Dear Gopal and Raghavendra Sir,
Both of you made my day.Thank you so much.
இவ்வளவு,விவேகம்,அறிவு,முதிர்ச்சி உடைய நீங்கள் இருவரும்
பிணக்கு கொள்வதை "துரதிருஷ்டம்" என்பதை விட வேறு எப்படி வர்ணிக்க முடியும்?
ராவணனும்,துரியோதனனும் சண்டையிடலாம்.உலகம் நலம் பெறும்;
ஆனால் ராமரும்,தர்மரும் சண்டையிட்டால் உலகம் தாங்குமா?
நீங்கள் இருவரும் இரு கைதேர்ந்த ஓவியர்கள். ஒரு கட்டிடத்தை முன்னிருந்து பார்த்து நீங்களும்,
மேலிருந்து பார்த்து கோபாலும் வரைகிறீர்கள்.இரு ஓவியங்களிலும் சிறிது வேறுபாடு இருக்கத்தான் செய்யும்.
ஆனால வரையப்படும் கட்டிடம் "தாஜ் மஹால்" அல்லவா?அதை மறக்கலாமா?
போகட்டும் விடுங்கள்,,நடந்தவை நடந்தவைகளாக இருக்கட்டும்;
இனி நடப்பவை நல்லவைகளாக இருக்கட்டும்.
"வருவதை எண்ணி சிரிக்கின்றேன்;வந்ததை நினைத்து அழுகின்றேன்"
என்ற கவியரசரின் அமர வரிகளை உயிர்ப்பித்த,
அந்த மஹா கலைஞனின் பொற்பாதம் பணிந்து,
நாம் புதிய பயணத்தை துவங்குவோம்.
நன்றி.

