Look forward to the series Mr.Murali.
I was driving by Boag Road a few days back and saw some huge temporary constructions going on in Annai Illam. Perhaps some preparations for the 80th birthday celebrations.
Printable View
Look forward to the series Mr.Murali.
I was driving by Boag Road a few days back and saw some huge temporary constructions going on in Annai Illam. Perhaps some preparations for the 80th birthday celebrations.
Ah ! Murali sir, real good news. After Padalgal Palavidham, wishing this series to be another feather in your cap.
All the best sir !
:thumbsup:
Eagerly looking forward.
முரளி சார்,
உங்கள் தொடரை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். :D
அனைவருக்கும் நன்றி. முதலில் சில விளக்கங்கள். இது தொடரன்று. நடிகர் திலகத்தின் பல படங்கள் பல காலக்கட்டங்களில் நிகழ்த்திய சில சாதனைகளை கோடிட்டு காட்டும் ஒரு பதிவாக இது அமையும்.
மோகன்,
பாடல்கள் பலவிதம் இன்னும் வரும். நடுவில் நீங்கள் விரும்பி கேட்டுகொண்டது போல இதையும் செய்யலாம் என்றொரு எண்ணம். சுருக்கமாக சொன்னால் அது அனலிசிஸ் (analysis). இது பாக்ட்ஸ் (facts).
அன்புடன்
that's sweet music again. In that case, my request for PP would be :Quote:
Originally Posted by Murali Srinivas
1) Ennadi Rakkamma / Kaetukodi urumi melam
2) Songs from Engirundho Vandhaal (Sirippil undagum / Naan unnai azhaikavillai / Orey paadal..)
3) Pon magal vandhaal
Would feel so glad if you could take up any one of the above songs for your next analysis, Murali sir.
Thank you sir. Waiting for a great feast!Quote:
Originally Posted by Murali Srinivas
பராசக்தி
1. நடிகர் திலகத்தின் முதல் படமே தமிழ்நாட்டை கலக்கியது. முதல் படமே அது வரை தமிழ் திரையுலகம் கண்டிராத ஒரு சாதனையை நிகழ்த்தியது, ஆம் அந்த படம் 62 சென்டர்களில் 50 நாட்களை கடந்தது. அதற்கு முன் எந்த படமும் அது போன்ற ஒரு சாதனையை புரியவில்லை.
2. அது போல முதல் படமே தமிழகத்தில் 7 திரை அரங்கங்களில் 100 நாட்களை கடந்து ஓடியது. அவை
சென்னை - பாரகன், பாரத், அசோக்.
மதுரை - தங்கம் (ஆசியாவிலேயே மிக பெரிய திரை அரங்கம்) -112 நாட்கள்.
அங்கிருந்து ஷிப்ட் செய்யப்பட்டு மதுரை - சிட்டி சினிமாவில் 126 நாட்கள்.
கோவை - ஸ்ரீ முருகன்
சேலம் - பாலஸ்
திருச்சி - வெலிங்டன்
3. முதல் படமே வெள்ளி விழாவை தாண்டி 200 நாட்களை கடந்தது.
திருச்சி - வெலிங்டன் - 245 நாட்கள்
4.முதல் படமே வெளி மாநிலத்தில் - 100 நாட்கள்
பெங்களூர் - கீதா, சுபர்ஸ்ரீ அரங்கங்கள் (பெங்களூரில் இதுதான் 100 நாட்களை கடந்த முதல் தமிழ் படம்).
5. முதல் படமே வெளி நாட்டில் ( இலங்கை) வெள்ளி விழாவை தாண்டியது.
கொழும்பு - மைலன் - 294 நாட்கள்
யாழ்பாணம் - வெலிங்டன் - 200 நாட்கள்
6. முதல் முதலாக பராசக்தி படத்தில் தான் டைட்டில் பாடல் வந்தது.
7. முதன் முதலாக பராசக்தியின் வசனம் தான் இசை தட்டாக வெளி வந்தது. விற்பனையில் புதிய சாதனையும் படைத்தது.
8. 16 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் 1968-ல் பராசக்தி வெளியான போது
சென்னை - மகாராஜாவில் - 110 நாட்கள். அங்கிருந்து ஷிப்டிங்கில் 175 நாட்களை கடந்தது.
மதுரை -ஸ்ரீதேவியில் - 49 நாட்கள், ஷிப்டிங்கில் -73 நாட்கள்.
அதே 1952-ம ஆண்டில் நடிகர் திலகம் நடித்த இரண்டாவது படமான பணம் வெளியானது. இதில் சில "முதல்கள்"
என்.எஸ். கிருஷ்ணன் இயக்கிய முதல் படம்
மெல்லிசை மன்னர்கள் முதன் முதலில் இசையமைத்த படம்
தமிழ் திரை உலகில் அதிக படங்களில் ஜோடியாக நடித்த நடிகர் திலகம் - நாட்டிய பேரொளியும் இணைந்து நடித்த முதல் படம்.
(தொடரும்)
அன்புடன்
So much of " First's " in his First film !!! Amazing.
I've seen a few films in this theatre which is near my house. Now all you can see is a huge apartment in the place where this theatre existed.Quote:
Originally Posted by Murali Srinivas
Maharani. " Shifting-il 175 naatkal" means, shifted to another theatre ??? Which theatre sir ??Quote:
Originally Posted by Murali Srinivas
சாதனைகள் தொடரட்டும் ......
thiru Murali, :ty: for the ariya thagavalgal on Parasakthi :D
முரளி சார்,
பாதுகாக்க வேண்டிய தகவல்கள் .தொடருங்கள் :D
பராசக்தி ,எஸ்.எஸ்.ராசேந்திரனுக்கும் முதல் படம் அல்லவா? :roll:
கண்ணதாசனும் திரையில் வருவது இது தான் முதலோ? :)
கமல் சொன்னது போல ..உலக வரலாறு கிறித்துவுக்கு முன் கிறித்துவுக்கு பின் என்பது போல ,தமிழ் சினிமா வரலாறு சிவாஜிக்கு முன் ,சிவாஜிக்கு பின் என்று தானே எழுதப்படும் ..அந்த வகையில் 'பராசக்தி' ஒரு வரலாற்றின் தொடக்கம்.
Murali sir,
Your first post (in this series) containing somanay 'firsts' about the very first movie of Nadigar Thilagam.
Especially the mention about the centres and theatres were the movies run for 100 days and Silver Jubilee are very informative. We have started to save the records.
Your post created our temptation to expect more and more.
Thanks a lot.
krishnan panju or N.S.Krishnan?Quote:
Originally Posted by Murali Srinivas
Sridhar, read the full post. He is referring to Sivaji's second film: PaNam
Quote:
அதே 1952-ம ஆண்டில் நடிகர் திலகம் நடித்த இரண்டாவது படமான பணம் வெளியானது. இதில் சில "முதல்கள்"
என்.எஸ். கிருஷ்ணன் இயக்கிய முதல் படம்
I missed to read that line, sorry.
டியர் முரளி, சீரிய முயற்சி...
நடிகர்திலகத்தின் திரைப்படங்களின் சாதனை பற்றிய முதற்பதிவே முத்தான பதிவாக அமைந்துள்ளது. எல்லோரும் சொல்லியிருப்பது போல் எதிர்பார்ப்புகளையும் ஆவலையும் தூண்டியுள்ளது.
வாழ்த்துக்கள்.
பிரபு, சரவணா,
நன்றி.
ஸ்ரீ,
Thanks for the active participation. [does your father go through the forum? asking out of curiosity - he being a NT fan]
மோகன்,
உங்கள் விருப்பம் என் விருப்பமாகவும் இருக்கிறது. பார்க்கலாம். ஷிப்டிங் என்றால் ஒன்றோ அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட அரங்குகளில் ஓடியதை குறிப்பிடுகிறோம். அதனால் குறிப்பிட்ட தியேட்டர் என்று சொல்ல முடியவில்லை
கார்த்திக்,
பதிவு செய்து வைத்துக்கொள்ளுங்கள். நமக்கு தேவைப்படும்.
ஜோ,
பராசக்தி பற்றிய தகவல்கள் உங்கள் ஐயப்பாட்டை நீக்கியிருக்கும் என நம்புகிறேன். உங்களிடம் ஆதாரம் கேட்டவர்களுக்கு இதை கொடுங்கள்.
சாரதா,
நன்றி. நான் எதாவது தகவல்களை எழுத விட்டு விட்டால் அதை எடுத்து கொடுப்பீர்கள் என நம்புகிறேன்.
அன்புடன்
சிவாஜியின் சாதனை சிகரங்கள்
தொடர்ச்சி
வருடம் - 1953
1. முதன் முதலாக நடிகர் திலகம் வேற்று மொழி படத்தில் நடித்தது இந்த வருடம் தான். படம் பரதேசி. மொழி தெலுங்கு.
2. நடிகர் திலகத்தின் மனங்கவர்ந்த இயக்குனர் எல்.வி.பிரசாத் முதன் முதலாக நடிகர் திலகத்தை இயக்கியதும் இந்த படத்தில் தான்.
3. இதே வருடம் தான் எல்.வி. பிரசாத் முதன் முறையாக நடிகர் திலகத்தை தமிழிலும் இயக்கினார். படம் - பூங்கோதை.
4. நடிகர் திலகத்தின் நெருங்கிய நண்பர் ஏ.என்.ஆர் (ANR), நடிகர் திலகத்தோடு இணைந்து முதன் முதலாக நடித்ததும் பரதேசி படத்தில் தான்.
5. முதன் முதலாக நடிகர் திலகம் ஆன்டி ஹீரோ (Anti -Hero) ரோலில் நடித்ததும், கதாநாயகன் வில்லனாக நடித்தால் இமேஜ் போய் விடும் என்பதை உடைத்ததும் இந்த வருடத்தில் தான். படம் - திரும்பிப்பார்.
6. முதன் முதலாக தமிழ் படங்களுக்கு டிரைலர் காண்பிக்கப்பட்டதும் திரும்பிப்பார் படத்திற்கு தான்.
7. முதன் முதலாக ஓரங்க நாடகங்கள் திரைப்படங்களில் இணைக்கப்பட ஆரம்பித்ததும் நடிகர் திலகத்தின் படத்திலிருந்து தான். படம்- அன்பு. நாடகம் - ஒத்தல்லோ.
8. ஓரங்க நாடகங்கள் இணைக்கப்பட்ட நடிகர் திலகத்தின் படங்கள் - 34
9. முதன் முதலாக ஸ்லோ மோஷன் (slow motion) டெக்னிக் பயன்படுத்தப்பட்டது நடிகர் திலகத்தின் படத்திற்கு தான். படம் - கண்கள்.
(சாதனைகள் தொடரும்)
அன்புடன்
No sir but I will share with him some of the info's which I read it here. Some of his most favourite NT movies are "Vietnam Veedu", "Gowravam", "Uyarndha Manidhan" etc.,Quote:
Originally Posted by Murali Srinivas
:roll:Quote:
Originally Posted by Murali Srinivas
சரவணா,
ஓரங்க நாடகங்கள் என்றால் படத்தின் கதைக்கும் அதற்கும் தொடர்பு இருக்காது. ஆனால் திரைப்படத்தின் நடுவே வரும். நீங்கள் ராஜபார்ட் ரங்கதுரை பார்த்திருந்தால் உங்களுக்கு புரியும்.
ஸ்ரீ,
Good that you are sharing the info with your father.
அன்புடன்
சிவாஜியின் சாதனை சிகரங்கள்
தொடர்ச்சி.
வருடம் - 1954
1. முதன் முதலாக ஒரே படம் மூன்று மொழிகளில் எடுக்கப்பட்டு அவை மூன்றும் ஒரே வருடம் வெளியானதும் நடிகர் திலகத்தின் படம் தான். படம் - மனோகரா.
2. மதுரை - ஸ்ரீதேவி திரையரங்கில் முதன் முதலாக அதிக நாட்கள் ஓடிய படம் மனோகரா. ஓடிய நாட்கள் - 156
3. முதன் முதலாக பாடல்கள் இல்லாமல் வெளி வந்த தமிழ் படம் - அந்த நாள்.
4. முதன் முதலாக கதாநாயகன் முதற் காட்சியிலே இறந்து விடுவது போல அமைந்ததும் அந்த நாள் படத்தில் தான்.
5. முதன் முதலாக வேறு தயாரிப்பாளருடன் கூட்டு சேராமல் ஏ.வி. எம்.நிறுவனம் தனியாக தயாரித்த படம் அந்த நாள்.
6. முதன் முதலாக டி.எம்.எஸ். நடிகர் திலகத்திற்கு பின்னணி பாடியது இந்த வருடத்தில் தான். படம் - தூக்கு தூக்கி.
7. முதன் முதலாக ஆன்டி சென்டிமென்ட் கதை தமிழில் திரைப்படமாக வந்ததும் நடிகர் திலகத்தின் படம் தான். படம் - எதிர்பாராதது.
8. சென்னை சினிமா ரசிகர்கள் சங்கம் துவங்கப்பட்ட முதல் வருடத்திலேயே முதன் முதலாக பரிசு பெற்ற படங்கள் - அந்த நாள் மற்றும் தூக்கு தூக்கி.
9. முதன் முதலாக இந்திய அரசாங்கத்தின் திரைப்பட விருது குழுவின் நற்சான்றிதழ் பெற்ற தமிழ் படங்கள் - அந்த நாள் & எதிர்பாராதது.
(சாதனைகள் தொடரும்)
அன்புடன்
:ty: for the information thiru Murali sir :DQuote:
Originally Posted by Murali Srinivas
I have seen that film :boo:
and thanks a ton for ur informartions :P
Murali sir :clap: :notworthy:
டியர் முரளி,
அவர் நடிக்க ஆரம்பித்த ஆரம்ப காலத்திலேயே எத்தனை "முதன்முதலாக"....!!!!!!.
முதன்முதலாக 'ஃப்ளாஷ்பேக்'கிலேயே படத்தின் கதை முழுவதும் சொல்லும் பாணி துவங்கப்பட்டதும் "அந்த நாள்" படத்தில்தானாம்.
(தனிப்பட்ட முறையில் ஒரு வேண்டுகோள். எந்த டிவி சேனலிலாவது 'சித்ரா பௌர்ணமி' படம் திரையிடப்பட்டால் சொல்லுங்கள். விசிடி., டிவிடி தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை. அது ஒன்று மட்டும் தப்பித்துக்கொண்டே இருக்கிறது).
சிவாஜியின் சாதனை சிகரங்கள்
தொடர்ச்சி
வருடம் - 1954 & 1955
1. முதன் முதலாக தமிழில் ஒரே நடிகரின் இரண்டு திரைப்படங்கள் ஒரே நாளில் வெளியானது நடிகர் திலகத்திற்கு தான்.
படங்கள் - அந்த நாள் & கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி.
வெளியான நாள் - 13.04.1954.
2. முதன் முதலாக மதுரையில் ஒரே படம் இரண்டு தியேட்டரில் திரையிடப்பட்டது நடிகர் திலகத்தின் படம் தான்.
படம் - கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி.
திரையிடப்பட்ட அரங்குகள் - தங்கம் & நியூசினிமா.
3. அதே நாளில் அந்த நாள் படமும் மதுரை - ஸ்ரீமீனாக்ஷி திரையரங்கில் வெளியானது. ஆக முதன் முதலாக மதுரையில் ஒரே நடிகரின் படங்கள் மூன்று திரை அரங்குகளில் வெளியானதும் நடிகர் திலகத்திற்கு தான்
4. முதன் முதலாக ஒரு நடிகர் நடித்த இரண்டு படங்கள் ஒரு வருடத்தில் ஒரே நாளில் வெளியிட்ட சாதனை மட்டுமல்லாது அதே வருடத்தில் மீண்டும் ஒரு முறை ஒரே நாளில் இரண்டு படங்கள் வெளியானதும் நடிகர் திலகம் மட்டுமே செய்த சாதனைகளாகும். அவை பின்வருமாறு
படங்கள் - அந்த நாள் & கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி.
வெளியான நாள் - 13.04.1954.
படங்கள் - கூண்டுக்கிளி & தூக்கு தூக்கி.
வெளியான நாள் - 26.08.1954
5. முதன் முதலாக சென்னையில் 6 திரையரங்குகளில் வெளியான தமிழ் படம் - எதிர்பாராதது.
6. முதன் முதலாக சென்னையில் 5 திரையரங்குகளில் 80 நாட்களை கடந்து ஓடிய தமிழ் படம் - எதிர்பாராதது.
அரங்குகள் - சித்ரா,காமதேனு, பிராட்வே, மகாலக்ஷ்மி, பாரத்.
7. முதன் முதலாக ஒரே வருடத்தில் ஒரு தமிழ் பட கதாநாயகன் நடித்த அதிகமான படங்கள் வெளியானது இந்த வருடத்தில் தான். நடிகர் திலகம் நடித்த 10 படங்கள், 1954-ல் வெளியானது.
8. இதில் மூன்று படங்கள் 100 நாட்களை கடந்தன.
மனோகரா
கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி -
[சென்னை - காசினோ, சேலம் - நியூ சினிமா, திருச்சி -பிரபாத்.]
எதிர்பாராதது
9. முதன் முதலாக பந்துலுவும் நடிகர் திலகமும் ஒரு முழு நீள படத்திற்கு இணைந்தது இந்த படத்தில் தான். படம் - முதல் தேதி.
10. முதன் முதலாக படம் முழுவதும் கனவு காட்சியாகவே திரைக்கதை அமைக்கப்பட்ட படம் - முதல் தேதி.
11. முதன் முதலாக தமிழ் திரை உலகில் நடிக்க வந்த மூன்றே வருடங்களில் 25 படங்கள் அதுவும் நாயகனாகவே நடித்தவர் நமது நடிகர் திலகம் மட்டும் தான். [1952 -1955]
(சாதனைகள் தொடரும்)
அன்புடன்
மனோகராவும், கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி யும் பார்த்து இருக்கேன்.
எதிர்பாரது பற்றி இப்போத்தான் கேள்விப்படுகிறேன்! :D
'எதிர்பாராதது' -வின் இந்த பெரும் வெற்றி உண்மையிலேயே எதிர்பாராதது :)Quote:
Originally Posted by Murali Srinivas
தமிழ்,
எதிர்பாராதது பற்றி கேள்விப்பட்டதில்லையா? நடிகர் திலகமும் பத்மினியும் காதலர்கள். தாயை இழந்த நாயகன் வெளிநாட்டிற்கு படிக்க சென்று விட்டு திரும்பி வரும் போது காதலி தன் தாய் ஸ்தானத்தில் அதாவது தன் தந்தைக்கு மனைவியாக இருப்பதை பார்க்கிறான். அதன் பிறகு நடக்கும் உணர்ச்சி போராட்டமே கதை, 1954- லேயே இப்படி புரட்சிகரமான சிந்தனையோட்டம். கதை வசனம் - ஸ்ரீதர்.
ஜோ,
மக்கள் அந்த கால கட்டத்திலேயே புதுமையை விரும்பி ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள் என்பதை தான் இந்த படத்தின் வெற்றி சுட்டிக் காட்டுகிறது.
அன்புடன்
Murali sir,
அருமையான தகவல்களை வழக்கம் போல சுவையாக எழுதி வருகிறீர்கள். ரொம்ப சந்தோஷமா இருக்கு.
Thiru murali ayyaa :PQuote:
Originally Posted by Murali Srinivas
yEdhO oru Rajini padaththula kooda ippadi oru twist irukkudhu illayaaa :roll: is it moondru mudichchu or netrikann :confused2:
sarna, it is 3 knots.
Dear friends,
It's been quite long since my last posting, because of non-availability of internet connection. Now that it's restored, I hope to continue. Happy to meet you all.
And it's really nice to see Murali going great heights. We wish him more and more achievements. As our website slogan areads, "With the company of Nadigar Thilagam in our heart and soul, we shall reach great heights", which has become true in Murali's efforts. Hats off to him.
Regarding Edirparadadhu, one of the rare stories of its time, it became a superhit, which shows the kind of audience that prevailed then. This film is now published as DVD by Raj Video Vision and is available in all leading shops. If you cant find, then go to Anna Salai Show Room of Raj Video Vision near Anand Theatre and you can grab one.
Hope NT's 80 birth day celebrations receive much gaiety and enthusiasm from all of us.
With Regards,
Raghavendran.
Dear Friends,
Firstly my congrats to Murali on this nice topic of firsts......and my sincere apologies to all....I could not assist Murali with interviewing people and hence the song thread had suffered a little , no worries , will get cracking shortly. In the meanwhile we both wrote a letter to The Hindu which may or may not get Published I am posting it here for your reference.....Maybe more of you should write to them.
Sir,
We have been following the series "blast from the past" and were more than happy when we saw the still photo of Sivaji Ganesan from the film Rangoon Radha and started reading the synopsis. But the very second paragaraph shocked us. It read
"After the stunning debut in Parasakthi (1952), Sivaji Ganesan did not get many offers as one expected. He acted as villain in few films during the 1950s - Andha Naal, Thirumbi Paar, Thuli Visham and Rangoon Radha."
Here the columnist mentions that Sivaji did not get many offers and hence was reduced to accepting villain roles. This is factually incorrect? The following facts clearly show how far off the writer is from the truth.
Parasakthi release date - 17.10.1952 - 1st Film
Rangoon Radha - release date - 01.11.1956 - 34th film.
Thus Sivaji had done 34 films in a matter of 4 years, which works out to an average of 8/9 films per year. This is something which no other hero had done before. In fact the calender year -1954 saw Sivaji acting in 10 films, which was again a record of sorts for a Tamil film hero.
As for as villain or anti hero roles are concerned, Nadigar Thilagam (as he was fondly known) looked at the charaterisation and scope for performing and not at whether the role had romance, duets, fights etc. Which is why he was always the ACTOR and never a STAR . He never went begging for any chances to anybody in his life time - as right after his debut film which was a super hit he literally never looked back -though "thirumbi Paar" was one of those Villain films.
Hope our feelings are understood . The pain is more acute when a columnist of repute such as Randor guy writes this and a paper of standing "as yours publishes it.We Hope that this is carried in your newspaper.
Thanking you
Yours truly
--
Mohan V Raman
Murali Srinivas
சிவாஜியின் சாதனை சிகரங்கள்
தொடர்ச்சி
வருடம் - 1956
1.இரண்டு வருடங்களுக்கு முன் நடந்தது போல் மீண்டும் ஒரே நாளில் இரண்டு படங்கள் வெளியானது இந்த வருடத்தில் தான்.
படங்கள் - நான் பெற்ற செல்வம் & நல்ல வீடு
வெளியான நாள் - 14.01.1956
2. முதன் முதலாக 43 நாட்கள் வித்யாசத்தில் ஒரு கதாநாயகனின் 6 படங்கள் வெளியானது நடிகர் திலகத்திற்கு தான். அவை
நான் பெற்ற செல்வம் - 14.01.1956
நல்ல வீடு - 14.01.1956
நானே ராஜா - 25.01.1956
தெனாலி ராமன் - 03.02.1956
பெண்ணின் பெருமை - 17.02.1956
ராஜா ராணி - 25.02.1956
3. எதிர்பாராதது படத்தை தொடர்ந்து சென்னையில் 6 திரையரங்குகளில் வெளியான படம் நானே ராஜா.
4. நடிகர் திலகத்தின் காரக்டர் நெகட்டிவாக இருந்தாலும் பொது மக்கள் ஏற்று கொண்டதால் தமிழகத்தில் 5 திரையரங்குகளில் 100 நாட்களை கடந்தது பெண்ணின் பெருமை. அவை
சென்னை - காசினோ, பிராட்வே, மகாலெட்சுமி.
சேலம் - நியூ சினிமா
திருச்சி - ஜுபிடர்
5. சேரன் செங்குட்டுவன் ஓரங்க நாடகத்தில் கலைஞரின் 16 பக்க வசனத்தை ஒரே டேக்-ல் நடிகர் திலகம் பேசி நடித்த படம் ராஜா ராணி.
6. முதன் முதலாக சிவாஜி பிலிம்ஸ் விநியோகித்த தமிழ் படம் - அமர தீபம்.
7. முதன் முதலாக ஒரு தமிழ் படம் 100 தொடர் அரங்கு நிறைந்த காட்சிகளாக (continous 100 House full shows) ஓடிய சாதனையை நிகழ்த்தியதும் நடிகர் திலகத்தின் படம் தான்.
படம் - அமர தீபம்
அரங்கு - காசினோ
8. முதன் முதலாக தன்னை விட வயதான ஒருவருக்கு தந்தையாக நடிகர் திலகம் நடித்த படம் - வாழ்விலே ஒரு நாள்.
9. முதன் முதலாக அண்ணா கதை எழுத, கலைஞர் திரைக்கதை வசனம் தீட்ட, நடிகர் திலகம் நடித்த படம் ரங்கோன் ராதா.
(சாதனைகள் தொடரும்)
அன்புடன்
naan pirandha aandil ivvalava...appapppa....murali kalakkareerayya.
வித்தியாசமான கதையா இருக்குங்க!Quote:
Originally Posted by Murali Srinivas
மூன்று முடிச்சிலதான் இது போல் சூழ்நிலை பார்த்து இருக்கேன்!
தந்தையாக நடித்தவர் யார்? :)
V. Nagaiah played the role of the father of NT in Edirparaadadhu.Quote:
Originally Posted by thamiz
Mohanraman Sir,
Murali is doing wonderful job and he deserves all praise. His work is matchless. And your reply to The Hindu is apt. We all thank you on behalf of all the Sivaji Fans. It was NT who brought Randor Guy to limelight through the song Love is Fine Darling in the film Thavappudhalvan. But I have come across (read through media) many occasions that somewhere he does have some kind of misconeption of NT (though he paid tributes to him during NT's demise, in the same Hindu). Your response should invoke in him his concience and make correct his approach to NT. But why the Hindu does not look into these aspects is one question which it should find out the answer.
Thank you,
Raghavendran.
HINDU நாளிதழில் வந்த தவறான தகவல் மிகவும் வேதனையளிக்கிறது. அங்கு செய்திகளைத்திரட்டி பிரசுரிப்போர், இங்குள்ள நமது நண்பர்கள் பலரை விட விஷயஞானம் குறைந்தவர்களாயிருப்பது ஆச்சரியத்தைத தருகிறது. ஒரு பேர்போன பத்திரிகை இதுபோன்ற அரைகுறையான அரைவேக்காட்டுத்தனமான செய்திகளை, சேகரிப்பாளர்களின்மேல நம்பிக்கை வைத்து, மறு சரிபார்ப்பின்றி வெளியிடுவது கண்டனத்துக்குரியது.
4 ஆண்டுகளுக்குள் 34 படங்களில் (ஒன்றிரண்டு தவிர மற்ற படங்களில் கதாநாயகனாக நடித்து) அதுவரை யாரும் செய்யாத சாதனையை மறைத்து, ஏதோ வாய்ப்புக்காக ஏங்கி நின்றதுபோல் செய்தி வெளியிடுவது அவர் புகழுக்கு செய்யும் துரோகம்.
அவர் வெறெங்காவது பிறந்திருந்தால் இன்னும் பல சிறப்புக்களை அடைந்திருப்பார் ஏற்கெனவே பலர் பலமுறை சொல்லியிருக்கும் வேளையில், அவர் இங்கே படைத்த சாதனைகளையே இருட்டடிப்புச்செய்வது, யாரை திருப்திப்படுத்த நடக்கும் சதி..?. இது சதியா, அல்லது செய்தி சேகரிப்பாளரின் அறிவுக்குறையா..?.
(நடிகர்திலகத்தின் ஆண்டு வாரியான படப்பட்டியலை HINDU பத்திரிகைக்கு அனுப்பியுள்ளேன். தவறுக்கு வருத்தம் தெரிவிப்பார்களா? அல்லது, செய்தி ஆசிரியரைக்காப்பாற்ற கண்டுக்காமல் விட்டு விடுவார்களா?)
டியர் முரளி, 1956 சாதனைப்பட்டியல் பார்த்தோம். 'பெண்ணின் பெருமை'க்கு மட்டுமே 100 நாட்கள் ஓடிய அரங்குகளின் பெயரைக்கொடுத்துள்ளீர்கள். அமரதீபமும் 100 நாட்கள் ஓடியதாக தெரிகிறது. ராஜாராணியும் ஓடியிருக்கக்கூடும் (நல்ல படம் ஆச்சே). சந்தேகத்தை தெளிவுபடுத்துங்கள். அவை ஓடியிருந்தால், திரையரங்குகளின் பெயர்களை (முடிந்தால்) தாருங்கள். ஏனென்றால் உங்களின் இந்த பதிப்பை முழு சாதனைத் தொகுப்பாக சேகரித்து வருகிறோம்
அப்படீன்னா மோகன்ராம் அண்ணாவுக்கு 52 வயசு ஆயிடுச்சா..?. பார்க்கும்போது 40+ இருக்கும்னு நினைச்சேன்.Quote:
Originally Posted by mohanraman
இதை நீங்கள் சீரியல்களிலும் திரைப்படங்களிலும் பேசும் ஸ்டைலில் ரசித்தேன்.Quote:
Originally Posted by mohanraman