-
ஒரு வரலாற்றின் வரலாறு – புரட்சித்தலைவர்
எம்.ஜி.ஆரைப் பற்றிய தொடர் – 1
எம்.ஜி.ஆர்! தமிழ்சினிமாவில் கொடிகட்டி பறந்த ஆக்ஷன் ஹீரோ! அண்ணாவின் இதயக்கனி என்று போற்றப்பட்ட இவர் அரசியலிலும் ஹீரோவாகவே இருந்தார். சாதாரண போர் வீரனாக அறிமுகமாகி, சினிமாவுலகின் சக்கரவர்த்தியாக திகழ்ந்த எம்.ஜி.ஆர், ஏழைகளின் காவலனாக நடித்த படங்கள் ஏராளம். வெறும் நடிப்பாக இல்லாமல் நிஜமாகவே ஏழைகளிடம் அவர் காட்டிய அன்பு, அவருக்கு முதலமைச்சர் நாற்காலியை கொடுத்தது. இன்றைய ஜுஜுபி ஹீரோக்கள் கூட முதலமைச்சர் கனவோடு உலா வருவதற்கு இவர்தான் காரணம்.
சதிலீலாவதி எம்.ஜி.ஆருக்குத்தான் முதல் படம் என்றில்லை. படத்தில் வில்லனாக நடித்த டி.எஸ்.பாலையா, கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனுக்கும் முதல் படம். அமெரிக்கரான எல்லீஸ் ஆர்.டங்கன் தமிழ் படங்களை இயக்க ஆரம்பித்ததும் இதன் மூலம் தான். இயக்குநர் (கிருஷ்ணன்) பஞ்சுவுக்கும் இது முதல் படம்.
ஜெமினி அதிபர் எஸ்.எஸ். வாசனின் சினிமா உலகப் பிரவேசம் இதில்தான் ஆரம்பமானது. அவர் ஆனந்த விகடன் இதழில் எழுதிய சதிலீலாவதி தொடர் நாவல்தான் படமாகியது. பெரும் வெற்றி பெற்ற சதிலீலாவதி மதுவின் மூலம் ஏற்படும் தீமையால் ஒரு பெரிய குடும்பமே நாசமாயிற்று என்பதை கதையின் மூலக் கருத்தாக வைத்து எடுக்கப்பட்ட படம். படம் பார்த்துவிட்டு ஏராளமான ரசிகர்கள் மதுவுக்கு அடிமையாகியிருந்த நாங்கள் இப்படம் பார்த்துவிட்டு திருந்திவிட்டோம் என்று எழுதியிருந்தார்களாம்.
எம்.ஜி.ஆருக்கு இதில் போலீஸ் இன்ஸ்பெக்டர் வேடம். சிறிய வேடம்தான். தட்சயக்ஞம் மகாவிஷ்ணு வேடத்தில் எம்.ஜி.ஆருக்கு மட்டுமன்றி தமிழ் சினிமாவுக்கு முதல் வெள்ளிவிழா படம். சாலி வாகனன் தொடர்ந்து சின்னஞ்சிறு வேடங்களிலேயே நடித்து வந்த எம்.ஜி.ஆருக்கு 12-வது படமான இதில் குறிப்பிட்டு சொல்லும்படியான வேடம். படத்தில் கதாநாயகன் ரஞ்சன்தான் சாலி வாகனன். எம்.ஜி.ஆர். விக்ரமாதித்தனாகவும் அவரது மந்திரி பட்டியாக சாண்டோ சின்னப்பா தேவரும் நடித்தார்கள். படத்தில் ஒரு காட்சியில் ரஞ்சனும் எம்.ஜி.ஆரும் ரஜபுத்திர வாள்களுடன் மோதுவது படமானது.
கதையில் ரஞ்சனின் கை ஓங்கியிருக்க வேண்டும். ஆனால் கேமிரா ஓடிக் கொண்டிருக்கையில் ரஞ்சனை விட எம்.ஜி.ஆரின் வாள்வீச்சு வேகமாக இருந்தது. ரஞ்சனால் எம்.ஜி.ஆருக்கு ஈடு கொடுக்க முடியவில்லை. அதனால் கேமராவை கட் சொல்லி நிறுத்திய ரஞ்சன், டைரக்டர் பி.என்.ராவிடம் எம்.ஜி.ஆர் வேண்டுமென்றே என்னை அடிக்கிறார் என்று புகார் செய்தார். டைரக்டர் எம்.ஜி.ஆரை அழைத்து விசாரிக்க, எம்.ஜி.ஆர் செய்தது சரி என்பதை விளக்கினார். அதன் பின்னர் ரஞ்சனை விட குறைவான வேகத்தில் வாள் வீசும்படி எம்.ஜி.ஆருக்கு டைரக்டர் யோசனை சொன்னார். எம்.ஜி.ஆர் மனம் நொந்தார். நம் உண்மையான திறமையை எப்படித்தான் வெளிப்படுத்துவது என்று சின்னப்ப தேவரிடம் கூறி வேதனையை வெளிப்படுத்தியபோது அவர் எம்.ஜி.ஆரிடம், உண்மையான திறமைக்கு என்றுமே மதிப்பு உண்டு. உங்களிடமுள்ள திறமை ஒரு நாள் உலகுக்குத் தெரியத்தான் போகிறது என்று சமாதானம் கூறினார். ஸ்ரீமுருகன் சிவனாக எம்.ஜி.ஆர் நடித்து ருத்ர தாண்டவம், ஆனந்த தாண்டவம், இரண்டும் ஆடி புகழ் பெற்றார். பார்வதியாக உடன் நடனமாடிய வி.என். ஜானகி ராஜகுமாரியில் அவருக்கு ஜோடியாக நடித்தார்.
எம்.ஜி.ஆரின் நடனத்திற்கு ரசிகர்களிடம் அமோக வரவேற்பு. அதனால் மாத சம்பளத்திற்கு நடித்து கொண்டிருந்த எம்.ஜி.ஆருக்கு இதில் கூடுதலாக பணம் தரப்பட்டது. ராஜகுமாரி தனது 15-வது படத்தில் எம்.ஜி.ஆர் கதாநாயகனாக நடிக்க முடிந்தது. படத்தின் இயக்குநர் ஏ.ஏஸ்.சாமி. தொழில்நுட்பம் தெரிந்த கெடுபிடியான இயக்குநர். தான் நினைத்ததை சாதிக்க வேண்டுமென்ற உணர்வுடையவர். படம் வளர்ந்து கொண்டிருந்தபோது, ஒரு காட்சியில் எம்.ஜி.ஆரின் முகம் மட்டுமே நடிக்க வேண்டும். குளோஸ் அப் ஷாட் அது. நடிக்கும்போது முகத்தில் மட்டுமே பாவம் வரவேண்டும். உடல் அசையக்கூடாது என்றார் சாமி. எம்.ஜி.ஆர் முகத்தில் பாவம் காட்டியபோது உடலும் சேர்ந்து அசைந்தது. சாமி அதை கண்டித்தார்.
எம்.ஜி.ஆர் சாமியிடம் வந்து என்னால் முடியவில்லை. நீங்கள் நடித்து காட்டுங்கள் என்று சொல்லிவிட்டார். கடைசியில் எம்.ஜி.ஆர் நடித்தபடிதான் காட்சி படமானது. இப்படித்தான் வளர்ந்த காலத்திலேயே தன் தனித்தன்மையை நிரூபித்தார் எம்.ஜி.ஆர். அதற்கான தைரியமும் அவருக்கு இருந்தது. ராஜகுமாரி 100 நாட்களுக்கு மேல் ஓடி வெற்றி கண்டது. மருதநாட்டு இளவரசி ராஜகுமாரிக்கு பின் தொடர்ந்து ஐந்து படங்களில் கதாநாயக அந்தஸ்து இல்லாமல் நடித்த எம்.ஜி.ஆருக்கு இதில் மீண்டும் கதாநாயகன் வேடம்.
-
ஒரு வரலாற்றின் வரலாறு – புரட்சித்தலைவர்
எம்.ஜி.ஆரைப் பற்றிய தொடர் – 2
இதில் அவருக்கு ஜோடி வி.என்.ஜானகி. வாழ்க்கையிலும் இவர்கள் ஜோடி சேரக் காரணமாக அமைந்த படம் இது. படத்தின் வசனகர்த்தா கலைஞர் மு.கருணாநிதி. அவருக்கு அந்த வாய்ப்பை பெற்று தந்தவரே எம்.ஜி.ஆர்தான். படத்தின் பெரும்பாலான கதாபாத்திரங்களுக்கு (கதாநாயகி உட்பட) யார் நடிப்பது என்ற முடிவை ஏற்படுத்தியவரும் எம்.ஜி.ஆரே. படத்தின் எல்லாத் துறைகளிலும் தலையை நுழைத்து கொடுக்கப்பட்ட சம்பளத்தை விட கூடுதலாக உழைப்பை அவர் தர ஆரம்பித்தது இதிலிருந்தேதான். மந்திரிகுமாரி மாடர்ன் தியேட்டர்ஸ் கோட்டையில் எம்.ஜி.ஆருக்கு இது முதல் படம். அதிபர் டி.ஆர்.சுந்தரத்தை மீறி அங்கு யாரும் எதுவும் செய்துவிட முடியாது.
ஆனாலும் படத்தின் இயக்குநர் எல்லீஸ் ஆர்.டங்கனோடு எம்.ஜி.ஆர் படப்பிடிப்பு சமயங்களில் பலமுறை வாதங்கள் நிகழ்த்தி மோதியுமிருக்கிறார். இந்த படத்தை தெடர்ந்து மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரிப்பில் சர்வாதிகாரி, அலிபாபாவும் 40 திருடர்களும் ஆகிய படங்களில் எம்.ஜி.அர் நடித்தார். அனைத்தும் வெற்றி படங்களாக அமைந்தன. மர்மயோகி தமிழில் முதல் ஏ படம் இது. திகில் காட்சிகள் இருக்கின்றன என்பதற்காக ஏ சர்டிபிகேட் பெற்றது. ராபின் ஹ¨ட் போன்ற கதாநாயகன் வேடம். போட்டோகாலன் குறி வைக்க மாட்டான். குறி வைத்தால் தவற மாட்டான் என்று எம்.ஜி.ஆர் பேசும் வசனம் படத்தில் அடிக்கடி இடம் பெற்றது.
இன்றைக்கும் அந்த வசனம் பிரபலம். போஸ்டர்களில் தவறாமல் இடம்பெறும் வசனம் இது. எம்.ஜி.ஆரின் ஹீரோ இமேஜை உயர்த்திக் காட்டும் வசனங்கள் பரவலாக இடம் பெற ஆரம்பித்தது இந்தப் படத்திலிருந்ததுதான். என் தங்கை அண்ணன் தங்கை பாசத்தை அடிப்படையாகக் கொண்ட கதை. மீனா (படத்தில் ஈ.வி.சரோஜா நடித்த வேடம்) என்ற தங்கையின் பெயரை மறக்க முடியாமல் இன்னொரு படப்பிடிப்பில் கூட, வசனம் பேசும்போது அதே பெயரை திரும்பத் திரும்பச் சொல்லி- அதனால் அன்றைய படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது. சண்டைக்காட்சிகள் இல்லாமலேயே வெற்றி பெற்ற படம் இது. எம்.ஜி.ஆரை மிகவும் கவர்ந்த ஒரு சில படங்களில் இதுவும் ஒன்று.
எம்.ஜி.ஆராலும் உணர்ச்சிகரமாக நடிக்க முடியுமென்பதை நிரூபித்த படம் என் தங்கை. நாம் மேகலா பிக்சர்ஸ் உருவானது இதிலிருந்துதான். இது எம்.ஜி.ஆர்., பி.எஸ்.வீரப்பா, கலைஞர் கருணாநிதி மூவரும் பங்குதாரர்களாக இருந்து பிரிந்த படம். படம் வெற்றி பெறாவிட்டாலும், பார்வையற்றவராக எம்.ஜி.ஆர் நடிக்கும் படத்தின் பிற்பகுதி பார்ப்பவர்களை கண்கலங்க செய்யும். ஒரே ஷாட்டில் நீளமான வசனங்களெல்லாம் இதில் எம்.ஜி.ஆர் பேசி நடித்திருக்கிறார். மலைக்கள்ளன் குடியரசுத் தலைவர் விருது பெற்ற முதல் தமிழ்படம். மலைக்கள்ளன் தமிழ் தவிர ஐந்து மொழிகளில் உருவாக்கப்பட்டது.
எம்.ஜி.ஆர்.பானுமதி நடித்த வேடத்தில் தெலுங்கில் என்.டி.ராமராவ்-பானுமதி நடித்தார்கள். படத்தின் பெயர் அக்கி விமுடு. மலையாளத்தில் தங்கர வீரன் (சத்யன்-ராகினி ஜோடி), கன்னடத்தில் பெட்டத கல்லா (கல்யாணகுமார் மைனாவதி ஜோடி), இந்தியில் ஆசாத் (திலீப்குமார்-மீனாகுமாரி ஜோடி) சிங்கள மொழியில் சூரசேனா (காந்தி குணதுங்கா- இலங்கை பேரழகி ஒருவரும் நடித்தார்கள்) என்று ஆறு மொழிகளில் வெளிவந்தது. மலைக்கள்ளன் படத்தில் எம்.ஜி.ஆர். வயோதிக முஸ்லீமாக வேடமிட்டு பானுமதியை குழந்தே….. என்று அழைத்தபடி ஒரு மாதிரியான ஸ்டைலில் நடிப்பார். அந்த ஸ்டைல் மற்ற மொழி படங்களின் ஹீரோக்களுக்கு வரவில்லையாம்.
எம்.ஜி.ஆர். ஹ¨க்கா பிடித்து புகைவிட்டு நடித்தது இந்தப் படத்தில் மட்டுமே. கூண்டுக்கிளி எம்.ஜி.ஆரும் சிவாஜியும் இணைந்து நடித்தார்கள். இதற்கு பின்பும் இருவரும் இணைந்து நடிக்க பலரும் முயற்சித்து அவை கைகூடி வந்தபோதும் ரசிகர்களை நினைத்து கைவிட்டார்கள். அலிபாபாவும் 40 திருடர்களும் தமிழில் முதல் வண்ணப்படம் இது. எம்.ஜி.ஆரின் அழகை வண்ணத்தில் காண்பித்தபோது ரசிகர்கள் மகிழ்ந்து போனார்கள். மதுரை வீரன் எம்.ஜி.ஆர் ஆழமாக வேரூன்ற காரணமாக அமைந்த மதுரை வீரன் ஒரே சமயம் 30-க்கு மேற்பட்ட திரையரங்குகளில் 100 நாட்கள் ஓடி சரித்திரம் படைத்தது. தன் சிறு வயதில் தங்கள் சொந்த ஊரான பரமக்குடியில் ஒரே தியேட்டரில் 100 தடவைக்கு மேல் இந்த படத்தை தினமும் தொடர்ந்து பார்த்ததாக நடிகர் கமலஹாசனே கூறியிருக்கிறார்.
தாய்க்குபின் தாரம் 80-க்கு மேற்பட்ட படங்களை தயாரித்த தேவர் பிலிம்ஸ§க்கு பிள்ளையார் சுழி போட்டு தந்த வெற்றிப் படம் இது. போட்டுத் தந்தவர் எம்.ஜி.ஆர். தேவர் பிலிம்ஸ் தயாரிப்பில் 16 படங்களில் எம்.ஜி.ஆர் நடித்து சாதனை போட்டோந்திருக்கிறார். அத்தனை படங்களுக்கும் இயக்குநர் எம்.ஏ.திருமுகம் என்பது மற்றொரு சாதனை. சக்ரவர்த்தி திருமகன் ஆட வாங்க அண்ணாத்தே என்ற பாடலில் எம்.ஜி.ஆர், ஈ.வி. சரோஜா, ஜி.சகுந்தலாவுடன் போட்டி நடனம் ஆடுவதும், கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனுடன் பாடல் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெறுவதும்- எம்.ஜி.ஆரின் இமேஜை உயர்த்திக் காட்ட உதவின
-
ஒரு வரலாற்றின் வரலாறு – புரட்சித்தலைவர்
எம்.ஜி.ஆரைப் பற்றிய தொடர் – 3
எம்.ஜி.ஆர் எல்லாவற்றிலும் குறுக்கீடு செய்கிறார். அதிக செலவு வைக்கிறார் என்று தயாரிப்பாளர்கள் தரப்பில் எழுந்த குறைபாட்டுக்கு பதில் சொல்வதற்காகவே நாடோடி மன்னன் படத்தைத் தயாரித்து தானே இயக்கினார் எம்.ஜி.ஆர். இந்த படத்திற்காகவே வாகினி ஸ்டுடியோவில் உணவுக்கூடம் (மெஸ்) ஒன்றை திறந்தார் எம்.ஜி.ஆர். அதற்கான செலவில் ஒரு படமே எடுத்திருக்கலாம் என்கிறார்கள் இன்றைக்கும். படம் வெற்றி பெற்றால் எம்.ஜி.ஆர். மன்னன், இல்லையென்றால் அவர் நாடோடி என்று திரையுலகில் பரவலாகவே பேசினார்கள். அந்த அளவுக்கு எம்.ஜி,ஆர் கடன் வாங்கி படத்தை தயாரித்து கொண்டிருந்தார். படம் மாபெரும் வெற்றி பெற்றது.
தமிழ்ப்படங்களுக்கு ஒரு திறமைமிக்க சிறந்த டைரக்டர் நாடோடி மன்னன் மூலம் கிடைத்திருக்கிறார் என்று பெரும்பாலான பத்திரிகைகள் எழுதியிருந்தன. திருடாதே எம்.ஜி.ஆர். சரித்திர படங்களில் வெறும் கத்திச் சண்டை போடத்தான் லாயக்கு. சமூக படங்களுக்கு அவர் பொறுந்த மாட்டார் என்றெல்லாம் பேசப்பட்டதற்கு திருடாதே ஒரு முற்றுப்புள்ளி வைத்தது. இந்த படத்தின் வெற்றி எம்.ஜி.ஆருக்கே ஒரு நம்பிக்கையாக அமைந்தது. தன்னாலும் சமூகப் படங்களில் நடிக்க முடியுமென்று. தாய் சொல்லைத் தட்டாதே எம்.ஜி.ஆர் சமூகப் படங்களில் வெற்றிகரமாக இயங்க முடியுமென்பதற்கு உறுதியான அஸ்திவாரம் அமைத்துத் தந்த படம் இது.
தாயார் மீது தனக்குள்ள பற்றுதலை அவர் வெளிப்படுத்த துவங்கிய படமும் இதுதான். பாசம் தன் அழகு முகத்தை எம்.ஜி.ஆர் கருப்பாக்கிக் கொண்டு வித்தியாசமாக நடித்த படம் பாசம். என்றாலும் படத்தின் முடிவில் அவர் இறந்து போவதாக நடித்ததால் படத்தின் வெற்றிக்கு பாதிப்பானது. இருந்தாலும் எம்.ஜி.ஆரை ஒரு நல்ல நடிகராக அடையாளம் காட்டும் படங்களில் இதுவும் ஒன்று. தெய்வத்தாய் ஆர்.எம்.வீரப்பனின் சத்யா மூவீஸ§க்கு முதல் படம் இது. மொழிமாற்றுப் படங்களில் நல்ல கதையம்சம் உள்ளவற்றில் எம்.ஜி.ஆர் நடிக்க அரம்பித்ததற்கு தெய்வத்தாய் படம் பெற்ற வெற்றியும் ஒரு காரணம்.
தெய்வத்தாய் வங்காள மொழிப் படமொன்றின் தழுவலாகும். படகோட்டி படத்தின் குளுகுளு வண்ணமும், எம்.ஜி.ஆரின் அழகும் இனிய பாடல் காட்சிகளும் படத்தின் அடுத்தடுத்த வெளியீடுகளிலும் ரசிகர்களை பெருவாரியாக ஈர்த்தன. எம்.ஜி.ஆர்., சிவாஜி பட இயக்குநர்களையும் கவர ஆரம்பித்தது இந்த படத்திலிருந்துதான். கருப்பு-சிவப்பு ஆடைகளை அணிந்து தான் சார்ந்த கட்சிக்கும் எம்.ஜி.ஆர். விளம்பரம் தேடித் தந்தார். எங்க வீட்டுப்பிள்ளை தமிழ் திரைப்படங்களில் அதிக திரையரங்குகளில் வெற்றி விழா கண்ட முதல் படம் இது. எம்.ஜி.ஆரை சூப்பர் ஸ்டார் அந்தஸ்த்தில் கொண்டு சென்ற படம் எங்க வீட்டுப்பிள்ளை.
ஹவுஸ் ஃபுல், தியேட்டர் ஃபுல், அரங்கம் நிறைந்துவிட்டது என்று தினத்தந்தியில் இதே வாசகங்களையே முழு பக்கத்திலும் வித்தியாசமான விளம்பரமாக வெளியிட்டிருந்தார்கள். ஹவுஸ் ஃபுல் என்ற வார்த்தை இந்த படத்திற்கு பின் பிரபலமாகிவிட்டது. எம்.ஜி.ஆர் கட்சி வேறுபாடின்றி ரசிகர்களால் நேசிக்கப்படுவதற்கும், அவருக்கு புதிய ரசிகர்கள் உருவாவதற்கும் எங்க வீட்டுப் பிள்ளையும், அதில் அவரது மாறுபட்ட இரட்டை வேட நடிப்பும் துணை போட்டோந்தது. இந்தப் படத்திற்குப் பின் வெளிவந்த அவரது வெற்றிப் படங்களெல்லாம் வசூலில் பிரமிக்கும்படியாக இருந்தன. அவரது தோல்வி படங்கள்கூட வசூலில் தோல்வியுற்றதில்லை.
சிவாஜியைக் கொண்டு அதிக படங்களைத் தயாரித்த பி.ஆர்.பந்துலு, எம்.ஜி.ஆரைக் கொண்டு ஆயிரத்தில் ஒருவன் தயாரித்த முதல் படம் என்பதாலும், எம்.ஜி.ஆருடன் (புதுமுகம்) ஜெயலலிதா இணைந்து நடித்த முதல் படமென்பதாலும் ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கி வெற்றி கண்டது. இதன் அடுத்தடுத்த வெளியீடுகளிலும் புதுப்படம் அளவுக்கு ரசிகர் கூட்டம் திரண்டது. அன்பே வா ஏ.வி.எம் தயாரிப்பில் எம்.ஜி.ஆர் நடித்த ஒரே படம் என்பதோடு, இது ஏவி.எம்.முக்கு முதல் தமிழ் வண்ணப்படமும் கூட.
-
ஒரு வரலாற்றின் வரலாறு – புரட்சித்தலைவர்
எம்.ஜி.ஆரைப் பற்றிய தொடர் – 4
இந்தப் படத்தில் நடித்தது பற்றி முதல்வர் ஜெயலலிதா, 25 வருடங்களக்கு முன் எழுதிய கட்டுரை ஒன்றில் இப்படி குறிப்பிட்டிருக்கிறார். முகராசி படம் போல இதுவரை அவ்வளவு குறுகிய காலத்தில் ஒரு தமிழ்படம், அதுவும் எம்.ஜி.ஆர் நடித்த படம் வேறெதுவும் தயாரானதாக எனக்குத் தெரியவில்லை. முகராசிக்காக இரவும் பகலும் விடாமல் படப்பிடிப்பு. சிறிது இடைவெளி மீண்டும் இரவு தொடரும். விடியற்காலை நாலு மணிவரை கூட நடித்திருக்கிறோம். இரவு வீடு திரும்பினால் ஒரு மணிநேரம்தான் ஓய்வு இருக்கும். உடனே காலையில் மேக்கப் போட்டுக் கொண்டு சீக்கிரமே ஸ்டுடியோவுக்கு செல்வேன்.
எனக்கு முன்பே எம்.ஜி.ஆரும் வந்திருப்பார். எனக்காவது படப்பிடிப்பு ஒன்றுதான். ஆனால் எம்.ஜி.ஆர் தீவிரமான அரசியல் தொடர்புடன் படப்பிடிப்பிலும் இரவு, பகல் பாராமல் சோர்வோ, தளர்ச்சியோ காட்டாமல் நடித்ததை ஓர் இமாலய சாதனை என்றுதான் சொல்ல வேண்டும். படப்பிடிப்பு முடிந்து அடுத்த நாள் டிப்பிங், ரீ-ரிக்கார்டிங் ஆக பன்னிரெண்டே நாட்கள்தான். ஒரு பிரம்மாண்டமான நட்சத்திர படம் (இதில் ஜெமினி கணேசன் எம்.ஜி.ஆரின் அண்ணனாக நடித்தார்) வெற்றிப் படம். பெற்றால்தான் பிள்ளையா தி கிட் என்ற சார்லி சாப்ளின் நடித்த ஆங்கில படத்தை தழுவி எடுக்கப்பட்ட படமான இதில் எம்.ஜி.ஆரின் நடை உடை பாவனை எல்லாமே வழக்கத்திற்கு மாறாக அமைந்திருந்தன. எம்.ஜி.ஆரை சிறந்த நடிகராக அடையாளம் காட்டிய இந்தப் படத்தில் அவர் ஒரேயரு சண்டைக் காட்சியில் மட்டுமே நடித்திருந்தார்.
அதையும் மீறி படத்தின் கதையம்சம் வலுவாக இருந்தது. எம்.ஜி.ஆர் படங்களுக்குரிய வழக்கமான அம்சங்கள் இதில் இல்லாவிட்டாலும் படம் வெற்றி பெற்றது. இந்த படத்திற்காகத்தான் எம்.ஆர்.ராதா எம்.ஜி.ஆரை சுட்ட சம்பவம் நிகழ்ந்தது. காவல்காரன் எம்.ஜி.ஆர் துப்பாக்கியால் சுடப்படுவதற்கு முன் ஒரு பகுதி வளர்ந்திருந்த இந்த படம், அவர் துப்பாக்கியால் சுடப்பட்டு மருத்துவமனையில் குணமாகி மீண்டும் நடிக்க ஆரம்பித்தபோது பழைய குரல் வளமில்லை. ஆனாலும் அவர் சத்யா ஸ்டுடியோவின் ஒரு தளத்தில் மைக் சாதனங்களைக் கொண்டு வந்து தினமும் உரக்கப் பேசி பயிற்சி எடுத்துக் கொண்டதால் ஓரளவு பேச முடிந்தது.
இந்த படத்தின் 100-வது நாள் வெற்றி விழாவில் அன்றைய முதல்வர் அண்ணா கலந்து கொண்டு போட்டோசுகள் வழங்கிப் பாராட்டி பேசினார். ரகசிய போலீஸ் 115 எம்.ஜி.ஆர். ஜேம்ஸ்பாண்டு வேடத்தில் நடித்ததோடு, அவரது நகைச்சுவை நடிப்பும், சுறுசுறுப்பான சண்டைக்காட்சிகளும் படத்தின் வெற்றிக்கு துணை போட்டோந்தது. விதவிதமான உடையலங்காரத்தில் எம்.ஜி.ஆர் அழகுபட வந்தார்.
குடியிருந்த கோயில் எம்.ஜி.ஆரின் இரட்டை வேட நடிப்பு சிறப்புக்கு இந்த படமும் ஒரு உதாரணம். இரட்டை வேடமென்றால் அது எம்.ஜி.ஆர் தான் என்ற கருத்தை குடியிருந்த கோயில் வலுவாக்கியது. ஆடலுடன் பாடலைக் கேட்டு என்ற பாடலில் எம்.ஜி.ஆர் பஞ்சாபியைப் போல் பாங்ரா நடனம் ஆடியிருப்பார், அதுவும் எல்.விஜயலஷ்மியுடன். இதற்குபின் வேறு சில முன்னணி நடிகர்களும் இதேபோல் ஆடிப் பார்த்தார்கள். ஆனால் எம்.ஜி.ஆர் அளவுக்கு முடியவில்லை.
ஒளி விளக்கு எஸ்.எஸ்.வாசனின் முதல் படம் சதிலீலாவதி எம்.ஜி.ஆருக்கும் முதல் படம். எம்.ஜி.ஆரின் 100-வது படமான ஒளி விளக்கு படத்தினை தயாரித்தவரும் எஸ்.எஸ்.வாசனே. வாசனின் ஜெமினி நிறுவனத்திற்கு இது முதல் தமிழ் வண்ணப்படமாகும். பூல் அவுர் பத்தர் என்ற இந்திப் படத்தினை தழுவி எடுக்கப்பட்டு வெற்றி பெற்றது. இதில் இடம் பெற்ற, ஆண்டவனே, உன் பாதங்களை நான் கண்ணீரில் நீராட்டினேன் என்ற பாடல் படத்தில் கதையின்படி உயிருக்காகப் போராடும் எம்.ஜி.ஆர். குணமடைய வேண்டி சௌகார் ஜானகி பாடுவது போல் அமைந்திருந்தது.
1984-ல் எம்.ஜி.ஆர். சுகவீனமற்று அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தபோது, அவர் குணமடைய வேண்டி நடத்தப்பட்ட பிரார்த்தனைகளில் ஒளி விளக்கு படத்தில் இடம் பெற்ற இதே பாடல் தமிழகத்தின் எல்லா திரையரங்குகளிலும் காட்டப்பட்டது. எம்.ஜி.ஆர் படமே திரையிடப்படாத சிவாஜிக்கு சொந்தமான சாந்தி தியேட்டரிலும் இந்த பாடல் காட்டப்பட்டது. அடிமைப்பெண் ஜெயலலிதாவை முதன்முதலாக எம்.ஜி.ஆர் இதில் சொந்த குரலில் பாட வைத்தார். எஸ்.பி.பாலசுப்ரமணியம் இதற்குமுன் வேறு படங்களில் பாடியிருந்தாலும், அவர் புகழ் பெற்றது இந்த படத்திலிருந்ததுதான். இந்தப் படத்திற்காக எம்.ஜி.ஆர். ஜெய்ப்பூர் சென்று திரும்பியபோதுதான் புஷ் குல்லாவோடு வந்தார். அதிலிருந்ததுதான் குல்லா அணியும் வழக்கம் ஏற்பட்டது. நாடோடி மன்னன் போல் அடிமைப் பெண்ணையும் எம்.ஜி.ஆர் சிங்கத்தோடு மோதும் எடிட் செய்யப்படாத மொத்தக் காட்சிகளையும் பார்த்த காலஞ்சென்ற இந்திப்பட இயக்குநர், நடிகர் ராஜ்கபூர் பிரமித்துப் போய், தொழில்நுட்பத்தில் உங்கள் அறிவுக்கு முன் நானெல்லாம் சாதாரணம் என்று பாராட்டி கடிதம் எழுதியிருந்தார்.
-
நம் தலைவர் கதாநாயகன் ஆவதற்குள் பட்ட துன்பங்கள்
ஏழாவது வயதிலேயே வயிற்றுப்பிழைப்புக்காக நாடக்க் கம்பெனியில் சேர்ந்து, நடிப்புக் கலையின் நெளிவு சுளிவுகளைப் புரிந்து கொண்டு ஒரு நாடறிந்த நடிகராகப் பரிணாம வளர்ச்சி பெறுவதற்குள் அவர் பட்ட அல்லல்கள் எத்தனை! ஆசிரியர்களிடம் பெற்ற பிரம்படிகள் எத்தனை!
நாடக உலகிலிருந்து திரைப்பட உலகில் புகுவதற்காக அவர் நடந்து நடந்து தேய்ந்த செருப்புகள் எத்தனை!
‘சதி லீலாவதி’ என்னும் படத்தில் ஒரு சாதாரண வேடத்தில் அறிமுகமாகி, ‘ராஜகுமாரி’ என்னும் படத்தில் முதன்முதலாக கதாநாயகனாக நடிப்பதற்குள் இடையில் அவர் அடைந்த இன்னல்கள் எத்தனை! சந்தித்த ஏற்ற இறக்கங்கள் எத்தனை!
ராஜகுமாரி படத்தை அடுத்து பல படங்களில் சரித்திர காலக் கதாநாயகன் வேடம் தாங்கியே நடித்து வந்த அவரது திரைஉலக வா.க்கை, சமூகப்படங்கள் தயாராகி மக்கள் ஆதரவைப் பெறத் தொடங்கிய ஒரு கால கட்டத்தோடு முடித்துவிட்டதாக ஆரூடம் சொன்னவர்கள் எத்தனை பேர்!
சமூகப்பட நாயகனாகவும் தம்மால் சிறப்பாக நடிக்க முடியும்; எந்த வேடத்திலும் தம்மால் ஒளிவீசிப் பிரகாசிக்க முடியும் என்று அவர் நிரூபித்ததை நாடறியும். இன்று அது வரலாறு.
ஆனால் அப்படி நிரூபிப்பதற்குள் அவர் சந்தித்த சோதனைகள் எத்தனை!
ஆரம்ப காலத்தில் கதர் வேட்டி, கதர்ச் சட்டை அணிந்து சிறிய ருத்ராட்ச மாலையைக் கழுத்தில் தரித்துக் காங்கிரஸகார்ராக இருந்தார் புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். அப்போது அவர் அறிஞர் அண்ணாவைச் சந்தித்து, அவரது அறிவார்ந்த பேச்சாலும், ஆணித்தரமான எழுத்தாலும் கவரப்பட்டு, அவர் காட்டிய மெய்யன்பால் திராவிட இயக்கத்தில் சேர்ந்தார். பின்னர் அவர் படிப்படியாய் உழைத்தார். உயர்ந்தார். அண்ணாவின் ‘இதயக்கனி’ யாகவும் மாறினார்.
ஆனால் அந்த இதயக்கனியை கன்றிவிடும்படி கல்லால் அடித்தவர்களும், சொல்லால் அடித்தவர்களும் எத்தனை பேர்! அவர்களை எதிர்த்துக் கழக்த்திற்கு உள்ளேயும் வெளியேயும் அவர் நடத்திய போராட்டங்கள் எண்ணற்றன.
ஊறரிந்த நடிகர் ஆகி, ஒப்பற்ற ‘புரட்சி நடிகர்’ ‘மக்கள் திலகம்’ என்றெல்லாம் ஏற்றிப் போற்றப்பட்ட காலத்திலுங்கூட அவர் சென்ற வழி மலர் தூவப்பட்ட பாதையாகவா இருந்தது? கல்லும், முள்ளும் நிரம்பி அவை அவர் காலைக் குத்திக் கிழித்துக் குருதியைக் கொட்டச் செய்தனவே!
கால் முறிந்தாலும் மனம் முரியாதவர்!
1959 ஆம ஆண்டில், தஞ்சை மாவட்டம் சீர்காழியில் ‘இன்பக்கனவு’ என்னும் நாடகத்தில் நடித்துக்கொண்டிருந்தார். அப்பொழுது ஒரு சண்டைக்காட்சியில்
அவர் கால் எலும்பு முறிந்தது. அதனால் அவர் படுத்த படுக்கையானார். அந்த நிலையலேயே சென்னைக்குக் கொண்டு வரப்பட்டார். சில மாதங்கள் ஓய்வு பெறவும் நேர்ந்தது.
அப்பொழுது அவரது ‘அன்பார்ந்த’ எதிரிகள் என்ன சொன்னார்கள்? ‘முடிந்தது எம்.ஜி.ஆரின் கதை! இனிமேல் அவரால் முடியாது! ஒடிந்துவிட்ட அவர் கால் இனிமேல் ஒன்றுகூடாது. முரிந்த எலும்பு ஒன்றுகூடி அவர் எழுந்து நடந்தாலும் முன்போல அவரால் சண்டைக்காட்சிகளில் ஓடி ஆடி நடிக்க முடியாது” என்றுதானு கூறினார்கள்.
சண்டைக்காட்சிகளில் எம்.ஜி.ஆரின் அருகில் நிற்க முடியாதவர்களெல்லாம் அதை அறிந்து மகிழ்ச்சிக் கூத்தாடினார்கள்.
ஆனால், நடந்தது வேறு. ஆம்; மீண்டும் தமிழ்த்திரை உலகில் மிகச்சிறந்து நடிகராகத் தலை நிமிர்ந்து நின்றார்.
குண்டடிப் பட்டாலும் குன்றாதவர்
1967 ஆமு ஆண்டில் எம்.ஜி.ஆரை ஒருவர் துப்பாக்கியால் சுட்டார். குண்டு பாய்ந்த நிலையில் எம்.ஜி.ஆர். இராயப்பேட்டை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அதை அறிந்து நாடே திடுக்கிட்டது. தாய்க்குலம் அழுது புலம்பியது. இளைஞர் கூட்டம் பெருந்துன்பமுற்றது.
அப்பொழுதும் அவர் விரோதிகள் என்ன சொன்னார்கள்?
”முடிந்தது எம்.ஜி.ஆர் கதை இனி மேல் அவர் பிழைக்கமாட்டார்” என்று சிலர் அற்ப மகிழ்ச்சி கொண்டார்கள்.
மறுநாள் அந்தச் செய்தி வந்தது ”எம்.ஜி.ஆரின் தொண்டைக்கருகில் பாய்ந்த குண்டு அகற்றப்பட்டது; அவர் உயிருக்கு ஆபத்தில்லை! என்பதே அது.
அப்போதும் அவர் எதிரிகள் என்ன சொன்னார்கள்?
”பிழைத்து எழுந்தாலும் அவரால் முன்போலப் பேச முடியாது; பேச முடியாவிட்டால் எப்படி நடிக்க முடியும்?” என்று கூறி தங்கள் குரூரமான மகிழ்ச்சியைக் காட்டிக் கொண்டிருந்தார்கள்!
எம்.ஜி.ஆர். கழுத்தில் பாய்ந்த குண்டுச்சிதறல் ஓர் ஓராமாய் ஒதுங்கிவிட்டது. அவர் தும்மியபோது தானாகவே அது வெளியே வந்துவிட்டது. இப்படி மறுபிறவியெடுத்த எம்.ஜி.ஆரின் தொண்டைப்புண் ஆறே மாத்த்தில் ஆறியது. அவரால் பேச முடிந்தது. ஆனால், குரல், குழந்தைகள் பேசும் மழலைபோல் சற்றுத் தெளிவின்றி அமைந்தது; ஆனால், அவரது கோடான கோடி இரசிகர்களும், உடன் பிறபுக்களும் அக்குறயை எண்ணி அவர்மீது கொண்டிருந்த அன்பிலிருந்து சற்றும் மாறவில்லை. அது கண்டு எதிரிகள் வியப்பால் செயலற்றனர்.
1972 ஆம் ஆண்டில் எம்.ஜி.ஆர் கட்சியை விட்டுத் தூக்கி எறியப்பட்டார்.
அவர் செய்த தவறு என்ன? கணக்குக் கேட்டார். ஆம், கட்சிக்கணக்கைக் கேட்டார்; சட்டமன்ற தி.மு.க. உறுப்பினர்கள், அமைச்சர்கள் ஆகியோருக்கு எவ்வளவு சொத்துகள் உள்ளன என்று கணக்கு காட்ட வேண்டும் என்று கேட்டார்.
அதனால் கட்சித் தலைமை சீறியது. அவரைக் கட்சியில் இருந்து தற்காலிக நீக்கம் செய்தது. பின்னர் நிரந்திரமாகவே நீக்கிவிட்டதாகவும் அறிவித்தது!
அப்பொழுதும் அவர் எதிரிகள் என்ன சொன்னார்கள்? ”இன்றோடு முடிந்தது எம்.ஜி.ஆரின் அரசியல் வாழ்வு” என்று கொக்கரித்தார்கள்.
‘கட்சியால் எம்.ஜி.ஆர் வளர்ந்தாரா, எம்.ஜி.ஆரால் கட்சி வளர்ந்ததா? என்று பத்திரிக்கைகளுர், அரசியல் கட்சிகளும் ஆராய்ச்சி நடத்தின.
ஆனால், எம்.ஜி.ஆரின் நிலை என்ன?
எம்.ஜி.ஆர். மீண்டும் இமயம்போல் எழுந்து நின்றார்.
புரட்சி நடிகர் புரட்சித் தலைவராக மாறினார். அண்ணாவின் பெயரால் ஓர் அரசியல் கட்சியைத் தொடங்கினார். ஐந்தே ஆண்டுகளில் கடுமையான அடக்குமுறைகளையும் மீறி, கட்சியை வளர்த்தார். 1977 இல் தமிழகத்தின் ஆட்சியிலும் அமர்ந்தார்.
ஆனால், அந்த ஐந்தாண்டுகளுக்குள் அவர் சந்தித்த போராட்டங்கள்தான் எத்தனை.
-
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். ஒரு சகாப்தம்
1917-ஆம் ஆண்டு ஜனவரி 17-ம் நாள் இலங்கையில் கண்டி அருகே உள்ள நாவலபிடியாவில் பிறந்தது இந்த அழியா தாமரை. தந்தை கோபால மேனன், தாயார் மருதூர் சத்யபாமா.
மருதூர் கோபாலமேனன் ராமச்சந்திரன் என்ற இயற் பெயரைக் கொண்ட இந்த சந்திரன், பின்னாளில் எம்ஜிஆர் என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்பட்டார். அது தவிர மக்கள் திலகம், இதயக்கனி, பொன்மனச்செம்மல், புரட்சித் தலைவர் என்ற பட்டங்களும் உண்டு.
சிறுவயதில், குடும்ப சூழ்நிலைகளின் காரணமாக படிப்பைத்தொடர முடியாததால் இவர் நாடகங்களில் நடிக்கத்தொடங்கினார். நாடகத்துறையில் நன்கு அனுபவமான நிலைமையில் திரைப்படத்துரைக்குச் சென்றார். திரைப்படத்துரையில் தனது அயரா உழைப்புக் காரணமாக முன்னேறி பிரபலமான நடிகரானார். இவரது நடிப்பு பெரும் எண்ணிகையிலான மக்களைக் கவர்ந்தது. எம்ஜிஆர் சிறந்த திரைப்பட தயாரிப்பாளராகவும், இயக்குநராவார் கூட இருந்திருக்கிறார்.
மண வாழ்க்கை....
எம்ஜிஆர், தங்கமணி என்ற கிராமத்துப் பெண்ணை முதலில் திருமணம் செய்தார். ஆனால் அவர் உடல்நலமின்றி சிறிது நாட்களிலேயே இறந்துவிட, பின்னர் சதானந்தவதி என்ற பெண்ணை மறுமணம் செய்தார். அவரும் காசநோயால் இறந்துவிட இறுதியாக நடிகை வி.என்.ஜானகியை மணம் முடித்தார்.
திரை வாழ்க்கை....
அமெரிக்க இயக்குநர் எல்லீஸ் டங்கன் 1935ல் முதன்முதலில் தமிழில் இயக்கிய சதிலீலாவதி என்ற படத்தில்தான் எம்ஜிஆர் முதன் முதலில் அறிமுகமானார்.
1974ம் ஆண்டு வெளியான ராஜகுமாரி என்ற படம்தான் எம்ஜிஆருக்கு மிகம்பெரும் வெற்றியை ஈட்டித்தந்தது.
ரிக் ஷாக்காரன் திரைப்படம் எம்ஜிஆருக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருதினை பெற்றுத் தந்தது.
எம்.ஜி.ஆரே தயாரித்து இயக்கிய முதல் படம் நடோ டி மன்னன் இந்த படம் 1956ம் ஆண்டு வெளியானது.
ரசிகர் மன்றங்கள்
எம்.ஜி.ஆருக்கென்று ரசிகர் பெருங்கூட்டம் உறுதியான உச்சக்கட்டத்தில் அகில உலக எம்.ஜி.ஆர். ரசிகர் மன்றம் நிறுவப்பட்டது. குக்கிராமங்களில் கூட அதற்கு கிளைகள் தோன்றின. அவை ஒருங்கிணைக்கப்பட்டு அதற்கென முழுநேர ஊழியர்கள் நியமிக்கப்பட்டனர்.
சுதந்திரம் பெற்ற பின்னர், கிராமங்களில் மின்சார வசதி பெருகி சினிமா பிரவேசிக்கத் தொடங்கியபோது தாங்கள் கர்ண பரம்பரையாகக் கேட்டுவந்த ராமன், பீமன், அர்சுனன் ஆகியோருக்கு இணையான மாவீரராகவும் ஏழை மக்களின் நண்பராகவும் எம்.ஜி.ஆரைக் திரையில் கண்டு கிராம மக்கள் மெய் சிலிர்த்தார்கள்.
தங்கள் மனம் கவர்ந்த எம்.ஜி.ஆர்.திரைப்படத்தில் மரணமடைவதாகக் காட்டப்படுவதைக் கூட மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. திரைப்படத்தை நிஜவாழ்க்கையின் ஒருபகுதியாக அல்லது தாங்கள் வாழ விரும்பும் ஒரு சமுதாய நிகழ்வாகவே மக்கள் கருதத் தொடங்கினர்.
நடிகர் சங்கம்
சென்னையில் செயல்பட்டு வந்த நடிகர் சங்கம் என்ற அமைப்பை மாற்றி தென்னிந்திய நடிகர் சங்கம் உருவாக காரணமாக இருந்தவர் எம்ஜிஆர். என்பது குறிப்பிடத்தக்கது.
அரசியலில்.........
திரையுலகை விட்டு அரசியலுக்கு வந்தபோது, திரைப்படங்களுக்கு வெற்றி தேடித்தந்த தமிழக மக்கள் அவரை ஏமாற்றவில்லை. அண்ணாவின் இதயக் கனியானஎம்.ஜி.ஆருக்கு, அரசியலிலும் வெற்றிக் கனியை கொடுத்தார்கள்.
ஆரம்ப நாட்களில் எம்.ஜி.ஆர் காங்கிரஸ் ஆதரவாளராகவும் நேதாஜி பக்தராகவும் இருந்தார். ராஜகுமாரி, மந்திரிகுமாரி படப்பிடிப்பு நாட்களில் கருணாநிதியோடு கனிந்த நட்பு இவரை தி.மு.கழகத்திற்கு கொண்டு சென்றது.
1967 பொதுத்தேர்தலில் வெற்றிபெற அண்ணாதுரை தலைமையில் தி.மு.கழகம் ஆட்சி அமைத்தது.
1967 ம் ஆண்டு எம்ஜிஆர் முதன் முதலில் எம்.எல்.ஏ வானார்.
அண்ணாவின் மறைவுக்குப் பின், தி.மு.கழக ஆட்சியின் மீது சிறிது சிறிதாக அதிருப்தி வளரத் தொடங்குவதைக் கண்ட எம்.ஜி.ஆர், 1972ம் ஆண்டு அதிமுகவை உருவாக்கினார்.
தேவை எனத் தோன்றியபோது தனியாக சொந்தக் கட்சியைக் தொடங்கினார். அவர் வாழ்ந்த காலம் வரை அவரது கட்சி தோல்வியைச் சந்தித்ததில்லை. தொடர்ந்து 1977ம் ஆண்டு தமிழகத்தின் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்ஜிஆர் 1987ம் ஆண்டு டிசம்பர் 24ம் தேதி இறக்கும் வரை முதலமைச்சராக இருந்தார்.
எம்.ஜி.ஆரின் அ.இ.அ.தி.மு.கழகத்தின் உறுப்பினராக 1982 இல் சேர்ந்த ஜெயலலிதாவை தனது கழகத்தின் கொள்கை பரப்புச் செயலாளராக 1983 ஆம் ஆண்டில் எம்.ஜி.ஆர். நியமனம் செய்தார்
பொன்மனச் செம்மல்
எம்.ஜி.ஆர் என்னும் பொன்மனச் செம்மல் வாழ்ந்த காலத்தில் அவர் ஆற்றிய அளப்பரிய பணிகள் இன்றும் பலராலும் நினைவுகூரத்தக்கதாக இருப்பதை எவராலும் மறக்க முடியாது
எல்லோரும் தமது சம்பாத்தியத்தை தனக்கும் தன் குடும்பத்தினருக்கும் மட்டுமே பயன்படத்தக்க விதத்தில் அமைத்துக் கொள்ளும்போது, இவர் மட்டும் தன் வருமானத்தின் பலனை அனைவருக்கும் அளித்தார். எல்லோருடனும் அன்பாகப் பழகும் தன்மையைக் கொண்டிருந்தார். பல திருமணங்களுக்கு நேரில் சென்று அக்குடும்பத்தவர்களுக்கு தேவையான தொகையைப் பரிசாக வழங்கிவந்தார். ஈகை அவரது மிகப் பெரியபலம்.
முக்கிய பிரபலங்கள் சிலர்., அளித்த பேட்டியில், பொன்மனச் செம்மல் பற்றி கூறியவை..........
பாடகர் கே ஜே யேசுதாஸ்
கேள்வி: மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் எம்.ஜி. ராமச்சந்திரனின் 'உரிமை குரல்' படத்தில் அவருக்காக நீங்கள் பின்னணி பாடிய அனுபவம் பற்றி...
ஒருநாள் மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி. ராமச்சந்திரன் என்னை அழைத்து (அதுவரை அவருக்கு பாடியவர் டிஎம். செளந்தரராஜன்) அவரின் 'உரிமைக்குரல்' படத்தில் 'விழியே கதை எழுது' என்கிற பாடலை பாடச் சொன்ன போது நான் அதிகளவில் சந்தோஷம் அடைந்தேன். உரிமைக்குரல் படத்தில் நான் அவருக்காக பாட போகிறேன் என்றவுடன் எனக்கு ஒரே சந்தோஷம். அப்பாடலை நான் பாட, மிகப்பிரபலமானது எனக்கு மேலும் சந்தோஷத்தை தந்தது.
எம்.ஜி.ஆர் ஒரு பெரிய மகான். அவர் என்னை அழைத்து பாட வைத்தது எனக்கு மிகவும் சந்தோஷமான சமாச்சாரம். அது என்னுடைய பாக்கியம் என்றே சொல்வேன். பின்னாளில் நான் அவரைப் பற்றி நிறைய தெரிந்துகொண்டேன். -சைக்கு அவர் படத்தில் அதிகளவில் முக்கியம் கொடுத்தது மட்டுமல்லாமல், கலைக்கு அவர் கொடுத்த முக்கியம் மகத்தானது.
அதுமட்டுமல்லாமல் பகைவர்களையும் நண்பர்களாக்கி கொள்ளும் குணம் உடையவர். உதாணரமாக சொல்லப்போனால் அன்று கண்ணதாசனுக்கும், எம்.ஜி.ஆருக்கும் அரசியல் ரீதியாக சில கருத்துவேறுபாடுகள் -ருந்த காலத்தில், படத்தில் ஒரு பாடலுக்கு பலர் பாடல் வரி எழுதிக்கொடுத்தும் திருப்தியாகவில்லை.
கடைசியில் அவரே ஏன் நாம் கண்ணதாசனை அழைக்கக்கூடாது என்று கூறினார். எல்லோரும் தயங்க அதெல்லாம் -ருக்கட்டும்... அவர் அவர்தான்... அவரிடம் சென்று கதைக்கான சூழலை சொல்லி பாடல் எழுதி வாருங்கள் என்றார். கண்ணதாசனும் அதற்குரிய பாடல் வரியை எழுதி அனுப்பினார். 'ஓடும் மேகங்களே ஒரு சொல் கேளீரோ' என்ற பாடல்.. அங்கு பகை ஓடியது.. கலைதான் நின்றது... அவர் -சைக்காக பிறந்தவர். 10 டியூன் போட்டு காண்பித்தால் அதை அவர் செலக்ட் செய்வார்...
பிரபல நடிகர் சிவகுமார்........
கேள்வி: எம் ஜி ஆர் பற்றி நீங்க என்ன சொல்றீங்க?
சிவகுமார்: உலகத்தின் மிக உயர்ந்த குணம் என்னவென்றால், அன்பு காட்டுவது என்கிறார்கள். பிற மனிதனை நேசிப்பதைவிட உயர்ந்த விஷயம் எதுவும் பண்ண முடியாது என்று சொல்கிறார்கள். அதாவது காசு பணம் கொடுப்பது வேறு. துணி மணிகள் அளிப்பது வேறு. ஒருவரை பார்த்தவுடன் உடனடியாகச் செய்வது அன்பு செலுத்துவது. அதை செய்தவர் எம் ஜி ஆர். அவரை மிகப் பெரிய நடிகர் என்று நான் சொல்ல மாட்டேன். ஆனால் எல்லோரையும் நேசித்த மிகப் பெரிய மனிதர். தான-தர்மம் பண்ணுவதில் அவர் என்எஸ்கே-யின் நேரடி வாரிசு.
தானம் என்பது அவருக்கு அன்னை சத்யபாமாவின் தாய்பாலிலிருந்து வந்திருக்கும். இப்ப உங்க கையில ஒரு ரூபாய் இருக்கும்போது, பத்து பைசா தானம் பண்ண மனசு வரலைன்னா, நீ ஒரு லட்சம் ரூபாய் வைச்சிருக்கும்போது நூறு ரூபாய் தானம் பண்ணவே மாட்ட. இருக்கற காச தானம் பண்ணக்கூடிய மனோபாவம் வேணும். அந்த மனோபாவம் எம்ஜிஆர்-கிட்ட இருந்தது.
என்னுடைய அனுபவத்தை சொல்கிறேன். முதன் முதலில் சந்தித்தபோது, சரியாஸனம் கொடுத்து என்னையும் பக்கத்தில் உட்கார வைத்தார். பேசும்போது நீயும் சின்ன வயசில் தந்தையை இழந்து, தாயாரால் வளர்க்கப்பட்டவன் என்று கேள்விப்பட்டேன். நானும் அப்படித்தான் என்றார். எங்க அம்மா ரொம்ப பாசத்தோட வளர்த்தாங்க. நானும் எம்ஜி சக்கரபாணியும் ஒரு தடவை பர்மாவுக்கு போலாம்னு கப்பலில் புறப்பட்டபோது, எங்கம்மா கடற்கரையில் நின்று கொண்டு அழுதாங்க. நாங்க அழுதோம், அவங்க அழுதாங்க. இப்படியெல்லாம் நிறைய துன்பப் பட்டிருக்கோம். அப்படீன்னு சொன்னாரு.
அப்படிப்பட்ட ஆள் வந்து பொது மருத்துவமனையில் படுத்திருக்கும்போது தமிழ்நாடே வருத்தத்தில தள்ளாடிக்கிட்டு இருந்தபோது நான் மூணு முறை முயற்சி பண்ணி அவரை பார்க்க முடியல. நாலாவது முயற்சியில ஆர் எம் வீரப்பன் என்னை பார்க்கறதுக்கு அனுமதி அளித்தார். அண்ணே சம்பவம் நடந்தபோது நான் ஊருக்கு போயிருந்தேன். அதான் முன்னாடியே வர முடியல அப்படீன்னு சொன்னேன்.
"ஊருக்கு போயிருந்தியா? அம்மா... அம்மா செளக்கியமா..? அப்படின்னு விசாரித்தார். அந்த மனிதன் மூன்று குண்டு பாய்ந்து செத்துப் பிழைத்திருக்கிறார். எத்தனையோ சம்பவங்கள் நடந்துவிட்டன. அப்படியும், எங்கம்மாவை நினைவில் வைத்துக் கொண்டு கேட்கிறார் என்றால், அப்படியொரு தாய்ப்பற்று எம்ஜிஆருக்கு உண்டு.
மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர்
இந்தியாவின் மிக உயரிய விருதான "பாரத ரத்னா" விருது அவரது மறைவுக்கு பின் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
மக்கள் திலகம், இதயக்கனி, பொன்மனச்செம்மல், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., ஒரு யுக புருசனாக வாழ்ந்து கோடானு கோடி மக்களின் அன்புக்குரியவராக இன்றும் அவர்கள் மனங்களில் வாழ்ந்துகொண்டிருக்கிறார்.
-
http://i1170.photobucket.com/albums/...ps43f8b14c.jpg
உன்னை காட்டிலும் சிறந்த நடிகனை நாங்கள் கண்டதில்லை, உன்னை விடவும் மாண்புமிகு முதல்வரை எம் தமிழ் மக்கள் கண்டதில்லை தலைவா!! மீண்டும் நீ இப்பூ உலகில் அவதரிக்கும் நாள் தனை எதிர் பார்த்து நாங்கள்... உந்தன் உண்மையான பக்தர்கள்
-
-
THALAIVAR IN JOLLY MOOD FOR AAYIRATHIL ORUVAN 175 DAYS CELEBRATIONS
http://i1170.photobucket.com/albums/...pse72f021d.jpg
-