So glad he wont be doing it.
Printable View
Dhanush makes his debut at Bollywood awards show
Attachment 866Attachment 865
Celebrity Cricket League curtain raiser
Chennai TEAM
Attachment 875
ரஜினி - கமல் இணைகின்றனர் ! ஷங்கர் இயக்குகிறார்!
http://tamilcnn.com/upload-files/dec...hot/rajani.jpg
நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு ரஜினி - கமல் இணைந்து நடிக்கும் படத்தை ஷங்கர் இயக்க உள்ளார். சமீபத்தில் ஒரு விழாவில் பேசிய கமல், விரைவில் ரஜினியுடன் இணைந்து நடிப்பதாக சூசகமாக குறிப்பிட்டார்.
இதற்கிடையில் ரஜினி, கமல் இருவரும் இணைந்து நடிப்பதற்கான பொருத்தமான ஸ்கிரிப்ட் ஒன்றை இயக்குனர் ஷங்கர் எழுதியுள்ளாராம்.
அனேகமாக அப்படத்தில் ரஜினி, கமல் இணையலாம் என்று கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்படுகிறது. இதற்கான அறிவிப்பை ‘நண்பன்Õ பட ரிலீசுக்கு பிறகு ஷங்கர் வெளியிடுவார் என்று தெரிகிறது. இதற்கிடையில் ‘கோச்சடையான்Õ படத்தை மோஷன் கேப்சரிங் என்ற அனிமேஷன் தொழில்நுட்பத்தில் சவுந்தர்யா படமாக்குகிறார்.
இதற்கு 20 நாட்கள் மட்டுமே ரஜினியின் கால்ஷீட் தேவைப்படுகிறது. இதன் ஷூட்டிங் முடிந்த பிறகு ரஜினி - கமல் பட வேலையை ஷங்கர் தொடங்குவார் என்று கூறப்படுகிறது.
ஏற்கனவே கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் ரஜினி நடிப்பதாக இருந்த ‘ராணா' படத்தின் ஷூட்டிங் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தி படம் ஒன்றை இயக்க ரவிகுமார் திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
http://tamilcnn.com/moreartical.php?...rent&subcat=11
இந்தி 'சாமி' - கே.எஸ்.ரவிக்குமார் !
http://cinema.vikatan.com/images/art...ages/26ksr.jpg
விக்ரம், த்ரிஷா இணைந்து நடித்த படம் 'சாமி'. ஹரி இயக்கிய இப்படம் தமிழகத்தில் பெரும் வரவேற்பை பெற்றது.
'சாமி' படத்தினை தற்போது இந்தியில் ரீமேக் செய்ய இருக்கிறார்கள். சஞ்சய் தத் நாயகனாக நடிக்க இருக்கிறார்.
கே.எஸ்.ரவிக்குமார் இப்படத்தினை இயக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். ' WHY THIS KOLAVERI ' பாடல் மூலம் பிரபலமான அனிருத் இசையமைக்க இருக்கிறார்.
இது குறித்து கே.எஸ்.ரவிக்குமார் " தமிழில் வரவேற்பை பெற்ற 'சாமி' படத்தின் இந்தி ரீமேக்கை இயக்க இருக்கிறேன். எனது முதல் இந்தி படத்தில் சஞ்சய் தத் நடிக்க இருக்கிறார். அனிருத்திடம் இசையமைக்க பேச்சு நடத்தி வருகிறோம்.
படப்பிடிப்பை ஏப்ரல் 2012 முதல் துவங்க இருக்கிறோம். ரஜினியின் ' கோச்சடையான் ' படப் பணிகள் ஏப்ரல் மாதத்திற்குள் முடிவடையும். இந்தி படத்தினை முடித்த உடன் ' ராணா ' பட பணிகள் உடனே துவங்கும் " என்று தெரிவித்துள்ளார்.
http://cinema.vikatan.com/index.php?...news&Itemid=63
2011: A bleak streak for Tamil film industry
Chennai: The Tamil film industry, true to its prolific image, has churned out as many as 135 films this year. But the disappointing news: despite the spiralling numbers, box office success has been hitting rock bottom. According to trade pundits, while total investment has been about Rs.600 crore, filmmakers failed to recover even half the investment.
"Jiiva's 'Ko', Karthi's 'Siruthai', Ajith's 'Mankatha' and Surya's '7aum Arivu' have made good collections," says R. Ramanujan, editor of Tamil Nadu Entertainment Trade Magazine.
" '7aum Arivu', a science fiction thriller written and directed by A. R. Murugadoss, hasn't fetched profit for the distributors, while actioner 'Mankatha' was a loss making venture for its producers despite it collecting around Rs.50 crore at the box office," he added.
http://static.ibnlive.in.com/ibnlive...outh-7aam1.jpg
Vijay's two releases - 'Kavalan', a remake of Malayalam hit 'Bodyguard', which was also screened at the Shanghai Film Festival, and masala movie 'Velayudham' were reported to be hits, but insiders in the trade circle informed that while both movies collected more profit than the actor's recent films at the box office, they haven't seen any profit.
"So is the case with Vikram-Anushka starrer 'Deiva Thirumagal," added the source.
"The problem with big stars' films is that the budget shoots up, hence the ROI (return on investment) becomes difficult. Any film that features a leading star like Vijay or Surya or Ajith costs a minimum Rs.15 crore. Sometimes the budget touches even the Rs.30-crore mark. So they have to be blockbusters to get back the money back," said Ramanujam.
The advantage with these films is that they enjoy good opening, hence distributors readily cough up more money to procure the rights. It helps producers to recover the cost. However, if the films fail to click, distributors have to put up with losses.
It happened with '7aum Arivu', which was reportedly made at a budget of Rs. 80 crore and sold for approximately Rs.90 crore, but when it came to box office, it failed to collect even Rs.40 crore, according to the sources.
The worldwide collection of the film is said to be about Rs.82 crore and it has been a loss-making business prospect for distributors and exhibitors.
R.S. Anthanan, a senior film journalist, says that disturbing trend is 'over budget'.
"Many directors exceed the initial budget, which is beyond the marketability of the stars involved in the films. It happens with directors like Bala and Vasantha Balan, who get critical acclaim, but their producers suffer loss because of over expenditure," he added.
This shows that the films with good content cannot recover money if the budget inflates beyond a point.
Recently, producer Ascor Ravichandran reportedly decided to drop a project starring young actor Nakul after the director spent Rs.5 crore even before completing a quarter of the film because the actor is not worth Rs.10 crore.
Sathyaraj, a senior actor, sums up by saying: "Producers should at any cost avoid accepting a budget more than the established business for the stars involved. If they stick to this rule, the losses would be very less."
Sathyaraj has been saying this at public gatherings, but the influence of the big stars and directors is so telling that the producers cannot hold any control over them.
Source:
Maattrraan song
http://www.moviecrow.com/News/502/ma...da-theerndhaai
Simbu love anthem posters..
http://www.accesskollywood.com/photo...ve-anthem.html
And here is WTK of Simbhu ... Avanga mean pannura Love ku tamizha la Anbu nu oru vaarthai irukarathu kooda therla :banghead:
http://www.youtube.com/watch?feature...&v=VtU3PLovN4Y
நாங்களும் பாடுவோம்ல!
http://cinema.vikatan.com/images/art...es/28surri.jpg
வி பி புரொடக்சன்ஸ் சார்பாக விஸ்வாஸ் யு லாட் & புருஷோத்தம் தயாரிக்கும் படம் 'பாகன்'. இப்படத்தில் ஸ்ரீகாந்த் மற்றும் 'அவன் இவன்' ஜனனி ஐயர் நடித்து வருகின்றனர். முகமத் அஸ்லாம் இயக்குகிறார்.
அதிரிபுதிரி காமெடி தான் படத்தின் ஹைலைட்டாம். 'காஞ்சனா'வில் பட்டையை கிளப்பிய கோவை சரளா ஸ்ரீகாந்துக்கு அம்மாவாகவும், 'வெண்ணிலா கபடிக்குழு' சூரியும், 'அங்காடித்தெரு' பாண்டியும் நண்பர்களாக நடித்துள்ளனர்.
சூரிக்கும் பாண்டிக்கும் இந்த படம் கொஞ்சம் ஸ்பெஷல். இருவரும் 'பாகன்' படத்தில் ஒரு குத்துப் பாடலை பாடியுள்ளனர்.
ஜேம்ஸ் வசந்தன் இசையில்
"அவ ஏஞ்சலினா
அவ லவ்வரு நா
ஆக்சுவலா பம்பருதான்
நா மன்னருதான்
வின்னருதான்
சூப்பரான கூட்டணிதான்
கன்னி ராசி வந்த வேளைதான்
சம்பா சம்பா ராஜசிம்பா"
என்ற பாடலை பாடி, பாடகர்களாகியிருக்கின்றனர் சூரியும், பாண்டியும்.
படத்தில் ஸ்ரீகாந்த் காதலை ஜனனி ஐயர் ஏற்றுக்கொள்ளும்போது இந்த பாடல் இடம்பெறுகிறது. கொடைக்கானலில் பிரம்மாண்டமாக செட் போட்டு இப்பாடலை படமாக்கி வருகின்றனர்.
http://cinema.vikatan.com/index.php?...news&Itemid=63
மறுபடியும் தசாவதாரக் கூட்டணி!
https://lh3.googleusercontent.com/-W...oting_spot.jpg
ஆஸ்கர் பிலிம்ஸ் ரவிச்சந்திரன் தயாரிக்க, கே.எஸ்.ரவிகுமார் இயக்க, அதில் கமல் ஒன்பது
கதாபாத்திரங்களாக மாறி அசத்திய படம் தசாவதாரம். கமலுக்கு கடைசியாக அமைந்த மிகப்பெரிய வெற்றிப் படம் அது. இந்தப் படதின் மூலம் ஒன்றினைந்த இந்த மெகா கூட்டணி மறுபடியும் 2012-இறுதியில் இணைய இருப்பதாக இயக்குனர் ரவிகுமார் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போது சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகும் 3டி அனிமேஷன் படமான கோச்சடையனுக்கு கதை, திரைகதை, வசனம் எழுதிவருகிறார் ரவிகுமார். இந்தப் பணி தற்போது முடிந்து விட்டதால் கமல் படத்துக்கான ஸ்கிரிப்ட் எழுதும் பணியைத் தொடங்கி விட்டதாகவும், இதற்காக கமலிடம் கதையைச் சொல்லி ஒகே செய்துவிட்டதாகவும் சொல்கிறார்கள்.
இம்முறை அக்*ஷன் த்ரில்லராக இந்தப் படத்தை உருவாக்க இருகிறார்களாம். படஜெட்டும் எக்குத்தப்பாக இருக்கும் என்கிறார்கள். முக்கியமாக ஊழலுக்கு எதிரான படமாக இதை உருவாக்க இருகிறார்களாம். காரணம் இந்தியன் இரண்டாம் பாகம் வேண்டாம் என்று இயக்குனர் ஷங்கரிடம் கமல் கூறி விட்டதாகவும், இதனால் கார்ப்பரேட் நிறுவனங்களின் வரி ஏய்ப்பு மற்றும் ஊழல்களை மையாமாக வைத்து இந்தக் கதையை ரவிகுமார் எழுதி வருவதாகச் சொல்கிறார்கள். விரைவில் இந்தப்படம் குறித்த தகவல்கள் தெரியவரும்!
கொலவெறி பாடிய தனுஷையும் பிரதமர் தேநீர் விருந்துக்கு அழைப்பு!
https://lh5.googleusercontent.com/-8...0/kolaveRi.jpg
தமிழகமே முல்லை பெரியாறு அணைப் பிரச்சனையில் கொழுந்துவிட்டு எரியும்போது,
இந்தியத் திருநாட்டின் பிரதமர் மன்மோகன் சிங், கொலைவெறி பாடலால் பிரபலமாகிவிட்ட தனுஷை, ஜப்பானிய பிரதமருக்காக ஏற்பாடு செய்திருக்கும் புத்தாண்டு தேநீர் விருந்துக்கு அழைத்திருகிறார். இதை தனது டுவிட்டர் பக்கத்தை பெருமையுன் அறிவித்திருகிறார் தனுஷ்!
ஒரு நிகழ்சியில் பங்கேற்று கொலவெறி பாடலைப் பாட 25 லட்சம் சம்பளம் வாங்கும் தனுஷ், நேற்று முந்தினம் கொல்கத்தாவில் நோக்கியா நிறுவனத்தின் புதிய செல் போனை அறிமுகப்படுத்தி கொலைவெறியைப் பாடித்திரும்பியிருகிறார்.
அந்த நிகழ்சியில் தனது கொலவெறி பாடலின் புகழ்பாடும்போது, " எந்த மொழிப்பாடலாக இருந்தாலும் நான் பாடத் தயாராக இருக்கிறேன். கொலவெறி பாடல் இவ்வளவு பிரபலமானதற்கு மூன்று காரணங்கள் இருப்பதாக நினைக்கிறேன்.
அந்தப்பாடலில் இடம்பெற்றுள்ள ஆங்கில வரிகள் முதல் காரணம் , அந்த வரிகளில் உள்ள எளிமை இரண்டாவது காரணம். இந்தப் பாடலின் வரிகள் எல்லாதரப்பு இளைஞர்களுக்கும் பொதுவானதாக இருப்பது முன்றாவது காரணம் என முழங்கியிருகிறார்.
பிரதமரைத் தொடர்ந்து ரத்தன் டாடா, அமிதாப் பச்சன் ஆகியோர் தனுஷை தங்கள் வீட்டு விருந்துக்கும் அழைத்திருக்கிறார்கள். விட்டால் தமிழை கொலை செய்த தனுஷுக்கு பாரத ரத்னா கொடுத்து விடுவார்கள் போலிருக்கிறது!
வேட்டை ஹிந்தி ரீமேக்! சுறுசுறுப்பாகும் லிங்குசாமி!
http://lh4.ggpht.com/-LEjmlcl8zeo/Tu...25281%2529.jpg
ஆனந்தம் என்ற அற்புதமான ஃபேமிலி செண்டிமெண்ட் படத்தைக் கொடுத்தார் லிங்குசாமி.
ஆனால் அந்தப் படத்துக்குப் பிறகு ரன், சண்டக்கோழி, பையா என இவர் இயக்கிய எல்லா படங்களுமே கமர்ஷியல் பார்முலா கலவையில் ஃபாக்ஸ் ஆஃபீஸில் பட்டையைக் கிளப்பிய படங்கள்.
இவரது படங்கள் எல்லாமே தெலுங்கிலும் டப் மற்றும், ரீமேக் செய்யப்பட்டு ஆந்திராவையும் கலக்கி இருக்கின்றன. தற்போது வேட்டை படத்தை இயக்கி முடித்திருக்கும் லிங்குசாமியின் ரன், ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட்டு பாக்ஸ் ஆபீஸில் வசூலை அள்ளியது.
ரன் ஹிந்தி ரீமேக்கில் அபிஷேக் பச்சன் ஹீரோவாக நடித்து இருந்தார். தற்போது வேட்டை முடிந்ததும் விஷாலை மீண்டும் இயக்க இருக்கும் லிங்குசாமி, அதன்பிறகு வேட்டை படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்ய இருக்கிறார்.
இதற்காக தனது திருப்பதி பிரதர்ஸ் பட நிறுவனமும் ஜாயிண்ட் வென்சராக முன்னனி படநிறுவனத்துடன் இணைந்து படத்தை தயாரிக்க இருகிறார்களாம். வேட்டை ஹிந்தி ரீமேக்கில் மாதவன் கதாபாத்திரத்தை அவரே செய்ய, ஆர்யா கதாபாத்திரத்தை ரன்பீர் கபூர் ஏற்று நடிக்க இருகிறாராம். இருவருக்குமான ஜோடிகளை கறாராக பாலிவுட்டில் இருந்தே தேர்வு செய்ய இருக்கிறார்களாம்.
ஆச்சர்யம் காத்திருக்கு ! : தனுஷ்
http://cinema.vikatan.com/images/art.../27dhanush.jpg
தனுஷ் எழுதி பாடிய WHY THIS KOLAVERI பாடல் உலகம் முழுவதும் பிரபலமாகி உள்ளது. ஐஸ்வர்யா தனுஷ் இயக்கி வரும் '3' படத்தில் இப்பாடல் இடம் பெற்றுள்ளது.
இந்திய பிரபலங்களையும் இப்பாடல் கவர்ந்துள்ளது. அனைத்து மாநிலங்களில் இருந்தும் தனுசுக்கு பாராட்டுகள் குவிகின்றன. இந்நிலையில் பிரதமர் விருந்தில் பங்கேற்கவும் அழைப்பு வந்தது.இது குறித்து அவர் கூறியிருப்பது
" WHY THIS KOLAVERI DI பாடல் என் வாழ்க்கையில் திருப்பு முனையை ஏற்படுத்தி உள்ளது. இந்தியா முழுவதும் இருந்து பிரபலங்கள் விருந்துக்கு அழைக்கின்றனர். எல்லாவற்றையும் விட மேலாக பிரதமர் அலுவலகத்தில் இருந்து அழைப்பு வந்தது. பிரதமர் அலுவலகத்தில் இருந்து பேசியவர் பிரதமர் வீட்டில் ஜப்பான் பிரதமருக்கு அளிக்கப்படும் விருந்தில் பங்கேற்க வருமாறு என்னை அழைத்ததும் என்னால் நம்ப முடியவில்லை.
தொழில் அதிபர் ரத்தன் டாடாவுடன் அவர் வீட்டில் விருந்து சாப்பிட்டதும் மறக்க முடியாத அனுபவம். பள்ளியில் பாட புத்தகத்தில் அவரைப் பற்றி படித்து உள்ளேன். இன்று அவரோடு விருந்து சாப்பிட்டது ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தது. " என்று தெரிவித்துள்ளார்.
மேலும் தனது டிவிட்டர் இணையத்தில் "உங்களுக்கு ஒரு சர்ப்ரைஸ் காத்திருக்கிறது ! " என்று கூறியுள்ளார்.
http://cinema.vikatan.com/index.php?...news&Itemid=63
தனுஷ் இல்லை.. கார்த்தி !
http://cinema.vikatan.com/images/art...03sagunini.jpgதமிழில் மட்டுமல்ல இந்தி திரையுலகின் முன்னணி நட்சத்திரங்கள் மற்றும் இயக்குனர்கள் கூட ஒளிப்பதிவாளராக ரவி.கே.சந்திரன் இருந்தால் நன்றாக இருக்கும் என்று கூறுவார்கள். காட்சியை தனது கேமரா கோணத்தில் அழகுப்படுத்துவதில் வல்லவர் இவர்.
சமீபத்தில் வெளிவந்த 'ஏழாம் அறிவு' படத்தில் ரவி.கே.சந்திரனின் ஒளிப்பதிவு பாராட்டை பெற்றது. இந்நிலையில் தனுஷ் நாயகனாக நடிக்க, ஒரு படத்தை இயக்க இருக்கிறார் ரவி.கே.சந்திரன் என தகவல்கள் வெளியாகின.
அத்தகவலை மறுத்தார் ரவி.கே.சந்திரன். ஆனால் தான் படம் இயக்க வாய்ப்பு இருப்பதாக அறிவித்தார்.
தான் தயாராக வைத்து இருக்கும் காதல் கலந்த ஆக்ஷன் கதைக்கு கார்த்தி பொருத்தமாக இருப்பார் என்று நினைக்கிறாராம். எனவே தற்போது 'சகுனி', சுராஜ் இயக்கி வரும் படம் என பிஸியாக இருக்கும் கார்த்தியை அணுகி, கதை சொல்லியிருக்கிறாராம் ரவி.கே.சந்திரன்.
http://cinema.vikatan.com/index.php?...news&Itemid=63
கசியுது முகமூடி கதை!
http://lh4.ggpht.com/-IfmjuDWhLro/Tu...25284%2529.jpg
சென்னையில் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது முகமுடி படத்தின் படப்பிடிப்பு.
இந்தப்படத்தின் திரைக்கதை புத்தகம், ஹாலிவுட் பாணியில் உதவி இயக்குனர்கள் உள்ளிட்ட படக்குழுவில் முக்கிய பொறுப்பு வகிக்கும் அனைவருக்கும் வழங்கப்பட்டுள்ளது.
இதனால் படத்தின் கதையைப் பற்றி படப்பிடிப்பு இடைவேளைகளில் சர்வசாதரணமாக பேசிக்கொள்கிறார்களாம். தற்போது படத்தின் திரைக்கதை நாயகியை முக்கிய கதாபாத்திரமாகக் கொண்டே நகர்கிறது என்கிறார்கள்.
முகமூடி படத்தில் பூஜா ஹெக்டே. ஜீவாவுக்கு நாயகியாக நடிக்கிறார். பத்திரிகை நிருபராக இந்தப் படத்தில் நடிக்கும் பூஜாவின் கதாபாத்திரத்தைச் சுற்றித்தான் மொத்த முகமூடி படமுமே நகர்கிறதாம்.
மும்பை பாந்திராவில் அக்டோபர் 13-ஆம் தேதி பிறந்தவராம் பூஜா ஹெக்டே. மிஸ் யுனிவர்ஸ் இந்தியா 2010 ஆம் ஆண்டுக்கான அழகிப் போட்டியில் இரண்டாவது இடத்தைப் பிடித்த இவர், பரத நாட்டியம் முறையாகப் படித்திருப்பதாகவும் கூறுகிறார். “ கதையில் எனக்கு இருக்கும் முக்கியத்துவம் ஒன்றே என்னை இந்தப் படத்தை ஒப்புக்கொள்ள வைத்தது” என்று கூறும் பூஜா, இந்தப் படத்தின் கதைபடி கொல்லபடுவார் என்கிறார்கள்.
சுப்ரமணியபுரம் கதைபோல, பூஜாவைக் காதலிக்கும் ஜீவாவை, அவரது காதலியை வைத்தே எப்படி தீர்த்துக் கட்ட நரேன் திட்டமிடுகிறார் என்பதும், அதிலிருந்து ஜீவா தப்பித்து வில்லனை எப்படி பழிதீர்க்கிறார் விறுவிறுவிறுப்பான திரைக்கதை என்கிறார்கள்.
இதில் முகமுடி என்று மிஷ்கின் சுட்டிக்கட்டுவது சூப்பர் ஹீரோ ஜீவா அணிந்து சண்டைபோடும் முகமுடி அல்லவாம்! வில்லனின் சூழ்ச்சிதான் இதில் முகமுடி என்கிறார்கள்!
Nanban and Vettai will not be out on the same day
Trade sources say that Nanban and Vettai may not release on the same day after all. There is a buzz that Nanban will hit the screens on January 12th and Vettai on January 14th. This means there would be a one day gap which is very important in the current scenario to rake up the collections at the box office.
Both Nanban and Vettai are the most expected films of the year. Nanban is directed by Shankar and has Vijay, Jiiva, Srikanth, Ileana and Sathyaraj in important roles while Vettai is directed by Lingusamy and has Arya, Madhavan, Sameera Reddy and Amala Paul.
http://www.behindwoods.com/tamil-mov...-31-12-11.html
Time to thank for Dhanush
With the year 2011 drawing to a close, Dhanush took time to thank all those who helped him make this year a grand success. A national award, five films – Aadukalam, Venghai, Mappillai, Mayakkam Enna and Seedan (cameo), and a phenomenal hit in the form of Why this Kolaveri di has got him international recognition.
The star said that he thanks his parents for their unconditional love and motivations, his fans, God and the whole world, media persons, his brother Selvaraghavan and director Vetri Maaran.
http://www.behindwoods.com/tamil-mov...-31-12-11.html
தமிழ் திரையுலகம் - ஒரு பார்வை!
2010-ம் ஆண்டோடு ஒப்பீடு செய்கையில் வணிக ரீதியாகவும், தரமான தமிழ் படைப்புகளை படைத்ததிலும் பின்தங்கி இருந்தாலும் 2011-ம் ஆண்டும் பல படைப்புகள் வணிக ரீதியாகவும், தரமான படைப்புகளும் வெளிவந்து இருக்கின்றன. 2012-ம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் இந்நேரத்தில் தமிழ் திரையுலகம் 2011 ஒரு சிறிய அலசல்...
'மங்காத்தா' ஆட்டம்!
2010 ஆம் ஆண்டுக்காக இந்த ஆண்டின் தொடக்கத்தில் 13 தேசிய விருதுகள் நமக்கு கிடைத்தது மிகப்பெரிய சாதனை.
இந்த ஆண்டின் மிகப்பெரும் வெற்றித் திரைப்படம் 'மங்காத்தா'. அஜீத் நடிப்பில் வெளியான இப்படம் வசூலில் முதல் இடத்தினை பிடித்து இருக்கிறது. அதனை தொடர்ந்து லாரன்ஸ் இயக்கி நடித்த 'காஞ்சனா', ஜீவா நடித்த 'கோ' , கார்த்தியின் 'சிறுத்தை' ஆகியவை வணிகரீதியில் வரவேற்பை பெற்ற படங்கள்.
சிறந்த வரவேற்ப்பை பெற்ற 'எங்கேயும் எப்போதும்' திரைப்படம் வணிகரீதியிலும் ஓரளவு வசூலை அள்ளியது.
சூர்யாவின் 'ஏழாம் அறிவு', விஜய்யின் 'வேலாயுதம்' ஆகிய படங்கள் குறித்து பல்வேறு சர்ச்சைகள் இருந்தாலும் வசூலிலும், வரவேற்பிலும் குறை வைக்கவில்லை. இப்படங்களை தவிர ஆடுகளம், தெய்வத் திருமகள், காவலன், வானம், மயக்கம் என்ன, பயணம், குள்ள நரிக் கூட்டம் ஆகிய படங்கள் எதிர்ப்பார்த்த வசூல் கிடைக்கவிட்டாலும் விமர்சகர்கள் மத்தியில் பாராட்டை பெற்றது.
விமர்சகர்கள் மத்தியில் பெரிதும் பாராட்டை பெற்ற ஆரண்ய காண்டம், வாகை சூட வா இரண்டுமே மக்களிடம் தோல்வியை தழுவியது.
ஏமாற்றிய படங்கள்...
நடுநிசி நாய்கள், ஒஸ்தி, ராஜபாட்டை, வேங்கை, மாப்பிள்ளை, வெடி, எங்கேயும் காதல் உள்ளிட்ட பெருத்த எதிர்ப்பார்ப்புகிற்கு இடையே வெளியானலும் விமர்சகர்கள் மத்தியிலும் மக்களின் மத்தியிலும் தோல்வியுற்றது
அஜீத்தின் ஆச்சரிய முடிவு..
ரஜினி, கமல் உள்ளிட்ட நடிகர்களே ரசிகர் மன்றங்களை கலைக்க தயங்கும் போது ஏப்ரல் மாதம் அஜீத் தனது ரசிகர் மன்றத்தை கலைப்பதாக அறிவித்து தமிழ் திரையுலகினர் அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார். இந்தாண்டு விஜய்யை பொறுத்தவரை அரசியலில் அடியடித்து வைத்து இருக்கிறார்.
கொலவெறி' நாயகன்...
ஆடுகளம் படத்துக்காக தேசிய விருது வாங்கி, இந்திய அளவில் கவனிக்கப்பட்ட இளம் நடிகர் தனுஷ், பாடலாசிரியராக அறிமுகமாகி இளைஞர்களை கவரும் விதத்தில் பாடல்களை எழுதி வருகிறார். இவர் எழுதிய 'கொலவெறி' பாடல் தற்போது உலகம் முழுவது பிரபலம். பிரதமருட்ன சந்திப்பு, ரத்தன் டாடவுடன் சந்திப்பு என ஒரே பாடல் முழுவது இந்தியாவின் most wanted நாயகானகிவிட்டார்.
நடிப்பாற்றலுக்கு...
அவன் இவன் படத்தில் நடித்த விஷால் தனது மாறுகண் நடிப்பின் மூலம் தனது சக நடிகர்களை ஆச்சர்யப்பட வைத்தார். தெய்வத்திருமகள் படத்தில் விக்ரம் நடிப்பு தமிழ் நாட்டின் மக்கள் மத்தியில் பேசும்படியாக அமைந்தது. அடுத்தாண்டு 2011 தேசிய விருது நடிகர்கள் பட்டியலில் இவ்விருவர் பெயர் இடம் பெறலாம்.
இந்தாண்டு கார்த்தியின் திருமணம் நடைபெற்றது. சோனியா அகர்வாலை பிரிந்த இயக்குனர் செல்வராகவன், கீதாஞ்சலியை திருமணம் செய்து கொண்டார்.
கனவுக் கன்னிகள்...
நடிகைகள் பட்டியலில் அமலா பால், அனுஷ்கா இருவருமே 2011ல் தமிழக இளைஞர்களை கிறங்கடித்தார்கள் எனலாம். ஆனால், நடிப்பில் இவர்கள் குறிப்பிடத்தக்க வகையில் இந்த ஆண்டு சோபிக்கவில்லை.
மயக்கம் என்ன படத்தில் இயல்பாக நடித்த ரிச்சா, ஒஸ்தியில் வந்து போனார். வாகை சூட வா, மெளனகுரு படத்தில் நடித்த இனியா, மூத்த இயக்குனர்களின் கவனத்தைப் பெற்றார். இவ்விருவருடன், 7 ஆம் அறிவு படத்தில் நடித்த ஸ்ருதிஹாசன், கோ படத்தில் நடித்த கார்த்திகா, ஆடுகளம், வந்தான் வென்றான் படத்தில் நடித்த டாப்ஸி, ராஜபாட்டை படத்தில் நடித்த தீக்ஷா சேத் உள்ளிட்ட நடிகைகள் இந்தாண்டு அறிமுகமானவர்கள்.
ரஜினியின் ஆரோக்கியம்...
2011-ல் ரஜினி நடிப்பில் பூஜை போடப்பட்ட படம் 'ராணா'. அன்றே ரஜினிக்கு உடல்நிலை சரியில்லாமல் போகவே, அன்று முதல் அவரது ரசிகர்கள் ரஜினி இருந்த மருத்துவமனைக்கு படையெடுக்க ஆரம்பித்தனர்.
ரசிகர்களின் அன்புத் தொல்லையாலும், ரஜினியின் உடல்நிலையை கருத்தில் கொண்டும் சிங்கப்பூர் மவுண்ட் எலிசபெத் மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்கு சென்றார். "நீங்கள் என்மீது வைத்திருக்கும் அன்பிற்கு என்ன செய்ய போகிறேன்" என்று கூறிவிட்டு சென்றவர் ஜுலை 12ம் தேதி திரும்பினார். அன்று அவரது ரசிகர்களுக்கு தீபாவளியாக அமைந்தது.
எங்கே மணிரத்னம்?
'பொன்னியின் செல்வன்' கதையை படமாக்க மணிரத்னம் மும்முரமாக ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகின. விஜய், மகேஷ் பாபு மற்றும் பலர் நடிப்பார்கள் என்ற செய்தி வெளியானது.
ஆனால் படத்தின் பட்ஜெட், கால்ஷீட் போன்ற பல்வேறு சிக்கல்களை கருத்தில் கொண்டு தனது அப்படத்தினை தள்ளி வைத்துவிட்டார் மணிரத்னம். தற்போது கார்த்திக் மகன் கெளதம் அறிமுகமாகும் 'பூக்கடை' என்னும் படத்தினை இயக்குகிறார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
இழப்புகள்...
இந்த ஆண்டு பாடகர் மலேசியா வாசுதேவன், நடிகர் அலெக்ஸ், பழம்பெரும் நடிகைகள் காந்திமதி, சுஜாதா ஆகியோரது மரணம் தமிழ் திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
மாற்றங்கள்...
இந்தாண்டு நடைபெற்ற தேர்தல் தமிழ் திரையுலகில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்து இருக்கிறது. திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் மாற்றம் இதில் முக்கியமானதாக கருதப்படுகிறது. எஸ்.ஏ.சந்திரசேகரன் புதிய தலைவராக பொறுப்பேற்று இருக்கிறார். இனி வரும் ஆண்டில் தான் இவரது செயல்பாடு எப்படி என்பது தெரிய வரும்.
ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த உடன் கேளிக்கை வரியை உயர்த்தியது திரையுலகினருக்கு மிகப்பெரிய பின்னடைவு. படங்களுக்கு தமிழில் பெயர் வைத்தால் வரி விலக்கு என்ற இருந்த சட்டத்தை மாற்றி புதிய சட்டத்தை கொண்டு வந்து இருக்கிறார். அந்தச் சட்டத்தில் இருக்கும் வழிமுறைகளை பின்பற்றி எந்த ஒரு படமும் எடுக்க முடியாது என்பது மாதிரியான நிலை. ஆகையால் அனைத்து படங்களுமே வரி செலுத்தி தான் ஆக வேண்டும்.
இப்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டு உள்ளதால் இனிவரும் காலங்களில் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம், நடிகர் சங்கத்தின் செயல்பாட்டால் தமிழ் திரையுலகம் அடுத்த நிலைக்குச் செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
http://cinema.vikatan.com/index.php?...1--&Itemid=111
சுசி படத்தில் நடிப்பாரா ரிச்சா...?!
http://tamilcnn.com/upload-files/jan...adhyay_001.jpg
டைரக்ரர் சுசி கணேசன் படத்தில் நடிகை ரிச்சா கங்கோபாத்யாயா நடிப்பாரா, மாட்டாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. கந்தசாமி படத்தின் வெற்றிக்குப் பிறகு முன்னணி தமிழ் ஹீரோக்களும், ஹீரோயின்களும் போட்டி போட்டுக் கொண்டு சுசிக்கு கால்ஷீட் தரத் தராயாக இருந்தனர்.
ஆனால் சுசியோ, இந்திப் படம் இயக்குகிறேன் என்று மும்பைக்கு போய்விட்டார். இவ்வளவு காலம் அங்கு இருந்தும் அவரது படம் இன்னும் தொடங்கப் படவே இல்லை.
ஏன் என்று காரணம் கேட்டால், என் கதைக்கு பொருத்தமான கதாநாயகி கிடைக்கவில்லை என்று கூறும் சுசி, அசின், ரிச்சா என பலரது பல்ஸையும் பார்த்திருக்கிறார்.
இறுதியாக ரிச்சாவை ஒப்பந்தம் போடலாம் என நினைத்தபோதுதான் அம்மணி, தனுஷ், சிம்பு என இளம் ஹீரோக்களுடன் பிஸியாகி விட்டார்.
ஆனால் எதிர்பாராமல் ரிச்சாவுக்கு மயக்கம் என்ன?, ஒஸ்தி ஆகிய 2 படங்களுமே கைகொடுக்காததால் மீண்டும் மும்பைக்கு பறந்தார்.
சுசியின் படத்தில் நடிப்பார் என்று கூறப்பட்ட நிலையில், என்ன காரணத்தினாலோ அதில் இருந்து விலகி விட்டாராம் அம்மணி. இன்னமும் அதிகாரப்பூர்வமான செய்திகள் எதுவும் வெளியாகாத நிலையில், சுசி படத்தில் ரிச்சா நடிப்பாரா, மாட்டாரா என்ற குழப்பம் நீடித்துக் கொண்டே இருக்கிறது.
http://tamilcnn.com/moreartical.php?...rent&subcat=11
2012 First Comedy... :)
சிறந்த நடிகர் – நடிகைகள்,தனுஷ் – அஞ்சலிக்கு விருது!!
http://tamilcnn.com/upload-files/jan...ush-anjali.jpg
வி4 எண்டர்பைனர் அமைப்பு சார்பில் கடந்த ஆண்டின் சிறந்த நடிகர்- நடிகைகள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர் களுக்கு விருது வழங்கும் விழா சேத்துப்பட்டு லேடி ஆண்டாள் பள்ளியில் நடந்தது. விழாவில் இயக்குனர் பி.வாசுவிற்கு சிவாஜி விருதும், சத்யராஜுக்கு அண்ணா விருதும், பிரபுவுக்கு பெரியார் விருதும் வழங்கப்பட்டன.
“ஆடுகளம்” படத்தில் நடித்த தனுஷ் சிறந்த நடிகர் விருதை பெற்றார். “அஞ்சலி” சிறந்த நடிகைக்கான விருதை பெற்றார். விஜய் நடித்த வேலாயுதம் சிறந்த படமாக தேர்வு செய்யப்பட்டது. “முரண்” படத்தில் நடித்த சேரன், பிரசன்னாவும் விருது பெற்றனர்.
நடிகை சினேகா, நடிகர்கள் கரண், பார்த்திபன், டைரக்டர்கள் டி.பி.கஜேந்திரன், பாண்டியராஜன், விஜய், சரவணன், வடிவுடையான், ஒய்.ஜி.மகேந்திரன், நடிகை சரண்யா, பொன்வண்ணன், இசை யமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ், பாடல் ஆசிரியர்கள் வாலி, விவேகா, ஆகியோரும் விருது பெற்றனர்.
விழாவில் லட்சுமண் சுருதியின் இசையில் நடிகர் தனுஷ் கொலைவெறி பாடலை மேடையில் பாடினார். மக்கள் தொடர்பாளர்கள் டைமண்ட் பாபு, சிங்கார வேலன், மௌனம் ரவி, ரியாஸ் ஆகியோர் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
http://tamilcnn.com/moreartical.php?...rent&subcat=11
ரஜினி வாழ்வில் புதிய திருப்பம் ஜோதிடர்கள் கணிப்பு!!
http://tamilcnn.com/upload-files/jan...t/rajani01.jpg
ரஜினி வாழ்வில் வரும் மே மாதம் 12ம் தேதிக்கு பிறகு மாற்றம் ஏற்படும் என்று ஜோதிடர்கள் கணித்துள்ளனர். கடந்த 2011ம் ஆண்டு திரையுலகில் பல்வேறு திருப்பங்கள் ஏற்பட்டது.
இந்த ஆண்டு நட்சத்திரங்கள் வாழ்க்கை எப்படி இருக்கும் என்று ஜோதிடர்கள் கணித்திருக்கின்றனர். ‘பொதுவாக பார்க்கும்போது நடிகர், நடிகைகளின் வாழ்க்கை மேம்பட்டிருக்கும்.
தமிழ் சினிமா உலகம் ஒரு புதிய பரிமாணத்தை அடையும்’ என்று தெரிவித்துள்ளனர். கடந்த ஆண்டு ரஜினிக்கு இன்னல் தரும் ஆண்டாக அமைந்தது.
அவரது உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதனால் ‘ராணா’ படத்தின் ஷூட்டிங் பாதிக்கப்பட்டது. இந்த ஆண்டு அவருக்கு எப்படி இருக்கும் என்று ஜோதிடர்கள் தெரிவித்துள்ளனர்.
‘கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு ரஜினிக்கு மகிழ்ச்சி தருவதாக இருக்கும். மே 12ம் தேதி அவரது வாழ்வில் புதிய மாற்றம் ஏற்படும். ஜூன் மாதத்துக்கு பிறகு அவரது புகழ் ஓங்கும்’ என்று கணித்திருக்கின்றனர்.
கமல்ஹாசன் மகள் ஸ்ருதி ஹாசன் பற்றி கூறும்போது,‘வரும் செப்டம்பர் மாதத்துக்கு பிறகு அவர் பெரிய அளவில் பிரபலம் அடைவார். 7 ஆண்டுகளுக்கு பிறகு அவரது வாழ்வில் மாற்றம் ஏற்படும். தன்னுடைய தொழிலை அவர் மாற்றக்கூடும்’ என்றனர்.
http://tamilcnn.com/moreartical.php?...rent&subcat=11
அமலா பாலின் கவர்ச்சி
தமி**ழில் கவர்ச்சின்னா காத தூரம் ஓடுவதும் அதுவே தெலுங்கு என்றால் ஸ்விம்மிங் சூட்டில் கலக்குவதும் நடிகைகளைப் பொறுத்தவரை சாதாரணம். இந்த தலைகீழ் மாற்றம் அமலாபாலைப் பொறுத்தவரை தமிழிலேயே நடந்திருக்கிறது.
சிந்து சமவெளி படத்தில் செமத்தியாக வாங்கிக் கட்டிக் கொண்ட அமலா பால், அதன் பிறகு காஸ்ட்யூம் விஷயத்தில் சர்வ ஜாக்கிரதை காட்டினார். சிந்து சமவெளியிலும்கூட கேரக்டர்தான் வில்லங்கமே தவிர கவர்ச்சிக்கெல்லாம் தடாதான்.
ஆச்ச*ரியமாக அதர்வாவுடன் நடிக்கும் முப்பொழுதும் உன் கற்பனைகள் படத்தில் கவர்ச்சியின் க*ண்ட்ரோல் எல்லையை கொஞ்சம் தளர்த்தியிருக்கிறார். ஏன் இப்படி என்று கேட்டால் அமலா பாலிடமிருந்து எல்லோரும் சொல்லும் அந்த தயிர்வடை பதில்தான், கதைக்கு தேவைப்பட்டிச்சு அதான் நடிச்சேன்.
ஆங்.. பொல்லாத கதை.
http://tamil.webdunia.com/entertainm...20102018_1.htm
ஜீவாவின் புது வசந்த ஆசை
முதல் படம் நடிக்கும் போதே நூறாவது படம் எந்த கான்செப்டில் அமைய வேண்டும் என்று கனவு காண்பவர்களுக்கு மத்தியில் *ஜீவாவின் ஆசை ரோஜா மதுமிதாவைப் போல் சின்ன ஆசைதான். தனது 25வது படம் ஒரு *ரீமேக்காக இருந்தால் நல்லது என்று விரும்புகிறார்.
இவரது அப்பா ஆர்.பி.சௌத்*ரியின் தயா*ரிப்பில் வெளியான படம் விக்ரமனின் புது வசந்தம். இந்தப் படம் *ஜீவாவின் ஃபேவரைட் படங்களில் ஒன்று. புது வசந்தத்தின் *ரீமேக்கில் நடிக்க ஜீவாவுக்கு நெடுநாளாக ஆசை. தனது 25வது படமாக இது இருந்தால் நல்லது என்று எண்ணுகிறார்.
ஆர்யா, ஜெயம் ரவி, சந்தானம் என்று நண்பர்கள் நல்லவிதமாக இருப்பதால் *ரீமேக் சாத்தியம்தான் என்று அவர் சொல்லும் போது வசந்தம் மீண்டும் வருவதற்கான சாத்தியம் இருப்பதாகவே தோன்றுகிறது.
http://tamil.webdunia.com/entertainm...20102030_1.htm
பெயர் போன பிரச்சனை
தமிழ் சினிமாவில் கதையைவிட படத்தின் தலைப்புக்குதான் அதிக டிமாண்ட். கார்த்தியையும் இந்தப் பிரச்சனை விட்டு வைக்கவில்லை.
காற்றடிக்கும் போதுதான் காசு பார்க்க முடியும் என்பதை தெ*ளிவாகத் தெ*ரிந்து சிறுத்தை மாதி*ரியான கமர்ஷியல் தாளிப்புகளில் மட்டுமே கவனம் செலுத்துகிறார். அப்படியொரு மசாலா தாளிப்புதான் சகுனி. இந்தப் படம் ஒருபக்கம் நடந்து கொண்டிருக்க, மசாலா இயக்குனர் சுரா*ஜின் இயக்கத்தில் சத்தமில்லாமல் நடித்து வருகிறார்.
சுரா*ஜ், கே.எஸ்.ரவிக்குமார் பரம்பரையைச் சேர்ந்தவர். முப்பதே நாளில் இந்தி பாஷை மாதி*ரி மூன்றே மாதங்களில் முழுப்படத்தையும் எடுப்பவர். இவர்கள் படம் எண்பது சதவீதம் முடிந்துவிட்டதாம். ஆனாலும் நல்ல பெயர் படத்துக்கு அமையவில்லையாம்.
தேடு தேடு என்று பெயரை தேடிக் கொண்டிருக்கிறார்கள்.
http://tamil.webdunia.com/entertainm...11231041_1.htm
சூர்யாவோடு ஆட்டம் போட்ட ஷெர்வானிக்கு 50 லட்சம்!
https://lh3.googleusercontent.com/-r...-Sharvani2.jpg
அயன் படத்தின் மூலம் புதிய ஃபாக்ஸ் ஆபீஸ் சாதனையை நிகழ்த்திய கே.வி. ஆனந்த்,
சூர்யா, ஹாரிஸ் ஜெயராஜ் கூட்டணி, தற்போது மாற்றான் படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பை ரஷ்யாவில் முடித்து திரும்பியிருக்கிறது.
வழக்கமாக ரஷ்யா செல்லும் படக்குழுவினர் மாஸ்கோ, லெனின்கிரேட் போன்ற முக்கிய நகரங்களில் படப்பிடிப்பை முடித்து திரும்பிவிடுவார்கள். ஆனால் கே.வி. ஆனந்த மாற்றான் திரைக்கதைப்படி ரஷ்யாவின் கிராமபுரங்களில் படம் பிடித்து திரும்பியிருக்கிறாராம்.
சென்னை திரும்பிய கையோடு சென்னையில் ஒரு பாடலையும் படம்பிடித்து முடித்துவிட்டார்கள் அதிரடியாக! ஏ.வி.எம் ஸ்டூடியோவில், ராஜீவன் கலை இயக்கத்தில் சுமார் 1.5 கோடி செலவில் அமைக்கப்பட்ட பிரமாண்ட செட்டில், ஹாரீஸ் ஜெயராஜ் இசையில் உருவான “ திண்ணத்திண்ண தீர்ந்தாயா” என்ற பாடலை படப்பிடிப்பு நடத்தி முடித்திருகிறார்.
இந்தப்பாலுக்கான நடன அமைப்பை செய்திருப்பவர் பிரபல நடன இயக்குனரான பிருந்தா மாஸ்டர்! இந்த பாடலில் சூர்யா, காஜல் அகர்வால் ஆகியோருடன் பாலிவுட்டின் டான்ஸ் மெஷின் என்று புகழப்படும் இஷா ஷெர்வானி செமத்தியான் ஆட்டம் போட்டிருகிறாம்.
மாற்றானில் இடம்பெரும் இந்த ஐயிட்டம் நம்மரில் ஆட ஷேர்வானிக்கு தரப்பட்டிருக்கும் தொகை 50 லட்சம்! முதலில் ஐந்து நாட்களில் படப்பிடிப்பை முடித்து விடலாம் என்று ஒரு நாளைக்கு 5 லட்சம் சம்பளம் பேசி ஒப்பந்தம் செய்திருகிறார்கள்.
ஆனால் பத்து நாட்கள் ஆனதாம் பாடல் முடிய! பேரம் பேசமால் தயாரிப்பாளர் ஐம்பது லட்சத்தை செட்டில் செய்து அனுப்பிவிட்டாராம் ஷெர்வானிக்கு! தற்போது ஒரு பாடலை இத்தனை காஸ்ட்லியாக படமாக்கியிருக்கும் கே.வி, ஆனந்த், அடுத்து மூன்று மற்றும் நான்காம் கட்ட படப்பிடிப்புகளுக்கு குரோஷியா, ருமேனியா, செர்பியா, அல்பேனியா, மாசிடோனியா ஆகிய நாடுகளை தேர்ந்தெடுத்து இருக்கிறார்.
இந்த நாடுகளிலேயே மற்ற பாடல்களையும் படம் பிடிக்க இருக்கிறாராம். தனது படங்களுக்கு வித்தியாசமான இடங்களைத் தேர்ந்தெடுத்து கதைகளமாக்குவதை ஒரு ஸ்டைலாக பின்பற்றி வரும் கே.வி.ஆனந்த். மாற்றான் படத்துக்காக இதுவரை யாரும் படப்பிடிப்பு நடத்தியிராத இந்த நாடுகளை முதல்முறையாக தேர்ந்தெடுத்து இருக்கிறாராம்!
2012-ல் எதிர்பார்ப்பில் இருக்கும் படங்கள் !
2011ம் ஆண்டு ரஜினி, கமல் உள்ளிட்ட நடிகர்களின் படங்கள் வெளிவரவில்லை. ஆனால் 2012ம் ஆண்டு தமிழ் திரையுலகில் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்க்கும் தயாரிப்புகள் வெளிவர இருக்கின்றன. அவ்வாறு வெளிவர இருக்கும் சில படங்கள் பற்றிய தகவல் துளிகள் :
ரஜினி : கோச்சடையான் 3D
கே.எஸ்.ரவிகுமார் மேற்பார்வையில் செளந்தர்யா ரஜினிகாந்த் இயக்க இருக்கும் படம். போன ஆண்டு 'ராணா' படம் தொடங்கப்பட்ட போது ஏற்பட்ட உடல்நிலை கோளாறால் அப்படம் நிறுத்தப்ப்பட்டது.
ஆகையால் 'கோச்சடையான்' படத்திற்கு பெரும் எதிர்ப்பார்ப்பு நிலவி வருகிறது. MOTION CAPTURE TECHNOLOGY மூலம் ரஜினியை நடிக்க வைக்க இருக்கிறார்கள். 3Dல் இப்படம் வெளிவர இருக்கிறது.
கமல் : விஸ்வரூபம்
கமல் இயக்கி நடித்து வரும் படம். செல்வராகவன் இயக்க, கமல் நடிப்பதாக துவங்கப்பட்ட படம். செல்வராகவனால் ஏற்பட்ட தாமதம் மற்றும் பல்வேறு காரணங்களால் படப்பிடிப்பு தள்ளிப் போக, தற்போது கமலே இயக்குனர் பொறுப்பேற்று இப்படத்தினை இயக்கி வருகிறார்.
கமல் இப்படத்தில் ஒரு தீவிரவாதியாக நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கமல் ரசிகர்கள் அவரை வித்தியாசமான வேடத்தில் பார்க்க இருக்கிறார்கள்.
அஜீத் : பில்லா- 2
'மங்காத்தா' படத்தின் வரவேற்பிற்கு பிறகு அஜீத் நடித்து வரும் படம் 'பில்லா 2'. பில்லா படத்தின் SEQUEL-யாக இல்லாமல் PREQUEL- ஆக பில்லா 2 வெளிவர இருக்கிறது.
இப்படத்திற்காக கடுமையாக உழைத்து இருக்கிறார் அஜீத். உடம்பு இளைத்து, சண்டைக்காட்சிகளில் டூப் இல்லாமல் நடித்து இருக்கிறார்.
2011-ல் மங்காத்தா வசூலைத் 2012-ல் 'பில்லா 2' அமைய வேண்டும் என்ற உறுதியுடன் உழைத்து வருகிறார்கள்.
http://cinema.vikatan.com/images/art...ppakivijay.jpgவிஜய் :நண்பன் & துப்பாக்கி
ஷங்கர் இயக்கத்தில் விஜய் நடித்து இருக்கும் படம் 'நண்பன்'. 3 இடியட்ஸ் படத்தின் ரீமேக், ஷங்கர் இயக்கம் , விஜய் நடிப்பு, ஹாரிஸ் இசை என பல விஷயங்கள் இப்படத்தில் இணைந்து இருக்கின்றன. 2012ல் விஜய் ரசிகர்களுக்கு முதல் விருந்தாக ஜனவரி 12ம் தேதி இப்படம் வெளிவர இருக்கிறது. சென்சார் அதிகாரிகள் இப்படத்தினை பார்த்துவிட்டு U சான்றிதழ் அளித்து இருக்கிறார்கள்.
'ஏழாம் அறிவு'க்குப் பிறகு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் 'துப்பாக்கி' யில் இப்போது நடித்து வருகிறார் விஜய் . முதன் முறையாக விஜய் இப்படத்தில் வித்தியாசமான கெட்டப்பில் நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சூர்யா : மாற்றான்
'அயன்' படக்குழு மீண்டும் இணைந்திருக்கும் படம் 'மாற்றான்'. சூர்யா இப்படத்தில் ஒர் உடல் இரு தலை உடையவராக ஒரு கதாபாத்திரத்தில் நடித்து வருவதாக கிசுகிசுக்கப்பட்டது. கே.வி.ஆனந்த சூர்யா இப்படத்தில் ஐந்து வித்தியாசமான பாத்திரங்களில் நடித்து இருப்பதாக கூறியுள்ளார்.
சிம்பு : போடா போடி
சிம்பு நடிப்பில் நீண்ட நாட்களாக தயாராகி வரும் படம் 'போடா போடி'. விக்னேஷ் சிவா இயக்கி வரும் இப்படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமாகிறார் வரலெட்சுமி சரத்குமார். இப்படம் இசையை மையமாக வைத்து வெளிவர இருக்கும் காமெடி படமாம்.
தனுஷ் : 3
2011ல் WHY THIS KOLAVERI என்ற பாடலின் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்த தனுஷ் நடித்து இருக்கும் படம். இப்படத்தின் பாடல்களால் படத்திற்கு எதிர்ப்பார்ப்பு கூடி இருக்கிறது. ரஜினி மகள் இயக்கம், கமல் மகள் ஜோடி, ரஜினியின் மருமகன் நாயகன் என ஒரு சேர இணைந்து வெளிவரும் படம்.
வசந்த பாலன் : அரவான்
'அங்காடி தெரு' படத்தினை தொடர்ந்து வசந்தபாலன் இயக்கத்தில் வெளிவர இருக்கும் படம் 'அரவான்'. ஆதி, பசுபதி, தன்ஷிகா மற்றும் பலர் நடித்து இருக்கிறார்கள்.
2011ம் ஆண்டு சாகித்ய அகாடமி விருது வென்ற 'காவல் கோட்டம்' நாவலில் வரும் ஒரு சிறு பகுதியை, திரைக்கதை அமைத்து படமாக்கி இருக்கிறார்கள். இப்படத்தின் டிரெய்லரே படத்திற்கு எதிர்ப்பார்ப்பை கூட்டியுள்ளது.
ஆர்யா & மாதவன் : வேட்டை
லிங்குசாமி இயக்கத்தில் ஆர்யா, மாதவன் இணைந்து இருக்கும் படம் 'வேட்டை'. ரன் படத்தினை தொடர்ந்து மாதவனுடன் இணைந்து இருக்கிறார் லிங்குசாமி.
லிங்குசாமி இயக்கம், ஆர்யா, மாதவன் இணைந்திருக்கும் படம், சமீரா ரெட்டி, அமலா பால் என இரண்டு நாயகிகள், இப்படி கலகல, பளபள கூட்டணியில் வருவதால் 'வேட்டை'க்கு காத்திருக்கிறார்கள் ரசிகர்கள். ஜனவரி 14ம் தேதி வெளிவர இருக்கிறது வேட்டை.
கெளதம் மேனன் : நீதானே என் பொன்வசந்தம்
கெளதம் மேனன் இயக்கத்தில் ஜீவா நடித்து வரும் படம். ஒரே நேரத்தில் மூன்று மொழிகளிலும் இயக்கி வருகிறார் கௌதம் மேனன்.
'விண்ணைத்தாண்டி வருவாயா' படத்தினை தொடர்ந்து இப்படத்தை கெளதம் மேனன் இயக்கி வருகிறார். படத்திற்கு இசையமைப்பாளர் யார் என்பது இதுவரை தெரியாமலேயே இருந்து வருகிறது. காதலர் தினமான பிப்ரவரி 14-ம் தேதி இப்படத்தை வெளியிட தீர்மானித்து இருக்கிறார்கள்.
http://cinema.vikatan.com/index.php?...news&Itemid=63
'மாஃப்' இந்தில எனக்கு பிடிக்காத ஒரே வார்த்தை !
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜயகாந்த் நடிப்பில் வெளிவந்த படம் ' ரமணா '. 2002ம் ஆண்டு வெளிவந்த இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்து இருந்தார். தமிழகத்தில் இப்படம் வரவேற்பை பெற்றது.
லஞ்சம் வாங்கும் அதிகாரிகளை ஒரு கல்லூரி பேராசிரியர் எப்படி தண்டிக்கிறார், அது சமூகத்தில் என்ன மாற்றங்களை ஏற்படுத்துகிறது என்பதை பரபரப்பாக சொல்லியிருந்தார். இப்படம் தெலுங்கில் சீரஞ்சிவி நடிக்க ரீமேக்காகி அங்கும் வரவேற்பைப் பெற்றது. கன்னடத்திலும் 'ரமணா' ரீமேக் ஆனார்.
இந்நிலையில் இப்படத்தின் இந்தி ரீமேக் உரிமையை தற்போது சஞ்சய் லீலா பன்சாலி வாங்கியுள்ளார்.
' ரமணா ' ரீமேக்கில் விஜயகாந்த் வேடத்தில் ஷாருக்கான் நடிக்க இருக்கிறார். 'துப்பாக்கி' படத்தினை முடித்தவுடன் இப்படத்தினை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கலாம் என்று தெரிகிறது.
ஏ.ஆர்.முருகதாஸ் " நானும் ஷாருக் கானும் இப்படம் குறித்து ஏற்கனவே பேசி இருக்கிறோம். நான் ரமணா இந்தி ரீமேக்கை இயக்க இருக்கிறேன் " என்று கூறியுள்ளார்.
'ரமணா' படம் தமிழகத்தில் விஜயகாந்த் அரசியலுக்கு வர மிகப் பெரிய வரவேற்பை வழங்கியது. ஆந்திராவில் சிரஞ்சீவி அரசியலுக்கு வந்த போதும், இப்படம் அவருக்கு பெரும் உதவியாக இருந்தது. ஷாருக்... ம்ஹூம் அரசியலுக்கு வரமாட்டார்..!
http://cinema.vikatan.com/index.php?...news&Itemid=63
அஜீத் + விஷ்ணுவர்த்தன் + யுவன் !
http://cinema.vikatan.com/images/art...es/30billa.jpg'பில்லா 2' படத்தினை தொடர்ந்து விஷ்ணுவர்த்தன் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் அஜீத். இப்படம் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் இப்படத்தின் தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் " எனது அடுத்த தயாரிப்பிற்கு நடிகர் அஜீத் மற்றும் இயக்குனர் விஷ்ணுவர்த்தனை ஒப்பந்தம் செய்து உள்ளேன். யுவன் சங்கர் ராஜா இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
நாயகி தேர்வு நடைபெற்று வருகிறது. அனுஷ்கா நாயகியாக ஒப்பந்தம் செய்ய பேச்சுவார்த்தை நடத்தினோம். ஆனால் மற்ற படங்களில் நடிக்க தேதிகள் ஒதுக்கியுள்ளதால் அவரால் இப்படத்தில் நடிக்க இயலாமல் போய்விட்டது. இப்படம் இன்னும் ஓரிரு மாதங்களில் துவங்கும்.
'பில்லா' படத்தில் அஜீத்தை வித்தியாசமாக காட்டிய விஷ்ணுவர்த்தன், இப்படத்தில் அஜீத் ரசிகர்கள் கொண்டாடும் வகையில் இப்படம் வரவேண்டும் என்று முனைப்புடன் பணியாற்றி வருகிறார். இப்படத்தின் ஆக்ஷன் காட்சிகள் வித்தியாசமானதாக இருக்கும் " என்று தெரிவித்துள்ளார்.
http://cinema.vikatan.com/index.php?...news&Itemid=63
மீண்டும் கமலோடு !
http://cinema.vikatan.com/images/art...s/09france.jpg
'விஸ்வரூபம்' படத்தினை நடித்து இயக்கி வருகிறார் கமல். இதுவரை தமிழ் திரையுலகில் ரஜினி நடித்த 'எந்திரன்' திரைப்படம் தான் அதிக செலவில் எடுக்கப்பட்ட படமாக இருந்தது.
ஆனால் 'விஸ்வரூபம்' படத்தின் பட்ஜெட் 'எந்திரன்' படத்தின் பட்ஜெட்டை தாண்டுமாம். இந்தியா, அமெரிக்கா, ஜோர்டன் போன்ற நாடுகளில் நடப்பது போன்று கதையை உருவாக்கி இருக்கிறாராம் கமல்.
எப்போதும் ஒரு படத்திற்கு அடுத்த படத்திற்கும் அதிக கால அவகாசம் எடுத்து கொள்ள மாட்டார் கமல். 'விஸ்வரூபம்' படத்தினை தொடர்ந்து மீண்டும் ஆஸ்கார் பிலிம்ஸ் தயாரிக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார்.முன்னதாக 'தசாவதாரம்' படத்தில் கமலும் ஆஸ்கர் ரவிச்சந்திரனும் இணைந்திருந்தனர்.
இதுகுறித்து ஆஸ்கார் ரவிச்சந்திரன் கூறியிருப்பது " கமல் சார் என்னோட தயாரிப்பில் ஹீரோவா நடிக்கப் போறது உண்மைதான். நிச்சயமா நீங்க எதிர்பார்க்காத இன்ப அதிர்ச்சி அந்தப் படத்தில் காத்திருக்கு. முக்கியமான ஹாலிவுட் ஆர்ட்டிஸ்ட் ஒருத்தர் கமல்கூட நடிக்கிறார். டைரக்டர், ஹீரோயின், மியூஸிக், டெக்னிஷியன்ஸ் பத்தி இந்த வருஷத்துல அறிவிக்கப் போறேன். " என்று தெரிவித்தார்.
http://cinema.vikatan.com/index.php?...news&Itemid=63
பவர் ஸ்டார் Vs (ரஜினி + விஜய்+ etc..)
http://cinema.vikatan.com/images/art...1powerstar.jpg2011ம் ஆண்டில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் எந்த ஒரு படமும் வெளிவரவில்லை.
ஆனால் ரஜினி படத்தைப் போலவே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் படம் வெளியிட்டு தனது பேட்டி, கெட்டப், டிவிட்டர் பஞ்ச் வசனங்கள் மூலம் தமிழ் திரையுலகினர் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தவர் 'பவர் ஸ்டார்' சீனிவாசன்.
இவர் நடிப்பில் வெளிவந்த 'லத்திகா' திரைப்படத்தை 200 நாட்களை கடந்து மகாலட்சுமி திரையரங்கில் ஓட்டினார்கள். பேட்டியில் "நான் தான் காசு கொடுத்து ஒட்டினேன்.. அது எனது ரசிகர்களுக்காக " என பேட்டியளித்தார் பவர்.
தன் ரசிகர்களுக்காகவே தன் நடிப்பில் வெளியான 'லத்திகா'வைத் தொடர்ந்து 'ஆனந்த தொல்லை', 'மன்னவன்', 'திருமா', 'தேசிய நெடுஞ்சாலை', 'மூலக்கடை முருகன்' என வரிசையாக படங்களில் மும்முரமோ மும்முரமாக நடித்து தள்ளுகிறார்.
'பவர் ஸ்டார்' சீனிவாசன் என்ற பெயரில் புதிதாக டிவிட்டர் இணையத்தில் இணைந்துள்ளார். இவரது பஞ்ச்களை எல்லாம் பார்த்து இது ' நிஜ பவர் ஸ்டாரா' என சந்தேகங்கள் முளைத்தபோது, அதை முளையிலேயே கிள்ளி, " அது நானே தான் ! " என்று பேட்டியளித்து, 'ரசிகர்'களை ஆச்சர்யத்திலும் இணையவாசிகளை அதிர்ச்சியிலும் ஆழ்த்தினார்.
பல்வேறு வேலைகளுக்கு இடையிலும் தனது ரசிகர்களின் கேள்விகளுக்கு டிவிட்டர் இணையத்தில் பதிலளித்து வருகிறார் இந்த 'பவர்'.
டிவிட்டர் இணையத்தில் இவர் பண்ணிய மெசேஜுகளைப் பார்த்து திரையுலகமே Freeze ஆகி இருக்கிறது. இவர் யாருக்கு எல்லாம் என்ன மெசேஜ் அனுப்பினார், என்ன விஷயங்களை பகிர்ந்து கொண்டார் என்பது குறித்த சில நட்சத்திரத் தகவல்கள் :
* CHAMMAK CHALLO பாடல் பாடிய AKON விற்கு : உங்களுடன் பணிபுரிய ஆசைப்படுகிறேன். இது தான் எனது டிவிட்டர் அக்கவுண்ட்.
* ஃபேஸ்புக் இணையத்தில் சிம்புவிற்கு பிறகு எனக்கு தான் அதிக ரசிகர்கள் இருப்பது எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது.
* ரசிகர்களே.. என்னை பிடிக்காத சில பேர் என்னை தவறாக பேசுவதை பார்த்து கோபப்படாதீர்கள். ஆண்டவன் நல்லவங்களை சோதிப்பான் ஆனா கைவிட மாட்டான் !
* ரஜினிகாந்த் பிறந்த நாள் அன்று : எனது அண்ணன் சூப்பர் ஸ்டார் வாழ்க பல்லாண்டு. நீங்க இன்னும் பல படங்க பண்ணனும், அது எனக்கு போட்டியா இருக்கணும்.. ( சூப்பர் ஸ்டார் 'கோச்சடையான்' படத்தை விரைவாக முடிக்க திட்டமிட்டதற்கு பவர் ஸ்டாரின் இந்த மெசேஜ் காரணமில்லை என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.)
பவர் ஸ்டார் சீனிவாசனுக்காக ரசிகர்கள் உருவாக்கிய வீடியோ பதிவு :Dim lights Embed
* மல்லிகா ஷெரவத்திற்கு : ஒஸ்தி படத்தில் நன்றாக ஆடி இருந்தீர்கள். விரைவில் உங்களுடன் ஒரு படத்தில் பணிபுரிய ஆசைப்படுகிறேன்.
* ஜிம்மில் இருந்து வந்து விட்டேன் மிகவும் சோர்வாக இருக்கிறது. ஆனால் எனது வெறித்தனமான ரசிகர்களுக்காக டிவிட்டரில் பேசலாம் என்று வந்தேன்.
* இயக்குனர் ஷங்கர் மற்றும் விஜய் என்னை 'நண்பன்' படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு அழைத்து இருக்கிறார்கள். ஆனால் என்னால் போக முடியுமா என்று தெரியவில்லை.
http://cinema.vikatan.com/images/art...powerstar1.jpg* ராஜபாட்டை படத்தில் எனது பேரை படத்தின் பப்ளிசிட்டிக்காக பயன்படுத்தி இருக்கிறார் விக்ரம்.
* ஆனந்த தொல்லை படத்தில முழுக்க முழுக்க ஆக்ஷன் தான். பயங்கரமான வில்லனா என்னை பாக்க போறீங்க!
* பொங்கல் 2012 அன்று விஜய்யின் 'நண்பன்'. போட்டியாக எனது 'ஆனந்த தொல்லை'.
* பவர் ஸ்டாருக்கு கோபம் வராது தம்பி. பாசத்தால அடிக்கிறவன் தான் இந்த பவர் ஸ்டார்.
டிவிட்டர் இணையத்தில் இவரது ரசிகர்களுக்கு இவரை பற்றி பதிந்து இருக்கும் மிகச் சில 'பஞ்ச்'கள் மட்டும் இங்கே :
* ஆனந்த தொல்லை டிரெய்லரே இப்படின்னா, படம் CHANCELESS... ஆனந்த தொல்லை கண்டிப்பாக நண்பன் மற்றும் பில்லா 2 படத்திற்கு தொல்லையாக இருக்கும்.
* பஸ்ல ஹாரன் அடிச்சா சத்தம் வரும்.. என் தல பவர் ஸ்டார் அடிச்சா ரத்தம் வரும்.
* தலைவா.. உங்களுக்கு கத்ரினா கைஃப் தான் சரியான ஜோடி!
* தலைவா.. ஐஸ்வர்யா ராய் கூட எல்லாம் நடிக்க வேண்டாம். அவங்க பொண்ணு கூட நடிங்க. அது தான் உங்களுக்கு கரெக்ட்.
* தல.. கிறிஸ்துமஸ் தாத்தா எனது பரிசு பொருள் கொடுக்கவில்லை என வருத்தப்பட்டேன். நீங்கள் ஆன்லைன்ல இன்றைக்கு வந்துட்டீங்க. எனககு மிகப்பெரிய பரிசு இதுதான்.
* எல்லாரும் அவங்க குடும்பம் அல்லது காதலி போட்டோ தான் பர்ஸ்ல வச்சுருப்பாங்க.. ஆனால் என்னோட பர்ஸ்ல உங்களோட போட்டோ தான் வச்சுருக்கேன். நான் உங்கள் ரசிகன்.. இல்லை இல்லை.. பக்தன்.
லத்திகா படத்தினை தொடர்ந்து ரசிகர்களுக்காக காத்திருக்கும் அடுத்த ஆனந்த தொல்லை:Dim lights Embed
* நான் நீங்க டிவிட்டர் இணையத்திற்கு வரவில்லை என்று தேம்பி தேம்பி அழுதுகிட்டு இருந்தேனா, டக்குனு பார்த்தா ஒரு வாளி ஃபுல்லா கண்ணீர்.!
* உங்களோட அழகை பார்த்து FAIR & LOVELY CREAM-க்கே வெட்கம் வரும்.
* தலைவா.. WORLD PEACE DAY என்றைக்கு கொண்டாடலாம் என்று சொல்லுங்கள்.. அதான் உங்கள் பிறந்த நாள்...
* படங்களில் கயிறு உபயோகித்து சண்டை போடுங்கள்... உங்களுக்கு ஒன்று என்றால் எங்களால் தாங்கவே முடியாது.
* உங்களை 'நடிகர்' என்று சொல்வதை வன்மையாக கண்டிக்கிறேன். நீங்கள் கமல் மாதிரி ஒரு 'பன்முக கலைஞன்'.
* வணக்கம் தலைவா.. நான் உங்களின் தீவிர ரசிகன். எல்லாரும் உங்களின் படத்தை தான் பார்ப்பாங்க. ஆனால் நான் உங்க பட போஸ்டரை 3 மணி நேரம் பார்ப்பேன்.!
* ஆஸ்கர் விருது குழுக்களையும் உங்களது 'லத்திகா' படம் கவரும் என்பதில் சந்தேகமில்லை.
* சார் உங்களது அடுத்த படத்தில் நீங்கள் 6 பேக்கில் நடிக்கணும்.
* தலைவா... உங்கள் முகத்தில் 10 அஜீத், 23 விஜய், 4 கமல் சாயல் இருக்கு.. 2016ல் நீங்க தான் தல சி.எம்.!
* நீங்கள் கண்டிப்பாக அரசியலுக்கு வரணும்.. நீங்க வந்தாதான் பவர் கட் பிரச்னை சரியாகும்.
* தலைவா உங்களுக்கு இருக்கிற அழகுக்கு நீங்கள் ஆங்கில படத்தில் கூட நாயகனாக நடிக்கலாம்.
* வானத்துல இருக்கு பல ஸ்டார்.. ஆனால் இங்க டிவிட்டருக்கு ஒரே ஸ்டார் எங்க பவர் ஸ்டார்.
* தீபாவளின்னா சரவெடி.. எங்க பவர் ஸ்டார்னா அதிரடி!
http://cinema.vikatan.com/index.php?...news&Itemid=63
முதல் முறையாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பெயரில் சிறந்த நடிகருக்கு விருது !!
http://tamilcnn.com/upload-files/jan...ajini3-300.jpg
சிறந்த தமிழ்ப் படங்கள் மற்றும் நடிகர் நடிகைகள், கலைஞர்களுக்கு 'எடிசன் விருதுகள்' என்ற பெயரில் ஆண்டு தோறும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு
இந்த ஆண்டுக்கான எடிசன் விருதுகள் வழங்கும் விழா வரும் பிப்ரவரி மாதம் 12-ம் தேதி சென்னை சேத்பட்டில் உள்ள லேடி ஆணடாள் பள்ளி அரங்கில் நடக்கிறது.
2011-ம் ஆண்டுக்கான சிறந்த படங்கள், சிறந்த கலைஞர்கள் ஆகியோர் கவுரவிக்கப்பட உள்ளனர். தனி குழு எதுவும் விருதுக்கான கலைஞர்களை தேர்வு செய்யவில்லை. ஆன்லைன் வாக்கெடுப்பு முறையில் உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் வாக்களித்து தேர்வு செய்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்காக www.edisonawards.in என்ற இணையதளத்தின் மூலம் வாக்கெடுப்பு நடந்து வருகிறது. தவிர, முன்னணி நடிகர், நடிகைகள், கலைஞர்களின் பேஸ்புக், யாஹூ மற்றும் கூகுள் குரூப்ஸ் ஐடிகள் பெறப்பட்டு, அவர்களுக்கு நியூஸ்லெட்டர்கள் அனுப்பும் வேலையும் நடந்து வருகிறது. இதுபோல பல லட்சம் நியூஸ்லெட்டர்கள் அனுப்பப்படுவதா விழா ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
சென்னையில் இணையதளம் பயன்படுத்தாத பொதுமக்கள் வாக்களிக்க வசதியாக 110 மையங்களில் வாக்கு சீட்டு முறைப்படி ஜனவரி 2ம் தேதி முதல் ஜனவரி 30ம் தேதி வரை வாக்களிக்கவும், கல்லூரி, ஷாப்பிங் மால், பீச் போன்ற இடங்களிலும் வாக்களிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த எடிசன் விருது வழங்கும் விழா 7 நாட்டு தமிழ் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்படும். மேலும் மலேசியாவில் அஸ்ட்ரோ தொலைக்காட்சியின் ஏற்பாட்டின் கீழ் மலேசிய நடன கலைஞர்கள், பாடகர்கள், சிங்கப்பூர் வசந்தம் டிவி நடன கலைஞர்கள், பாடகர்கள், காமெடி நடிகர்கள் போன்ற கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.
முதல் ரஜினி விருது...
இந்த விழாவின் சிறப்பு அம்சமாக, சூப்பர் ஸ்டார் ரஜினியின் பெயரில் சிறந்த நடிகருக்கான விருது வழங்கப்பட உள்ளது. தமிழ் சினிமாவுக்கு உலகளாவிய மரியாதை, வர்த்தக எல்லையை விரிவுபடுத்தியது மற்றும் இளம் படைப்பாளிகளை ஊக்குவிப்பதில் நிகரற்றுத் திகழ்வது என பெருமை சேர்த்தவர் என்பதால் இந்த விருதினை சூப்பர் ஸ்டார் ரஜினியின் பெயரில் வழங்குவதாக நிகழ்ச்சி அமைப்பாளர்கள் தெரிவித்தனர்.
ரஜினி பெயரில் தனி விருது ஏற்படுத்தப்பட்டு வழங்கப்படுவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது. பிப்ரவர் 12-ம் தேதி இந்த விருது வழங்கும் விழா நடக்கிறது. விஜய், தனுஷ், அஞ்சலி, ரிச்சா, கவிஞர் வாலி, இயக்குநர் எஸ்பி முத்துராமன் உள்ளிட்ட முன்னணிக் கலைஞர்கள் இதில் பங்கேற்கிறார்கள்.
250 வெளிநாட்டுப் பார்வையாளர்கள்
இந்நிகழ்ச்சியில் உள்ளூர் ரசிகர்கள், நடிகர்கள், பத்திரிகையாளர்கள் தவிர, வெளிநாட்டு அமைச்சர்கள், வெளிநாட்டுப் பத்திரிக்கையாளர்கள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் மட்டுமே 250 பேர் பங்கேற்கவிருப்பதாக நிகழ்ச்சியின் அமைப்பாளர் 'மைதமிழ்மூவிஸ்' ஜெ செல்வகுமார் தெரிவித்தார்.
http://tamilcnn.com/moreartical.php?...rent&subcat=11
Hats-off to Rajni sir... :clap: :bow:
2012 தான் பெஸ்ட் : சந்தானம்
http://cinema.vikatan.com/images/art...7santhanam.jpg
2011ல் அதிக படங்களில் காமெடியனாக நடித்தவர் சந்தானம். விஜய்யுடன் ' வேலாயுதம் ', கார்த்தியுடன் ' சிறுத்தை ' ஆகிய இரண்டு படங்களும் மக்களிடையே வரவேற்பை பெற்றது.
'சந்தானம் நடித்து இருக்கிறார் என்றால் படத்தை கண்டிப்பாக பார்க்கலாம்' என்கிற அளவுக்கு தன் ரசிகர்களிடையே பெயர் பெற்று இருக்கிறார்.
2012ம் ஆண்டில் என்னென்ன படங்களில் நடிக்க இருக்கிறார் என்று தொடர்பு கொண்டபோது " 2011ம் ஆண்டை விட 2012ம் ஆண்டு தான் என்னை பொருத்தவரை சிறந்ததாக அமையப் போகிறது.
பல பெரிய பட்ஜெட் படங்களில் நடிக்க இருக்கிறேன். கார்த்தியுடன் 'சகுனி', உதயநிதி ஸ்டாலினுடன் 'ஒரு கல் ஒரு கண்ணாடி', சூர்யாவுடன் 'சிங்கம்-2', கெளதம் மேனன் இயக்கத்தில் 'நீதானே என் பொன்வசந்தம்', சேரன் இயக்கும் படம், சிம்புவுடன் இணைந்து ' போடா போடி ', ' வேட்டை மன்னன் ' என வரிசையாக 15க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வருகிறேன்.. நடிக்கவும் இருக்கிறேன்.
எனது திரையுலக வாழ்வில் 2011ஐ விட 2012ம் ஆண்டு தான் சிறந்தது " என்று தெரிவித்தார்.
http://cinema.vikatan.com/index.php?...news&Itemid=63
பிஸினஸ் மேனாக போவது யார்?
http://cinema.vikatan.com/images/art...usinessman.jpg
தெலுங்கில் மகேஷ்பாபு, பூரி ஜெகநாத் இணைந்து செய்த படம் 'போக்கிரி'. தெலுங்கில் வசூல் மழையில் நனைந்ததால் இப்படம் தமிழில் விஜய் நடிப்பில் வெளியாகி இங்கும் வரவேற்பை பெற்றது.
தற்போது மகேஷ்பாபு, பூரி ஜெகநாத் இணைந்து இருக்கும் படம் 'தி பிஸினஸ்மேன்'. இப்படம் தெலுங்கு திரையுலகில் பெரும் எதிர்ப்பார்ப்பில் இருக்கிறது. காஜல் அகர்வால் நாயகியாக நடித்து இருக்கிறார். தமன் இசையமைத்து இருக்கிறார்.
கடைசியாக மகேஷ்பாபு நடிப்பில் வெளியான 'தோக்குடு' படம் தமிழ்நாட்டில் வெளியாகி இதுவரை எந்த ஒரு தெலுங்கு படமும் செய்யாத வகையில் வசூல் சாதனை படைத்தது.
'தி பிஸினஸ்மேன்' படத்தின் மொத்த உரிமையையும் கைப்பற்றி இருக்கிறது ஸ்டூடியோ கிரீன் நிறுவனம். படத்தின் வெளியீட்டு உரிமையை மட்டுமல்லாமல் படத்தின் ரீமேக் உரிமையை வாங்கி இருக்கிறார்கள்.
'தி பிஸினஸ்மேன்' படம் வெற்றி பெற்றால் தமிழ் ரீமேக்கில் மகேஷ்பாபு வேடத்தில் சூர்யாவா அல்லது கார்த்தியா என்பது படத்தின் வெற்றியை பொருத்து இருக்கிறது.
http://cinema.vikatan.com/index.php?...news&Itemid=63
எந்திரன்… சன் டிவியின் பொங்கல் பிரம்மாஸ்திரம்!
http://tamilcnn.com/upload-files/jan...ran-unseen.jpg
இந்திய சினிமாவின் பிரமாண்ட படம், இந்தியாவிலேயே அதிக வசூலைக் குவித்த படம், தரத்தில் ஹாலிவுட்டுக்கு நிகரான படம் என்ற பெருமைகளைப் பெற்ற சூப்பர் ஸ்டார் ரஜினியின் எந்திரன் படம் பொங்கல் ஸ்பெஷலாக சன் டிவியில் வெளியாகிறது.
இந்த 90 ஆண்டு இந்திய சினிமா வரலாற்றில் ஒரு படம் இத்தனை பிரமாண்டமாய் எடுக்கப்பட்டதில்லை. ஒரு தமிழ்ப் படம் இத்தனை அரங்குகளில் வெளியானதுமில்லை. சென்னையில் மட்டும் 42 திரையரங்குகளில் வெளியான ஒரே படம். தெலுங்கில் ரோபோ செய்த சாதனை மிகப் பெரியது!
கடந்த சில தினங்களாகவே, இந்தப் படத்தை மீண்டும் மறுவெளியீடு செய்தால் நன்றாக இருக்கும் என்று ரசிகர்கள் பரவலாகக் கேட்டு வந்தனர்.
மறுவெளியீடு என்றால் குறைவான தியேட்டர்களில்தான் வெளியிட முடியும். அதனால் சன் டிவி அதிரடியாக பொங்கல் சிறப்புத் திரைப்படமாக எந்திரனை வெளியிடுவதாக இன்று அறிவித்துவிட்டது.
வரும் தை முதல் நாளில் 15.01.2012- மாலை 6 மணிக்கு சன் டிவியில் ரஜினியின் எந்திரனை மீண்டும் பார்க்க வாய்ப்பு கிடைத்துள்ளது.
பொங்கல் அன்று இந்தப் படத்தை டிவியில் போடுவதால், அன்றைய தினம் வெளியாகும் புதிய படங்களின் வசூலை நினைத்து இப்போதே விநியோகஸ்தர்கள் கவலைப்பட ஆரம்பித்துள்ளனர் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்!
http://tamilcnn.com/moreartical.php?...rent&subcat=11
பெஸ்டிவெல் படங்கள்
இனி ர*ஜினி, கமல், விஜய், அ**ஜீத் படங்களை பெஸ்டிவெல் படங்கள் என்று தாராளமாக அழைக்கலாம். திரைப்பட விழாக்களில் இவர்களின் படங்கள் திரையிடப் போகிறார்களா என்று பயப்பட வேண்டாம். இது வேறு.
பெ*ரிய ஸ்டார்களின் படங்களால் சிறு முதலீட்டுப் படங்கள் பாதிக்கப்படுவதால் மாஸ் ஹீரோக்களின் படங்களை திருவிழா நாட்களில் மட்டும் - அதாவது பொங்கல், ஏப்ரல் 14 தமிழ் புத்தாண்டு, மே ஒன்று, ஆகஸ்டு 15, தீபாவளி ஆகிய தினங்களில் மட்டும் வெளியிடுவது என்று முடிவு செய்துள்ளது தயா*ரிப்பாளர்கள் சங்கம். இந்த முடிவு இன்னும் அதிகாரபூர்வமாகவில்லை, ப*ரிசீலனையில் உள்ளது.
http://tamil.webdunia.com/entertainm...20111041_1.htm
Dhanush and Mallika crowned PETA's hottest vegetarians - Indian Express
விஷால் மீது ராதிகா சரத்குமார் அதிரடி புகார்!
https://lh6.googleusercontent.com/-e...800/Vishal.jpg
பிரபுதேவா அதிரடி ஹிட் படங்களை இயக்குவதாக நிலவிய மாயையில் சிக்கிக்கொண்ட
விஷால் தற்போது பெரும் சிக்கலில் மாட்டிக்கொண்டிருக்கிறார் என்று நடிகர் சங்க வட்டாரத்தில் இருந்து அதிரடித் தகவல் கசிகிறது. விஷால் சமீராரெட்டி ஜோடியாக நடித்த வெடி படத்தை பிரபுதேவாதான் இயக்கினார்.
விஷாலின் அண்ணன் விக்ரம் கிருஷ்ணா தயாரித்தார். இந்தப்படம் கடந்த செப்டம்பர் மாதம் ரிலீசானது. ஆனால் படம் படுதோல்வி அடைந்தது. இந்தப்படத்தை விநியோகம் செய்யும் பொறுப்பை நடிகை ராதிகாவின் ராடான் டி.வி. நிறுவனம் ஏற்றது. இதற்காக அந் நிறுவனத்துக்கு ரூ.12 கோடி தருவதாக விஷால் உறுதி அளித்து ஒப்பந்தம் போட்டு கொடுத்ததாகவும்.
அதில் ரூ. 9 கோடியை தற்போது தர மறுப்பதாகவும் அதிரடியாக குற்றம் சாட்டியுள்ளார் ராதிகா சரத்குமார்.
இது குறித்து நடிகர் சங்கத்திலும், தயாரிப்பாளர் சங்கத்திலும் விஷால் மீது நடிகை ராதிகா புகார் செய்துள்ளார். அந்த புகார் மனுவில் கூறி இருப்பதாவது:
விஷாலின் வெடி படத்தை விநியோகம் செய்து கொடுக்கும் பணிகளை ராடான் நிறுவனம் செய்து கொடுத்தது.
இதற்காக விஷால் ரூ.12 கோடி தருவதாக ஒப்புக் கொண்டார். அந்த ஒப்புதலை கடிதமாகவும் எழுதிக் கொடுத்தார். படத்துக்கான சாட்டிலைட் உரிமை மூலம் ரூ.3 கோடி கிடைக்கிறது. அந்த தொகை போக மீதி ரூ.9 கோடிக்கு விஷால் கையெழுத்திட்டு செக் கொடுத்தார்.
அந்த செக்கை வ*ங்கியில் செலுத்திய போது திரும்பி வந்து விட்டது. இதன் பிறகு பல முறை விஷாலை தொடர்பு கொண்டு பணத்தை திருப்பி கேட்டும் அவர் தரவில்லை. எனவே விஷாலிடம் இருந்து ரூ.9 கோடி பணத்தை வாங்கித் தருமாறு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு புகாரில் கூறியுள்ளார்.
இது குறித்து விஷாலிடம் விசாரணை நடத்த நடிகர் சங்கமும், தயாரிப்பாளர் சங்கமும் முடிவு செய்துள்ளன. இதற்கிடையில் சரத்குமாரின் முதல் மனைவியின் மகளான வரலட்சுமியை விஷால் காதலித்து வருவதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.