-
முன்பிருந்தவர் நேற்றில்லை ; நேற்று இருந்தவர்
இன்றில்லை ; இன்றிருப்பவர் நாளை .............
ஆட்சியில் இருக்கும் காலம் குறைவாக இருந்தாலும்
மக்களுக்கு , எவ்வளவு நன்மை செய்ய முடியுமோ
அதைச் செய்வதுதான் என் முதல் வேலை
http://i1170.photobucket.com/albums/...psf1fc1352.jpg
-
பாசம் - 31 8-1962
http://i62.tinypic.com/m756py.jpg
மக்கள் திலகத்தின் சிறந்த நடிப்பில் வெளிவந்த படம் ''பாசம் ''. கிளைமாக்ஸ் காட்சி ரசிகர்களால் - மக்களால் ஏற்று கொள்ள படவில்லை .மக்கள் திலகத்தின் மாறு பட்ட தோற்றம் . அமைதியான ஆர்பாட்டமில்லாத நடிப்பு . இனிய பாடல்கள் என்று எல்லா அம்சங்களும் நிறைந்த காவியம் . இன்று 53வது ஆண்டு விழா துவக்கம் .
-
-
-
-
பாசம் திரைபடத்தில் தலைவர் இறுதி காட்சியில் தன் தாயை தானே கொன்றுவிட்டதை அவருடைய உறவினர்கள் சொல்ல தலைவர் அம்மா என்று சொல்லும்பொழுது ஒரு மனிதனின் உயிர் ஒவ்வொரு உறுப்பில் போவது இயற்கை அப்படி தலைவர் தன் உயிர் கண் வழியே போகும் மாதிரி இயற்கை நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார் . என்ன ஒரு இயற்கையான நடிப்பு அந்த படம் வெற்றி பெற்று இருந்தால் இன்னும் பல தரப்பட்ட நடிப்பு பரிமாணங்கள் நமக்கு கிடைத்து இருக்கும் .
இன்று அந்த காட்சியினை பார்க்கும்பொழுது கண்கள் குளமாகும் . ஒரு படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் ரசிகர்கள் வெளியேறுவது தலைவரின் இந்த படத்திற்கு தான் தன் தலைவர் திரையில் கூட இறப்பதை காண விரும்ப மாட்டார்கள் அவரின் ரசிகர்கள்
-
எனக்கு ஏன் எம்ஜியாரின் நடிப்பு பிடிக்கும்
சினிமா என்ற ஒரு கற்பனை உலகில் நான் பலதரப்பட்ட நடிகர்களின் அற்புதமான பல்வேறு நடிப்பு திறன்களை பார்த்து வியந்து இருக்கிறேன் .
என்னுடைய பார்வையில் தமிழ் நடிகர் திரு எம்ஜியார் அவர்களின்
30 வயதில் கதாநாயகன் - ராஜகுமாரி
37 வயதில் மலைக்கள்ளன் படத்தில் சிறப்பான நடிப்பு
41 வயதில் நாடே போற்றிய நாடோடி மன்னன் - இமாலய புகழ்
47 வயதில் எங்க வீட்டு பிள்ளை - ஆயிரத்தில் ஒருவன் சூப்பர் ஹிட்
50 வயதில் மரணத்தை வென்று - குரல் பாதிக்க பட்டு காவல்காரன் - மாபெரும் வெற்றி
50 வயதுக்கு பிறகு
ஒளிவிளக்கு
குடியிருந்த கோயில்
ரகசிய போலீஸ் 115
அடிமைப்பெண் - நம்நாடு - மாட்டுக்காரவேலன் - ரிக்ஷாக்காரன் - நல்லநேரம் - உலகம் சுற்றும் வாலிபன் - உரிமைக்குரல் - இதயக்கனி
நீதிக்குதலை வணங்கு - மீனவநண்பன் - மதுரையை மீட்டசுந்தரபாண்டியன் வந்த படங்கள் ஒரு சரித்திர சாதனை படைத்தது .
இனி நடிப்புக்கு வருகிறேன்
நாடகத்தில் அவருக்கு ஏற்பட்ட அனுபவம் நடிப்பு துறையில் ஒருவகையில் உதவியது .
அவரது நடிப்பில் மிளிரும்
இயற்கையான முக பாவங்கள்
குரலில் சம சீரான வெண் குரல்
பல மாறுபட்ட வித்தியாசமான நடிப்பு .
எல்லாவற்றிகும் மேலாக
ரசிகனை ஆனந்த வெள்ளத்தில் மிதக்க விட்ட
அவரின் சுறுசுறுப்பான சண்டை காட்சிகள்
short & sweet காதல் - வீரம் - - காட்சிகள்
ரசிகனை 3 மணி நேரம் மகிழ்ச்ச்சியில் திளைக்க வைத்து மீண்டும் மீண்டும் அவரின் படத்தை பார்க்க வைத்த சாதுரியம் .
இந்த நிலையான புகழ் பெற்ற முதல் நடிகர் எம்ஜியார்
.
Uncomparabale hero in the CINEMA WORLD.
COURTESY - NET
-
என்னக்கு பிடித்த காட்சிகள்
1.உலகம் பிறந்தது எனக்காக பாடல்
2.தலைவர் சரோஜாதேவியீடம் அன்னை பற்றி பேசும் பொழுது
3.தலைவர் அசோகனிடம் ஷீலாவை பெண் கேட்க்கும் காட்சி
4.தலைவர் ராதாவிடம் பணப்பெட்டி கொள்ளை அடிக்க திட்டம் போடும் பொழுது
5.தலைவர் தன் அன்னையிடம் அடிவாங்கும் காட்சி (சான்ஸ் இல்லே )
6.தலைவர் train டிக்கெட் சரிபார்க்கும் காட்சி (நாதன் பேர் பார்க்கும் பொழுது)
7.இறுதி கட்ட காட்சி ( சரோவினை தூக்கி கொண்டு வரும் பொழுது )
-
நடிக மன்னனின் நடிப்பினை பாருங்கள்
தன் இயற்கை நடிப்பால் கோடி மக்களின் உள்ளங்களை கொள்ளை அடித்த நடிப்பு பேரரசர்
https://www.youtube.com/watch?v=H2-mGwZEvbQ
-
Courtesy -old is gold
962_ல் "ராணி சம்யுக்தா", "மாடப்புறா", "தாயைக் காத்த தனயன்", "குடும்பத் தலைவன்", "பாசம்", "விக்ரமாதித்தன்" ஆகிய 6 படங்களில் நடித்தார். அதாவது 2 மாதங்களுக்கு ஒரு படம்!
மேற்கண்ட 6 படங்களில் "மாடப்புறா", "பாசம்" தவிர மற்ற படங்கள் வெற்றிப்படங்கள். பி.வள்ளிநாயகம் என்பவர் "பி.வி.என்" புரொடக்ஷன்ஸ் என்ற படக்கம்பெனியைத் தொடங்கித் தயாரித்த படம் "மாடப்புறா". நாராயணசாமி என்பவர் வசனம் எழுத, எஸ்.ஏ.சுப்பு ராமன் டைரக்ட் செய்தார். எம்.ஜி.ஆர்., சரோஜாதேவி நடித்த இந்தப்படம் ஓடாததற்குக் காரணம், கதை அம்சம் சரி இல்லாததுதான். "பாசம்" படத்தை தயாரித்து இயக்கியவர் டி.ஆர். ராமண்ணா. எம்.ஜி.ஆருடன் சரோஜாதேவி, ஷீலா நடித்த இந்தப்படம் நன்றாகத்தான் இருந்தது. ஆனால், எம்.ஜி.ஆர். இறந்து விடுவது போல படத்தை முடித்திருந்தார்கள். எம்.ஜி. ஆர். ரசிகர்கள் இதை ஏற்பார்களா? எம்.ஜி.ஆர். படத்தை பத்துப் பதினைந்து முறை பார்க்கும் அவரது ரசிகர்கள், ஒரே தடவையுடன் நிறுத்திக் கொண்டார்கள்! படம் சரியாக ஓடவில்லை.
இன்னொன்றை கவனிக்க வேண்டும். எம்.ஜி. ஆர். படங்களில் சில படங்கள் 100 நாள் வரை ஓடாவிட்டாலும், அது தோல்விப்படம் என்று அர்த்தமல்ல. மற்ற எம். ஜி.ஆர். படங்களைவிட வசூலில் குறைவாக இருக்கலாமே தவிர, பட அதிபர்களுக்கோ, விநியோகஸ்தர்களுக்கோ நஷ்டத்தை ஏற்படுத்தி விடாது. "யானை படுத்தால் குதிரை மட்டம்" என்று கூறுவதுபோல், நஷ்டம் ஏற்படாத அளவுக்கு வசூலித்துக் கொடுத்துவிடும்.
"தாயைக் காத்த தனயன்", "குடும்பத் தலைவன்" இரண்டும் தேவர் பிலிம்ஸ் தயாரித்த படங்கள். எம்.ஜி.ஆரை வைத்து ஒரே ஆண்டில் இரு படங்களைத் தயாரித்தவர் தேவர் ஒருவராகத்தான் இருக்க முடியும். இரண்டு படங்களிலும் எம்.ஜி.ஆருக்கு ஜோடி சரோஜாதேவி. இரண்டு படங்களுக்கும் வசனம் எழுதியவர் ஆரூர்தாஸ்; இரண்டு படங்களையும் டைரக்ட் செய்தவர் தேவரின் தம்பி எம்.ஏ.திருமுகம். இரு படங்களுமே வெற்றிப் படங்கள்.
"ராணி சம்யுக்தா", ஏ.சி.பிள்ளையின் "சரஸ்வதி பிக்சர்ஸ்" தயாரிப்பு. எம்.ஜி.ஆரும், பத்மினியும் இணைந்து நடித்தனர். யோகானந்த் டைரக்ட் செய்தார். வசனங்களை கண்ணதாசன் எழுதினார். இசை: கே.வி.மகாதேவன். ஏற்கனவே பி.யு.சின்னப்பா _ஏ.சகுந்தலா நடித்த "பிருதிவிராஜன்" படத்தின் கதைதான் "ராணி சம்யுக்தா." சின்னப்பா வின் படம் கூட, சுமாரான வெற்றியைத்தான் பெற்றது. எம்.ஜி. ஆரின் "ராணி சம்யுக்தா" வெற்றிப்படமாக அமைந்தாலும் "சூப்பர் ஹிட்" படம் அல்ல.ஜெயபாரத் புரொடக்ஷன்ஸ் அதிகப்பொருட்செலவில் தயாரித்த படம் "விக்ரமாதித்தன்". டி.ஆர்.ரகுநாத்தும், என்.எஸ்.ராமதாசும் இணைந்து டைரக்ட் செய்த படம். இசை: ராஜேஸ்வராவ். இதில் எம்.ஜி.ஆரின் ஜோடியாக பத்மினி நடித்தார்.
இந்தக் காலக்கட்டத்தில், எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக சரோஜாதேவியும், சிவாஜிகணேசனுக்கு ஜோடியாக பத்மினியும், ஜெமினி கணேசனுக்கு ஜோடியாக சாவித்திரியும் நடித்து வந்தனர். இந்த ஜோடிப் பொருத்தத்தை ரசிகர்கள் மிகவும் விரும்பினர். படங்கள் மிக நன்றாக ஓடின. ஆனால், ஜோடி மாற்றத்தை ஏனோ ரசிகர்கள் விரும்பவில்லை. ஜோடி மாற்றப்பட்ட படங்கள், அவை எவ்வளவு சிறப்பாக இருந்தாலும், எதிர்பார்த்ததற்கு சற்று குறைவாகவே ஓடின! அந்தப் பட்டியலில் சேர்க்க வேண்டிய படம் "விக்ரமாதித்தன்"!