https://www.youtube.com/watch?v=3fl0XZVuaGo
Printable View
The film crew with Dr. M.G.R on the sets of the movie Anbe Vaa. Courtesy : Facebook
http://i61.tinypic.com/xqjrk2.jpg
Courtesy : Facebook
http://i57.tinypic.com/24x2ejn.jpg
Thalaivaar - Mass God Ramachandhran MGR heart emoticon
Evergreen Superstar Dr. MGR heart emoticon
Every Actor Can Be A Mass Hero But Every Actor Can't Be MGR heart emoticon..
இந்த உலகில் இரண்டே இரண்டு சக்திகள்தான் மிகுந்த பலம் வாய்ந்தவையாக இருக்கின்றன. அவை கத்தியும், புத்தியும் தான். ஆனால் போகப்போக கத்தியின் சக்தி எப்போதும் அறிவின் பலத்திற்கு முன்னால் தோற்றுப்போய் விடுகிறது.”
மாவீரன் நெப்போலியன் போனபார்ட்
வருடம் 1961. மார்ச் மாதம் 23ஆம் தேதி - மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் நடித்த "திருடாதே" படம் வெளிவந்தது. கவிஞர் கண்ணதாசனின் சகோதரர் திரு. ஏ.எல். சீனிவாசன் அவர்கள் தயாரித்த இந்தப் படத்தில் எம்.ஜி.ஆருக்கு இணை சரோஜாதேவி. இந்தப் படத்துக்கு கதை வசனம் கண்ணதாசன் எழுதினர். இசை அமைத்தார் எஸ்.எம். சுப்பையா நாயுடு.
"திருடாதே" படத்தின் மாபெரும் வெற்றி எனது திரை உலக வாழ்வுக்கு ஒரு திருப்புமுனையாக அமைந்தது" என்று தனது சுயசரிதையில் எம்.ஜி.ஆர். குறிப்பிட்டிருக்கிறார்.
ஒரு மக்கள் நாயகனாக, ஏழைகளின் பாதுகாவலனாக, கஷ்டப்படுபவர்களின் காவல் தெய்வமாக அவர் மக்கள் மத்தியில் உருவாவதற்கான வலுவான பார்முலா இந்தப் படத்தில் தான் உருவானது எனலாம். இதற்கு முன்பே என் தங்கை, மலைக்கள்ளன், தாய்க்கு பின் தாரம் ஆகிய படங்கள் வெளிவந்து இருந்தாலும் அவருக்கென்று ஒரு தனி பார்முலாவில் படங்கள் உருவாவதற்கு காரணமாக அமைந்த படம் "திருடாதே" படம்தான்.
இந்தப் படத்தில் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் எழுதி டி.எம்.எஸ். பாடிய பாடல் "திருடாதே பாப்பா திருடாதே" பாடல். சின்னஞ்சிறுவர்கள் மனதில் அழுத்தமாக பதிவாகும் அற்புத வரிகளை பாடலாசிரியர் அமைக்க அதற்கு படம் வெளிவந்து ஐம்பது ஆண்டுகளைக் கடந்த பின்னாலும் நிலைத்திருக்கும் வண்ணம் அதி அற்புதமாக இசை அமைத்திருக்கிறார் எஸ்.எம். சுப்பையா நாயுடு.
பய உணர்ச்சி மழலை பருவத்தில் தானே ஆரம்பிக்கிறது. அப்போதே தன் திறமையின் மீது நம்பிக்கையை ஊட்டிவிட்டால்..? அவர்கள் வளரும்போது அந்த தன்னம்பிக்கையும் கூடவே வளர்ந்து விடுமே .. இதைத்தான் பாடலின் பல்லவியிலேயே கல்யாணசுந்தரம் ஊட்டிவிடுகிறார்
"திருடாதே பாப்பா திருடாதே - வறுமை நிலைக்கு பயந்துவிடாதே. திறமை இருக்கு மறந்துவிடாதே" -
சுப்பையா நாயுடுவின் இசையில் டி.எம்.எஸ். அவர்களின் குரலும் குழந்தைகளிடம் பரிவையும் கனிவையும் காட்டுகிறது. அற்புதமான ஆடம்பரமில்லாத ஆர்ப்பாட்டமில்லாத எளிமையான இசையும், பாவம் ததும்ப டி.எம். சௌந்தரராஜன் பாடியிருக்கும் விதமும் பாடலை நிலை நிறுத்தி இருக்கிறது.
பாடல் மேலும் வளர்கிறது :
"சிந்தித்து பார்த்து செய்கையை மாத்து. சிறுசாய் இருக்கையில் திருத்திக்கோ
தவறு சிறுசாய் இருக்கையில் திருத்திக்கோ.
தெரிஞ்சும் தெரியாம நடந்திருந்தா அது திரும்பவும் வராம பாத்துக்கோ - திருடாதே பாப்பா திருடாதே."
எத்தனை எளிமையான அதே சமயம் குழந்தைகளுக்கு சொல்லவேண்டுமே என்ற கவனத்தோடு புனையப்பட்ட வார்த்தைகள்.
தவறுகளை திருத்திக்கொள்வதற்கும் அது திரும்பவும் வராமல் கவனமாக இருக்கவும் பாடலை அமைக்கும் போது பாடகரின் குரலும் பாடல் வரிகளை உணர்த்து பாடுகிறது. அந்த கருத்தை கவனமாகப் பதியவைக்கும் வகையில் இசை அமைப்பும் அமைந்து இருப்பது பாடலின் சிறப்பு.
"திட்டம் போட்டு திருடுற கூட்டம் திருடிக்கொண்டே இருக்குது.
அதை சட்டம் போட்டு தடுக்குற கூட்டம் தடுத்துக்கொண்டே இருக்குது. - என்கிற கவிஞர் திருட்டை ஒழிப்பதென்பது
" திருடனாய்ப் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது" - என்ற நிதர்சனமான உண்மையையும் பாடலில் உரைக்கிறார். எக்காலத்துக்கும் பொருந்தும் வரிகள்.
மனம் கண்டதையும் நினைக்காமல் இருக்க என்ன வழி?. பாடலின் கடைசி சரணத்தின் வரிகளில் டி.எம்.எஸ். அவர்களின் குரலை மெல்ல மெல்ல உச்சத்தில் ஏற்றி அழுத்தமாகப் பதிவு செய்கிறது பாடல்.
"உழைக்கிற நோக்கம் உறுதியாயிட்டா கெடுக்குற நோக்கம் வளராது - மனம் கீழும் மேலும் புரளாது."
அளவான இசைக்கருவிகளைப் பயன்படுத்தி ஒரு அற்புதமான பாடலைக் கொடுத்திருக்கிறார்
to day thirudathe completes 54th year.
திருடாதே 23.3.1961
தமிழ்திரை உலகில் சமூக புரட்சி உருவாக்கிய படம் .
மக்கள் திலகத்தின் அருமையான நடிப்பு .
திருடுவதால் ஏற்படும் அவலம் - பாதிப்பு .
மக்கள் மனதில் சமூக சிந்தனையை தூண்டிய படம் .
இனிய பாடல்கள் .
சென்னை நகரில் பிளாசா - பாரத் - மகாலட்சுமி மூன்று அரங்கில் 100 நாட்கள் ஓடிய படம் .
2011ல் சென்னையில் திருடாதே பொன்விழா நடைபெற்றது .
மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களுக்கு திருப்பு முனை தந்த படம் - திருடாதே
மக்கள் திலகத்தின் தீவிர ரசிகரும் , திரியின் மூத்த உறுப்பினருமான இனிய நண்பர் திரு ரவிச்சந்திரன் அவர்களின் இனிய பிறந்த நாள் இன்று . அவர் பல்லாண்டு வாழ்க - இன்று போல் என்றும் வாழ்க - என்று அன்புடன் வாழ்த்துகிறேன் .
தமிழகத்தை திரும்பி பார்க்க வைத்த திருடாதே திரைப்படம்..
ஆம். அன்றைய சூழலில் சமூகத்தில் நிலவி வந்த திருட்டு என்னும் அவலத்தை, திருத்தும் நோக்கோடு, அழகிய, ஆழமான திரைக்கதையில் மக்களுக்கு எடுத்துக்காட்டிய படம். சட்டங்கள் மூலமாகவோ, கடுமையான தண்டனைகள் வாயிலாகவோ திருட்டு என்னும் குற்றத்தை குறைக்க முடியாது. திருடர்களின் மனமாற்றத்தின் மூலமே சமூகத்தில் இந்த குற்றத்தை குறைக்க முடியும் என்ற உயரிய சிந்தனையை தனக்கே உரித்தான இயல்பான நடிப்பால் வெளிபடுத்திய சிறந்த திரைப்படம்..இந்த திரைப்படம் அந்த கால கட்டத்தில் பெரிய சமூக மாற்றத்தை ஏற்படுத்தியதை யாராலும் மறுக்க முடியாது. அந்த சமூக மாற்றம் ஒரு திரைப்படத்தின் மூலம் சாத்தியம் என்ற அதிசயத்தால்தான் தமிழகம் இத்திரைப்படத்தை உற்று நோக்க ஏதுவானது. பொது உடமைவாதியான எழுச்சிகவிஞர் பட்டுகோட்டையார் தன்னுடைய பொதுஉடைமை கொள்கை பாடல்களை யார் மூலம் பரப்பலாம் என்று நினைத்தபோது அதற்கு பொருத்தமானவர் உண்மையிலே பொது உடமை கொள்கை கொண்ட எம்ஜிஆர் என்பதை உணர்ந்தார். அதனால் தன்னுடைய பெரும்பாலான பாடல்களை தலைவரின் படங்களிலே இடம் பெற செய்தார்..அதே போல் தலைவர் அவர்களும் பட்டுக்கோட்டையாரை மிகவும் மதித்து அவர் இருக்கும் வரை அவரது பாடல்களை தன்னுடைய படங்களில் இடம் பெற செய்தார். கவிஞரின் பாடல்களிலே மிகவும் சிறப்பு வாய்ந்த, நமது தெய்வத்திற்கு மிகவும் பிடித்த பாடலான "திருடாதே பாப்பா திருடாதே" என்னும் சமூக சீர்திருத்த பாடல் இடம்பெற்ற படம்தான் திருடாதே. இந்த பாடல் பட்டி தொட்டி எங்கும் ஒலித்து ஒரு பெரிய சமூக மாற்றத்தையே ஏற்படுத்தியது..இன்னும் சொல்ல போனால் இந்த பாடலின் வரி தமிழ் மக்களுக்கு தாரக மந்திரமாகவே விளங்கியது..இன்றும் விளங்கிகொண்டிருக்கிறது..இன்று கூட திருட்டு குற்றங்களைப் பற்றி யார் பேசினாலும் 'திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது' என்பதை ஒப்புக்கொண்டுள்ளனர்..இன்றைக்கும் யாராலும் ஏற்றுகொள்ளப்பட்ட கருத்தை அன்றே சொன்னவர்தான் நம் தலைவர்..அதனால்தான் அவர் புரட்சித் தலைவர்..
இந்த படத்தில் திருமதி சரோஜா தேவி நடிக்கும்போது, ஒரு கட்டிலை சுற்றி ஓடி காட்சி எடுத்தபோது அவருடைய காலில் கண்ணாடி துண்டுகள் குத்தி ரத்தம் கொட்டியது..காட்சிக்கு நடுவே சொன்னால் யாராவது ஏதாவது சொல்ல போகிறார்கள் என்று திருமதி சரோஜா தேவி அவர்கள் தொடர்ந்து நடித்துக்கொண்டே இருந்தார் ..அவருடைய காலில் வந்த ரத்தத்தை யாரும் கவனிக்காதபோது. நமது தலைவர் பதறிப்போய் காட்சியை நிறுத்த சொல்லி திருமதி சரோஜா தேவி அவர்களின் அடிபட்ட காலை கைகளால் பிடித்து மடிமீது வைத்து காலில் குத்திய கண்ணாடி துண்டுகளை எடுத்து சிகிச்சை செய்தார்..திருமதி சரோஜாதேவி அவர்கள் பதறிப்போய் மதிப்பிற்குரிய ஒரு பெரிய நடிகர் ஒரு சிறிய நடிகையின் காலைத்தொட்டு சிகிச்சை செய்வதா என்று மறுத்த போதும்., அவரிடம் இனிமேல் இப்படி எல்லாம் செய்ய கூடாது..ஏதாவது விபத்து என்றால் சொல்லவேண்டும் என்று அறிவுரை கூறினார்..மேலும் அந்த காட்சியை ரத்து செய்து கால் குணமான பின் நடிக்க வைத்தார்..அதனால்தான் திருமதி சரோஜாதேவி அவர்கள் நமது தலைவரை 'எனது தெய்வம்' என்று அழைத்தார். சக நடிகரின் பாதுகாப்பில் அவர் எப்படி கவனம் செலுத்தினார் என்பதற்கும், அனைவரையும் அவர் சமமாக பாவிக்கும் தன்மைக்கும் இந்நிகழ்ச்சி ஓர் எடுத்துக்காட்டு..இதைப்போல் கோடிகணக்கான நிகழ்சிகள் தலைவரின் வாழ்க்கையில் உள்ளது.
மேலும். இந்த படத்தில் தலைவரின் இயல்பான நடிப்பு அனைவரையும் கவரும் விதத்தில் அமைந்தது..சமூக படங்களிலும் தலைவர்தான் நம்பர் ஒன் என்பதை அறிய வைத்த படம்..அதுவும் கிளைமாக்ஸ் சண்டையில் ஏற்படுத்திய புதுமை அனைவராலும் பாராட்டப்பட்டு..பல படங்களுக்கு முன்னோடியாக விளங்கியது..