http://i57.tinypic.com/5u494.jpg
Printable View
http://i57.tinypic.com/s32gzp.png
புரட்சித் தலைவர் நடித்த தெய்வத்தாய் திரைப்படத்தின் மூலம் வசனகர்த்தாவாக அறிமுகமாகி, தமிழ்த் திரையுலகில் முத்திரை பதித்த இயக்குநர் சிகரம் திரு.கே.பாலச்சந்தர் அவர்களுக்கு எங்கள் அஞ்சலி.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
http://i59.tinypic.com/v456p3.jpg
தித்திக்கும் மூன்றெழுத்து கொண்டவனாம் அருள்தெய்வம், எங்கள் எம்.ஜி.ஆர் அல்லவா,
தத்துவத் திருநாயகன், சத்தியத்தாய் ஈன்ற செல்வன் தர்மத்தின் தலைவன் அல்லவா,
எங்கள் மன்னன் அல்லவா, எங்கள்தங்கம் அல்லவா; எங்கள் மன்னன் அல்லவா, எங்கள்தங்கம் அல்லவா
தித்திக்கும் மூன்றெழுத்து கொண்டவனாம் அருள்தெய்வம், எங்கள் எம்.ஜி.ஆர் அல்லவா,
தத்துவத் திருநாயகன், சத்தியத்தாய் ஈன்ற செல்வன் தர்மத்தின் தலைவன் அல்லவா,
எங்கள் மன்னன் அல்லவா, எங்கள்தங்கம் அல்லவா; எங்கள் மன்னன் அல்லவா, எங்கள்தங்கம் அல்லவா.
எத்திக்கும் புகழப்படும் மக்களின் காவல்காரன் எங்க வீட்டுப் பிள்ளை அல்லவா.
மக்களுக்கு மன்னனான மன்னாதி மன்னனுக்கு நாடோடி மன்னன் புகழ் அல்லவா
எங்கள் திலகம் அல்லவா, மக்கள் திலகம் அல்லவா எங்கள் வள்ளல் அல்லவா, கொடை வள்ளல் அல்லவா.

கோடிகோடி மக்கள் நித்தம் பாடிப்பாடிபுகழ்ந்திடும் உயர்கொள்கை கொண்ட சிங்கம் அல்லவா.
புத்திஎனும் அறிவுரை பக்குவமாய் பாட்டில்தந்த பாட்டுடைத் தலைவன் அல்லவா,
எங்கள் வாத்யார் அல்லவா, எங்கள் ஆசான் அல்லவா. எங்கள் வாத்யார் அல்லவா, எங்கள் ஆசான் அல்லவா.

நீதிநெறி பிறழ்ந்தவனாம் நிதியுடன் போர்புரிய சத்தியமாய் வந்தான் அல்லவா
வெற்றி வெற்றி முழக்கமிட்டு தர்மம் எனும் வாள்எடுத்து சுற்றி சுற்றி பகைவிரட்டும் புரட்சி தலைவன் அல்லவா.
எங்கள் தலைவன் அல்லவா, புரட்சி தலைவன் அல்லவா. எங்கள் தலைவன் அல்லவா, புரட்சி தலைவன் அல்லவா.

சித்தர்கள் தலைவனாம் கந்தனின் மறுபிறவி - எங்கள்எம்.ஜி.ஆர், தனிப்பிறவி அல்லவா,
பக்தருக்கு அருள்புரிய பரங்கிமலை வாசம்செய்த அருள்ஜோதி அல்லவா, ஆனந்தஜோதி அல்லவா
எங்கள் வேதம் அல்லவா, எங்கள் நாதம் அல்லவா எங்கள் வேதம் அல்லவா, எங்கள் நாதம் அல்லவா.
சித்தர்கள் தலைவனாம் கந்தனின் மறுபிறவி - எங்கள்எம்.ஜி.ஆர் தனிப்பிறவி அல்லவா,
பக்தருக்கு அருள்புரிய பரங்கிமலை வாசம்செய்த அருள்ஜோதி அல்லவா, ஆனந்தஜோதி அல்லவா
எங்கள் வேதம் அல்லவா, எங்கள் நாதம் அல்லவா எங்கள் வேதம் அல்லவா, எங்கள் நாதம் அல்லவா.
ஆக்கம் - தியாகராஜன் (தெனாலிராஜன்) ஊக்கம் : மக்கள் திலகம்.
இயக்குனர் சிகரம் திரு பாலச்சந்தரின் மறைவு இந்திய திரை பட உலகிற்கு பேரிழப்பாகும் . .
இயக்குனர் எஸ்.எஸ். பாலன் அவர்களின் மறைவும் இந்திய திரை பட உலகிற்கு பேரிழப்பாகும் . .
மக்கள் திலகத்துடன் தெய்வத்தாய் படத்தில் வசனகர்த்தராக பாலச்சந்தர் அறிமுக மானார் .
இயக்குனர் எஸ் எஸ் பாலன் மக்கள் திலகத்தின் சிரித்து வாழ வேண்டும் படத்தை இயக்கினார் .
இனிய நண்பர் திரு தெனாலி ராஜன் அவர்களின் மக்கள் திலகம் எம்ஜிஆர் - கவிதை மிகவும் அருமை .
இனிய நண்பர்கள் திரு சைலேஷ் , திரு யுகேஷ் , திரு லோகநாதன் , திரு செல்வகுமார் , திரு முத்தையன் , திரு ரவிச்சந்திரன் , திரு கலைவேந்தன் ,, திரு ராமமூர்த்தி , திரு ரூப் குமார், திரு சத்யா ஆகியோர்களின் பதிவுகள் மிகவும் அருமை .
மதிப்பிற்குரிய இன்றைய தமிழக முதல்வர் திரு ஒ .பன்னீர் செல்வம் தன்னுடைய அமைச்சர்கள் ,நாடாளுமன்ற சட்ட மன்ற உறுப்பினர்களுடன் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் நினைவிடத்திற்கு நாளை அஞ்சலி செலுத்துவார்கள் என்ற
நம்பிக்கை உள்ளது .