துப்பாக்கி பட வெற்றி ,தாங்கிக்கொள்ள முடியாதவர்களுக்கு :
துப்பாக்கி பட வெற்றி ,தாங்கிக்கொள்ள முடியாதவர்களுக்கு :
டிஸ்கி : வழக்கமாக என் ப்ளாக் படிப்பவர்கள் (என் சினிமா கட்டுரைகள்,உலக ,ஆங்கில படம் பற்றி படிப்பவர்கள்)மன்னிக்கவும்.இது ஒரு விஜய் ரசிகனாக நான் எழுதியே ஆக வேண்டிய விஷயம்.நிச்சயம் இது நிச்சயமாக உங்களுக்கான பதிவு அல்ல.
துப்பாக்கி படம் பார்த்து விட்டேன்.என்னதான் விமர்சனம் என்று எழுதினாலும் நான் விஜய் ரசிகன் என்பதாலும் ,படம் சூப்பர் என்று எல்லா பக்கமும் செய்தி வந்த வண்ணம் இருந்தாலும் அதை நான் எழுதினால் நான் அதிகமாய் சொல்வதாக சொல்வார்கள் .சரி துப்பாக்கி பற்றி எழுத வேண்டாம் என்று விட்டுவிட்டேன்.
இருந்தாலும் படம் வந்து படத்தின் வெற்றி பெற்றுள்ளது, படம் பார்த்தவர்கள் 10இல் 8 அல்லது 9 பேர் படம் சூப்பர் என்று சொல்லி வந்த நிலையில் சிலர் மட்டும் படத்தை மட்டம் தட்டும் வேலையை விடாமல் செய்து வருகிறார்கள்.இவர்களுக்கு படம் எடுக்க எவராலும் முடியாது .இதைவிட மட்டமான படத்தில் அவர்களுக்கு பிடித்த தொப்பை வைத்த நடிகரோ ,குள்ளமான வளராத நடிகரோ நடித்திருந்தால் ஆஹா இப்படி ஒரு படம் உலகத்திலேயே வந்ததில்லை என்று சொல்லி பட்டாசு வெடிதிருப்பார்கள் .இப்போது அந்த நடிகர்களின் படத்தை விட நல்ல படமாக உள்ளதால் அதை தாங்கி கொள்ள முடியாமல் எதையாவது சொல்லி கொண்டிருக்கிறார்கள் .
சிலர் மொத்தமாக தமிழில் வரும் படங்களை குறை கூறி கொண்டிருப்பார்கள்.அவர்கள் தெய்வ பிறவிகள்.அவர்களை விட்டுவிடுவோம் .வேறு சிலர் படம் சூப்பர் என்றவுடன் வேறு வழியில்லாமல் மூடிக்கொண்டு படத்தை சூப்பர் என்று சொல்லி வேறு வேலை பார்க்க போய் விட்டார்கள்.மற்ற சிலர் .என்ன குறை கிடைக்கும் என்று அலைந்து கொண்டிருக்கிறார்கள்.அவர்களுக்கே இந்த பதிவு.
விஜய் பல மட்டமான படங்களில் நடித்துள்ளார்.இதை அவரது தீவிர ரசிகர்களே மறுக்க மாட்டார்கள் .எல்லா நடிகர்களுமே மட்டமான படங்களில் நடித்து இருப்பார்கள் .விஜய் டாக்டர் பட்டம் பெற்று உள்ளார்.ஏன் விக்ரம் கூட டாக்டர் பட்டம் பெற்று இப்போது படங்களிலும் டாக்டர் சீயான் விக்ரம் என்றே பெயர் வருகிறது.ஆனால் விஜயை மட்டும் டாக்டர் என்று கிண்டல் செய்வது என்ன நியாயம் ? சரி சுறா ,வேட்டைக்காரன் போன்றவை மட்டமான படங்களே . அதன் பின் விஜய் காவலன்,வேலாயுதம் ,நண்பன் இப்போது துப்பாக்கி என சுதாரித்து கொண்டு ஹிட் படங்களை தந்துள்ளார்.எங்கே விஜய் எதிர்ப்பாளர்கள் தங்களுக்கு பிடித்த ஹீரோவின் கடைசி 4 படத்தை இப்படி காட்ட சொல்லுங்கள் .எத்தனை படம் ஹிட்?இப்போது துப்பாக்கி பட சம்பத்தப்பட்ட ப்ளாக் ,facebook என இடங்களிலும் வந்து அங்கேயும் சுறா ,குருவி என பழைய கதைகளை அளந்து விட்டு கொண்டு இருக்கிறார்கள் .
ரெட் ,ராஜா,ஜனா,ஜி,பரமசிவன் ,திருப்பதி,ஆழ்வார்,கிரீடம்,அசல் ,ஏகன் ----------- அஜித்
ஸ்ரீ,பேரழகன்,ஆயுத எழுத்து,மாயாவி,ஆறு,சிலுன்னு ஒரு காதல்,ஆதவன் -------சூர்யா
ராஜபாட்டை,தாண்டவம்,மஜா,அருள் ,----------விக்ரம்
இப்படி மற்றவர்களின் மட்டமான படங்களும் சொல்லலாம் .அதற்காக ஒரு மங்காத்தா வரும் போது ஏகன்,ஆழ்வார் படங்களை பற்றி சொல்வதோ ,ஒரு சிங்கம் படம் வரும்போது அங்கே பேரழகன் ,மாயாவி படங்களை பற்றி அங்கே எழுதுவது,மட்டமாக பின்னோட்டம் எழுதுவது என்பது எப்படி நாகரீகம் இல்லையோ அதேபோல் தான் துப்பாக்கி வரும்போது குருவி ,சுறா போன்றவற்றை பற்றி அங்கே எழுதுவது.
எப்படியும் நான் சொல்வதை ஏற்காமல் எனக்கு பின்னூட்டத்தில் பதில் சொல்பவர்களுக்கு
1.துப்பாக்கி மிக பெரிய ஹிட் .
2. தமிழில் ஒபெநிங் வசூல் வரலாறில் நம்பர் 1.
3.கேரளாவில் மமூட்டி மோகன்லால் படங்கள் இதுவரை கண்டிராத வசூல் .
4.இலங்கை ,சிங்கப்பூர் ,மலேசியா என எல்லா இடங்களிலும் மிக பெரிய ஹிட்.
5.சிவாஜி,எந்திரன் ,தசாவதாரம் என இதுவரை வந்த வசூலில் உச்ச படங்களின் லிஸ்டில் துப்பாக்கி முந்தும் என்பது தமிழ் சினிமா நிலவரம்.
Vijay Thuppakki 1st Day Collections is 11.03 Crores
Vijay Thuppakki 2nd Day Collections is 13.65 Crores
Vijay Thuppakki 3rd Day Collections is 11.05 Crores
Vijay Thuppakki 4th Day Collections is 9.65 Crores
Vijay Thuppakki 5th Day Collections is 9.10 Crores
Vijay Thuppakki 6th Day Collections is 9.35 Crores
Total Collections is 63.83 Crores
source-superwoods.com
என்ன வயத்தெரிச்சல் தாங்கலியா?
விஜய் fans cheers .
டிஸ்கி : வழக்கமாக என் ப்ளாக் படிப்பவர்கள் (என் சினிமா கட்டுரைகள்,உலக ,ஆங்கில படம் பற்றி படிப்பவர்கள் )மன்னிக்கவும்.இது ஒரு விஜய் ரசிகனாக நான் எழுதியே ஆக வேண்டிய விஷயம்.நிச்சயம் இது உங்களுக்கான பதிவு அல்ல.
http://scenecreator.blogspot.co.uk/2....html?spref=tw