர் கேட்டதற்கு `புரியாமல் பேசாதே! மாங்கல்ய நகைக்குரிய பணத்தை புத்திர பாக்கியம் உடையவர் கையால்தான் பெற வேண்டும்` என்று சொன்னதைக் கண் கலங்க நினைவு கூர்கிறார் ரவீந்தர்.
அரசியலில் திருப்புமுனை ஏற்பட்டு எம்.ஜி.ஆர் முதலமைச்சரான பிறகும் அவரைச் சந்திப்பதில் ரவீந்தருக்கு எவ்வித இடையூறும் ஏற்படவில்லை.
அ.தி.மு.க தோன்றுவதற்கு முன்னால் எம்.ஜி.ஆர் பிரம்மாண்டமாகத் தயாரிக்கத் திட்டமிட்டருந்த `இணைந்த கைகள்` படத்திற்கு கதை வசனம் பொறுப்பு இவரிடம்தான் ஒப்படைக்கப் பட்டிருந்தது. கட்சி ஆரம்பித்து ஆட்சியையும் கைப்பற்றிய பிறகு படம் பாதியில் முடங்கிப் போனது.
நாகூர் நேஷனல் பள்ளியில் ஏழாவது வரை படித்த இவர் பிறகு லண்டன் மெட்ரிக் பரீட்சை எழுதி தேர்ச்சி பெற்றார்.
தம்மை உயர வைத்த ஏணியைப் போற்றத் தவறாத எம்.ஜி,ஆர், 1982-ல் ரவீந்தருக்கு சிறந்த வசனகர்த்தாருக்குரிய சிறப்பு விருதும் பொற்பதக்கமும் வழங்கி `கலைமாமணி` பட்டம் வழங்கி கௌரவித்தார்.
பத்தாண்டுகளுக்கு முன் தன்னைத் தாக்கிய வாதநோய் தரும் துன்பத்தை சிறிதும் பொருட்படுத்தாது எம்.ஜி.ஆர் என்ற வார்த்தையைக் கேட்ட அளவில் கண்களில் ஒளி பொங்க நாக் குழற உற்சாகமாகப் பேசத் தொடங்குகிறார்.
அவருக்கு உற்ற துணையாகத் திகழும் அவரது மனைவி, அவர் தடுமாறும்போதெல்லாம் தெளிவான விளக்கம் தருகிறார். ரவீந்தர் தம்பதியினருக்கு மூன்று மகன். மூன்று மகள்.
இப்போது ஸ்டெல்லா மேரி கல்லூரி பின்புறம் உள்ள எல்லையம்மன் காலனியில் ஒரு வாடகை வீட்டில் மெல்ல நகர்கிறது இவரது வாழ்க்கை. கூடவே வறுமையும்!
- ஹ.மு.நத்தர்சா -தினமணி ஈகைப் பெருநாள் மலர் 2002
நன்றி : ஆபிதீன்பக்கங்கள்....vr...
-
அள்ளிக்கொடுத்து அகிலத்தை தன் பக்கம் அன்புடன் வைத்த...
திரையுலகின் கலங்கரை விளக்கமே!
திரையுலகிற்கு வெளிச்சம் தந்த
ஒளி விளக்கே!
திரையுலக வெள்ளித்திரையின்
ஆனந்த ஜோதியே!
+++++++++++++++++++++++
கலையுலகில் அடுக்கடுக்கான வெற்றிகளை படைத்த
மன்னாதி மன்னனே!
+++++++++++++++++++++++++
1931 முதல் 1977 வரை தமிழ்பட உலகின்
வசூல் சக்கரவர்த்தி எம்.ஜி.ஆர். அவர்கள் ஒருவரே!
சென்னை பெருநகரில் வசூலின் முதல் வரலாற்றை படைத்துள்ளார்....
++++++++++++++++++++++++++++++++++
மலைக்கள்ளன் - 1954
+++++++++++++++
முதன் முதலில் 5 லட்சத்தை ஒடி முடிய பெற்ற காவியமாகும்!
காஸினே,பிரபாத், சரஸ்வதி
குலேபகாவலி - 1955
++++++++++++++++++
முதன் முதலில் 6 லட்சத்தை பெற்ற காவியமாகும்!
கிருஷ்ணா, கெயிட்டி, உமா, ராஜகுமாரி
மதுரை வீரன் - 1956
++++++++++++++++++
முதன் முதலில் 7 லட்சத்தை பெற்ற காவியமாகும்!
சித்ரா,பிரபாத்,சரஸ்வதி,காமதேனு
நாடோடி மன்னன் -.1958
+++++++++++++++++++++
முதன் முதலில் 8 லட்சத்தை கட்ந்த சாதனை பெற்ற காவியம்!
ஸ்ரீ கிருஷ்ணா, பாரகன், உமா
எங்க வீட்டுப்பிள்ளை - 1965
+++++++++++++++++++++++++
முதன் முதலில் .....
9 லட்சம் ....10 லட்சம்....11 லட்சம்...
12 லட்சம்......13 லட்சத்தை கடந்த
காவியமாக. திகழ்ந்தது!
ரிக்க்ஷாக்காரன் - 1971
+++++++++++++++++++++
முதன் முதலில் .....
14 லட்சம் ....15 லட்சம்.......மற்றும்
16 லட்சத்தை கடந்து மாபெரும் வசூல் சாதனையாகும் ..,......
உலகம் சுற்றும் வாலிபன் - 1973
++++++++++++++++++++++++++++
முதன் முதலில் ......
17 லட்சம்.... 18 லட்சம்...... 19 லட்சம்....
20 லட்சம்....... 21 லட்சம்..... 22 லட்சம்....
23 லட்சத்தை கடந்து உண்மையான வசூலை அரசிடம் சமர்பித்து வரி கட்டிய காவியமாகும்....
++++++++++++++++++++++++++++++++
திரையுலகின் முழு முதல் கடவுள் தான் இப்படி யெல்லாம் வசூலை முதன் முதலில் படைப்பார்....
சிகரமாக உயர்ந்து நிற்பார்.....
+++++++++++++++++++++++++++++++
நிகர வசூல்... அரசுக்கு வரி... தியேட்டர் பங்கு.... விநியோகஸ்தர் பங்கு என தெரிவித்த காவியம்
மக்கள் திலகத்தின் காவியங்களாகும்..
++++++++++++++++++++++++++++++++
பொய்யான வசூலை போட்டு
எல்லோரையும் ஏமாற்றி....
அரசுக்கு வரி
தியேட்டர் பங்கு என
சொல்லாமலேயே பொய் வசூலுக்கு போர்வை போர்த்திய கூட்டம் தான்
கணேசனின் பெறாத பிள்ளைகளின்
வசூல் கணக்கு ஆகும்...
+++++++++++++++++++++++++++++++
தகரப்பதக்கம் 17 லட்சம் தான் வசூல்...
அதற்கு முன் வந்த
(29.09.1972 ) வெளியாகி
வறண்ட மாளிகை....
சாந்தி 175 நாள்
(23.03.1972 ) வரை ஒடியது...
கிரவுன் 140 நாள்
புவணேஸ்வரி 140 நாள்
மொத்த வசூல் : 15 லட்சம் தான்.
அதை விட கூடுதலாக
73 நாள் தான் கணேசனின்
தகரபதக்கம் மூன்று அரங்கிலும் ஒட்டப்பட்டது...
++++++++++++++++++++++++++++++
14 மாத காலத்தில்.....
01.06.1974 தகரப்பதக்கம் வெளியீடு
வசூல் எப்படி 6 லட்சத்து 63 ஆயிரத்தை கடந்திருக்கும்....
சாந்தி 176, கிரவுன் 176,
புவனேஸ்வரி 176.....
+++++++++++++++++++++++++++++(
மூன்று அரங்கிலும் வசூலில் மகத்தான பிரடு... பொய் வசூல்.... தவறான பதிவு...
பொதுமக்களை ஏமாற்றலாம்...
ஆனால் மக்கள் திலகத்தின் பக்தர்களை ஏமாற்றவே முடியாது கனவிலும் கூட...
++++++++++++++++++++++++++++++++
மேலும் அண்ணன் ஒரு கோழை வசூலின் மோசடி அடுத்து....ur...
-
விழியிழந்தோரும் பார்த்த விந்தை மாமனிதர்!
கர்நாடக மாநிலத்தில் பெங்களூரில் கண் ஒளி இழந்தோர், காது கேளாதோர் பள்ளி நடத்திய ஒரு விழாவில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆரும், கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமாரும் கலந்து கொண்டனர் . நிகழ்ச்சி துவங்கியது. வரவேற்புரை வாழ்த்துரை பாராட்டுரைகள் முடிந்தன!
சிறப்புரையாற்ற பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆர். எழுந்தார். வெறும் வார்த்தைகளால் கண்ணொளி இழந்தவர்களுக்கு வழி காட்ட இயலுமா? செவியின் சுவையுணராத செல்வங்களுக்கு விருந்து கிடைக்கச்செய்வது எப்படி? இதயம் கருணைக்கடலாக இருந்தால்தான், வார்த்தைகள் முதுகளாக வடிவம் கொள்ளும்.
பொன்மனம் கொண்டவர் எம்.ஜி.ஆர். பேசத்துவங்கியவுடனேயே அந்தப் பள்ளியின் வளர்ச்சிக்காக 50 ஆயிரம் ரூபாய் நிதி வழங்குவதாக அறிவித்தார். அப்படித் தான் வழங்குவதற்கான காரணத்தை அவர் தெரிவித்தபோது, விழாவில் கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான மக்களும் அசையாத பதுமைகளாக மாறினர். அவர்களது இதயம் பாகாய் உருகியது. கண்கள் கண்ணீரைச் சொரிந்தன.
"கால் முறிந்து சிகிச்சை பெற்று, படுக்கையில் நான் கிடந்தபோது இரண்டு பார்வையற்றவர்கள் என்னைச் சந்திக்க வந்தனர். 'எங்கே .... இவ்வளவு தூரம் மிகவும் சிரமப்பட்டு வந்திருக்கிறீர்கள்? ' என்று கேட்டேன் . ' உங்களைப் பார்க்கத்தான் வந்தோம் ' என்று பதில் வந்தது .' என்னைப் பார்க்கவா? 'வியப்போடும், வேதனையோடும் அவர்களை நோக்கினேன். 'ஆமாம், உங்களைப் பார்ப்பதற்குத்தான் வந்தோம் . கண்களில்லாத நாங்கள் உங்களை எப்படிப் பார்க்க முடியும் என்றுதானே ஆச்சரியப்படுகின்றீர்கள்?
எல்லோரையும் போல் வெளி உலகைப் பார்ப்பதற்கு புறக்கண் இல்லையே தவிர, அகக்கண்ணில் நீங்கள் ஆழமாகப் பதிந்திருக்கின்றீர்கள். உங்களை எங்களுடைய கரங்களால் தொட்டு ஸ்பரிசித்து, ஆண்டவனிடம் பிரார்த்தனை செய்துவிட்டுச் செல்வதற்காகத்தான் வந்தோம்' என்று அவர்கள் தெரிவித்ததும் அன்பைவிட உலகத்தில் உயர்ந்தது எதுவுமே இல்லையென்று எனக்குத் தோன்றியது.
எம்.ஜி.ஆர். இதுபோல அன்பு செலுத்துவதற்கு லட்சோப லட்சம் மக்கள் இருக்கின்றார்கள் என்கின்ற எண்ணமே எனக்கு அதிக தன்னமிக்கையை தந்தது. கண்களை இழந்து தவிக்கும் அவர்கள், என்மீது காட்டிய வாஞ்சை என்றென்றும் மறக்க முடியாத நிகழ்ச்சியாக மனதில் பதிந்துவிட்டது. அவர்களுக்கெல்லாம் என் வாழ்நாளில் ஏதாவது செய்ய வேண்டுமென்று நினைத்துக் கொண்டிருந்தேன். இன்று அந்த நல்வாய்ப்பு எனக்குக் கிடைத்ததை நினைத்து மகிழ்கிறேன்.
எம்.ஜி.ஆர் . பேசி முடித்ததும் எழுந்த கரவொலி , அந்த நிகழ்ச்சியை நேரில் கண்டு, கேட்டு நெக்குருகிய இதயங்களின் வாழ்த்தொலியாக பெங்களூரில் பொங்கிப் பெருகியது. எளியோரைக் கண்டு இரக்கம் வருவது இயற்கை! இயன்ற அளவு உதவி புரிந்துவிட்டு, அதனை அத்துடன் மறந்துவிடுவது தான் பெரும்பாலோர் குணம்!
கண்டும் காணாமல் செல்வோரை, இதயம் உள்ள மனித இனத்திலேயே சேர்க்க நான் விரும்பவில்லை! கோடியில் ஒருவருக்கு மட்டுமே - என்றோ கண்ட காட்சியானாலும், இல்லாமையால் துன்பப்படுவோர் குறையை எப்படி நீக்குவது என்கின்ற சிந்தனை வளர்ந்து கொண்டே இருக்கின்றது. காலம் கனியும்போது தாங்கள் உதவி செய்கின்றனர்.
அந்த வகையில் ஆயிரத்தில் ஒருவர் என்றல்ல , லட்சத்தில் ஒருவர் என்றல்ல, கோடியில் ஒரு குணக்குன்று என்று எம்.ஜி.ஆரை.க் கூறவேண்டும். உள்ளத்தாலும் , உயர்ந்த செயல்களாலும் மக்கள் மனதில் உன்னதமான இடத்திற்கே சென்று விடலாம்; சிகரத்தைத் தொட்டுவிடலாம். ஆனால், எப்போதும் எல்லோராலும் அதே இடத்தில் இருந்து மதிப்பையும் , மரியாதையையும் பெற்றுவிட முடியுமா? 'என்னால் முடியும்' என்று நிரூபித்து , நிலைத்து நிற்க எம்.ஜி.ஆரால் முடிந்தது. அதனால்தான் அவர் மக்கள் திலகமாக மட்டுமின்றி , மக்களின் இதயத் திலகமாகவும் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்.
நன்றி : அண்ணன் "நாகை" தருமன்...sb...
-
வரலாறு, இலக்கியமாகும் - அண்ணா!
இலக்கியம், வரலாறாகும் எம்.ஜி.ஆர்.!
'தோழனே! என் கரத்தால் உன் கரத்தை இறுகப்பற்றிக் கொள்கிறேன் . எல்லா செல்வத்திற்கும் மேலான இதயத்தை, அதில் ஊறும் அன்பை உனக்குக் காணிக்கையாக்குகின்றேன்'. எப்போதோ படித்த வெளிநாட்டுக் கவிஞன் ஒருவனின் கவிதை வரிகள் இவை! கவிஞனின் பெயர் நினைவில் நிற்க வில்லை . அவன் எழுதிய கருத்து நெஞ்சில் தங்கி , நிலைத்து விட்டது.
அன்பை வாரி கலங்கும் அமுதசுரபியாக விசாலமான இதயத்தைக் கொண்டவராக வாழ்ந்து, ஆதரவுக் கரம் நீட்டி அனைவரையும் அரவணைத்துக் கொண்ட கருணையின் வடிவமங்கத் திகழ்ந்தவர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். 'அன்பு' என்ற சொல்லை நினைத்தால் அகத்தில், அவர் உருவம் தோன்றுகின்றது! 'கருணை' எனக் காதில் ஒரு சொல் விழுந்தாலே, கடந்த காலம் காட்சிகளாய் கண்களில் தெரிகின்றது.
அந்த அன்புருவம், கருணையின் வடிவம் வாட்டம் கொள்ளும்படியான வார்த்தைகளை வாரி வழங்குபவர்களும் இருந்தனர் அந்தக் காலத்தில்!
சென்னை, அடையாறு பகுதியில் உள்ள "ஒளவை இல்லத்திற்கு" மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் . நிதியாக , ஒரு பெரும் தொகையை வழங்கினார். அதனைக் கொண்டு அங்கு கட்டிடம் ஒன்று கட்டப்பட்டது . அதனைப் பாராட்ட ஒளவை இல்லத்தில் விழா ஒன்றும் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவே மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். விரும்பவில்லை! அந்த அளவிற்கு, சிலரது அறிவை அடகுவைத்த, அகந்தைச் சொற்கள் அவரை வாட்டமடையச் செய்திருந்தன. அழுக்காறு கொண்டோர் எப்போது- எங்கேதான் இல்லாமல் இருக்கிறார்கள்?
விழாவில் - பேரறிஞர் அண்ணாவும், அப்போதைய சட்டப் பேரவைத் தலைவர் கண்ணிபத்தின் உருவம் டாக்டர் யு . கிருஷ் ணாராவ் அவர்களும், அப்போதைய தமிழக நிதியமைச்சர் சி . சுப்ரமணியம் அவர்களும் கலந்து கொண்டார்கள் . மரியாதைக்கும் மதிப்புக்கும் உரிய பெரியவர்கள் கலந்து கொள்கின்றார்கள் என்கின்ற காரணத்தினாலேயே , மக்கள் திலகம் பண்பாடு கருதி விழாவில் பங்கு கொண்டார். எனினும் ஆரவாரம், ஆடம்பரம் ஏதும் இன்றி , நகரில் முக்கியமானவர்கள் மட்டும் கலந்து கொள்ள எளிமையாக அந்த விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு எனது சகோதரர் துரைராஜுடன் நானும் சென் றிருந்தேன். பேரறிஞர் அண்ணா அவர்கள் மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் முகவாட்டத்தைக் கண்டதும் திடுக்கிட்டார். வழக்கமான கலகலப்பின்றி அவர் இருந்ததைப் பார்த்துவிட்டு, அருகில் அழைத்து அமரவைத்துக் கொண்டு காரணம் கேட்டார். தயங்கித் தயங்கி தனது மனதில் உள்ள வேதனையை, அன்னையின் பரிவோடு கேட்ட அண்ணனிடம் கொட்டிவிட்டார்.
“அண்ணா ... நான் மக்களுக்கு உதவி செய்வதும் ... இதுபோன்ற அமைப்புகளுக்கு நிதி வழங்குவதும் புகழுக்காகத்தான் என்று கூறுகிறார்கள் . நான் எதையும் எதிர்பார்த்து, எவருக்கும் உதவவில்லை. அப்படி இருக்கும்போது, இப்படிச் சுடுசொல் வீசுவது சரிதானா? என்னால் இப்படிப்பட்ட வார்த்தைகளைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை."
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் . வேதனையோடு வெளியிட்ட வார்த்தைகளைக் கேட்டதும், பேரறிஞர் அண்ணா கலகலவெனச் சிரித்துவிட்டார். மனவருத்தத்தைக் கூறினால், அண்ணா ஆறுதல் சொல்லுவார் என்று எதிர்பார்த்த எம்.ஜி.ஆருக்குப் பெரும் திகைப்பு!
'மனக்குறையைக் கேட்டுத் தெரிந்து கொண்டபின்பும் அண்ணா .... இப்படி ... குழந்தைபோல் சிரிக்கின்றாரே! நம் வேதனை ... அவருக்கு வேடிக்கையாய்ப் போய்விட்டதோ! ' என்று மக்கள் திலகம் கருதினார்.
“இதற்காகவா ... கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறீர்கள் . புகழுக்காகத்தான் நிதி உதவி செய்கிறீர்கள் என்று சொன்னால் மகிழ்ச்சியோ ' ஆமாம் ' என்று சொல்ல வேண்டியதுதானே ! இதைப் பெரிதாகக் கருதியா வருத்தப்பட்டுக் கொண்டிருக்கிறீர்கள்? புகழுக்காக உதவி செய்கிறீர்கள் என்று குறை சொல்வதே முதலில் தவறு . அவர்களுக்குப் புகழைப் பற்றியும் தெரியவில்லை. நிதி உதவியைப் பற்றியும் புரியவில்லை என்றுதான் அர்த்தம். உங்களைப் பார்த்து, புகழுக்கு ஆசைப்பட்டு அவர்களும் இதைப்போல் வாரி வழங்கட்டுமே , யார் வேண்டாம் என்று சொன்னார்கள்? அப்படிச் செய்தால் அவர்களுக்கும் நல்லது, இந்த நாட்டுக்கும் நல்லது” அண்ணாவின் சொற்கள் மக்கள் திலகத்தின் மனவே தனையைச் சற்று தணித்தது.
டாக்டர் யு . கிருஷ்ணாராவ் அவர்கள் நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்தார் . ஔவை இல்லத்தில் கட்டிடம் கட்டுவதற்கு, மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நிதியாக 30 ஆயிரம் ரூபாய் வழங்கியதைக் குறிப்பிட்டுப் பலரும் பாராட்டினர். 1958 ஆம் ஆண்டில் முப்பதாயிரம் ரூபாயின் மதிப்பு எவ்வ ளவு இருக்கும் என்று சிந்தித்துப் பார்த்தால் புரியும். 'இவ்வளவு பெரிய தொகையைத் தானாகவே, வலிய முன்வந்து வழங்கிய வள்ளல் இதுவரை எவருமில்லை' என்று அப்போது ஔவை இல்லத்தில் இருந்தவர்கள் தெரிவித்தனர்.
அப்போதைய நிதியமைச்சர் சி.சுப்ரமணியம் அவர்கள் பேசும்போது ஒரு கருத்தை வெளியிட்டார் . “எம்.ஜி.ஆர். பெருந்தொகையை நிதியாக வழங்கியதை உளமாரப் பாராட்டுவோம். அதே சமயத்தில், அவரோடு போட்டி போட்டு வெற்றி பெறும் வகையில், மேலும் அதிகமாக இது போன்ற நல்ல காரியங்களுக்கு, மற்றவர்கள் நிதி வழங்க வேண்டும். அவர்தான் கொடுத்துவிட்டாரே என்று வசதி படைத்தவர்கள் சும்மா இருந்து விடக்கூடாது"
இதன்பின்பு - உயர்திரு சி. சுப்ரமணியம் அவர்கள் பேச்சைக் குறிப்பிட்டு , பலத்த கையொலிக்கும் மகிழ்ச்சிக்கும் மத்தியில் டாக்டர் யு . கிருஷ்ணாராவ் அழகாக உரையாற்றினார்:
" நிதியமைச்சர் சி . சுப்ரமணியம் அவர்கள், நிதி அளிப்பதில் எம்.ஜி.ஆரோடு போட்டி போட்டு மற்றவர்கள் வெற்றி பெற வேண்டுமென்று குறிப்பிட்டார்கள். அது முடியுமென்று நான் நினைக்கவில்லை. அவரைவிட அதிகமாக வழங்க வேண்டுமென்று அடுத்தவர்கள் எண்ணுவதற்கு முன்பு, அதைவிட ஒரு பெரிய தொகையை எம்.ஜி.ஆர். வழங்கிவிடுவார். ஆகையால் வெற்றியை அவரிடமிருந்து எவரும் பறித்துவிட முடியாது. இந்த வகையில் அவரை யாரும் மிஞ்ச முடியாது என்று கருதுகிறேன். அதற்காக யாரும் நிதி வழங்கா மல் இருந்துவிட வேண்டாம்."
அவைத் தலைமைக்கும், அகத்தூய்மைக்கும் எடுத்துக்காட்டாக விளங்கியவரும், உயர்ந்த பண்பாளருமான டாக்டர் யு . கிருஷ்ணாராவ் வார்த்தைகளைக் கேட்டுப் பூரித்துப் போன முதல் மனிதர் பேரறிஞர் அண்ணாதான். பிள்ளைகளைப் பெரியவர்கள் போற்றக் கண்டால் , அகமகிழ்கின்ற அந்தத் தாயின் வடிவமாகத் திகழ்ந்தவர் பேரறிஞர் அண்ணா! அவர் பேசும்போது மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் மனப்புண்ணுக்கு மறுபடியும் மருந்து போட்டார் . எதையும் தாங்கும் இதயத்துக்கு உரியவர்; இதயக்கனி என்றவரை, " இதையும் தாங்கிக் கொள் ' என்று கூறினார்.
“எம்.ஜி.ஆர். இப்படியெல்லாம் நல்ல காரியங்களுக்கு நிதி வழங்குவது புகழுக்காகத்தான் என்று சிலர் கூறலாம் . அவர் இப்படிப்பட்ட புகழுக்கு ஆசைப்படவில்லை. இப்படி நிதி வழங்காமலேயே அவருக்குப் புகழ் இருந்து கொண்டுதான் இருக்கின்றது. அப்படிப் பேரும் புகழோடு, மக்கள் பேராதரவையும் அன்பையும் பெற்ற ஒருவர், தான் உழைத்து சம்பாதித்த பொருளை இப்படி ஊரில் நிகழும் நல்ல காரியங்களுக்குக் கொடுத்து உதவுகின்றார் என்றால், அதுதான் அவருக் குள்ள தனித்தன்மை . இதனை உணராமல், புகழுக்காக அவர் நிதி வழங்கினார் என்று எவராவது கருதினால், 'ஆமாம்' என்று நான் கூறுகின்றேன். அதிலும் தவறில்லை.
' ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது உதியம் இல்லை உயிர்க்கு '
என்று வள்ளுவர் குறளில் அழகாகச் சொல்லி வைத்துள்ளார் . கொடுப்பதும், புகழோடு வாழ்வதும்தான் சிறப்பு என்று கூறிவிட்ட பிறகு , வேறு விளக்கம் தேவையா? உயிருக்கு ஊதியமே புகழ்தான் என்கின்றார். ஆகையால் உயிர் உள்ளவர்களெல்லாம் புகழ் என்ற ஊதியம் பெற வேண்டும். இல்லையென்றால் ... ”
அறிஞர் அண்ணா பேச்சை நிறுத்தினார். ஒரு கணம். கூடியிருந்தவர்கள் - ' உயிர் இல்லாவிட்டால் பிணம் ' என்ற பொருள் புரிந்தவர்கள் பலத்த கையொலி எழுப்பி தங்களை வெளிப்படுத் திக் கொண்டனர் .
"இந்த உலகத்தில் நிலையானது எதுவுமில்லை; புகழைத்தவிர ! புகழாகவே வாழ்கின்றவர் புகழைப் பெற விரும்புகின்றார் என்று சொன்னதுதான் தவறு! புகழைப் பெற நிதி உதவியதாகச் சொன்னால் குறையில்லை! அப்படிச் சொல்பவர்களும் அந்தப் புகழைப் பெற முயற்சிக்கலாம். எம்.ஜி.ஆருக்கும், என எனக்கும் இருக்கின்ற தொடர்பை நான் சொல்லித் தெரிந்து கொள்கின்ற நிலையில் நாடு இல்லை. எம்.ஜி.ஆரைப் பாராட்டுவது என்னை நானே பாராட்டிக் கொள்வதாகக் கருதப்படும். முல்லைக்கு மணம் உண்டு என்பதைக் கூறவா வேண்டும். "
பேரறிஞர் அண்ணாவின் மந்திரச் சொற்களுக்கு உள்ள மகிமை அதன்பின்புதான் காண முடிந்தது. இதுவரையில் சோர்வாக இருந்த மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். முகம் ஆயிரம் நிலவாக ஒளி வீசியது. கவலை மேகங்கள் விரட்டப்பட்டன.
சங்க காலத்தில் தமிழ் மூதாட்டி ஔவைப்பிராட்டியை பறம்பு மலையை ஆண்ட மன்னன், முல்லைக் கொடிக்குத் தேர்தந்த பாரி வள்ளல் ஆதரித்தான். ஒளவையின் முத்துத் தமிழ்கேட்டு அகமகிழ்ந்தான் என்று இலக்கியத் தடங்கள் அறிவிக்கின்றன.
இலக்கியம் இங்கு வரலாறாகிறது !
பாங்கிமலைப்பாரி என்று அழைக்கப்படும் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். ( அடையாறு ) ஔவை இல்லத்தை ஆதரித்தார். பலவகையிலும் நிதி உதவி செய்தார். வரலாறு தொடர்கிறது - வாழ்கிறது ! மன்னன் பாரி போரில் மாண்டதும் , ஆதரவற்றிருந்த அவனது மகளிர் அங்கவை , சங்கவையை ஒளவைதான் அரவணைத்து அன்புகாட்டி வாழ்வளித்தாள்.
அடையாறு ஔவை இல்லம், இன்று ஆதரவற்றவர்களுக்கு வாழ்வளிக்கும் அன்புக்கோயிலாக விளங்குகிறது! பாரியும், ஒளவையும் வாழ்வுதரும் ஆலயங்களாக வாழ்ந்து, வாழவைத்துக் கொண்டிருக்கின்றார்கள் .
இங்கு வரலாறு இலக்கியம் ஆகின்றது.
கடையெழு வள்ளல்களை ஒவ்வொருவராய்க் கண்முன்னே கண்டது போல் வாழ்ந்தவர் மக்கள் திலகம், பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர்.தான்!
நன்றி : அண்ணன் "நாகை" தருமன்...vr...
-
எம்ஜிஆர்ஒப்புக் கொண்டிருந்த அரச கதை படங்களில் தொடர்ந்து நடிக்க ஆரம்பித்தார்.. ராஜாதேசிங்கு விக்ரமாதித்தன் அரசிளங்குமரி, ராணி சம்யுக்தா பாக்தாத் திருடன் போன்ற படங்கள் தான் அவை.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு படப்பிடிப்பு தொடங்கிய இவை வெளிவந்தபோது பெரிய அளவில் எம்ஜிஆருக்கு வெற்றியை தேடித் தரவில்லை.
ஒரு டெக்னீசியன் ஆகவும் டைரக்டசனும் தெரிந்த அவர், காட்சியமைப்புகளில் எம்ஜிஆர் தெரிவித்த யோசனைகளை தயாரிப்பாளர்களும் இயக்குனர்களும் ஏற்றுக் கொள்ளாததும் இதற்கு ஒரு காரணம். மாஸ் ஹிட்டை கொடுத்த மதுரை வீரன் தயாரிப்பு நிறுவனமான கிருஷ்ணா பிக்சர்சின் ராஜா தேசிங்கு படம், வீம்புக்காக போய் இப்படித்தான் தோல்வியை தழுவியது.
இப்படிப்பட்ட சூழலில் அரச கதைகளில் இருந்து விடுபட்டு சமூகப் படங்களில் நடிக்க பெரிதும் ஆர்வம் காட்டி னார்.. மன்னனாகவும் தளபதியாகவும் வாளை சுழற்றிய எம்ஜிஆர் மார்டனாக பேண்ட் ஷர்ட் கிராப் தலை என தோற்றத்தையே அடியோடு மாற்றி கொண்டார்.
1961 இல் வெளியான திருடாதே என்கிற சமூகப் படம் இப்படித்தான் எம்ஜிஆருக்கு வெற்றியைத் தேடிக் கொடுத்தது.. திருடாதே பாப்பா திருடாதா என்ற காலத்தால் அழிக்க முடியாத பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரத்தின் பாடலை சுமந்திருந்தது படம் அது.
சின்னப்பயலே சின்னப்பயலே சேதி கேளடா போன்ற பாடல்கள் மூலம் எம்ஜிஆருக்கு கொள்கை பாடல்களால் சிம்மாசனம் ஏற்படுத்தித் தந்த கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், இளவயதிலேயே அகால மரண மடைந்து விட்டது எம்ஜிஆரை பொறுத்தவரை பெரிய இழப்பு.
பின்னாளில் முதலமைச்சரானபோது எம்ஜிஆர் சொன்னார் நான் அமர்ந்திருக்கும் நாற்காலியில் ஒரு கால் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரித்திற்கு சொந்தமானது என்று..
1960களின் தொடக்கத்தில் எம்ஜிஆரின் திரைஉலகப் பயணம் புதிய பரிமாணத்தில் பறக்க ஆரம்பித்தது. தாய்க்குப்பின் தாரம் படத்தோடு கோபித்துக்கொண்டு போன உயிர் நண்பனும் திரைப்பட தயாரிப்பாளருமான சாண்டோ சின்னப்பா தேவர் மீண்டும் திரையில் கூட்டணிக்கு கைகோர்த்தார்.
தாய் சொல்லை தட்டாதே என்ற படம் மிகக் குறைந்த காலத்தில் உருவாகி வெளிவந்து சக்கை போடு போட்டது.
பேண்ட் ஷர்ட் கூலிங் கிளாஸ் தொப்பி என படு ஸ்டைலாக சிஐடி ஆபீஸராக வந்த எம்ஜிஆர், ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.
எம்ஜிஆரை வைத்து பூஜை போட்ட அன்றே படத்தை தேதியை வெளியிட்ட தேவர் சொன்னபடி அதே தேதிக்கு படத்தை ரிலீஸ் செய்தார். இது அப்போதைக்கு மிகப்பெரிய அதிசயம்.
மிகப் பெரிய கம்பெனிகளில் நடிப்பதையும் பிரமாண்ட தயாரிப்புகளையும் எம்ஜிஆர் தவிர்த்தார். சின்னப்பா தேவர் போன்ற சாமானிய தயாரிப்பாளர்களை ஊக்குவித்தார்
பீம்சிங் இயக்கத்தில் நடிகர் திலகம் பாகப்பிரிவினை பாவமன்னிப்பு, பாசமலர் பாலும்பழமும், பார் மகளே பார் என ‘’பா’’ வரிசையில் ஹிட் கொடுத்ததுபோல எம்ஜிஆர் தேவரோடு இணைந்த ‘த’’ வரிசையை ஆரம்பித்தார். தாய்ச்சொல்லை தட்டாதே, தாயைக்காத்த தனயன், தர்மம் தலைகாக்கும், என்று ஹிட்டடித்தார். .எம்ஜிஆர் என்ற மூன்றெழுத்து விநியோகஸ்தர்கள் மத்தியில் மினிமம் கியாரண்டி ராமச்சந்திரன் என்ற அர்த்தத்தில் பேசப்பட்டது.
சின்னப்பா தேவரைப் போலவே ஆர் ஆர் பிக்சர்ஸ் உரிமையாளரும் இயக்குநருமான டி ஆர் ராமண்ணா, எம்ஜிஆரின் மனம் கவர்ந்த ஒருவர்..
1963-இல் டி ஆர் ராமண்ணா தயாரித்து இயக்கிய பெரிய இடத்துப் பெண் மெகா பிளாக்பஸ்டர் படமாக அமைந்தது. பணக்கார பெண்ணின் திமிரை வேறுவேடத்தில் வந்து கதாநாயகன் அடக்கும் பக்கா கமர்சியல் மசாலா கதை.. பட்டிக்காடா பட்டணமா சகலகலாவல்லவன் போன்ற படங்களுக்கெல்லாம் இதுதான் ட்ரெண்ட் செட்டர்..
1963-ல்தான் எம்ஜிஆருடன் நாகேஷ் காமடியான இணைந்து நடித்த பணத்தோட்டம் போன்ற படங்கள் தொடர்ச்சியாக வெளிவந்தன. அது முதல் நாகேஷை தன் படங்களில் தவறாமல் இருக்கும்படி பார்த்துக் கொண்டார் எம்ஜிஆர்..
ஏற்கனவே நம்பியார் அசோகன் எம் ஆர் ராதா ஆகிய மூவர் எம்ஜிஆரின் படங்களில் முக்கிய பாத்திரங்களில் வலம் வந்தனர்..
பத்மினி பானுமதிக்கு பிறகு ஆஸ்தான கதாநாயகியாக சரோஜாதேவி வலம்வந்தார். இடையே மகாதேவிக்கு பிறகு நடிகர் திலகம் சாவித்திரி இரண்டு படங்களிலும் தேவிகா ஒரே ஒரு படத்திலும் ஜோடி போட்டுவிட்டு போய் விட்டார்கள்.
தொட்டதெல்லாம் துலங்கி ஏறுமுகத்தில் இருந்தார் அதிக பொருட்செலவில் எடுக்கப்பட்ட சிவாஜியின் பிரமாண்ட படமான கர்ணனை, பொருட்செலவே இல்லாத வேட்டைக்காரன் என்ற கறுப்பு வெள்ளை படத்தை முன்னிறுத்தி வெற்றி காணும் அளவுக்கு இருந்தார் எம்ஜிஆர்....vr...sbb...
-
#இனிய_நினைவுகளில்
#ஒளி_விளக்கு படத்தின் விசேட அம்சங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்..
* மக்கள் திலகத்தின் நூறாவது படம்-ஜெமினி நிறுவனம் தயாரித்தது...இது உங்களுக்கு தெரிந்ததே...!!! தெரியாதது தர்மேந்திரா-மீனாகுமாரி நடித்து வெளிவந்த phool aur paththar என்ற இந்திப்படத்தின் தழுவலே இந்த படம்..
*மக்கள் திலகம், ஜெயலலிதா, அசோகன், மனோகர், கொள்ளைக்கூட்டம் என்ற வழக்கமான கமர்ஷியல் விடயங்கள் இருந்தாலும், சாந்தி ((செளகார் ஜானகி)) என்ற பால்ய விவாகத்தினால் பாதிக்கப்பட்ட ஒரு கைம்பெண் சமூகத்தால் எவ்வாறு புறக்கணிக்கப்படுகிறாள் என்ற சமூக கருத்து படத்தில் முன்வைக்கப்பட்டிருந்தது...இது தொடர்பான காட்சி அமைப்புகள் இந்திப்படத்தை விட அழுத்தமாயும், பெண்களை கவரும்படியும் பாடமாக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
*இந்த படத்தின் ஆரம்பம் முதல் இறுதி வரை செளகார் ஜானகியின் பாத்திரத்தின் மூலமாகத்தான் கதை நகர்வதால் மக்கள் திலகம் இந்தப்படத்தின் கதாநாயகன் என்பதை விட கதையின் நாயகன் என்பதே பொருத்தமானது..
*சாந்தி (செளகார்) முத்து (மக்கள் திலகம்) வால் மீட்கப்பட்டு, முத்துவின் வீட்டிலேயே குடி வைக்கப்படுகிறார். இருப்பினும் இருவருக்கும் இடையே காட்சிகளை எந்த வித விரசமும் இல்லாமல், ஒரு நல்ல நண்பர்கள் ஒரே இடத்தில் குடியிருப்பது போன்று அமைத்திருப்பது இயக்குநர் சாணக்யாவின் திறமை. அதுவும் மக்கள் திலகம் குடித்து விட்டு வரும்காட்சியில் செளகாரின் நடிப்பும், வசனமும் அட்டகாசம்.
*"தைரியமாக சொல் நீ மனிதன் தானா" என்ற பாடல் காட்சியில் மக்கள் திலகம் குடித்து விட்டு தள்ளாடிகொண்டே வருவதாய் காட்சி அமைக்கப்பட்டிருந்தது. மக்கள் திலகம் தயங்கவே, கவிஞர் வாலி ஒரு யோசனை சொன்னார், "மக்கள் திலகத்தின் மனசாட்சி நான்கு எம்.ஜி.ஆராக உருவெடுத்து அவருக்கு அறிவுரை சொல்வதுபோல் எடுக்கலாம்" என யோசனை கூற அதன்படியே படமாக்கப்பட்டது. பாடல்-படமாக்கப்பட்டவிதம்-மக்கள் திலகத்தின் நடிப்பு ஆகியன இந்தப்படத்திற்கு ஹைலைட்டாக அமைந்து பட்டையை கிளப்பியது.
* இந்த படத்தின் ஆரம்ப காட்சியில் மாங்குடி கிராமத்தில் கொரோனா போன்றே விடக்காய்ச்சலினால் மக்கள் பாதிக்கப்பட்டு, கிராமத்தை விட்டே காலி செய்வதாய் காட்சி இடம் பெறும்.
தலையில் அடிபட்டு மக்கள் திலகம் உயிருக்கு போராடும்போது செளகார் ஜானகி கதறிக்கொண்டே பாடும் "ஆண்டவனே உன் பாதங்களை நான் கண்ணீரில் நீராட்டுவேன்" என்ற பாடல், ,1984 ம் வருடம் மக்கள் திலகம் உடல் நலக்குறைவினால் அமெரிக்காவில ப்ரூக்ளின் மருத்துவமனையில் உயிருக்கு போராடி கொண்டிருக்கும் போது, தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் மக்கள் திலகம் நலம் பெற வேண்டி பாடப்பட்டது // ஒலிபரப்பப்பட்டது.அந்த வகையில் மக்கள் திலகம் மறு பிறவி எடுத்ததில் இந்த பாடலுக்கு பெரும் பங்கு உண்டு எனலாம்.
தமிழகத்தின் பல பகுதிகளில் இப்படம் நூறு நாட்களுக்கு மேல் ஓடி "ப்ளாக்பஸ்டர்" ஹிட்டானது. "தைரியமாக சொல் நீ.." "நாங்க புதுசா கட்டிக்கிட்ட ஜோடிதானுங்க" .." ருக்குமணியே.."" நான் கண்ட கனவினில் " போன்ற மெல்லிசை மன்னரின் சூப்பர் ஹிட் பாடல்களும் படத்தின் ஹைலைட்டுக்களாகின.
தகவல்:https://en.m.wikipedia.org/wiki/Oli_Vilakku... Sridhar Babu
-
சிவன் ஆடிய விளையாடலை ஆன்மீகவாதிகள் "திருவிளையாடல்" என்றனர். சிவாஜி சாவித்திரியிடம் ஆடிய விளையாடலுக்கு என்ன பெயர் வைப்பது. சேரி நடையும் குளோஸப்பில் சாவித்திரியை பதம் பார்க்க வரும் வேகத்தையும் பார்த்தால் சிவாஜியின் "விரச விளையாடல்" என்றே அழைக்கலாம். ஆண்டவனின் புனிதமான விளையாடலை அலட்சியமாகவும் ஆபாசமாகவும் நடித்து பரம்பொருளையே பதம் பார்க்க துணிந்த ஐயன் ஒரு சாதாரண பையன் போல நடக்கலாமா? ஆண்டவன் விஷயத்திலாவது அருட்கடாட்சம் பொருந்தி நடித்திருக்கலாம்.
நம்ம kr விஜயா கூட பக்தி படம் நடிக்கும் போது 40 நாட்கள் விரதம் இருந்து பக்தியுடன் நடித்ததாக குறிப்பிட்டிருந்தார். மதுரை வீரனில் 'ஆடல் காணீரோ' பாடலில் பத்மினியின் பரதநாட்டியத்தில் தெய்வீக மணம் கமழும் விதத்தில் படமாக்கி இருப்பார்கள். ஆனால் படப்பிடிப்பில் ஐயன் சாவித்திரியோட எப்படி ஸ்டைலாக கையில் சிகரெட்டுடன் போஸ் கொடுப்பதை பார்த்தால் பக்தி பகல் வேஷமானது தெரிகிறதா ?
கடற்கரையில் சிவன் நடப்பதை இன்றைய காவல்துறை பார்த்தால் சிவனை ஈவ் டீஸிங்கில் உள்ளே பிடித்து போட்டிருப்பார்கள். எல்லாவற்றையும் விட ஐயனின் கைபுள்ளைங்க ஆடிய டிக்கெட் கிழி விளையாடலுக்கு என்ன பெயர் வைப்பது "கிழி விளையாடல்" என்று பெயர் வைக்கலாமா? ஐயன் விளையாடிய "விரச விளையாடல்" திரையில், அவர் கைபுள்ளைங்க ஆடிய "கிழி விளையாடல்" டிக்கெட் கிழிக்கும் அறையில். சென்னையில் சுமார் 3 லட்சத்துக்கு மேலும் மதுரையில் சுமார் 1 லட்சத்துக்கு மேலும் டிக்கெட்டை சர்வ நாசம் பண்ணிய "கிழி விளையாடலி"ன் முதல் பகுதியாக விளம்பர மோசடி ஆடலை இப்போது பார்க்கலாம்.
'கள்ளத்தனம் என்னடி? எனக்கொரு காவியம் சொல்லு என்றாள்'. ஆகா பாரதியாரின் அருமையான பாடல் வரிகள். கைபுள்ளைங்க இந்த பாடலில் வரும் கள்ளத்தனத்தை மட்டும் கையிலேந்தி பொய்யுரைத்து ஐயனை வைத்து ஒரு பொய் காவியம் படைக்கும் அழகிருக்கிறதே
அது சிறு குழந்தைகள் கூட நம்பும் படி இல்லையே!. "திருவிளையாடல்" 1965 ல் வந்த ஒரு சாதாரண பக்தி படத்தை வைத்து கொண்டு "எங்க வீட்டு பிள்ளை" செய்த சரித்திர சாதனையை முறியடிக்க கைபுள்ளைங்க கிளம்பிட்டாங்க.
சென்னையிலும், மதுரையிலும் மட்டுமாவது முறியடித்து விடலாம் என்ற பகல்கனவுடன் களம் இறங்கினார்கள். ஆனால் காரியம் என்று வந்துவிட்டால் நம்ம கைபிள்ளைங்க ஆற்றும் களப்பணி இருக்கிறதே! அடேயப்பா மிகவும் வியப்பாக இருக்கும். எதைப்பற்றியும் கவலை கொள்ளாமல் கண் துஞ்சாமல், கடமையாற்றும் அதாவது டிக்கெட் கிழிக்கும் பணி மிகவும் சிறப்பாக இருக்கும். அதுமட்டுமல்ல இடையில் செய்த சாதனைகளை அவ்வப்போது பத்திரிகையில் விளம்பரப் படுத்துவார்கள்.
அது போல் ஏதாவது ஒரு ஊரில் படத்தை தூக்கி விட்டாலும் விளம்பரத்தில் அதை தூக்க மாட்டார்கள். அப்படி செய்து "எங்க வீட்டுப் பிள்ளை"யைக் காட்டிலும் அதிக தியேட்டரில் ஓடியதாக காண்பிக்க முனைவார்கள். அதற்கு ஆதாரமாக திருவிளையாடல் படம் 17 வது வார விளம்பரத்தில் நாகர்கோவில் தங்கம்
தியேட்டர் போட்டு விளம்பரம் வந்ததை கண்ணுற்ற தலைவர் ரசிகர்களுக்கு ஒரே அதிர்ச்சி. என்னடா இது 16 வது வாரம் கடைசி வாரம் என்ற விளம்பரம் வந்ததே!
அதுவும் நாகர்கோவில் தங்கத்தில் என்ற பிரத்யேகமான விளம்பரத்துடன்.
என்னடா படம் இன்னுமா ஓடுகிறது? என்று பார்த்தால் படம் 16 வது வாரத்திலேயே பணால் ஆனது உறுதி செய்யப்பட்டது. இவ்வளவுக்கும் நாகர்கோவிலில் 100 நாட்கள் ஓட்டியும் ரூ84000 தான் வசூல். அதன்பிறகும் 12 நாட்கள் ஓட்டி மேலும் ஓட்ட முடியாமல் 112 நாளோடு நிறுத்தப்பட்டது. "குடியிருந்த கோயில்" 42 நாளிலேயே ரூ 73000. தாண்டி வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது.
"அடிமைப்பெண்" 100 நாட்களில் ரூ 130000 வசூலாக பெற்றது.
ஆனால் கைபிள்ளைங்க கலங்காமல் யார் இதை பார்க்கப் போறா என்று கள்ளத்தனம் செய்ததை நமது ரசிகர்கள் கண்டுபிடித்து விட்டார்கள்.
அந்தக்காலத்தில் கள்ளன் போலீஸ் ஆட்டம் சின்னக்குழந்தைகளிடம் மிகவும் பிரபலம். இதில் நம்ம கைபிள்ளைங்க விளையாடினால் கள்ளனைத்தான் தேர்ந்தெடுப்பார்கள். ஒவ்வொரு படத்திலும் கள்ளத்தனம் செய்வதை வாடிக்கையாக வைத்திருந்தார்கள்
பொய்யும் புரட்டும் துணையாய் கொண்டு பிழைப்பது கைபிள்ளைங்க மட்டுமல்ல அவர்கள் ஐயனும் இந்த திருட்டுத்தனத்துக்கு உதவி செய்வார். காசு கொடுத்து தியேட்டர் வாங்கலாம், விருது வாங்கலாம் ஆனால் சாதனையை வாங்க முடியுமா? எப்போதுமே குறுக்கு வழியில் வெற்றி பெற முயற்சி செய்து பின்னர் தோல்வியடைவதையே வாடிக்கையாக வைத்திருப்பார்கள்.
ஐயனோ கஞ்சத்தனத்தில் "மாந்தோப்பு கிளியே" சுருளியுடன் போட்டி போடுபவர்.
இந்த டிக்கெட் கிழிப்பது அதற்கு தனது சொந்த தியேட்டரை பயன்படுத்துவது போன்ற மொள்ளமாரித்தனம் ஒன்று விடாமல் செய்வார். படம் அவர் தியேட்டரில் 100 நாட்கள் ஓட்டி விட்டால் தனது மார்க்கெட்டை ஸ்டெடி பண்ணிக்கலாம் என்று தனக்குத்தானே சாதனையை உருவாக்குவதில் வல்லவர். இருக்கும் ஒன்றிரண்டு தயாரிப்பாளர்களும் எப்ப இவரை விட்டுத் தொலையலாம் என்று காத்திருப்பதை உணர்ந்து தனக்குத் தானே சாதனை செய்து கொள்வது பின்னர் விழா எடுப்பது என்று இதுபோன்ற சில்லரை விஷயங்களில் ஈடுபட்டு தனக்கு மார்க்கெட் இருப்பதாக பீலா விட்டு ஓட நினைக்கும் வசதியுள்ள தயாரிப்பாளரை அமுக்கி விடுவார்.
அப்படியும் பாலாஜி இவரை வைத்து படமெடுத்தால் நாம் காலி என்பதை உணர்ந்து சரி ரஜினியை கூட வைத்து நடிக்க
வைத்தால் ரஜினியின் மார்க்கெட்டை வைத்து தப்பி விடலாம் என்று "விடுதலை" என்றொரு படத்தை எடுத்தார். ஹிந்தியில் வந்த குர்பானி மெகா ஹிட் படத்தை அதிக காசு கொடுத்து வாங்கி தமிழில் எடுக்க ஐயோ பாவம், தோல்வி படம் கொடுக்காத ரஜினி கூட பயங்கர தோல்வியை தாங்க வேண்டிய சூழ்நிலை கணேசனால் உருவானது.
கடைசி முயற்சியாக "குடும்பம் ஒரு கோவில்" திரைப்படத்தை எடுத்தது கூட யாருக்கும் நினைவிருக்காது. அதை திரையிட்ட ஞாபகமே இல்லை. அத்தோட சிவாஜியை விட்டு தலை தெறிக்க ஓடியதில் கொஞ்சம் நெஞ்சு வலி வந்ததாக கேள்வி. அதோடு இனி படங்கள் கணேசனை வைத்து எடுக்க முடியாது என்று அத்தோடு நிறுத்திக் கொண்டார். எந்த ஊரிலாவது இவ்வளவு பெரிய உருண்டை போலீஸ் அதிகாரி. இருப்பாரா என்று தெரியவில்லை.
ஹிந்தியில் வரும் அம்ஜத்கான் உருவத்தில் உருண்டையாக இருந்தாலும் நடிப்பில் தூள் கிளப்புவார். ஆனால் நம்ம கணேச உருண்டை பண்ணுகிற சேஷ்டைகள் இருக்கே நடிப்புக்கே இலக்கணம் கிழித்த மாதிரியல்லவா இருக்கும். அதைப்பார்த்து பல
தயாரிப்பாளர்கள் பயந்து
போக் ரோடு திசைப்பக்கம் கும்பிடு போட்டு ஓடியதை எண்ணிப் பார்த்து
திருந்துங்க கைபிள்ளைகளே. கைபிள்ளைகளின் "கிழி விளையாடலை" வெளிச்சத்துக்கு கொண்டு வர உதவிய திரு சைலேஷ் அவர்களுக்கு விழி நிறைந்த பாராட்டுக்கள். நன்றி! நன்றி!.........ksr...
-
1947 ல் இந்தியா சுதந்திரம் பெற்றது.
அதே ஆண்டில் இந்திய திரையுலகமும் மக்கள் திலகம் வருகையால் ....
சுதந்திரம் பெற்றது...
இந்தியாவின் ஒழுக்கமான ஒரே கதாநாயகன் என்ற வட்டத்தை....
1947 ல் மக்கள் திலகத்தின்
ராஜகுமாரி காவியம் மூலம்
இந்திய சினிமா பெற்றது.
1947 மே மாதம் வெளியான ராஜகுமாரி மாபெரும் வெற்றியை தந்து தமிழ் சினிமாவின் முதல்வரானார்
மக்கள் திலகம்!
அதிலிருந்து
சரியாக 30 ஆண்டுகள் கழித்து...
1977 மே மாதத்தில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்று தமிழக கோட்டையில் முதல்வராக பதவி வகித்தார் புரட்சித்தலைவர்.!
முதல் படத்தில் பெரிய சாதனை என பீற்றிக்கொண்டவர்கள்...
50 ஆண்டும்..... நடித்தும் ....
காலம் தள்ளியும்...
ஒரு சட்டமன்ற உறுப்பினர் கூட ஆகாதவர்கள் எல்லாம் நம் இதயதெய்வத்தை வசைபாடி திரிக்கின்றனர் ....பாவம்....
இப்படியே இறுதி வரை
போகவேண்டியது தான்....
ராஜகுமாரில் கடைசி காட்சியில்
மக்கள் திலகம் ராஜகுமாரனாக பதவியேற்பார்...
அதே 1977 ல் உண்மையாகியது...
இது தான் தலைவரின்
திரைப்பட சக்தியாகும்...
ஆனால் பராசக்தி நாயகனுக்கு
திருவையாறு தோல்வியை
1989 ல் மரண அடியாக கொடுத்தது...
115 படநாயகனின் வெற்றி பெரியதா...
300 பட நாயகனின் தோல்வி பெரியதா...
உலக சரித்திரத்தில் சினிமாவில்
இருந்து குறைந்த காலத்தில்....
ஆட்சியை பிடித்து மூன்று முறை முதல்வராகிய பெருமை....
நிகழ்வு...சரித்திரம்......
மக்கள் திலகம் என்னும் மாபெரும்
தனி கதாநாயகனுக்கே பொருந்திய சகாப்தமாகும்!
தலைவர் பதவி ஏற்ற 1977 ல் சென்னையில் வெளியான ராஜகுமாரி
திரைப்பட விளம்பரம்...
என்ன ஒரு பொருத்தம் பாருங்கள்.............ur...
-
திருமுருக வாரியார் குரல் ...
தெய்வத்தின் திருக்குரல்!
திருநீறு பூசிய நெற்றியும், வள்ளி மணாளன் முருகன் பெயர் மணக்கும் நாவும் கொண்ட தமிழ்க்கடல், சமயத்துறையில் பழுத்த பெரியார் ஒருவர், ராமாவரம் தோட்டத்திற்கு மக்கள் திலகம் எம்.ஜி.ஆரைக் காணச் சென்றார். வாசலில் காத்திருந்து, வாயிலும் நாவிலும் இதயத்திலும் வற்றாத அன்பினை வார்த்தைகளாலும்,முகமலர்ச்சியாலும் காண்பித்து, உரிய மரியாதையுடன் வரவேற்று உள்ளே அந்தப் பெரியவரை அழைத்துச் சென்றார் எம்.ஜி.ஆர்.
தமிழ்மலைக்கு தமிழகத்தின் மணம், மலர் மாலை சூட்டுகின்றது. பெரியவரை அமரவைத்து, சிற்றுண்டியைத் தன் கையினால் பரிமாறுகிறார் எம்.ஜி.ஆர். அன்போடு உணவு படைத்தவரின் அகம்குளிர , தமிழ்ச் சமயப் பெரியவர் செவிக்கு விருந்து படைக்கின்றார். இருவரும் அதன்பின்பு பல கருத்துக்களைப் பற்றி உரையாடிக் களிக்கின்றனர். பெரியவர் புறப்படுகிறார். வாசல்வரை வந்து எம்.ஜி.ஆர். அவரை வழியனுப்பி வைக்கிறார்! கார் ராமாவரம் தோட்டத்திடம் விடைபெற்று , புறப்படுகின்றது திணறியபடி! காரணம்? உள்ளே இருப்பவர்கள் கனம்!
எம்.ஜி.ஆரைப்பற்றி அந்தப் பெரியவர் கருத்து என்னவென்று அறிவதற்கு உடன் வந்தவர்களுக்கு ஆசை! தங்கள் விருப்பத்தை வினாவாகத் தொடுத்தனர். " எம்.ஜி.ஆரை எல்லோருமே பாராட்டுகிறார்கள் . நானும் அவரைப்பற்றி நன்றாகத் தெரிந்து வைத்திருக்கிறேன். ஆனால் , என்னால் மற்றவர்களைப்போல் பாராட்ட முடியவில்லை" என்றார் அந்தப் பெரியவர்.
ஏன் கேள்வியை எழுப்பினோம் என்று கேட்டவர்கள் முகம் கூம்பியது! " என்ன .... அய்யா .... இப்படிச் சொல்லிவிட்டீர்களே! " என்றனர் பொறுக்க முடியாத மனக்குமுறலோடு! " ஆமாம் ... அப்படித்தான்! " என்றார் மீண்டும் அந்தத் தமிழ்ப் பெரியார் சிரித்தபடி! உடன் வந்தவர்கள் காரை நிறுத்தி, அவரைக் கீழே இறக்கிவிடவில்லை! காரணம்? அவர் அவ்வளவு சாதாரணமானவரல்ல ! அருகில் இருந்த மற்றவர்களும் அத்தனை மோசமானவர்களல்ல!
சமயத்துறையில் மாமேதையாகத் திகழ்பவர், எம்.ஜி.ஆரை எப்படிப் பாராட்டப் போகின்றார் என்று அறிய நினைத்தவர்க ளுக்குப் பெரிய ஏமாற்றம்!
' திரு ' என்றால் செல்வம் !
' முருகு ' என்றால் அழகு !
' கிருபை ' என்றால் கருணை !
அழகு தமிழ்ச் செல்வத்தைக் கருணையுடன் வாரி வாரித்தருபவர் .... அதனையே பெயராகக் கொண்ட திருமுருக கிருபானந்த வாரியார், இப்படிக் காலை வாரிவிடுவார் என்று அவர்கள் எதிர்பார்க்கவில்லை . அமைதியாகச் சிந்தித்தனர்! வாரி வாரி வழங்குவதில் பாரியாய் விளங்குபவரான எம்.ஜி.ஆர் . குறித்து , திருமுருக வாரியார் கூறுவதில் ' ஏதோ விஷயம் இருக்க வேண்டும்! ஏனெனில் , அவருக்கு விஷமம் செய்யத் தெரியாது என்று நினைத்தனர்.
கந்தவேலை. எந்த வேளையும் துதிக்கும் அந்தத் தமிழ் மலையிலிருந்து கருத்துத்தேன் அருவி கொட்டப் போகின்றது. வேடன், விருத்தனாக , வள்ளியிடம் முருகன் வேடமிட்டு வந்து வேடிக்கை காட்டியதைப்போல் ' திருமுருக ' வாரியார் விளையாட்டுக் காட்டுகின்றார் என்பதை அவர்கள் புரிந்து கொண்டனர். வாரியார் என்ன கூறினார்?
"எம்.ஜி.ஆர். பாராட்டுக்கு உரியவரல்ல. மற்றவர்களைப்போல் அவரை நான் பாராட்ட மாட்டேன்." உண்மைதானே! மற்றவர்கள் போல் பாராட்ட மாமேதை , சமயப் பெரியார் வாரியார் எதற்கு?
சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளைகளுக்கு இங்கு என்ன குறைவா? எதையாவது எதிர்பார்த்து, எப்போதும் எதிரில் நின்று காக்கையாய் கரைபவர்கள், எங்கும் இருக்கத்தான் செய்கிறார்கள்! அவரைப் புரிந்து கொள்ள வேண்டியவர்கள், 'ஏதாவது ஒரு கூட்டம் அருகில் இருக்கட்டும் ' என்று விரட்டாமல் விட்டு வைத்திருக்கிறார்களோ!
" அய்யா ... நீங்கள் சொல்வது புரியவில்லை ... ” அருகில் இருந்த கருத்து மலர்களைத் தொடுக்க வினா தொடுத்தனர்.
" பாம்புக்குக் குடிக்க என்ன ஊற்றி வைக்கிறோம்?" வாரியாரும் கேள்வி கேட்டார் . " பால் " - பதில் வந்தது.
" பசுவுக்குக் குடிக்க நாம் என்ன ஊற்றுகிறோம்? " கேள்வி தொடர்கின்றது. “ கழனித் தண்ணீர்! ”
“பால் ஊற்றுகின்ற நமக்கு , அதைக் குடித்துவிட்டு , பாம்பு என்ன திருப்பித் தருகிறது? " “ விஷத்தை "
“நாம் பால் ஊற்றுகின்ற பாம்புக்குத் தண்ணீரும் , பசுவுக்குப் பாலும் ஊற்றி வைத்தால் பாம்பு பால் தருமா? பசு விஷத்தைக் கொடுக்குமா? "
"அது எப்படி அய்யா கொடுக்கும் ? பசு பால் தருவதும், பாம்பு விஷத்தைத் தருவதும் அவை ஒவ்வொன்றின் இயற்கைத் தன்மை . பிறவியின் தன்மையே அதுதான் . படைப்பை மாற்ற முடியுமா .... அய்யா ... "
"அதைப்போலத்தான் எம்.ஜி.ஆரும் ! அவருக்கு இளம் பருவத் திலேயே தருமம் செய்கின்ற தன்மை உண்டு என்று கேள்விப்பட்டிருக்கிறேன் . நல்லது செய்வது அவர் உடலிலேயே ஊறிக்கிடக்கும் பண்பு. தருமம் செய்வது இயற்கையிலேயே அவருக்குப் பிறவியிலேயே வந்த பழக்கம் . பசு பால் தருவதற்குப் பாராட்டுக் கூட்டமா போடுகின்றோம் ? பாம்பு விஷம் கக்குவதற் குக் கண்டனத் தீர்மானம் போட்டுப் பயன் என்ன ? அதெல்லாம் போகட்டும் ..... அம்மா ... பாசத்துடன் பிள்ளைக்கு உணவு ஊட்டுகிறாள் . ' தேங்ஸ் ' என்று மகன் சொல்லும் பழக்கம் நம்ப ஊரில் உண்டா? மகனுக்குத் தாய் செய்வதற்குப் பாராட்ட வேண்டுமா?" வாரியார் கேட்கிறார் . மௌனம் அங்கே பதிலாகிறது! “
வள்ளல்களையும் , இல்லாமையைப் போக்கும் அன்புள்ளம் கொண்டவர்களையும் என்றும் மக்கள் , இதயத்தில் வைத்துப் போற்றுவார்கள் . உலகம் உள்ளவரை எம்.ஜி.ஆர் . புகழ் நிலைத்திருக்கும். வாரியார் குரல் தெய்வத்தின் திருக்குரலாக ஒலிக்கிறது .... !
தர்மதேவன் எம்.ஜி.ஆர் . ஆட்சி , நல்லோர் இதயத்தில் தொடர்கின்றது.
நன்றி : அண்ணன் "நாகை" தருமன் .........
-
# பொது உடைமை வாழ்வியலின் களஞ்சியம் நம் மனித தெய்வம் பொன்மனச் செம்மல் #.........
சினிமாவை 1885 இல்
பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த திரு. லூயி பிரின்ஸ் அவர்கள் கண்டு பிடித்த போது
அதை ஒரு சாதாரண மான பொழுது போக்கு சாதனமாக மட்டும்தான் நினைத்திருப்பார்,
ஆனால் சினிமா என்பது மிகப்பெரிய ஊடகம், அதன் மூலம் உலகையே திரும்பிப் பார்க்க வைக்க முடியும், அது மட்டுமல்லாமல் நம்முடைய உரிமைகளுக்கான ஒரு போராட்டக் களமாகக் கூட மாற்ற முடியும் என்பதை மேலை நாடுகளில் திரு.மார்லன் பிராண்டோ, திரு. சார் லி சாப்ளின் போன்ற மாபெரும் தலைவர்கள்(சாதாரண நடிகன் என்று எழுதி அவர்களை கொச்சைப் படுத்த விரும்பவில்லை )நிரூபித்தார்கள்,
கறுப்பின மக்களின் உரிமைகளுக்காக சினிமா என்னும் ஊடகத்தின் மூலம் கடுமையான போராட்டங்களை நடத்தினார் திரு. மார்லன் பிராண்டோ அவர்கள், அது போலவே நகைச்சுவை கடவுளாக பார்க்கப் பட்ட சார்லி அவர்கள்
சுரண்டப் படும் தொழிலாளர்களுக்காக தன் ஊமைப் படங்களை போர்க்களமாக மாற்றிக் காட்டியவர்,
இந்தக் கருத்துகளை நான் முன் வைக்க என்ன காரணம் என்று அனைவரும் நினைக்கலாம்,
நம்முடைய தமிழ் சமுதாயத்திலும் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக தன்னுடைய திரைப்படங்கள் மூலம் மிகப்பெரிய மறுமலர்ச்சிக்காக போராடியவர் நம் தங்கத் தலைவர், நிருத்திய சக்கரவர்த்தி மக்கள் திலகம் அவர்கள் என்று சொன்னால் மிகையாகாது...
காரல் மார்க்ஸ், இங்கர் சால், சவுல் பெல்லோ போன்ற பேரறிஞர்கள் தன்னுடைய எழுத்துக்கள் மூலம் மக்களை எப்படி செம்மைப் படுத்தினார்களோ அதே போல் நம் கொள்கை தங்கம் தன் திரைப் படங்களில் எழுச்சிக் கருத்துக்களை முழங்கியதன் விளைவுதான் அடிமையாய் கிடந்தவன் கூட நம்மாலும் நிமிர முடியும் என்று துணிவுடன் எழுந்து
நிற்க முடிந்தது...
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் தன் பொது உடைமை கருத்துக்களை மக்களிடம் சொல்லத் துடித்த போது வாராமல் வந்த மாமணி போல் வந்து உதித்தார் நம் தங்கம்,
"அரசிளம் குமரி"யில்
சின்னப் பயலை சேதி கேட்கச் சொன்னவர் திருடாதேயில் திருடாதே பாப்பா என்று அறிவுரை சொன்னதோடு நில்லாமல் வறுமை நிலைக்கு பயந்து விடாதே திறமை இருக்கு மறந்து விடாதே என்று தன்னம்பிக்கை, தைரியம் இவைகளையும் சேர்த்தே ஊட்டி விட்டார்.
நாடோடி மன்னனில்
" மாடா உழைச்சவன் வாழ்க்கையிலே பசி வந்திடக் காரணம் என்ன மச்சான் " என்று கேள்வி கேட்க வைத்து " அவன் தேடிய செல்வங்கள் வேறு இடத்திலே சேர்வதனால் வரும் தொல்லையடி " என்று பதிலும் சொன்னார்.
" நாடு அதை நாடு
அதை நாடாவிட்டால் ஏது வீடு " என்று நாட்டுப் பற்றை ஊட்டி யதோடு நின்று விடவில்லை,
" உடைப்பதை உடைத்து வளர்ப்பதை வளர்த்தால் உலகம் உருப்படி ஆகும் என்று புரட்சிக் கருத்தை விதைக்கவும் தயங்கவில்லை...
வெறும் கருத்துக்களை மட்டும் சொன்னால் நம் ஜனங்கள் கேட்க மாட்டார்கள் என்று தலைவருக்கு நன்றாகத் தெரியும்,
அதனால்தான் இந்த கசப்பு மருந்தையெல்லாம் கொஞ்சம் தேன் தடவி
ரசிக்க வைத்து யோசிக்க வைத்தார்,
கோயில் என்பது அனைவருக்கும் பொதுவானது அதில் உயர்ந்தவன், தாழ்ந் தவன் என்ற ஏற்றத் தாழ்வு கூடாது என்னும் பெரியாரின்
கருத்தையும் " பெரிய இடத்துப் பெண்ணில் " சுட்டிக்காட்டவும் தயங்கவில்லை ,
சினிமா என்பது மிகப்பெரிய சக்தி அதை சரியான முறையில் கையாண்டால் எவ்வளவு பெரிய வெற்றியையும் சுலபமாக அடையலாம் என்பதை நிரூபித்தவர் நம் தலைவர்,
அதனால்தான் அவரின் உடல் இந்த மண்ணை விட்டு மறைந்தாலும் இன்று வரை மக்களின் நெஞ்சில் அழியாத கல்வெட்டு போல நிலைத்து வாழ்ந்து கொண்டிருக்கிறார்.......
வந்தவரை லாபம் என்று நடிப்பு என்ற பெயரில் கூட சமுதாயத்தை கெடுத்து விடக்கூடாது என்று வாழ்ந்து மறைந்தவர் நம் தலைவர்,
ஆயிரம் பகுத்தறிவுப் புத்தகங்கள் உண்டாக்காத தீப் பொறியை தம் படங்களின் மூலம் மக்கள் உள்ளங்களில்
பெரு நெருப்பு போல் எரியச் செய்தவர் நம் தலைவர்,
அப்படிப்பட்ட ஒரு தலைவனுக்கு இந்த எளியவனும் ஒரு ரசிகனாய் இருப்பதற்கு எனக்கு கொடுத்து வைத்திருக்கிறது என்பதே என்னுடைய வாழ்நாள் மகிழ்ச்சியாக இருக்கும் என்பது உறுதி !
தலைவரின் பக்தன் ...
J.Jameswatt...
-
நாடு அதை நாடு!!
--------------------------
எம்.ஜி.ஆர்!
அரசியல் சித்தர்!
எம்.ஜி.ஆர்!!
ஒருவர்,,தாம் நினைப்பது சரியானபடி இருந்துவிட்டால் பஞ்ச பூதங்களும் அவன் ஆணைக்கு உட்படும் என்பதற்கான விளக்கவுரை!
உயிரோடு இருப்பவர்கள் பேரில் எந்த மண்டபமோ திட்டங்களோ இருத்தல் கூடாது என்று எம்.ஜி.ஆர் மிக திட்டமாகவே எண்ணினார்!
எம்.ஜி.ஆர் மட்டும் புகழுக்கு ஆசைப்பட்டு அன்று அரைக் கண் அசைத்திருந்தால் கூடப் போதும்--
அன்றைய மத்திய அரசாலேயே பலவற்றுக்கு எம்.ஜி.ஆர் பெயர் சூட்டப்பட்டிருக்கும்!
சென்னை ராமச்சந்திரா மருத்துவ கல்லூரி!
தன் பெயர்,,தானிருக்கும் வரை சூட்டப்படக் கூடாது என்ற தமது பலத்த பிடிவாதத்தையும் மீறி அக்கல்லூரி எம்.ஜி.ஆர் பெயரில் திறக்கப்பட இருந்தது!
ஆனால்??
அன்றைய காலை 10 மணிக்கு அது துவக்கப்பட இருந்த அன்று தான்--
விடியற்காலையில் வேந்தர் விடை பெறுகிறார்!!!
மறைந்தும் மறையாதபடி தன் பெயரோடு!!
மருத்துவத்தை ஜெயித்த மகிமைக்காக--
மருத்துவக் கல்லூரி பெயரிலேயே நித்தம் மணம் பரப்பி!!
அவன் ஒரு அரசியல் சித்தன் என அமைந்ததை அடுத்தொரு நிகழ்வில் காணலாமா?
ஏழைகளுக்கு இரண்டு ரூபாய்க்கு அரிசி வினியோகம் நடை பெற்ற காலம் அது!
அமெரிக்காவில் எம்.ஜி.ஆர் அனுமதிக்கப்பட்ட போது பத்து பைசா உயர்த்தலாமா என்று எண்ணுகிறார் அப்போது இங்கே பொறுப்பில் இருந்த நாவலர்!
அமெரிக்காவிலிருந்தபடி அதற்குத் தடை விதிக்கிறார் எம்.ஜி.ஆர்!!
ஏழைகளுக்கு இன்றியமையாத அரிசியின் விலை இரண்டு ரூபாய்க்கு மேல் ஒரு பைசா கூட உயர்த்தப்படக் கூடாது!!!
இப்போது சொல்லப் போவதை ஆழமாக உள் வாங்கினால் நிச்சயம் உங்கள் கண்கள் மாத்திரமல்ல,,நெஞ்சமேக் கலங்கும்!
அன்றைய சட்டசபையின் கேள்வி நேரம்!
தி.மு.க தரப்பில் எழுப்பப்பட்ட கேள்வி--
மத்திய அரசால் வழங்கப்படும் அரிசிக்கான மானியம் குறைவாக இருக்கும் காரணத்தால் ரேஷனில் அரிசி விலை உயர்த்தப்படுமா??
ஆவேசமாக எழுந்து பதில் சொல்கிறார் முதல்வர் எம்.ஜி.ஆர்--
அரிசியின் விலை அப்படி ஏற்றப்பட்டு தான் தீர வேண்டும் என்ற நிலை வந்தால்??
அன்று எதிர்க் கட்சித் தலைவரும் என் நண்பருமான திரு கருணா நிதி அவர்கள் ஒரு மாலையோடு ராமாவரம் தோட்டத்திற்கு வரலாம்??
காரணம்??
அன்று இந்த ராமச்சந்திரன் உயிரோடு இருக்க மாட்டான்???
எத்தகைய அன்பைத் தம் மக்களிடம் வைத்திருந்தால் ஒரு தலைவன் இதயத்திலிருந்து இத்தகைய வார்த்தைகள் ஜனித்திருக்கும்??
மயிர் நீப்பின் உயிர் வாழாக் கவரி மான்!!!
அந்தத் தலைவன் இன்னமும் மறையவில்லை!
இறவாது வாழ்கிறான் என்பதற்கு அத்தாட்சியாகத் தானோ--
அவனது அரசு இன்றுவரை வழங்குகிறது--
இலவசமாய் அரிசியை ரேஷன் கடைகளில்???
எம்.ஜி.ஆர்--
நாட்டையே தன் குடும்பமாக நினைத்தார்!
இன்னொருவர்--
தன் குடும்பத்தையே நாடாக நினைத்தார்!!
உண்மை தானே உறவுகளே??? Vt...
-
அரிய படம் உடன் ஒரு அரிய தலைவர் செய்தி..........
"பல்லாண்டு வாழ்க" தலைவர் நடித்த படத்தின் மூலம் ஐயா சாந்தாராம் அவர்களின் படைப்பில் இருந்து வந்தது.
சாந்தாராம் அவர்களின் படைப்பை தமிழில் தான் நடிக்க விரும்பி இயக்குனர் சங்கர் அவர்களை அவருடன் தொடர்பு கொண்டு உரிமை பற்றி பேச அனுப்புகிறார் தலைவர்...
தலைவர் அனுப்பிய விவரம் சொல்லாமல் அவர் பட உரிமை தமிழில் எடுக்க கேட்பதாக எண்ணிய சாந்தாராம் மறுக்க...
மீண்டும் இங்கே வந்து தலைவர் இடம் சொல்ல
நீங்க எனக்கு நான் நடிக்க என்று சொல்லுங்க ...
அவர் சொன்ன படி சங்கர் சொல்ல....அவரும் அருமை இந்த கதையில் நடிக்க அவரை விட சிறந்தவர் இந்தியாவில் இல்லை சம்மதம் என்று சொல்ல...
தலைவர் நிரப்ப படாத காசோலை உரிமைக்கு கொடுக்க மீண்டும் அவர் மறுக்க ஒரு வழியாக சங்கர் அவர்களே ஒரு பெருந்தொகையை அவர் கைப்பட நிரப்பி அவர் மேசை மீது வைத்து விட்டு திரும்ப...
இதை போல நிகழ்வுகள் இன்றைய தமிழ் அல்லது வேறு எந்த மொழி படங்களில் நடக்குமா.....அவர் தான் தலைவர்...
படத்தில் இடம் பெற்ற இன்னும் ஒரு சுவை யான சம்பவம்....6 குற்றவாளிகளையும் தலைவர் திருத்த கூட்டி வர அவர்கள் அனைவரும் ஒரு நாள் தப்பி விட...
அவர்களை கண்டு பிடித்த தலைவர் அவர்களை அடிப்பது போல ஒரு காட்சியில் யாருக்கும் அடி படாமல் அடி பட்டது போல காட்சிகள் அருமையாக வர...
சாந்தாராம் படத்தில் நடித்த ஹீரோ பெயர் படம் பெயர் தெரியவில்ல...
தெரிந்தவர்கள் சொன்னால் மகிழ்ச்சி.
அந்த படத்தின் ஹீரோ இதே காட்சியில் அவர் எண்ணப்படி அந்த 6 பேர்களை அடிக்க...
அவர்கள் பெருத்த காயங்கள் உடன் அந்த ஹீரோ மீது வருத்தம் கொண்டு சண்டை நடந்தது கிளை செய்தி.
அவர்தான் தலைவர்.
காட்சி உண்மையாக இருக்கும்...ஆனால் யாருக்கும் பாதிப்பு இருக்காது...
வாழ்க தலைவர் புகழ்.
நன்றி உங்களில் ஒருவன்....தொடரும்...
தலைவர் என்ன ஒரு அழகு பழைய படத்தில்.
தலைவருக்கு யாரை எங்கே எப்படி முறையாக அடிக்கணும் என்று தெரியும்...
உண்மையாக அடி பட்டவர்கள் வலிக்காதது போல நடிப்பது...நடித்தது அதை விட சூப்பர்...
அது பொது வாழ்வில் கூட இருக்கலாம்...
அந்த ஹிந்தி படத்தின் கதாநாயகன் சாந்தாராம் அவர்கள் தான் என்று தெரிந்து கொள்ள...மிக்க மகிழ்ச்சி....
பதிவுக்கு பின் நன்றி...
தங்கவேல் அண்ணன் சொன்ன மாதிரி படம் எடுக்க தெரிந்த அளவு அவருக்கு சரியா அடிக்க தெரியலே என்று எடுத்து கொள்வோம்...
பதிவில் பதில் உதவி
அருமை தலைவர் இதயம் சோழ வேந்தன் அவர்கள்...மிக்க நன்றி.
அடுத்து சாந்தி அவர்கள் ..மலேசிய தலைவர் உள்ளம் நன்றி....
மாடக்குளம் பிரபா அண்ணன் அவர்கள் நன்றி...
-
எம்.ஜி.ஆர் புகழ் இன்றும் நிலைத்திருக்க காரணம் என்ன?
இந்தி திரையுலகம் சிலரின் கைப்பிடிக்குள் சிக்கியிருக்கிறது; பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங்கின் தற்கொலைக்கு அதுதான் காரணம் என்று குற்றசாட்டுகள் எழுகின்றன.
இங்கே தமிழ் திரையுலகம் ஒரு தனி மனிதன் இரும்பு பிடியில் முப்பது வருடங்கள் சிக்கியிருந்தது.

1925ல் நடிக்க வந்த எம்.ஜி.ஆர் நடிப்பு துறையில் ஒரு இடம் பிடிக்க 22 வருடங்கள் போராடினார். 1947ல் திரை கதாநாயகன். 1958ல் வசூல் சக்ரவர்த்தியாக உருவெடுத்தபோது அவருக்கு வயது 41.
1960 களில் எம்.ஜி.ஆர் தனக்கான இடத்தை பிடித்தார். உதவிகள், துரோகங்கள், ஏமாற்றங்கள், ஏற்ற இறக்கங்கள் என 35 வருடங்கள் போராடி பெற்ற இடம்.
இடத்தை பிடித்ததும் அதுவரை ஒதுக்கியவர்களை ஓரத்தில் வைத்தார். உதவியவர்களை மதித்தார். மறுத்தவர்களை மண்டியிட செய்தார். பட்டியலில் இயக்குனர் ஸ்ரீதர், பாடகர் டி.எம்.சௌந்தர ராஜன், நடிகர்கள் அசோகன், சந்திரபாபு, காதல் இளவரசன், சூப்பர் ஸ்டார் என்று பலர்.
அந்த காலங்களில் மேற்படி விஷயங்களுக்கு யாரும் சிபிஐ விசாரணை கேட்கவில்லை.
மாறாக "வாத்தியார் தனது வகுப்பை எப்படி கட்டுக்கோப்பாக வைத்திருக்கிறார்" என்று ரசிகர்கள் புளகாங்கிதம் அடைந்தார்கள். அவரது கீர்த்தி மேலும் கூடியது!
எம்.ஜி.ஆரின் புகழ் என்பது தெளிவாக கட்டமைக்கப்பட்ட ஒரு பிம்பம். ஒவ்வொரு அங்குலமாக அவரே செதுக்கியது.

பிரஷாந்த் கிஷோர் படித்த பள்ளியில் எம்.ஜி.ஆர் பெரிய வாத்தியார்
உயிருடன் இருந்தவரை அசைக்கமுடியாத பிரபலமாக இருந்ததற்கு அவரது "டகால்ட்டி" வேலைகள் காரணமாக இருந்திருக்கலாம்.
ஆனால் இறந்தபின்னரும் நினைவில் நிற்கும் வகையில் எம்.ஜி.ஆரின் புகழ் நிலை நாட்டப்பட்டிருக்கிறது.
சமீபத்தில் இறந்த பெருந்தலைகளை மறந்த அரசியல் களம், 90ஸ் கிட்ஸ்கள் முகம்கூட பார்த்திராத இந்த மனிதனை இன்னும் பேசுகிறது. வணங்குகிறது.
எவரையும் சந்தேக கண்ணோடு பார்க்கும் எம்.ஜி.ஆரின் குண நலன்கள், வறுமையில் இளமையை தொலைத்த அனைத்து ஏழை சிறுவர்களுக்கும் பொதுவானவை.
எம்.ஜி.ஆர் பிறந்த இரண்டாவது வயதில் தந்தையை இழந்தார். வறுமையில் வீழ்ந்த குடும்பத்தில் வாழ்ந்தார்.
சின்னங்சிறு வயதில் நாடக சபாவில் தனது தமையனுடன் சேர்க்கப்பட்டார் ராமச்சந்தர். "அன்னையை பிரியமாட்டேன், மேலே படிக்கவேண்டும்" என்று கதறி அழுதவரை, "உணவுடன் தங்குமிடம் கிடைக்கும்" என்று ஆறுதல் சொல்லி சபாவில் சேர்ந்துவிட்டார் அவரது தாயார்.
எந்த சபாவிலும் முன்னணி நடிகர்களுக்குத்தான் முதல் பந்தி. உப நடிகர்களுக்கு தனி பந்திதான்.
"தனி" பந்தியில் மீந்தியதை சாப்பிடும்போது ஒருவேளை அவர் தீர்மானித்திருக்கலாம் "எப்படியாவது முதல் இடத்தை பிடிக்கவேண்டும், யாருக்கும் அதை விட்டுத்தரக்கூடாது" என்று.
மக்கள் திலகமாக உருமாறிய பின்னாளில் அவரது வீட்டிற்கு வரும் அனைவரையும் அவரே "சாப்பிட்டீர்களா" என்று விசாரிப்பார்; சமபந்தியில் சாப்பிட வைப்பார் என்று பலரும் நினைவு கூறுகிறார்கள்.
எட்டு வயதில் உணவிற்காக தனது அம்மாவையும், கல்வியையும் பிரிய நேர்ந்தது அவர் வாழ்வின் முதல் துயரம். அது 50 வருடங்கள் கழித்து அவர் மாநிலத்தின் முதல்வரான போது மேம்படுத்தப்பட்ட மதிய உணவுத்திட்டமாக உருவெடுத்தது.
கேள்விக்குரிய நிர்வாகத்திறனுடன் நடத்தப்பட்ட அதிமுக ஆட்சியை அசைக்க முடியாத ஆட்சியாக மாற்றிய திட்டம் அது.

38 வருடங்களுக்கு முன்னால் இதே தேதியில் (18.07.1982) திருச்சியில் திட்டத்தை துவங்கி வைத்து பேசுகையில் இரு வேளை உணவுக்கு தன்னை பிரிய நேர்ந்த தனது அன்னையை ஒருவேளை நினைத்திருக்கலாம்..
"வேலைக்குப்போகும் ஏழை தாய்மார்கள் இனி தனது மகன் அங்கே வயிறார சாப்பிட்டுக்கொண்டிருப்பான்; சத்தான உணவு அவனுக்கு கிடைக்கிறது என்று நிம்மதியுடன் அவர்கள் வேலையை தொடரலாம்"
திரையின் உச்ச நட்சத்திரமாக இருந்தபோது எம்.ஆர்.ராதாவால் சுடப்பட்டு பிழைத்து வந்தார் எம்.ஜி.ஆர். கழுத்தில் கட்டுடன் வெளிவந்த அவரது போட்டோ அவர் ரசிகர்களை வெறி கொள்ள செய்தது. ஒரு தேர்தலையே வெற்றிகொள்ள வைத்தது.
ஆனால் எம்.ஜி.ஆரால் பழைய குரலில் பேசமுடியவில்லை. எதிர்தரப்பினரால் பெரும் கேலிக்குள்ளானார். இருந்தாலும் அவருக்கேயுரிய பிடிவாதத்துடன் கடைசிவரை சொந்த குரலில் பேசி நடித்தார்.
"ஊமையன்" என்று கேலி செய்த குரல்கள் தன்னை காயப்படுத்தியதாக அவர் என்றுமே காட்டிக்கொள்ளவில்லை. ஆனால் அவரது மரணத்திற்கு பின் வெளியான உயிலில் தனது சொத்தில், ராமாவரத்தில் 6.5 ஏக்கர், ஊமை குழந்தைகளுக்கான பள்ளிக்கென்று எழுதி வைத்திருந்தார்.
எம்.ஜி.ஆர். புகழ் இன்றும் நிலைத்திருக்க என்ன காரணம்?
தனக்கென ஒரு இடத்தை உருவாக்க நடத்திய நீண்டதொரு போராட்டம்.
கிடைத்த இடத்தை தக்க வைக்க செய்த தந்திரங்கள், தளராத முயற்சிகள்.
ஏற்பட்ட காயங்களை இறுதி நாள் வரை மறக்காத குணம்.
தான் பட்ட கஷ்டத்துக்கு, சமூகத்தை பழிவாங்க முற்படாமல், அந்த சிரமங்களை ஏழை மக்கள் படாமலிருக்க முயற்சி மேற்கொண்ட பொன்மனம்.
"கோடிகள் சம்பாதித்து, பாதியை தர்மத்துக்கு எழுதி, மீதியையும் தனது குடும்பத்துக்கு நிரந்தரமாக தராமல், அவர்கள் காலத்துக்கு பின்னர் கட்சிக்கும் பொதுவுக்கும் வருமாறு உயிலெழுத ஒரு மனம் வேண்டும். சென்னை நகருக்குள் ஏக்கர் கணக்கில் வாங்கிய தனது சொத்துக்களை எழுதிவைத்த ஒரு தலைவனை இனி பார்க்க முடியுமா" என்று அவர் ரசிகர்கள் கேட்கிறார்கள்.
தான் கட்டமைத்த பிம்பமானாலும் அதாகவே மாறிப்போனார் எம்.ஜி.ஆர்.
தமிழகமும் அந்த புகழ் பிம்பத்திலிருந்து வெளிவர விரும்பாமல் அதை நிரந்தரமாக்கிவிட்டது.

நன்றிகள்: ஆர். முத்துகுமாரின் "வாத்தியார்" நூல் | எம்.ஜி.ஆர் எழுதிய "நான் ஏன் பிறந்தேன்" | கூகிள் |*M. G. Ramachandran filmography*|*MGR: The original 'ladies man' | India News - Times of India*|*mgr-advice-to-rajini-kanth*|*M.G.R. Home and Higher Secondary School for the Speech and Hearing Impaired*|
Quora App. Q&A
-
அண்ணாவுக்காக முதல் சொட்டுக் கண்ணீர்?
பத்திரிகை ஆசிரியர் தமிழ்வாணன் பாராட்டு என்பது சாதா ரணமானதல்ல என்கின்ற காலத்தில்(1965) , அவர் எழுதிய புத்தகத்தில் குறிப்பிடத்தக்க வரிகள் இவை:
"சென்னையில் மழையில் நனைந்து குளிர் எடுத்துப் போய், அணு அணுவாகச் செத்துக் கொண்டிருந்த ரிக்ஷாக்காரர்களுக்காக எம்.ஜி.ஆர் . மழைக்கோட்டுகள் கொடுத்தார். மயிலுக்கு போர்வையிட்டு, போர்த்தி விட்டு, மயிலை மூச்சுத்திணற வைத்த வள்ளல்களைத் தான் தமிழகம் சந்தித்திருக்கிறது.
ஆனால் , எம்.ஜி.ஆர் . நல்ல பகுத்தறிவோடு ரிக்ஷாக்காரர்களுக்கு மழைக்கோட்டு கொடுத்தார். அந்தப் பெரிய விழாவையும் அண்ணா அவர்களைத் தம் பக்கம் வைத்துக் கொண்டுதான் நடத்தினார் .
கலைவாணர் என்.எஸ்.கே.யின் புதல்விகளுக்கு எம்.ஜி.ஆர். தம் செலவில் திருமணம் நடத்தியபோதும் அண்ணாவையே தலைமை தாங்க வைத்துப் பெருமைப் பட்டிருக்கிறார். அண்மையில் "எங்க வீட்டுப் பிள்ளை" படத்தின் வெள்ளி விழாவின்போது கூட அவர் அண்ணாவை மறந்துவிடவில்லை.
இவ்வாறு தன் வாழ்வின் வெற்றிப்படிகளில் ஒவ்வொரு அடியை எடுத்து வைத்து வரும்போதும், மக்கள் திலகம் காஞ்சித்தலைவரை நினைக்கவும், வணங்கவும் தவறியதே இல்லை. அண்ணாவுக்குச் சென்னை நீதிமன்றத்தில் ஆறுமாதக் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டபோது அங்கேயே எம்.ஜி.ஆர் . விக்கி விக்கி சிறு குழந்தைபோல் அழுதுவிட்டார். இந்த நாட்டிலேயே அண்ணா பெற்ற தண்டனையை நினைத்து, முதல் சொட்டுக் கண்ணீர் உருண்டு வந்து விழுந்தது எம்.ஜி.ஆரின் கண்களிலிருந்துதான்.
அண்ணாவைத் தாங்கள் வளருவதற்காக மட்டும் சிலர் பயன்படுத்துவார்கள். ஆனால், எம்.ஜி.ஆர். வளர்ந்த பின்பும் அண்ணாவை மறக்கவில்லை. எம்.ஜி.ஆரின் அண்ணா பக்தியை யாராலும் கண்களால் பார்க்க முடியாது ; காதுகளால் கேட்க முடியாது ; இதயத்தால் மட்டுமே உணரமுடியும்."
கடைசியாகத் தமிழ்வாணன் குறிப்பிட்டுள்ள வரிகள் என் வாழ்க்கையின் அனுபவங்களாயின!
நன்றி : அண்ணன் "நாகை"தருமன்.........
-
After hearing the story and fights of MAKKAL THILAGAM MGR from my friends me and my younger brother our mother to take us for the movie.She got permission from my father and took us to Mekala theatre.As the theatre was House full,my mother took us to Bhuveswari theatre where Thiruvilayadal was running empty.Me and my brother got disappointed and were unhappy throughout the show.Second time she took us early.Again we could not get tickets.Only the third time we were able to see the movie.Wow what a movie my God!..........
-
எம் தலைவரின்
"எங்க வீட்டுப்பிள்ளை" காவியம் 1965 ல் திரைக்கு வந்த 15 தினங்களில் தமிழ்நாடு எங்கும் இந்தி எதிர்ப்பு போராட்டம் படு பயங்கரமாக நடந்தது.. பலர் துப்பாக்கி சூட்டில் மரணமடைந்தார்கள்.
கரூரில் 100 நாள் கடந்து ஒடவேண்டிய எங்கவீட்டுப்பிள்ளை
துப்பாக்கி சூட்டில் 6 பேர் மரணமடைந்ததால் 2 காட்சி தான்
ஒடியது.
அப்படியும் 50 நாள் ஒடியது.
மீண்டும் 3 மாதம் கழித்து எங்கவீட்டுப்பிள்ளை
56 நாள் ஒடியது வரலாறு...
இதுப்போல் பல ஊர்களீல் ...
இந்தி எதிர்ப்பு போராட்டத்தையும் மீறி மக்கள் திலகத்தின் எங்கவீட்டுப்பிள்ளை படைத்த இமாலய சாதனையை அந்த நேரத்தில் மட்டும் அல்ல
இன்று வரை தமிழ் நாட்டில் எங்கவீட்டுப்பிள்ளை பெற்ற முதல்வர் பதவியை....
பெண் நடை நடந்து
ஆணவ ஆட்டம் ஆடி....
தெருவிளையாடல் ஆடியும்..
போலி சிவன் வேடம் போட்டும்..
நான் அசைந்தால் ..சாந்தி...
புவனேஸ்வரி...கிரவுனும் ....
வசூல் இல்லாது ஒடும்...
என்ற ஆர்பாட்டத்தில்...
புராண பக்தி வேடம் போட்டும் முதல்வர் இல்லை...
எம்.ஜி.ஆர் ரசிகா உன் ஆணவம் பெரிதா என கேட்கும் அளவுக்கு அகந்தை கொண்ட நடிப்பு என்னும் சிவன் வேடத்தில்....
31.7.1965 ல் வெளியாகி...
31 தியேட்டரில் இழுத்து பிடித்து
50 நாளை ஒட்டி.....
அதில் 6 ஊர் மட்டமான
வசூலில் 100 நாள்....ஊர்கள்
குடந்தை 100 : 98,308.00
நாகர்கோவில் 100 : 84,720.00
கரூர் : 100. : 74,357.00
பாண்டி 100 :.98,068.00
தஞ்சை 100 : 1,02,313.00
மற்றும் நெல்லை 100 ஒட்டியும்
6 அரங்கு....
100 நாள் 6 லட்சத்தை கூட எட்டி பிடிக்க முடிய வில்லை
எல்லாமே மூதல் சென்டர் ஆகும்.
எங்கவீட்டுப்பிள்ளை
ஒவ்வொரு ஊரிலும் சைக்கிள் டோக்கன்... முறுக்கு... சோடா
விற்ற வசூலை கூட பலபடங்கள் ஒடியும் பெறவில்லை..
இதில் எங்க வீட்டுப்பிள்ளையுடன் போட்டிக்கு வந்த நால்வர் அணி படமான ""பழனி"" யும் அடங்கும்....
எங்கவீட்டுப்பிள்ளை பெற்ற வரலாறு காணாத வசூல் புயலினால்...
தெருவிளையாடல் உட்பட பல படங்கள் எங்க வீட்டுப் பிள்ளை திரையிட்ட அரங்கு என்னும் கடலில் மாற்றான் படம் ஒடும் தியேட்டரையே விட்டு அடித்து இழுத்து செல்லபட்டது..
1931ம் ஆண்டு
திரையுலகில் இருந்து.....
100 க்கு 100 வெற்றியை
1956 ல் மதுரை வீரன் பெற்றார்.
அதன் பின் ...
1958 ல் நாடோடி மன்னன் பெற்றார்...
அதன் பின் 7 ஆண்டுக்கு பிறகு
1965 ல் எங்க வீட்டுப்பிள்ளை பெற்றார்.
இந்த வரலாறு....
வசூல் சக்கரவர்த்தி என்னும் பட்டத்தை உண்மையாக
எல்லா ஊர்களிலும்
( சாந்தி குத்தகை ஒன்று
இரண்டு நீங்கலாக)
தன் காவியங்கள் மூலம் மூடிசூடிய
ஏகபோக சக்கரவர்த்தி மக்கள் திலகம் ஆவார்...
எங்க வீட்டுப்பிள்ளை வரலாறு
ஆண்டு 55 யை கடந்தும் ...
வெற்றிக்கொடி வெள்ளித்திரையில் பட்டொளி
வீசி பறக்கிறது.....
சிறிய ஊரிலும் 50 நாளை கடந்த விளம்பரம் பாரீர்..
ஆதாரம் இல்லாது நாம் பதிவிடுகிறோமா....
கண் விழித்து பார்
இதுபோன்ற ஊரில் கணேசனின் 300 படத்தில் ஏதாவது 50 நாள் ஒடியுள்ளதா............bsr...
-
மன்னாதி மன்னன் படத்தில் தலைவரின் நுணுக்கமான நடிப்புக்கு ஒரே ஒரு சான்று கூறுகிறேன். நாம் சில நேரங்களில் கேட்கும் பாடல்கள் நம் மனதை ஈர்ப்பதன் காரணமாக, நாள் முழுவதும் அந்தப் பாடல் வரிகளை நம்மையறியாமல் நமது வாய் முணுமுணுத்துக் கொண்டே இருக்கும். அந்த அளவுக்கு நம் செவியில் நுழைந்த பாடல் சிந்தையை நிறைத்திருக்கும். இதை ஆங்கிலத்தில் earworm என்று சொல்வார்கள்.
‘ஆடாத மனமும் உண்டோ’ பாடல் காட்சி முடிந்ததும் அடுத்து வரும் காட்சியின் போது, தலைவர், ஆடாத மனமும் உண்டோ என்று சன்னமான குரலில் பாடியபடியே வருவார். இதன் மூலம் அந்தப் பாடல் அந்த கதாபாத்திரத்தை எப்படி ஈர்த்துள்ளது என்பதை மனோதத்துவ ரீதியாக அருமையாக காட்டியிருப்பார் தலைவர்.
இனி மீள்பதிவு:
‘ஆடாத மனமும் உண்டோ?’
நடேஷ் ஆர்ட் பிக்சர்ஸ் சார்பில் நமது மன்னவர் நடித்து 1960 ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைக் காவியம் மன்னாதி மன்னன். அந்த படத்தில் இடம் பெற்ற ஆடாத மனமும் உண்டோ பாடல் என் இதயத்தை வருடும் பாடல்களில் ஒன்றுதான், என்றாலும் கூட இந்த பாடலைப் பற்றி இப்போது விவரிக்க வேண்டிய இனிய அனுபவம் சமீபத்தில் ஏற்பட்டது. அதைப் பின்னர் கூறுகிறேன்.
கந்தர்வ கானக் குரலோன் டி.எம்.எஸ்.,மறைந்த இசை மேதை எம்.எல்.வசந்த குமாரி (இவர் நடிகை ஸ்ரீ வித்யாவின் தாயார், கர்நாடக இசைப்பாடகி சுதா ரகுநாதனின் குரு) ஆகியோரின் இனிய குரல்களில் கர்நாடக சங்கீதத்தை அடிப்படையாக கொண்டு மெல்லிசை மன்னர்களின் இசைப் பின்னணியில் லதாங்கி ராகத்தில் அமைந்த இந்தப் பாடலும் தலைவரின் அற்புத நடிப்பும் பத்மினியின் நாட்டியமும் நம்மை புதிய உலகிற்கே அழைத்துச் செல்லும்.
‘‘நாடெங்கும் கொண்டாடும் புகழ் பாதையில்
வீர நடைபோடும் திருமேனி தரும் போதையில்..’’
‘‘ஈடேதும் இல்லாத கலைச் சேவையில்
தனி இடம் கொண்ட உமைக் கண்டு இப்பூமியில்..’’
என்று தலைவருக்கென்றே வார்த்தெடுக்கப்பட்ட வைர வரிகள். ‘பசுந்தங்கம் உமது எழில் அங்கம்’ என்று வரும் வரிகளில் ப‘சு’ந்தங்கம் என்பதை வசந்த குமாரி அவர்கள் ப‘ஷு’ந்தங்கம் என்று உச்சரிப்பது சற்று உறுத்தலாக இருந்தாலும் அவரது இழையும் இனிய குரல் அற்புதம்.
கர்நாடக சங்கீதத்தை அடிப்படையாக கொண்டு அமைந்த இப்பாடலில் இசை ஞானத்தின் நுணுக்கங்களை தனது அருமையான நடிப்பின் மூலம் தலைவர் வெளிப்படுத்தும் விதம் அபாரம். பாடலின் ஸ்ருதியின் ஏற்ற இறக்கங்களை ஒழுங்குபடுத்தும் கரணை (மிருதங்கத்தில் பாதியை நிமிர்த்தி வைத்தாற்போல் இருக்கும் தோல் வாத்தியம். இதன் பக்கத்திலேயே அதிலும் பாதியாக சிறியதாக வைத்துக் கொண்டு கலைஞர்கள் வாசிக்கும் வாத்தியத்தின் பெயர் டங்கா, இரண்டும் சேர்ந்ததது தபலா) வாத்தியத்தை அவர் கையாளும் விதம். தாளத்துக்கேற்றபடி 7 கரணைகளை வரிசையாக அவர் வாசிக்கும் காட்சி அற்புதம். ஒரு நொடி தவறினாலும் கரணையில் கை இடம் மாறி விழுந்து தாளம் தவறி விடும். (ரெக்கார்டிங்கில் பதிவானதுதான் ஒலியாக கேட்கும் என்றாலும் கை இடம் மாறி விழுவது முரணாகத் தோன்றும். ஆடாத மனமும் உண்டோ பாடலுக்கு நான் ஆணையிட்டால் என்று வாயசைத்தால், பாடல் அதேதான் ஒலிக்கும் என்றாலும் எப்படி காட்சியில் முரணாகத் தோன்றுமோ அப்படி).
கரணையில் 7 ஸ்ருதிக்கேற்ப தாளங்களை வாசித்து விட்டு கடைசி கரணையில் தாளம் முடிந்ததும் வலது கையை இடது தோள்பட்டைக்கு அருகே உயர்த்தும் ஸ்டைலே தனி. கரணையை வாசித்து முடித்ததும் ‘ஷாட்’டை கட் செய்யாமல் ‘வாடாத மலர் போலும் விழிப்பார்வையில்....’ என்று தொடங்கும் பாடல் வரிகளை சரியான நேரத்தில் தொடங்கியிருப்பார். என்ன ஒரு timing sense. அதோடும் விடவில்லை. வாடாத மலர் போலும் வரிகளை பாடிக் கொண்டே, நட்டுவாங்க தாளத்துக்கு பயன்படுத்தும் சிறிய ஜால்ராவையும் கையில் எடுத்துக் கொண்டு தாளம் போடுவார். அதை பட்டும் படாமல் தேவையான ஒலி அளவுக்கேற்ப தேய்த்து வாசிக்கும் அழகே அழகு.
அடுத்து, ‘இதழ் கொஞ்சும் கனியமுதை மிஞ்சும், குரலில் குயில் அஞ்சும் உனைக் காணவே என்ற வரிகளில், கடைசி எழுத்தான ‘வே’யின் நீட்சியாக வரும் ஏ..ஏ... என்பதில் வரும் முதல் ‘ஏ’ கா (ga)ரம் ஆரோகணத்திலும், அதாவது சற்று மேல் ஸ்தாயியிலும் இரண்டாவது ‘ஏ’ காரம் அவரோகணத்திலும் அதாவது சற்று கீழ் ஸ்தாயியிலும் இருக்கும். அதற்கேற்ப குரல் உயரும்போது தலையை லேசாக உயர்த்தியும் குரல் தாழும்போது தலையை கீழிறக்கியும் சிரித்தபடியே அலட்டிக் கொள்ளாமல் அனாயசமாக பாடுவார். உச்ச ஸ்தாயியில் பாடினால் தலையை உயர்த்திபடியும் கீழ் ஸ்தாயியில் பாடும்போது தலையை சற்று தாழ்த்தியபடியும்தான் பாட முடியும் இதை நுணுக்கமாக வெளிப்படுத்தியிருப்பார். பொதுவாகவே அந்தக் காலத்து நாடக நடிகர்களுக்கு நாடக கம்பெனியில் இசைப் பயிற்சியும் அளிக்கபடும். அப்போது பெற்ற இசைப் பயிற்சியாலும் அதோடு கூட தனக்கே உரிய இசை ஞானத்தாலும் (அதனால்தான் அவரது படங்களுக்கு அவர் ஓ.கே. செய்து தேர்ந்தெடுத்த பாடல்கள் காலம் கடந்தும் நிற்கின்றன) இசை நுணுக்கங்களை அற்புதமாக நடிப்பில் காட்டியிருப்பார்.
அடுத்து, புல்லாங்குழலை அவர் வாசிக்கும் விதமே அலாதி. குழலின் இசைக்கேற்ப அளவாக உதடு குவித்து அதன் ஸ்வர ஏற்ற இறக்கங்களையொட்டி குழலின் துளைகளில் அவரது விரல்கள் சரியாக விளையாடும் பாங்கினூடே, காந்தக் கண்களில் சிரிப்பு வழியும். வெறும் நடிகராக மட்டும் இருந்தால் இவற்றை செய்வதே பெரிய விஷயம். ஆனால் இவை எல்லாவற்றுக்கும் மேலாக சிறந்த சங்கீத வித்வான் எப்படி செய்வாரோ அதைப்போல பாட்டின் தாளத்துக்கேற்றபடி லயத்துடன் அவரது வலது கால் பாதம் தரையில் தாளமிடும். தலைவரின் முன்னே கரணைகள் வைக்கப்பட்டிருக்கும் மேஜைக்கு கீழே கால் தாளமிடுவதைக் காணலாம். இசை நுணுக்கம் தெரிந்து ரசித்து ஒன்றுபவர்தான் இப்படி தாளமிட முடியும். கவனிக்காத அன்பர்கள் யூ டியூப்பில் பாடல் காட்சியை காணலாம். மொத்தத்தில் பாட்டு, கரணை, ஜால்ரா, புல்லாங்குழல், லயத்துக்கேற்ற தாளம் என்று தனி ஒருவனாக கச்சேரியையே நடத்தியிருப்பார் நம் தலைவர்.
சமீபத்தில் நள்ளிரவின் அமைதி. வெளியே மிதமான மழைத்தூறல், சிலுசிலுத்த குளிர் காற்று.வராண்டாவில் நாற்காலியை இழுத்துப் போட்டு மண்ணுக்கு விண்ணின் கொடையான மழையை ரசித்தபடி அமர்ந்திருக்க, தனியார் பண்பலை வானொலியில் தேவகானமாக ஒலித்தது ஆடாத மனமும் உண்டோ பாடல்.பாடலின் இனிமையுடன் ஒன்றி காட்சிகளையும் தலைவரின் எழில் முகத்தையும் அபார நடிப்பு திறமையையும் மனக்கண்ணால் ரசித்தபடி, கோப்பை தேநீரை சிறிதாக உறிஞ்சி நாவில் படரவிட்டு தொண்டைக்குழியில் இறக்கியபோது... சூழலின் சுகமும் பாடல் தந்த மயக்கமும் சேர ....... பிரம்மானந்தம்.. அந்த சுகானுபவத்தின் வெளிப்பாடே இந்த அலசல்.
எங்கே, எப்போது, யார் இந்தப் பாடலைக் கேட்டாலும்.... ஆடாத மனமும் உண்டோ?
மன்னாதி மன்னன்..... பேரழகில், நடிப்பில், நடனத்தில், இயக்கத்தில், படத் தொகுப்பில், வாதத் திறமையில், ஆட்சிக் கலையில் மட்டுமல்ல, உயர்ந்த இசை ஞானத்திலும்..........VND...
-
"ராணி சம்யுக்தா" 1962 பொங்கலுக்கு வந்த சரித்திர திரைப்படம். திரைக்கதை வசனம் பாடல்கள் என முக்கிய பொறுப்புகளை கண்ணதாசன் தோளில் சுமந்து அதை செவ்வனே செய்து முடித்து வெளிவந்த படம் காலதாமதமாக வந்ததால் மக்களின் மனநிலை மாற்றத்தால் அடைய வேண்டிய பெரிய வெற்றி கை நழுவிப் போனது. சிரித்து சிரித்து சிறையிலிட்டவரின் சமூக படங்களில் லயித்து தன்னை மறந்த மக்கள் மீண்டும் சரித்திரம் காண விழையவில்லை போலும்.
இத்தனைக்கும் அருமையான பாடல்கள், தெள்ளுத்தமிழ் காதை குடையாத அற்புத வசனம், தேனில் குழைத்த பலாவின் சுவை, வசனத்தில். எதுகையும், மோனையும் பின்னி காதுக்கு இனிமை சேர்த்த படம். இறுதிக்காட்சியில் தலைவரின் மரணம் மாபெரும் வீரன் உள்நாட்டு சதியினால் கொல்லப்படுவதை மக்கள் மனம் ஏற்கவில்லை. கிளைமாக்ஸில் இனி போர்தான் முடிவு என்று தீர்வு சொல்லி படத்தை அத்துடன் முடித்திருந்தால் படத்தின் வெற்றி வேறு விதமாக இருந்திருக்கலாம்.
ஆகா! என்ன அருமையான நடிப்பு . ரஜபுத்திர வீரர்களின் வீரத்தை தலைவரின் வாள்வீச்சு, வீரத்தின் அடையாளமாக எதிரியை மன்னிக்கும் தன்மை, தன் நாட்டை பாதுகாக்கும் பொருட்டு மேற்கொண்ட ஒற்றன் வேடம் என்று பாத்திரத்தின் தன்மை அறிந்து அதை மேலும் பரிமளிக்க செய்திருப்பார். அரசவை காட்சிகள் சிறப்பாக படமாக்கப்பட்டிருக்கும்.
தங்கவேலு ராகினி நகைச்சுவை காட்சிகள் படத்துக்கு மேலும் சிறப்பு சேர்த்தன.
கோரி முகமதுவாக நடித்திருக்கும் நம்பியார் வில்லன் நடிப்பை இறுக்கமான முகத்துடன் வாரி வழங்கியிருப்பார். சக்கரபாணி சதிகாரனாக வந்து கதி கலங்க வைத்திருக்கிறார். நாடோடி மன்னனில் வரும் சக்கரபாணி 'மன்னர் மயங்கி விட்டார் மருந்து நன்றாக வேலை செய்கிறது' என்று சொல்லும் வில்லத்தனத்தை காட்டிலும் சற்று அதிகமான வில்லத்தனம். நல்ல அருமையான நடிப்பு. சாதுவாக நடிக்கும்
சகஸ்வரநாமம் இதில் ஜெயச்சந்திரன் வில்லனாக நடித்து பழியுணர்ச்சியை மனதில் வைத்து புழுங்கி காலம் வரும் போது அதை வெளிக்காட்டும் விதம் அவரது பண்பட்ட நடிப்பை காட்டுகிறது.
ஒவ்வொரு காட்சியிலும் கண்ணதாசன் காட்சியை மனதில் வைத்துக்கொண்டு அவர் தீட்டிய வசனம் அற்புதம். கண்ணதாசனின் அற்புத திறமையை மனதில் கொண்டே "நாடோடி மன்னனு"க்கு பிறகு இந்த பட வாய்ப்பை அவருக்கு தந்திருப்பார் என்று தெரிகிறது. வேறு சிலரிடம் கொடுத்திருந்தால்
கூழாங்கற்களை காதில் உரசி ஓசையை அதிகம் எழுப்பி காதிற்கு கதையின் இதம் தெரியாமல் காது வலி ஒன்றே தெரியும்படி எழுதி நோக்கத்தை சிதைத்து அவர் வாழ்க்கையை வளமாக்கி கொண்டிருப்பர்.
கணக்கிலடங்கா இனிமையான பாடல்கள் படத்தின் வேகத்துக்கு தடை போடாமல் ரசனைக்கு விருந்தாக அமைந்தது.
'முல்லை மலர்க்காடு' என்ற ஆரம்ப பாடலில் அத்தனை கவிநயம். 'ஓகோ வெண்ணிலா' 'நிலவென்ன பேசும்' எவர்கிரீன் பாடல்கள். 'சித்திரத்தில் பெண்ணெழுதி' 'அவர்க்கும் எனக்கும் உறவு காட்டி' போன்ற சோகப்பாடல்கள் 'மன்னவர் குலம் பாரம்மா' பாடலில் அத்தனை மன்னர்களின் பெருமையை நாட்டின் பெயரோடு சேர்த்து எழுதும் திறன் யாருக்கு வரும் கவிஞரைத்தவிர.
பிருத்வியின் மாறுவேடம் அவரின் முகத்தை மட்டுமல்ல அவரது குரலின்
மாறுபாடு மற்றும் கண்களில் தெரியும் குள்ளநரித்தனம் என்று நடிப்பிற்கே புது முகவரி தந்திருக்கும் பாங்கு படத்தின் விறுவிறுப்பை கூட்டுகிறது. மாற்று நடிகராக இருந்தால் அந்தக்காட்சியில் உறுமி வேண்டாத வசனங்களை ஏற்ற இறக்கத்தோடு பேசி பாத்திரத்தின் தன்மையை சிதைத்து பார்க்க வந்த மக்களை வதைத்து சித்தூர் ராணி பத்மினியை போல் ஒரு மகத்தான தோல்விப்படத்தை தந்து கைபிள்ளைகளை மேலும் கதற விட்டிருப்பார்.
"சித்தூர் ராணி பத்மினி" சென்னை சாந்தியில் வெளியாகி 20 நாட்கள் ஓடி வரலாற்று சிறப்பு மிக்க வசூலை பெற்றது. 20 நாட்களில் ரூ 39191.40. பெற்று கைபிள்ளைகளை
கலங்கடித்தது. மற்ற படங்களுக்கு வடக்கயிறு, ஸ்டெச்சரோடு அலைபவர்கள் குறைந்த பட்சம் ஒரு தூக்கு கயிறு கிடைத்தாலாவது படத்தை தூக்கி நிறுத்தியிருப்பார்கள். அந்த நேரத்தில் கயித்துக்கடை ஸ்ட்ரைக்கோ என்னவோ கைபிள்ளைங்க படத்தை கைவிட்டு விட்டார்கள். சுருளி, தேங்காய், சில்க் கதாநாயகன் நாயகியாய் நடித்த படங்கள் கூட இவ்வளவு வசூல் சாதனை செய்தது கிடையாது.
நல்லவேளை கதையும் தப்பி நம்மையும் காப்பாற்றிய இறைவனுக்கு நன்றி சொல்ல வேண்டும். அதிகமான குளோஸப் காட்சியை தவிர்த்து போர்க்காட்சியை இன்னும் சிறப்பாக எடுத்திருக்கலாம். படம் சென்னையில் கெயிட்டி, புவனேஸ்வரி, லிபர்டி, பிரைட்டன் என்ற நான்கு திரையரங்குகளில் வெளியாகி 56 நாட்கள் ஓடி குறைந்த பட்ச வெற்றியை பதிவு செய்தது. மற்ற முக்கிய நகரங்களில் அதிக பட்சமாக 70 நாட்கள் வரை ஓடியது. அடுத்து வந்த "மாடப்புறா" பிப் 16ல் வெளியானதால் நீடித்த ஓட்டம் தடையானது. இந்த பதிவு இத்துடன் நிறைவு செய்து கொள்ளலாம். வசூல் விபரம் உதவி: திரு சைலேஷ் அவர்கள்..........ksr.........
-
மக்கள் திலகம் எம்ஜிஆர் பக்தர்களின் கோரிக்கை
1. மக்கள் திலகத்தின் படஙக்ளின் நெகட்டிவ் - முழுமையாக நல்ல நிலையில் உள்ளவை எத்தனை ?
2. பல படங்கள் சேதாரத்துடன் இருந்தாலும் நவீன தொழில் நுட்பத்தில் சரி செய்ய இயலுமா ?
3. ஒளிவிளக்கு - நெகடிவ் பூனா வில உள்ளதாக தகவல் .
4. படகோட்டி - பணத்தோட்டம் இரண்டு படங்கள் நெகட்டிவ் தேவி திரை அரங்கு உரிமையாளரிடம் இருப்பதாக தகவல்
5, நல்ல திரை அரங்கில் புதுப்பிக்கப்பட்ட எம்ஜிஆர் படங்களை திரையிட அனுமதி கிடைக்க இயலுமா ?
6. தமிழக அரசிடம் முறையிட்டு வரிவிலக்கு பெற இயலுமா ?
7. கலைவாணர் அரங்கம் -உள்ளிருக்கும் ஒரு திரை அரங்கத்திற்கு எம்ஜிஆர் அரங்கம் என்று பெயர் வைக்கலாமே ?
8. எம்ஜிஆர் ஆவணங்கள்
பல ஊர்களில் பல நண்பர்களிடம் இருக்கும் அரிய பொக்கிஷங்கள் அனைத்தையும் பெற்று எம்ஜிஆர் சிறப்பு மலரில் இடம் பெற முயற்சிக்க வேண்டும் .
1936-1977 முதல் வெளியீட்டில் வெளிவந்த எம்ஜிஆர் படங்கள் பற்றிய முழு விளம்பரங்கள் செய்திகள் திரை அரங்கு படங்கள் சிறப்பு மலர்கள்
ரசிகர்கள் வெளியிட்ட நோட்டீஸ் மற்றும் இதர பொக்கிஷங்கள்
1977- 2020 மறுவெளியீட்டில் வெளிவந்த எம்ஜிஆர் படங்கள் பற்றிய முழு விளம்பரங்கள் செய்திகள் திரை அரங்கு படங்கள் சிறப்பு மலர்கள்
ரசிகர்கள் வெளியிட்ட நோட்டீஸ் மற்றும் இதர பொக்கிஷங்கள்
நண்பர்களே
இன்றைய சூழலில் எம்ஜிஆர் புகழ் காப்போம் என்று கூறும் தலைமையின் பார்வைக்கு மேற்கண்ட கோரிக்கைகளை முன் வைப்போம் ....vnd...
-
பொன்மனச்செம்மல் புரட்சித்தலைவர் மிகச் சிறந்த திரைப்பட நடிகர் மட்டுமல்ல மிகச்சிறந்த பொதுநலவாதி உயர்ந்த நோக்கங்களை உடைய ஒரு புனிதமான பிறவி ஒரு சிறந்த தர்மகர்த்தா எண்ணம் போல வாழ்வு என்று கூறுவார்கள் புரட்சித்தலைவரின் உயர்ந்த ரக எண்ணங்கள் அவரின் பிறவியிலேயே வந்தவை எனவேதான் புரட்சித் தலைவரால் மிக உயர்ந்த இடத்திற்கு செல்ல முடிந்தது நான் இன்றைய அரசாங்கத்திடம் கெஞ்சி கேட்பதெல்லாம் வேறு ஒன்றும் இல்லை தயவுசெய்து புரட்சித்தலைவர் நடித்த படங்களை தேசிய மயமாக்கி அரசாங்கம் தனது சொந்த செலவில் அல்லது நமது கழக உடன்பிறப்புகள் இடம் வசூல் செய்தாவது அவர் நடித்த திரைப்படங்களை புத்தம் புது பாலியஸ்டர் பிரின்ட் ஆக நவீன சினிமாத்துறை விஞ்ஞான வல்லுனர்களின் உதவிகொண்டு புதுப்பித்து மீண்டும் நம் மக்களிடம் அந்த தெய்வீக மகானின் திரைப்படங்களை கொண்டு செல்ல வேண்டும் அந்த உத்தமர் இன் அருமை தேர்தல் வந்தால் மட்டுமே தெரியும் நிழலின் அருமை வெயிலில் தெரியும் புரட்சித்தலைவரின் அருமையும் பெருமையும் புரட்சித் தலைவரின் புகழ் மக்கள் செல்வாக்கும் தேர்தல் நேரத்தில் மட்டும் தான் தெரியும் அந்தப் பெரியவரின் பெயரை சொல்லாமல் மக்களிடம் ஓட்டு வாங்க முடியாது எனவே பதவியில் இருக்கும் போதே அந்த மனிதனுக்கு செய்யும் கைங்கரியம் என்னவென்றால் அவர் நடித்த திரைப்படங்களை போற்றிப் பாதுகாப்பது அவர் வாழ்ந்த ராமாவரம் தோட்டத்தை போற்றி பாதுகாப்பது தொடர்ந்து அவரின் பெயரால் அங்கு அன்னதானம் தொடர்ந்து நடத்துவது அந்தப் புனிதர் பயன்படுத்திய பொருட்களை அருங்காட்சியமாக மிக மிக உயர்ந்த பாதுகாப்புடன் வைத்து போற்றுவது மக்கள் அவற்றை இலவசமாக கண்டு களிக்க வழிவகை செய்வது அவருடன் சமகாலத்தில் வாழ்ந்த பெரியவர்கள் இன்றளவும் உயிருடன் ஒரு சிலர் இருப்பார்கள் அவர்களிடம் பேட்டி கண்டு மலரும் நினைவுகளை மக்களிடம் சமூக வலைதளங்களில் பகிர்ந்து கொள்வது அவரைப் பற்றிய நினைவுகளை மக்களிடம் கொண்டு செல்வது எல்லாவற்றிற்கும் மேலாக அந்த மகானின் எண்ணங்கள் லட்சியங்கள் கொள்கைகளை தொடர்ந்து சொந்த வாழ்விலும் பொது வாழ்விலும் கடைப்பிடிப்பது போன்றவை மட்டுமே இக்கால ஆட்சியாளர்கள் அவருக்கு செய்யும் நன்றிக் கடனாகும் செய்வார்களா.... Srinivasan Kannan...
-
சிவாஜி கணேசன் ரசிகர்கள் எப்போதுமே படத்தை ஓட்ட திருவிளையாடலில் ஈடுபடுவார்கள். வசூல் சாதனைகளையும் அடித்துவிடுவார்கள். எங்க வீட்டுப் பிள்ளையை திருவிளையாடல் வசூலில் வென்றது என்று கொஞ்சம் கூட கூச்சமே இல்லாமல் சொல்வார்கள். இரண்டு படங்களின் 100 நாள் வசூலையும் அவர்களே போடுவார்கள். அதில் பார்த்தாலும் திருவிளையாடலை விட எங்க வீட்டுப் பிள்ளை அதிக வசூல் இருக்கும். அப்படியும் கவலையே படமாட்டார்கள். சென்னையில் மட்டும் திருவிளையாடல் கூடுதல் வசூல். அந்த உண்மையை நாம் ஒப்புக் கொண்டிருக்கிறோம். அதற்கு நியாயமான காரணமும் சொல்லி இருக்கிறோம். தியேட்டர்கள் பெரியது, சிறியது ஒரு பக்கம் இருந்தாலும் இன்னொரு காரணம், திருவிளையாடல் ஓட்டப்பட்ட அவர்களது சொந்த சாந்தி தியேட்டர் ஏசி தியேட்டர். ஏசி இல்லாத தியேட்டர்களை விட ஏசி தியேட்டரில் கட்டணம் அதிகம் என்பதும் முக்கிய காரணம். அப்போது தேவி பாரடைஸ் ஏசி தியேட்டர் இருந்து எங்க வீட்டுப் பிள்ளை அதில் ரிலீஸ் ஆகியிருந்தால் திருவிளையாடலை சென்னையிலும் நசுக்கி விளையாடியிருக்கும்.
அதேபோல தங்கப்பதக்கம் படமும் சாந்தி தியேட்டரில் 23 வது வாரமே வசூல் படுத்துவிட்டது. இதனால், 168 நாளோடு கடைசி என்று ஒட்டப்பட்டு மறுநாள் முதல் அதாவது 169வது நாளில் பாக்கெட் மார் என்ற இந்திப் படம் திரையிடுவதாக அறிவிக்கப்பட்டது. (இந்த பாக்கெட் மார் படம்தான் மக்கள் திலகம் நடிக்க திருடாதே ஆனது ) தங்கப்பதக்கம் 23 வது வாரத்தில் அவுட்டானது பற்றி அப்போது பிலிமாலயா பத்திரிகையிலும் செய்தி வந்தது. ஆனாலும் தங்கப்பதக்கத்தை 168 நாளில் கடைசி என்று அறிவிக்கப்பட்ட பின்னும் வெள்ளிவிழா வீம்புக்காக மேலும் 8 நாட்கள் இழுத்து 176 நாட்கள் ஓட்டினர். அதிலும் கடைசி 8 நாட்களில் வசூல் 61 ஆயிரத்தை தாண்டியதாக சொல்லப்பட்டது. எல்லாக் காட்சிகளும் ஹவுஸ்புல் ஆனால்தான் இது நடக்கும். கூட்டமே இல்லாத படத்துக்கு கடைசி 8 நாளில் திடீரென மக்கள் அலைகடலாய் திரண்டு வந்து எல்லா காட்சிகளிலும் தியேட்டரை நிரப்பிவிட்டார்களா என்ன? வழக்கம்போல மதுரை தங்கத்தில் கர்ணனுக்கு 108 நாளில் போலி வசூல் கணக்கு காட்டியது போல இதற்கும் கணக்கு காட்டிவிட்டார்கள். அப்படியும் சென்னையில் தேவி பாரடைஸில் வாலிபனின் 13 லட்சத்து 58 ஆயிரம் வசூல் சாதனையை நெருங்கமுடியவில்லை.
இன்னொரு விஷயம்.. இன்று நடிகப் பேரரசர் கூட சிவாஜி கணேசன் சிகரெட் பிடிப்பது பற்றி சொல்லி இருக்கிறார். சிகரெட், மதுவை தெய்வ வேடத்தில் நடிக்கும்போது கூட எப்படி அவர் பயன்படுத்துகிறார். சரி..போகட்டும். சிகரெட் பிடிப்பது, மது குடிப்பது எல்லாம் சிவாஜி கணேசனின் சொந்த விஷயம். தெய்வ பாத்திரங்களில் நடிக்கும்போதும் லாகிரி வஸ்துக்களை அவர் உபயோகிப்பது நாம் ஏற்க முடியாவிட்டாலும் அவர் மனநிலையைப் பொறுத்தது. சரி...ஆனால், நம்மை பெற்ற தாய் கண்கண்ட தெய்வம் இல்லையா? இன்னும் சொன்னால் தெய்வத்தைவிட தாய் உயர்ந்தவர் இல்லையா? அந்த தாயார் முன்பே சிவாஜி கணேசன் சிகரெட் பிடிப்பார். எப்படி இவரால் முடிகிறது? தாயை எந்த அளவுக்கு இவர் மதித்துள்ளார்?.. இதை சிந்திக்கும்போது எல்லா தாய்மார்களையும் தன்னை பெற்ற தாயாக கருதி மதித்த மக்கள் திலகத்தை மனம் போற்றுகிறது..... இங்கே படத்தில் ஜெமினி கணேசன், சாவித்திரி, தனது தாய் ராஜாமணி அம்மாளுடன் கையில் சிகரெட்டுடன் சிவாஜி கணேசன். படம் உதவி: சைலேஷ் பாசு அவர்கள் முகநூல்...... Swamy...
-
சிங்கப்பூரில் ஒரு தையற்காரர் , “எம்.ஜி.ஆர் பேஷன் டெயிலர் ” என்று கடை நடத்தி வந்தார். மக்கள் திலகம் படங்களில் அணியும் உடைகளைப் போன்றே உடைகளை தைத்து சிங்கப்பூர் மக்களிடையே பிரபலமானார். அவர் ஒருசமயம் மக்கள் திலகத்தை காண இந்தியா வந்தார். கண்டார். “காணாதது தான் தெய்வம் , நீங்கள் கண்கண்ட தெய்வம் . தெய்வம்னா காணிக்கை செலுத்தனும் … நானும் ஒரு காணிக்கை கொண்டு வந்திருக்கிறேன் . ஒரு சூட்” என்று கொடுத்தார் “அளவு எது ? நாயுடு கொடுத்தாரா?” என்று கேட்டார் மக்கள் திலகம் .”இல்லை , ஒரு உத்தேசம் தான் . என் மனக்கணக்கால் பார்த்து வெட்டி தச்சேன் ” என்று போடச் சொன்னார் , அத்தோடு ரூ20,000 பணம் கொடுத்தார் . “எதற்கு?” என்று மக்கள் திலகம் கேட்க “உங்க பெயரில் உங்களை கேட்காம கடை நடத்தறேன், நூத்துக்கு ஒரு டாலர் வீதம், உங்க பங்குக்கு சேர்ந்த பணம். இதுவும் என் காணிக்கை” என்றார் அந்த சிங்கப்பூர் டெய்லர் … மக்கள் திலகம் அந்த பணம் இருந்த தட்டை தொட்டு முத்தமிட்டு, தனது பெட்டியிலிருந்து 5,000 ரூபாய் எடுத்து அதே தட்டில் இருந்த 20,000 ரூபாய்க்கு மேல் வைத்து” என் பேர்ல நடத்தி தோல்வியடையாமல் வெற்றியடைஞ்ச உங்க உழைப்புக்கு நான் தர்ற வெகுமதி … எடுத்துக்குங்க ” என்றார் . இதுபோன்று எம்.ஜி.ஆர். வாழ்வில் நடந்த சின்னச் சின்ன நிகழ்வுகள், அவர் ஒவ்வொருவரிடமும் நடந்துக் கொண்ட விதம் அவரது தாயாள குணம்,......sbb...
-
எம் தலைவரின்
"எங்க வீட்டுப்பிள்ளை" காவியம் 1965 ல் திரைக்கு வந்த 15 தினங்களில் தமிழ்நாடு எங்கும் இந்தி எதிர்ப்பு போராட்டம் படு பயங்கரமாக நடந்தது.. பலர் துப்பாக்கி சூட்டில் மரணமடைந்தார்கள்.
கரூரில் 100 நாள் கடந்து ஒடவேண்டிய எங்கவீட்டுப்பிள்ளை
துப்பாக்கி சூட்டில் 6 பேர் மரணமடைந்ததால் 2 காட்சி தான்
ஒடியது.
அப்படியும் 50 நாள் ஒடியது.
மீண்டும் 3 மாதம் கழித்து எங்கவீட்டுப்பிள்ளை
56 நாள் ஒடியது வரலாறு...
இதுப்போல் பல ஊர்களீல் ...
இந்தி எதிர்ப்பு போராட்டத்தையும் மீறி மக்கள் திலகத்தின் எங்கவீட்டுப்பிள்ளை படைத்த இமாலய சாதனையை அந்த நேரத்தில் மட்டும் அல்ல
இன்று வரை தமிழ் நாட்டில் எங்கவீட்டுப்பிள்ளை பெற்ற முதல்வர் பதவியை....
பெண் நடை நடந்து
ஆணவ ஆட்டம் ஆடி....
தெருவிளையாடல் ஆடியும்..
போலி சிவன் வேடம் போட்டும்..
நான் அசைந்தால் ..சாந்தி...
புவனேஸ்வரி...கிரவுனும் ....
வசூல் இல்லாது ஒடும்...
என்ற ஆர்பாட்டத்தில்...
புராண பக்தி வேடம் போட்டும் முதல்வர் இல்லை...
எம்.ஜி.ஆர் ரசிகா உன் ஆணவம் பெரிதா என கேட்கும் அளவுக்கு அகந்தை கொண்ட நடிப்பு என்னும் சிவன் வேடத்தில்....
31.7.1965 ல் வெளியாகி...
31 தியேட்டரில் இழுத்து பிடித்து
50 நாளை ஒட்டி.....
அதில் 6 ஊர் மட்டமான
வசூலில் 100 நாள்....ஊர்கள்
குடந்தை 100 : 98,308.00
நாகர்கோவில் 100 : 84,720.00
கரூர் : 100. : 74,357.00
பாண்டி 100 :.98,068.00
தஞ்சை 100 : 1,02,313.00
மற்றும் நெல்லை 100 ஒட்டியும்
6 அரங்கு....
100 நாள் 6 லட்சத்தை கூட எட்டி பிடிக்க முடிய வில்லை
எல்லாமே மூதல் சென்டர் ஆகும்.
எங்கவீட்டுப்பிள்ளை
ஒவ்வொரு ஊரிலும் சைக்கிள் டோக்கன்... முறுக்கு... சோடா
விற்ற வசூலை கூட பலபடங்கள் ஒடியும் பெறவில்லை..
இதில் எங்க வீட்டுப்பிள்ளையுடன் போட்டிக்கு வந்த நால்வர் அணி படமான ""பழனி"" யும் அடங்கும்....
எங்கவீட்டுப்பிள்ளை பெற்ற வரலாறு காணாத வசூல் புயலினால்...
தெருவிளையாடல் உட்பட பல படங்கள் எங்க வீட்டுப் பிள்ளை திரையிட்ட அரங்கு என்னும் கடலில் மாற்றான் படம் ஒடும் தியேட்டரையே விட்டு அடித்து இழுத்து செல்லபட்டது..
1931ம் ஆண்டு
திரையுலகில் இருந்து.....
100 க்கு 100 வெற்றியை
1956 ல் மதுரை வீரன் பெற்றார்.
அதன் பின் ...
1958 ல் நாடோடி மன்னன் பெற்றார்...
அதன் பின் 7 ஆண்டுக்கு பிறகு
1965 ல் எங்க வீட்டுப்பிள்ளை பெற்றார்.
இந்த வரலாறு....
வசூல் சக்கரவர்த்தி என்னும் பட்டத்தை உண்மையாக
எல்லா ஊர்களிலும்
( சாந்தி குத்தகை ஒன்று
இரண்டு நீங்கலாக)
தன் காவியங்கள் மூலம் மூடிசூடிய
ஏகபோக சக்கரவர்த்தி மக்கள் திலகம் ஆவார்...
எங்க வீட்டுப்பிள்ளை வரலாறு
ஆண்டு 55 யை கடந்தும் ...
வெற்றிக்கொடி வெள்ளித்திரையில் பட்டொளி
வீசி பறக்கிறது.....
சிறிய ஊரிலும் 50 நாளை கடந்த விளம்பரம் பாரீர்..
ஆதாரம் இல்லாது நாம் பதிவிடுகிறோமா....
கண் விழித்து பார்
இதுபோன்ற ஊரில் கணேசனின் 300 படத்தில் ஏதாவது 50 நாள் ஒடியுள்ளதா............bsr...
-
"எங்கிருந்தோ வந்த குரல் ... "
ஜெயசித்ராவுக்கு மணவாழ்த்து.
கலையுலகில் தங்களுக்கு எத்தகைய பிரச்னை ஏற்பட்டாலும் உடன்பிறவா சகோதரர் ஒருவர் இருக்கின்றார் என்று, எம்.ஜி.ஆரிடம் உள்ளன்போடு கூறி, ஆலோசனை பெற்றோர் ஏராளம்.
ஜெயசித்ரா சிறந்த குணச்சித்திர நடிகை திரையுலகில் பல வெள்ளிவிழாப் படங்களிலும், வெற்றிப் படங்களிலும் நடித்துப் புகழ்பெற்றவர். நல்ல நடிகை என்று முன்னணிக் கலைஞர்களால் பாராட்டப்பட்டவர். அவருக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு சில பிரச்னைகள் வந்து திக்குமுக்காட வைத்தன. துணிச்சல்காரரான ஜெயசித்ரா சோதனைகளைச் சந்தித்துத் துவண்டு போயிருந்தார் . இவைகளெல்லாம் எம்.ஜி.ஆருக்கு எப்படித்தான் தெரியுமோ?
தொலைபேசி மணி ஒலித்தது! ஜெயசித்ரா பதட்டத்தோடு ரிசீவரை எடுத்து, காதில் வைத்தார். “ நான்தான் எம்.ஜி.ஆர். பேசுகிறேன். எல்லாம் கேள்விப்பட் டேன். இதுபோல் சோதனைகள் வந்தால் பின்னாலேயே சுகம் தேடி வரும். சிரமங்களைக் கண்டு மனம் இடிந்துவிடக் கூடாது . தைரியமாக இரு. எதுவாக இருந்தாலும், என்ன நடந்தாலும் கவலைப்படாதே. நடப்பதெல்லாம் நன்மைக்கே என்று நினைத் துக்கொள்." தெய்வத்தின் திருக்குரல் போல் ஒலித்தது.
அவர் கூறியதைப் போலவே ஜெயசித்ராவின் வாழ்வில் சூழ்ந்த கருமேகங்கள் விலகி , ஒளி வெள்ளம் பரவியது.
"சக்தி லீலை நாட்டிய நாடகம்" அரங்கேற்றத்துக்கு வருகை தந்து வாழ்த்த வேண்டும் என்று ராமாவரம் தோட்டம் சென்று எம்.ஜி.ஆரை அழைத்தார் ஜெயசித்ரர். " ஜப்பான் செல்லுகிறேன். நேரில் வந்து வாழ்த்துவதை இப்போதே வாழ்த்தி விடுகிறேன்" என்று எம்.ஜி.ஆர். முன்பே ஆசி கூறி அனுப்பி வைத்தார்.
திருமணம் செய்து கொள்ள ஜெயசித்ரா தீர்மானித்திருந்த நேரம்!
திடீரென்று ஒரு நாள் எங்கிருந்தோ டெலிபோனில் பேசினார். "திருமணம் என்பது சாதாரணமாக வாழ்வில் நடக்கும் ஒரு நிகழ்ச்சி என்று அலட்சியமாக இருந்து விடாதே. எதிர்காலத்தில் உனது நிம்மதிக்கு அதுதான் அஸ்திவாரம் கவனமாகப் பார்த்து முடிவு செய். ஒன்றைத் தீர்மானித்த பின்பு எதற்காகவும் அச்சப் படாதே! உனக்கு எனது நல்வாழ்த்துக்கள்"
சிங்கப்பூர் செல்ல இருந்த எம்.ஜி.ஆர் . எங்கிருந்தோ கேபிளில் பேசினார் . அவரிடம் சென்று திருமணத்தைப் பற்றிக் கூறி ஆலோசனை பெற வேண்டுமென்று ஜெயசித்ரா நினைத்துக் கொண்டிருக்கும் போதே, அவர் ஆலோசனையும், ஆசியும் அட்வான்சாகவே கிடைத்துவிட்டது . கணேஷ் அவர்களை ஜெயசித்ரா திருமணம் செய்து கொண்டு, நல்ல துணைவியாகவும், தாயாகவும் வாழ்கிறார்.
எப்போது ராமாவரம் தோட்டம் சென்றாலும் , " சாப்பிட்டாயா?" என்ற கேள்விதான் தாயுள்ளம் கொண்ட எம்.ஜி.ஆரிட மிருந்து முதலில் பிறக்கும்.
" இருந்த இடத்திலிருந்தே சமையல் அறைக்கு போன் செய்து, சூடாக முதலில் பொங்கல் கொடுத்துவிட்டு , அப்புறம் என்னென்ன பரிமாற வேண்டும் என்று சொல்லுவார். சாப்பிட்ட பின்புதான் பேசுவார் . ஜானகி பேசுவார் . ஜானகி அம்மாவும் அப்படித்தான் என்றார் ஜெயசித்ரா.
அமெரிக்காவிற்கு மீண்டும் மருத்துவப் பரிசோதனைக்காக எம்..ஜி.ஆர் . சென்று திரும்பி வந்திருந்தார்.
திருப்பதிக்குச் சென்று ஏழுமலையான சந்நிதானத்தில் நெஞ்சுருக வேண்டிக்கொண்டு, ஜெயசித்ரா குடும்பத்துடன் சென்னை திரும்பினார் . திருப்பதி பிரசாதங்களை எடுத்துக் கொண்டு, பழங்கள் வாங்கிக் கொண்டு எம்.ஜி ஆரைப் பார்ப்பதற்கு ராமாவரம் தோட்டத்திற்குச் சென்றார் . உள்ளே சென்றதும் திகைத்துப்போய் நின்றுவிட்டார்!
சாதிமத பேதமின்றி பலர். குடும்பம். குடும்பமாக அங்கே கூடியிருந்தனர். வயதான மூதாட்டிகள், பிராமண குலத்தைச் சேர்ந்த மாமிகள் .. இதோ இந்தக் கஷாயத்தைச் சாப்பிடுங்கோ ஒரு குறையும் வராது . | தம்பி . இந்த மருந்து உனக்காகவே தயார் செய்தது மறக்காம தினந்தோறும் சாப்பிடு. ஆயிரம் வருஷத்துக்கு ஆரோக்கியமா இருப்பே..."
இவ்வாறு மருந்துகளை மிகவும் பாசத்தோடு நீட்டிய தாய்மார்கள் பலரையும், பழங்களையும் கோவில் பிரசாதங்களையும் வழங்கிய சகோதரிகளையும், சகோதரர்களையும், குழந்தைகளையும் கண்ட ஜெயசித்ராவுக்குக் கண்கள் கலங்கின. அவரே கூறினார் ..."
ஒவ்வொருவரும் போட்டி போட்டுக்கொண்டு, உண்மையான வாஞ்சையோடு, அவருக்காகத் துடித்த காட்சி, இன்னமும் என் நெஞ்சத்திரையில் அப்படியே தெரிகின்றது. இதைப்போல் அன்பைப் பொழிந்ததை நான் அதுவரையில் கண்டதில்லை. அவர்கள் அனைவரையும் முகமலர்ச்சியோடு தனித்தனியே விசாரித்து அனுப்பி வைத்தார். அதன் பின்பு நான் பிரசாதத்தையும், பழங்களையும் கொடுத்தேன். " நான் என்ன குழந்தையா? இதெல்லாம் எதற்கு என்று பழங்களைப் பார்த்தபடி எம்.ஜி.ஆர். கேட்டார் . பின்னர் எம்.ஜி.ஆரே அங்கிருந்த புகைப்படக்காரரை அழைத் துப் படம் எடுக்கும்படி கூறினார்.
அந்தப் புகைப்படத்தை இப்போது பொக்கிஷம் போல் ஜெயசித்ரா பாதுகாத்து வருகிறார். "மக்களோடு ஒன்றுகலந்து, மக்கள் இதயத்தில் நீக்கமற நிறைந்து, நிலைத்து வாழுகின்ற உயர்ந்த தலைவராக மட்டுமின்றி, எங்களுக்கெல்லாம் வழிகாட்டியாகவும் அண்ணன் எம்.ஜி.ஆர். வாழ்ந்தார். அவரைப்போல ஒருவரைப் பார்க்க முடியுமா?" ஜெயசித்ரா விழிகள் பனிக்க என்னைப் பார்த்து கேட்டார்.
நான் கற்ற தமிழ் எனக்குக் கை கொடுக்கவில்லை. இந்த அனாதையின் வாய், பேச்சை மறந்து ஊமையாகிவிட்டது.
நன்றி : அண்ணன் "நாகை"தருமன்
.........sb.........