-
அன்பான காலை வணக்கத்தை மதிப்பிற்குரிய அண்ணன் சைதையார் அவர்களுக்கு தெரிவித்துக்கொண்டு... கடந்த ஆண்டு தலைநகர் சென்னையில் தங்கள் தலைமையில் பல்லாவரம் வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் ஜுலை 15 ம் நாள் நடைபெற்ற உலக எம்.ஜி.ஆர். பிரதிநிதிகள் பேரவை மாநாட்டு மூலம் உலகத்தில் வாழும் புரட்சித்தலைவரின் அபிமானிகளை ஒன்றிணைத்த பெருமை தங்களையே சாரும். இந்த மாபெரும் தொடக்கம் மூலம் பரவிகிடந்த நம்மவர்கள் ஒரே இட.தில் உறவுகளாக உறவாடிய பெருமையை கண்டு மனமகிழ்ச்சி அடைந்தோம். அந்த தொடர்பு மீண்டும் நிலைக்க, தலைவரின் மனிதநேயம் காக்க நம்மவர்கள் ஒன்றுகூட 2019 ஆம் ஆண்டில் நம் தமிழ்நாட்டின் மையப் பகுதியான திருச்சி மாநகரில் தலைவரின் 102 வது மனிதநேய திருவிழாவை உலக எம்.ஜி.ஆர் பேரவை மூலம் ஜுலை அல்லது ஆகஸ்டு மாதங்களில் நடத்தி தலைவரின் அன்பு உள்ளங்களை சரியான பாதைக்கு கொண்டு செல்ல இன்றைய தினம் தங்களால் மட்டுமே இந்த சீரிய பணியை செம்மையாக செயல்படுத்த முடியும் என்பதை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன். இதன் மூலம் தலைவரின் சரித்திரப்புகழும், தலைவரின் மேல் மாறாத பக்தியும் கொண்ட அபிமானிகளின் ஒற்றுமையும் தங்கள் நினைத்தது போல் ஒன்றுபடும்.
இன்று தங்கள் ஒருவரால் மட்டுமே தான் தலைவரின் புகழுக்கு புகழ் சேர்க்க முடிகிறது. பிரிந்து கிடந்த தலைவரின் இனத்தை கடந்த இரண்டு ஆண்டுகளாக ஒன்றுப்படுத்தி தலைவரின் நிகழ்ச்சியில் உலகம் முழுவதும் கலந்து அவர்களின் நாடி துடிப்பை சரிவரப் பார்த்து எங்களுடன் உறவாடி தொடர்ந்து நல்ல கருத்துகளை விதைத்து எல்லோரும் ஒன்றுபட வேண்டும் என்ற ஆழ்ந்த எண்ணத்தை அன்றாடம் பேசி இதயதெய்வம் எம்.ஜி.ஆர் அவர்களின் வழியில் தூயகல்வி பணியாற்றி வரும் மனிதநேயத்தின் நல்மனிதாராக திகழும் அண்ணன் சைதையார் அவர்கள் நினைத்தால் உலகில் கடைசி மனிதன் வாழும் வரை வரலாற்று தலைவரின் சரித்திரப்புகழ் நிலைக்கும் என்பதில் எந்த ஐயமுமில்லை. அன்புடன் வள்ளல் புகழ்பாடும் உரிமைக்குரல் ராஜு....... Thanks wa.,
-
.உடைஅலங்கார நிபுணர் திரு.எம்.ஏ.முத்து , திரு.சைதை துரைசாமி அவர்களுக்கு பொன்னாடை அணிவித்தல்
http://i66.tinypic.com/f013yh.jpg
-
உலகத்திலே பயங்கரமான ஆயுதம் எது என்று 60 ஆண்டுகளுக்கு முன்பே தலைவர் சக்கரவர்த்தி திருமகள் திரைப்படத்தில் தன் கருத்து பாடல் மூலம் சொன்னது தான்..
நிலைக்கெட்டு போன நயவஞ்சகரின் நாக்கு தான்..... என்பதை சுட்டி காண்பித்தார். ஆனால் அந்த நயவஞ்சக நாக்கு யார் என்பதை 1972 ம் ஆண்டு அக்டோபர் மாதம் உலகத்திற்கே கருணாநிதி தான் என்று எடுத்துரைத்தார்.அந்த நாக்கு எப்படிப்பட்டது என்பதை நாம் 1972 அக்டோபர் முதல் 2018 வரை (கடந்த 46 ஆண்டுகளாக ) நாம் அறிவோம். அந்த நாக்கின் வாரிசு இன்று உலா வந்து தமிழ்நாட்டை ஆளதிட்டமிட்டு வருகிறது.. தலைவரின் அன்பு உள்ளங்கள் அதை தடுத்து அவர்களின் பொய்யுரைக்கு தீர்வு காணவேண்டும். நல்லதே தமிழகத்தில் நடக்கவேண்டும். தலைவரின் புகழைப்பாட முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களின் தலைமையில் தலைவர் உருவாக்கிய அண்ணா கொடி, இரட்டை இலை, அண்ணா தி.மு.கழக நிறுவனம் மூன்றும் வருங்காலம் நீடித்து நிலைக்க ஆதரிப்போம்.. நம் ஒற்றுமையை நிலைநாட்டுவோம். நன்றி! உரிமைக்குரல் ராஜு............ Thanks wa.,
-
தலைவர் பவனி வந்த கலையுலகில் 1952 முதல் 1977 வரை கணேசனின் படங்கள் பல பாதாளத்திற்கு சென்றுள்ளது. தலைவரே தன் படங்களை முடித்து வெளியீடுக்கு பின் வசூல் நிலவரம் தவிர ஒடிய நாள் பற்றி சிறு துளி கூட அவர் நினைத்ததில்லை. தலைவர் நினைத்திருந்தால் படங்களின் சாதனைகள் இன்னும் இரட்டிப்பாக மாறியிருக்கும். அப்படி தலைவர் செய்யவில்லை. அதனால் தான் தலைவரின் படங்கள் காலம் கடந்தும் வாழ்ந்து கொண்டு வருகிறது... சினிமாவிலும் வாழ்கையிலும் அரசியலிலும் ஒரே நிலை பாட்டுடன் இருந்ததால் தான் பல வெற்றிகளையும் சாதனைகளையும் வரலாற்றில் பதியும் அளவுக்கு மக்கள் செல்வாக்குடன் இன்றும் தீர்க்க தரிசியாக திகழ்கின்றார் மனிதநேயத்தின் முதல்வராக தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள். நன்றி உரிமைக்குரல் ராஜு.....
.... Thanks wa.,
-
#Kumar_Kandasamy_என்பவரின்_பதிவு
திமுகவில் இருந்தாலும் இவரை அப்போதே பிடிக்கும்
கால ஓட்டத்தில் அதிமுகவை ஆரம்பித்தார்
இறக்கும் வரை மன்னாதி மன்னனே
பழி வாங்கும் எண்ணம் இருந்தது இல்லை
ஒரு முறை நேரில் மிக அருகாமையில் ஜீப்பில் வந்து கொண்டு இருந்தார்
திமுகவில் இருந்துஂவெளியேறிய பின்னர் சென்னை திநகரில் முதல் கூட்டம்
அவருடைய வாகனத்தின் பின் ஆயிரக்கணக்கான ஆண்களும் பெண்களும்
எல்லாம் அடித்தட்டு மக்கள்
இவர் நமக்கு நிச்சயமாக ஏதோ செய்வார் என்ற நம்பிக்கை
வழக்கம்போல திமுகவினர் கூட்டத்தில் பாம்புகளை விட்டும் காளைகளின் கொம்பில் தீப்பந்தங்களை கொளுத்தி கூட்டத்தினரை கலைக்க ஏதேதோ செய்தனர்
அவர் பதட்டமடைய வில்லை கைகளை கட்டி கொண்டு தைரியமாக நின்று அமைதி காத்தார்
விஷமிகள் அடித்து விரட்டப்பட்ட னர் அவருடைய கருத்துக்களின் நியாயத்தை மக்கள் உணர்ந்து இருந்தனர்
அன்றைக்கு அவர் தனியார் பொறியியல் கல்லூரிகள் கொண்டு வரவில்லை என்றால் இன்று பலர் கோவில் மணி அடித்துஂகொண்டு இருப்பார்கள்
உண்மையான சமூக நீதி காவலர்
இன்று இவரை ஸ்டாம்ப் சைசுக்கு சுருக்கி விட்டனர்
அவர் யாரையும் வாரிசாக நியமிக்கவில்லை
திறமை இருந்தால் வரட்டும் என விட்டு விட்டார்
கடைசி ஒன்று
முதலமைச்சராக இருந்த காலங்களில் உலகின் எந்த மூலையிலும் ஒரு அங்குலம் நிலம் கூட வாங்கவில்லை
அப்போதெல்லாம் அரசுத்துறை நியூஸ் டிவிஷன் செய்தி படம் திரைப்படங்களுக்கு முன் வரும்
எம்ஜிஆர் மேடையில் ஏறி நின்றவுடன் அவரை காண பெரும் கூட்டம் அலைமோதும்
வயதான பெண்களை மேடைக்கு அழைப்பார்
அவர்கள் எம்ஜிஆர் கையை பிடித்தவுடன் அவர்களுக்கு உதவி தொகையை கொடுக்கும் போது
அந்த மூதாட்டி தன் மேல் புடவையை எடுத்து உதவியை மடியில் வாங்கி கொள்ள முயல்வார்
உடனே எம்ஜிஆர் அதை மறுத்து இரண்டு கைகளிலும் கொடுப்பார்
அடேயப்பா என்ன ஒரு ஆரவாரம்
திரைப்படம் பார்ப்பதை விட இந்த செய்தி சுருளை பார்ப்பதற்கே பெரும் கூட்டம்
அவர்களில் நானும் ஒருவன்
இன்று கட்சிக்கார்களே அவரை மறந்து விட்டனர்
தீய சக்தி என்று அவர் அடையாளம் காட்டியவரின் வாரிசுகள் இன்று மீண்டும் தலை தூக்குகின்றன
தமிழகத்தின் நிரந்தர முதல்வர் எம்ஜியார் மட்டுமே............. Thanks wa.,
-
http://i68.tinypic.com/jphe7c.jpg
கோவை மாவட்ட எம்.ஜி.ஆர். பக்தர் திரு.சேகருக்கு திரு.சைதை துரைசாமி
பொன்னாடை அணிவித்து நினைவு பரிசு வழங்குதல்
-
கோவை மாவட்ட எம்.ஜி.ஆர். பக்தர் திரு.கணபதி தாஸுக்கு திரு.சைதை துரைசாமி பொன்னாடை அணிவித்து நினைவு பரிசு வழங்குதல்
http://i65.tinypic.com/2luvywo.jpg
-
கோவை மாவட்ட எம்.ஜி.ஆர். பக்தர் திரு.கமலக்கண்ணனுக்கு திரு.சைதை துரைசாமி பொன்னாடை அணிவித்து நினைவு பரிசு வழங்குதல்
http://i68.tinypic.com/2qlfuba.jpg
-
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். திருஉருவ படத்தை ஓவியமாக எம்.ஜி. ஆர். பக்தர் கோவையில் உருவாக்கியதை மேடையில் அறிமுகப்படுத்தும் காட்சி .
http://i66.tinypic.com/2v1mctu.jpg
-
திரு.சைதை துரைசாமி அவர்களுக்கு திரு.காளியப்பன் பொன்னாடை அணிவித்து நினைவு பரிசு வழங்குதல் .
http://i65.tinypic.com/if8xlu.jpg