Originally Posted by
RAGHAVENDRA
அன்பு சகோதரி வனஜா,
இங்கு எல்லோரும் தங்களுடைய வருகையைக் கண்டு மனம் மகிழ்ந்து வரவேற்கும் சூழ்நிலையில் சில தேவையற்ற விவாதங்களால் தாங்கள் மனம் வருந்தும் படி ஆகிவிட்டது. அதற்கு நான் காரணமென தாங்கள் கருதினால் அதற்கு என் வருத்தத்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன். என்னால் இங்கு ஒருவர் கூட மனம் வருந்தக் கூடாது என்பதே என் ஆசை, எண்ணம். தாங்கள் தொடர்ந்து தங்கள் பதிவினைத் தாருங்கள்.
டியர் ஆதிராம் சார்,
வெவ்வேறு பெயர்களில் ஒருவர் எழுதுவதைப் பற்றி நாம் கவலைப் பட வேண்டாம். சொல்ல வரும் கருத்தினை முக்கியமாய்க் கொள்வோம். முடிந்த வரையில் தங்களுக்குப் பிடித்த வகையில் என்னுடைய பதிவினை அளிக்க முயற்சிக்கிறேன். தங்களுக்குப் பிடித்த பம்மலார், முரளி சார், கோபால் சார் வரிசையில் என் பெயரும் இடம் பெற வேண்டும் என்பது என் விருப்பம். அதற்காக முடிந்த வரையில் முயற்சிக்கிறேன். யதேச்சையாக அவராக இருக்கமோ இவராக இருக்குமோ என்ற உரையாடலில் கோபால் சார் ஆதிராம் என்ற பெயரில் எழுதுகிறாரோ என்று கேட்டேனே தவிர வேறு ஏதும் எண்ணமில்லை. அதற்காக தாங்கள் கோபித்துக் கொள்ளாதீர்கள்.
டியர் முத்ராம் சார்,
இங்கு நடிகர் திலகத்தின் புகழ் பாடி வரும் பதிவுகளில் உள்ள கருத்தைப் பார்ப்போம். யார் என்பதை நாம் தவிர்ப்போம். ஒருவரே பல பெயரில் எழுதினாலும் அதனைப் பற்றி நாம் பொருட்படுத்தத் தேவையில்லை. தாங்கள் கூறியது போல் இனிமேல் இந்த விவாதம் வேண்டாம்.
அனைத்து நண்பர்களுக்கும் என் உளமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன். குறிப்பாக எனக்காக தங்கள் அக்கறையினை பதிவின் மூலம் தெரிவித்துக் கொண்ட திரு ராதாகிருஷ்ணன், திரு முத்ராம், திரு பார்த்த சாரதி, திரு முரளி சார், மற்றும் அனைவருக்கும் மீண்டும் என் உளமார்ந்த நன்றி.
அன்புடன்
ராகவேந்திரன்