ஆஹா.. இப்போதே தடுத்தாட்கொண்ட மதுண்ணா.. தாங்க்ஸ்.. :) ஆமா காதல் படுத்தும் பாடு.. கலைஞானம் தயாரித்து அவர் தான் வாணியை இண்ட்ரோ பண்ணி சக்ஸஸ் ஃபுல் என எழுதியிருந்தார்.. நன்னா இருக்குமா..
Printable View
ஆஹா.. இப்போதே தடுத்தாட்கொண்ட மதுண்ணா.. தாங்க்ஸ்.. :) ஆமா காதல் படுத்தும் பாடு.. கலைஞானம் தயாரித்து அவர் தான் வாணியை இண்ட்ரோ பண்ணி சக்ஸஸ் ஃபுல் என எழுதியிருந்தார்.. நன்னா இருக்குமா..
கேரளாவின் அருமையை , அதன் அழகை , அதன் தாத்பரியத்தை சிவாஜியார் பாடியிருக்கும் பாடல் - இந்த பாடலுக்கும் , நடிப்புக்கும் ஏது இணை ? என்ன பாட்டு, என்ன லோக்கேஷன், என்ன ப்ளாக்&வொய்ட் தெளிவு, என்ன ஹம்மிங், என்ன இடையூடும் தெலுங்குப் பாட்டு, என்ன அன்னியோன்னியமான ஜோடி, என்ன படகின் வேகம், என்ன வேடப் பொருத்தம், ம்ஹும், இன்னும் 100 வருசம் போனாலும் இதுபோல வருமா? உக்கார்ந்த இடத்திலேயே ஊர்ப்பட்ட எமோசன் காட்டும் கலைக்குரிசில்!
சிந்து நதியின் மிசை நிலவினிலே
சேரநன்னாட்டிளம் பெண்களுடனே
சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைத்து
தோணிகளோட்டி விளையாடி வருவோம்
சிந்து நதியின் மிசை நிலவினிலே
சேரநன்னாட்டிளம் பெண்களுடனே
சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைத்து
தோணிகளோட்டி விளையாடி வருவோம்
கங்கை நதி புறத்து கோதுமை பண்டம்
கங்கை நதி புறத்து கோதுமை பண்டம்
காவிரி வெற்றிலைக்கு மாறு கொள்வோம்
சிங்க மராட்டியர் தம் கவிதை கொண்டு
சேரத்து தந்தங்கள் பரிசளிப்போம்
சிங்க மராட்டியர் தம் கவிதை கொண்டு
சேரத்து தந்தங்கள் பரிசளிப்போம்
சிந்து நதியின் மிசை நிலவினிலே
சேரநன்னாட்டிளம் பெண்களுடனே
சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைத்து
தோணிகளோட்டி விளையாடி வருவோம்
சிங்களத் தீவினுக்கோர் பாலமமைப்போம்
சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம்
சிங்களத் தீவினுக்கோர் பாலமமைப்போம்
சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம்
வங்கத்தில் ஓடி வரும் நீரின் மிகையால்
மையத்து நாடுகளில் பயிர் செய்குவோம்
சிந்து நதியின் மிசை நிலவினிலே
சேரநன்னாட்டிளம் பெண்களுடனே
சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைத்து
தோணிகளோட்டி விளையாடி வருவோம்.
https://www.youtube.com/watch?v=AKLzxSGhVyw
உடம்பில் அறிவு ஜாஸ்தியாகி விட்டதால் எக்கச்சக்கமாய் வெய்ட் போட்டு விட்டது..லீவில் சென்று வந்த அலைச்சலில் இரண்டு கிலோ குறைந்தாலும் ஷேப் என்னவோ குட்டி யானை தான்..டை கட்டிக் கொண்டால் கொஞ்சம் மினி தும்பிக்கையாய்த் தொப்பையில் புரள,கொஞ்சம் எனக்கே வெட்கமாக இருந்தது..
எக்ஸர் ஸை..ஸ்… கிலோ என்ன விலை..எனில் டயட் எனப் பார்த்தால் ஒருடயட் கிடைத்தது..இல்லை.. நான்கு மாதங்களுக்கு முன்னாலேயே எனக்கு அறிமுகமாகி கொஞ்சம் கொஞ்சம் நாள் இருந்து பின் மறுபடி நார்மல்ஃபுட் எடுத்து வெய்ட் போட்ட வண்ணம் இருந்தேன்.. இந்த ஆகஸ்ட் 1 முதல் கொஞ்சம் சீரியஸாக ஃபாலோ பண்ணிக் கொண்டு இருக்கிறேன்
டயட் ப்ரகாரம் நோ தானிய வகை உணவுகள் மீன்ஸ் ரைஸ் சப்பாத்திக்கெல்லாம் தடா.. ஓட்ஸூம் நோ.. பழங்களில் அவகாடோ மட்டுமாம்.. தேங்காய்,ச்சீஸ், வெண்ணெய் பால் மோர் - முழுக்கொழுப்புடன் எல்லாம் சாப்பிடலாம்.. பாதாம் முந்திரி பிஸ்தா எல்லாம் சேர்க்கலாம்..என்ன பாதாம் ஊறவைத்து நூறு சாப்பிட வேண்டுமாம் (சாப்பிடும் முன் பின் இரண்டு மணீ நேரம் தண்ணீர் குடிக்கக் கூடாது) வெஜிடபிள்ஸில் காலிஃப்ளவர்,முட்டைக்கோஸ் வெள்ளரி தக்காளி கணக்கில சேர்க்கலாமாம்.. நான் வெஜ்க்கு ஏகப்பட்ட ஆப்ஷன்ஸ்.. முட்டை சாப்பிடுபவர்கள் நான்கு முட்டை டெய்லி சாப்பிடலாமாம்.. (பட் நான் இரண்டு ஆம்லெட் வாரம் இருமுறை சாப்பிட்டேன் )எனில் அப்படியே ஃபாலோசெய்து கொண்டு இருக்கையில் நான்கு கிலோ குறைந்து விட்டது.. தற்போதைய எடை 105.5
மெல்லக் குறைந்தாலும் கொஞ்சம் மனசுக்கு மகிழ்ச்சியாய் உடல் கொஞ்சம் லைட்டாக உணர்கிறது.. ( கொஞ்சம் சோர்வும் இருக்கிறது..பரவாயில்லை)
என்ன ஒன்று.. நிறையத்தண்ணீர் குடிக்க வேண்டியிருக்கிறது..குறைந்தபட்சம் மூன்று லிட்டர் .
ம்ம் என்ன சொல்லிக்கொண்டிருந்தேன்..தண்ணீர்!
தண்ணீரில் வரும் பாடல்கள் என கொஞ்சம் யோசித்தால்..
தண்ணீர் சுடுவதென்ன
தண்ணி கருத்திருச்சு
தண்ணீர் கண்டபின்பு மாறும் எங்கள் கண்ணீர்
தண்ணீரிலே மீனழுதால் கண்ணீரை யாரறிவார்..
தண்ணீர் என்னும் கண்ணாடி தழுவுது முன்னாடி..
தண்ணீரைக் காதலிக்கும் மீன்களா இல்லை..
உப்பத் தின்னவன் தண்ணி குடிப்பான்
ஆத்துல தண்ணி வர அதுலொருத்தன் மீன் பிடிக்க
தண்ணீர் கேட்டேன் அமிர்தம் தந்தனை..
தண்ணீரில் மூழ்காது காற்றுள்ள பந்து
வலைகளிலே மீன் சிக்கலாம் தண்ணீர் என்றும் சிக்காது
ம்ம் இன்னும் நிறைய இருக்கும் போல இருக்கே… :)
. https://youtu.be/Uhp6D2LEP38
மீள் பதிவு :
***
எம்.என்.எம் – 4 !
முத்த்ம் வாங்காத, கொடுக்காத மனிதன், மனுஷி இருக்கிறார்களா என்ன.. இல்லை என்று தான் சொல்ல வேண்டும்..
அதுவும் இந்த முத்தம் இருக்கிறதே மக்களை சின்னக் குழந்தை முதல் வயது வந்து பின் வயதாகும் வரை படுத்தும் பாடு..ம்ம் சொல்லி மாளாதுங்க..
இப்பவும் மதுரையில் என் பக்கத்து வீட்டு மாமா உயிரோடிருந்து அவரைப் பார்த்தேனாகில் செளக்கியமா என்றெல்லாம் கேட்கமாட்டேன்..முதலில் ஒரு முறை.முறைப்பேன். அப்புறம் தான் இதர விசாரிப்பெல்லாம்..
பின் என்னங்க.. வெகுசின்ன வயதில் என்னைத்தூக்கி கொழுக் மொழுக் கன்னத்தைக் கிள்ளி மலையாளப் படப் போஸ்டர் சுவரில் ஒட்டியிருப்பது போல பச்சக்கென்று கன்னத்தில் அழுந்தமுத்தமிட்டு நான் பயந்தும் வாய்துர் நாற்றத்தாலும், தாடி குத்தியதாலும் இப்படி பல ரீஸன்களுக்காக அழ அப்படியே தலைக்கு மேலே தூக்கி தட்டாமாலை சுற்றி சுற்றல் வேகத்தில் அழமறந்து கொஞ்சம் கெக்கே என சிரிக்க் ஆரம்பிக்கையில்.. பார் கண்ணாக்குட்டிக்கு என்னோட முத்தம் பிடிக்குது சிரிக்கிறான் எனச் சொல்லி என்னைக் கீழிறக்கி மறுபடி பச்சக் கொடுத்து மறுபடி அழவிட்டார்.. இன்னும் அதை நினைத்தால் கன்னம் வலிக்கிறது..(இதைப் பிற்காலத்தில் என் அம்மா சொல்லியிருக்கிறார்.. ஒன்ன எப்படிக் கொஞ்சுவார் தெரியுமா அவர்….ஒங்கப்பா திட்டியே திட்டியிருக்காராக்கும்..கொழந்தைய முரட்டுத்தனமா கொஞ்சறான் பாவி.. கன்னம்லாம் கன்னியிருக்கு.. !)
நம்மளோட இன்றைய ஹீரோ இருக்கானே நல்ல ஹேண்ட்ஸம்மான புள்ளயாண்டான்.. ஹேண்ட்ஸம்மான ஹீரோயினே கிடைச்சுட்டா அவனுக்கு! சரி சரி..பியூட்டி ஃபுல்னே சொல்லிக்கலாம்.. ஹீரோயினை லவ் பண்றான்..சரி..அதுக்காக இப்படியா பண்றது..
என்னவாக்கும் செஞ்சான்..
ஹீரோயினோட பேசறான்..அதுவும் ஃபோன்ல..
பேசினா பரவால்லையே பேசறதுக்கு முன்னாடி முத்தா கொடுக்கறான் த்ரீ டைம்ஸ்..
சரி அவனோட லவ்வருக்கு கிஸ் கொடுக்கறான் ஃபோன்ல தானேன்னா..சுத்துமுத்தும் பாத்துக்க வேணாமோ.. என்ன தான் இருந்தாலும் ரகசியமா அம்மா பண்ணிவச்சுருக்கற லட்டை எடுத்துண்டு போய் மொட்டை மாடிக்குப் போய் பக்கத்து வீட்டுப் பொண்ணுக்கும் ஷேர்பண்ணி சாப்பிடறது தானே சுகம்.. ச்ச்..என்னது வேற கத வருதே இதுல! சுத்து முத்தும் பார்க்காம அவன் பேசறதே ஆபீஸ்லயே கேட்டுண்டுருக்கா ஒரு இளம் பெண்.. வேற யார்..ஹீரோவோட செக்ரட்டரி..இதுல என்னன்னா ஹீரோயினோட ஃப்ரண்டும் கூட அவ..
ஹீரோ என்னதான்பாஸா இருந்தாலும் அவர் குடுமி நம்ம கைலங்கற நினைப்புல ப்ச்ச் ப்ச்ச் ப்ச்ச் நு அவன் ஃபோன்ல பண்ற மாதிரியே பண்ணிக்காமிக்க அவனுக்கு வெக்கம் கோபம்லாம் வருது..
இவளே செகரட்டரி.. பேரு சுமான்னு வெச்சுக்குவோம்..சுமா. இப்படி சும்மாச் சும்மா நான் உமமா கொடுத்ததை ச்சுக்காட்டி சாரி குத்திக் காட்டிச் செய்யாதே..ஏதோ தெரியாத்தனமா செஞ்சுட்டேன்..ஸாரிங்கறான்..
அதுக்கு சுமா இட்ஸால் ரைட் நு சொன்னாலும் வீட்டுக்குப் போய் ஹீரோயினை (சூர்யான்னு வெச்சுக்கலாமா) சூர்யாவை கலாட்டா பண்றாள்..ஏன்னா அவ ஹீரோயின் வீட்ல தான் குடியிருக்கா..
இப்படி கலகலன்னு இருந்தாலும் கூட சுமா மனசுக்குள்ற ஒரு சோகம் 99 இயர்ஸ் லீஸ் போட்ட மாதிரி நன்னா சம்மணம் போட்டுண்டு ஒக்காந்திண்டுருக்கு.. என்னவாம்..
சுமாக்கு சில பலகதைகள்ள, சினிமாக்கள்ள மட்டும் தென்படற கதை மாதிரியான சோகம்..காலைல கல்யாணம் நைட் ஹஸ்பண்ட் போயாச்சு..இதான் அந்தக்காலத்திலேயே திருவிளையாடற் புராணத்துல இருக்கே.. ஒட்டிய பல் கிளை துவங்கி ஒல்லொலி மங்கலம் முழங்க கட்டிய கொம்பறதுப் பாய்ந்தகாளை மணமகனை முட்டி கொத்துப்ப்ரோட்டா வாக்க மணமகன் டபக்குனு போய்டறான்னு வருமே.. அதே தான் சுமா விஷயத்திலயும்..
அவள் ஒரு யங்க் விடோ..ஹூம் தள்ளாத வயசில்லை தான்..ஆனா ஆசைகளைப் புறந்தள்ளியும் விட முடியாத வயசு.. ம்ம் எல்லாம் விதிவசம்னு தான் இருக்கா சுமா.. ஹீரோ மேல கொஞ்சம் அபிலாஷை உண்டு.. ஹீரோவை சுரேஷ்னு வெச்சுக்குவோமா சுரேஷ்..ம்ம் இருந்தாலும் ஸ்னேகிதியின் ப்ரஸண்ட் காதலன் ப்யூச்சர் கணவன்.. கொஞ்சம் அவங்களை வாரி மட்டும் விடுவோம்னு இருக்கா..
ஆனாக்க இந்த விதி இருக்கே அது ஒரு பொல்லாத விஷயம்....இல்லையில்ல விஷமக் கார விஷயம்… யாராவது கிச்சுக் கிச்சு மூட்டினாக் கூட சிரிக்காது..ஆனா திடீர்னு எதையோ நினைச்சுக்கிட்டுச் சிரிக்கிற யங்க் காலேஜ் க்ர்ளாட்ட்மா கெக்கபிக்கேன்னு சிரிக்க ஆரம்பிச்சுடுத்துன்னு வச்சுக்கங்க வாழ்க்கை பாட்டுக்கு ரூட் மாதிரிப் போய்டும்..
சுமாக்கும் அப்படித்தான் நடக்குது.. ஊருக்குப் போய் இருக்கலாம்னு போறா..கூடவே சூர்யாவும் வரா.. அங்க சுமாவோட தகப்பனார் பக்க்த்தூர் திருவிழாப்பாக்க சூர்யாவக் கூட்டிண்டு போய்டறார்..
இங்க ஏதோ ஆஃபீஸ் வேலயா எங்கேயோ மும்பையோ என்னவோ போய்ட்டு வந்த சுரேஷுக்கு சூர்யாவைப் பாக்காம மனசுக்குள்ள நம நமங்குது..
காதலிக்கும் பெண்ணின்
கண்ணை விட
காதலிக்கும் ஆணின்
நெஞ்சம் அதிகம் துடிக்கும் நு ஆன்றோர் சொன்னாற்போல அவனுக்கு ஹ்ருதயம் அடிச்சுக்குது.. சுமா எங்க போறதா சொன்னா..அந்த ஊர் தானே..அந்த ஊர் தானே சூர்யாவும் போய்ருக்கான்னு அதே ஊருக்குக் கிளம்பி காலைல போய் இறங்கினா..
வாசல்ல கோலம் போட்டுக்கிட்டிருக்கா சுமா..இவனப் பாத்துடறா..இவன்கண்ணையும் பாத்துடறா..
பாதகத்தி சொல்லாம போனதினால் அங்கே
..படபடன்னு செவந்திருக்கும் கண்களையும் பார்த்தாள்
வேதனையைச் சொல்லாம சிரிக்கின்ற அவனின்
…வெளிறித்தான் போனமுகம் சொன்னதுவே கதையை
ஹலோ சுரேஷ் சார்..எப்படிங்க இங்கிட்டுங்கறா.. இல்ல..இங்க தானே சூர்யா வந்தா..ங்கறான் சுரேஷ்..
ஓ அவ கிராமத்துக்குன்னா போயிருக்கா.. நாளைக்குக் காலைல வந்துடுவா..
ஓ அப்படியா சுமா நான் கிளம்பறேன்..
சுரேஷ் சார்.. இருந்துட்டு சுமாவப் பார்த்துட்டே போய்டுங்களேன்.. அப்படிங்கறா சுமா..இல்லை இல்லை சொல்ல வச்சுடுத்து விதி..
கொஞ்சம் யோசிச்சு சரின்னு தங்கிடறான்..
அப்புறம் என்ன ஆச்சு.. இரவும் பகலும் டச்சிங் டச்சிங்க்ல இருக்கற அந்திப் பொழுது வந்து இரவும் வந்துடுது..
இவனுக்கோ லவ்வர் இல்லை.. அவளை நினைச்சுக்கறான்..சுமாவும் அந்தப் பக்கம் அறையில இருக்கா..அவளுக்கும் எதையெல்லாமோ எண்ண எண்ண எண்ணப் போராட்டம்..இரவு இளமை தனிமை … என்னாகும்..பட்டாசுத் திரிமேலே எரியற ஊதுபத்தி போட்டா மாதிரி பட்டுன்னு உணர்வெல்லாம் வெடிச்சுடுது… ரெண்டு பேரும் தாச்சித் தூங்கிடறாங்க!
அப்புறம் தாங்க அவங்களோட வாழ்க்கைப் பாதை திசை மாறிப் போய்டுது..
இதுல சுமாக்கு சுரேஷ் மேல அபிலாஷை அதாவது ஒரு ஈர்ப்பு இருந்ததுன்னு சொன்னேன்ல அந்த ஈர்ப்புல முன்னாலேயே ஒரு கனவு காணறாங்க.. அஃப்கோர்ஸ் சுரேஷை உமர் கயாமாகவும் தன்னை காதலியாகவும் நினச்சுக்கிட்டு..
அந்தப் பாட்டோட வரிகள்..
**
கிண்ணத்தில் தேன் குடித்து கைகளில் ஏந்துகிறேன்
எண்ணத்தில் போதை வர எங்கெங்கோ நீந்துகிறேன்..
*
படம் தெரிஞ்சுருக்குமே..இளமை ஊஞ்சலாடுகிறது கமல்ஹாசன் ஜெய்சித்ரா.. ( சுரேஷ் சுமா) சூர்யாவா ஸ்ரீப்ரியா, அப்புறம் ரஜினி உண்டு.. வெகு அழகான பாடல்களும் வெகு சுவாரஸ்யமாகவும் போகும் படம்..
அது சரி ஆணிப் பொன் நா என்னவாக்கும்.. ஆணிப் பொன் என்றால் சுத்தமான பொன் சுத்தத் தங்கம் 24 காரட் .999 கோல்ட்..ஆணிப்பொன் தேர்கொண்டுன்னு ஒரு பாட்டு கூட உண்டே..அச்சோ அத இன்னொரு எம் என் எம்க்கு யூஸ் பண்ணிக்கலாமே..!@ :)
RARE ADVTS
http://i62.tinypic.com/s419bd.jpg