http://i63.tinypic.com/2j2evxu.jpg
http://i67.tinypic.com/zt9gyu.jpg
Printable View
கோவையில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். 102வது பிறந்த நாள் விழா பற்றிய புகைப்படங்கள் தொடர்ச்சி ....
மேடையில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். திருஉருவப்படத்தை சென்னை மாநகர முன்னாள் மேயர் சைதை துரைசாமி திறந்து வைத்தார் .
http://i64.tinypic.com/20l11sk.jpg
மேடையில் சிறப்பு விருந்தினர்கள் முன்னிலையில் திரு.சைதை துரைசாமி
உரை நிகழ்த்தும் போது
http://i66.tinypic.com/r8s5zr.jpg
மேடையில் திரு.சைதை துரைசாமியுடன் திரு..ஆர். லோகநாதன்
http://i65.tinypic.com/qno6u1.jpg
http://i67.tinypic.com/rwtk01.jpg
மேடையில் திரு.சைதை துரைசாமி அவர்களுக்கு ஆயிரத்தில் ஒருவன் இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழு சார்பில் பொன்னாடை அணிவித்தல்
திரைப்படங்களில் எம்.ஜி.ஆரின் போர்க்கலைகள் என்கிற புத்தகத்தை எழுதிய திரு.சந்திரகுமார் என்பவரின் நூலை திரு.சைதை துரைசாமி வெளியிட திரு.சாகுல் ஹமீது (ஸ்டண்ட் நடிகர் ) பெற்றுக் கொள்கிறார் .அருகில் திரு.சந்திரகுமார் (பன்முக வித்தகர் ), திரு.காளியப்பன் மற்றும் சிலர்
http://i68.tinypic.com/2ro5gg2.jpg
இதயதெய்வம் புரட்சித்தலைவர் 20 நூற்றாண்டின் ஈடுஇணையில்லாத மனிதநேயத்தின் சக்தி! உலக தமிழ் மக்களின் உள்ளங்களில் நிரந்தரமாக வாழும் புகழின் தீர்க்கதரிசி! எம்.ஜி.ஆர் என்னும் மூன்றெழுத்து மந்திரமே நம்மை உறவுகளாக இணைத்து வருகிறது!உலகில் புரட்சித் தலைவருக்கு கிடைத்தது போல் மக்கள் செல்வாக்கு தலைவர் இருந்த போதும், மறைந்த போதும் எந்த உலக தலைவருக்கும் கிடைத்தது கிடையாது... தலைவரின் அன்பு நெஞ்சங்களை விட பெரிய சக்தி வேறு இல்லை!.எப்படி தலைவர் அடிமைப்பெண் காவியத்தில் கடைசி பாடலான "உன்னைப் பார்த்து இந்த உலகம் சிரிக்கிறது" பாடலில் .... இனத்தை இனமே அழிப்பதெல்லாம் மனிதன் வகுத்த வாழ்கையிலே.... என்ற தத்துவ வரிகள் தான் இன்று நம்மிடைய ( தலைவரின் பக்தர்கள் உள்ளத்தில்) வேரூன்றி கிடைக்கிறது. நாம் யாவரும் பல்லாண்டு பூமியில் நிலைத்து வாழமுடியாது.மக்களுக்காக எந்நேரமும் நம்முடன், நாம் நித்தம் நினைத்து மகிழ்கின்ற, நம் உறவுகளை ஐக்கியமாக்கிய நம் தர்மதேவன் எம்.ஜி.ஆர் அவர்களே 71வயதில் நாம் நித்தம் வணக்கும் தெய்வமாக நம்முடன் இணைந்து விட்டார்கள். நாம் மட்டும் என்ன வாழ போகின்றோம் உலகில் ஒன்றும் கிடையாது. நம்மவர்கள் பல பிரிவுகளாக தலைவர் பெயரில் புகழ் பாடினாலும் , நட்பாக பழகினாலும் நம்மிடையே ஏற்படும் கருத்து தான் நான் பெரியவன், நீ பெரியவன் என்றெல்லாம் வேறுபடுகிறது. நாம் தலைவர் புகழ்பாட நாம் உழைத்த பணத்திலிருந்து செலவு செய்தும் நம்மிடம் ஒன்றுபட்ட ஒற்றுமையில்லை என்பதை நினைத்து வருத்தம் தான் நம்மிடையே அதிகம் உள்ளது. நாம் யாவரும் ஒன்றுபட முதலில் நமக்கு நாமே பொன்னாடை,.விருது சிறப்புகளை ஒதுக்கி வைத்தால் இதுவே நல்ல உறவுக்கு முதல் வழியாகும். அடுத்து தன் புகைப்படம் போடவேண்டும் என்.பெயர் முதலில் போடவேண்டும் என்பதை தவிர்தால் நல்ல நட்பு கிடைத்துவிடும். ஒருவரை மட்டம்தட்டி பேசுவதும் ஒருவரை தலையில் தூக்கி கொண்டு பாராட்டுவதும் நல்ல நட்புக்கு அழகில்லை. தலைவரின் புகழ் பாடும் எல்லோரையும் யாராக இருந்தாலும் சமமாக பார்க்கவேண்டும். மனநிறைவுடன் வரவேற்பதும், அன்புடன் பழகுவதும், நல்ல ஆரோக்கியமாக பேசுவதும் தான் நல்ல தலைவர் பக்தனுக்கு அழகாகும். ஒரு சிலர் ஒரு சிலரை சீண்டிமுடிப்பதும் ஏசுவதும் அவனை பழிவாங்கவேண்டும் என நினைப்பது தான் மிகப்பெரிய கொடுமையான செயலாகும்.தலைவர் நமக்கு திரையில் போதித்த கருத்துக்கள் படி நடக்க தவறிளால் தான் இப்படிப்பட்ட தவறான எண்ணங்கள் தோன்றும்.. நம் கையை எடுத்து நம்மையே குத்த நினைப்பவர்கள் சத்தியமாக தலைவரின் பக்தராக இருக்க எந்நாளும் தகுதி யில்லாதவர்களாகி விடுகிறார்கள். அப்படி நம்மிடையே பிரிவினையை விதைக்கின்றனர். கற்பிக்கின்றனர். நாம் ஒன்றை மட்டும் தெளிவாக புரிந்து கொள்ளவேண்டும். நாம் பல அமைப்புகளாக இருந்தாலும் நாம் யாவரும் தலைவர் எம்.ஜி.ஆர் என்ற மூன்றெழுத்தை யார் உண்மையாக நேசிக்கின்றார்களோ அவர்களே நம் உறவினர்கள். நல்ல நட்புக்கு உறைவிடமான வர்கள் ஆவார்கள். ஒற்றுமையை வளர்ப்போம்! தலைவரின் சக்திகளை ஒன்றிணைப்போம். தலைவரின் புகழை தரணி முழுவதும் பாடுவோம். தலைவரின் பக்தர்களை விட வேறு சக்தி தமிழ் பூமியில் இல்லை என்போம். விட்டு கொடுங்கள்... நாளைய சமுதாயம் MGR என்ற மூன்றெழுத்து மந்திரம் என்போம்! நாம் போகும் பொழுது நம் உறவுகளை விட்டு போகின்றோம்!.நாம் இருக்கும் போது தலைவரின் நட்பாக திகழ்வோம்! தயவு செய்து தலைவர் எம்.ஜி.ஆர் புகழ்பாட உறவுகளாக உண்மை உள்ளத்துடன் இணைவோம்! எல்லோருக்கும் பதிவிடுங்கள்.... நாளைய வரலாறு நமக்காக உருவாகலாம்.
அனைவரின் நட்புடன் நன்றியுடன்..... உரிமைக்குரல் ராஜு............ Thanks wa.,
...