cika where is Vasu ji?
Printable View
cika where is Vasu ji?
தெரியலை ராஜேஷ்.. ரொம்ப நாளா வரலை..பி.எம் பண்ணினேன் பதிலும் காணோம்..:sad:
எம்எஸ்வி டைம்ஸ் விழா தொடர்ச்சி
தாயன்பன் எடுத்துக் கொண்ட பாடல் புதிய பறவையில் சிட்டுக் குருவி முத்தம் கொடுத்து சேர்ந்திடக் கண்டேனே பாடல். தன் மனதில் இருக்கும் காதலை காதலனிடம் வெளிப்படுத்த நினைக்கிறாள் அந்தப் பெண். நேரிடையாக சொல்ல முடியாமல் அதற்கு ஒரு உருவம் கொடுக்க முயற்சிக்கிறாள். அதாவது ஆங்கிலத்தில் metaphor என சொல்லபடும் வகையை சார்ந்து தன்னை ஒரு சிட்டுக் குருவியாக கற்பனை செய்துக் கொள்கிறாள்.
சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து சேர்ந்திடக் கண்டேனே
செவ்வானம் கடலினிலே கலந்திடக் கண்டனே
மொட்டு விரிந்த மலரினிலே வண்டு மூழ்கிட கண்டேனே
மூங்கிலிலே காற்று வந்து மோதிடக் கண்டேனே
என்பது பல்லவி.
சிட்டுக் குருவி முத்தம் கொடுத்து தன் இணையோடு சேர்வதும் செவ்வானம் மாலையில் கடலில் கலப்பதும் மலரினில் வண்டு மூழ்குவதும் மோந்கிளில் காற்று சேர்வதும் எவ்வளவு இயற்கையோ அதே போன்றதுதான் என் மனதில் உன் மேல் உள்ள காதல் என்கிறாள் காதலி. இந்த பல்லவியில் கவிஞர் ஸ்கோர் செய்கிறார் என்றால் சரணத்தில் மெல்லிசை மன்னர் கொடி நாட்டுகிறார் என்றார் தாயன்பன்,
எப்படி என்றால் இடம் பொருள் ஏவல் எதையும் பாராமல் எந்தவித கட்டுப்பாடுகளுமின்றி தன் ஆசையை விருப்பத்தை வெளிப்படுத்துகிறது நிறைவேற்றிக் கொள்கிறது சிட்டுக் குருவி. அதே போன்று சுதந்திரமாக தன் மன வானில் பறக்க நினைக்கிறாள் அந்த பெண். அதை குறிக்கும் விதமாக சரணம் தொடங்கும் முன்பு ஒரு ஹம்மிங்கை புகுத்துகிறார் எம்எஸ்வி. அஹா அஹா அஹா ஆஹா என்ற அந்த ஹம்மிங் அந்த பறவையின் மனநிலையில் அந்த பெண் இருக்கிறாள் என்பதை உணர்த்துகிறது.
ஆனால் என்னதான் தன்னை பறவையாக கற்பனை செய்துக் கொண்டாலும் யதார்த்தம் என்று ஒன்று இருக்கிறதே. பறவையைப் போல் சுதந்திர வானில் பார்க்க முடியாதே. அந்த விருப்பம் ஏக்கமாக முடிவதை எம்எஸ்வி எப்படி கொண்டு வந்திருக்கிறார்?
பறந்து செல்ல நினைத்திருந்தேன் என்ற தன் ஆசை எப்படி முடியாமல் போகிறது என்பதை
பறந்து செல்ல நினைத்திருந்தேன் எனக்கும் சிறகில்லையே என்கிறாள். இங்கே பறந்து செல்ல என்ற வார்த்தைகள் மேலே போய்விட்டு எனக்கோர் சிறகில்லையே எனும்போது அந்த குரலே கீழே இறங்குகிறது. சரணத்தில் வரும் வரிகளையே இரண்டாக பிரித்து ஒவ்வொரு வரியிலும் முதல் பகுதியில் இடம் பெறும் ஆசை விருப்பம் இவற்றை மேல்ஸ்தாயில் வருவது போன்றும் அதே நேரத்தில் அந்த ஆசை அல்லது விருப்பம் நடக்காது என்ற யதார்த்தம் மனசில் உறைக்க அந்த வரியின் இரண்டாம் பகுதியை கீழ்ஸ்தாயிலும் அமைத்திருப்பார் எம்எஸ்வி என்று சொல்லி அந்த சரணத்தின் வரிகளை அதே போல் பிரித்து பாடிக் காட்டினார் தாயன்பன்.
பறந்து செல்ல நினைத்து விட்டேன் - எனக்கும் சிறகில்லையே
பழக வந்தேன் தழுவ வந்தேன் - பறவை துணையில்லையே
எடுத்துச் சொல்ல மனமிருந்தும் - வார்த்தை வரவில்லையே
என்னென்னவோ நினைவிருந்தும் - நாணம் விடவில்லையே
மொத்த அரங்கமும் கைதட்டியது. கவியரசர் மெல்லிசை மன்னர் இசையரசி கூட்டணியின் மேதமைக்கு மட்டுமின்றி அதை அழகாய் திறானய்வு செய்த தாயன்பனுக்கும் சேர்த்துதான்.
இந்த விளக்கத்தை முடித்து விட்டு அடுத்த பாடல் இடம் பெறும் படம் என்று குழந்தையும் தெய்வமும் படத்தை சொல்ல உஷாராஜ் மேடைக்கு வந்து பாட ஆரம்பிக்க நான் நன்றி சொல்வேன் என் கண்களுக்கு பாடல் பிறந்தது அற்புதமான இந்த பாடலில் வரும் ஆண் குரல் ஹம்மிங்கை எம்எஸ்வி அவர்களே பாடியிருப்பார். ஒரு உற்சாக பந்தாக பாடல் முழுவதும் ஜெய் துள்ள மைசூர் பிருந்தாவனில் படமாக்கப்பட்டிருக்கும் இந்தப் பாடலில் வாலி எம்எஸ்வி மற்றும் இசையரசியும் கிளப்பியிருப்பார்கள். குறிப்பாக ஒரு சரணம் எனக்கு மிகவும் பிடிக்கும்
ஒரு சித்திரத்தில் இதழ் செம்பவழம்
அதன் புன்னைகையில் தேன் சிந்தி விழும்
செவ்விதழ் பூத்த அழகில் நெஞ்சம் உருகட்டுமே
ஒவ்வொரு நாளும் தலைவன் கொஞ்சம் பருகட்டுமே
பருகும் அந்த வேளையில் கண் மயங்கும்; சுகம்
பெருகும் அந்த நேரத்தில் பெண் மயங்கும்
ஒவ்வொரு முறை இந்த பாடல் காட்சியை பார்க்கும்போதும் இந்த மூன்றாவது சரணத்திற்கு காத்திருப்பேன். அந்த சரணத்தை சுசீலா பாடி முடிக்கும்போது உண்மையிலே நமக்கு கண் மயங்கும். ஆனால் அன்றைய தினம் என்ன காரணத்தினால் என்று தெரியவில்லை. இந்த மூன்றாவது சரணத்திற்கு போகாமல் இரண்டு சரணங்களோடு முடித்து விட்டார்கள். ஏமாற்றமாய் போய்விட்டது.
அடுத்த பாடல் என்றவுடன் உஷாராஜ், ஜெயஸ்ரீ மற்றும் கிருஷ்ணராஜ் வந்து நிற்க என்ன பாடலாக இருக்கும் என்று யோசிக்கும் நேரத்தில் கட்டோடு குழலாடியது. என்ன சொல்வது இந்த பெரிய இடத்துப் பெண்ணைப் பற்றி? இந்தப் பாடலை கேட்கும்போது ஆட தோன்றும் என்றார் தாயன்பன் எல்லா வரியின் முடிவிலும் ஆட என்று வருவதானால் அப்படி குறிப்பிட்டார். என்னை பொறுத்தவரை எளிமையான கிராமிய பின்னணி ட்யுனில் அமைந்த இந்த பாடலை half open voice-ல் டிஎம்எஸ், சுசீலா மற்றும் ஈஸ்வரி பாடும்போது மிதமான வேகத்தில் ஊஞ்சலாடுவது போலவே தோன்றும்..
அடுத்து 1968-ல் வெளியான தாமரை நெஞ்சம் படத்திலிருந்து எம்எஸ்வி இசைக்குழுவில் இடம் பெற்றவரும் தாயன்பனுடன் சேர்ந்து ஒரு சில படங்களுக்கு இசையமைத்தவருமான செல்வின் சேகர் என்பவர் மேடையேறினார். எம்எஸ்வியுடனான தன் அனுபவங்களை எம்எஸ்வியின் இசை மேதமை பற்றி விவரிக்க தொடங்கினார்.
(தொடரும்)
அன்புடன்
ராஜ்ராஜ்,
சி.க வும் சொல்லிட்டாரு உங்க கடைசி ஜுகழ்பந்திக்கு. நானும் ஹாப்பி. பாட்டு ரொம்ப நன்னா இருக்கு. ஒரே நடிகை பத்மினி இரண்டு மொழிப் படங்களுக்கும் ஆடியிருப்பதால் டப்பிங் பண்ணியது போல் இருக்கிறது. நீங்கள் ரீமேக் என்றிருக்கிறீர்கள்.
பழைய பாடல்களின் நடனங்களை காணும் சுகம் நாதர் முடி மேல் பாடலில் தெரிகிறது.
தொடருங்கள்.
கலைவேந்தன்,
கன்கிராட்ஸ், புதிய பொறுப்பேற்றதற்கு - அதுவும் பதவி உயர்வுதானே. வேலையும், கடமைகளும் அதிகமாயிருப்பது போலவே திரியில் பங்கு கொள்ளும் நேரமும் அதிகமாயிருக்க வேண்டுமே?
உங்கள் பாணியில் நாட்டு நடப்பை கூறி பொருத்தமான பாடலை பகிர்வதை தொடரவேண்டும். இப்போது பாருங்கள் நீங்கள் கேட்டதற்காக முரளி அவர்களும் மூன்றுக்கும் மேற்பட்ட பதிவுகளில் msv டைம்ஸ் நிகழ்ச்சியை பகிர்ந்து கொண்டுள்ளார். இப்பொழுது நீங்கள் நான் இங்கே அதிகமாக வர இயலாது என்று சொல்வது நன்றாகவே இருக்கிறது?
இங்கே வராவிட்டால் நான் அங்கே வந்து கலாய்ப்பேன் என்று எதிர்பார்த்து ஏமாந்து விடாதீர்கள் என்று எச்சரிக்க கடமைப்பட்டுளேன் எனினும் ஏமாற்றிவிடாதீர்கள்(%$^#@!!!!)
முரளி,
உங்களின் MSV Times வழக்கம் போல எல்லாருடய கருத்தையும் கவர்வதாகவே இருக்கிறது. சி.க. அல்ல. அல்ல சீட்டு குருவி பாட்டு நன்றாக தாயன்பனால் அலசப்பட்டு உங்களால் அருமையாக தரவேற்றப் பட்டுள்ளது. நான் நன்றி சொல்வேன் பாட்டு கேட்டிருந்தாலும், இந்த வரிகள் இப்போதுதான் கேட்பதுபோல் எனக்கு புதிதாக உள்ளது. நன்றி. அந்த மூன்றாவது சரணத்திற்காக நீங்கள் ஏமாந்ததை சொன்னதும் எனக்கு இந்த பாட்டின் மேல் ஆர்வம் அதிகமாகி விட்டது. சற்று நேரத்தில் கேட்டு விடுகிறேன்!!!
https://www.youtube.com/watch?v=5oENOUx8olM
செல்வின் சேகர் அனுபவங்களை நீங்கள் விவரிக்க வழக்கம் போல் காத்திருக்கிறேன்.
சி.க., மற்றும் ராஜேஷ்,
வாசு என்ன கார் பார்கிங்க் இடத்தை வாஸ்து பார்த்து கட்டி முடித்துவிட்டாரா இல்லையா? இவ்வளவு நாட்களாக வரவில்லை. ஆச்சரியமூட்டும் அதிசய பரவசத்தில் ஆழ்த்தும் புதிய பதிவொன்றை தயார் செய்து கொண்டு இருக்கிறாரோ? வரட்டும் அப்படி ஒரு புத்தம் புதுமை பதிவுடன். நீங்கள் உங்கள் வழக்கமான பாணியில் பாடல்களை தொடருங்களேன்.
தொழில் பாட்டுக்கள் – 10
ஆரம்பத்துல பார்த்தேள்னாக்கா.. ஒரு அந்தக்கால யுவன் பெயர் சிவசங்கரன் ஒரு அ.கா.யுவதி பெயர் உமை.. இருவரும் காதல் என்னும் படகில் உல்லாசமாகச் சென்றுகொண்டிருந்த பருவ காலம்..
இருந்தாலும் இனிய ஒன்றுமில்லாதவைகளான பேச்சுக்கள், தீண்டல்கள்,சீண்டல்கள், காத்திருத்தல்கள் ஒன்றாய் யாருமறியாவண்ணம்கோவில் அல்லது ஊர்க்கோடி ஆலமரத்தின் பின்னால் என பொழுதுகள் போய்க் கொண்டிருந்தாலும் ஒரு நாள் திடுதிப்பென சந்தேகம் சிவப் பிள்ளையாண்டானுக்கு….உமையிடம் கேட்டும் விட்டான்..
இமைப்பொழுதும் உன்னை இசைந்துநான் காப்பேன்
உமையே உனக்கொரு கேள்வி –சமையலும்
நன்றாய் வருமா நங்கையே கூறிடுவாய்
தின்னப் பிடித்தவன் நான்..
உமைக்கோ கொஞ்சம் கோபம்..சரியான சாப்பாட்டு சிவனாய் இருக்கிறானே..போயும் வந்தும் இவனிடமா மையல் கண்டு கொண்டு விட்டோம்.. ம்ஹூம்.
வெங்காய சாம்பாரை வேகமாய் நான்செய்தால்
பங்கிட பாதிவூர் பார்
தண்டை கொலுசொலியும் தாளமிட்டு ஓடிவரும்
வெண்டைக் கறியமுதிற் கே..
எண்ணம் போலவே ஏதுநீர் கேட்டாலும்
வண்ணமாய் செய்வாளிவ் வஞ்சியே – திண்ணமாய்
சொல்லிடுவேன் உம்வயிறு சொர்க்கம் பலகாணும்
வள்ளியென் கைபிடிக்க வா (ரும்)
என்று கோபித்துக் கொள்ள அப்புறம் அந்த சிவன் சமாதானப் படுத்தியது வேறு கதை!
எனில் என்ன சொல்லிக்கொண்டிருந்தார்கள் இந்தக் காதலர்கள்..சமையல்.. ம்ம் நாள்தோறும் வளர்ந்து படித்து கடினவேலை பார்ப்பதெல்லாம் இந்த சாண் வயிற்றுக்குத் தானே.. அதுவும் சமையல் சுவையாய் இருந்தால் அது போல வேறேது
வீட்டில் அக்கா, அம்மா மனைவி எல்லாம் செய்வது நமக்காக மட்டும் தான்.. ஹோட்டல் என்பது வியாபார ஸ்தலம் (அதற்கு இந்த டாபிக்கில் இடமில்லை!) அதேசமயம் சமையலில் பெரிய சமையல். கல்யாண சமையல்..
இந்தக் காலத்தில் காண்ட்ராக்டர்களிடம் விட்டு நடக்கும் கல்யாணங்களின் சமையல் என்னவோ வெகு ஜோராகத் தான் இருந்தாலும் கூட மனம் கொஞ்சம் புள்ளிவைத்து வட்டமிட்டுப் பார்க்கிறது….
அந்தக் கால கல்யாணங்களில் சமையல்காரர் ராஜாவாய் வருவார் கூட சில சேவக எடுபிடிகளுடன். நாம் தான் அவர் சொல்லும் லிஸ்ட் போட்டுவாங்கித் தரவேண்டும். மஞ்சளில் துவங்கி கறிகாய் பலசரக்கு என. (இதில் திருமணம் செய்துவைக்கும் சாஸ்திரிகளின் லிஸ்ட் தனியாக இருக்கும்) .
வெகு சின்ன வயதில் நான் நினைவு தெரிந்து அல்லது என் நினைவில் இருக்கும் கல்யாணம் என் மூத்த சகோதரியின் திருமணம். நாற்பது வருடங்களுக்கு முன். மதுரையில் அப்பா ஃபிக்ஸ் பண்ணியிருந்த மண்டபம் குஜராத்தி சமாஜ் இந்த மதுரை நியூசினிமாவிற்கு எதிரில் ஒய்.எம்சி.ஏ..அதற்கு முன்னால் குதிரைவண்டிக்காரர்கள் பார்க்கிங்க்.மேங்காட்டுப்பொட்டல் என்பார்கள்.. ஒய் எம் சிஏ வை ஒட்டினாற்போல கான்சாமேட்டுத்தெருவுக்கு பெர்பெண்டிகுலராக ஒரு சந்து அந்தச் சந்தில் போய் கொஞ்சம் பின்னால் என நினைக்கிறேன் அந்தக் கல்யாண மண்டபம்.. சற்றே பெரியது
மேக்கப் போட்ட மணப்பெண்ணாட்டம் தரையெல்லாம் மொசைக் (அப்போ அது கொஞ்சம் காஸ்ட்லி அஃபேர் மதுரையில் என நினைக்கிறேன்) கொஞ்சம் பெரிய மண்டபம் தான்..
மாப்பிள்ளை குவைத் அண்ட் சொந்த ஊர் நெய்வேலி என்பதால் உறவு காரர்கள் வர களை கட்டி முதல் நாளே ஆகிவிட்டது.. மறு நாள் கல்யாணம் நிகழ்ந்ததெல்லாம் ஒரு புகையாய்த் தான் நினைவில்..ஆனால் கல்யாணச் சமையல் காரர் கோவிந்தய்யங்கார் என நினைவு.. அவர் செய்த அக்கார வடிசல் இருக்கிறதே அடடா..இன்னும் நினைவில்..
அப்போதே குட்டிக் கண்ணாக்கு பாராட்டத் தோன்றி கல்யாண மண்டபம் பின்பக்கம் போய் (சாப்பிட்டு முடித்துத் தான்) செவேல் உடம்புடனும் முன்வழுக்கையில் நீளமாய் ஒற்றைத் திருமண்ணும் பூணுல் மார்பிலும் அணிந்த வண்ணம் நெற்றியில் துளிர்த்த வியர்வையுடனும் இளம் தொப்பையுடனும் கொஞ்சம் ஆஜானுபாகுவாய் இருந்த கோவிந்தரின் கை குலுக்கினேன் ஈரம் காயாமலே… மாமா.. திருக்கண்ணமுது ஜோர்.. யார்டா நீ அம்பி. ம் கல்யாணப் பெண்ணோட தம்பி என டிஆர் டயலாக் அந்தக்காலத்திலேயே அடித்து ஓஓடி வந்துவிட்டேன்..
கல்யாணம் முடிந்த மறு நாள் அப்பா தான் சொன்னார்.. டேய் கோவிந்துவைப் பாராட்டினாயாமே.பேஷ்..சொல்லிச் சொல்லி மாஞ்சு போய்ட்டான் நாங்க சொன்னதுல்லாம் அவன் காதுல ஏறவே இல்லையே என.. கோவிந்தருக்கு பை சொல்லலாம் எனப்பார்த்தால் அவர் புறப்பட்டுப் போய்விட்டிருந்தார்..
மற்ற சகோதரிகளில் ஒருவரின் கல்யாணம் வெங்கலக்கடைத் தெரு ஆதீனம் (அரசியல்லாம் இல்லீங்க்ணா) அங்கு ஒருகல்யாண மண்டபம் (இப்போது இருக்கிறதா தெரியவில்லை) இன்னொருவரின் திருமணம் தானப்ப முதலிதெருவில் பாண்டியன் சூப்பர் மார்க்கெட்டிலிருது ஸ்ட்ரெய்ட்டாக
சென் ட்ரல் சினிமா போகும் ரோட்டில் வலதுபக்கம் இருந்தது (பிற்காலத்தில் அதுவே மாடர்ன் ரெஸ்டாரெண்டின் மெஸ்ஸாக மாறிய நினைவு) சமையல் காரர்களின் பெயரும் நினைவில்லை..ஆனால் மூன்றாவது சகோதரிகல்யாணத்தில் மட்டும் கொஞ்சம் மளிகைசாமான்கள் பால் எல்லாம் வாங்கிப் போடும் வேலை எனக்கு வாய்த்திருந்தது..! (ஹையாங்க்..அதுவும் இந்த ஆவின் பாலுக்காக எங்க்ள் தெருமுனை பூத் காரரிடமும் பின் பொன்னகரம் பால் பூத் காரரிடமும் முன்னமேயே அட்வான்ஸ் (எவ்ளோ பாக்கெட் நினைவில்லை ) கொடுத்து எடுத்து ரிக்ஷாவா காரா நினைவில்லை காலையிலும் மாலையிலும் எடுத்துக் கொண்டு போய் கொடுத்து(அதில் ஒரு பூத்திடம் கேட்ட பால்பாக்கெட் வரவில்லை) டென்ஷன் பட்டது புகையாய்..)
இங்கிட்டு கடல் கடந்து வந்ததன் பிறகு கலந்து கொண்ட கல்யாணங்க்ள் குறைவு தான்.என் கல்யாணத்தில் நான் ஒழுங்காகவே சாப்பிடவில்லை.. (கொஞ்சம் டென்ஷன் தான் (இருக்காதா பின்ன))
ஐந்து வருடங்களுக்குமுன் ஒரு திருமணத்திற்குப் போயிருந்த போது(கோயம்புத்தூர்) கட்டுச்சாதம் அன்று காலை டிஃபன் பொங்கலுடன் கூட ஒருஸ்வீட்..
பெயர் கேட்டால் பரிமாறியவர் சொல்ல அவரை ஒருமாதிரிப் பார்த்தேன்..
என்னங்க பாக்கறீங்க..
பின்ன ஸ்வீட் பெயர் கேட்டா கட்டிப் புடிக்கச் சொல்றீங்க அதுவும் செந்தமிழ்ல..நீங்க சட்டையும் போடலே.!.
ஹெஹ்ஹே என சிரித்தார். பல் ஒன்றிரண்டு பிசகியிருந்தது.. “இல்ல சார்..ஸ்வீட் பெயர் தான் அது…அரவணை..ஸ்ரீரங்கம் ஸ்பெஷல்..அதுக்குத் தொட்டுக்கத் தான் இது..இன்னும் நான் தொடாமலிருந்த செக்கச்செவேல் கறியைக் காட்டினார்..சேப்பங்கிழங்கு ஃப்ரை.. தொட்டுண்டு சாப்பிடும் ஓய்.. உள்ள வழுக்கிண்டு போகும்…”.
நிஜமாகவே ஜோராக இருந்தது..( நீங்க சாப்பிட்டிருக்கீங்களா…)
**
ஆகக் கூடி கல்யாண சமையலுக்கான பாடல்கள் எனப்பார்த்தால் கல்யாண சமையல் சாதம் போடவில்லைஎனில் எஸ்வி ரங்காராவ் கதையாலேயே அடிப்பார் கனவில்....இருப்பினும் ஆடலுடன் பாடலைக் கேட்டு ரசிப்பதிலே ஒரு சுகம் சுகம் இல்லியோ..
https://www.youtube.com/watch?v=RRCU...yer_detailpage
படம் சலங்கை ஒலி ஆடல் கமல் மஞ்சு பார்க்கவி.. பாடல். எழுதியவர் தியாக ராஜர். பால கனக மய சேவ சுஜன பரிபால..
**
//வரிந்து வரிந்து அழகாய் முரளி எழுத..நான் எழுதவில்லையே என்றிருந்த மனக்குறை..கொஞ்சம் போச்!)// :)
மீண்டும் இங்கு நுழைவதற்காக யாரும் தவறாக நினைக்க வேண்டாம் - இந்த பதிவு எனக்கு ஒரு இனிய அனுபவத்தை கொடுத்தது அதனால் இதை இங்கு பகிர்ந்துகொள்கிறேன் - மீண்டும் தொந்தரவு கொடுப்பதற்காக வருந்துகிறேன் .....
அனுபவம் 1
சமீபத்தில் Cairo செல்ல ஒரு வாய்ப்பு கிடைத்து - ஒரு இனம் புரியாத இன்பம் - வார்த்தைகளில் வர்ணிக்க முடியாத உணர்ச்சிகள் - சிகரத்தை தொட்டவர்களில் நானும் ஒருவன் என்பதுபோல ஒரு கர்வம் .. ஒரு சிறந்த நடிப்பை மற்றவர்கள் எப்படி பாராட்டவேண்டும் என்று மற்ற நாடுகளுக்கு ( தமிழ் நாட்டை யும் சேர்த்துதான் ) Cairo அல்லவா வழிகாட்டியாக எடுத்து காட்டினது ! - சிறந்த திறமையை 1000 ஆதவன்கள் மறைத்து நின்றாலும் , அவைகளை தகர்த்து எறிந்து இந்த மாணிக்கத்தை நீங்கள் உணரவில்லை - இதன் விலை உங்கள் எண்ணங்களுக்கும் அப்பால் என்று அறிவித்து சிறந்த நடிப்பு கடல் இவன் ஒருவனே என்று - இவனுக்கு முன்பும் யாரும் பிறக்கவில்லை , பின்பும் யாரும் பிறக்க போவதில்லை என்று முத்திரை பதித்த நாடு அல்லவா CAIRO - இப்பொழுது சொல்லுங்கள் யாருக்கு பெருமை , கர்வம் , இறுமார்ப்பு இருக்காது cario நாட்டின் மண்ணைத்தொட , அதை வணங்க ....
அனுபவம் 2
சமீபத்தில் வாரணாசி செல்லும் வாய்ப்பு கிடைத்து - சில புரோகிதர்களை ( veda pandits ) அவர்கள் வீட்டில் சந்தித்தேன் - அப்படி சந்தித்த ஒருவரின் வீட்டில் இந்த படம் இருப்பதை கண்டு வியப்புற்றேன் - விசாரித்ததில் அவர் தான் NT அவருடைய குடும்பத்துடன் காசிக்கு வந்திருக்கும் வேளையில் , கங்கையின் மடியில் பூஜையை செய்து வைத்தவர் . அவர் திரை படங்கள் பார்ப்பதில்லை - வேத பாடசாலை நடுத்துகின்றார் - பல சிறுவர்கள் , பல இடங்களில் இருந்து வந்தவர்கள் இவரிடம் வேதம் கற்று கொள்கிண்டார்கள் - இவர் NT படங்களில் 3 படங்கள் தான் டிவி மூலமாக பார்த்திருக்கின்றார் - 1. திரு விளையாடல் 2. திருமால் பெருமை 3. திருவருட் செல்வர் . NT யையும் , அவரின் குடும்பத்தார்களையும் மிகவும் உயர்வாக பேசினார் - NT க்கு பூஜை செய்வதற்கு தனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தை இன்றும் பெருமையுடன் நினைவுகொள்கிறார் - உயர்ந்தவர்களை உயர்ந்தவர்களால் மட்டுமே சரியாக புரிந்து கொள்ள முடியும் என்பதற்கு இந்த சந்திப்பு ஒரு சிறந்த உதாரணமாக இருக்கும் என்பதில் கடுகு அளவும் சந்தேகமில்லை .
நன்றி & வணக்கம்
http://i818.photobucket.com/albums/z...psmt84jzjb.jpg
http://i818.photobucket.com/albums/z...pscgs98xnw.jpg
ராஜ்ராஜ் சார்..நாதர் முடி மேலிருக்கும் குமாரி கமலா கானத்திற்கு நன்றி (என்ன ஒல்லியா இருக்காங்க..)
முரளீங்ணா.. சிட்டுக் குருவி சொல்ல நெனச்சுட்டு விட்டுட்டேன்..(எப்படி விட்டேன்) அவர் அதையே சொல்லியிருக்கிறார்.
ஒரு பொழுது மலராக கொடியில் மலர்ந்தேனா
ஒரு தடவை தேன் குடித்து மடியில் விழுந்தேனா (மெலிதாய் க் கிஸ்ஸடித்து சந்தோஷமாய் உதடு துடைக்கும் ந.தி)
இரவினிலே நிலவினிலே என்னைமறந்தேனா
இளமை தரும் சுகத்தினிலே கன்னம் சிவந்தேனா..ஹோய்.. குரலில் குறும்பு, கேள்வி, வெட்க நெகிழ்வு நாணம் கலந்து சுசீலா பாடியதற்கு சர்ரூவும் அவையனைத்தையும் முகத்தில் கொண்டுவந்திருப்பார்…
நான் நன்றி சொல்வேன் என் கண்களுக்குஎனக்கும்பிடிக்கும்..
கட்டோடு குழலாட ஆட பாடலில் ஒரு சின்ன காண்ட்ரவர்ஸி வந்ததாக சோ எழுதியதாக நினைவு.. கவிஞரிடமேயே சிலர் கேட்டு அவரும் தவறுதான் என்று சொன்னாராம் எதை.. பச்சரிசிப் பல்லாட என்ற வரி வரும்..ஓய்.. பாடறது இளம்பெண்களைப் பத்தி..அதெப்படி ப ப என்று வரும் என்று கேட்டார்களாம். உண்மையா எனத் தெரியாது (கண்ணா உஷார் பார்ட்டிடா நீ)
தாமரை நெஞ்சம்.. கண்ணின் அருகே இமையிருந்தும் கண்கள் இமையைப் பார்த்ததிலலையா? பட் நாகேஷ் அதில் பிடிக்கும்.. காக்காய் வலிப்பு தனக்கு எனத் தெரிந்தபின் சர்ரூவுடனான காதலை மறைப்பது.. ஜெமினி மேஜர் சண்டையில் குளிர் காய்வது, வானுவின் தகப்பனாருடன் வத்தி வைப்பது..என..
//ஆச்சரியமூட்டும் அதிசய பரவசத்தில் ஆழ்த்தும் புதிய பதிவொன்றை தயார் செய்து கொண்டு இருக்கிறாரோ?// அப்படித் தான் இருக்கும் கல் நாயக்.. காத்திருப்போம்..