மிக்க நன்றி, ஆதிராம் மற்றும் வெங்கிராம்.
அன்பு நண்பர்களே,
தங்கள் அனைவரின் ஆதரவுடனும் வாழ்த்துக்களுடனும் நமது ntfans அமைப்பு வெற்றிகரமாக தன்னுடைய முதல் ஆண்டினை நிறைவு செய்ய உள்ளது. அதனையொட்டி எதிர் வரும் ஜனவரி 20, 2013 ஞாயிற்றுக்கிழமை மாலை 5.00 மணிக்கு முதலாம் ஆண்டு விழா நடைபெற உள்ளது. நடிகர் திலகத்தின் உன்னதத் திரைக்காவியமான உயர்ந்த மனிதன் அன்று திரையிடப் பட உள்ளது. தயாரிப்பாளர் ஏவி.எம்.சரவணன், மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன், இசைக்குயில் சுசீலா, சௌகார் ஜானகி ஆகியோர் பங்கேற்க இசைந்துள்ளனர். சென்னை தியாகராய நகர், திருமலை சாலையில் உள்ள ஒய்.ஜி.பி. அரங்கில் விழா நடைபெற உள்ளது.
உறுப்பினரல்லாதோர் இந்த விழாவில் சேர்ந்து கொள்ளலாம்.
அனைத்து நண்பர்களும் வருகை தர வேண்டுகிறோம்.
கடந்த ஆண்டு 2012ல் நமது ntfans அமைப்பின் சார்பாக நடைபெற்ற நிகழ்ச்சிகள்
22.01.2012 - துவக்க விழா மற்றும் பார்த்தால் பசி தீரும் திரைப்படத்தின் 50வது ஆண்டு விழா - ஒய்.ஜி.பி. அரங்கு, சென்னை - 17.
01.04.2012 - பலே பாண்டியா திரைப்படம் - four frames அரங்கு, சென்னை
27.05.2012 - எங்கிருந்தோ வந்தாள் திரைப்படம் - ருஷ்ய கலாச்சார மய்யம், சென்னை - 18.
22.07.2012 - படித்தால் மட்டும் போதுமா திரைப்படம் - ருஷ்ய கலாச்சார மய்யம், சென்னை - 18.
01.09.2012 - கப்பலோட்டிய தமிழன் திரைப்படம் - ருஷ்ய கலாச்சார மய்யம், சென்னை - 18.
23.09.2012 - வடிவுக்கு வளைகாப்பு திரைப்படம் - ருஷ்ய கலாச்சார மய்யம், சென்னை - 18.
21.10.2012 - நீலவானம் திரைப்படம் - ருஷ்ய கலாச்சார மய்யம், சென்னை - 18.
25.11.2012 - ஆலயமணி திரைப்படம் - ருஷ்ய கலாச்சார மய்யம், சென்னை - 18.
இந்த அமைப்பு துவங்குவதற்கு உந்துசக்தியாயிருந்த நமது மய்யத்திற்கும், அடியேனுடைய கனவினை நனவாக்குதற்கு பெரிதும் முயற்சி செய்து செயல் வடிவமாக்கிய முரளி சாருக்கும் மற்றும் நமது மய்ய நண்பர்களும் இவ்வமைப்பின் துணைத் தலைவர் திரு மோகன் ராம், நிர்வாகக் குழு உறுப்பினர்களுமான திரு பார்த்தசாரதி மற்றும் கிருஷ்ணாஜி ஆகியோருக்கும் என் உளமார்ந்த நன்றியை பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன். நமது மய்ய நண்பர்கள் மேலும் பலர் இந்த அமைப்பில் சேர்ந்து பயனுற்று நடிகர் திலகத்தின் புகழினைப் பரப்புவதில் பங்கு கொள்ள அன்புடனும் பணிவுடனும் அழைக்கிறேன்.
அன்புடன்
ராகவேந்திரன்
Swatantra Law Associates,Madurai, அமைப்பின் சார்பாக இந்திய குடியரசின் 63வது ஆண்டு விழா மதுரையில் இந்த அமைப்பின் கட்டிடத்தில் நடைபெற உள்ளது. விழாவில் பண்டிட் நேரு, நடிகர் திலகம் சிவாஜி ஆகியோரின் உருவப் படங்கள் திறந்து வைக்கப் பட உள்ளன. மஹாத்மா காந்தி, வ.உ.சிதம்பரனார், கவிச்சக்கரவர்த்தி பாரதி, பாலகங்காதர திலகர், சர்தார் வல்லபாய் படேல், பெருந்தலைவர் காமராஜ், மொரார்ஜி தேசாய், இவர்களின் வரிசையில் இவ்விரு தலைவர்களின் படங்களும் இடம் பெற உள்ளன. படங்களை, பாண்டியன் சரஸ்வதி யாதவ் பொறியியல் கல்லூரி நிர்வாக இயக்குநர் திரு வரதராஜன் அவர்கள் திறந்து வைக்கிறார். அச்சயம் மதுரையில் நண்பர்கள் இருக்க நேர்ந்தால் அவசியம் கலந்து கொள்ளவும். விழாவினை Swatantra Law Associates,Madurai அமைப்பின் நிர்வாகி திரு மனோஹர் நாடார் அவர்கள் ஏற்பாடு செய்துள்ளார்.
நமது ntfans அமைப்பில் உறுப்பினராக உள்ள நமது மய்ய நண்பர்கள், திரு ஜே. ராதாகிருஷ்ணன், திரு பம்மல் ஸ்வாமிநாதன், திரு ராமஜெயம், சங்கரா 1970, ஆகியோர். இன்னும் ஓரிருவர் இருக்கலாம் பெயர் விட்டுப் போனால் மன்னிக்கவும். தங்கள் அனைவரையும் மற்றும் இதர நண்பர்களையும் தங்கள் உறுப்பினர் சேர்க்கையைப் புதுப்பிக்க அல்லது புதிதாக இதில் இணைய அன்புடன் அழைக்கிறேன்.
திரு ராகவேந்திரன் அவர்களின் பெருந்தன்மையான பதில் மிகவும் மனதுக்கு நிறைவு தருகிறது .
இந்த பதிவின் மூலம் ஆண்டவன் கட்டளை நடிகர் திலகத்தை பார்க்கிறேன்
எளிதில் உணர்ச்சி வசப்படும் புதிய பறவை கோபால் போலவே ,கொஞ்சம் பார் மகளே பார் நடிகர் திலகமாக மிடுக்கான பதிவுகளை வழங்கிய கோபால் அவர்களே ... சாந்தி .. சாந்தி .
என்னை போலவே
நீங்களும் நடிகர் திலகம் - வாணிஸ்ரீ ஜோடி பிரியர் என நினைக்கிறேன் .
ganpat அவர்களின் திருவிளையாடல் பதிவு -
ஒரு சிலரை - எங்கே நிம்மதி பாடலை கேட்க வைத்து புதிய பறவை போல் ஆக்கியது உமது பதிவு .
கோபால் அவர்களே
வரம் கேட்க சொன்னீர்கள் .
தர வேண்டிய இடத்தில நீங்கள்
பெற வேண்டிய இடத்தில நான்
விரைவில் நீங்கள் என் பக்கம் வருவீர்கள்
இது திருவிளையாடல் - அல்ல
அன்பு நண்பர் கண்பத் அவர்களே,Quote:
திருவிளையாடல் தருமி episode உலக பல்கலை கழகங்களில் நடிப்பிற்கு பாடமாக வைக்கப்படத்தக்க ஒன்றாகும்.
நீங்கள் அருமையாக விளக்கிய "Aggressive", Submissive" & Assertive"உடன் இதையும் சேர்த்துக்கொள்ளலாம்.அதாவது "Leadership" மற்றும் "Team Spirit" (குழு மனப்பான்மை).
Team captain: தலைவர்தான்.மற்ற members: நாகேஷ்,ஏ.பி.என்,முத்துராமன்.
வரவேற்புரை:நாகேஷ்;
முதன்மை உரை:ஏ.பி.என்;
தலைமையுரை:தலைவர்.
நன்றியுரை:முத்துராமன்
என அழகாக விரியும் ஒரு அற்புத மேடை நிகழ்வு இது.
இதை ரசிப்பதிலும் பல்வேறு நிலைகள் உள்ளன.
முதல் நிலை:நாகேஷ் நடிப்பை சிலாகித்து அவரை சந்தித்து பாராட்டி வணங்க விரும்புவது.
இரண்டாம் நிலை:ஏ.பி.என். நடிப்பை சிலாகித்து அவரை சந்தித்து பாராட்டி வணங்க விரும்புவது.
மூன்றாம் நிலை:மஹா கலைஞன் நடிப்பை கண்டு மெய் சிலிர்த்து அவரை சந்தித்து அவர் கால்களில் விழுந்து வணங்க விரும்புவது.
நான்காம் நிலை: மேற்கண்ட எதுவும் சாத்தியம் இல்லை என அறியும் போது,குறைந்த பட்சம் இந்த காட்சியில் கலந்து கொள்ளும் பாக்கியம் பெற்ற சக நடிகர் முத்துராமன் அவர்களின் காலகளிலாவது விழுந்து வணங்க எண்ணுவது.
ஐந்தாம் நிலை:நான்கும் சாத்தியம் இல்லை என உணர்ந்து இந்த படப்பிடிப்பில் பங்கேற்ற ஒரு லைட் பாயை ஆவது தேடி கண்டுபிடித்து"என்ன தவம செய்தனை!" என்று கூறி, அவர் காலில் விழுவது.
இந்தப்படம் எடுத்த ஏ.பி.என் அறுபத்து நான்காம் நாயன்மார் ஆகிவிட,
மஹா கலைஞனோ சிவனாகவே ஆகிவிட்டார்.
[நான் சரியாக சொல்லியுள்ளேனா, தவறு இருந்தால் மன்னிக்கவும்]
திருவிளையாடல் படத்தைப் பற்றியும், இக்காட்சியில் பங்கு பெற்ற கலைஞர்களைப் பற்றியுமான தங்களின் உருவகம் உயிர் பெற்று அந்தக் கலைஞர்களையே இங்கு வரவைத்து விட்டது. அவர்கள் இந்தப் பதிவுகளில் ஊடுருவி தங்களுடைய எழுத்திற்கு ஜீவன் அளித்துள்ளார்கள்.
உளமார்ந்த பாராட்டுக்கள்.
அன்புடன்
அன்பு முத்ராம் அவர்களே,
இங்கு உள்ள ஒவ்வொரு நண்பருக்குள்ளும் நடிகர் திலகம் இருக்கிறார். அவருடைய vibration நம் ஒவ்வொருவருக்குள்ளும் பரவிக் கிடக்கிறது. தங்களுடைய அன்பான பாராட்டிற்கு என் பணிவான நன்றிகள்.
அன்புடன்