http://www.youtube.com/watch?v=T_tU9eWbZYw
Printable View
இனிய நண்பர் திரு செல்வகுமார் சார்
அண்ணா , மக்கள் திலகம் கலந்து கொண்ட திருமண விழா நிழற் படங்கள் இது வரை பார்த்ததில்லை . பதிவிட்டமைக்கு நன்றி .
இனிய நண்பர் திரு கலை வேந்தன் சார்
உங்களின் பதில்கள் அருமை .நகைச்சுவையாகவும் , சிந்திக்க வைப்பதாகவும் இருந்தது பதிவுகள் .மகிழ்ச்சி .
இனிய நண்பர் திரு சைலேஷ் சார்
மக்கள் திலகத்தின் பதில்கள் சூப்பர் . அருமையான பதிவுகள் . தாய் சொல்லை தட்டாதே - பதிவுகளும் அருமை . நன்றி
நாகிரெட்டி நினைவுகள்:
என் தந்தையாரை எம்.ஜி.ஆர். சந்தித்து, தான் நடிக்க விஜயா பேனரில் அடுத்த படம் தயாரிக்க வேண்டும் என்று கேட்டபோது அன்றைய காலகட்டத்திற்கு ஏற்ப சமுதாய மேம்பாட்டினை வலியுறுத்தும் வகையில் படம் எடுக்க விரும்பினார் எம்.ஜி.ஆர். அது எப்படி இருக்க வேண்டும், அதில் எம்ஜியாருக்கு எந்த மாதிரியான வேடம் அமைய வேண்டும் என சிந்தித்தார் என் தந்தையார்...
பாரதம் ஒரு புனித பூமி. பாரம்பரிய செல்வாக்கு மிக்க புண்ணிய தேசம். தியாகச்சிந்தை படைத்தோர் தீரமிக்க போராட்டத்தினால் விடுதலை பெற்ற சுதந்திர நாடு
நமது மக்கள் பண்பாட்டுக்குரியவர்கள். பிற நாட்டவர்கள். மதிக்கத்தக்க அறிவுச் செறிவு மிக்கவர்கள். வணங்கத்தக்க வரலாற்றுச் சிறப்புக்குரியவர்கள்.
ஆனால், பரந்து கிடக்கும் இந்த சமுதாயத்தில் சில நச்சுக் கிருமிகள், பல நயவஞ்சகர்கள் மறைந்திருக்கிறார்கள்.
அவர்களால், அவர்களது செயல்களால் இந்த நாட்டில் வெட்கப்படத்தக்க வேதனைகள் நிகழ்கின்றன...
நீதிக்காக, நேர்மைக்காக, ஜாதிவெறி கூடாது என்பதற்காக, ஏழை, பணக்காரன் வேறுபாடு இருக்கக்கூடாது என்பதற்காக, சமூகத்தில் அநீதி இழைக்கப்படக்கூடாது என்பதற்காக அண்ணல் காந்தியடிகள் போராடினார்.
தனக்காகவோ, தன் புகழுக்காகவோ, தன் சுயநலத்துக்காகவோ, இந்த போராட்டங்களை அவர் மேற்கொள்ளவில்லை.
நாட்டு மக்களின் நல்வாழ்க்கைக்காக, நாட்டு மக்களின் உயர்வுக்காக, நாட்டு மக்களின் எதிர்காலத்திற்காக இந்தப் போராட்டங்களை மேற்கொண்டார்...
இந்த எண்ணத்தின் அடிப்படையில்தான் கதாநாயகனும் தன்னைப் பற்றி கவலைப்படாமல் தன்னுடன் இருக்கும் மக்களுக்காக போராடுகிறான். அந்த அளவுக்கு நமது அன்றாட வாழ்க்கையோடு ஒட்டிய சம்பவங்களை அழகாக, வரிசைப்படுத்தப்பட்டு சுவையான படமாக உருவாக்கப்பட்ட படம் "நம் நாடு'.
"நம் நாடு' படத்தில் இத்தனைச் சிறப்புகளுடன் கூடிய கதாநாயகன் துரையாக மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். கதாபாத்திரத்திற்கு ஏற்ற நடிகரா அல்லது நடிகருக்கு ஏற்ற கதாபாத்திரமா என்று சொல்ல முடியாதபடி நடித்திருந்தார்.
"நம் நாடு' படத்திற்கு காலத்திற்கேற்ற, கருத்தோவியமான வசனங்களை எழுதியவர் சொர்ணம்.
"நம் நாடு' படத்தைப்பற்றி... அப்படத்தில் தமக்கு ஏற்பட்ட புதுமையான அனுபவங்களைப் பற்றி சொர்ணம் சொல்லக் கேட்போம்:
""எம்.ஜி.ஆரின் அண்ணன் எம்.ஜி. சக்கரபாணி அவர்கள் சத்யராஜா பிலிம்ஸ் சார்பில் தயாரித்த "அரச கட்டளை' படத்தை அடுத்து, எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் உருவாக்கிய "அடிமைப்பெண்' படத்துக்கு உரையாடல் அமைக்கும் பொறுப்பினை ஏற்றிருந்தேன்.
அந்தப் படத்தின் ஷூட்டிங் வேலைகள் மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, ஒருநாள் எம்.ஜி.ஆர். என்னை அழைத்தார். ""விஜயா-வாகினி அதிபர் பி.நாகிரெட்டியார் நான் நடிக்க அடுத்த படம் தயாரிக்கவிருக்கிறார். அவரிடம் ஏதாவது ஒரு கதையைச் சொல்லி ஓகே பெற்று வாருங்கள், நான் உங்களைப் பற்றி சொல்லி இருக்கிறேன்'' என்றார்.
அப்போது நான் அண்ணாசாலையில் முரசொலி நாளேட்டில் பணியாற்றிக் கொண்டிருந்தேன். விஜயா - வாகினி ஸ்டூடியோ நிர்வாகிகளுடன் தொடர்பு கொண்டு பேசினேன். சிறிது நேரத்தில் முரசொலி அலுவலகத்திற்கு வாகினியிலிருந்து காரில் வந்து என்னை விஜயா கார்டனுக்கு அழைத்துச் சென்றார்கள்.
விஜயா கார்டனில் நாகிரெட்டியார் முன் உட்காருவதற்கே எனக்குக் கூச்சமாக இருந்தது. அந்த அளவுக்கு அவரைப் பார்த்தவுடன் என்னையறியாமலேயே மரியாதை உணர்வு ஏற்பட்டது.
""எம்.ஜி.ஆர். நடிக்க அடுத்த படம் எடுக்கப் போகிறேன்... எங்களிடம் கதை இலாக்கா இருக்கிறது. இருந்தாலும் நீங்கதான் எழுதணும்'' என்றார் ரெட்டியார்.
நான் உடனே பதிலே சொல்ல முடியாமல் இன்ப அதிர்ச்சியில் திக்குமுக்காடிக் கொண்டிருந்தேன். இந்த நிலையில் எந்தக் கதையை... அதுவும் எம்.ஜி.ஆருக்கு ஏற்றமாதிரி எப்படிச் சொல்வது?
இரண்டு, மூன்று கதைகளின் அவுட்லைன் சொன்னேன். பொறுமையாகக் கேட்ட பின்பு என்னைப் பார்த்த ரெட்டியார், ""இந்தக் காலத்துக்கு ஏற்ற மாதிரி...'' என்று ஆரம்பித்து முடிக்கும் முன்பே... ""அதாவது எலெக்ஷன் வரப் போகுது... அதை அடிப்படையாகக் கொண்டு செய்யலாமே?'' என்றேன் நான் அவரிடம்.
""வெரிகுட் ஐடியா'' என்றார்.
""ஓரிரு மாதங்களுக்கு முன் ஒரு தெலுங்குப் படம் (கதாநாயகுடு) பார்த்தேன். அதில் சாதாரண மனிதன் மாநில முதல்வராகி, ஊழல் பேர்வழிகளைப் பழிவாங்குவதுபோல இருந்தது. அதையே நமது கதாநாயகர், நகராட்சித் தலைவராகி... எதிரிகளை எப்படிப் பழிவாங்குகிறார் என்பது போலச் செய்யலாமே?'' என்றேன்.
""சரி... இதை எம்.ஜி.ஆரிடம் சொல்லி ஓகே பண்ணுங்கள்'' என்று சொல்லி அனுப்பினார்.
எம்.ஜி.ஆரிடம் ரெட்டியாரைச் சந்தித்து கதையைச் சொன்ன விபரத்தைச் சொன்னபோது, ""என்ன சொக்குபொடி போட்டீர்? எனக்கு ரெட்டியார் போன் பண்ணினார், கதையை ஓகே பண்ணிவிட்டார்'' என்று சொல்லி என்னைப் பாராட்டினார் எம்.ஜி.ஆர்.
வாகினி ஸ்டூடியோவில் ஒரு மேக்அப் அறையை, நான் தங்கி கதை,வசனம் எழுதுவதற்கேற்ப வசதிகளை செய்து, ரெட்டியாரே உதவியாளர் ஒருவரையும் எனக்காக நியமித்தார்.
நான் எனது எழுத்துப் பணியைத் தொடங்கி, தொடர்ந்து செய்து கொண்டிருந்த நாளில், தினமும் அதிகாலையில் ரெட்டியார் பல் குச்சியால் பல் துலக்கிக் கொண்டே ஸ்டூடியோ விசிட் செய்வார். அப்போது என் அறையின் வாசலில் வந்து, ""சொர்ணம் காரு பாகவுன்னரா?'' என்று நலம் விசாரிப்பார். அந்த அதிகாலையில் அவர் என்னைத்தான் சந்திக்க முடியும். நான்கு நாள்களுக்குள் மாதிரி ஸ்கிரிப்ட் தயார் செய்துவிட்டேன்.
ஸ்டூடியோவில் தயாரிப்பு நிர்வாகிகளுடன் என்னையும் கலந்தாலோசித்து எம்.ஜி.ஆரிடம் கால்ஷீட் பெறச் சொன்னார். அப்படியே செய்தேன். "அடிமைப்பெண்' கால்ஷீட் தேதிகளில் இருந்து எடுத்து 1ந் தேதி முதல் 10ந் தேதிவரை என பத்து நாள்களுக்கு எம்.ஜி.ஆர் கால்ஷீட் கொடுத்தார்.
படத்திற்குப் பெயர் "நம் நாடு'.
அப்போது வாகினியில் இருந்த பதினான்கு தளங்களிலும் மாறி மாறி "நம் நாடு' படப்பிடிப்புதான் நடைபெற்றது. அதற்காகவே மற்ற தயாரிப்பாளர்களிடம் முன் அனுமதி பெற்றுவிட்டார் ரெட்டியார்.
படப்பிடிப்பு நடந்த நாட்களில் அன்றாடம் எடுக்கப்படவேண்டிய காட்சிகளைப் பற்றி காலை ஏழு மணிக்குள்ளும் எடுத்த காட்சிகளைப் பற்றி அன்று மாலை இரவில் விஜயா கார்டனுக்குச் சென்று ரெட்டியாரிடம் படித்துக் காண்பிப்பேன். ஒரு கதாசிரியராக மட்டுமல்ல, ஒரு தயாரிப்பு நிர்வாகியாகவும் அவரிடம் பணியாற்றியபோது, என் தகுதிக்கு மீறிய பெரிய மனிதரிடம் பேசுவது போன்ற அனுபவம் எனக்குக் கிடைத்தது.
நம் நாடு படப்பிடிப்பு தினங்களில், சில நாள்களில் இரவு இரண்டு மணி வரையில் படப்பிடிப்பு நடைபெறும். அப்போது எம்.ஜி.ஆர். என்னுடனேயே மேக்அப் அறையில் தங்கிவிடுவார். அடுத்த நாள் அதிகாலையில் எழுந்து வழக்கம்போல ஆயத்தப் பணிகளை மேற்கொள்வார் எம்.ஜி.ஆர்.
பாடல் பதிவு விஜயா கார்டனில் நடைபெற்றது. அந்த சமயத்தில் காலை 9 மணிக்கு இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதனும், கவிஞர் வாலியும் வந்துவிடுவார்கள். நான்கு டியூன் போட்டுக் கொடுப்பார் எம்.எஸ்.வி. அந்த டேப்பைக் கொண்டுபோய் எம்.ஜி.ஆரிடம் போட்டுக் காண்பிப்பேன். அவர் அதைக் கேட்டு ஓகே செய்த ட்யூனுக்கு எழுதப்பட்ட பாடல் வரிகள் அன்றே பாடலாகப் பதிவு செய்யப்படும்.
தான் சம்பந்தப்பட்ட காட்சிகளையும் பாடல் காட்சிகளையும் எம்.ஜி.ஆர். படமாக்குவார். ஏனைய காட்சிகளை இயக்குநர் ஜம்பு படமாக்குவார். அதற்கு முன்தினமே இயக்குநர், ஒளிப்பதிவாளர் பி. கொண்டா ரெட்டி, சுந்தர்பாபு ஆகியோர்கள் அடுத்த நாள் படப்பிடிப்புக்கான காட்சிகளைப் பற்றி திட்டமிட்டுவிடுவார்கள்.
இப்படியாக பத்து நாட்கள் படப்பிடிப்பு முடிந்தவுடன் அடுத்த நாள் படமாக்கப்படவேண்டிய காட்சிகளைப் பார்க்க ஃபைலைப் பார்த்து, அனைத்துக் காட்சிகளும் படமாக்கப்பட்டுவிட்டதை அறிந்து வியந்தோம், மகிழ்ந்தோம். அதன்பின் எம்.ஜி.ஆர். மற்றும் டைரக்டர் ஜம்பு அவர்களுடன் எடிட்டிங் டப்பிங் வேலைகளில் ஈடுபட்டார். திரைப்பட வரலாற்றில் எம்.ஜி.ஆர். நடிக்க பத்தே நாட்களில் ஷூட்டிங் முடிந்த ஒரே படம் "நம் நாடு' தான்
இந்த ஷூட்டிங் நாட்களில் ஒருநாள்கூட படப்பிடிப்பைக் காண ரெட்டியார் வரவில்லை. ""படத்தை எடுத்து முடியுங்கள், முதல் காப்பியை ஒரு ரசிகன் மாதிரி பார்க்கிறேன்'' என்றார்.
எம்.ஜி.ஆர். அதிக மதிப்பும் மரியாதையும் காண்பித்த ஒரே படத்தயாரிப்பாளர் நாகிரெட்டியார். இது நட்பின் காரணமாகவும் இருந்திருக்கலாம். என்னைப் பொறுத்தவரையில் நாகிரெட்டியாரை திரை உலகின் அதிசயப்பிறவி என்றே சொல்வேன்.
நம்நாடு படத்தை எடுக்கும்போது வேறு இந்திப் படத்தில் நடிப்பதற்காக நடிகர் ராஜேஷ்கன்னா வந்திருந்தார்.
வாகினியில் நம்நாடு படப்பிடிப்பு தளத்திற்கு வெளியே கட்சிக்காரர்கள் சுமார் 100 பேர் எம்.ஜி.ஆரைப் பார்க்க காத்துக் கொண்டிருப்பார்கள்.
இந்தக் காட்சியைப் பார்த்த அந்தப் படத்தின் டைரக்டர், ""என்ன விசேஷம்?'' என்று என்னிடம் கேட்டார்.
எம்.ஜி.ஆரைப் பற்றியும் கட்சித் தெண்டர்களைப் பற்றியும் குறிப்பிட்டேன். இதன் பலன் எம்.ஜி.ஆர். - ராஜேஷ்கன்னா சந்திப்பு படப்பிடிப்பு தளத்தின் வெளியிலேயே நடந்தது. அந்தப் படத்தை இந்தியில் எடுக்கவும், அதில் நடிக்கவும் விருப்பப்பட்டார் ராஜேஷ்கன்னா. ஆனால் நாகிரெட்டியார் நாமே இந்தியில் எடுத்துவிடலாம் என்று சொல்லிவிட்டார். எனினும் வீனஸ் பிக்சர்ஸ் இந்திப்பட உரிமையை வாங்கி "அப்னாதேஷ்' படமெடுக்க எம்.ஜி.ஆர். ஏற்ற வேடத்தில் ராஜேஷ்கன்னா நடிக்க, அவரது ஆசை பூர்த்தியாயிற்று.''
"நம் நாடு' படத்தைப் பற்றி இனி தந்தையார் என்ன சொல்கிறார் என்று பார்க்கலாமா?
""நான் அரசியலில் நேரடியாக ஈடுபடுவதை மக்கள் எப்படி வரவேற்கிறார்கள் என்பதை அறிய ஒரு படம் எடுக்க விரும்புகிறேன். அந்தப் படத்தை நீங்கள்தான் தயாரிக்க வேண்டும் என்றார் எம்.ஜி.ஆர்.
""அப்படிப்பட்ட படத்தை நீங்களே தயாரிக்கலாமே?'' என்றேன்.
என்னைவிட நீங்கள் தயாரிப்பதுதான் பொருத்தமாக இருக்கும் என்று சொன்னபடியே அவரது சொந்தப் படம் மாதிரியே படத்தைத் தொடங்கி, குறிப்பிட்ட தினத்துக்கு முன்னரே முடித்தார். அதற்கு எம்.ஜி.ஆருடன் இணைந்து எங்களது எடிட்டர் இயக்குநர் ஜம்பு, உரையாடல் சொர்ணம், இசையமைப்பாளர் எம்.எஸ். விஸ்வநாதன், கவிஞர் வாலி ஆகியோர் ஆற்றிய பணி இங்கே குறிப்பிடத்தக்கது.
அவரது அரசியல் கருத்துக்களை மையமாக வைத்து, முழுமையாகத் தயாரிக்கப்பட்ட முதல் படம் "நம் நாடு'.
எம்.ஜி.ஆரின் அரசியல் கருத்துக்கேற்ற படம் என்பதை படம் வெளியாகும் முன்பே மக்களுக்கு உணர்த்த, முதன் முறையாக வார இதழ்கள் அட்டைப்பட சிறப்புக் கட்டுரை, செய்திகளுடன் வெளியிட்டன. அத்துடன் போஸ்டர்களிலும் வித்தியாசமான அணுகுமுறை கையாளப்பட்டது.
படம் திரையிடப்பட்டது. ரசிகர்களின் வரவேற்பை நேரடியாக அறிய விரும்பினார் எம்.ஜி.ஆர். நாங்கள் இருவரும் மாலைக் காட்சிக்காக முன்னறிவிப்பு ஏதுமில்லாமல் சென்றோம். நாங்கள் வருவது தியேட்டர் மானேஜரைத் தவிர வேறு யாருக்கும் தெரியாது. மாலைக்காட்சியாதலால் அரங்கின் கதவுகள் எல்லாம் திறக்கப்பட்டு காற்றோட்டமாக இருந்தது.
அரங்கின் உள்ளே பிரதான நுழைவாயிலின் கதவருகே ஒருபுறம் எம்.ஜி.ஆரும், இன்னொருபுறம் நானும் சாய்ந்தபடியே நின்றோம்.
நாங்கள் சென்ற சிறிது நேரத்தில் திரையில், தேர்தலில் வெற்றி பெற்ற எம்.ஜி.ஆரை ஜெயலலிதா மக்களுடன் பாடி வரவேற்கும் "வாங்கய்யா... வாத்தியாரய்யா...' பாடல் காட்சி வந்தது. அவ்வளவுதான் தியேட்டர் முழுவதும் கைதட்டி, விசில் அடித்து, கரகோஷம் எழுப்பி அப்பாடலை வரவேற்று ரசித்தது.
பாடல் காட்சி முடிந்தவுடன் ரசிகர்கள் வேண்டுகோளின்படி "ஒன்ஸ்மோர்' என அப்பாடல் திரையிடப்பட்டது. இரண்டாம் முறையாக திரையில் பாடல் தோன்றியவுடன் எம்.ஜி.ஆரைப் பார்த்தேன். அவரது கண்களில் ஆனந்தக் கண்ணீர். ""ரெட்டியார்... நான் ஜெயிச்சுட்டேன்... எனக்கு அங்கீகாரம் கிடைச்சுட்டுது'' என்று மகிழ்ச்சி பொங்க என்னை ஆரத் தழுவியபடியே கூறினார். அப்போதே தமது அரசியல் வெற்றியை உறுதி செய்துவிட்டார் எம்.ஜி.ஆர்.
லண்டன் ரேடியோவுக்கு எம்.ஜி.ஆர்
அளித்த பேட்டி
லண்டன் (பி.பி.சி.)
ரேடியோவுக்கு அளித்த பேட்டியில்,
சினிமாவிலும், அரசியலிலும்
தனக்கு ஏற்பட்ட
அனுபவங்களை எம்.ஜி.ஆர். கூறினார்.
1974_ம் ஆண்டு, ரஷியத் தலைநகரான
மாஸ்கோவில் நடந்த திரைப்பட
விழாவில் கலந்து கொண்ட
எம்.ஜி.ஆர்., அங்கிருந்து லண்டன்
சென்றார். அங்கு “பி.பி.சி.”
க்கு அளித்த பேட்டியில் அவர்
கூறியதாவது:-
என்னுடைய 2 வயதில் என்
தந்தை இறந்துவிட்டார். என்
தந்தையும், தந்தைக்கு உயிரூட்டிய
அறிவைத் தந்த பாட்டனாரும் பெரும்
லட்சாதிபதிகளாக இருந்தவர்கள்.
ஆனால்; கேரளத்தில் தந்தையின்
சொத்துகள்
குழந்தைகளுக்கு இல்லை என்ற
காரணத்தால் நாங்கள் அனாதைகளாக
ஆக்கப்பட்டோம். என் தாயின்
அரவணைப்பில்தான் வளர
வேண்டி இருந்தது.
என் தந்தை மாஜிஸ்திரேட்டாக
இருந்தார். பிரின்சிபாலாகவும்
இருந்தார். பிரின்சிபாலாக அவர்
இலங்கையில் பணியாற்றும் போது,
கண்டியிலே நான் பிறந்தேன். 2 வயதில்
தந்தையை இழந்து அதற்கு பிறகு 4, 5
வயதில் தமிழ்
நாட்டிற்கு வந்துவிட்டோம்.
என்னை வளர்த்த வேலு நாயர் என்பவர்
போலீஸ் இலாகாவில் போலீஸ்காரராக
பணியாற்றினார். அவரது ஆதரவில்
நாங்கள் வளர வேண்டி இருந்தது.
முதன் முதலில் நான் எழுதப்படிக்க
கற்றுக்கொண்ட மொழி தமிழ். நான்
பார்த்துக்கொண்டு,
பழகிக்கொண்டு இருக்கும் மக்கள் தமிழ்
மக்கள். என்
உடம்பிலே இத்தனை ஆண்டுகளாக
குருதி பாய்ந்து கொண்டு இருக்கிறது,
சூடு தணியாமல் இருக்கிறது, நான்
வளர்ந்திருக்கிறேன்,
வாய்ப்பு பெற்றிருக்கிறேன் என்றால்,
அது தமிழ் கூறும் நல்லுலகம் தந்த
வாய்ப்பாகும்.
ஆகவே, தமிழ்
நாட்டுக்கு தொண்டு செய்ய
வேண்டும் என்ற ஆர்வம்
என்னை உந்தித் தள்ளிக்கொண்டிரு
க்கிறது. அதிகமாகக் கல்வி பெறுகின்ற
வாய்ப்பு எனக்கு இல்லை.
எனது 7_வது வயதில், நாடகக்
கம்பெனியில் சேர்ந்துவிட்டேன்.
நாடகங்களில் நடித்து,
பிறகு திரை உலகில் சேர்ந்தேன்.
தொடக்கத்தில் நான் காங்கிரசில்
இருந்தேன். காங்கிரஸ் உறுப்பினராக
இல்லாமல் ஊழியனாக இருந்தேன்.
1933_ 34_ம் ஆண்டில்
உறுப்பினரானேன்.
அதன்பிறகு அங்கே சில
குறைபாடுகளை கண்டதால், நான்
விலகி, அஞ்சாதவாசம்
என்று சொல்வார்களே, அதுபோல எந்த
அரசியல் தொடர்பும் இல்லாமல்
இருந்து கொண்டிருந்தேன்.
ஆயினும் நான்
மகாத்மா காந்தியடிகளின்
கொள்கைகளில் பிடிப்பும்,
நம்பிக்கையும் கொண்டவன்.
தமிழகத்தில், அக்கொள்கைகள்
அனைத்தையும் கொண்டிருந்த
ஒரே தலைவராக அமரர் அண்ணாதான்
இருந்தார்கள். அவருடைய
புத்தகங்களை படித்தேன். அவருடைய
நியாயமான கோரிக்கைகள்தான்,
தமிழகத்திற்கும், இந்திய
துணை கண்டத்திற்கும் பயனுள்ளதாக
இருக்கும் என்ற காரணத்தால்
தி.மு.கழகத்தில் சேர்ந்தேன்.
1972_ல் தி.மு.கழகத்தைவி
ட்டு வெளியேற்றப்பட்ட பிறகு,
தொண்டர்களுடைய, மக்களுடைய
வற்புறுத்தலின்படி அண்ணா திராவிட
முன்னேற்றக்கழகம் என்ற
அமைப்பை உருவாக்கினேன். அதில்
நான் முதல் தொண்டனாக
இருக்கிறேன்.” இவ்வாறு “பி.பி.சி.”க்கு
அளித்த பேட்டியில் எம்.ஜி.ஆர்.
குறிப்பிட்டார்.
திரைப்படத்துறையிலும்,
அரசியலிலும் நண்பர்களாக இருந்த
கருணாநிதியும், எம்.ஜி.ஆரும்
பிற்காலத்தில் பிரிய நேரிட்ட போதிலும்
தொடக்க காலத்தில், நெருங்கிய
நண்பர்களாக இருந்தார்கள்.
கோவையில் ரூ.14 வாடகையில்
ஒரு அறை எடுத்து தங்கியிருந்தார்
கள். திரைப்படத்துறையில் முன்னேற,
ஒருவருக்கொருவர்
உதவிக்கொள்வது வழக்கம்.
சென்னையில் குடியேறிய
பிறகு எம்.ஜி.ஆர். வீட்டுக்குச் சென்று,
சத்யா அம்மையார் பரிமாற
உணவு சாப்பிட்டிருக்கிறார்
கருணாநிதி. அதேபோல்
கருணாநிதி வீட்டுக்குச் சென்று, அவர்
தாயார் அஞ்சுகம் அம்மையார் படைத்த
உணவை உண்டு மகிழ்ந்தவர்,
எம்.ஜி.ஆர்.
1963 ஜனவரியில் கருணாநிதியின்
தாயார் அஞ்சுகம் அம்மையார்
மறைந்தபோது எம்.ஜி.ஆர். விடுத்த
இரங்கல் செய்தியில்
கூறியிருந்ததாவது:-
சகோதரர் மு.க. அவர்களின்
அருமை அன்னையார் அவர்களோடு,
பழகவும், அவர்களுடைய ஈடுகாட்ட
இயலாத அன்புள்ளத்தை உணரவும்
வாய்ப்பைப் பெற்றவன் நான்.
பார்த்தவுடனே, “தம்பி வா!”
என்று அழைப்பதிலேதான்
எவ்வளவு பாசம். `சாப்பிடத்தான்
வேண்டும்’ என்று வற்புறுத்துவதில
ேதான் எவ்வளவு அழுத்தமான
தாய்மை உணர்ச்சி. உட்கார்ந்து பேச
ஆரம்பித்தால்,
வீட்டு விஷயங்களிலேயிருந்து,
தொழில், அரசியல்
வரையிலே அளவளாவும்
அன்னையைத் தவிர
வேறு யாருக்குமே இராத_
அன்புள்ளம். இவைகளையெல்லாம்,
என்னாலேயே மறக்க
முடியவில்லையே! சகோதரர் மு.க.
எப்படித்தான் மறப்பாரோ?
இன்பத்தைப் பிரிந்தால்,
மறுபடி இன்பத்தை அடையலாம்.
நட்பைப் பிரிந்தால், பிறகு நட்புக்
கிடைக்கலாம். வாழ்க்கைத்
துணையைப் பிரிந்தால் கூட
வேறொரு வாழ்க்கை துணையை பெறலாம்.
மக்கட்செல்வத்தை இழந்தாலும்,
மறுபடி பெற்று விடலாம். ஆனால்,
அன்னையைm, அன்புத்தாயை,
உலகத்தை வளர்க்கும் தாய்மையைப்
பிரிந்து விட்டால், மறுபடி நமக்கு யார்
அன்னை? நினைத்தாலே நெஞ்சம்
நடுங்குகிறது.”
இவ்வாறு எம்.ஜி.ஆர். கூறியிருந்தார்.
எம்.ஜி.ஆரும், சிவாஜி கணேசனும்
புகழின் உச்சத்தில் இருந்தபோது, “யார்
சிறந்த நடிகர்? யார் வசூல்
சக்ரவர்த்தி?”
என்று இருதரப்பு ரசிகர்களும் மோதிக்
கொள்வது வழக்கம்.
ஆனால், எம்.ஜி.ஆரும், சிவாஜியும்
ஒருவர் மீது ஒருவர் பாசமும்,
மரியாதையும் வைத்திருந்தார்கள்.
எம்.ஜி.ஆரை சிவாஜி “அண்ணன்”
என்றே அழைப்பார்.
சிவாஜியை எம்.ஜி.ஆர். “தம்பி”
என்று குறிப்பிடுவார். பொங்கல்
போன்ற முக்கிய பண்டிகைகளின்போத
ு, எம்.ஜி.ஆர். வீட்டில்
இருந்து சிவாஜி வீட்டுக்கு இனிப்பு போன்ற
உணவுப் பண்டங்கள் போகும்.
அதேபோல்
எம்.ஜி.ஆருக்கு சிவாஜி கணேசன்
வீட்டில் இருந்து பொங்கல், பழங்கள்
முதலியன போகும்.
எம்.ஜி.ஆர். “டாக்டர்” பட்டம்
பெற்றபோது,
அவருக்கு திரை உலகத்தினர்
பாராட்டு விழா நடத்தினர். அதில்
சிவாஜிகணேசன்
கலந்து கொண்டு பேசுகையில்,
இருவருக்கும் இடையே இருந்த
பாசத்தைக் குறிப்பிட்டார். எம்.ஜி.ஆர்.
தமது ஏற்புரையில் கூறியதாவது:-
“தம்பி சிவாஜி பேசும்போது நாங்கள்
இருவரும் ஒரு தாயின் கையால்
உண்டு வளர்ந்தவர்கள்” என்றார். என்
தாய் கையில் அவரும்
சாப்பிட்டு இருக்கிறார். அவர் தாய்
கையில் நானும்
சாப்பிட்டு இருக்கிறேன்.
என் மறைந்த மனைவியின்
(சதானந்தவதி) மரணத்தின் போது யார்
யாரெல்லாமோ வந்தார்கள்.
எனக்கு அழத்தோன்றவில்லை.
அப்போது என்
வீட்டிற்கு சிவாஜி வந்தபோதுதான்
என்னையும் மீறி அழுகை வந்தது.
அஸ்திவாரம் வெடிக்கும்
அளவு என்பார்களே, அந்த
அளவு அழுதேன்.
அன்று இறுதி வரை இருந்த
சிவாஜி என்றும் இருப்பார்.
எங்களுக்குள் பிளவு ஏற்படுத்துவதற்க
ாக யார் யாரோ முயன்றார்கள்.
“சிவாஜி மன்றத்தை எம்.ஜி.ஆர்.
மன்றம் தாக்கியது, எம்.ஜி.ஆர். மன்றம்
ஒட்டிய போஸ்டர்களை சிவாஜி மன்றம்
கிழித்தது” என்றெல்லாம் கூறினார்கள்.
ஆனால் ஆடு -
மாடு ஏதாவது போஸ்டரை தின்றுவிட்டுப்
போனால்கூட `சிவாஜி மன்றத்தார்
கிழித்தார்கள்’, `எம்.ஜி.ஆர். மன்றத்தார்
கிழித்தார்கள்’ என்று கூறினார்கள்.
அன்றிருந்த சூழ்நிலையில் அவரும்
சிலவற்றை நம்பக்கூடிய நிலையும்,
நானும் சிலவற்றை நம்பக்கூடிய
நிலையும் இருந்தது.
தம்பி சிவாஜி பேசும்போது, “பாழாய்
போன அரசியல் நம்மைப்
பிரித்துவிட்டதே” என்று சொன்னார்.
அண்ணன்_ தம்பி உறவைப் பிரிக்க
முடியாது.
எப்போதாவது ஒன்று சேருவோம்.
அது எதற்காக என்று எனக்குத்
தெரியாது.”
இவ்வாறு எம்.ஜி.ஆர். குறிப்பிட்டார்.
ஹலோ கலை வேந்தன் சார்
வணக்கங்கள் !
விசாரித்தமைக்கு நன்றி ! அலுவல் நிமித்தமாக ஒன்றிரண்டு வாரங்கள் வெளியூர் சென்றிருந்ததால் தொடர்ந்து பங்களிக்கமுடியாமல் போனது. இதை நான் type செய்யும்போது கூட..இன்று குல்பர்கா செல்ல இருக்கிறேன் அலுவல் நிமித்தமாக தான். நீங்கள் நலமாக உள்ளீர்கள் என்று நம்புகிறேன். சென்னையில் conjunctivitis பரவுகின்றது. தாங்கள் சென்னையில் இருப்பின் கவனம். மருத்துவ துறையில் sales பிரிவில் உள்ளதால் கூறுகிறேன்.
"பொம்மை பத்திரிகையில் ஆர்.கே.தவானுடன் திரு.சிவாஜி கணேசன் அவர்கள் தொடர்பு கொண்டு பேசியதாக வெளியான செய்தியை வெளியிடுவார். அந்த செய்தி உண்மையாகவே இருக்கட்டும். ஆனால், அவ்வளவு செல்வாக்கு பெற்றவருக்கு ஏன் காங்கிரஸ் தலைவர் பதவியை திருமதி. இந்திரா காந்தி அம்மையார் வழங்கவில்லை? என்பது இன்று வரை உண்மையிலேயே எனக்கு புரியாத புதிர். ஒருவேளை மூப்பனார் ஐயா முட்டுக்கட்டையாக இருந்தார் என்றால் அவரது பேச்சைத்தான் இந்திரா காந்தி கேட்டாரா?" <---------இது உங்கள் கேள்வி ! :-d
மூப்பனார் அவர்கள் காங்கிரஸ் தலைவர் பதவிக்கு எப்படி வந்தார் என்பது உங்களுக்கு தெரியாததால் வந்த கேள்வி என்பதை இதிலிருந்து எனக்கு ...எனக்கு மட்டும் அல்ல ....அதை தெரிந்த அனைவருக்கும் ஊர்ஜித படுத்துகிறது..! நீங்கள் கேட்ட கேள்வியை அவர் பாராட்டியதால் உங்களை போல தான் திரு செல்வகுமார் அவர்களின் நிலையும் என்றே இது உணர்த்துகிறது.
காங்கிரஸ் தலைவர் பதவி பற்றிய கேள்வி திரு இந்திரா காந்தி அவர்களிடம் times magazine அன்று எழுப்பியது. அதன் தமிழாக்கம் இதோ.
கேள்வி. நீங்கள் தமிழக காங்கிரஸ் தலைமைக்கு திரு. சிவாஜி கணேசன் அவர்களை தேர்ந்தேடுதுள்ளதாக பேச்சு நிலவுகிறது. அப்படி அது உண்மையாக இருக்கும்பட்சத்தில் எதன் அடிப்படையில் அவர் தேர்ந்தெடுக்க படுகிறார் என்பதை உரைக்க முடியுமா ?
பதில் : தமிழக காங்கிரஸ் தலைமைக்கு நல்ல அனுபவமும் காங்கிரஸ் பற்றி நன்கு அறிந்தவர் மட்டுமே வரமுடியும். திரு சிவாஜி கணேசன் காங்கிரஸ் அஸ்திவாரம் தொட்டு இன்றுவரை நன்கு அறிந்தவர். மேலும், (இதை நான் ஆங்கிலத்திலேயே குறிப்பிடவிரும்புகிறேன் திரு கலைவேந்தன் )
if he is selected he deserved it . He has worked like dog for sustaining congress principles and ideologies across every street of tamilnadu than any other . Why not he head the tamilnadu congress , if we announce ?
மேற்கூறியது தான் பாரத பிரதமர் இந்திராவின் பதில் times பத்திரிகைக்கு அவர் கொடுத்தது.
திரைத்துறையில் 1953 முதல் மற்ற எந்த நடிகரை காட்டிலும் நடிகர் திலகம் பிஸியாக இருந்தவர் என்பது உலகறிந்த விஷயம். அது 1989 வரை பெருகிக்கொண்டு போனதே தவிர எள்ளளவும் குறையவில்லை.
தமிழக காங்கிரஸ் தலைமைக்கு தகுதிவாய்ந்த ஒருவர் தேவை என்பதை உணர்ந்த திருமதி இந்திரா காந்தி, தேர்ந்தெடுத்த முதல் நபர், இன்னும் சொல்லப்போனால் ஒரே நபர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் என்பது காங்கிரஸ் பற்றி நன்கு அறிந்த அனைவரும் ஒத்துகொள்ளும் விஷயம்.
தன்னுடைய திரை அலுவல் அதிக அளவில் இருந்ததால் திரு மூப்பனார் அவர்களை திருமதி இந்திராகாந்தி அவர்களிடம் அறிமுகம் செய்துவைத்து அவரை பற்றி நல்ல ஒரு recommendation கொடுத்து தமிழ காங்கிரஸ் தலைமைக்கு இவர் ஏற்றவர் என்று அந்த பதவியை மூபனாருக்கு கிடைக்க செய்தவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன்தான் திரு கலைவேந்தன் அவர்களே...!
இதை நீங்கள் உங்களை சேர்ந்தவர்களை தவிர வேறு யாரிடம் வேண்டுமானாலும் கேட்டு verify செய்து கொள்ளலாம்..! நீங்கள் மட்டுமல்ல திரு செல்வகுமார் கூட இதை செய்யலாம். !
Regards
rks
07-11-1961 அன்று வெளிவந்த நம் மக்கள் திலகத்தின் காவியம் “ தாய் சொல்லை தட்டாதே “ ஒரிஜினல் தியேட்டர் பாட்டு புத்தகத்தின் முன் அட்டை தோற்றம் :
http://i58.tinypic.com/29gbei9.jpg