http://i818.photobucket.com/albums/z...ps743e32ac.jpg
Printable View
உண்மையாகவே கழுத்தை நெரிதிருக்க வேண்டிய நபருடன் NT
http://i818.photobucket.com/albums/z...pse16c9823.jpg
எழுத்தாளர், பத்திரிகையாளர் திரு.சுதாங்கன் அவர்கள் நெல்லை தினமலரில் நடிகர்த்திலகத்தைப் பற்றி செல்லுலாய்டு சோழன் என்ற தலைப்பில் எழுதிய தொடரில் சில பகுதிகள்.
செலுலாய்ட் சோழன் – 4
சுதாங்கன்
தமிழரசுக் கட்சியின் தலைவர் மறைந்த ம.பொ.சி.
`வீரபாண்டிய கட்டபொம்மன்’, கப்பலோட்டிய தமிழன்’ படங்களை த்யாரித்து, இயக்கிய பி.ஆர்.பந்துலு.
வீரபாண்டிய கட்டபொம்மன்’ படத்திற்கு வசனம் எழதிய `சக்தி’ கிருஷ்ணசாமி.
`கப்பலோட்டிய தமிழன்’ படத்திற்கு வசனம் எழதிய கவிஞர் எஸ்.டி.சுந்தரம்
செலுலாய்ட் சோழனான சிவாஜி கணேசன்
இவர்களுக்கு நெல்லைக்காரர்களாகிய நாம் நன்றி கடன் பட்டிருக்கிறோம்.
ஒரு சோழனைப் பற்றி சொல்லும்போது, அந்த மன்னனைப் பற்றி மட்டும் சொல்லிக்கொண்டு போனால் அது ஒரு தனிநபரின மீதான துதியாகிவிடும்.
அந்த சோழன் ஆண்ட காலத்தில் அந்த நாட்டின் நிர்வாகம், மக்கள் நல்வாழ்வு, செல்வச் செழிப்பு, விவசாயம், நீர் நிர்வாகம், கலை, சமயம், இலக்கியம், மொழி வளர்ச்சி போன்ற பல விஷயங்களைச் சொன்னால்தான், அந்த சோழ மன்னனின் பெருமை மக்களுக்குப் புரியும்.
அதே போல்தான் சிவாஜி கணேசன் என்கிற செலுலாய்ட் சோழனைப் பர்றி சொல்லும்போது, அவர் காலத்திய திரைப்படம், அது எடுக்கப்பட்ட சூழல், அவருடன் ஒத்துழைத்தவர்கள், ஒரு குறிப்பிட்ட படம் வந்த காலம் எல்லாவற்றையும் சேர்ந்து பதிவு செய்தால்தான் செலுலாய்ட் சோழனின் பெருமையை முழவதுமாகப் புரியும்.
கொஞ்சம் வரலாற்றின் பக்கமும் போவோம். காரணம் கட்டபொம்மனும், கப்பலோட்டிய தமிழனும் வரலாற்று நாயகர்கள்தானே.
தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சி நடந்து கொண்டிருந்தபோது, திமுகவினர் ` வடக்கு வாழ்க்றது; தெற்கு தேய்கிறது’ என்பார்கள்.
`தெற்கு இந்தியாவில் எப்போது தேயத் துவங்கியது.? இந்திய சுதந்திரமடைந்தவுடனேயே தெற்கு தேயத் துவங்கிவிட்டது.
இதற்கு என்ன ஆதாரம் ?
பிரிட்டிஷாருக்கு எதிரான இந்திய விடுதலைப் போராட்டம் எப்போது ஆரம்பமானது ? இது குறித்து வரலாற்று ஆசிரியர்களுக்குள் ஏக போராட்டம்.
எல்லோருமே 1857ல் வடக்கே நடந்த சிப்பாய் புரட்சிதான் இந்திய சுதந்திரத்திற்கான முதல் போராட்டம் என்று வீரசவர்க்கார் தனது `1857’ என்கிற நூலில் அழத்தந்திருத்தமாகச் சொல்கிறார்.
மற்றொரு தேசியத் தலைவரான அசோக் மேத்தாவும், இதையே உறுதிபடுத்துகிரார்.
இவர்கள் சொன்னதையே அன்றைக்கு ஆட்சியிலிருந்தவர்களும் ஏற்றுக்கொண்டார்கள்.
அப்போது மத்திய அரசால், டாக்டர் எச்.ராதாகிருஷ்ணன் தலைமையில் விடுதலைப் போராட்ட வரலாற்றுக் குழ ஒன்று அமைக்கப்பட்டது.இந்தக் குழுவும் ` 1857ல் நடந்த சிப்பாய் புரட்சியிலிருந்து விடுதலைப் போர் வரலாறு எழதப்படும்’ என்று அறிவித்தது.
இந்தச் செய்தி வெளியானதும், தமிழரசுக் கட்சியின் தலைவர் ம.பொ.சி ஒரு வேண்டுகோள் விடுத்தார் `வீரபாண்டிய கட்டபொம்மன் நடத்திய பாஞ்சைப் புரட்சியிலிருந்து எழதப்பட வேண்டுமென்றார்’
`கட்டபொம்மன் பற்றிய குறிப்பும் இடம் பெறும்’ என்று பதில் வந்தது.
`சிப்பாய் புரட்சி’தான் இந்திய விடுதலைப் போரின் துவக்கம் என்ற மத்திய அரசின் முடிவை கேரள, கர்நாடக மாநில அரசுகளும் ஏற்க மறுத்துள்ளன.
கர்நாடக அரசு `விடுதலைப் போரில் கர்நாடகம்’ என்ற நூலில்
`1857க்கு முன்பே இந்திய விடுதலைப் போர் தொடங்கிவிட்டதென்ற உண்மையை இந்த நூல் எடுத்துக் காட்டும்.1857க்கு முன்னர் ஒரு நூற்றாண்டுக்கு முற்பட்ட காலத்திலேயே ஐதர் அலி தொடங்கி திப்பு சுல்தான், கிட்டூர் சென்னம்மாள் பொன்ற வீரர்கள் செய்த புரட்சிப் போராட்டங்கள்தான் 1857ல் நடந்த புரட்சிக்கு வித்திட்டது’’
1824ல் கிட்டூர் சென்னம்மாள் நடத்திய போராட்டம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. ஜான்சி ராணிக்கு ஒரு தலைமுறைக்கு முன்பாகக் கிட்டூர் ராணி சென்னம்மா ஆங்கிலேய ஆதிக்கத்திற்கு எதிராக ஆயுதம் ஏந்திப் போராடி இந்தியாவிலேயே முதல் புரட்சியாளராக விளங்கினார்.
வரலாற்றாசிரியர்கள் இந்திய சுதந்திரப் போராட்டத்தில் கர்நாடகத்தின் பங்கை சரியாகச் சொல்லவில்லை.
கிட்டூர் சென்னம்மாள் 1824ல் பிரிட்டிஷாருக்கெதிராக தோற்றுவித்த புரட்சிக்குக் கால் நூற்றாண்டுகளுக்கு முன்பே தென் தமிழ்நாட்டுப் பாஞ்சாலங்குறிச்சியில் நடந்த வீரப் புரட்சியையும் ` விடுதலைப் போரில் கர்நாடகம்’ என்னும் நூல் எடுத்துக் காட்டுகிறது.
`ராயண்ணா பிடிபட்டதற்கு 30 ஆண்டுகளுக்கு முன்னதாக தமிழகத்தில் வீரபாண்டிய கட்டபொம்மன் மற்றொரு சிற்றரசனின் துரோகத்தால் சிறைபிடிக்கப்பட்டு, கொலை செய்யப்பட்டான் அவன், ` பிச்சையெடுத்தாலும் எடுப்பேனேயன்றி,ஆங்கிலேயருக்கு அடிபணிய மாட்டேன் என்று முழங்கி இந்த மாவீரன் மிகக் கேவலமான முறையில் காட்டிக் கொடுக்கப்பட்டு தூக்கிலிடப்பட்டான்.
``தூக்கு மேடைக்கு கொண்டு போகப்பட்ட பிறகும் கூட, தன் வீரத்தையும், சுதந்திர உணர்ச்சியையும் விட்டானில்லை. தூக்குக் கயிற்றை தானே வாங்கி தன் கழத்தில் மாட்டிக் கொண்டு இறந்தான். இந்த வீரத்திற்கு இணை கிடையாது’ என்கிறது இந்த நூல்.
இந்த நூலை வெளியானது 1962ம் வருடம். வெளியிட்டது கர்நாடக அரசு. அப்போது அங்கு ஆட்சியில் இருந்தது காங்கிரஸ்.
1962ல் ` விடுதலை போரில் கேரளம்’ என்கிற நூலை கேரள காங்கிரஸ் அரசு வெளியிட்டது அந்த நூலிலும் சிப்பாய் புரட்சிதான் விடுதலைப் போருக்கு ஆரம்பம் என்பதற்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்கள். அந்த நூலில்
` இந்தியாவில் வேறு பகுதிகளை விடவும் கேரளாவில்தான் முதல் முதலில் தேசிய எழச்சியும், முற்போக்குக் கருத்துக்களும், சமுதாய உணர்வுகளும் ஏற்பட்டன. பிரிட்டிஷாரை எதிர்த்தவர்களில் முக்கியமானவர்கள் திருவதாங்கூரைச் சேர்ந்த வேலுத்தம்பி, கொச்சியைச் சேர்ந்த பலியத் அச்சன், மலபாரை சேர்ந்த பழாசி ராஜா ஆகியோர் முக்கியமானவர்கள்.
இப்படி எதிர்ப்பாளர்களில் முதலிடம் பெற்றஃ வேலுத்தம்பியின் போராட்டம் 1806ல் திருவதாங்கூர் சமஸ்தானத்தில் நடந்தது. அதற்கும் முற்பட்டது , தமிழ்நாட்டில் வீரபாண்டிய கட்டபொம்மன் நடத்திய விடுதலைப் போர் !
ஆனால், கர்நாடக, கேரள அர்சுகள் அதிகாரபூர்வமாக அரசு சார்பாக தங்கள் நாட்டு விடுதலை புரட்சியாளர்களை நூல வாயிலாக அங்கீகரித்தது.
ஆனால் அப்போது இங்கே ஆட்சியிலிருந்த காங்கிரஸ் அரசு கட்டபொம்மனையோ, அதற்குப் பிறகு வந்த கப்பலோட்டிய தமிழரின் தியாகத்தையோ பதிவு செய்யவில்லை.
அதை முதலில் செய்தவர் தமிழரசுக் கட்சித்தலைவர் ம.பொ.சிதான்.
இந்த தகவல்களையெல்லாம் அவர் தன்னுடைய இரண்டு பகுதி நூலான `விடுதலைப் போரில் தமிழகம்’ புத்தகத்தில் பதிவு செய்திருக்கிறார். இந்த நூல் வெளியானது, 1980ம் ஆண்டு.
ஆனால், 1792ல் தொடங்கி, ஒன்பது ஆண்டுகள் பாஞ்சாலப் போர்தான் இந்திய சுதந்திர போரில் முதல் நிகழ்ச்சி என்று ம.பொ.சி பல ஆண்டுகளாக பிரகடனப்படுத்தி வந்தார். தமிழகத்தின் தென்பகுதிகளில் கம்பளத்தூர் கூத்து நடைபெரு. கம்பளத்தார் கூத்து என்பது கட்டபொம்மனின் கதைதான். காரணம் கட்டபொம்மன் கம்பளத்து நாய்க்கர்.
`அந்நியரின் ஆதிக்கத்தால் அடிமைப்பட்டுக்கிடந்த பாரதத்தில் சுதந்திர போரை முதன் முதலில் துவக்கிய பெருமை தமிழ்நாட்டின் நெல்லை மாவட்டத்தையே சாரும்’ என்கிறார் `நெல்லை மாவட்ட சுதந்திர போராட்ட வரலாறு’ நுல் ஆசிரியர் ந. சோமயாஜூலு.
(தொடரும்)
செலுலாய்ட் சோழன் 7
சுதாங்கன்
வெள்ளைக்கார போலீஸ்காரன் அடித்ததால், சிவாஜியின் தந்தையாருக்கு காதே சரியாக கேட்க முடியாத நிலை ஏற்பட்டது.
ஆனால் அவரது மகன் சிவாஜி கணேசனின் மனதில் தேசப்பற்று ஊறிப்போனதற்கு அதுவே காரணமாக இருந்தது.சமூகப்படங்களின் அவர் நடிக்கும்போதை விட, அவர் இதிகாச, புராண, சரித்திர, தேசபக்தி படங்களில் நடிக்கும்போது, அவருக்குள் அந்தப் பாத்திரமே கூடுவிட்டு கூடு பாய்ந்து அமர்ந்ததை போல் ஆகிவிடுவார்.
அதனால்தான் கப்பலோட்டிய தமிழம் படம் பார்க்கும்போது, அவரை நாம் வ.உ.சி.யாகவே கண்டோம்.
அந்தப் படத்தை பொறுத்தவரையில், அது வெளியான காலத்தில் அந்தப் படத்தின் கதாபாத்திரங்கள் எங்களைப் போன்ற அன்றைய சிறுவர்களின் மனதில் அந்த கதாபாத்திரம் நிரந்தரமாக அமர்ந்து கொண்டது.
இந்தியா சுதந்திரம் அடைந்து பதினைந்து ஆண்டுகளுக்குள் வந்த படம் கப்பலோட்டிய தமிழன். ஆனால் துரதிருஷ்டம் என்னவென்றால், அதற்குள்ளாகவே நமக்கு சுதந்திர சந்தோஷம் மறந்துவிட்டது.
தமிழகத்தின் தென்கோடி தூத்துக்குடியிலிருந்து ஒருவர் சுதேசி கப்பல் விட்டிருக்கிறாரே என்கிற சந்தோஷத்தில் கூட அந்த படத்தை பலர் பார்க்கவில்லை.
சிவாஜியே தன் சுயசரிதையில் இதைப் பற்றி வருத்தப்பட்டிருக்கிறார்.
நான் ஒரு தேசியவாதியின் மகன். சிறு வயது முதலே எனக்குள் தேச பக்தியும், தேசியமும் இருந்தது.அதனால் வ.உ.சி. யின் பாத்திரத்தில் `கப்பலோட்டிய தமிழன்’ படத்தில் வேடத்தை நன்றாகவே செய்ய முடிந்தது.
நமது தமிழ்நாட்டில் தேசியப் படங்கள் நிறைய எடுத்துள்ளார்கள். அதில் ஏறக்குறைய பல படங்களில் நான் நடித்திருக்கிறேன்.இந்தப் படங்களை குடியரசு தினம், சுதந்திர தினம் போன்ற தேசியத் திருநாள் வரும்போதெல்லாம் திரையிலும், டி.வியிலும் போடுவார்கள்.
என்னைப் பிடிக்கிறதோ இல்லையோ, என் படங்களைத்தான் போடுவார்கள். இப்போது கப்பலோட்டிய தமிழன் நம்மிடையே இல்லை. ஆனால் அவர்களுடைய வாரிசுகள் இருக்கிறார்கள். கப்பலோட்டிய தமிழனின் பெரிய மகனுக்காக நான் தேர்தல் கூட்டங்களுக்குச் சென்று பேசியிருக்கிறேன்.
மேடையில் அழதிருக்கிறேன். `கப்பலோட்டிய தமிழனின் மகனுக்காக சிபாரிசு செய்ய வேண்டிய நிலை உள்ளதே ! அவருக்கு யார் சிபாரிசும் இல்லாமல் நீங்களாக அல்லவா ஒட்டுப் போட வேண்டும்’ என்று பேசியிருக்கிறேன்.
வ.உ.சி. அவர்களின் மகன், சுப்ரமணியன கப்பலோட்டிய தமிழன் படத்தைப் பார்த்துவிட்டு, `` ஆஹா ! எனது தகப்பனார் மாதிரி அப்படியே இருக்கீறீர்களே’ என்றார்.
எனக்கு எவ்வளவு சந்தோஷமாக இருந்திருக்கும். ஆனால், கப்பலோட்டிய தமிழன் படம் ஒடவில்லை. ஏனென்றால், வ.உ.சி. காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர். ஆகவே, அந்தப் படத்தை பார்த்து உண்மையான தேசபக்தி வந்துவிடக் கூடாதே என்று சில பேர் நினைத்தனர். அப்போது திமுக கட்சி வளர்ந்து கொண்டிருந்தது.
எனவே எதிர்க் கட்சிக்காரர்கள், வ.உ.சி காங்கிரச்காரர். ஆகவே இது காங்கிரச் படம் என்று மக்களிடையே எண்ணங்களை வளர்த்துவிட்டார்கள். அப்போது, திமுகவை நோக்கி பலர் படையெடுத்துக் கொண்டிருந்த நேரம். அதே திமுக கட்சியைச் சேர்ந்த பிள்ளைகள் கொஞ்சம் வயதானவுடன் `கப்பலோட்டிய தமிழன்’ படத்தைப் பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள். காரணம் ஒரு நல்ல படத்தைப் பார்க்க தவறிவிட்டோமே என்று அப்போது நினைத்தார்கள். கப்பலோட்டிய தமிழன் படத்தை வெளியிட்ட போது ஏழு லட்ச ரூபாய் நஷ்டம்.
திமுகவிற்கும் காங்கிரஸிற்கும் உள்ள ஒரு வித்யாசத்தை கூறுகிறேன். கலையைப் பற்றி காங்கிரஸ்காரர்களுக்கு கவலையில்லை. சிவாஜி நல்ல கலைஞர், பல படங்களில் நடித்திருக்கிறார். தேசியம் பேசியிருக்கிறார் என்றெல்லாம் பார்க்க மாட்டார்கள்.
ஆனால், திமுக காரர்கள் அப்படியல்ல. அவர்கள் கலையை வைத்தே கட்சியை பெரிதாக்கிக் கொண்டார்கள். காங்கிரஸ்காரர்கள் கலையைப் பொருட்படுத்தவில்லை. ஆகையால், அவர்களால் அவர்களுக்காகவே எடுக்கப்பட்ட கப்பலோட்டிய தமிழன் என்ற படம் தோல்வியடைந்துவிட்டது.
`தேச பகதர்களை பற்றி படம் எடுத்ததால் நஷ்டப்பட்டு விட்டோமே’ என்று சம்மந்தப்பட்டவர்கள் கவலைப்படவில்லை. அந்த தேச பகதர்களை மக்கள் நினைவுக்கு கொண்டு வந்தோமே. என்று மகிழ்ந்தார்கள். அவர்களை நினைவு கூறும்போது என்னையும் மறக்காமல் இருக்கிறார்கள். ‘ என்கிறார் சிவாஜி கணேசன்.
அது சரி, திமுக கலையால் தன்னை வளர்த்துக்கொண்டது. ஆனால் சிவாஜியும் அவர்களோடு சேர்ந்திருந்திருக்க வேண்டியது தானே ? என்ற படிக்கிற இன்றைய தலைமுறைக்கு வரலாம்.
சிவாஜிக்கு நடிப்பை தவிர, வேறு எதுவும் தெரியாது. அவருக்கு தான் நடிக்கும் பாத்திரம் மட்டுமே முக்கியம். கட்சி என்பது அவருக்கு இரண்டாம் பட்சம்தான்.
கட்சிக்கு அவர் போனது தற்செயல். அதையும் கொஞ்சம் தெரிந்து கொண்டால் தான் சிவாஜி என்கிற செலுலாய்ட் சோழன் எப்படி கலைக்காகவே வாழ்ந்தார் என்பது புரியும்.
வரப் போகும் விஷயங்களும் சிவாஜியே தனிப்பட்ட முறையில் என்னிடமும், சில பேட்டிகளிலும், அவருடைய சுயசரிதையிலும் சொன்னதுதான்
திராவிடக் கழகத்திலோ, முன்னேற்றக் கழகத்திலோ எந்தக் காலத்திலும் சந்தா கட்டி, அவர் உறுப்பினராக இருந்ததில்லை. பெரியார், அண்ணா கொள்கைகளை ஏற்றுக்கொண்டவர். ஆகையால் அதற்காக பிரசாரம் செய்தார். அந்தக் கட்சியின் கொள்கைகளை ஒப்புக்கொண்டாரே தவிர, கட்சியில் உறுப்பினராக இருந்ததில்லை. அவரது குடும்பம் தேச பக்தி உள்ள குடும்பம். அதோடு அந்த குடும்பம் இந்து தர்மத்தை கடைப் பிடித்த வந்த குடும்பம். அவர் குடும்பத்தில் எல்லோருமே பக்தி மிகுந்தவர்கள். இதை சிவாஜி என்றைக்கும் உதறித் தள்ளிவிடவில்லை. சில பகுத்தறிவுக் கொள்கைகளில் அவருக்கு உடன்பாடிருந்தது.அந்தக் கருத்துக்களை படங்களின் மூலமாக சொன்னார்.
இதற்கு உதாரணமாக ஒரு முக்கிய உதாரணத்தை சொல்ல வேண்டு. என் தாத்தா பி.ஸ்ரீ. 1930 களிலேயே ஆனந்த விகடனில் கம்ப சித்திரம் எழதியவர். அதைத் தொடர்ந்து சிவனடியார்களைப் பற்றி சிவநேசச் செல்வர்கள் என்ற தொடரையும் எழதிய, ஒரு ஆன்மீக எழத்தாளர். வைண, சைவ இலக்கியங்களில் ஆழ்ந்த பற்றும் அக்கறையும் கொண்டு எழதியவர்.
அவர் தன்னுடைய ஒரு நூலில், `இராஜாஜியின் சமயத் தொண்டும், அரசியல், சமுதாயத் தொண்டும் நாட்டுக்கு இன்றியமையாதவை என்பது வெளிப்படை.அப்படியே சுய மரியாதைப் பெரியாரின் தன்மானத் தனி வீரமும், சமயத் தொண்டும், சமய மறுப்புத் தொண்டும் கூட எண்ணிறைந்த மூட நம்பிக்கைகளிலிருந்து தமிழ் மக்களைக் காப்பாற்றுவதற்கு அவசியமானவை என்றே நான் நம்புகிறேன்.
பக்தி நெறியில்,பகுத்தறிவையும் பயன்படுத்திக் கொள்ள இடம் கொடாதவர்களை தண்டிக்கவே இறைவன் மூட நம்பிக்கை என்கிற கொடிய ப்ளேக் நோயை அனுப்பியுள்ளான் என்றார் ஒரு ஆங்கில அறிஞர். இந்தக் கருத்திலே பெரியாரின் கருத்துக்கு ஆதாரம் இருப்பதாகவே நான் கருதுகிறேன்.அந்த ஆங்கில மகாவாக்கியத்திற்கு விரிவுரை, விளக்கம்தான் பெரியார்’
ஆன்மிக பி.ஸ்ரீக்கே பெரியாரிடம் ஈடுபாடு இருந்தது. ஒரு கலைஞன் சிவாஜிக்கு இருந்ததில் என்ன தவறு ? (தொடரும்).
செலுலாய்ட் சோழன் – 8
சுதாங்கன்
1970 களில்தான் எனக்குக் கொஞ்சம் பத்திரிகைகள் படிக்கும் ஆர்வம் வந்தது. தாத்தா பத்திரிகைக்க்காரர் என்பதால் வீட்டிற்கு பல பத்திரிகைகள் வரும். அப்போதெல்லாம் வீட்டில் ஆனந்த விகடனுக்கு ஏகப்போட்டி இருக்கும். குமுதம் பத்திரிகையை மறைந்திருந்துதான் படிக்க வேண்டும். காரணம் அப்போது, அதில் சில கவர்ச்சி படங்களும், சினிமா கிசுகிசுக்களும் வந்து கொண்டிருந்தது. இன்றைய பத்திரிகை படங்களைப் பார்க்கும்போது, அன்றைய குமுதம் படங்களை பூஜையறையிலேயே வைக்கலாம்.
ஆனாலும் அன்றைய சூழலில் அது பிஞ்சுகள் மனதை கெடுத்துவிடும் என்பது பெரியவர்களின் கண்டிப்பான நினைப்பு.அப்போது வீட்டிற்கு பொம்மை சினிமா பத்திரிகை வரும். அப்போதெல்லாம் அது மாதம் ஒரு முறை பத்திரிகை. சினிமா பத்திரிகைகளில் பேசும் படமும், பொம்மை’ இரண்டுமே பெரிதும் மதிக்கப்பட்ட சினிமா பத்திரிகைகள். பொம்மை பத்திரிகையில் வண்ணப் படங்கள் அருமையாக இருக்கும். கே.ஆர்.வி பக்தா சினிமா உலகின் அருமை புகைப்படக்காரர். அவர் எடுக்கும் படங்களை கண்களில் ஒற்றிக்கொள்ளலாம்.
சிவாஜியின் பேட்டிகள், படங்கள் வரும். ஏற்கெனவே சிவாஜி படங்கள் ஏற்படுத்திய தாக்கங்கள் என்னை மெதுவாக படிக்கும் பழக்கத்திற்கு கொண்டு சென்றது. வருடம் 1970 என்றாலும், 1959 களில் வந்த வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தின் வசனங்கள் பட்டித் தொட்டியெங்கும் பிரபலம். அப்போதெல்லாம் கல்யாண வீடுகளில், கோவில் விழாக்களில் மைக் செட் போட்டு, குழாய் ஒலிபெருக்கியின் மூலமாக பழைய படங்களின் பாடல்கள், வசனங்கள் நிச்சயம் இருக்கும். அப்போது மிகப்பிரபலமானது, வீரபாண்டிய கட்டபொம்மன் பட வசனங்கள். சிவாஜி என்று சொன்னாலே பள்ளிக் குழந்தைகள் கூட `வானம் பொழிகிறது, பூமி விளைகிறது’ உனக்கேன் கொடுப்பது கிஸ்தி’ என்று உடனே சொல்வார்கள். மழலை உச்சரிப்புகளில் கூட இந்த வசனங்கள், ஒரு வீரத்தை கொண்டு வரும்..
சிவாஜி கணேசனின் 35வது படம் வீரபாண்டிய கட்டபொம்மன். ஏற்கெனவே பல முறை மேடையில் நடிக்கப்பட்ட நாடகம்தான் வீரபாண்டிய கட்டபொம்மன். சென்னையில் சில தியேட்டர்களில் அப்போது பழைய படங்கள் மட்டுமே வரும். இந்த தலைமுறைக்கு தெரியாது. இன்றைய ஜெமினி மேம்பாலம் வழியாக பனகல் பூங்காவிற்கு செல்லும்போது, ஜி.என். செட்டி சாலை முகப்பில் இன்றைக்கு இருக்கும் சன் காம்ப்ளெக்ஸ் வர்த்தக வளாகம் அன்றைக்கு சன் தியேட்டார், பழைய மாம்பலத்தில் இன்றைக்கும் இருக்கும் ஸ்ரீனிவாசா தியேட்டர், இப்போது இல்லாமல் இருக்கும் மேற்கு மாம்பலம் நேஷனல், இன்றைக்கு ராஜ் தியேட்டர் என்றழைக்கப்படும் அன்றைய நூர்ஜஹான், மேற்கு சைதாப்பேட்டையின் ஜெயராஜ், மந்தைவெளி பஸ் நிலையம் எதிரில் இன்றைக்கு ஒரு பாழடைந்த கட்டடமாக இருக்கும் இடம் கபாலி தியேட்ட்ர், வாலாஜா சாலையில் இன்று வானளாவிய குடியிருப்பு பாரகன் காம்ப்ளெக்ஸ் என்றிருக்கும் அது பாரகன் தியேட்டர், அதே போல் புரசைபகுதியில் அபிராமி தியேட்டர் அடுத்த தெருவில் இருக்கும் மேகலா தியேட்ட்ர் இங்கெல்லாம் பழைய படங்களை போடுவார்கள். அப்படி ஒரு முறை சன் தியேட்டரில் வீரபாண்டிய கட்டபொம்மன் பார்க்க நேர்ந்தது. அந்தப் பருவத்தில், ஆங்கிலத்தில் சொல்லப்படும் fairy tale கதைகள் கிளுகிளுப்பூட்டும், தமிழில் விக்ரமாதித்யன், வேதாளம் முருங்கை மரக் கதைகளைப் போல.
கட்டபொம்மன், என்றைக்கு மறக்க முடியாத விக்ரமாதித்ய, வேதாளமாக மனதில் போய் உட்கார்ந்து கொண்டார். உடல் சிலிர்த்தது, கட்டபொம்மன் என்கிற பாளையக்கார மன்னன், மாறுவேடத்தில், தன் நாட்டில் கொள்ளையடிக்கும் கூட்டத்தைப் பிடிக்க மாறுவேடத்தில் மாட்டு வண்டியில் போவார். `மாட்டு வண்டி பூட்டிக்கிட்டு, மாப்பிள்ளையை கூட்டிக்கிட்டு, காட்டு வழி போறவளே கன்னியம்மா, உன் காசு மாலை பத்திரமா பாத்துக்கம்மா’ என்றொரு நாடோடி பாடல், அப்படிய பள்ளியின் நர்சரி ரைம்மைப் போல பதிந்தது. அதே போல், கட்டபொம்மன் தன் படையோடு, ஜாக்ஸன் துரையை பார்க்க போவான், கட்டபொம்மனை அவமானப்படுத்த வேண்டுமென்று அவன் ஊர் ஊராக மாறி கட்டபொம்மனை அலைக் கழித்துக்கொண்டிருப்பான்.
அப்போது, படை வீரர்கள் ` கறந்த பாலையும் காகம் குடியாது, கட்டபொம்மன் துரை பேரச் சொன்னா’ என்பார்கள். அந்த அளவுக்கு கட்டபொம்மனைக் கண்டால் சிம்ம சொப்பனம் என்பதற்காக படத்தில் பாடப்பட்ட பாடல்.அந்த பாடலை வெகு நாட்கள் பாடிக்கொண்டேயிருந்தேன்.
படம் முடிந்தது, கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்டான். அவன் நினைவு என்பது மட்டும் என் கழத்தில் சுருக்காகத் தொங்கிக்கொண்டிருந்தது. அந்த சின்ன வயதிலேயே, கட்டபொம்மனை பற்றி திரையில் சொன்னது கொஞ்சம் என்கிற வருத்தம் மனதிற்குள் இருந்தது. திரையில் சுருக்கமாகத்தான் சொல்ல முடியும் என்பதை புரிந்து கொள்ள முடியாத வயது.
கட்டபொம்மனை இன்னும் அதிகம் தெரிந்து கொள்ள வேண்டுமென்கிற வெறி வந்தது. நாங்கள் இருந்த ஜாம்பஜார் பகுதியிலிருந்து கிழக்கு நோக்கி நடந்தால், ஐஸ் அவுஸ், அங்கிருக்கும் காவல் நிலையத்தியத்திற்கு பின்னால் இருக்கும் தெரு, இருசப்ப கிராமணி தெரு. இங்குதான் தமிழரசு கட்சியின் தலைவர் ம.பொ.சிவஞான கிராமணியார் வீடு. இவரை ம.பொ.சி என்றழைப்பார்கள். இவருடைய பருத்த மீசை கூட அந்தக் காலத்தில் பிரபலம். மூன்றாம் வகுப்பு வரை மட்டுமே படித்த ம.பொ.சி. ஒரு அச்சகத்தில் அச்சுக் கோர்ப்பாளராக சேர்ந்தார். புத்தகங்களை அச்சுக் கோர்க்கும்போதே, அதை படித்து மேதையானவர். இந்தியாவிற்கு சுதந்திரம் வருவதற்கு ஒராண்டுக்கு முன்பே, வீரபாண்டிய கட்டபொம்மன், கப்பலோட்டிய தமிழன் என்று இரண்டு புத்தகங்களை எழதினார்.
இந்த நூல்களை அடிப்படையாக வைத்துதான், இரண்டு திரைப்படங்களுமே உருவானது. வீரபாண்டிய கட்டபொம்மன் டைட்டிலில் முதலில் ` கதை – வரலாற்று ஆராய்ச்சிக் குழத் தலைவர். ம.பொ.சிவஞான கிராமணியார் ‘ என்று வரும். கப்பலோட்டிய தமிழன் படத்தில் கதை – ம.பொ.சி என்றிருக்கும்.
அவர் எழதிய புத்தகத்தை அவரை என்னை அழைத்துக்கொண்டு போய் வாங்கிக் கொடுத்தார் தாத்தா.இன்றைக்கு அந்த புத்தகங்களை பத்திரமாக வைத்திருக்கிறேன்.
தமிழகத்தின் மாபெரும் வீரன் கட்டபொம்மன்.இந்திய சுதந்திரப் போரை முதலில் துவக்கி சிறப்பாக தமிழ்நாட்டினர்தான். அதுவும் திருநெல்வேலி ஜில்லாவில் பாஞ்சாலங்குறிச்சி எனும் சின்னஞ் சிறிய பாளையபட்டர்கள் ஆங்கிலேயருக்கு எதிராக கடுமையாக போர் புரிந்தனர்.
1797ம் ஆண்டிலிருந்து 1801 வரை அதாவது நான்கு ஆண்டுகள் பாஞ்சாலங்குறிச்சியாருக்கும், கிழக்கிந்தியக் கம்பெனி வெள்ளையருக்கும் கடுமையான போர் நடைபெற்றது. வீரபாண்டியக் கட்டபொம்மன் நடத்திய அப்போர், சிம்மாசனத்தைக் காப்பாற்றிக்கொள்ள அல்ல, செந்தமிழ் நாட்டின் சுதந்திரத்தை பாதுகாக்கவேயாகும்.
வீரபாண்டிய கட்டபொம்மனை, சிவாஜி வடிவத்தில் திரையில் காட்டாதிருந்தால், கட்டபொம்மன் பெயர் தமிழ்நாட்டில் தமிழகத்தில் பதிந்தே இருக்காது.
`தேச பக்தர்களை பற்றி படம் எடுத்ததால் நஷ்டப்பட்டு விட்டோமே’ என்று சம்மந்தப்பட்டவர்கள் கவலைப்படவில்லை. அந்த தேச பகதர்களை மக்கள் நினைவுக்கு கொண்டு வந்தோமே. என்று மகிழ்ந்தார்கள். அவர்களை நினைவு கூறும்போது என்னையும் மறக்காமல் இருக்கிறார்கள். ‘ என்கிறார் சிவாஜி கணேசன்.
அருமையான வரிகள் - கப்பலோட்டிய தமிழன் ஸ்ரீலங்காவில் 100 நாட்களுக்கும் மேல் ஓடிய படம் - இங்கு இல்லாத தேச பக்தி அங்கே இருந்தது --- இந்த படம் ஓடாமல் இங்கு போனதிற்கு காரணம் - அரசியல் , தேச பக்தி இல்லாமை , போதிய ரசனை இல்லாமை - வ.வு.சியின் கப்பலையே அவர் சிறையில் இருந்தபோது அவருக்கு தெரியாமல் வித்தவர்கள் தானே அன்றைய தமிழர்கள் - இந்த படத்தை மற்றும் வெற்றி அடையவைக்க ஏது அவர்களுக்கு துணிவு , தன்மானம் எல்லாம் ??
குமுதம் பத்திரிகையை மறைந்திருந்துதான் படிக்க வேண்டும். காரணம் அப்போது, அதில் சில கவர்ச்சி படங்களும், சினிமா கிசுகிசுக்களும் வந்து கொண்டிருந்தது. இன்றைய பத்திரிகை படங்களைப் பார்க்கும்போது, அன்றைய குமுதம் படங்களை பூஜையறையிலேயே வைக்கலாம்.
ரசிக்க கூடிய வரிகள் - எவ்வளவு உண்மை அடங்கிய வார்த்தைகள் !!
நன்றி kcs சார்
1960-களின் இறுதியில் துவங்கி நடிகர் திலகத்தின் படங்கள் வெளியான கால கட்டத்தைப் பற்றிய எனது தொடர் நினைவலைகளில் கடந்த பதிவின் இறுதி பகுதி.
1972 மே 6 - பட்டிக்காடா பட்டணமாவின் ஓபனிங் ஷோ.
இடைவேளை. வெளியே வரும் ரசிகன் துள்ளிக் குதிக்கிறான். இது எதிர்பாராமல் கிடைத்த ஜாக்பாட். அதே சமயம் செகண்ட் ஹாப் இதே போல் சுவாரஸ்யமாக இருக்க வேண்டுமே என்ற சின்ன பயமும் இருந்தது.
இங்கிருந்து பதிவு தொடர்கிறது.
அந்த நாள் ஞாபகம்
இடைவேளைக்கு பிறகு படம் ஆரம்பித்தது. தன்னை விட்டு பிரிந்து சென்ற மனைவியை நினைத்து வருந்தும் மூக்கையாவிடம் அப்பாத்தா எஸ்.என்.லட்சுமி சொல்லும் "ஆடிக் கறக்கிற மாட்டை ஆடி கறக்கணும்! பாடிக் கறக்கிற மாட்டை பாடிக் கறக்கணும்!" என்ற வசனத்துடன் படம் பட்டிக்காட்டிலிருந்து பட்டணத்திற்கு மாறும். தோழிகளுடன் ஹோட்டலில் அமர்ந்திருக்கும் கல்பனாவிடம் ஹிப்பி ஸ்டைல் தலை முடியுடன் முகேஷ் என்ற பெயரில் நடிகர் திலகம் அறிமுகமாக, அடுத்த ஆட்டம் தியேட்டரில் ஆரம்பமானது. நல்வாழ்த்து நான் சொல்லுவேன் பாடல் உடனே. இடைவேளைக்கு முன் கிராமத்து குத்து என்றால் இப்போது வெஸ்டர்ன் பீட்ஸ். எதுவாக இருந்தால் என்ன, நம்ம ரசிகர்கள் சளைத்தவர்களா என்ன? அதற்கும் தியேட்டரை உண்டு இல்லை என்று பண்ணி விட்டார்கள்.
அடுத்து நடிகர் திலகம் ஜெஜெ-வை சீண்டும் காட்சிகள். அந்த கிண்டல் வசனங்கள், கர்ப்பமாக இருக்கிறார் என்று சொன்னவுடன் சொல்லும் கேலி பேச்சுகள் இதற்கெல்லாம் செம ரெஸ்பான்ஸ். ஆளை விட்டு கடத்தி கொண்டு போய் நடிகர் திலகத்தை சென்னையை சுற்றி காண்பிப்பார்கள். ஊருக்கு வெளியே போன பிறகு அவர் அவர்களை புரட்டி அடிப்பார். "சாந்தி தியேட்டரை எனக்கே காட்றியா?" டயலாகிற்கு தியேட்டர் குலுங்கியது.
ஆனால் அவர் மீண்டும் சோழவந்தான் வந்தவுடன் அது வரை இல்லாத சீரியஸ் நடிப்பு வெளிப்பட, நடிப்பை எதிர்பார்த்து வந்த ரசிகர்களுக்கு சந்தோஷம். பஞ்சாயத்து கூட்டத்திற்கு போய் விட்டு வந்த நடிகர் திலகம் எஸ்.என்.லட்சுமியிடம் பேசும் காட்சி
"பஞ்சாயத்துல எனக்கு கிடச்ச வரவேற்பை நீ பார்த்திருக்கணும்.அப்படியே பூரிச்சு போயிருப்பே.
அப்படியா? நான் வராமே போயிட்டனே
நான் வந்திருக்கனே உயிரோடு
நாக்கு மேல பல்லைப் போட்டு உன்னை எவன்யா பேசினான்?"
மற்றும் நடிகர் திலகம் சொல்லும் "கை கழுவிட்டேன்" போன்ற வசனங்களுக்கு பெரிய வரவேற்பு [கதை வசனம்: பாலமுருகன்]. என்னடி ராக்கமாவின் pathos version -கும் நல்ல வரவேற்பு இருந்தது. அந்த கிராமத்து வீட்டின் மாடிப்படியில் அமர்ந்தவாறே அவருக்கே உரித்தான கன்னத்தில் வழியாமல் கண்களில் நீர் கரை கட்டி நிற்க
எல்லோர்க்கும் ஊர்கோலம் இரண்டு தரம்! அதில் ஒரு கட்டம் முடிந்ததடி!
தாயாருக்கும் பின்னாலே சம்சாரம் அது தடம் கொஞ்சம் புரண்டதடி
என்ற வரிகளின் போதெல்லாம் செம அப்ளாஸ்.கிளைமாக்ஸ் முடிவு இப்படித்தான் இருக்கும் என்று யூகிக்க முடிந்தாலும் அந்த சஸ்பென்சை அழகாக கையாண்டிருந்தார் இயக்குனர் மாதவன்.
படம் முடிந்தது. ஹாலை விட்டு வெளியே வந்தவுடன் தியேட்டர் காம்பவுண்ட்குள்ளேயே ஒரு வெங்காய வெடி சத்தம் காதை அடைத்தது.
தொடர்ந்து படபடவென்று தௌசன் வாலா சர வெடி வெடிக்க, ராஜா திரைப்படத்திற்கு நடந்தது போல ரசிகர்கள் கூட்டம் மேல மாசி வீதியில் ஊர்வலம் வந்து தியேட்டர் வாசலில் குழுமி ஒரு ஆட்டம் போட்டு விட்டு போனார்கள். தொடர்ந்து நான்காவது படம் வெற்றி. 1972 -ம் வருடத்தை பொறுத்த வரை ஹாட்ரிக் வெற்றி.
ஆனால் ஓபனிங் ஷோ பார்த்து விட்டு வரும் போது என்னால் அந்த படத்தின் வெற்றியின் வீச்சை அளவிடமுடியவில்லை என்பதை இங்கே ஒத்துக் கொள்ள வேண்டும். நிச்சயமாக நூறு நாட்கள் ஓடும் என்று நினைத்தேன். ஆனால் அதையும் தாண்டி வெள்ளி விழா கொண்டாடி தமிழ் சினிமாவின் மொத்த கருப்பு வெள்ளை படங்களிலேயே அதிகமான வசூலை பெற்று சாதனை புரியும் என்று எதிர்பார்க்கவில்லை. எங்கள் மதுரையில் அன்று வரை மிகப் பெரிய வெற்றிப்படங்கள் வெள்ளி விழா கொண்டாடி (175 நாட்களில்) பெற்ற வசூலையெல்லாம் வெறும் நூறு நாட்களில் முறியடித்தது பட்டிக்காடா பட்டணமா.
(தொடரும்)
அன்புடன்
கோபால்,
கட்டபொம்மன் 55 -வது வெளியீட்டு நாளை முன்னிட்டு கட்டபொம்மன் பற்றிய உங்களின் ஆய்வை அல்லது நடிகர் திலகம் எப்படி கூடு விட்டு கூடு மாறினார் என்பதை ரசித்து ரசித்து எழுதியிருக்கிறீர்கள். ஏற்கனவே படித்ததுதான் என்ற போதினும், மீள் பதிவு என்ற போதினும் இன்றும் ரசிக்க முடிகிறது. என்றும் ஈசிக்க முடியும் என்பதில் சந்தேகமேயில்லை. இதுதான் உச்சம் என்று நாம் நினைக்கும் போது அதையும் தாண்டி மற்றொரு உச்சம் அவர் தொடுவதை உணர்ச்சிபூர்வமாக சொல்லியிருக்கிறீர்கள். குறிப்பான படத்தின் உச்சங்கள் என்று நான்கு காட்சிகளை சொல்லியிருக்கிறீர்கள்.
இங்கே ஒன்றை குறிப்பிட வேண்டும். என்னுடைய தனிப்பட்ட விருப்பம் என்னவென்றால் இது போன்ற நடிகர் திலகத்தின் மிகப் பெரிய புகழ் பெற்ற படங்களில் பலரும் புகழும் காட்சிகளை விட ஒரு சில சாதாரண காட்சிகளில் வெகு அலட்சியமாக அவர் உடல் மொழியும் நடிப்பும் வெளிப்படுவதை பெரிதும் ரசிப்பவன் நான்.
மகாராஜாவின் அந்தப்புரத்தில் இருக்கும் தன பெண்ணை இரவு நேரமாகி விட்டது தூங்க வா என்று அழைக்க வரும் தம்பி மனைவியிடம் "அவள் இன்றிரவு தன பெரியமாவிடம் இருந்து உறங்கி கொள்வாள்" என்று சொல்லியவாறு அந்த கை அசைவிலேயே ராகினியை திருப்பி அனுப்பும் கம்பீரம் என்ன! மகாராஜாவாக இருந்தாலும் தானும் ஒரு சராசரி ஆணுக்கு உடைய உணர்வுகளை கொண்டவன்தான் என்பதை அந்தப்புரத்தில் பெண்கள் மட்டும் ஆடிப்பாடும் "டக் டக்கு" பாடலின்போது மறைந்திருந்து பார்ப்பது, அதை தம்பியும் மற்றவர்களும் பார்த்து விடுவதை கண்டவுடன் முகத்தில் தர்மசங்கடம் தெரிந்தாலும் அதை மறைத்தபடி அந்த இடத்திலிருந்து விலகுவது, மாறு வேடத்தில் நகர் சோதனைக்கு செல்லும்போது தங்களை மறந்த நிலையில் ஜெமினியும் பத்மினியும் ஆடி பாடிக் கொண்டிருக்க அவர்களின் தலைக்கு மேல் நாகம் ஒன்று தொங்குவதைப் பார்த்து விட்டு அதை தூக்கி வீசி விட்டு இருவரிடம் தன்னை யாரென்று காட்டிக் கொள்ளாமல் கடுமையாக பேசுவது போல் மிரட்டுவது, அதே நகர் சோதனையில் தன படை வீரன் தன நாட்டிற்கு துரோகம் செய்கின்றானோ என்ற சந்தேகத்தில் அவனோடு சண்டையிட அவன் எதிரி நாட்டு ஒற்றனை பிடிப்பதற்க்காகதான் அப்படி செய்தான் என்பதை புரிந்துக் கொண்டதும் தன அவசர செயலுக்கு வருந்துவது அதற்கு தண்டனை அனுபவிக்க வேண்டும் என்ற மனசாட்சியின் குரலுக்கு ஏற்ப மீண்டும் அதே மாறு வேடத்தில் வந்து அரசவையில் அதே படை வீரனிடம் சவுக்கடியை பெற்றுக் கொள்வது, இரவு சவுக்கடி ஏற்படுத்திய காயங்களின் வேதனை பொறுக்க முடியாமல் மனைவி பாட தம்பி மகளை நடனம் ஆட சொல்லி வேதனையை மறைப்பது அந்த சிங்கார கண்ணே உன் தேனூறும் சொல்லாலே தீராத துன்பத்தை தீர்ப்பாயடி என்ற மனதிற்கு இதம் தரும் பாடலை கேட்டு அப்படியே கண் அசர்வது என்று சின்ன சின்ன காட்சிகளிளெல்லாம் கூட தூள் பரத்துவார்.
மிக பிரபல ஜாக்ஸன் துரையின் காட்சியும் கிளைமாக்ஸ் பானர்மான் காட்சியும் தமிழ் நாட்டிற்கே தமிழ் மொழிக்கே பெருமை தேடி தந்த காட்சிகள். நடிகர் திலகதிற்கு நாற்காலி தர மறுத்த ஜாக்ஸன் துரையின் நாற்காலியை சாமர்த்தியமாக கட்டபொம்மன் எடுத்துக் கொள்ளும் காட்சியால் பெரிதும் கவரப்பட்ட இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் கட்டபொம்மன் வெளியாகி 40 வருடங்களுக்கு பிறகு அவர் எடுத்த படையப்பா படத்தில் அது போன்ற காட்சியை சற்றே மாற்றி எடுத்தார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
வசனம் பேசும் காட்சிகளில் கூட மேற்சொன்ன இரண்டு காட்சிகளை விட போருக்கு புறப்படும் நேரத்தில் ரத்த திலகம் இடும் மனைவியிடம் "செக்கர் வானத்திலே செந்நிற பந்து போல் -------" என்று ஆரம்பித்து "அது போன்றதுதான் நீ என் நெற்றியிலே இட்டிருக்கும் ரத்த நிற வட்ட நிறை பொட்டு" என்று சங்கீத சந்தங்கள் போல் அவர் வசனம் பேசும் அழகை வெகுவாக ரசிப்பேன். அதே நேரத்தில் நீங்கள் குறிப்பிட்டிருக்கும் மந்திரியிடம் பேசும் காட்சி அதிலும் "போருக்கு பயந்தவன் பேசும் பேச்சா இது" என்ற இடமெல்லாம் அற்புதமாக இருக்கும்.
அது போல் எதிரியின் பலம் தெரிந்து தங்கள் வலிமையையும் உணர்ந்து அந்த இயலாமையை வெளிப்படுத்தும் ஜக்கம்மா வேறில்லை திக்கம்மா பாடலில் போது அந்த சூழலை நாம் நேரிடையாக உணர செய்யும் அவரின் முகபாவம்.
இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். நேரம்தான் இல்லை. இந்த படத்தின் டிஜிட்டல் வெர்ஷன் வரும்போது இன்றைய தலைமுறையினரும் அதை சிறப்பாக புரிந்துக் கொள்வார்கள். இதை எழுதிக் கொண்டிருக்கும் வேளையில் இந்தப் படத்தின் டிஜிட்டல் மயமாக்குதல் வேலை முடிந்து விட்டதாகவும் அடுத்த மாதம் விநியோகஸ்தர்களை வணிகம் பேச அழைத்திருக்கிறார்கள் என்ற நல்ல செய்தியும் வந்திருக்கிறது. விரைவில் அந்த நல்ல நாள் வரட்டும்.
அன்புடன்
இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். நேரம்தான் இல்லை. இந்த படத்தின் டிஜிட்டல் வெர்ஷன் வரும்போது இன்றைய தலைமுறையினரும் அதை சிறப்பாக புரிந்துக் கொள்வார்கள். இதை எழுதிக் கொண்டிருக்கும் வேளையில் இந்தப் படத்தின் டிஜிட்டல் மயமாக்குதல் வேலை முடிந்து விட்டதாகவும் அடுத்த மாதம் விநியோகஸ்தர்களை வணிகம் பேச அழைத்திருக்கிறார்கள் என்ற நல்ல செய்தியும் வந்திருக்கிறது. விரைவில் அந்த நல்ல நாள் வரட்டும்.
Dear Murali Srinivas. You have poured happiness in our minds and hearts with this news. VPKB is the movie that has withstood the test of time and still remains the model for dialogue modulations with the younger generation aspiring for acting career. However, I feel that the movie for its rerun needs to be edited and trimmed as some of the lengthy scenes may not suit the present times. The comedy and song scenes with karunanithi and co., and the pathos song 'Pogathey Pogathey en kanavaa.." in my personal opinion need to be cut. We need to invite views from our fans and the producers may kindly heed to the views, as we have learnt some lessons in the past with some rerun movies of our own NT(like the raw comedy track in VM and the fisherman episode in TV)