STR @iam_str 5m5 minutes ago It's bin 30 years in cinema and all my success and credit goes to 1 man who trusted on me when I was 9 months old ... My guru my dad #TR
Printable View
STR @iam_str 5m5 minutes ago It's bin 30 years in cinema and all my success and credit goes to 1 man who trusted on me when I was 9 months old ... My guru my dad #TR
STR @iam_str 10m10 minutes ago Thank to all media and press for ur support ..din have a release for two years , still u guys have never put me down ... Thank u so much :)
STR @iam_str 9m9 minutes ago
Special thanks to my friends who stood by me at my tough times and I realised who my real friends are ... Thanks for the immense love :)
He first needs to make a movie everyone likes; then he can speak about liking other movies.
என்ன ஒரு புத்திசாலித்தனம்
Attachment 3960
Birthday cake
Attachment 3967
selvaraghavan @selvaraghavan 15h15 hours ago Happy to announce my next project with @iam_str . it's sure to be something you'll all enjoy. Looking forward #longdue #yuvan #str #selva
Dhanush @dhanushkraja 14h14 hours ago my anna @selvaraghavan nd my thambi @iam_str come together:)all d best bros.im sure it's gonna be great.simbu get ready 2 learn 4m d best.
கௌதமின் அடுத்தப் படம், அச்சம் என்பது மடமையடா
கௌதம் இயக்கிய வாரணம் ஆயிரம், பச்சைக்கிளி முத்துச்சரம், விண்ணைத்தாண்டி வருவாயா, வேட்டையாடு விளையாடு ஆகியவை பிரபல பாடல் வரிகளை பெயராகக் கொண்டவை. என்னை அறிந்தால் கூட, எம்ஜிஆரின் உன்னை அறிந்தால் பாடலின் சாயலில் வைக்கப்பட்டதுதான்.
அடுத்து சிம்புவை வைத்து இயக்கும் படத்துக்கு கௌதம், சட்டென்று மாறுது வானிலை என்ற தனது படத்தில் இடம்பெற்ற பாடல் வரியையே பெயராக வைத்தார். ஆனால் அதனை ஏற்கனவே ஒருவர் பதிவு செய்திருந்ததால் வேறு பெயரை பரிசீலனை செய்து வந்தனர்.
தற்போது பெயர் உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. இதுவும் எம்ஜிஆர் பாடல் வரிதான். அச்சம் என்பது மடமையடா.
என்னை அறிந்தால் படத்துக்கு முன்பே ஆரம்பிக்கப்பட்ட இப்படம், என்னை அறிந்தால் வெளியாகிவிட்ட நிலையில் மீண்டும் தொடங்கப்பட உள்ளது.
3 காதலைத் தாண்டி வந்து விட்டேன் என்பதையே நம்ப முடியவில்லை... சிம்பு
நயன், ஹன்சிகா காதல் முறிந்துவிட்டதே என்று அதையே நினைத்துக் கொண்டிருக்க முடியாது. இதை உணர்ந்ததால் தான் என்னால் தற்போதும் ஹன்சிகா, நயன்தாராவுடன் நடிக்க முடிகிறது.
தற்போது காதல் ஒரு பிளஸ் மற்றும் ஒரு மைனஸ் ஆக உள்ளது. முன்பெல்லாம் காதல் தோல்வி அடைந்தால் அந்த பெண்ணை பழிவாங்கத் துடித்தோம். தற்போது அந்த எண்ணம் இல்லாமல் அடுத்த வேலையை கவனிக்கச் செல்வது பிளஸ். ஆனால் பலர் இஷ்டத்திற்கு ஜாலியாக காதலிக்கிறார்கள். அதை காதல் என்று வேறு தவறாக நினைப்பது தான் மைனஸ்.
நான் காதலிப்பதே வேடிக்கை தான். என்னை போன்றவன் காதலிக்க முடியாது. அப்படி இருந்தும் நான் 3 காதலை தாண்டி வந்துவிட்டேன் என்பதை என்னாலேயே நம்ப முடியவில்லை.
காதலில் தோல்வி ஏற்பட்டால் உடனே அழக் கூடாது. நடந்தது நன்மைக்கே என்று நினைத்து வாழ்க்கையைத் தொடர வேண்டு
நான் ஏன் திருமணம் செய்ய வேண்டும்? நான் ஒன்றும் திருமணத்திற்கு எதிரானவன் கிடையாது. நல்ல புரிதல் உள்ள ஆணும், பெண்ணும் செய்து கொள்வது தான் திருமணம். தற்போது விவாகரத்தும் அதிகரித்துவிட்டது. சூழ்நிலைக்கேற்ப என்னையே மாற்றிக் கொள்வேன். யாரோ ஒரு பெண்ணை பார்த்து, பேசி, திருமணம் செய்து கொள்ள முடியாது. சாகும் வரை இவளிடம் தோற்கலாம் என்று நினைக்கும் அளவுக்கு உள்ள பெண் கிடைத்த பிறகே திருமணம்.
STR @ மஞ்சு மனோஜின் திருமண நிச்சயதார்த்தம்
sridevi sreedhar @srikutty45 3h3 hours ago @iam_str to start @selvaraghavan film in April. Hrd its an awesome script. Lookin forward 2 a good film from director
https://pbs.twimg.com/media/B_ZGK1uUIAAMtmN.jpg
Lethal Combo....
நீங்கள் பெருமைப் படும்படி மாறுவேன் - சிம்பு! - Vikatan
கௌதம் மேனன் இயக்கத்தில் சிலம்பரசன் , பல்லவி நடிப்பில் உருவாகி வரும் படம் ‘அச்சம் என்பது மடமையடா’. படத்திற்கு இசை ஏ.ஆர்.ரஹ்மான். தாமரை மற்றும் மதன் கார்க்கி படத்திற்கு பாடல்கள் எழுதுகின்றனர்.
‘விண்ணைத்தாண்டி வருவாயா’ படத்தை போலவே இப்படத்திற்கும் அதீத எதிர்பார்ப்புகள் எகிறி உள்ளன. அந்த படத்தின் பாடல்களும் சரி, படமும் சரி இப்போதும் இளசுகளின் டாப் விருப்பமாக இருந்து வருகிறது. அந்த லிஸ்டில் தற்போது அடுத்த படம் உருவாகி வருகிறது ‘அச்சம் என்பது மடமையடா’.
http://cinema.vikatan.com/uploaded/t...i-stills22.jpg
தற்போது படத்தின் முதற்கட்ட படப்பிடிப்புகள் முடிந்துவிட்டன என தனது ட்விட்டர் பக்கத்தில் சிம்பு தெரிவித்துள்ளார். மேலும் இந்த குழுவுடன் இணைந்து பணியாற்றியது மன அமைதியை தருகிறது. ஏப்ரல் வரை காத்திருக்க முடியவில்லை. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் விரைவில் என ட்வீட் செய்துள்ளார்.
இந்நிலையில் தனது அடுத்த ட்வீட்டில், நேற்று ‘வாலு’ படம் தள்ளிப்போவதால் சற்றே மன உளைச்சலுடன் ஒரு ட்வீட் செய்திருந்தார். அதற்கு பதில் கூறும் வகையில் , கொஞ்சம் அப்செட், இப்போ ஓகே, எனது ரசிகர்களான உங்களின் அன்புக்கு நன்றிகள். கண்டிப்பாக நீங்கள் பெருமை படுமளவிற்கு வருவேன் , நீங்க இல்லாம நான் இல்ல’ என ட்வீட் செய்துள்ளார்.
செல்வராகவன் படம் - சிம்புவுடன் நடிக்கும் த்ரிஷா, தாப்ஸி.....webulagam
தனுஷின் வுண்டர்பார் தயாரிப்பில் செல்வராகவன் இயக்கும் படம் அடுத்த மாதம் தொடங்குகிறது. சிம்பு ஹீரோவாக நடிக்கும் இந்தப் படத்தில் இரண்டு நாயகிகள் இருக்கிறார்கள்.
செல்வராகவன் படத்தில் நாயகிகளுக்கு அதிக முக்கியத்துவம் இருக்கும். இந்தப் படத்திலும் அப்படியே. த்ரிஷா மற்றும் தாப்ஸி ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாக உறுதி செய்யப்படாத தகவல்கள் கூறுகின்றன.
முக்கியமான விஷயம், நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்தப் படத்துக்கு யுவன் இசையமைக்கிறார். செல்வா - யுவன் என்ற வெற்றிக்கூட்டணி மீண்டும் இணைவது இசை ரசிகர்களுக்கு மகிழ்ச்சி தரும் விஷயம்.
கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் சிம்பு... இசை அனிருத்!
ஆஃப் த ரெக்கார்டு! - vikatan
புத்த இயக்குனர் இயக்கத்தில் விரல் நடிகர் நடிக்கும் படத்தில், காணாமல் போன ஹீரோயினைத் தேடிக் கண்டுபிடிக்கும் கேரக்டராம். ஆனால் ஹீரோவே அவ்வப்போது ஷூட்டிங்கில் காணாமல் போய்விடுவதுதான் கடுப்பு.
கௌதம் மேனன், சிம்பு படத்தில் ராணா
ஆரம்பம் கொடுத்த எண்ட்ரி ராணாவிற்கு இப்போது கோலிவுட்டில் அடிக்கடி வாய்ப்புகள் குவிய துவங்கி விட்டன. ஏற்கனவே தெலுங்கில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள ‘பகுபலி’ , தமிழில் ’மகாபலி’ என்னும் பெயரில் வெளியாக உள்ளது.
இதுமட்டுமின்றி தமிழில் உருவாகும் மலையாள ‘பெங்களூரு டேஸ்’ ரீமேக் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தற்போது கௌதம் மேனன் இயக்கத்தில் சிலம்பரசன் , பல்லவி நடித்து வரும் படம் ‘அச்சம் என்பது மடமையடா’.
‘என்னை அறிந்தால்’ படத்திற்காக இந்த படத்தை பாதியில் நிறுத்தி வைத்திருந்து இப்போது மீண்டும் துவங்கி நடந்து வருகிறது. இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் ராணா நடிக்க இருக்கிறார்.
சமீபத்தில் சென்னையில் பிரபல ஸ்டார் ஹோட்டலில் ராணாவை சந்தித்த கௌதம் மேனன் படத்தின் கதை மற்றும் ராணாவின் ரோல் குறித்து விளக்கவே ராணாவும் ஓகே சொல்லிவிட்டாராம். எனவே அச்சம் என்பது மடமையடா படத்தில் ராணா சிறப்பு தோற்றத்தில் நடிக்க இருக்கிறார்.
ஆரம்பமானது செல்வராகவன் படம்! சிம்பு ஹாப்பி !
சிலம்பரசன் நடிக்கவிருக்கும் அடுத்தப் படத்தினை செல்வராகவன் இயக்குகிறார். முன்னதாக படத்திற்கான போட்டோ ஷூட் நிறைவடைந்துவிட்டது.
இரண்டாம் உலகம் படம் வெளியாகி இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு சிம்புவை வைத்து அடுத்தப் படத்தினை இயக்கவிருக்கிறார் செல்வராகவன். சிம்புவுக்கு ஜோடியாக த்ரிஷா மற்றும் டாப்ஸி நடிக்கிறார்கள். முக்கிய கதாப்பாத்திரத்தில் ஜெகபதி பாபு நடிக்கிறார்.
படத்திற்கு இசை யுவன் சங்கர் ராஜா. செல்வராகவனின் நெருங்கிய நண்பரான அரவிந்த் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்கிறார். இவர் ஏற்கெனவே செல்வராகவனின் காதல்கொண்டேன், புதுப்பேட்டை மற்றும் 7ஜி ஜெயின்போ காலனி உள்ளிட்ட படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர்.
சிம்பு தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், “ இயக்குநர் செல்வராகவனின் படத்திற்கான போட்டோ ஷூட் முடிந்துவிட்டது. க்ரேட் வோர்க் வித் த்ரிஷா, டாப்ஸி, ஜெகபதி சார்” என்று டிவிட் செய்திருக்கிறார். சிம்புவின் வாலு படம் மே 9 வெளியாகவிருப்பது குறிப்பிடத்தக்கது.
கௌதம், சிம்பு படம் - நாயகி பல்லவி சுபாஷ் நீக்கம்
என்னை அறிந்தால் படத்துக்கு முன்பு கௌதம் சிம்புவை வைத்து ஒரு படத்தை தொடங்கினார். என்னை அறிந்தால் வாய்ப்பு கிடைத்ததும் அதனை நிறுத்தி வைத்தார். தற்போது அந்தப் படம் மீண்டும் டேக் ஆஃப் ஆகியுள்ளது.
அச்சம் என்பது மடமையடா என பெயர் வைக்கப்பட்டிருக்கும் அப்படத்தில் பல்லவி சுபாஷ் ஹீரோயினாக ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். தற்போது அவர் படத்தில் இல்லை.
கௌதம் திடீரென என்னை அறிந்தால் படத்துக்குப் போனதால் பல்லவி சுபாஷ் தந்த தேதிகள் வீணாகிவிட்டதாகவும், தற்போது அவர் வேறு வேலைகளில் பிஸியாக இருப்பதால் மீண்டும் கால்ஷீட் தரவில்லை எனவும் கூறப்படுகிறது.
தற்போது வேறு நாயகியை ஒப்பந்தம் செய்ய முடிவு செய்துள்ளனர்.
கௌதம் படத்தில் சிம்புவோடு சேருகிறார் சமந்தா !
கௌதம்மேனன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் அச்சம்என்பதுமடமையடா படத்தின் நாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த பல்லவிசுபாஷ், படத்திலிருந்து விலகிவிட்டார். படம் மிகவும் தாமதமாவதால் அவர் விலகிக்கொண்டார் என்று சொல்லப்படுகிறது. அதற்குப் பிறகு இந்தப்படத்தில் நாயகியாக நடிக்க வைப்பதற்காகப் பல பெயர்களைப் பரிசீலித்தாராம் கௌதம்மேனன்.
கடைசியாக அவர் செய்திருக்கும் முடிவின்படி சிம்பு ஜோடியாக நடிக்கவிருப்பவர் சமந்தா என்று சொல்லப்படுகிறது. சமந்தா இப்போது விக்ரமுடன் பத்துஎண்றதுக்குள்ள, சூர்யவுடன் 24, தனுஷ் படம் ஆகிய படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார். இது தவிர தெலுங்கிலும் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறாராம். எனவே அவருடைய தேதிகள் கிடைப்பது கடினமாக இருக்கிறதாம். இருந்தாலும் கௌதம் படத்தில் நடிக்க சமந்தா தயாராக இருப்பதால் தேதிகள் எப்போது என்பதை முடிவு செய்துவிட்டு அதுபற்றிய அறிவிப்பை வெளியிடலாம் என்று இருக்கிறார்களாம்.
சமந்தாவை நடிக்க வைக்க இன்னொரு காரணமும் இருக்கிறதென்று சொல்கிறார்கள். விண்ணைத்தாண்டிவருவாயா படத்தின் தெலுங்குப்பதிப்பில் சமந்தா நடித்திருந்தார். இந்தப்படத்தையும் அதுபோலவே தமிழ் தெலுங்கு ஆகிய இருமொழிகளிலும் எடுக்கத் திட்டமிடுகிறாராம் கௌதம்மேனன். அதனால் இரண்டு மொழிகளிலும் பிரபலமாக இருக்கும் சமந்தாவையே நாயகியாக்கிவிடலாம் என்ற அவர் முடிவு செய்திருக்கிறாராம். சிம்புவுக்கும் இதில் சம்மதம் என்பதால் சமந்தாவின் தேதிகள் கிடைத்ததும் வேகமாகப் படப்பிடிப்பு தொடங்கிவிடும் என்று சொல்கிறார்கள்.
STR's emotional speech
https://www.youtube.com/watch?v=U4ububYgoo4
மீண்டும் சிம்பு படத்தில் திருப்பம்...ஹீரோயினாக மஞ்சிமா மோகன்
கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் படம் ‘அச்சம் என்பது மடமையடா' படத்தின் நாயகியாக மலையாள நடிகை மஞ்சிமா மோகன் நடிக்க இருக்கிறார். இதற்கு முன்பு பல்லவி சுபாஷ் தேர்வு செய்யப்படிருந்தார். மேலும் அவரது கால்ஷீட் பிசி காரணமாக அவருக்கு பதில் சமந்தா நடிப்பார் என கூறப்பட்டது.
சமந்தாவும் தொடர்ச்சியாக ’விஐபி 2’, ‘24’,’விஜய் 59’ என பிசியாக இருப்பதால் கால்ஷீட் கிடைக்கவில்லை என்பதால் தற்போது மஞ்சிமா மோகன் தேர்வாகியுள்ளார். சமீபத்தில் வெளியான மலையாள படமான ‘ஒரு வடக்கன் செல்ஃபி’ படத்தில் இவரது நடிப்பை பார்த்து கௌதம் மேனன் இவரைத் தேர்வு செய்துள்ளதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மஞ்சிமா மோகன் மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பல படங்களில் நடித்தவர். மேலும் சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான மாநில விருதும் பெற்றவர். இந்நிலையில் தெலுங்கில் உருவாக உள்ள ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தின் ஹீரோ நாக சைதன்யா என்பது உறுதியான நிலையில் இரு மொழி படங்களையும் ஒரே நேரத்தில் எடுக்க இருக்கும் கௌதம் மேனன் தெலுங்கிலும் மஞ்சிமாவையே நடிக்க வைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
மதியம் வந்தால் போதும்- கௌதம் படத்தில் சிம்புவுக்குச் சலுகை.
கௌதம் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் அச்சம்என்பதுமடமையடா படத்தின் படப்பிடிப்பு படுவேகமாக நடந்துகொண்டிருக்கிறதாம். தமிழ் தெலுங்கு ஆகிய இருமொழிகளிலும் ஒரேநேரத்தில் தயாராகும் இந்தப்படத்தில் தமிழில் நாயகனாக சிம்புவும் தெலுங்கில் நாயகனாக நாகசைதன்யாவும் நடித்துக்கொண்டிருக்கிறார்கள்.
தற்பொழுது இந்தப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடந்துகொண்டிருக்கிறது. தமிழில் எடுத்துவிட்டு அப்புறம் தெலுங்கு என்றில்லாமல் தினமும் இரண்டுமொழிகளுக்கும் சேர்த்தே படத்தை எடுத்துக்கொண்டிருக்கிறார் என்று சொல்கிறார்கள். இதனால் தெலுங்கு நாயகன் நாகசைதன்யா சென்னை வந்திருக்கிறாராம். அவருக்குத் தினமும் அரைநாள்தான் படப்பிடிப்பு.
காலையில் அவர் சம்பந்தப்பட்ட தெலுங்குப்படத்தின் காட்சிகளைப் படமாக்குகிறாராம் கௌதம். மதியத்துக்கு மேல் சிம்பு நடிக்கிறாராம். அவர் தூங்கி எழுந்து தயாராகிப் படப்பிடிப்புக்கு வர மதியமாகிவிடும் என்று வழக்கமாகச் சொல்லப்படும். அதனாலேயே அவருக்கு மதியத்துக்கு மேல் படப்பிடிப்பு வைத்துவிட்டார் போலும். சிம்பு வந்ததும், தமிழ்ப்படத்துக்கான காட்சிகள் படமாக்கப்படுகின்றனவாம்.
நாயகியாக நடிக்கும் மஞ்சிமாமோகனுக்குத்தான் ஓய்வில்லை. இரண்டு மொழிகளிலும் அவர்தான் நாயகி என்பதால் முழுநாளும் படப்பிடிப்பில் இருக்கவேண்டும். ஒரு நடிகை முழுநாள் படப்பிடிப்பில் இருப்பதிலொன்றும் சிக்கலில்லை, மலையாளப்பெண்ணான அவர், காலையில் தெலுங்கு பேசுவதுபோல் வாயசைக்கவேண்டும் மாலையில் தமிழ்பேசுவதுபோல வாயசைக்கவேண்டும் என்பதுதான் கஷ்டம்.
துவங்கியது சிம்பு - செல்வராகவன் படம் !
http://img.vikatan.com/album/2015/05...umb/104583.jpg http://img.vikatan.com/album/2015/05...umb/104584.jpg http://img.vikatan.com/album/2015/05...umb/104585.jpg
திருட்டுக் கல்யாணம் - சிம்பு பாடும் ஆச மேல ஆச பாடல் மேக்கிங் வீடியோ!
https://www.youtube.com/watch?v=bkLaNARkqLI
சிம்பு நடித்த படங்கள் வெளியாகாமல் இருந்தாலும் புதியபடங்களில் அவரை ஒப்பந்தம் செய்யப் பலரும் ஆர்வம் காட்டிவருவது வியப்பான செய்திதான். அவர் இப்போது கௌதம்மேனனின் அச்சம்என்பதுமடமையடா, செல்வராகவனின் படம் ஆகியனவற்றில் நடித்துக்கொண்டிருக்கிறார்.
இந்தப்படங்களைத் தொடர்ந்து, உதயநிதியின் மனைவி கிருத்திகாஉதயநிதியின் இயக்கத்தில் ஒரு படம் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார். அந்தப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் தொடங்கவில்லை. திரைக்கதை எழுதும் வேலைகளை முழுமையாக முடித்துவிட்டுப் படப்பிடிப்பைத் தொடங்கத் தயாராகிவிட்டாராம் இயக்குநர் கிருத்திகாஉதயநிதி. இந்நிலையில் அந்தப்படத்தின் தயாரிப்பாளர் தரப்பில் சிக்கல் ஏற்பட்டுவிட்டதாகச் சொல்லப்படுகிறது.
இதனால் எப்போது படப்பிடிப்பு என்று திட்டமிடுவதில் தாமதம் ஏற்பட்டிருக்கிறதாம். இந்நிலையில் இந்தச்சிக்கலை அறிந்த உதயநிதி அதில் தலையிட்டுச் சிக்கலைத் தீர்த்துவைத்துவிட்டதாகச் சொல்லப்படுகிறது. இதனால் கௌதம்மேனன் மற்றும் செல்வராகவனின் படப்பிடிப்புகள் முடிவடைகிற நேரத்தில் கிருத்திகா இயக்கும் படத்தின் படப்பிடிப்பு தொடங்கிவிடும் என்று சொல்கிறார்கள்.
இந்த மூன்றுபடங்களையும் முடித்துவிட்டுத்தான் அடுத்த படங்களை ஒப்புக்கொள்வது என்று உறுதியாகச் சொல்லியிருக்கிறாராம் சிம்பு. அது மட்டுமின்றி முதலில் வாலு, அடுத்து இதுநம்மஆளு ஆகிய படங்களை வெளியிடுவதும் வேகமாக நடக்கவேண்டும் என்பதிலும் கவனமாக இருக்கிறார் என்று அவருக்கு நெருக்கமானவர்கள் சொல்கிறார்கள்
செல்வராகவன், சிம்பு இணையும் படத்தின் பெயர் கான்
இரண்டாம் உலகம் தோல்விக்குப் பிறகு செல்வராகவன் சிம்புவை வைத்து படம் இயக்குகிறார். சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது.
இந்தப் படத்தில் தாப்ஸி, கேத்ரின் தெரேசா ஆகியோர் நடிக்கின்றனர். ஆக்ஷன் த்ரில்லராக படம் தயாராகிறது. யுவன் இசையமைக்க, அர்விந்த் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்கிறார். இந்த முக்கூட்டணி பல வருடங்களுக்குப் பிறகு இணைந்துள்ளது.
இந்தப் படத்துக்கு கான் என்று பெயர் வைத்துள்ளனர். கான் என்றால் தமிழில் காடு என்று அர்த்தம். இதில் சிம்பு முருக பக்தராகவும், தாப்ஸி போலீஸ் அதிகாரியாகவும் நடிக்கின்றனர்
எனக்கு என் ரசிகர்கள் இருக்கிறார்கள்.. சிம்பு அதிரடி
’வாலு’ படம் பல போராட்டங்களை கடந்து ஜூன் மாதம் 12ம் தேதி என அறிவிக்கப்பட்டுள்ளது, ஒரு படத்திற்கு இத்தனை முறை ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு தள்ளிப்போடப்பட்ட படம் சிம்புவின் ‘வாலு’ படமாகத்தான் இருக்கும்.'விஸ்வரூபம்’, ‘மாஸ்’ , ’என்னை அறிந்தால்’ போன்ற படங்கள் கூட இரண்டாவது , மூன்றாவது அறிவிப்பில் ரிலீஸ் உறுதியானது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் ”ஒரே நேரத்தில், பாண்டிராஜுடன் ‘இது நம்ம ஆளு’, கௌதம் மேனனின் ‘அச்சம் என்பது மடமையடா’, செல்வராகவனின் புதிய படமென தொடர் ஷூட்டிங்கில் இருக்கிறேன்’. வித்தியாசமான அனுபவம், ஒவ்வொரு படமும் ஒவ்வொரு விதமான ரோல்” என சிம்பு ட்வீட் செய்துள்ளார்.
இது தவிர்த்து ”என் ரசிகர்கள் என்னுடன் இருக்கிறார்கள், மற்ற நடிகர்களின் ரசிகர்கள் எனக்குத் தேவையில்லை, என் ரசிகர்களின் , அன்பும் ஆதரவாலும் நான் நெகிழ்ந்து போயுள்ளேன். உங்கள் அன்புக்கு நன்றி” என ட்விட்டரில் தெரிவித்துள்ளார் சிம்பு.
இந்நிலையில், பாண்டிராஜ் தனது ட்விட்டரில் , எனது சினிமா வாழ்வில் 'இது நம்ம ஆளு’ படம் மிக முக்கியமான படம். எந்த நிலையிலும் அப்படத்தை எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் ரிலீஸ் செய்வேன். சிம்பு உங்களை நான் வேறு பரிமாணத்தில் சந்திப்பேன்” என ட்வீட் செய்துள்ளார்.
https://pbs.twimg.com/profile_images...vRt_normal.jpg STR @iam_str · May 26
Bin a great experience :) After @pandiraj3 then @menongautham and @selvaraghavan..Totally different kinds of roles ..Hope I deliver my best
346 retweets 614 favorites
அதெல்லாம் கடவுள் பாத்துப்பாரு.. பீலாகும் சிம்பு!
சென்னை: அடுத்தடுத்து இரு காதல்கள் தோல்வியில் முடிந்ததால் நொந்து போயிருந்த சிம்பு தற்போது எனது திருமணம் கடவுளின் விருப்பபடி நடக்கும் என்று பீலிங்க்ஸ் காட்டியுள்ளார். தமிழ்த் திரையுலகின் இளம் நடிகரான சிம்பு முதலில் நயன்தாராவை வல்லவன் படத்தின் போது உருகி உருகி காதலித்தார், பிரேக் அப் ஆனது தான் மிச்சம். மீண்டும் நடிகை ஹன்சிகாவை வாலு திரைப்படத்தின் போது காதலித்தார் , என் வாழ்க்கையே உன்னோடுதான் என்று இருந்த இருவருக்கும் இடையில் என்ன நடந்ததோ முதல் வாரம் காதலிக்கிறேன் என்று மீடியாவைக் கூப்பிட்டு சொன்னவர்கள் மறுவாரம் பிரிந்து விட்டோம் என்று அதே மீடியாவின் வாயிலாக அறிவித்துப் பிரிந்தார்கள். My Marriage is God Plan – Actor Simbu எந்த நல்ல நேரத்தில் வாலுவுக்கு பூஜை போட்டார்களோ படம் இன்னும் வெளிவராமல் இதோ அதோ என்று பல ரிலீஸ் தேதிகளைப் பார்த்து விட்டது, இன்னும் வெளியானபாடில்லை. இந்தியாவிலேயே முதல்முறையாக பல ரிலீஸ் தேதிகளைப் பார்த்த படம் என்று பட்டம் கொடுக்கும் அளவிற்கு வாலு ஆளாகி விட்டது. காதலி திரையுலகின் நம்பர் ஒன் நாயகியாக வலம்வர நாயகன் படம் வெளியாவதே பெரும்பாடாக உள்ளது, இந்நிலையில் சிம்பு சமூக வலைதளமொன்றில் அவரின் ரசிகர்கள் கேள்வி கேட்டதற்கு கடவுளின் விருப்பப்படி எனது திருமணம் நடைபெறும் என்று தற்போது கூறியிருக்கிறார். நடக்குமா நடக்காதா... !?!
விரல் நடிகரின் நாளொரு தள்ளிவைப்பால் கோலிவுட்டில் சலசலப்பு அதிகமாகி உள்ளது. மேலும் இப்போது நடக்கவிருந்த செய்தியாளர் சந்திப்பும் தள்ளிவைக்கப்பட நடிகர் தரப்பிலிருந்து மீண்டும் ஒரு தள்ளிவைப்பு என மீடியாக்கள் செய்திகளை வெளியிட அப்செட்டில் இருக்கிறாராம் விரலு! ...vikatan
தனுஷ் படத்தில் சிம்பு நடித்தது எப்படி? - ’காக்கா முட்டை’ இயக்குநர் மணிகண்டன் எக்ஸ்க்ளூசிவ் பேட்டி! சர்வதேச திரைப்படவிருதுகள், தேசியவிருதுகள் என்று பல விருதுகளைக் குவித்திருத்திருக்கும் காக்காமுட்டை படத்தின் இயக்குநர் மணிகண்டனிடம் ஓர் உரையாடல்.
யாரிடமும் உதவிஇயக்குநராக இல்லாமலே இந்தப்படத்தை இயக்கும் வாய்ப்பைப் பெற்றது எப்படி?
நான் உதவிஒளிப்பதிவாளராகப் பல ஆண்டுகள் வேலை செய்திருக்கிறேன். 2010 இல் நான் இய,க்கிய குறும்படமொன்றை வெற்றிமாறன் பார்த்திருந்தார். அப்போதே என்னைத் தெரியும். அதன்பின் ஒராண்டு கழித்து என்னைக் கூப்பிட்டு என்ன செய்கிறீர்கள் என்று கேட்டார். இந்தப்படத்தின் கதையைச் சொன்னேன். உடனே தாம் தயாரிப்பதாகச் சொன்னார்.
ஒளிப்பதிவாளராக முயலாமல் இயக்குநரானது ஏன்?
நான் ஒளிப்பதிவாளர் ஆகத்தான் முயன்றுகொண்டிருந்தேன். சில வாய்ப்புகளும் வருகிறமாதிரி இருந்தது. அப்போது என்னுடைய குறும்படங்களைப் பார்த்த நண்பர்கள், நீங்கள் இயக்குநராகவே இருக்கலாமே என்று சொன்னார்கள். எனவே படம் இயக்கும் எண்ணத்துக்கு வந்தேன். படம் இயக்குவோம் சரியாக வரவில்லையென்றால் ஒளிப்பதிவில் மட்டும் கவனம் செலுத்துவோம் என்று முடிவுசெய்துதான் இதில் இறங்கினேன்.
காக்காமுட்டை என்று பெயர் வைத்தது எதனால்?
நாம் புறாவுக்கோ கிளிக்கோ கொடுக்கிற முக்கியத்துவத்தைக் காக்கைக்குக் கொடுப்பதில்லை, அது கறுப்பாக இருப்பதாலேயே ஒதுக்கப்படுவதாக உணர்கிறேன் அதுவே வெள்ளையாக இருந்திருந்தால் எல்லோரும் கொண்டாடியிருப்பார்கள் என்று தோன்றியது. எனவே கறுப்பாக இருப்பவர்களைப் பிரதிநிதித்துவம் செய்கிற மாதிரி காக்காவை வைத்தேன். படத்தில் வருகிற மாதிரி நிஜத்திலும் காக்காமுட்டை குடிப்போம் என்று சொல்லியிருந்தார்கள். அதனால் அந்தப்பெயரை வைத்தேன். தொடக்கத்தில் ஒர்க்கிங்டைட்டிலாகத்தான் வைத்தேன். கேட்கிற எல்லோருக்கும் அது பிடித்திருந்ததால் அப்படியே வைத்துவிட்டோம்.
படத்தில் நடித்த சிறுவர்களைத் தேர்வு செய்தது எப்படி?
காசிமேட்டில் அண்ணாநகர்குப்பம் என்று இருந்தது. (இப்போது இல்லையாம்) அந்தக் குப்பத்தில் இருந்த இந்தச்சிறுவர்களை ரெபரன்ஸ்க்காக படமெடுத்து வந்தேன். அவர்களை நடிக்கவைக்கும் எண்ணமில்லை. படங்கள் மற்றும் தொலைக்காட்சித்தொடர்களில் நடிக்கும் சிறுவர்களை நடிக்கவைத்துப் பார்த்தோம். எதுவும் சரியாக இல்லை. அதன்பின் இந்தச்சிறுவர்களை அழைத்து வந்து இரண்டுமாதங்கள் பயிற்சி கொடுத்தோம். கூத்துப்பட்டறையிலிருந்து முத்துக்குமார் என்றொருவர் வந்து நடிப்புச் சொல்லிக்கொடுத்தார்.
படப்பிடிப்பில் சரியாக நடித்தார்களா?
படப்பிடிப்பு தொடங்கி ஒருவாரம் சிரமப்பட்டார்கள். அதன்பின் சரியாகச் செய்யத் தொடங்கினார்கள். கடைசிக்கட்டத்தில் தேர்ந்த தொழில்முறை நடிகர்கள் போல் ஆகிவிட்டார்கள்.
எடுக்கும் போதே விருதுகளுக்கான படம் என்று முடிவு செய்தது எதனால்?
விருதுக்கான படம் என்று நினைத்து எடுக்கவில்லை, இப்போது இருக்கும் தரத்தில் சரியாக இருக்கவேண்டும் என்று உறுதியாக இருந்தேன். எடுக்கும்போதே இப்படித்தான் எடுப்பேன் என்பதைச் சொல்லிவிட்டேன்.
அவர்களும் அதை அப்படியே ஒப்புக்கொண்டு எடுக்கச்சொன்னார்கள்.
தனுஷ் தயாரிக்கும் படத்தில் சிம்புவை நடிக்கவைப்பதென்று முடிவு செய்தது எப்படி?
நான் கதை எழுதும்போதே சிம்பு என்றுதான் எழுதினேன். அதற்குக் காரணம் சிறுவர்களிடம் பேசிக்கொண்டிருந்தபோது சிம்புவை அவர்களுக்கு மிகவும் பிடித்திருக்கிறது என்பது தெரிந்தது. அதனால் அப்படி எழுதினேன். இந்தப்படம் தனுஷ் கைகளுக்குப் போனதும், எனக்கே ஒரு தயக்கம் வந்தது. ஆனால் தனுஷ் இதைக்கேட்டதும் உடனே ஒப்புக்கொண்டதோடு அவரே சிம்புவிடமும் பேசி ஒப்புக்கொள்ளவைத்தார். சிம்புவும் பெரிதாகக் கேள்விகள் கேட்காமல் நடிக்க ஒப்புக்கொண்டார். சிம்புவுக்கும் தனுஷூக்கும் சிக்கல் என்று வெளியில்தான் சொல்லப்பட்டது. அவர்கள் இருவரும் பேசிக்கொள்வதைப் பார்த்தால் இருவருக்கும் நல்லபுரிதல் இருப்பது தெரியும்.
படத்தில்,சிம்புவை அவன்இவன் என்று பேசுவதெல்லாம் அவருக்கு முன்பே தெரியுமா?
எல்லாமே அவருக்குத் தெரியும், அவருடைய மெச்சுரிட்டிலெவல் இந்தப்படத்தின் மூலம் நான் நன்றாக உணர்ந்துகொண்டேன். என்ன படம்? என்ன கதை?காட்சியின் நோக்கம் எல்லாவற்றையும் உணர்ந்து நடித்தார். பத்திரிகையாளர்கள் கேள்வி கேட்பதுகூட, இப்படித்தான் இருக்கும் என்று முன்பே சொல்லிவிட்டேன். அவரும் இப்படித்தானே இருக்கிறது அப்படியே செய்துவிடலாம் என்று சொன்னார். தயங்கிக்கூடச் சரி என்று சொல்லவில்லை கேட்டவுடனே சரி என்றார்.
விருதுக்குழுவினர்களிடம் அங்கீகாரம் பெற்றுவிட்டீர்கள், வெகுமக்களிடம் வரவேற்பு எப்படியிருக்கும் என்கிற பதட்டம் இருக்கிறதா?
திரைப்படவிழாக்களில் இந்தப்படம் திரையிடப்பட்டபோதே ஜெனரல்ஆடியன்ஸ் என்று சொல்லப்படுகிற நிறையப்பேர் படத்தைப் பார்த்துவிட்டு மிகவும் வரவேற்றுப்பேசினார்கள். விருதுகள் வாங்கியதைவிட அது அதிகசந்தோசத்தைக் கொடுத்தது. எனவே வெகுமக்களும் இந்தப்படத்தைப் பெரிதும் வரவேற்பார்கள் என்கிற நம்பிக்கை எனக்கு நிறையவே இருக்கிறது.
நீங்கள் அடுத்து இயக்கியிருக்கும் குற்றமும் தண்டனையும் படம் பற்றி?
நான் முதலில் இயக்க ஒப்புக்கொண்டது அந்தப்படம்தான். அது சில மாதங்கள் தள்ளிப்போன நேரத்தில் இந்தக்கதையை எழுதினேன். எழுதியவுடன் இது முதல்படமாக இருந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது எனவே விதார்த்திடம் சொல்லிவிட்டு இந்தப்படத்தை முடித்துவிட்டு அதைத் தொடங்கினேன். அந்தப்படமும் தயாராகிவிட்டது. இளையராஜாவின் இசைக்காகக் காத்திருக்கிறோம். அது காக்காமுட்டையிலிருந்து முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும்.- அ.தமிழன்பன் -
'கெட்டவன்' மீண்டும் தொடக்கமா?- சிம்பு பதில்
http://tamil.thehindu.com/multimedia...n_2435138f.jpg
'கெட்டவன்' படத்தை மீண்டும் துவங்கும் திட்டமில்லை என்று சிம்பு தெரிவித்தார்.
நந்து இயக்கத்தில் சிம்பு, லேகா வாஷிங்டன் உள்ளிட்ட பலர் நடிக்க தொடங்கப்பட்ட படம் 'கெட்டவன்'. யுவன் சங்கர் ராஜா இசையமைக்க இருந்த இப்படத்தை பரதன் பிலிம்ஸ் தயாரித்தது. இயக்குநருக்கும் சிம்புவுக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடால் படம் பாதியில் கைவிடப்பட்டது.
இந்நிலையில், சில நாட்களாக, நந்து சிம்புவை சந்தித்ததாகவும், மீண்டும் 'கெட்டவன்' படத்தை துவங்க இருக்கிறார்கள் என்றும் செய்திகள் வெளியாகின. மேலும், நயன்தாராவிடம் நாயகியாக நடிக்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
இது குறித்து சிம்புவிடம் கேட்டபோது "'கெட்டவன்' படத்தை மீண்டும் துவங்கும் திட்டம் எல்லாம் கண்டிப்பாக இல்லை. தற்போது 'அச்சம் என்பது மடமையடா', செல்வராகவன் படம் ஆகியவற்றில் நடித்து வருகிறேன். இப்படங்களின் படப்பிடிப்பு தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. இன்று (11/6/2015) சென்னை வந்துவிடுவேன். அதனைத் தொடர்ந்து 'வாலு' வெளியீட்டு தேதியை முடிவு செய்து அறிவிக்க இருக்கிறேன்" என்று தெரிவித்தார்.
paavam.. intha paiyana paatha romba paavama irukku.. romba marittan ippo so i pray good things happen soon for him..
சிம்புவின் ஒன்றரை மாத மாரத்தான்
நடிகர் விஜய் கடந்த பதினைந்து, இருபது வருடங்களாக தொடர்ச்சியாக நடித்துக் கொண்டிருக்கிறார். அவரது வெற்றிக்கு பல காரணங்கள் சொல்லப்பட்டாலும், இந்த கடும் உழைப்புக்கு முக்கிய பங்கு உண்டு. ஒரு படம் முடிந்தால் சில தினங்கள் அல்லது சில வாரங்கள் மட்டும் ஓய்வு. அதைவிட்டால் எப்போதும் படப்பிடிப்பு... படப்பிடிப்பு...
சிம்பு அப்படியல்ல. ஒரு படத்தை தொடங்கிவிட்டு அவர் வேறு வேலை பார்த்துக் கொண்டிருப்பார். பெரும்பாலும் அது வெட்டி வேலையாகதான் இருக்கும். சிம்பு நடித்து மூன்று வருடங்களாக ஒரு படமும் வெளியாகவில்லை என்றால் அதற்கு இந்த வெ.வேலைதான் காரணம்.
இப்படியேப் போனால் சினிமா நம்மை மறந்துவிடும் என்பதை தாமதமாக உணர்ந்தவர், கடந்த ஒன்றரை மாதங்களாக செல்வராகவன் இயக்கத்தில் கான் படத்திலும், கௌதம் இயக்கத்தில் அச்சம் என்பது மடமையடா படத்திலும் மாறி மாறி நடித்து வருகிறார். சிம்பு அவரது வாழ்க்கையில் தொடர்ச்சியாக ஒன்றரை மாதங்கள் படப்பிடிப்பில் கலந்து கொள்வது இப்போதுதான். அதனை அவர் மாரத்தான் என்று குறிப்பிட்டு ட்விட்டரில் பெருமிதப்பட்டிருக்கிறார்.
இந்தியாவில் வாழ்நாளெல்லாம் வேலை பார்ப்பவர்கள் இருப்பது சிம்புவுக்கு தெரியாதோ.
ஜூன் 17-ல் வெளியாகிறது 'கான்' ஃபர்ஸ்ட் லுக்
செல்வராகவன் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் 'கான்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ஜூன் 17ம் தேதி மாலை வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. செல்வராகவன் இயக்கத்தில் சிம்பு, டாப்ஸி, கத்ரீன் தெரஸா, ஜகபதி பாபு உள்ளிட்ட பலர் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி நடைபெற்றது.
முதற்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்ததைத் தொடர்ந்து, படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிட திட்டமிட்டு இருந்தார்கள். படத்திற்கு 'கான்' என்ற தலைப்பை இறுதிப்படுத்தி வைத்தார்கள். படத்தின் முக்கிய காட்சிகள் சிலவற்றை காட்டுக்குள் படமாக்க திட்டமிட்டுள்ளனர்.
இந்நிலையில், "சிம்பு நடித்து வரும் 'கான்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் புதன்கிழமை மாலை 5 மணிக்கு வெளியிடப்படும். உங்களுக்கு பிடிக்கும் என நம்புகிறேன்" என்று இயக்குநர் செல்வராகவன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து இருக்கிறார்.
இப்படத்தில், சிம்பு முருக பக்தராக நடித்து வருகிறார். 'கான்' என்றால் 'காடு' என்று அர்த்தம். போலீஸ் அதிகாரியாக டாப்ஸி நடித்து வருகிறார். ஆக்*ஷன் த்ரில்லர் பாணியில் இப்படம் தயாராகி வருவது குறிப்பிடத்தக்கது.
நிறைய கஷ்டங்களை கடந்து வந்துவிட்டேன்: சிம்பு நேர்காணல்
கடந்த சில ஆண்டுகளாக சினிமா ரேஸில் இருந்து சற்று விலகியிருந்த சிம்பு, தற்போது மீண்டும் சிலிர்த்தெழுந்துள்ளார். ‘வாலு’, ‘இது நம்ம ஆளு’, ‘அச்சம் என்பது மடமையடா’, ‘கான்’, அமீரின் இயக்கத்தில் ஒரு படம் என்று திரையரங்கில் சரவெடி வெடிக்க தயாராக இருக்கிறார். தொடர் படப்பிடிப்புகளுக்கு நடுவில் சில நாட்கள் ஓய்வில் இருக்கும் சிம்புவை சந்தித்தோம்.
இரண்டரை வருட இடைவெளிக்குப் பிறகு தொடர்ந்து படப்பிடிப்பில் ஈடுபடுவது கஷ்டமாக இல்லையா?
ஒரு கஷ்டமும் இல்லை. இதற்கு முன்பும் நான் இப்படி தொடர்ச்சியாக நடித்தவன்தானே? இந்த ஓய்வும் நானாக தேடிக்கொண்டதல்ல. அதுவாகவே அமைந்தது. இப்போது மீண்டும் பரபரப்பான வாழ்க்கையை வாழத் தொடங்கியிருக்கிறேன். இந்த வாழ்க்கை சந்தோஷமாக நகர்கிறது. எப்போதுமே வாழ்க்கையை அதன் போக்கில் அணுகுவதுதான் என் வழக்கம். கடந்த 2 வருடங்களில் எதுவுமே இல்லாத வாழ்க்கையைப் பார்த்துவிட்டேன். இப்போது காலையில் கெளதம் மேனனின் படம், இரவு செல்வராகவனின் படம் என்று பரபரப்பாக வாழ்க்கை நகர்கிறது. இதையும் நான் ரசித்துத்தான் செய்கிறேன்.
‘படையப்பா’ படத்தின் பாடலில், ‘என் ஒரு துளி வியர்வைக்கு ஒரு பவுன் தங்க காசு கொடுத்தது தமிழ் அல்லவா’ என்று ஒரு வரி வரும். அதேபோல இப்போது நான் வியர்வை சிந்தி உழைக்கும் ஒவ்வொரு படத்தின் பலனும் விரைவில் திரையில் தெரியும்.
‘இனிமே இப்படித்தான்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கடந்த இரண்டரை ஆண்டுகளில் நீங்கள் பட்ட பல கஷ்டங்களைச் சொல்லி வருத்தப்பட்டீர்கள். அதைக் கேட்டு வீட்டில் என்ன கூறினார்கள்?
அந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நான் சந்தானத்துக்காக கலந்துகொண்டேன். எந்தவொரு நிகழ்ச்சியிலும் என்ன பேச வேண்டும் என்று தயார் செய்யும் வழக்கம் எனக்கு கிடையாது. என் மனதில் பட்டதை பேசுவேன். அந்த நிகழ்ச்சியிலும் என் மனதுக்குப் பட்டதைப் பேசினேன். கடந்த இரண்டரை வருடங்களில் நான் பட்ட கஷ்டங்களைப் பற்றி பேசினேன்.
சாதாரண மக்களைப் போல் என்னால் கடற்கரை, ஸ்பென்சர், சத்யம் சினிமாஸ் என்று சுற்ற முடியுமா? 700 நாட்கள் சும்மாவே 4 சுவர்களுக்குள் வாழ்வது எவ்வளவு கொடுமையாக இருக்கும் என்பதை யோசித்துப் பாருங்கள். அந்த நாட்களை எப்படி கடந்து வந்தேன் என்பதைத்தான் நான் அன்றைய நிகழ்ச்சியில் பேசினேன். என் அம்மாவும் அப்பாவும் அதற்கு வருத்தப்பட்டார்கள். “ஏன் இப்படியெல்லாம் ஒரு நிகழ்ச்சியில் பேசுகிறாய்? உனக்கு என்ன இல்லை” என்று கேட்டார்கள். அவ்வளவுதான்.
இந்த இருண்ட வாழ்க்கையில் இருந்து வெளியே வருவோம் என்ற நம்பிக்கையை எனக்கு கொடுத்தது என் ரசிகர்கள்தான். அவர்களை என்றைக்குமே நான் மறக்க மாட்டேன். அதே போல “ப்ரோ.. இப்படி வீட்டுக்குள்ளேயே இருக்காதீங்க. சனிக்கிழமையாவது வெளியே வாங்க” என்று திட்டி வெளியே கூட்டிக்கொண்டு போனது அனிருத்தான்.
நீங்கள் எப்போதுமே படப்பிடிப்புக்கு லேட்டாக வருவதாக சொல்கிறார்களே?
நான் லேட்டாக போகிறேன் என்றால் நான் நடித்து இத்தனை படங்கள் எப்படி வெளியானது. அப்படிச் சொல்பவர்கள் இதற்கு பதில் சொல்லட்டும். சிம்பு தாமதமாக வருவார் என்று சொல்லும் இயக்குநர்களிடம், சிம்பு எத்தனை மணிக்கு கிளம்புவார் என்ற கேள்வியைக் கேளுங்கள். அவர்கள் சொல்லும் பதிலுக்காக நான் காத்திருக்கிறேன். சில நாட்கள் நான் தாமதமாக சென்றாலும், முழுக் காட்சிகளையும் முடித்துக் கொடுத்துவிட்டுதான் திரும்பியிருக்கிறேன். லேட்டாக வந்துவிட்டு 6 மணிக்கே கிளம்பவேண்டும் என்று நான் சொன்னதில்லை.
செல்வராகவன் இயக்கத்தில் நடிக்கும் ‘கான்’ பட அனுபவம் எப்படி இருக்கிறது?
ஒவ்வொரு நாளும் நிறைய விஷயங்களை புதிதாக கற்றுக் கொள்கிறேன். நீங்கள் இதுவரை பார்த்த செல்வராகவன் படங்களில் இருந்து இந்தப் படம் மாறுபட்டு இருக்கும். ஒரே ஒரு விஷயம் சொல்லவா.. இதுவரை நீங்கள் ஹீரோக்களை உருவாக்கிய செல்வராகவன் படங்களைத்தான் பார்த்திருப்பீர்கள். இப்போது முதல் முறையாக செல்வராகவன் ஒரு ஹீரோவுக்காக படம் பண்ணுகிறார். இந்தப் படத்தைப் பற்றி இப்போதைக்கு இவ்வளவுதான் சொல்ல முடியும்.
‘இது நம்ம ஆளு’ படத்தில் என்ன பிரச்சினை. ஏன் இந்த தாமதம்?
‘வாலு’ படம் வெளியீட்டுக்கு தயாராகி இருக்கிறது. ஒரு படம் பிரச்சினையில் இருக்கும் போது, அந்தப் படத்தை அப்படியே விட்டு விட்டு அடுத்த படத்தில் கவனம் செலுத்துவது முறையல்ல. நிறைய படங்கள் அதேபோல நிற்கிறது. ‘வாலு’ படத்தை நானே வாங்கி பிரச்சினைகளை முடித்துள்ளேன். இப்படம் வெளியானவுடன் ‘இது நம்ம ஆளு’ படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கான தேதியை அறிவிக்க உள்ளேன். ‘இது நம்ம ஆளு’ படத்தில் எந்த பிரச்சினையும் கிடையாது என்பதுதான் உண்மை. படத்தின் 2 பாடல் காட்சிகளை மட்டும் காட்சிப்படுத்த வேண்டியுள்ளது. மற்றபடி படம் தயார். ‘வாலு’வைத் தொடர்ந்து ‘இது நம்ம ஆளு’ வெளியாகும். இரண்டுமே எனக்கு வேறொரு பரிமாணத்தைக் கொடுக்கும் என்பதில் சந்தேகமில்லை.
நீண்ட நாட்கள் கழித்து வெளியாகவுள்ள ‘வாலு’ படம் எப்படி இருக்கும்?
நிறைய கமர்ஷியல் படங்களைப் பார்த்திருப்பீர்கள். அதில் ஹீரோ, வில்லனை ஏன் அடிக்கிறான் என்பதுதான் படத்தின் மிகப்பெரிய பலம். அந்த பலம் ‘வாலு’வில் மிக அதிகமாக இருக்கிறது. அதுமட்டுமன்றி, நான் நாயகனாக நடித்த படம் 3 வருடங்கள் கழித்து வெளியாகிறது. என் ரசிகர்கள் எதிர்பார்க்கும் விஷயங்கள் ‘வாலு’ படத்தில் இருக்கும். இது ஒரு புதுமுக இயக்குநரின் படம் போலவே இருக்காது. இப்படம் வெளியானதும் அதன் இயக்குநர் விஜய் சந்தர் ஒரு நல்ல கமர்ஷியல் இயக்குநராக உருவெடுப்பார்.
மீண்டும் காதலில் விழும் திட்டம் இருக்கிறதா?
தெரியவில்லை. இப்போது நிம்மதியாக இருக்கிறேன். என்னுடைய வேலையை காதலித்து கொண்டிருக்கிறேன். மீண்டும் காதலிப்பேனா என்று எனக்குத் தெரியாது. எனக்கானவளை நான் பார்க்கும்போது மீண்டும் காதலில் விழலாம்.
எப்போது திருமணம் செய்துகொள்ளப் போகிறீர்கள்?
முதலில் காதலைப் பற்றிக் கேட்டீர்கள். இப்போது திருமணத்தைப் பற்றி கேட்கிறீர்கள். இதற்கும் தெரியாது என்பதுதான் என் பதில். இப்போது இருக்கும் சமூக சூழ்நிலைகளைப் பார்க்கும்போது கல்யாணம் அவ்வளவு எளிது அல்ல என்பது மட்டும் புரிகிறது. ஏதோ ஒரு பெண்ணைப் பார்த்தார்கள், கல்யாணம் பண்ணிக்கிட்டேன் என்பது கஷ்டம். எனக்காக ஒரு பெண் வந்து, இருவரும் முழுமையாக புரிந்துகொள்ளும் நிலையில் எப்போது வேண்டுமானாலும் என் கல்யாணம் நடக்கும்.
இவ்வளவு வெளிப்படையாக பேசும் நீங்கள் உங்களைப் பற்றிய சர்ச்சைகளுக்கு ஏன் விளக்கம் கொடுப்பதில்லை?
உண்மைக்கு விளக்கம் கொடுக்கலாம். பொய்க்கு விளக்கம் கொடுத்தால், அந்தப் பொய் உண்மையாகிவிடும். வாரத்துக்கு ஒரு முறை என்னைப் பற்றி ஏதாவது எழுதிக் கொண்டே இருக்கிறார்கள். அதற்கெல்லாம் விளக்கம் கொடுக்க ஆரம்பித்தால், பிறகு நான் அந்த வேலையை மட்டுமே பார்க்க வேண்டிவரும். மேலும் அதற்கெல்லாம் விளக்கம் கொடுத்தால் சிம்பு கெட்டவனாகி விடுவான்.
என்னை பொறுத்தவரை எனக்கென்று சில ரசிகர்கள் இருக்கிறார்கள். அவர்கள் ரசிக்கிற மாதிரி படங்கள் செய்தாலே போதும். என்னை நம்பி வரும் இயக்குநர்களின் நம்பிக்கைக்கு பாத்திரமாக இருந்தாலே போதும்.
ரசிகர்களின் சண்டை, கண்டுகொள்ளாத அஜித், விஜய் . சமரசம் பேசும் சிம்பு
விஜய், அஜித் ரசிகர்களின் சண்டை விஜய் பிறந்த நாளையும் விட்டு வைக்கவில்லை. விஜய் பிறந்த நாளான இன்று விஜய் பற்றி தப்பான ஹாஸ் டேக்கை ட்விட்டரில் ட்ரெண்ட் செய்தனர் அஜித் ரசிகர்கள். இதனால் இரண்டு ரசிகர்களுக்கிடையே ட்விட்டரில் போர் தொடங்க அதை நிறுத்துமாறு சிம்பு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
விஜய் பிறந்த நாளுக்கு அவரின் ரசிகர்கள் #HBDDearVIJAY என்ற ஹாஸ்டேக்கை ட்விட்டரில் ட்ரெண்ட் செய்தனர். இதற்கு எதிராக அஜித் ரசிகர்கள் #VijayTheCurseOfCinema என்று ஹாஸ்டேக்கை ட்ரெண்ட் செய்தார்கள். அந்த ஹாஸ்டேக்கில் விஜய் பற்றி காமெடி, கிண்டல்கள். மீம்ஸ்கள் மற்றும் தவறான வார்த்தைகளால் புண்படுத்தும் விதமான புகைப்படங்களை ட்விட் செய்துவந்தனர். இதனால் மிகுந்த கோபத்தில் இருக்கிறார்கள் விஜய் ரசிகர்கள். அதனால் அவர்களும் அஜித் சார்ந்த காமெடி மீம்ஸ்களை ட்விட்டரில் பதிவிட்டுவருகின்றனர்.
இதனால் சிம்பு தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் விஜய் - அஜித் இரண்டு ரசிகர்களுக்கும் இடையே சண்டை வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். தொடர்ந்து அவர் ட்விட்டரில் ட்விட்டியதாவது, “ நான் தயவுசெய்து கேட்டுக்கொள்கிறேன், உண்மையான தல ரசிகர்கள் என்றால் தவறான ஹாஸ்டேக்கை பயன்படுத்துவதை நிறுத்துங்கள். இதை செய்வது நம்முடைய நோக்கமில்லை, அதுபோல விஜய் அண்ணா ரசிகர்களையும் தயவுசெய்து கேட்டுக் கொள்கிறேன். யாரையும் புண்படுத்தும் விதமாக எதுவும் செய்யவேண்டாம். உண்மையான ரசிகனா இதைத்தான் உங்க நட்சத்திரத்திற்கு திரும்பி செய்வீர்களா!” என்று இரண்டு தரப்பு ரசிகர்களுக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மேலும், “ அனைத்து நட்சத்திரங்களின் விசிறிகளும் தங்களுடைய நட்சத்திரங்களை ஆதரிக்க மட்டும் செய்யவேண்டும். மற்றவரை இகழ வேண்டாம். அனைத்து ரசிகர்களின் நிலைமையையும் உணர்கிறேன். எதிர்மறையாக நமக்கு செய்தால் கூட அதற்கு நேர்மையான வழியிலேயே நம்முடைய பலத்தையும், அன்பையும் பிரதிபலிக்கவேண்டும், மற்றவர்கள் புண்படுத்தும் அந்த நிலையை நான் நன்கு உணர்கிறேன்.ஆனாலும் கொஞ்சம் முதிர்ச்சியுடனும், மனிதநேயத்துடனும் இருக்கவேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு எதிர்மறையாக செய்வது நம்முடைய உண்மையான குணத்தையும், அடையாளத்தையும் கொன்றுவிடும். முதலில் மனிதர்களை நேசிப்போம். பிறகே நம்முடைய சமுகத்தையும், நாட்டையும் நேசிக்கலாம்” என்று ட்விட் செய்துள்ளார் சிம்பு.
சிவாஜி - எம்ஜிஆர், ரஜினி - கமலில் தோன்றி இன்று விஜய் - அஜித் என்று ரசிகர்களிடையே சண்டைகள் இன்றும் குறையவில்லை. முன்னரெல்லாம் ஒரே நாளில் இரண்டு பெரிய நட்சத்திரங்களின் படம் வெளியானால் திரையரங்குகளில் ஆரம்பமாகும் இந்த சண்டை சச்சரவு தொழில்நுட்ப வளர்ச்சிக்குப் பிறகும் தொடர்ந்து நடந்துகொண்டுதான் இருக்கிறது. இந்தச்செயல்பாடு தவறான முன்னுதாரணமாகவே இருக்கிறது. விஜய் - அஜித் போன்று அனைத்து நட்சத்திரங்களும் நண்பர்களாகவே இருக்கிறார்கள், ஆனால் அவர்களின் பெயரைச் சொல்லிக்கொண்டு ரசிகர்கள் தான் தேவையில்லாமல் சண்டையிட்டுவருகின்றனர் என்கிறார்கள் ட்விட்டர் பயனீட்டாளர்கள். எனவே சண்டை, சச்சரவுகளைத் தவிர்ப்பதே நம்முடைய நோக்கமாகவும் இருக்கட்டும்.
சர்வதேச அளவில் 16 மொழிகளில் தயாராகிறது 'கான்'
செல்வராகவன் இயக்கத்தில் சிம்பு நடித்துவரும் 'கான்' திரைப்படத்தை, சர்வதேச அளவில் 16 மொழிகளில் வெளியிடத் திட்டமிட்டு இருக்கிறார்கள். சிம்பு, கத்ரீன் தெரஸா, டாப்ஸி, ஜெகபதி பாபு உள்ளிட்ட பலர் நடித்து வரும் 'கான்' படத்தை இயக்கி வருகிறார் செல்வராகவன். யுவன் இசையமைத்துவரும் இப்படத்துக்கு அரவிந்த் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்து வருகிறார். Glo ஸ்டூடியோஸ் நிறுவனம் சார்பில் கீதாஞ்சலி செல்வராகவன் மற்றும் சித்தார்த் இருவரும் இணைந்து தயாரிக்கிறார்கள்.
இப்படத்தின் இரண்டு கட்ட படப்பிடிப்பு முடிவுற்று இருக்கிறது. விரைவில் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு துவங்க இருக்கிறது. "'கான்' படத்தை சர்வதேச மொழிகளில் வெளியிட திட்டமிட்டு இருக்கிறேன். சினிமா ரசிகர்கள் இதை விரும்புவார்கள் என நம்புகிறேன்" என இயக்குநர் செல்வராகவன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்தார்.
சர்வதேச மொழிகளில் வெளியீடு குறித்து இயக்குநர் செல்வராகவனைத் தொடர்பு கொண்டு கேட்டபோது, "சர்வதேச மொழிகளான ஸ்பானிஷ், போர்ச்சுகீஸ் உள்ளிட்ட 16 மொழிகளில் இப்படத்தை வெளியிட திட்டமிட்டு இருக்கிறேன். சர்வதேச அளவில் வெளியிடும்போது பாடல்கள், காட்சிகள் உள்ளிட்டவற்றை நீக்குவது, சேர்ப்பது தொடர்பானவை அனைத்துமே படம் வெளியாகும் சமயத்தில் முடிவு செய்யப்படும்" என்று தெரிவித்தார்.
இப்படத்தை தமிழில் டிசம்பரில் வெளியிட திட்டமிட்டு, பணியாற்றி வருகிறது படக்குழு.